முதலாளித்துவ நாடாளுமன்ற மாயையும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும்
முதலாளித்துவ நாடாளுமன்ற முறை என்பது உழைக்கும் வர்க்கத்தை
ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவி என்பதே மார்க்சியம்
விளக்குகின்றன. மார்க்ஸ், ஏங்கல்ஸ் மற்றும்
லெனின் ஆகியோரின் வழிகாட்டுதலின் மூலம் நமக்கான அடிப்படையை
நாம் புரிந்துக் கொள்ள முடியும்,
தற்போதைய தேர்தல் முறை என்பது ஆளும் வர்க்கத்தின் நலன்களைப்
பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறது. வெறும் பெயரளவில்
பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது சமூக மாற்றத்தைக் கொண்டு வராது எனவும், தற்போதைய அரசு இயந்திரத்தை அப்படியே கைப்பற்றுவது பாட்டாளி வர்க்கத்திற்குப் பயன் தராது எனவும் மார்க்சியம் குறிப்பிடுகிறது. உண்மையான ஜனநாயகம் என்பது வெறும் பேச்சோடு நிற்காமல், சட்டமன்ற மற்றும் நிர்வாகப் பணிகளை ஒன்றிணைத்துச்
செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும் என்று கம்யூனின் அடிப்படையை வலியுறுத்தப்படுகிறது. இறுதியில், உழைக்கும் மக்கள்
தங்கள் விடுதலைக்காகப் பாராளுமன்ற முறையின் வரம்புகளைப்
புரிந்துகொண்டு அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்
என்ற கேள்வியை புரிந்துக் கொள்ள.
முதலாளித்துவ நாடாளுமன்ற முறைக்கும் தொழிலாளர் அரசுக்கும் இடையே உள்ள முக்கிய
வேறுபாடுகள் யாவை?
நாடாளுமன்ற முறையை விமர்சிப்பவர்களை 'அராஜகவாதிகள்' என்று லெனின் ஏன் குறிப்பிடுகிறார்?
அரசு இயந்திரத்தை அப்படியே கைப்பற்றாமல் அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற
மார்க்ஸின் கருத்தை விளக்குக.
மார்க்சிய
ஆசான்கள் பல்வேறு சூழலில் பல்வேறு கருத்துகளை முன் வைத்திருக்கின்றனர். அதன் முழுமையை
நாம் அணுக போகிறோம் அவை மார்க்சிய ஆசான்களின் எழுத்துகளின் அடிப்படையில் தொடர்ந்த விவாதிப்போம்
தோழர்களே.
இந்த கட்டுரையின் எழுத்தை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
முதல் நூல் அரசும் புரட்சியும் நூலில் ஆசான் லெனின் கூறியுள்ளவைதான் நமக்கான வழிகாட்டி. இதன் அடிப்படையில் இந்த பகுதி.
அரசும் புரட்சியும் நூலைக் கொண்டு விவாதிக்கலாம்;
தேவைப்படுவோர் நூலின் முழுமையை புரிந்துக் கொள்ளவே.
நடைமுறைவாதிகளாய் உள்ள பாராளுமன்றவாதிகள் ஆசான்கள் கூறியபடி செயல்படுகின்றனரா?
மற்றும் இன்னும் சிலர் பேசுவது மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழிமுறையிலிருந்து
தானா?
தோழர்களே, பாராளுமன்றம் பற்றி மார்க்சிய ஆசான்கள் என்ன சொல்லியுள்ளனர்?
அவர்களின் நூல்
ஆதாரங்களில் இருந்து விவாதிப்போமா?
காவுத்ஸ்கி “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதன்
மூலமும் நாடாளுமன்றத்தை அரசாங்கத்தின் எஜமானனது நிலைக்கு உயரச் செய்வதன்
மூலமும் அரசு அதிகாரம் வெல்வதே, கடந்த காலத்தைப் போல இப்பொழுதும் நமது அரசியல்
போராட்டத்தின் குறிக்கோள்” (பக்கங்கள் 726, 727, 732). இது கலப்பற்ற படுமட்டமான சந்தர்ப்பவாதமே அன்றி வேறல்ல:
சொல்லளவில் புரட்சி பேசி, செயலில் புரட்சியை நிராகரிப்பதே அன்றி வேரல்ல. “பாட்டாளி
வர்க்கத்தை இடைவழியில் சந்திக்க விருப்பம் கொண்ட... ஓர் அரசாங்கம் —
காவுத்ஸ்கியின் சிந்தனைகள் இதற்குமேல் செல்ல முடியாதவை,
“ஆளும் வர்க்கமாய்
ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்” என்று கம்யூனிஸ்டு அறிக்கை பிரகடனம் செய்த 1847ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குட்டி முதலாளித்துவச்
கழிசடை நிலையின் திசையில் பின்னோக்கி ஓடுவதே ஆகும். -லெனின் (லெ.நூ.தி. 2 பக்கம் 381).
ஏகாதிபத்தியப் போட்டியின் விளைவாய் விரிந்து வளர்ந்து
விட்ட இராணுவ இயந்திரத்தைக் கொண்ட அரசுகள் இராணுவ பூதங்களாகி,
உலகை ஆள வேண்டியது
பிரிட்டனா, ஜெர்மனியா-— இந்த நிதி மூலதனமா அல்லது அதுவா— என்னும்
பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இப்பூதங்கள் இலட்சோப் இலட்ச மக்களை
அழித்தொழித்திடும் ஒரு நேரத்தில், அரசின்பால் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு
குறித்த பிரச்சினையைத் திரித்துப் புரட்டுவதும் மூடி மறைப்பதும் மிகப்
பெரும் பாத்திரம் ஆற்றாது இருக்காது. (லெ.நூ.தி.2 பக்கம் 383- 384)
“கம்யூனானது நாடாளுமன்ற உறுப்பாயிராது. செயலாற்றும் உறுப்பாக
இருக்கும். ஒருங்கே நிர்வாக உறுப்பாகவும் சட்டம் இயற்றும் உறுப்பாகவும்
இருக்கும்.” மார்க்சின் இச்சொற்கள் குறித்து காவுத்ஸ்கி சிந்தனை செய்து பார்க்கவே
இல்லை. (அரசும் புரட்சியும் லெனின் தேர்வு நூல் 6, பக்கம் 133)
கம்யூனுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்றார்
மார்க்ஸ். கம்யூனானது செயலாற்றும் உறுப்பாக இருக்கும் என்றார் மார்க்ஸ். அதாவது
முதலாளித்துவ நாடாளுமன்றமானது செயலாற்றும் உறுப்பு அல்ல. சட்டம் இயற்றும் அதிகாரம்
கொண்டதுதான் நாடாளுமன்றமாகும். சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் அதிகார வர்க்க
நிறுவனமான நிர்வாகத்துறை நீதித்துறை போன்ற அரசுக்குத்தான் உண்டு. ஆனால் கம்யூனானது
அல்லது சோவியத்தானது சட்டம் இயற்றுவதோடு கூடவே அதனை செயல்படுத்தும் அதிகாரம்
கொண்டதாகும் என்றார் மார்க்ஸ். மார்க்சின் இந்த போதனையைத்தான் காவுத்ஸ்கி
சிந்திக்கவே இல்லை என்றார் லெனின். உண்மையில் காவுத்ஸ்கி இந்த மார்க்சின் இந்த
போதனையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, பிடிவாதமாக மறுத்தார்
என்பதே வரலாறாகும். காவுத்ஸ்கியைப் போலவே இந்தியாவில் உள்ள இடதுசாரிகளும்
மார்க்சின் இந்த போதனைகளை சிந்தித்துப் பார்க்கவில்லை. அதன் மூலம் நாடாளுமன்ற
ஆட்சி முறைக்கும் கம்யூன் ஆட்சி முறைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இங்குள்ள
இடதுசாரிகள் புரிந்து கொள்ளவில்லை, அல்லது மக்களுக்கு இதனை புரியவைக்கவே இல்லை. ஆகவே தான்
இடதுசாரிகள் நாடாளுமன்றத்துக்குள்ளேயே பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும்
என்று நம்புகிறார்கள், மேலும் அவர்களின் திருத்தல்வாத நம்பிக்கையை மக்களுக்கும் ஊட்டி நிலவுகின்ற
நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாற்றாக கம்யூன் ஆட்சி முறைக்காக அவர்கள் பாடுபடவே
இல்லை. கம்யூன் ஆட்சியை அமைப்பதற்காக மக்களை திரட்டி மக்களை தயாரிக்கவும் இல்லை.
உண்மையில் கம்யூன் ஆட்சியை உருவாக்க பாடுபட மறுக்கிறார்கள்.
முதலாளித்துவ அரசும் தனிவுடமையை பாதுகாக்கும் கொள்கையையே அடிப்படையாகப்
பின்பற்றியது. நவீன முதலாளித்துவ நாடுகளில் விவசாயிகளில் சிலர் தனிவுடமை
கொண்டவர்களாக மாறிவிட்டனர். பண்ணையார்கள் தங்களது நிலத்தை விவசாயிகளுக்கு
விற்றுவிட்ட போதும் அவர்களுக்கு கிடைத்த பணத்தையும் அவர்களது சொத்துக்களாயும்
முதலாளித்துவ அரசு பாதுகாத்தது என்கிறார் லெனின். இவ்வாறு ஆரம்ப காலத்தில்
முதலாளித்துவ அரசானது சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமான பங்காற்றிற்று.
தொழிலாளர்களில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தொழிலாளர்களுக்குத் தேவையான வருமானம் கிடைத்தது.
தொழிலாளர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்பட்டது. இருந்த போதிலும் முதலாளித்துவமானது
முதலாளிகளின் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் சுரண்டலை அதிகரிக்க
முதலாளிகள் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கினார்கள். அதன் காரணமாக
தற்காலத்தில் தொழிலாளர்களில் பலர் வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாடும் நிலை
ஏற்பட்டது. தொழிலாளர்களின் போராட்டங்கள் அதிகரித்து முதலாளிகள் பெயரளவிலான
ஜனநாயகத்தையும் மறுக்கத் தொடங்கிவிட்டனர்.இவ்வாறு சொத்துடமையாளர்களின் சொத்துக்களை
பாதுகாத்த போதும் முதலாளித்துவ அரசானது சொத்தில்லாதவர்களை
சொத்துள்ளவர்களுக்குஅடிபணியச் செய்தது. முதலாளித்துவவாதிகள் பண்ணையடிமைத்தனத்தை
எதிர்த்துப் போரிட்டாலும் மூலதனத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட உழைப்பாளர்களை
ஒடுக்கும் அரசாகவே இருக்கிறது. ஆகவே உழைக்கும்மக்களுக்கு முதலாளித்து சமூக ஆட்சி
முறையிலும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இந்தியாவில் குறிப்பாக வெள்ளையன் வெளியேறிய
பின்பும் இந்திய பெருமுதலாளிகளுக்குத்தான் சுதந்திரம் கிடைத்தது. உழைக்கும்
மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே எதார்த்தமான உண்மையாகும்.
பெருமுதலாளிகளின் ஆட்சியை தூக்கியெறிந்துவிட்டு உழைக்கும் மக்களுக்கான சோவியத்து
அரசமைப்பில்தான் உழைக்கும் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். இருப்பினும் ஏழை
குடியானவர்களையும் தொழிலாளி வர்க்கத்தையும் அடிபணிய வைப்பதில் முதலாளிகளுக்கு
உதவும் ஓர் இயந்திரமாக அரசு தொடர்ந்து இருந்து வந்தது. ஆனால்,
வெளித் தோற்றத்தில் அது சுதந்திரமானதாக இருந்தது.
அனைத்து மக்களுக்குரிய வாக்குரிமையைப் பிரகடனப்படுத்தி,
தனது ஆதரவாளர்கள், பிரச்சாரகள், அறிஞர்கள், தத்துவஞானிகள் ஆகியோர் மூலமாக இது ஒரு வர்க்க அரசல்ல என்பதை
அறிவித்தது. இப்பொழுதும், சோவியத் சோசலிசக் குடியரசுகள் அதனோடு போர் தொடங்கியிருக்கும் பொழுது,
நாம் சுதந்திரத்திற்கு உலை வைப்பதாகவும்,
ஒரு பகுதியை மற்றவர்களைக் கொண்டு அடக்கி ஒடுக்கிவிட்டு,
வலுக்கட்டாய அடிப்படையில் ஓர் அரசை அமைப்பதாகவும் அவர்கள்
நம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களோ, எல்லா மக்களையும் தழுவிய ஜனநாயக அரசின் பிரதிநிதிகளாக
இருக்கிறார்களாம்?! இப்பொழுது, அதாவது
உலக சோசலிசப் புரட்சி தொடங்கியிருக்கிற இந்த நேரத்தில்,
சில நாடுகளில் புரட்சி வெற்றி பெற்றிருக்கிற இத்தறுவாயில்,
உலக முதலாளித்துவத்தை எதிர்த்த நடத்தும் போராட்டம் குறிப்பாகக் கடுமை பெற்றுள்ள இந்த
சந்தர்ப்பத்தில், அரசு பற்றிய பிரச்சனை மாபெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. இன்று இது
மிகவும் அவசரமான பிரச்சனையாக, எல்லா அரசியல் பிரச்சனைகள், எல்லா அரசியல் தகராறுகள் ஆகியவற்றின் குவிமையமாக
ஆகியிருக்கிறது என்றும் கூறலாம். (லெனினது நூல் அரசு,
பக்கம் 24)
ஆசான் லெனின் அரசும் புரட்சியும் நூலில் மூன்றாம் அத்தியாயத்தின் உள்
தலைப்பில் மூன்றாம் உள் தலைப்பு நாடாளுமன்ர முறையை ஒழித்தல்.
தோழர்களே,பாராளுமன்றம் பற்றி மார்க்சிய ஆசான்கள் என்ன சொல்லியுள்ளனர்? அவர்களின் நூல் ஆதாரங்களில் இருந்து வாதிப்போமா?
என்ற (23-02-2026) முகநூல்
பகுதி விவாதத்தில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவை கீழே:-
சோசலிச அரசு அமையுமுன் தற்காலிகமாக நாடாளுமன்றமுறையில் தேர்தலை சந்திக்கச்
சொல்கிறது. அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறது. நமக்கு அப்படிக் கிடைத்ததுதான் கேரள
இடதுசாரி அரசு.
மதுரன்
வெங்கடசாமி இதற்கான ஏதாவது வழிகாட்டுதல் உள்ளதா அதை கொஞ்சம்
சொல்லுங்கள் தோழர். அரசு வர்க்கம் இரண்டையும் பற்றி கொஞ்சம் விளக்குங்கள் தோழரே
Palani Chinnasamy மார்க்சின் வார்த்தையில் அரசு என்பது ஆள்கின்ற எந்திரம்.
வர்க்கம் என்பது இரண்டு தான் முதலாளி, தொழிலாளி. இதைத்தான்ஆளும்வர்க்கம். ஆளப்படும் வர்க்கம்
என்கிறோம்.சோசலிச அரசு அமையும்போது நாட்டின் சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடமை
ஆகும்போது அந்த இரண்டு வர்க்கங்களும் அழித்து போகும்.
மதுரன்
வெங்கடசாமி ஆளும் முதலாளிய சமூக இயக்க சீர்திருத்தவாதத்தோடு இத்தகைய
நீண்டகால இடதுசாரிய பணியை நடைமுறையில் மேற்கொள்கிறோமா?
அத்தன்மைக்கான சமூக மாற்றத்துக்கான புரட்சிகரமான அமைப்போ
சிந்தனையோ செயலாக்கத்தில் உள்ளதா என்பதையும் கூறுங்கள் தோழரே...
++++++++++++++++++++++
The electoral path is tactical usage to expose the ruling class based state
.. it is not a permanent path
Murugan Vel அப்படி ஒன்னும் தெரியவில்லையே?
கொஞ்சம் விளக்குங்களே
Palani Chinnasamy நாடாளுமன்ற வழியை இடைக்கால உத்தியாக பயன்படுத்தி அது ஆளும் வர்க்கத்தின் கருவி என்பதை அம்பலப்படுத்துவது லெனின் கூறியதில் ஒரு சிறுவரி மட்டுமே இது. இது முழுமையான தீர்வு அல்ல மக்கள் திரள் போராட்டமே தீர்வு என அவர் கூறியுள்ளார்.
+++++++++++++
அதையும் பயன் படுத்தின் கொள்ள வேண்டும் என்று....
Ilangkumaran Pilang Kumaran எப்படியென்ன விளக்குவீர்களா?
+++++++++
GREETINGS FROM SIDDHARTH VALTHUKAL. MARXISM IS TOTALLY FAILD THEORY. IT IS AN ILLUSION.
THOSE WHO HAVE GOT JOBS ON GOVERNMENT ARE TALKING ABOUT MARXISM
Siddharth Gautham ஆமாம் உங்களுடைய கற்பனை உலகிற்கு ஏற்றாவை அல்ல ஆனால்
அவைதான் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிமுறை என்பது உலகில் பல
நாடுகளின் நிரூபிக்கப்பட்டு விட்டது ஆனால் அதன் வழி நின்று செயல்படுத்துவோர்
தோல்வி கண்டுவிட்டனர் மார்க்சியம் பேசி பிழைப்பு நடத்தும் கூட்டத்தை நீங்கள்
அறிவீர் ஆனால் மார்க்சிய வலிமையை நீங்கள் அறிய மாட்டீர்.
+++++++++++++++++++++++++