ஜாதியம் தொடர். ஜாதியம் தோற்றம்-3

 ஜாதியம் தொடர்.

ஜாதியம் தோற்றம்-3

ஜாதியம் பற்றிய நான்காவது பகுதி.

இதுவரை இலக்கில் மூன்று கட்டுரை எழுதியுள்ளேன் இவை நான்காவது கட்டுரை.

அறிமுகம்:-ஜாதி இந்தியாவிற்கு மட்டுமே  உரித்தானதுஅல்ல..உலகின் பலப்பகுதிகள் ஜாதி இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.ஆப்பிரிக்காவில் பிஜி ஜப்பான் தொங்கா சாமுவா தென்பசிபிக் தீவுகள் முதலான பகுதிகளில்இருந்ததுஇன்றுஅவர்களிடையேஇந்திய இலங்கை போன்ற நாடுகளில் ஜாதியின் மேலாதிக்கம் இருப்பதுபோல்இல்லைஆனால்அங்கும் மக்கள் இடையிலான பாகுபாடும்ஒடுக்கு முறையும் தொடரத்தான் செய்கின்றன.

சாதியின் ஆரம்பம் தேடும் பொழுது அவை விவசாயம் செழித்து ஓங்கும் பொழுதுதான்  அதன் வளர்ச்சிக்கும் துணை தேவைக்குமான உழைப்பு பிரிவுகள் தோன்றியது அப்படி எனும் பொழுது இந்தியாவில் 7000ஆண்டுகளுக்கு முன்னரே விவசாயம் தொடங்கி விட்டதாகவும் சிந்து சமவெளிநகரநாகரிகமான  மொகஞ்சதாரோ ஹாரப்ப பகுதிகளில் கிமு 2600க்கு முன்னரே விவசாயத்துறையில்முன்னேறிய நிலையினை காணலாம் வரலாற்று அறிஞர் ஆர் பாலகிருஷ்ணன் எழுதிய ஒரு நாகரிகத்தின் பயணம் சிந்துவெளி தொடங்கி வைகை வரை 2019.ஆக அங்கேயே மக்களிடையேயா உழைப்பு பிரிவினை தோன்றி விட்டது என்றால் பிழை ஆகாது.

ஜாதியைகுறித்துமுதலாளிய ஆய்வாளர்கள் களஆய்வுகளைமேற்கொண்ட அறிஞர்களில் பலர் ஜாதியை உற்பத்தி முறையோடு தொடர்புபடுத்தி காணவில்லை.

இந்தியாவில் ஜாதியம் குறித்த பல விவரங்களை ஏகாதிபத்திய ஆட்சி அதிகாரிகள் திரட்டிக் கொண்டிருந்த அதே காலகட்டத்திலேயே இந்திய சமூக பொருளாதார நிகழ்வுகளை ஆராய்ந்த காரல் மார்க்ஸ் உற்பத்தி முறையோடு தொடர்புபடுத்தி காண்கிறார் (என்கிறார் கோ.கேசவனின் சாதியம் நூலில்) ஜாதியத்தை இந்திய கிராமங்களில் அடிப்படை அம்சங்களை பற்றி மார்க்ஸ் கருத்துரைக்கையில் சில ஜாதிகளின் கைவினைஞர்களும் சேவையாள்களும் ஒட்டுமொத்தமாக கிராமத்துக்கு தாங்கள் ஆற்றும் கடமைகளுக்காக பண்டமாக அல்லது நில ஒதுக்கீடுகளாக பெரும் மரபு வழியிலான உரிமைகளை குறிப்பிட்டு அவர்களின் வேலை பிரிவினை பற்றி  குறிப்பிடுகின்றார் மார்க்ஸ் மூலதனம் முதல்  தொகுதியில் பக்கம் 331(ஆங்கில பதிப்பை குறிப்பிட்டுள்ளார் கோ.கேசவன்).

சாதியும் என்பது நிலவுடமை உற்பத்தி முறை அல்லது முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்திமுறை கொண்ட ஒரு சமூகம்பழங்குடிசமுக அமைப்பின் மிச்சம் ஜாதி அமைப்பில் தொடர்ந்து நீடிப்பதை கண்டறிந்து வெளிப்படுத்திய கோசாம்பி நில உடமை உற்பத்தி முறையால் ஜாதியும் உறுதிப்பட்டது என்று கூறுகிறார் மேலும் இத்தகைய உற்பத்தி முறையை அடிப்படையில் மாற்றி தொழில் மையப்படுத்துவதன் மூலம் ஜாதியத்தை அழிக்க இயலும் என்றும் குறிப்பிடுகிறார் டிடி கோசாம்பி. (இந்திய வரலாறு அறிமுகம் நூலின்  384).

ஆக சாதியம் ஆரம்பம் என்பது குல சமூகம் உற்பத்தியில் ஈடுபடலான போது அவர்களுகிடையிலேயான வேலைப் பிரிவினையின் அடிப்படையில் அவரவர்களுக்கான வேலைபிரிவினையின் அடிப்படையில் செயல்பட்டதன் விளைவு குழுவிற்குள்ளே இருந்த சமத்துவம் குழைந்து தலைமை பொருப்பில் இருந்த தலைவர், பூசாரி என்ற பிரிவினரூக்கு உபரியான சொத்து சேரலாயிற்று ஒரு பக்கம் சொத்துள்ளவர்களும் இன்னொரு பக்கம் சொத்தற்றவர்களும் என்ற பிரிவினை ஏற்றதாழ்வு உருவாயிற்று. அன்று இந்தப் பிரிவினை சாதியாக இருக்கவில்லை பல நூறு ஆண்டுகள் பல மாற்றங்களின் ஊடாக சாதியின் உரு திரண்ட நிலை கிமு 2 நூற்றாண்டிலிருந்து தெரிந்தாலும் துலக்கமாக கிபி 2ம் நூற்றாண்டில் கோலோச்ச ஆரம்பித்தது எனலாம். தமிழக வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் இதனை பற்றி விரிவாக அடுத்த இதழ்களில் பேசுவோம்.   

இதுவரை இந்ததொடரில் ஆரியரைதேடிய தோடு பல்வேறு நாடுகளில் நிலவிய ஜாதிமுறை மற்றும் ஜப்பானில் தொடர்ந்த தீண்டாமை பற்றியும் விவாதித்தோம். இந்த பகுதியில் இலங்கை பற்றி சிறிது ஆராய்வோம்.

நமது ஜாதி அமைப்பு மைக்கேல் பாங்ஸ் 1950களில் கேம் பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இருந்து யாழ்ப்பாண தமிழர் களின் சமூக அமைப்பு என்ற முனைவர் பட்டத்திற்காக எழுதிய கட்டுரையே. ( Cambridge papers in social Anthropology).

யாழ்ப்பாண சமூக அமைப்பை பற்றி ஆராய்ந்த அவரின் சில கருத்துக்களில் இருந்து.

சாதி அமைப்பை விளக்குவதற்கு வர்க்கம் ஜாதி என்ற இரு கருத்தமைப்புகளுக்கு இடையேயான தொடர்பை விளக்குதல் அவசியம். வர்க்கம் பிரமிட் போன்ற அமைப்பு கொண்டது. மேலே உள்ள வர்க்கம் குறைந்த எண்ணிக்கையிலான ஒடுக்கு வோரைக் கொண்டது. அடியில் பெரும் எண்ணிக்கையிலான ஒடுக்கப்படுபவர் உள்ளனர்.

இங்கே எல்லா ஜாதியிலும் வர்க்கமாக மாறிவிட்ட பின் ஒரே ஜாதிக்குள் ஒடுக்குபவனும் ஒடுக்கப்படுபவனும் இருக்கும் பொழுது ஜாதியும் வர்க்கமும் ஒன்றை ஒன்று ஊடுருவி தெளிவின்றி உள்ளனவே. ஆக இதனை புரிந்து கொள்ள கிராமப்புறத்தில் உள்ள ஜாதிய முறையை பார்ப்போம்.

 

கிராமங்களில் உள்ள ஜாதி அடிப்படையில் மூன்றாக பிரிக்கிறார்.

1).ஒரே ஒரு ஜாதியை மட்டும் கொண்ட கிராமம்.

2).பல ஜாதிகளை கொண்ட கிராமம்.இங்கே ஒவ்வொரு ஜாதியினரும் தெளிவாக வெவ்வேறு பகுதியில் வசிப்பர்.

3).கலப்பு கிராமம் பல ஜாதிகளை கொண்ட ஒரு கிராமத்தில் ஒவ்வொரு சாதியினரும் வெவ்வேறு இடங்களில் குடியிருப்பு பரவி இருக்கும். எல்லா சாதியினரும் சிதறி பரவி இருக்கும் .(இந்தப் பகுதியை வரும் அடுத்த இதழில் விவாதிப்போம்). அதற்குமுன் இன்று இலங்கையில் மேலோங்கும் ஒரு புதிய போக்கு பற்றி நமது புரிதலுக்காக இங்கே எழுதுகிறேன்.

+++++++++++++++++++++++++++++

ஜாதிய போராட்டம் உயிர்தெழும் ஈழத்தை பற்றி ஒருபுரிதலுக்காக இந்தப் பகுதி-சிபி.

ஆயுத வழிப் போராட்டமும் தோல்வியில் முடிந்தது. தமிழ் மக்களின் முதலாளித்துவத் தலைமைகளின் போராட்டங்கள் தோல்வி யடைந்து விட்டதன் காரணமாக தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்கான - நியாயமான உரிமைகளுக்கான கோரிக்கையும் அற்றுப் போய்விட்டதாகவோ அல்லது வழக்கொழிந்து போய்விட்ட தாகவோ இதன் அர்த்தம் அல்ல. அந்தத் தேவை இன்னமும் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அதற்கான ஒரு சரியான தலைமையும், சரியான கொள்கைகளும் இல்லாதிருப்பதே இன்றைய பிரச்சினையாகும்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் சில தனிநபர்கள் தமிழ் மக்களின், குறிப்பாக வட பகுதி தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் சாதியப் பிரச்சினை சம்பந்தமான, அதை இல்லாதொழிப்பதற்கான கருத்தியல் பிரச்சாரமொன்றை ஆரம்பித்திருக்கின்றனர். (இம்முறை அந்த இயக்கம் சாதிய ஒடுக்குமுறை தீவிரமடைந்ததன் காரணமாக எழுந்ததல்ல. மாறாக, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலுள்ள இளம் தலைமுறையினரின் விழிப்புணர்வு காரணமாகவும், அவர்கள் மத்தியில் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தில் ஏற்பட்ட ஓரளவு உயர்ச்சி காரணமாகவும் ஏற்பட்டுள்ளது எனலாம்) அவர்கள் இந்தப் பிரச்சாரத்தை ஆரம்பித்ததில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் அவர்களது அணுகுமுறையில்தான் தவறுகள் இருக்கின்றன. அந்தத் தவறுகள் என்னவென்று பார்த்தால் - சாதியத்துக்கு எதிராக அவர்கள் தொடங்கியுள்ள பிரச்சாரம் ஒரு அமைப்பு ரீதியிலானதாக செயற்பாடாக இல்லாமல் தனிமனித ரீதியானதாக இருப்பது பலவீனமானது.

சிறுபான்மையினரான ஒரு தொகை சாதி வெறியர்களுக்கு எதிரான போராட்டமாக இல்லாமல், சனத்தொகையில் பெரும்பான்மையினரான முழு உயர் சமூகத்தினருக்கும் எதிரானதாக அவர்களது அணுகுமுறை உள்ளது. (தமிழகத்தில் உள்ள பிராமணர்களுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் உதாரணம் காட்டுகின்றனர். ஆனால் தமிழக சனத்தொகையில் பிராமணர்களின் தொகை சுமார் 2 சதவீதம்தான். ஆனால் இலங்கை வடபகுதித் தமிழர்களில் 60 சதவீதமானவர்கள் வெள்ளாளர் உட்பட உயர் சமூகத்தினர் என்பதைக் கணக்கில் எடுக்க வேண்டும். எனவே சாதி வெறியர்களின் தொகையைக் குறுக்கி அவர்களைப் பலவீனப்படுத்த வேண்டும்). சாதியத்தை ஒழிப்பதற்கான ஒரு வழிமுறையாக பௌத்த மதத்தை ஆதரிப்பதை ஊக்குவிக்கின்றனர். அதற்கு இந்தியாவில் அம்பேத்கரை உதாரணமும் காட்டுகின்றனர். உண்மையில் சாதியப் பிரச்சினை என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுடன், வர்க்க சமுதாயத்துடன் வேர்கொண்டுகிடப்பதால் மதம் மாறுவதால் மட்டும் இப்பிரச்சினை தீர்ந்துவிடாது. உதாரணமாக சாதிய ஒடுக்குமுறை யிலிருந்து தப்புவதற்காக கிறிஸ்தவத்தில் சேர்ந்தோரின் நிலை என்ன? அதுமட்டுமின்றி ஒரு லட்சம் மக்களுடன் பௌத்த மதத்தில் இணைந்த போதும் அம்பேத்கரால் இந்தியாவின் சாதியமைப்பை ஒரு அங்குலம் கூடஅசைக்க முடியவில்லை.

அது மட்டுமின்றி, சாதியத்துக்கு எதிரான போராட்டத்தைச் சிலர் தமிழ் தேசிய உரிமைக்கான போராட்டத்துக்கு எதிரான நிலையில் வைக்க முயல்கின்றனர். இதுவும் தவறான ஒரு நிலைப்பாடாகும்.

இடதுசாரிகளான நாம் கடந்த பல தசாப்தங்களாக வடக்கில் சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிராக பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம். அதற்காகப் பல தியாகங்களையும் செய்திருக்கிறோம். அதன் காரணமாக சில குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம்.

சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் கடந்த காலத்தில் மூன்று விதமான அணுகுமுறைகள் கையாளப்பட்டுள்ளன. அவையாவன:

சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை தனியே தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே நடத்துவது. தோழர் எம்.சி.சுப்பிரமணியம் தலைமையிலான சிறுபான்மைத் தமிழர் மகாசபை பெரும்பாலும் இதன் அடிப்படையிலேயே தனது நடவடிக்கை களை முன்னெடுத்து வந்தது.

இன்னொன்று தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தை;தழுவுவதன் மூலம் சாதியத்தில் இருந்து விடுபடுவது. இதற்காக வைரமுத்து என்ற பெரியாரின் தலைமையில் தமிழ் பௌத்த காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு பல தாழ்த்தப்பட்ட மக்கள், குறிப்பாக இளைஞர்கள் பௌத்த மதத்திலும் இணைந்தார்கள். இந்த அமைப்பு வடக்கில் சில பௌத்த பள்ளிகளை தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கென ஆரம்பித்ததைத் தவிரவேறுஎதையும் சாதிக்க முடியவில்லை. இன்று அந்த அமைப்பு செயலிழந்து போய்விட்டது.

அடுத்ததாக புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் 1960களில் முன்னெடுத்த தீண்டாமைக்கும் சாதியமைப்புக்கும் எதிரான போராட்டங்கள். இந்தப் போராட்டம் உயர்சாதி வெறியர் பிரயோகித்த பிற்போக்கு பலாத்காரச் செயல்களை புரட்சிகர பலாத்கார செயல்களால் எதிர்கொண்டது. அத்துடன், சாதிப் பிரச்சினை என்பது தனியே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை அல்ல, அது ஒடுக்குமுறையும் சுரண்டலும் இணைந்த ஒரு வர்க்கப் பிரச்சினை என்றபடியால் முழுத் தமிழ் சமூகத்தினதும் பிரச்சினை என்பதை உணர்த்தி, அந்தப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் நீதியை விரும்பும் உயர் சமூக மக்களையும் ஈடுபட வைத்தது. அதுமட்டுமின்றி நாட்டின் ஏனைய பாகங்களில் வசிக்கும் முற்போக்கான சிங்கள முஸ்லீம் - மலையக மக்களையும் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக அணி திரட்டியது. அதன் காரணமாக அந்தப் போராட்டம் கணிசமானளவு ஒரு வெற்றியைப் பெற்றது.

உண்மையில் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் தேசிய இனப் பிரச்சினை என்பது முதலாளித்துவத் தமிழ் தேசியவாதிகள் நினைப்பது போல வெறும் தேசியப் பிரச்சினை மட்டும் அல்ல. தமிழ் மக்களின் பிரச்சினை என்பது தேசிய ஜனநாயகப் பிரச்சினையாகும். அது ஒருபுறத்தில் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தமிழ் மக்களின் தேசிய உரிமைகளைப் பெறப் போராட வேண்டியுள்ளது. மறுபக்கத்தில் தமிழினம் தனது சமூகத்தின் உள்ளே உள்ள சாதியமுறை, வர்க்கபேதமுறை போன்ற ஜனநாயக விரோதப் போக்குகளுக் கெதிராகவும் போராட வேண்டியுள்ளது. அதனால்தான் இடதுசாரிகளான நாம் தமிழ் மக்களின் பிரச்சினை என்பது ஒரு 'தேசிய ஜனநாயகப் பிரச்சினை' என முழுமையான அர்த்தத்தில் கூறுகின்றேம்.

இப்பொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள சிலர் தேசியத்தையும், வர்க்க பேதத்தையும் புறம்தள்ளிவிட்டு, வெறுமனே சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்த எத்தனிக்கின்றனர். எனவே இதுவும் முழுமையான ஒரு போராட்டம் இல்லை என்றபடியால் வெற்றி பெறும் சாத்தியம் இல்லை.எனவே, முற்போக்கு சக்திகள் தமிழ் சமூகத்தின் உண்மையான நிலையைப் புரிந்து கொண்டு, முழுமையான முறையில் தமிழ் மக்களின் தேசிய ஜனநாயகப் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.(நன்றி வானவில் இணைய தளம்).

ஜாதியம் தோன்றுவதற்கு முன்

ஜாதியம் ஆரியரை தேடி

ஜாதியம் தோற்றம் பற்றி பல்வேறு கருத்துகள்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்