முகநூல் பகுதியில் இருந்தே, சில மாறுபட்ட கருத்துகள் இவை, ஆராயப்பட வேண்டியவையே! ஆகையால் பகிர்கிறேன். இவை சிலரின் பதிகளும் அடங்கும், இதில் அவர்களின் முழு கருத்தும் இல்லை அல்லது எதிரான தவறான கருத்துகளாக சித்தரிக்க கூடாது என்பதனால் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
ரோடு என்றால் மக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தானே, இங்கே கூட்டங்கள் நடத்தவோ இல்லை ரோட் ஷோ (Road Show ) நடத்தவோ அனுமதி கேட்கவும், அனுமதி கொடுக்கவும் யாருக்கு இங்கே அதிகாரம் உள்ளது.. நான் ரோட்டில் வந்து கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஒரு விளையாட்டு அமைப்பு அனுமதி கேட்டு விட முடியுமா?? விளையாட வேண்டும் என்றால் மைதானங்கள் இருக்கு அங்கே தானே விளையாட வேண்டும். அப்படி இருக்க அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எவ்வாறு ரோடுகளை கூட்டங்கள் நடத்த அனுமதிக்க இயலும்?? எந்த கட்சியாக இருந்தாலும் சரி அது ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி இல்ல வேறு சிறிய கட்சிகளாக இருந்தாலும் சரி.. Road show என்று ஒன்றை நடத்துவதே அடிப்படைத் தவறு.. சமீப காலமாக இது பெரிதாய் நடந்து கொண்டே தான் போகிறது..
இவைதான் 100% உண்மை, "மக்கள் முட்டாள்கள் அல்ல... அவர்களின் பிரச்சினைக்கு காரணமானவை எவை யார் என்று தெரியாமல் இருக்க அதாவது மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அடிப்படையான அரசியல் தெளிவைப் பெறுவதைத் தடுக்குகிறவகையில் தற்போதைய ''சமுதாய (அரசமைப்பு) அமைப்பு'' திட்டமிட்டு செயல்படுகிறது. அவைதான் தொடர்ந்து சினிமா பிரபல்யங்கள் மட்டுமல்ல சமூகத்தில் உயர் அடுக்கில் உள்ளவர்களின் பிரவேசமும். அதன் தொடர்ச்சிதான், ''அரசியலற்ற அரசியலை'' மக்கள்மீது பலவகைகளில் திணித்துள்ளது. இந்த 'அரசியலற்ற அரசியலுக்கு'' இட்டு செல்வதும் இந்த அரசியலுக்கும் ஒரு தெளிவான 'வர்க்க நலனும், பின்னணியும்'' உள்ளன.
இவற்றைத் தகர்க்காமல், தற்போதைய சமுதாயத்தை மக்களுக்கான சமுதாயமாக மாற்றுவதற்கான அரசியல் உணர்வை வளர்க்கமுடியாது. அவ்வப்போது ''புதுப்புது அவதாரங்கள்'' தோன்றிக்கொண்டே இருக்கும்! ஆனால் அவை அனைத்துக்கும் ஒரே அடிப்படைதான் . . . மக்கள் தினம்தினம் சந்திக்கும் அவலங்களுக்கான காரணத்தை அறியக்கூடாது; மக்கள் தங்களுக்கான அரசியலை உணரக்கூடாது! உண்மையான மாற்றத்திற்காகப் போராடக்கூடாது! பந்தல்கார்களுக்கும் பத்திரிக்கைகாரர்களுக்கும் சமையல்காரர்களுக்கும் ''ஓய்வில்லாத பணி''! அவ்வளவுதான் இந்த ''அரசியல்''!!! இவை ஆழமான பதிவு சிந்திக்க வேண்டியவையும்.
இடதுசாரிகள் எனும் CPI, CPI(M), மற்றும் சிபிஐ லிபரேசன் போன்ற ஓட்டு சீட்டு அரசியலில் பங்குபெறும் கட்சிகளும் அதன் சார்ப்பை நாடுவோரும் ஏன் தி.மு.காவிற்கே ஓட்டு கேட்கும் கம்யூனிச பெயரில் வாழும் கூட்டம் தவறியும் பாராளுமன்றதிற்கு மாற்றான வழிமுறையை பேசுவதே இல்லை.... பாராளுமன்ற பன்றி தொழுவத்தையே கட்டி அழுகின்றது அதன் பணி இந்த கொடூரங்களுக்கு முடிவல்ல அதனை பற்றி ஒருவருகு எதிராக ஒருவர் குற்றம் மட்டுமே சுமத்த முடியும் மற்றொரு பிரிவு ஓட்டு சீட்டு அரசியலைப் புறக்கணித்து ஆயுதப் போராட்டப் பாதையை தேர்வு செய்து செயல்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் ) மற்றும் பாரளுமன்ற பாதையை ஏற்காதவர்கள் குறுங்குழுக்களும் , மக்களிடமும், இளைஞர்களிடமும் , மாணவர்களிடமும் செல்வதில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன. ஏன் அவர்கள் மாற்று பாதைக்கான பணியை உலகில் கம்யூனிச வளர்ச்சி பாதையை புரிந்துக் கொண்டு குறிப்பான நிலைமைகேற்ப செயல்படுவதில் பிந்தங்கியே உள்ளனர் எனலாம். ஆகையால் இடதுசாரிகள் உழைக்கும் மக்களிடம் தங்களின் பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து போராட பலம் இல்லை அல்லது அவர்களின் வழிமுறையில் உள்ள தவறை உணர தவறுகின்றனர் என்றே நினைக்க வேண்டியுள்ளது. உழைக்கும் மக்களிடம் இடதுசாரிகள் ஏன் ஐக்கியமாக முடியவில்லை என்பதுதானை படிப்பினை பெற வேண்டும் இடதுசாரிகள் இளைஞர்களிடம் ஐக்கிய படுவதில் இருந்து தனித்து நிற்பதற்கான காரணத்தையும், அதில் உள்ள பிரச்சனைகளையும் சிக்கல்களையும் ஆய்வு செய்து சுய விமர்சனம் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும்.
விஜயின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான அப்பாவி மக்களின் சாவிற்கு அவர்களின் அரசியற்ற ரசிக மனப்பான்மை மட்டும் காரணம் அல்ல! ! அவர்களை அரசியல் படுத்த மறந்த தங்களை இடதுசாரிகள் உழைக்கும் மக்களுக்கானவர்கள் என்பவர்களும்தான் காரணம் இல்லையா??? !!!!
அரசு இயந்திரத்தின் அடக்கு முறையும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியான RSS கும்பலின் பிற்போக்கு அரசியலும் ஒரு காரணமாகும்.
இதன் விளைவு தான் சீமான், விஜய் போன்ற கவர்ச்சி மற்றும் ஹீரோயிச பேச்சுகளால் இளைஞர்கள் அணி திரள்வது ஆகும்.
நம்மிடம் உள்ள தத்துவார்த்த அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நமக்குள்ள சிக்கல்களை பற்றி பேசாமல் விஜய்க்கு சேரும் கூட்டத்தை திட்டுவது, நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்வது சரியான அரசியல் அணுகுமுறை இல்லை.விஜய்யின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதற்கு அந்த மக்களின் அரசியலற்ற தன்மை மட்டும் காரணம் இல்லை. மக்களை அரசியல் படுத்த தவறிய நாமும் தான் காரணம் !!
உண்மையில் மக்கள் அதிகாரம் அதன் முந்தைய அமைப்புகள் எந்த பெயரில் இருந்தாலும் அவர்களின் உண்மையான முகம் பற்றி கீழ்காணும் பதிவுக்கு பதில் சொல்ல கடமைபட்டவர்களே
திமுக அரசாங்கத்தை நோக்கி எந்தவொரு கேள்வியும் எழுப்பாமல் விஜய் மற்றும் அவர் சார்ந்த கட்சியினரை மட்டுப்படுத்துவதிலும், கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பதிலும் உள்ள அரசியல் எந்த வர்க்க நலன் சார்ந்தவை?
இச்சம்பவத்தை பாதிக்கப்பட்ட மக்களின் வலியை அழுகையை சில Fake IDகளின் முகமற்ற முகவரிகளில் கேலியாக பதிவு செய்வது, இத்தனை பெரிய இழப்பிலும் மனிதத்தை மறந்து திமுகவின் மீதான பக்தி மனப்பான்மையே இவர்களை அரசுக்கும் காவல்துறைக்கும் புனிதர்களாக்கும் பணி, இந்த ஆட்சிதான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம், வாராது வந்திந்த மாமணிகளின் பொற்கால ஆட்சி என்றும்!.
ஒரு சிலரோ கொந்தளிக்கின்றனர். பாஜக போன்ற மதவெறி கட்சியை, திமுக, அதிமுக போன்ற முதலாளித்துவ கட்சிகளை, தவெக போன்ற ரசிகர் கட்சிகளால் வென்றுவிட முடியாது என்கின்றனர்.
புரட்சி நிகழவேண்டுமென்றால் நீண்ட நெடிய பணி அவை. இங்குள்ள இளைஞர்களை நடைமுறை பணி என்று இயக்கமற்ற நிலைக்கு தள்ளிவிட்டு சாதியை மதத்தை முன்நிறுத்தி வர்க்க அரசியலை பின்னுக்கு தள்ளிய பெருமை இவர்களை சாரும். கட்சி அரசியலைக் கடந்து வாருங்கள் என்பவர்கள் தேர்தலுக்குத் தேர்தல் முக்காடு போட்டு கொண்டு பாஜகவுடன் கூட்டணி இருந்த அதே கட்சிக்கு வாக்கு சேகரிக்க சென்றவர்கள்தாம். முதலில் கோரிக்கை அடிப்படையில் என்றீர்கள், பின்னர் கொள்கை அடிப்படையில் பொது எதிரியை வீழ்த்த தேர்தல் பாதையில் நிற்போரை ஆதரிக்கலாம் என்றீர்கள்! இன்று உதிரிகளாக அமைப்பை நிர்மூலப்படுத்திவிட்டு என்ன சொல்கின்றீர்கள்???.
திமுக என்பதால் அரசு மற்றும் அரசாங்கத்தைப் பற்றிய கண்ணோட்டத்தில் சமரசமாகவும் சந்தர்ப்பவாதமாகவும் முடிவெடுத்து, ஆளும் வர்க்கத்தின் பின்னால் அணிதிரட்டி உழைக்கும் ஏழை எளிய மக்களின் உரிமை போராட்டத்தை மடைமாற்றி அவர்தம் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் எதிராக இயங்கும் போது அம்பலப்படுத்துவதுதான் அவசியமானது. இதற்கு பதில் சொல்வார்களா பார்ப்போம்?
பா.ஜ க கட்சி கும்பமேளா நடத்தி கூட்ட நெரிசலில் மக்களை கொன்றது.. பிரதமர் மோடி சட்டப்படியான உரிமை கேட்டு திரளும் கூட்டத்தை கொல்கிறார். அதிகார அரசியலில் ஈடுபடாத ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை, சிறையிலே தள்ளி கொல்கிறார்கள் இவை அங்குமிங்கும் நடபவைதான். அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் ரோடு ஷோ மூலம் தங்களது பக்தர்கள் கூட்டத்தை அளவை காட்டுகின்றனர். ஆங்காங்கே நடக்கும் ரோட் ஷோகளை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளீர்கள் இருந்தும் இந்த இறப்பு கேள்விகளை எழுப்புகிறது...இந்திய அரசியலிலே பக்தர்கள் கூட்டமே ஆளுவோரை தீர்மாணிக்கிறது... அதுபோல்தான் சினிமா ஸ்டார்களும் தங்களது பக்தர்களை நம்பி அரசியலிலே குதிக்கின்றனர் ... அதன் அடிப்படையிலே தன் பக்தர்களை கொல்ல துணிதவைதான் கரூர் ரோட் ஷோ! புரிந்துக் கொள்ளதான்...
சினிமா ஸ்டார்களும் தங்களது பக்தர்களை நம்பி அரசியலிலே குதிக்கின்றனர். எந்த சமூக அறிவுமில்லாமல் எந்த கொள்கையுமில்லாமல் ஒரு நடிகர் ரோடு ஷோ மூலம் முதலமைச்சர் கனவுகளோடு பக்தர்கள் கூட்டத்தை திரட்டி கும்பமேள அளவிற்கு மக்களை பிணமாக்கிவிட்டார். செத்தது பக்தர்கள் கூட்டத்தால் நசுக்கப்பட்ட மக்கள்.
மார்க்சீயவாதிகளே இளைய சமூகதிற்கு என்ன அரசியல் சமூக அறிவியல் பார்வையை உணர் செய்ய போகிறீர்கள். முதலாளித்துவ ஊடக விளம்பர குப்பை அரசியலுக்கு விடை கொடுப்பீர்களா? மார்க்சிய அறிவு செல்வத்தை விதைக்க தயாராவீர்களா சற்றேனும் சிந்திக்க வேண்டியவையே இந்த வேளையில்...
39 உயிர்களை காவு வாங்கிய சம்பவம் உழைக்கும் மக்களை அரசியல் அற்ற கும்பல் கலாச்சாரமே! அரசியல் அற்ற அராஜக கும்பல் அரசியலின் பேரால் உருவாக்கப் படுகின்றனர். ஆளும் வர்க்கங்களுக்கு அவசியம் என்பதால் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றனர்!
இதனை எதிர்கொள்ள பாட்டாளி வர்க்க அரசியலையும் அதன் அடிப்படையிலான கட்சியையும் கட்டியமைக்கதவரை இவை போன்ற சம்பங்களுக்கு முடிவில்லை.
அதிகாரத்தில் உள்ளவர்களின் உயிர்காப்பது மட்டுமே இந்த அரசின் அதாவது அரசு தூண்களின் வேலை. அதில் அவர்கள் தவறுவதில்லை. ஆனால் சாதரண மக்களின் உயிர் துச்சம் இதனை பற்றி பேச வேண்டியவர்கள் அரசின் குரலில் பேசும் பொழுது அவர்கள் எந்த வர்க்கதினர் நான் சொல்ல வேண்டியதில்லை .... உழைக்கும் மக்களுக்கான அரசியல் பேசுவோர் எங்கே உள்ளனர் சிந்திக்கவே...