ஜாதிபிரச்சினையை மார்க்சிய கண்ணோட்டத்தில் எப்படி அணுகுவது?

 நேற்று நடந்த கிளப் அவுஸ் விவாதம் ஒலி வடிவில் கேட்க விரும்பும் தோழர்கள் இந்த லிங்கை அழுத்தி ஒலி வடிவில் கேட்கலாம்

அறிமுக உரையாக நான் சமூகத்தில் ஜாதியின் தோற்றம் அதன் இன்றைய நிலை ஜாதி ஒழிப்பில் இடதுசாரிகள் மற்றும் இன்று நம் முன் உள்ள சிக்கல் பற்றி பேசினேன். என்னை அடுத்து தோழர் ரவிந்திரன் மிக விரிவாக பேசினார். அவர் பல்வேறு விதமான ஆய்வுமுறைகளை பற்றி பேசினார். இறுதியாக தோழர் நல்லூரான் அவர்கள் பேசினார் விவாதம் 1:30 மேல் செல்லவே அடுத்த ஒரு வகுப்பில் தொடரலாம் என்று முடித்துக் கொண்டோம்.

சரி சாதி ஒழிப்பு பற்றி

+++++++++++++++++
ஜாதி ஒழிப்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்று ஆவணம் 1960களில் இருந்த தீண்டாமையை ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அனைத்து ஜாதி உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்து கோயில் நுழைவுப் போராட்டமும் இரட்டை குவளை முறையும் ஒழித்துக் கட்டியதோடு சாதியத்தில் ஏற்றத்தாழ்வுகளை கடைப்பிடிப்பதை முற்றாக ஒழிக்க கலாச்சார ரீதியான பல பணிகளை செய்ததாக தோழர் சண்முகதாசன் தெரிவித்துள்ளார். நக்சல்பாரி எழுச்சிக்கு பின் ஏற்பட்ட பல மாற்றங்களை நாம் புரிந்து இருப்போம். அதில் குறிப்பாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் மக்கள் யுத்த குழுவின் வழிகாட்டுதலில் பலப்பகுதியில் உழைக்கும் ஏழை எளிய மக்களை ஒன்றிணைத்து சாதி தீண்டாமை இரட்டைக் குவளைமுறைக்கு தீர்வு கண்டனர் ... அன்று அவர்கள் எல்லா ஜாதிகளிலும் இருந்த உழைக்கும் மக்களை ஓர் வர்க்கமாக அணி திரட்டி இருந்தனர். நக்சல்பாரின் பின்னடைவுக்குப் பின் இங்கு ஒன்றுபட்ட கட்சியோ செயலோ இல்லாமல் போய்விட்டது. அந்த வெற்றிடத்தில் சாதி கட்சிகள் குடியேறிவிட்டது.
ஏகாதிபத்தியம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் துணையோடு பல்வேறு ஜாதி கட்சிகள் உயிர்ப்பிக்கப்பட்டன...
அவை அங்கு உழைக்கும் மக்கள் ஓர் வர்க்கமாக திரண்டிருந்ததை உடைத்து பல்வேறு ஜாதி சங்கங்கள் பின் அணி திரள செய்தது... விளைவு நீங்கள் இன்று கண்டு கொண்டுள்ளது.....
இதனை புரிந்துக் கொள்ள
இன்று தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன அவை எல்லாமே தன் ஜாதிக்கு விதிக்கப்பட்ட தொழில்கள் மட்டும் ஈடுபடுகின்றனவா அல்லது இச்சமூக அமைப்பில் தனக்கானவேலையைத் தேடிக் கொள்கின்றனரா? என்று ஆராய்ந்தால் ... 1920 களுக்குப் பிறகு சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஆனது எல்லா ஜாதியிலும் படித்தவர்களுக்கான புதியவர்க்கம் தோன்றலாயின .... அதிகாரிகள், முதலாளிகள், வணிகர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் மேலடுக்கில் குவிந்தனர். இந்த வர்க்கத்தினர் தங்களின் நலன்களுக்காக இந்த மேலாதிக்க வர்க்கமானது சாதிகளை கடந்து தமக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டன ... குறிப்பாக பெரியாரை தலைமையாகக் கொண்டவர்களும் கூட தேவைப்படும்போது பிராமணர்களுடனும் உறவு கொண்டனர்.
ஒரே ஜாதிக்குள் இருக்கும் முதலாளிகள், அதிகாரிகள், ஆளும் வர்க்க உயர் நிலையில் உள்ளவர்களை முதலாளியாகவும் அதிகாரியாகவும் ஆளும் வர்க்க சிந்தனையாளனாகும் பார்க்காமல்,தன் ஜாதிகாரனாக பார்க்கும் பார்வையை பாமர மக்களின் மண்டையில் ஏற்றி விட்டுள்ளார்கள்.
சாதி சமத்துவம் பேசும் பலர் இங்கே ஜாதியா வர்க்கமா என்பது பிரச்சனை தான் ...
ஜாதி ஒழிப்பு என்பது அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்றிணைத்தல் அதனை விடுத்து ஓட்டு அரசியலுக்காக சந்தர்ப்பவாத தலைமையோடு இணைத்துக் கொள்வது எந்த பயனும் இல்லை. (இன்று சில குழுக்கள் தங்களின் இருபிற்காக ஓட்டரசியல் கட்சியுடன் இணைந்து நடத்தும் கூட்டு பேர அரசியல் அந்த அணிகளும் சித்தாந்த ரீதியாக சீரழிந்து போய்விட்டதை காட்டுகிறது).
உண்மையில் இந்த வர்க்க போராட்டம் ஆனது இன்றைய ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்த சமூக அமைப்பின் கழிவுகளை அகற்றும் போராட்டமாக ஜாதியின் வேர்களை களைந்தெறியும் போராட்டமாக இருக்க வேண்டுமானால், உழைக்கும் அனைத்து மக்களும் ஜாதி மதம் கடந்து ஒன்றிணைய வேண்டும். அதற்கான வேலை திட்டத்தை வைக்க வேண்டும். வெறும் பார்ப்பனர் எதிர்ப்போ அல்லது குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக சுருக்கிக் கொள்ளும் போராட்டம் பயனில்லை, அவைதான் இன்று அடித்தால் திருப்பி அடி எனும் கோசம் எழுப்பும் தோழர்கள் யாரை எப்படி என்று சொல்லவில்லை!!! உண்மையில் மக்கள் அதிகாரம் அதன் முன்னர் SOC நடத்திய பல போராட்டங்களில் ஈடுபட்ட பல தோழர்கள் தங்கள் மீது போடபட்ட வழக்குகளுக்கு தனிநபர்களாக சந்தித்துக் கொண்டுள்ளனர் , தலைமையோ கோடிக் கணக்கான சொத்துகளை பிரிபதிலும் ஏற்பட்ட தகராறு இன்று ஆளும் கட்சியிடமே சரணாகதி, இப்படியாக உள்ள போது தங்களின் முழக்கம் உயிர்புடன் வையுங்கள் வேசத்திற்கு வைக்காதீர் என்பேன்.... இந்திய நாட்டின் ஜனதிபதியான ஒரு பழங்குடி இன பெண் இருந்தும் அந்த பழங்குடிகள் படும் இன்னல்கள் முடிவுக்கு வந்து விட்டதா?
பொதுவுடமை தத்துவத்தை பெரியார் கைவிட்டதற்கு காரணம் பிழைப்பு வாதம் என்று பெரியாரே மறுக்கவில்லை...
அமீர் ஹைதர்க்கான் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து தொண்டர்களை வென்றெடுக்க முடியும் என்று அன்று கூறினார் அதை நடைமுறைப்படுத்த அன்று வலுவான ஒரு பொதுவுடமைக் கட்சியின் இல்லை ...
இன்றோ இடதுசாரிகளே பொதுவுடைமை தத்துவத்தை கைவிட்டு பெரியாரிய அம்பேத்காரிய தத்துவத்தை கை கொள்வது என்பது பிழைப்பு வாதம் தானே! !!! தொடந்து விவாதிப்போம் சரியான விடையை தேடியே...

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்