சில குழப்பமான கருத்துக்கள் மக்களிடையே செல்வாக்கு பெற்றுள்ளன. உதாரணத்துக்கு கோட்பாடு என்றால் என்ன? அறிவுஜீவி என்றால் என்ன? கோட்பாட்டை நடைமுறையுடன் இணைப்பது என்பதன் பொருள் என்ன? ஆகியவையே அவை" என்றார் மாவோ. அது போலவே இந்தியாவிலும் மக்களுக்கும் மக்களுக்கு வழிகாட்டும் கம்யூனிஸ்டுகளுக்கும் கருத்துக் குழப்பங்கள் இருக்கிறது. இந்தக் கருத்துக் குழப்பங்கள் மாவோ மேலே கூறியது போல, கோட்பாடு என்றால் என்ன? அறிவுஜீவி என்றால் என்ன? கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைப்பது எவ்வாறு? என்பது மட்டுமல்ல. மேலும் பல்வேறு பிரச்சனைகளில் குழப்பங்கள் நிலவுகிறது. இந்தக் குழப்பங்கள் எல்லாவற்றையும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற மார்க்சிய தத்துக் கண்ணோட்டத்தைக் கொண்டே நாம் தீர்வு காண வேண்டும். அதற்கு நாம் சந்திக்கும் இந்த குழப்பங்களைப் போன்ற குழப்பங்களை மார்க்சிய ஆசான்கள் எப்படித் தீர்த்தார்கள் என்பதையும் அதற்காக அவர்கள் நமக்கு வழிகாட்டிய போதனைகளையும் தெரிந்துகொள்வதன் மூலம் நாம் சந்திக்கும் குழப்பங்களை நம்மால் தீர்த்துக்கொள்ள முடியும். ஆகவே மார்க்சிய ஆசான்கள் சந்தித்த பிரச்சனைகளையும் அதனை தீர்ப்பதற்காக அவர்களின் கொள்கை வழிகாட்டுதலையும் நாம் தேடிக் கண்டுபிடித்து தெரிந்துகொண்டு அதனைக் கொண்டு நமது குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
மார்க்சியத்தை வளர்க்க வேண்டியவர்கள், அதனை வளர்க்கும் கடமையைச் செய்யத்தவறியதால்தான் மார்க்சியம் இங்கு வளரவில்லை. ரஷ்யாவிலும் சீனாவிலும் மார்க்சியத்தை எப்படி வளர்த்தார்கள் என்ற அனுபத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறியதால்தான் இங்கு மார்க்சியம் வளரவில்லை. மார்க்சியத்தை பிரச்சாரம் செய்பவர்களைப் பார்த்து நடைமுறை நடைமுறை என்று கூச்சலிடுபவர்களால்தான் இங்கு மார்க்சியம் வளரவில்லை. மார்க்சியம் என்றால் என்ன? என்றே புரியாததால்தான் இங்கே மார்க்சியம் வளரவில்லை. மார்க்சிய ஆசான்களது போதனைகளையே திருத்தி பிரச்சாரம் செய்பவர்களை எதிர்த்துப் போராடி மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்களை முறியடிப்பதற்கான முயற்சி இல்லாததால்தான் இங்கு மார்க்சியம் வளரவில்லை. ரஷ்யாவிலும் சீனாவிலும் மார்க்சியத்தை கற்றுக்கொடுக்க கம்யூனிஸ்டுகள் பள்ளிகளை நடத்தினார்கள். ஆனால் இங்கு மார்க்சியத்தை கற்றுக்கொடுக்க பள்ளிகளை நடத்த தவறினார்கள், அதனால் இங்கு மார்க்சியம் வளரவில்லை. மார்க்சியத்தை உலக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று தோழர் ஸ்டாலின் காலத்தில் மார்க்சிய நூல்களை பல மொழிகளில் மொழிபெயர்து உலக மக்களிடம் கொண்டு சேர்த்தது ஸ்டாலின் தலைமையிலான சோவியத்து அரசு. அதனை அணிகளுக்கு வழங்கி மார்க்சிய கல்வி வழங்கத் தவறியது இந்திய திருத்தல்வாததத் தலைமை, அதனால் இங்கு மார்க்சியத்துக்கு எதிராக திருத்தல்வாதமே வளர்ந்தது, மார்க்சியம் வளரவில்லை. மனிதனது உறுப்புகளிலேயே மிகமிக முக்கியமான உறுப்பு மூளை. இந்த மூளையை விஞ்ஞானப்பூர்வமாக வளர்ப்பதற்கு பயன்படுவதுதான் மார்க்சியம். இந்த மூளையின் செயல்பாட்டை மழுங்கடித்தவர்கள்தான் திருத்தல்வாதிகள். இவர்களின் துரோகத்தால்தான் மார்க்சியம் இங்கு வளரவில்லை. இவர்களைப் போன்ற துரோகிகளை மார்க்சிய ஆசான்கள் அவர்களது சித்தாந்த பலத்தால் முறியடித்து அடித்து விரட்டி மார்க்சியத்தை வளர்த்தார்கள். ஆகவே நமது மார்க்சிய ஆசான்களைப் போன்று சிந்திக்கும் ஆற்றலை நாம் வளர்த்துக்கொள்வதன் மூலமே மக்களுக்கு எதிரான துரோகிகளின் கருத்துக்களை முறியடித்து அவர்களை விரட்டியடிக்க முடியும். அதற்கு நாம் தொடர்ந்து மார்க்சிய ஆசான்களது போதனைகளை படித்து உள்வாங்கி மார்க்சிய சிந்தனை முறையை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆகவே மார்க்சிய சிந்தனைமுறையை வளர்த்துக்கொண்டவர்களால்தான் இங்கே மார்க்சியத்தை வளர்க்க முடியும். அத்தகைய மார்க்சிய சிந்தனை முறையை வளர்ப்பதற்கும் மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டியுள்ளார்கள்-தோழர் ரவீந்திரன் முகநூல் பதிவு
No comments:
Post a Comment