மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியியல் தாக்குதல்

இன்று மணிப்பூர் கலவரம் விவாதிக்கும் முன் சில விளக்கம் என்னுடையவை:-

"தனிப்பட்ட ஒருவரின் திரிபுணர்ச்சி அல்லது மருள்(Delusion) இறந்தக்கதாயினும் அதிகம் அஞ்ச வேண்டிய ஒன்றன்று; ஆனால் ஒரு கூட்டத்தவரது அல்லது சமூகத்தினரது பொய்மை (Illusion) அச்சம்முகத்திற்கு மாத்திரமல்லாது பிறருக்கும் பேராபத்தை விளைவிக்க கூடியதாகும். ஜெர்மனியர் ஆரிய இனத்தவர் என்றும் உலகை ஆளப் பிறந்தவர் என்றும் இரண்டொரு எழுத்தாளர்கள் பிதற்றிய மயக்க மொழிகள், நாஜிக்களின்(Nazis) உத்தியோக பூர்வமான தத்துவமாகிய பொழுது, சாதாரண ஜெர்மனிய மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் அதனை நம்பினார்கள். "விஞ்ஞானிகள்" சிலரும் அதனை "உண்மை" என ஏற்றுக் கொண்டனர் அதன் விளைவு உலகும் நன்கு அறிந்ததே.இத்தகைய அமைப்பில் உள்ள பேராபத்துயாதெனில் ஒத்து போதல் என்ற கொள்கை அடிப்படையில் எதிரான அல்லது மாறுபட்ட சிந்தனைகளை அடக்கி ஒடுக்கப்படுவதாகும்". க. கைலாசபதி அடிய முடியும் நூலிலிருந்து. 

ஆக மணிப்பூரில் "இந்திய இராணுவமே வெளியேறு"  என்று 2000 ம் ஆண்டுகளில் போர்கொடி பெண்கள் இயக்கம். இன்று அதே இராணுவம் வர வேண்டிய தேவையை யார் உருவாக்கியது இந்த 23 ஆண்டு காலத்தில் நடந்தவை என்ன? இவை பற்றி புரிந்துக் கொள்ள வரலாற்று அறிவும் மார்க்சிய அறிவும் வேண்டும் என்பேன் தோழர்களே.



இந்திய வரலாற்று பக்கங்கள் 16 ம் நூற்றண்டிலிருந்து திருப்பி பார்த்தால் இதற்கான அடிசுவடிகள் காணக் கிடைக்கும். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியானது ஒரு நூற்றாண்டு வெறும் வணிகம் மட்டுமே புரிந்து இந்தியாவை புரிந்துக் கொண்டது பின் அதிகாரத்தை பற்றிய ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மக்களை அடிமைப்படுத்த இங்கிருந்த மத நூல்களை மொழியாக்கம் செய்தது மனுஸ்மிருதி (மனுநீதி) பகவத்கீதை மற்றும் புராண இதிகாச வேதநூல்களை வெளியிட்டு அவை இந்திய பண்பாடாகவும் சமூகமவும் கட்டமைத்தனர். இதற்கு பின்னும் தொடர் போராட்டங்கள் மக்கள் எழுச்சிகள் காரணமாக கம்பெனி ஆட்சி முடிவுக்கு (1757–1857) வந்தது.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை பிரட்டன் பாராளுமன்றம் ஏற்றுக் கொண்டது அதன் பின் 1857 இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு, பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றி, சமூகங்களுக்கிடையில் இருக்கும் வேறுபாடுகளைப் பயன்படுத்தி, இதேபோன்ற கிளர்ச்சிகள் நடைபெறுவதைத் தடுக்க மக்களுக்கிடையிலேன வேறுபாடுகளை தனியான கலாச்சார மற்றும் அரசியல் அடையாளத்தை உருவாக்க ஊக்குவிக்கப்பட்டனர்.

1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். இதிலிருந்தே காங்கிரஸ் நோக்கம் புரிந்திருக்கும் உங்களுக்கு.
1906 ஆம் ஆண்டு அஹ்சன் மன்சிலில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லீம் கல்வி மாநாட்டின் ஆண்டுக் கூட்டத்தில், டாக்கா நவாப் குவாஜா சலிமுல்லாவால் பிரிட்டிஷ் இந்தியாவில் முஸ்லீம்களின் நலன்களை முன்னேற்றுவதற்கு ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவது பரிந்துரைக்கப்பட்டது.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்)1925 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்து தேசியவாத அமைப்பு. இது இந்தியாவின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாகும், ஆர்எஸ்எஸ் அனைத்து இந்திய மக்களுக்கும் ஒரே, ஒருங்கிணைந்த இந்து அடையாளத்தை நம்பசொல்கிறது,அதன் முதன்மை குறிக்கோள் இந்து கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் மரபுகளை நிலைநிறுத்துவதும் மேம்படுத்துவதும் ஆகும். இந்த அமைப்பு சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் அதன் பழமைவாத நிலைப்பாடுகளுக்காக அறியப்படுகிறது, ஒரு இந்து தேசத்திற்காக வாதிடுகிறது மற்றும் மதச்சார்பின்மை அல்லது சிறுபான்மை உரிமைகளை எதிர்ப்பது.இந்து கலாச்சாரத்தை பாதுகாப்பதன் பெயரில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுக்கிறது. ஆனால் எந்த இந்துக்கு என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

 ஆக ஆங்கிலேயரகள் இங்கே முரண்பட்ட பிரிவுகளை பிரித்து வைத்தும் தொடர்ந்து ஆட்சி புரிய முடியவில்லை அவை உலக விடுதலை இயக்கங்களின் வளர்ச்சி மோதல் இங்கேயும் பிரதிபலித்தது.

1857 கிளர்ச்சிக்குப் பிறகு கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. அக்டோபர் 16, 1905 ஆங்கிலேய கவர்னர் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்தப் பிரிவினை நிர்வாக ரீதியான பிரிவினை எனக் கூறப்பட்டது. சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்சா, ஆகிய அனைத்தும் வங்காளத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. கிழக்கு வங்களாத்தில் அதிகமாக முஸ்லீம் மக்கள் வசித்து வந்தனர். மேற்குபகுதியின் இந்துக்கள் வாழ்ந்து வந்தனர். இவை இரண்டும் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதை எதிர்த்த இந்திய மக்கள் தேசம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் ஆங்கில அரசு 1911 ஆம் ஆண்டு பிரிவினையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஆகஸ்ட் 1947 இல் இந்திய பிரிவினை

•நவீன காலத்தின் மிகப்பெரிய அழிவுகளில் ஒன்று; போர், பஞ்சம் அல்லாத காலங்களில் நடைபெற்ற உலகிலேயே பெரிய மக்கள் இடப்பெயர்வு.• இந்தியா, பாகிஸ்தான் என புதிதாக இரண்டு சுதந்திர நாடுகள் உருவாக்கப்பட்டன.• ஏறக்குறைய 12 மில்லியன் மக்கள் அகதிகள் ஆனார்கள்.• இரு தரப்பிலும் அரை மில்லியன் முதல் ஒரு மில்லியன் வரையிலான மக்கள் கொடூர சம்பவங்களில் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கான பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.

இனி இதன் ஆழத்தை தேடுவதற்கு முன்னர், பெண்ணுக்கு சமூகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாறுபாடுகளை புரிந்துக் கொள்ள முயற்சிப்போம்.

தாய்வழிச் சமூக அமைப்பில், பெண்ணுக்கு முதன்மை இடம் கொடுக்கப்படுகிறது. மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் உயிர் நாடியாகப் பெண் திகழ்வதோடு, சமுதாயத்தின் முக்கிய ஆக்கப் பணிகளிலெல்லாம் பெண் முதன்மை இடம் பெற்றிருந்தாள் என அறிய முடிகின்றது. பெண் ஆணைச் சார்ந்து இருப்பதில்லை. சந்ததித்தோற்றம் தாயைமுன்வைத்துஅறியப்படுகிறது.பெண் வேட்டையாடியபோது குழந்தைகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாள். தந்தை என்பவர் இல்லை. இந்நிலையிலேயே தாய்வழிச் சமூகம் நிகழ்ந்திருந்தது. தந்தை வழிச் சமூகமானது ஆண் ஆதிக்கத்தை உள்ளடக்கிக் கொண்டு பெண், இளையோன்,குழந்தை,அடிமை,குடும்பப் பணிப்பெண் ஆகியோர் மீது ஆட்சி செய்து அவர்களை அடக்குகிறது எனக் (ஏங்கல்ஸ் - 1877)'' கூறுகின்றனர். இந்நிலையில் தாய்வழிச் சமூகத்தில் பெண் சுதந்திரமாக வாழ்ந்திருந்ததையும், தந்தைவழிச் சமூகத்தில் தான் பெண் அடிமையாக்கப்படுவதும் தெளிவாகின்றது.

நிலவுடைமைச் சமூகம் வளர்ச்சி பெற்ற பின்பு,குடும்பம்,பொருளாதாரம்அரசு நிறுவன அமைப்பு வரலாற்று அடிப்படையிலான ஆணாதிக்கப் போக்கினைப் பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடுவது வரலாற்றுக்கு முந்திய புராதனமான சமூகங்களில் பெண்ணுக்குச் செயலூக்கமான பங்கிருந்தது.அது பின்னர் வேளாண்மைச் சமூக மாற்றத்தால் புதிதாக உருவான குடும்பம்,நிலவுடைமை,அரசு ஆகியவற்றால் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலைமையே பெண்ணுக்கான முழு வாழ்வாக அமையலாயிற்று என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.

பெண் எல்லா இடங்களிலும் அனைத்துச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டாள்.நவீன முதலாளித்துவத்தில் மேலும் ஒடுக்கப்பட்டாள்

இன்று வரலாற்றின் போக்கைப் புரிந்துகொண்டு மார்க்சியத்தை எதிர்க்க ஏகாதிபத்திய அரசுகள் பலவகையான பொருளாதாரச் சீர்த்திருத்தங்களைச் செய்ய முன்வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான அரசுசாரா உதவி நிறுவனங்கள் உலகின் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் கிளைவிட்டுப் பரவியுள்ளன.இதன்மூலம் சிறுசிறு உதவிகளை வழங்கி விட்டு பெருந் தொகையான இலாபங்களைக் கொள்ளையடித்துச் செல்வதுடன்,தமது கலாசார சிந்தனைகளை பரப்புவதிலும் இவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.குறிப்பாக குட்டிமுதலாளித்துவ சிந்தனைகள் இன்று உலகெங்கிலும் ஊட்டி வளர்க்கப்படுகின்றது.

ஒரு இனத்தின் பண்பாடு,கலாசாரம் என்பது சாரம்சத்தில் அதன் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மைக்குரிய பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்து வருகின்றது. இவற்றை நாம் இருவகையாக அடையாளம் காணமுடியும். மனித சமூகம் தன் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் பெற்ற அனுபவங்கள், வாழ்க்கையின் உயரிய விழுமியங்கள், நாகரீகக் கூறுகளை ஒரு புறமாகவும், பலபேர் உழைப்பில் சிலபேர் வாழும் ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பை சிதைந்து போகாமல் பேணிக்காக்க உதவும், பொருளாதார ஒடுக்குமுறை அம்சங்களை உள்ளடக்கிய பண்பாட்டுக் கூறுகளை வேறாகவும் கொள்ள முடியும். சாதி, சமயசடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாட்டுக் கூறுகளை வேறாகவும் கொள்ள முடியும். சாதி, சமயசடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாட்டு மரபுகள் ஒவ்வொன்றின் பின்னாலும் சமத்துவமற்ற நிலையும், பொருளாதாரக் காரணிகளோடு பின்னிப் பிணைந்த ஒடுக்குமுறைவடிவங்களும் தொடர்ந்து வருவதை நாம் கவனிக்கலாம்.இவை சாதீயம்,பெண்ணடிமைஎன்பவற்றில் மிகவும் கூர்மையாகவே வெளிப்படுகிறது.

இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஆளும் வர்க்க கலாச்சார நடைமுறைகளை உயர்வாக எண்ணி விமர்சனம் ஏதுமின்றி அதன் ஒடுக்குமுறை அம்சங்களை விளங்கிக் கொள்ளாமல் அப்படியே பின்பற்றி வாழும் ஒருபோக்கு என்றும் இருந்து வருகிறது. இத்தகைய குருட்டுத்தனமான பின்பற்றலுடன் கூடிய படிமுறை வளர்ச்சிப்போக்கே பல்வேறு அடிமைத்தனங்களும் எதிர்ப்பின்றி காலம்காலமாக வேரூன்றி இருப்பதற்கு காரணமாகிறது.

பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு ஆளும் வர்க்கமே காரணம்

பல்வேறு கலாச்சார காவலர்களும் தங்களின் கலாச்சார மேலாதிக்கத்தை பெண்கள் மீதே திணிகின்றனர்.            

இந்த அமைப்புமுறைதான் இந்த வன்முறைகளை கட்டிக் காக்கிறது

இதனை தூக்கிஎறிவதற்கான திறனை பெற்றால் மட்டுமே இதற்குதீர்வு.

கீழகாணும் லிங்க் தேவைக்காக


இந்தியாவில் நடந்த கலவரங்கள் ஒரு பார்வைக்கு

2 comments:

  1. தகவலுக்கு நன்றி தோழர்

    ReplyDelete
    Replies
    1. தோழர் முழுமையாக எழுத முடியவில்லை இவை அடுத்த பகுதியில் முழுமை படுத்தி விடுகிறேன் தோழரே

      Delete

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்