மார்க்சியவாதிகளுக்கு இடையிலேயான பணி-4

 இங்குள்ள மார்க்சியவாதிகளின் புரிதலின் அடிப்படையில் நான்கு பிரிவாக பிரித்துள்ளேன்.

1). மார்க்ஸ் எங்கெல்ஸை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் போக்குள்ளவர்கள் இவர்கள் மார்க்சியத்தின் வளர்ச்சி போக்கை இயங்கியல் ரீதியாக புரிந்துக் கொள்ளாத வர்கள் அல்லது மார்க்சின் புரட்சிகரமான நடைமுறையை ஏற்காதவர்கள்.

(2). மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனினை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் போக்குள்ளவர் கள் ரசிய புரட்சியை மட்டுமே அதாவது தொழிலாளர் மூலம் நடக்கும் புரட்சி போராட்டத்தை ஏற்கும் இவர்கள் மார்க்சியத்தின் புரட்சி விதிகளை நடைமுறை படுத்துவதில் இயங்கியல் ரீதியாக புரிந்துக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

(3). மார்க்சிலிருந்து ஸ்டாலின் வரை ஏற்கும் இவர்களும் புறநிலை உலகை ஏகாதிபத்திய காலகட்டத்தை அதன் அசூர வளர்ச்சியை புறந்தள்ளி ரசிய புரட்சியோடு நிறுத்திக் கொள்ளும் இவர்களும் மார்க்சியத்தை இயங்கியல் ரீதியாக புரிந்துக் கொள்ளாத இயக்க மறுப்பியலர்கள் வளரும் சமுகத்தை ஏற்காதவர்கள்.

(4). மார்க்ஸ் முதல் மாவோவை ஏற்பவர்கள் மார்க்சிய-லெனினிய காலகட்டத்தை உணர்ந்தவர்கள் இன்றுள்ள காலகட்டதில் மா-லெதின் பணிஅதனை நடைமுறைப் படுத்த வேண்டியவை அறிந்தவர்கள் அவர்கள் முழுமையாக உணர்ந்தார்களா? அவர்கள் ஏன் ஒன்றுபட்டு இருக்கவில்லை அவை தீர்க்கப் பட வேண்டிய கேள்வி... இவற்றிலிருந்து புரிதல் தேவை.

வர்க்கப்போராட்டத்தின் கேந்திரப் பிரச்சினை அரசு அதிகாரம் தழுவிய பிரச்சினையாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நோக்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது. மார்க் ஸும், லெனினும் வர்க்கப் போராட்டத்தை ட்டும்அங்கீகரிப்பவர் ஒரு மார்க்ஸிவாதி ஆகமாட்டார்;வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பது மாத்திரமல்லது,இவ் அங்கீகாரத்தை பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வரை யார் ஏற்கின்றனரோ அவர்கள்தான் உண்மையான மார்க்ஸி வாதி ஆவர் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

மார்க்ஸும், ஏங்கெல்ஸும் தம்முடைய காலத்தில் அறியாதவையை லெனின் தன் நாட்டின் புரட்சியின்ஊடாகஅறிந்தவை  தோற்கடிக்கப்பட்ட முதலாளி வர்க்கம்,அதைத்தோற்கடித்தபாட்டாளி வர்க்கத்திலும் பார்க்க பலமுடையதாக இருக்கும்;அது அதிகார அரங்கிற்கு மீள முயன்றவண்ணம் இருக்கும்;சிறு உற்பத்தியாளர்கள் இடை விடாது முதலாளித்துவத்தையும் முதலாளி வர்க்கத்தையும் தோற்றுவிப்பர் என்பதை லெனின் உணர்ந்திருந்தார்.

லெனின் 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காவுட்ஸ்கியும்என்ற தமது நூலில் இப்பிரச்சினையை மிகவும் தெளிவு படுத்தியுள்ளார்.இந்நூலில் லெனின் அவர்கள்,முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிஸத்துக்குச் செல்லும் காலகட்டம் என்பது ஒரு முழுமையான வரலாற்று சகாப்தம்; இந்த வரலாற்று சகாப்தம் பூராவும்,கம்யூனிஸம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன், தோற்கடிக்கப்பட்ட முதலாளி வர்க்கம் அதிகாரஅரங்கிற்கு மீள முயல்வது திண்ணம்; இந்த முயற்சிகளை செயலாக்க முயல்வதும் நிச்சயம் என்று கூறினர்.

இது ஒரு  மார்க்ஸி-லெனினி தீர்க்க தரிசனம். தோழர் மாவோ அவர்கள் செய்தது, லெனினின் இந்த ஆழ்ந்த அனுமானத்தை மேலும் வளர்த்தது மட்டுமே. முதலாளித்துவத்துக்கும் கம்யூனிஸத்துக் கும் இடையில் ஒரு முழுமையான வரலாற்று சகாப்தம்இருக்கின்றது என்ற லெனினின் கூற்றை எடுத்துக் கொள்வோம்.தோழர் மாவோ அவர்கள் குறிப்பாக இதைக் கருத்தில் வைத்துத்தான் சோஷலி சமுதா யம் ஸ்தாபிக்கப்பட்ட பின், கம்யூனிஸம் ஸ்தாபிக்கப்படுவதற்கு ஐம்பது ஆண்டுகள்,நூறு ஆண்டுகள் அல்லது அதற்கு கூடிய காலம் எடுக்கலாம் என்று கூறினர்.

இவை எல்லாம் நமது ஆசான்கள் அறிந்திருந்தனர். நாமோ இதனை புரிந்துக் கொள்ளாமல் மார்க்சியத்திற்கே ஆளுக் கொரு விளக்கம் கொடுத்துக் கொண்டு தன்னை மார்க்சியவாதியென்றும் மார்க்சிய லெனினியவாதி என்று அழைத்துக் கொள்வதனால் மார்க்சிய லெனினியத்தை வளர்க்க முடியாது. உண்மையான மார்க்சிய லெனினியத்தை அறிந்து உணர்ந்து செயல்படல் அவசியம்.

இவை ஏற்பட்டதன் பின்னனி பல இருந்தும் முதலில் திருத்தல்வாதம் பற்றி தெளிவடைவோம் "திருத்தல்வாதம் என்பது தொழிலாளர் வர்க்க இயக்கத்துள் இருக்கும் முதலாளித்துவ போக்கே யாகும். திருத்தல்வாதம் முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு வடிவமாகும்" என்று நமது மூலவர்கள் சொல்லியுள்ளனர். சரி நவீனதிருத்தல்வாதம் என்றால் என்ன? 1960 களில் குருசேவ் கும்பலின் 3 சமாதான கோட்பாடுகள்  ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20 பேராயத்தில் கொண்டு வரப்பட்டவை,அவையே சோசலிச சோவியத்தை சிதைக்கும் மார்க்சிய லெனினிய விரோத நிலைப்பாட்டை கையில் எடுத்தது.இவை தனது நாட்டில் மட்டுமல்லாமல் உலக கம்யூனிச இயக்கத்தில் திருத்தல்வாதத்தைப் புகுத்தி;உலகில் உள்ள எல்லா நாட்டு கம்யூனிச இயக்கங்களையும் புரட்சி நடவடிக்கையை கைவிட்டு முதலாளித்துவ துடன் கைகோர்க்கும் சமரசப் பாதையை வகுத்துக் கொடுத்தது.  இவை பெரும் சிதைவை உருவாக்கியது. 

லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்பவாதி களையும் மாவோ ரசிய குருசேவ் புரட்டல் வாதிகளையும் முதலாளி வர்க்கத்தினர் என்றும் வர்க்க விரோதிகள் என்றும் அடையாளம் காட்டினார்கள்."சோஷலிச நாடுகளில் திருத்தல்வாதிகள் முதலாளித் துவ பாதைக்காக போராடுகிறார்கள் மீண்டும் முதலாளித்துவத்தின் மீட்டெடுக்க முயல்கிறார்கள்"என்றார் மாவோ. மாவோ குருசேவ் திருத்தல்வாத கும்பலுக்கு எதிரான போராட்டத்தின்போது குட்டி முதலாளித்துவ சூழ்நிலைகளில் புதிய முதலாளித்துவ மூலகாரணங்கள் இடைவிடாது தாமாகவே உற்பத்தியாவது பற்றியும் முதலாளிய செல்வாக்கின் விளைவாகவும் குட்டி முதலாளிகளின் பரவலாக தீங்குபயக்கும் சூழ்நிலைகளின் விளைவாகவும் அரசியல் சீரழிவுவாதிகளும் புதியமுதலாளித்துவ கர்த்தாகளும் தொழிலாளி அணிகளிலும் அரசு நிர்வாகிகள் மத்தியிலும் தோன்றுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

"கட்சி உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து புரட்சியை நடத்த விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மாவோ அவர்கள் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள் தமது அதிகாரத்தை காத்துக்கொள்ள விரும்புகிறார்கள்"என்றார்.இன்னொரு புறம் மாவோ"நீங்கள் சோசலிசப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் முதலாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியவில்லை, அவர்கள் கட்சிக்குள்ளாகவே இருக்கும் வலதுசாரிகள் அவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவப் பாதையை மேற்கொண்டிருக்கிறார்கள்" என்றார் கலாச்சாரப் புரட்சியின் போது. ரஷ்யாவின் குருசேவ் கும்பல் போல சீனவின் டெங் கும்பல் உள்நாட்டில் வர்க்கப்போராட்டம் இனி தேவையில்லை என்றும் புரட்சிகர பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அனைத்துலக சீர்திருத்தவாத திருத்தல்வாதகட்சிகளுடன் நட்பும் சகோதரத்துவமும்,புரட்சிகர இயக்கங்களை கைவிட்டும் தனது உறவை துண்டித்துக் கொண்டும் முதலாளித்துவ பாதையில்  சீரழிந்து புதிய முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப்  படுத்துகிறது.

காவுட்ஸ்கி  தொடங்கி குருசேவ் டெங் வரையிலான திருத்தல்வாதிகள் சாராம்சத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் கைவிடுவதன் மூலம் முதலாளி வர்க்கத்துடன் அணி சேர்ந்து கொள்ளும் தொழிலாளி வர்க்கத்துக்குள் இருக்கும் முதலாளி வர்க்கமே என்பது எந்த வேறுபாடும் இல்லை.

மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்ற நூல் 1908 ஆம் ஆண்டு லெனினால் எழுதப்பட்டது. 1905 இல் இருந்து 1907இடைப்பட்ட கட்டத்தில் ரஷ்ய புரட்சி தோல்வியடைந்ததால் பல்வேறு மார்க்சிய விரோத போக்குகள் தலைவிரித்தாடியது .

மார்சிக்சியம் இரு தரப்புகளில் இருந்து தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறார் லெனின். ஒன்று மார்க்சியத்தை மறுக்கும் போக்கு முதலாளித்துவ தத்துவவாதிகளின் இப்போக்கு. இன்னொன்று  மார்க்சியத்தை மறைமுகமாக திருத்தம் செய்யும் போக்கு இவை மார்க்சிய போதனைகளில் திருத்தம் செய்தல் மார்க்சியத்தை ஆராய்கிறேன்  என்று மார்க்சியத்தை குழப்புதல்.மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும்,பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான,தனிச்சிறப்பான குறிப்பான நிலைமை களுக்குப் பிரயோகிக்க வேண்டும்என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது. அதை மறுத்து 1990 களுக்கு பின் பல மார்க்சிய விரோத கருத்துகளை இன்று மார்க்சியர்களிடையே உள்ளன அவற்றில் சில பார்ப்போம். மண்ணுக்கேற்ற மார்க்சியம்இந்த வகையில் திராவிட தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர்.
இங்குள்ள அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் புறக்கணித்த தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை,தமிழின,  தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பு கைவிட்டதை இப்பொழுது கையிலெடுத் துள்ளது வருத்ததிற்க்குறியது.

மார்க்சியமோ,தனிச்சிறப்பான கூறுகளுக்கும்,பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது.அதற்கு மாறாக,சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் மண்ணுக்கேற்ப மார்க்சியம்என்கின்றனர்.இந்த வகையில் தமிழின,தலித்தியவாதிகள் மட்டுமல்ல,இந்துமதவெறி சனாதனிகள் கூட மண்ணுக்கேற்ற மார்க்சியம்பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!

மாவோ ஒரு முறை சொன்னது போல் மார்க்சியம் என்பதே பொதுத்தன்மையைக் குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகவும்.அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிர,குறிப்பான தன்மைகளுக்கு முதன்மை கொடுத்து பொதுத்தன்மைகளை மறந்துவிடக்கூடாது.ஆனால் இங்கோ பலர் இது போன்ற  பொதுத்தன்மைகளை புறக்கணித்து விடுகின்றனர்.இங்குள்ள சிலரின் கோட்பாடு மட்டுமல்ல அவர்களுக்கு மார்க்சியமே அவர்களின் ஒவ்வொருவரின் தேவைகளை ஒட்டி மார்க்சியம் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மார்க்சியத்தில் ரஷ்யா மார்க்சியம் ,சீனா மார்க்சியம் ஏன் தமிழகம்  மார்க்சியம் என்று கோட்பாடுகள் இல்லை.அந்தந்த நாட்டின் பொதுத் தன்மையைக் குறிப்பான குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகும்.

ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை.ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலானகுறுகிய கால எழுச்சிப் பாதை மேற்கொள்ளப்பட்டது. குடியேற் அரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் பாதை மேற்கொள்ளப்பட்டது. சோவியத் யூனியனைப் பார்த்துப் பிரதி செய்யக் கூடியதல்ல பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பதை சீனா அதை நடைமுறையில் காட்டி விட்டதுசீனாவைப் பார்த்துப் பிரதி செய்ய முயன்றோரும் தோல்விகளைச் சந்தித்தனர்வரலாற்றின் பாடங்கள் கடினமானவைமுடிந்து போனவற்றை விரிவாக விளக்க ஆயிரம் நூல்கள் உண்டுமுன்னோக்கிய பாதையைக் காட்ட அவ்வாறு எதுவுமில்லை.

இன்னும் சொல்லப்போனால் சமனற்ற  வளர்ச்சி தன்மை கொண்டும் பல தேசிய இனங்களை  கொண்டுள்ள ஒரு நாட்டில்,குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல் கருதி தேசிய இனங்களின்  தன்மைகளுக்கு ஏற்ப விடுதலைப்பாதையில் மாறலாமே தவிர ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித் தனிமார்க்சியமாவதில்லை. தனித்தனியாகபார்பவர்கள் மார்க்சிய அரசியல் பொதுத்தன்மை மறுக்கிறார்கள்.

காலந்தோறும் புதிய உண்மைகள் புரட்சிகர மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் மார்க்சியத்தின் அடிப்படை பிரச்சினைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு நிலையை அடைகின்றன. எப்போதும் மக்கள் போராட்டங்களுக்குத் துரோகமிழைக்கும் திருத்தல்வாதிகள் நூல் இழையில்மறைக்கும் பகுதிகளை நாம் சொல்லியாக வேண்டும்.ஆம் இவர்கள் குருசேவ் பாதையில் கட்சியை சீரழித்ததுடன் மார்க்ச்சியதையே மண்ணுகேற்ற மார்க்ச்சியம்என்று ஏமாற்றி பிழைக்கும் நிலை,நேருவும் காந்தியும் இவர்கள் தலைவர்கள் ஆகும்போது இவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பது அறிவது மிக சுலபம்.ஆனால் அன்றைய வீரஞ்செறிந்த கீழத்தஞ்சை விவசாயிகள்இயக்கப் போராட்டத்தை,தலைமறைவு இயக்கத்தில் கம்யூனிச போராளிகள் செய்த தியாகம்,அர்ப்பணிப்பை வர்க்க உணர்வு கொப்பளிக்க செறிவாக அளித்திருக்கலாம்.விவசாயிகள் இயக்கத்தின் வரலாறை,அதன் வர்க்கப் போராட்ட வீச்சை இடது,வலது எனும் திருத்தல்வாதிகள் இன்னும் முழுமையாக,ஆழமாக மக்களிடம் துலக்கமாக எடுத்துக்காட்டாததன் மர்மம்தான் என்ன? 

அப்படிப்பட்ட சமரசமற்ற களப்போராட்டத் தைக் காட்ட ஆரம்பத்தில் சீனிவாசராவ், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையா வரிசையில்அதிகாரபுரோக்கர்களான  .எம்.எஸ்யும், சுர்ஜித்தையும், ஜோதிபாசுவையும், இந்திரஜித் குப்தாவையும் .... காணச் சகிக்க முடியாது. CPI மிலிருந்து வெளியேறிய CPM எதோ மார்க்ச்சியத்தை காப்பது போல் புறப்பட்ட வேகத்திலே மார்க்சிய-லெனின்யத்தை தூக்கிபிடித்து உலுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம் என்று 1967 ல் வெடித்த மக்கள் போராட்டங்களை தனது போலிசுடன் மத்திய அரசுபடை பலத்தால் கொன்றொழித்தவர்கள். மார்க்ச்சியத்தின் பெயரால் வாழ்ந்து கொண்டிருக்கும் கம்யூனிச துரோகிகள்.

கீழத்தஞ்சையின் வர்க்கப் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும், வரலாற்றையும் மக்களிடம் கொண்டு சென்றால்,பாராளுமன்றத்துக்கு உள்ளே பதவி நாற்காலியிலும்,வெளியே கட்சி ஆபிசிலும் பணபட்டுவாட போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்திருத்தல்வாதிகளின்  குட்டு உடைந்துவிடும்.48,50-களில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால்; தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்கு முறைக்கு எதிராக ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார் என்ற கேள்வி எழுந்துவிடும்.ஆதிக்கச் சாதியினரின் அடக்கு முறைக்கு சாதி வெறிக்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்டு கட்சி  டீக்கடையில் அமர்வோம், கோயிலில் நுழைவோம் என்று நுழைந்து காட்டியது.இன்றோ மேல் சாதியின் மனம் மாறாமல் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்கின்றனர் திருத்தல்வாதிகள்.

சாதி ஒடுக்கு முறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?”என்ற அவதூறுக்குத் தன்ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள்இயக்கம். பண்ணையடிமைத் தனத்திற்கெதிரான போராட்டத்தில் சீனிவாசராவையும்,இரணியனையும் தனுஷ்கோடியையும் இன்னும் ஆயிரக்கணக்கானோரையும் செங்கொடி தந்தது. மற்ற இன்றைய சாதி கட்சிகள்  தராதது ஏன்?

கண்ணெதிரே நடந்த பண்ணையடிமைத் தனத்திற்கெதிரான போராட்டத்தில் களத்திலிறங்காமல், அரசு சன்மானங்களைப் பெறவும்,அதிகாரத்தைப் பங்கு போடவும் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டவர்களின் அரசியல் பிழைப்பு வாதத்தை அறிந்து கொள்ள அன்றைய சமகால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கக் கோருகிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.

மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும்,பொது விதிகளையும் செரித்துக் கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான,தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது. தமிழகத்தைப்பொறுத்தவரை மார்க்சிஸ்ட்கட்சி சி.பி.எம் காரர்கள் நம்பூதிரிபாடின் சனாதன வியாக்கியானங்களைப் பற்றி ஒழுகுகின்றனர். ஆனால் சிங்காரவேலர், ஜீவா வழிவந்த சி.பி..காரர்கள் பாரதி, வள்ளுவம், கம்பராமாயணம் இவற்றில் எல்லாம் பொதுவுடைமைச் சித்தாந்தத்தைத் தேடி மண்ணுக்கேற்ற மார்க்சியம்உருவாக்கி,அந்த வகையில் திராவிட தமிழினவாதிகளின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளனர். சாதியப்பிரச்சினைகளை, தமிழின,தலித்தியவாதிகள் தோன்று வதற்கு பல ஆண்டுகள் முன்பே கையிலெடுத்தது. இதைக் காண மறுத்துக் கண்களை மூடிக் கொள்ளும் தமிழின, தலித்தியவாதிகள்பெரியாரிய,அம்பேத்கரியப் பார்வையை ஏற்றுக் கொண்டால்தான் தேசிய இன, சாதியப் பிரச்சினையை அணுகித்தீர்க்கும் மண்ணுக்கேற்ப மார்க்சியம் இல்லையென்றால் மரபுவழி மார்க்சியம்என்று அடாவடி பேசுகின்றனர். (சாத்தன் புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.)

வர்க்க போரட்டத்திற்க்கும் சாதியத்துக்கும் இடையிலான உறவு, வர்க்கம் என்பது சாதியின் மறு வடிவமாக இருந்த நில உடைமைக் காலச் சூழலில் சாதிப் போரட்டத்தின் வெளிப்பாடு ஆகும்.

ஆனால் இன்றைய சூழலில் சற்று சிக்கலான பொருளாதார ஏற்ற தாழ்வுகளால் சாதிக்குள்ளே வர்க்கங்களாக மக்கள் முரண்பட்டு நிற்க்கும் பொழுது,ஜாதிகளை ஒழித்தாலே வர்க்கப் போராட்டம்நடத்த இயலும் என்ற தத்துவம் சாதியையும் வர்க்கத்தையும் தனித்து பார்ப்பதாகும் ஒரே சாதிக்குள்ளேயே காணப்படும் பகை வர்க்கங்கள் தம்முள் மோதிக்கொள்ளும் சூழலும் கண்கூடாக காணலாம், அடிப்படை வர்க்கத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகள் மேல்நிலை சாதியில் இருப்பவர்களுடன் தினம் மோதல் ஏற்பட்டுதவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது.

நிலவுடமை சூழல் ன்னும் நிலவிக் கொண்டு இருக்கும் இடங்களில் நிலஉடமை அரசியல் அதிகாரம் இருக்கமாக உள்ளது. ஏதேனும் ஒரு ஓட்டுக் கட்சி வாக்குச் சீட்டு வங்கியாகவே கிராமங்கள் உள்ளனர். எந்த ஒரு ஓட்டுக் கட்சியும் பெரும்பான்மை ஜாதியை கணக்கிலெடுக்காமல் வேட்பாளரை நிறுத்துவது இல்லை எந்தக் கட்சிக்கும் வெற்றி அலை வீசிய போதிலும் இந்த அம்சம் அவசியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகின்றது தனித்தனியாக தோன்றிய ஜாதி சங்கங்கள் இறுதி நிலையில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சிகள் இணைந்து விட்டனர்.அந்தந்தப் பகுதியில் பெரும்பான்மையாக கொண்ட அமைப்புகள் அந்தந்த பகுதியில் செல்வாக்கான ஓட்டுக்கட்சிகள் ஆகவிளங்குகின்றன இறுதியில் அந்தந்த சாதிகளில் உள்ள மேல் வர்க்கத்தினர் அந்த சாதிகளில் உள்ள அடிப்படை வர்க்கத்தினரை அதற்கான அரசியல் அதிகார உரிமையை இந்த சாதி அமைப்புகள் வழங்குகின்றன ஜாதி அமைப்பு என்பது முதலாளித்துவ முந்தைய உற்பத்திக்கான வடிவம் ஆகும்ஆனால் ஒரு தேசியஇனம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும் காலத்தில் முதலாளிய உற்பத்திமுறையும் துணையுடன் தன்னை வளர்த்துக் கொள்ளும் எனவே அதற்கு முன் தேசியத்துக்குள் காணப்பட்ட ஜாதிப் பிரிவினைகள் முதலாளித்துவ காலகட்டத்தில் தேசி  வளர்ச்சியடையும் என தேசிய வளர்ச்சியை உந்திச் செல்லும் நோக்கம் கொண்ட இயக்கங்கள் ஜாதி அமைப்புகள்எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையாகும் பெரியாரின் தொடக்ககால வெற்றி வை காட்டுகின்றது தேசிய இனத்துக்கும் தலைமை தாங்கும் சக்தி தத்துவங்களிலும் சாதி அமைப்பும் நடைமுறை அளவிலும் சமரசம் கொள்ளும் பொழுது தோல்வி அடைகின்றன சாதியம் கலாச்சார ஆதிக்கத்தை மட்டுமே நினைவில் கொண்டு ஆதிக்கத்தை வெறும் பாடமாக மட்டுமே ஏற்றுக் கொண்ட இயக்கங்களில் சாதி எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பு பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் ஆதரவு என்று குறிப்பிட்டு அதன் பின் தேசிய இனத்தில் உள்ள அனைத்து ஜாதிகளும் ஒன்று பிரதிநிதித்துவம் இல்லாமல் போயிற்று படித்தோருக்கு வேலை ஒதுக்கீடு படிப்பதற்கான இட ஒதுக்கீடு என்பது சாதி அமைப்புகளின் கோரிக்கை 1920 காலகட்டத்தில் இந்த கோரிக்கைகளின் தன்மைக்கும் இன்றைய காலகட்டத்தில் இவற்றில் ன்மைக்கும் இடையிலானவேறுபாட்டை காணவேண்டும். வேலை ஒதுக்கீடு என்பது அன்று முதல் இன்று வரை ஆளும் வர்க்கக் கண்ணோட்டத்தில் தன் நிர்வாகப் பணிகளை உருவாக்க நினைக்கும் ஏமாற்று சில்லறை வேலையாகும் 1920களில் வேலைக்கான படிப்பறிவு நகர்மயமாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று படிப்பறிவு கிராமமாக எல்லா மக்களையும் அரவணைபது சாதனையாக இருப்பதை காணலாம் இத்தகையகோரிக்கை  தன்மை பெற்றுள்ளது.இப்போது ங்கே ஜாதி அமைப்புகளின் ஆட்பட்டுள்ள அடிப்படை உழைக்கும் மக்களின் பிரிவினர்கள் வர்க்க உணர்வு ஊட்டப்படும் போக்கில் போராட்டங்களில் தன்னை வர்க்கப் போராட்டத்துக்குஉரிய வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

ஆளும் வர்க்ககத்தின் அணுகுமுறையை மக்களை பிரிதாளும் சூழ்ச்சியை அம்பலப் படுத்தும் அதே வேளையில் சாதி கட்சிகளும்/ சாதிஅமைப்புகளும் உழைக்கும் ஏழை எளிய மக்களை சாதியாக மதமாக பிரித்து உழைக்காமல் வாழும் கூட்டம் தன் சாதியில் உள்ள உழைக்கும் மக்களைதனதுதேவைக்காகபலியிடுகின்றனர்.தாழ்த்தப்பட்ட சாதிகளில் உள்ள திறமையான இளைஞர்களை வேலை ஒதுக்கீடு என்ற பெயரில் தனக்கு சேவகம் செய்ய பயன்படுத்திக்கொள்கிறது. இவர்கள் ஜாதி ஒழிப்பை கூறுவதில்லை சாதி அமைப்பதன் மூலம் தமக்குரிய சமூகத்தை ஆளும் வர்க்கங்கள் உறுதிப் படுத்திக் கொள்கின்றன.அவர்கள் சாதி மறுப்புக் கூறுவதில்லை சாதிகளுக்கு இடையிலான வேறுபாட்டை களைந்து சமத்துவம் நிலவ வேண்டும் என்று விரும்புவதில்லை.

சில சாதி அமைப்புகளின் நிலை தாழ்த்தப்பட்ட ஜாதியில் உள்ள மக்களுக்கு வேலைகிடைத்து விட்டால் பொருளாதார உயர்வு கிடைத்துவிட்டால் ஜாதி ஒழிந்து விடும் என நினைக்கின்றனர். உண்மையில் வர்க்க சமூகத்தில் ஒரு சிலர் வாழ மற்றெல்லோரும் வறுமையில் வாட சொல்வதுதான் இந்த சமூக அமைப்பு, இங்கே சமத்துவத்தை காண முடியாது!.

ஜாதி ஒழிப்புக்கு தீர்வுதான் என்ன? ஜாதியின் பொருளாதார கலாச்சார கூறுகள் குறிப்பிடும்பொழுது ஜாதி ஒழிப்பு மக்கள் ஜனநாயக புரட்சியின்பொழுது சாத்தியமாகும்; அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி பொருளாதார அடிப்படையை  உடனடி போராட்டத்தின் மூலம் மாற்றி அமைத்துவிடமுடியும்.ஆனால் அப்பொழுதும் ஜாதியின் கருத்துக்கள் ஆதிக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். அக்காலத்தில் ஜாதிகளை ஒழித்து மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்ட கூடிய கலாச்சார போராட்டத்தை தொடர வேண்டும். அப்பொழுதுதான் புரட்சியின் பயன்கள் நீடித்து நிற்கும்.

மக்கள் ஜனநாயக புரட்சி ஏற்படுத்தி ஜாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லும் பொழுது தீண்டாமை ஒழிப்பு கல்வி இட ஒதுக்கீடு வேலை ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை நாம் ஆதரிக்க வேண்டும் இதை நிரந்தர தீர்வு ஆகாது எனினும் இவற்றின் ஈடுபட்டுள்ள அடிப்படை மக்களை  நியயமான போராட்டத்திற்கு இது பயன்படும். எனவே சேர்த்து ற்றுக்கொண்டு அடிப்படை மக்களின் உடனடியாக சமூக பொருளாதார அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து மக்களை திரட்ட வேண்டும். 

இந்திய மார்க்சியவாதிகளிடையே  சாதியை பற்றிய  ஒத்த கருத்து இன்னும் எட்டவில்லை. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில்சாதியைப் பற்றிய மார்க்சியப் பார்வையை இன்னும் அமைத்துக் கொள்ளவில்லை என்பது உண்மை. புதுப்புது கருத்துக்கள் முளைத்துக் கொண்டே இருக்கிறதே தவிர ஒத்த கருத்தை நெருங்கவில்லை. முடிவில்இது சாதியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு உகந்த நிலைமை ஏற்படுத்தித் தருகிறதுஅதாவது சாதி என்பது நிலையான ஒன்று என்ற இவர்களின் கருத்தை நிலைப்படுத்தும் வகையில் நிலைமை இருக்கிறது.சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக் கொண்டு சூழலுக்கேற்ப உருக்கொண்டுஉபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்ற போது அதற்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது இந்து மத பிராமணியமே அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கி உள்ளதுபிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுங்கமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது. நிலப்பிரபுத்துவத்திற்க்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே சாதி கருக் கொண்டிருந்தாலும் அவை திடமாக நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது. சாதி மற்றும் தீண்டாமை என்பது இந்துமதம் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளதுசாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறதுஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறதுசாதியும்தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறைஉயர்வுதாழ்வு கற்பித்தல்படிநிலை முறைபரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும்.
சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ள பரம்பரைத் தொழிற் பிரிவினையும்அவை நிலைத்து நிற்பதற்கு சேவை செய்யும் அகமண முறைஉயர்வு தாழ்வு கற்பித்தல்படிநிலை முறைபரம்பரைச் சடங்குகள் ஆகிய அம்சங்களும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உரியதும்.

இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச்செய்வதால்பழைமையைதூக்கிபிடித்துக்கொண்டேஉலகமயமாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்ற தாழ்வை போக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது. .தொடரும்….

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்