இலக்கு 29 இதழ் வரவுள்ளது அதில் பேசப்பட்டுள்ள கட்டுரைகளே.
இலக்கு 29 pdf வடிவில் இந்த லிங்கில்
இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை
நாட்டுப்புற ஏழை மக்களுக்கு பாகம் – 4. லெனின்.3 ஆம் பாகத்தின் தொடர்ச்சி. |
முரண்பாடு பற்றி - மாவோ.பகுதி – 2 |
மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் பயிலுவோம். பகுதி – 6. |
ஜாதியையும் ஜாதி தீண்டாமையும் இந்த சமூக கட்டிக் காக்கிறது எதற்கு ஏன்?. |
மார்ச் 27, 2023, அன்று "மணிப்பூர் பழங்குடி சங்கம்" என்ற பாஜக பின்புலத்தில் செயல்படும் சங்கம் தொடுத்த வழக்கின் மீது மணிப்பூர் உயர் நீதிமன்றம் சமவெளியில் வாழும் மெய்தி சமூக மக்களின் பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குக்கி மற்றும் நாகா பழங்குடிகளின் போராட்டம் வெடித்தது. மெய்தி மக்களிடையே பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை பாஜக தூண்டிவிட்டதன் நோக்கம் எதுவெனில், அவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தருவதன் மூலம் அவர்களின் பெயரால் குக்கி பழங்குடிகள் வாழும் மலைப் பகுதிகளில் உள்ள நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கவே ஆகும். திட்டமிட்டு சங்பரிவார கும்பல் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதுவே தற்போது நடந்து வரும் கலவரங்களின் துவக்கப்புள்ளியாகும்.
பழங்குடிகள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாகவும், மெய்திகள் இந்துக்களாகவும் இருப்பதால் மத ரீதியான உணர்வுகளை தூண்டி வருகிறது பாஜக அரசு. இதுவரை 200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பழங்குடியின பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட கோவில்களும், 300க்கும் மேற்பட்ட தேவாலயங்களும், குக்கி மக்களின் 3000 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் செய்ததை போல பழங்குடிகளின் வீடுகள் அடையாள குறியீடிடப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. ஆங்கிலோ-குக்கி போரின் நினைவுச் சின்னம் தகர்க்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாகாணங்களின் சந்தையை தெற்காசிய நாடுகளின் சந்தையுடன் இணைப்பதற்காகவும், அப்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதன் பெயரில், அமெரிக்க-ஜப்பான் மேலாதிக்கம் மற்றும் இந்திய துணை மேலாதிக்கத்தை நிறுவவும் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக - புதிய காலனிய மண்டலங்களாக அம்மாகாணங்களை மாற்றுவதற்காகவும், அதை எதிர்த்த பழங்குடிகளின் போராட்டங்களை நசுக்குவதற்காகவும் ஒருபுறம் இராணுவமயமாக்கி மற்றொருபுறம் அங்கு இன, மத மோதல்களை உருவாக்குவதற்காக மெய்தி லீபன் (Meitei Leepan), அரம்பை தெங்கோல் (Arambai Tengol) உள்ளிட்ட சங்பரிவார குண்டர் படைகளை உருவாக்கியுள்ளது. ஆளும் ப.ஜ.க கும்பல் |
No comments:
Post a Comment