விஞ்ஞான சோசலிச சமூகத்தின் அரசியல், பொருளாதாரம் ஆகியவை பற்றிய கோட்பாட்டு உருவாக்கத்தையும் சோசலிசப் புரட்சி நடைபெறவிருக்கும் சாத்தியமுள்ள நாடுகள் பற்றிய கருதுகோள்களையும் மார்க்சும் ஏங்கெல்கும் விளக்கினர். பல்வேறுவகைப்பட்ட சோசலிசங்கள் பற்றிய, கசும் குறிப்பிட்டனர். 177 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைய நிலை முதலாளிய விமரிசகர்கள் இன்று கேலிச்சித்திரம் வரைகின்றனர். இதுபோன்ற விமரிசனங்கள், மார்க்சின் காலத்திலும் எழுந்ததுண்டு. சோசலிசக் கருத்தமைப்பே ஒரு வரலாற்றுப் பிழை என்றும். அது சித்தப்பிரமையாளனின் அதீதக் கற்பனை என்றும் குறிப்பிட்டனர். இவற்றுக்கெல்லாம் பதில் கொடுத்து மார்க்சும் ஏங்கெல்சும் விஞ்ஞான சோசலிசம் பொதுவுடைமையின் முதல் கட்டம் என நிறுவினர்.
இவை சோசலிசஅமைப்பு எற்படுதலுக்கு முந்தையகருத்துப் போராட்டங்களாகும்.
முதல் உலகப் போரில் ரசியாவிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் சீனாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அதன்பின் இந்தோசீன நாடுகளிலும்சோசலிசக் கட்டமைப்பு உருவாயிற்று. எனினும் இன்று உலகில் எங்கும் சோசலிச நாடுகள் இல்லை என்பது கசப்பான அரசியல் யதார்த்தம். அதாவது நிறுவப்பட்ட சோசலிசத் தளங்கள் அனைத்தும் தகர்ந்து விட்டன. உலகில் இப்பொழுது பொதுவுடைமை கட்சிகள் உள்ளன- புரட்சிகர இயக்கங்களும் புரட்சிகர சிந்தனையாளர்களும் மட்டுமே உள்ளனர்.
இத்தகைய சோசலிசப்புரட்சி, மிகவும் முன்னேறிய நாடுகளில்--குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி , பிரான்சு ஆகியவற்றில்--ஏற்படும். முன்னேறிய நாடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தாக்கப்படலாம். ஒரு தனி நாட்டில் சோசலிசப்புரட்சி சாத்தியமில்லை. - மார்க்சியக் கோட்பாடு உருவாக்கமும் கருதுகோளும் உதித்த சூழல் முக்கியமானது. முதலாளிகளுக்கிடையில் சுதந்திரமான போட்டி இருந்த காலம்; முதலாளியம் தம்மை ஏகபோகமாக வளர்த்தெடுக்காத இக்காலத்தில் முதலாளிய நாடுகளில் உள்முரண்பாடுகள் முற்றி சோசலிசப் பேரலைகள்' எழும்பும் என மார்க்ஸ் கருதினார். ஆனால் ஏகாதிபத்திய வளர்சிகட்டம் வேறொன்றாக இருக்கிறதல்லவா?
முதலாளியம் வளர்ந்தது. சுதந்திரமான போட்டி முறையில் இருந்து வளர்ச்சியுற்று 19ம் நாற்றாண்டின் இறுதியில் தம்மை எகபோகமுதலாளியமாக உருவெடுத்துக்கொண்டது. எகாதிபத்தியற்கள், குடியேற்ற நாடுகள் ஆகியவை உருவாயின. ஏகபோக டிரஸ்டுகள் குறித்தும் அவற்றின் (பொருளாதார அராஜகவாதம் குறித்தும் ஏங்கெல்சு எழுதியுள்ளார்
(காவுட்ஸ்கிக்குக் கடிதம் 29--6_-1881).
இந்தப் பொருளாதார வளர்ச்சியை ஆராய்ந்து, முதலாளியம் தன் உள் முரண்பாடுகள் பற்றிய சோசலிசமாக உருவெடுக்கும் என்ற மார்க்சின் கருதுகோள் தவறானது என முதலாளிய 'விமர்சகர்கள் எழுதினர்’. 19ஆம் நூற்றாண்டு இறுதி முதல் உள்ள இந்த நிலைகளை ஆராய்ந்து இந்த சகாப்தத்திலும் 'சோசலிசப்புரட்சி சாத்தியம் என லெனின் கருதுககோளை உருவாக்கினார். போட்டி என்பது இப்போது முதிலாளிகட்கு இடையில் இல்லாமல் ஏகபோகங்களுக்கு இடையிலானதாக மாறிவிட்டது என்றும் உலகநாடுகள் உலகப்பொருளாதாரச் சங்கிலியின் கண்ணிகளாக மாறி, சமனற்ற வளர்ச்சி நிலையில் உள்ளன என்றும் லெனின் முடிவுகண்டார். இந்தப் பொதுவான” அரசியல் பொருளாதார சூழலில் சோசலிசப் புரட்சியின் சாத்தியம் குறித்து லெனின் தம் கருதுகோள்களை முன் வைத்தார்.
அவை:
1. முன்னேறிய முதலாளிய நாடுதளில்தான் சோசலிசப்புரட்சி ஏற்படும் என்பதில்லை. பின்னடைந்த நாடுகவிலும்-பலவீனமான கண்ணியைப்' பொறுத்து ஏற்படலாம். உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடையாமல் முதலாளி; தொழிலாளி என்று சமூதசக்திகள் (துல்லியமாக அமையாமல் இருப்பினும் புதிய வகைப்பட்ட முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் ஊடே சோசலிசப் புரட்சி சாத்தியமாகும்.
2. வெவ்வேறு நாட்டிலும் வெவ்வேறு காலங்களிலும் சோசலிசப்புரட்சி' சாத்தியம். உலகில் முழுவதிலும்-- அல்லது ஒரு சில நாடுகளில் முழுமையாக--ஒரே நேரத்தில் சோசலிசப் புரட்சி நடந்தாக் வேண்டிய தில்லை. தனி ஒரு நாட்டிலும் சோசலிசப் புரட்சி சாத்தியம்.
இந்த மார்க்சிய -லெனினியக் கருதுகோள்கள், இதற்கு முந்தைய மார்க்சியக் கருதுகோள்களை நிராகரித்த இந்த நிராகரிப்பு, முன்னேறிய தன்மை யுடையது... இந்த நிராகரிப்பின்றி வளர்ச்சி இல்லை. சோசலிசம் குறித்த மார்க்சியக் கோட்பாடுகளை நிராகரிக்க முயன்ற முதலாளியஅறிவாளிகள் முன்னிலையில், மார்க்சியக் கருதுகோள் இன்றை நிராகரித்து விஞ்ஞானசோசலிசக் கோட்பாட்டை லெனின் உயர்த்திப்பிடித்தார். இவை ஏகாதிபத்தியமும் உலக சோசலிசப் புரட்சிகளும் கொண்ட லெனினிய சகாப்தத்தின் கருதுகோள்களாகும்.
இந்த மார்க்சிய லெனினியக் கருதுகோள்கள் இருபதாம் நூற்றாண்டில் நிரூபிக்கப்பட்டு, அரசியல் யதார்த்தமாயின . சோசலிசத்தை வரலாஜ்றுப்பிழை என நிரூபிக்க முயன்ற முதலாளிய அறிவாளிகள் , மீண்டும் ஒருமுறை தோற்றுப் போயினர். ரசியா, தீனா, கிழக்கு. ஐரோப்பிய நாடுகள் இந்த வரையறையின்படி சோசலிச நாடுகளாயின இன்றைக்கும் உலகம் லெனின் வரையறையில் ஏகாதிபத்திய சகாப்தத்தில் இயங்குவதால் உலகில் சோசலிசப் புரட்சிகள் சாத்தியம் என்பதைக் கோட்பாட்டு அளவில் மறுக்க இயலாது. எனினும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அரசியல் பொருளாதார நிகழ்வுகள் லெனினிய வரையறையில் பல அளவுச் சேர்க்கைகளைச் - சேர்த்துள்ளன.
அனையாவன :
1. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகளாவிய போர்: இல்லையெனினும் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏகாதிபத்தியங்கள் ஏற்றுமதி செய்யும் வட்டாரப் போர்கள் (Reginal war).
2.முதலாளிகளிடமிருந்து ஏகபோகங்கள்உருவானது போல, ஏகாதிபத்தியங் களிடமிருந்து பெருவல்லரசு. நாடுகள் என்ற தனியினம் உருவாதல் .
3. மூன்றாம் உலக நாடுகளைத் தடையற்ற விதத்தில் ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்த இயலாதபடி மூன்றாம் உலக நாடுகட்குக் கிடைத்த அரசியல் பேர ஆற்றல்.
4, 1960௧கள் முதற்கொண்டு உலக சோசலிசத் தளங்கள் தகர்ந்து போதலும் அதனால் ஏற்பட்ட கருத்தியல் விளைவுகளும்.
இத்தகைய அளவுச் சேர்க்கைகள் லெனினிய வரையறையில் பண்பியல் மாற்றங்களைக் கொணர்ந்து விடவில்லை. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல் சமனற்ற பொருளாதார வளர்ச்சி, உலகப் பொருளாதார அமைப்பில் பலவீனமான இணைப்பு ஆகியவை தொடர்ந்து தம் கோரவிளைவுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய காலத்திலும் உலக சோசலிசப் புரட்சிகள் சாத்தியமே. எனவே சோசலிசத்தை ஒரு வரலாற்றுப்பிழை என்பது பிழையான வரலாறாகும்.
எனினும் இந்த அளவுச் சேர்க்கைகள் புரட்சிகரஉணர்வின் பேரூக்கத்தை கூடுதலாக வவியுறுத்திக்கொண்டிருக்கின்றன'. சோசலிசப்புரட்சிகளைத் தள்ளிப்போடுவதும் உருவான புரட்சியின் விளைவுகளைச் சீர்திருத்தவாதத்துக்கு ஆட்படுத்துவதும் உலக முதலாளியத்தின் தந்திரங்களாகஇருக்கும். இன்றைய காலத்தில் புரட்சிகர உணர்வின் செயல்பாட்டின் பேரூக்கம்--லெனின் காலத்தைவிடபன்மடங்கு கூடுதலாகத் தேவைப்படுவதையே: இந்த அளவுச் சேர்க்கைகள் வலியுறுத்தி நிற்கின்றன. இனிஉலக சோசலிசத்தளங்களின் தகர்வையும் அவற்றின் படிப்பினைகளையும் பற்றிய கோட்பாடுகளைத் தொகுத்துக்கொள்வோம்.
முதலாளியப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. முதலாளியப்புரட்சி நடைபெறுவதற்கு முன்னரே அத்த நாட்டில் முதலாளியப் பொருளாதாரக் கூறுகள் காணக்கிடைக்கும். அவற்றைத் தொகுத்து, விரிவாக்கம் செய்தலும் அதத்குரிய அதிகார அமைப்பை நிறுவுதலும் முதலாளிய புரட்சியின் பணிகளாகும். ஆனால் சோசலிசப் புரட்சியில் அரசதிகாரமே முதலில் புரட்சியாளர்களின் கைக்கு வருகிறது. பின்னரே பொருளாதார நிர்மாணப் பிரச்சினை எழுகிறது. லெனின் சொல்வதுபோல முதல்வெற்றி அரசியல், இராணுவ ரீதியிலாகும்; இரண்டாவதாகவே பொருளாதாரப். பணி தொடங்குகிறது இரண்டாவது பணி முழுமையடைவதைத் தொடர்ந்தே அடுத்தே சமூகம் பொதுவுடைமைக்குச் செல்லும், - இதில் கூட லெனினியத்தின் நுட்பாமன பங்களிப்பைக் காணா இயலும், சோசலிசப் புரீட்சிக்குரிய முன்னிபந்தனையாக முன்னேறிய நாடுகளின் தொழில் வள்ர்ச்சியை மார்க்ஸ் கண்டறிந்தார். ஆனால் ஏகாதிபத்திய சகாப்தத்தில் பின்னடைந்த , நாடுகளில் கூட சோசலிச அரசியல் புரட்சி சாத்தியம் என்பதைக் கண்டறிந்து அந்நாடுகள் புதிய. வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஊடாக சோசலிசப் பொருளாதார நிர்மாண காலத்துக்கு சென்றடைய முடியும் என லெனின் கூநினார். 1905இல் லெனினியக் கண்டுபிடிப்பு, 1940களில் மாசேதுங்கின் புதிய ஜனநாயகக் கோட்பாட்டுக்கான அடிப்படையாகும். இங்கு லெனின், மார்க்சிய நிலைபாட்டை வளர்த்தெடுக்கிறார். பொதுவுடைமைக்கு மாறிச் செல்வதற்கு உரிய இடைக் கட்டம் சோசலிசம் என்ற மார்க்சிய நிலைபாட்டை,சோசலிசத்துக்கு மாறிச் செல்வதற்குரிய ஓர் இடைக்கட்டமும் தேவை என்று லெனின் வளர்க்கிறார். சோசலிசம் குறித்த கோட்பாட்டுப் பங்களிப்பு களில் முதன்மையான இதைத் தொடர்ந்து, இன்னமும் இரண்டு அம்சங்களில் லெனினிய நிலைபாட்டைக் காண்பது பொருத்தமாகும்.
1. ஒரு. தனி தாட்டில் " சோசலிச்ப் புரட்சி சாத்திய மெனில், அந்த நாட்டில் சோசலிசப் பொருளாதாரப் புனர்நிர்மாணம் முழுமையடைவது சாத்தியமா?
2. ஒரு சோசலிச, சமூகம், “சமூக வரலாற்று” - விதிகளின்படி முன்னோக்கித்தான்' செல்லுமா? இல்லை பின்னடைவுக்கு உள்ளாகும் சரத்தியம்' "ஏற்பட்டு விடுமா? அதாவது. சோசலிசத்துக்கு''அடுத்து பொதுவுடைமைக்குச் செல்லாமல்,முதலாளிய மீட்சி நடைபெறுவது சாத்தியமா? அல்லது சோசலிசமும் அல்லாமலும், முதலானியமும் அல்லாமலும்-- “ஒரு நிலையை எடுத்திடுவது சாத்தியமா? இதற்கான விடைதேடிஆசான்களிடமே செல்ல வேண்டும். இவை கூறித்து, லெனின்,மாவோ ஆகியோர் கருத்துரைத்துள்ளனர் .
ஒரு தனிநாட்டில் சோசலிசப் புரட்சி சாத்தியம் என்றும் அங்கு சோசலிசத்தைத் தொகுத்துக்கொள்வதும் லெனிலுக்குப்பிறகு: முதன்மை பெற்ற விவாதங்கள் இன்றளவும் செல்வாக்குச் செலுத்து கின்றன. டிராட்ஸ்கி பின்னடைந்த ஐரோப்பாவை வைத்துக் தொண்டு ரசியாவில் சோசலிசத்தைப் பராமரிக்க எண்ணுதல், நம்பிக்கை அதநிறதாகும் ஏன்றார். லெனினுக்குப் பிற்கு- அதிகாரத்துக்கு வந்த ஸ்டாலின் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் பூர்வாங்க வெற்றி ஒரு நாட்டில் சோசலிசம்' வெற்றி பெற முடியும் என்றார்.
ஸ்டாலின் ஒரு சோசலிச நாட்டின் இறுதி வெற்றிக்கு, அதன் உள் முரண்பாடுகளை மட்டுமே கண்டார். டிராட்ஸ்கி வெளி முரண்பாடுகளை மட்டுமே கண்டார். ஆகவே பெரும்பாலான நாடுகளில் புரட்சிகளின்றிக் கூட ஒரு நாட்டில் சோசலிசம் இறுதி வெற்றி பெற இயலும் என ஸ்டாலின் முடிவுக்கு வந்தார். டிராட்ஸ்கி அவையின்றி, புரட்சியின் பயன்களைப் பராமரிக்க இயலாது என்றார். இவை இரண்டும் முரண்பாடுகளின் அனைத்துந் தழுவிய தன்மையைக் பார்கக!
ரசிய சோசலிச அமைப்புக்கு ஸ்டாலினியத்தின் மகத்தான பங்களிப்புகளுக்கு ஊடே இதையும் கணக்கி லெடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது அம்சம் -- ஒரு சோசலிச நாட்டில் முதலாளிய மீட்சியின் சாத்தியம். “ இது முதல் அம்சத்தோடு தொடர்புடையதாகும். பாட்டாளி வர்க்கம் தான் வென்றெடுத்த அதிகாரத்தைக் கொண்டு முதலாளி வர்க்க எதிரிகளை அமுக்கி வைக்கவில்லை யெனில் மொத்த வெற்றியுமே தோல்வியில் முடியும் என ஏங்கெல்௦ு(12--5--1889) கருதினார். ரசியப் புரட்சிக்கு முன்னரே இத்தகைய முதலாளிய மீட்சி குறித்து லெனின் குறிப்பிட்டுள்ளார் . சிறுமுதலாளிய முறை, குலாக்குகளின் எழுச்சி, அதிகாரிகளாக உருவெடுத்த கம்யூனிஸ்டுகள் , உலக முதலாளிய "இராணுவ அபாயம் ஆகியவற்றால் பின்னடைவு -- முதலாளிய மீட்சி (இது லெனினின் சொல்) சாத்தியம்: என்பதை லெனின் இறுதிவரை 'வலியுறுத்திக்கொண்டே.யிருந்தார் இதைத் தடுத்து நிறுத்தக் கூடிய சாத்தியமான அம்சம்களெனக் கீழ்க்கண்டவற்றைத் தொகுத்தார்.
1.வர்க்க உணர்வுபெற்ற் தொழிலாளர்-விவசாயிகள் இணைவு. குலாக்குக்ளுக்கு : எதிராக ஏழை விவசாயிகள் ஒருங்கிணைதல். அதிகார வர்க்கத் தவறுகளைச் சரிசெய்தல் . தொழிலர்ளர்-- விவசாயிகள் பண்பாட்டு அளவை உயர்த்தல்.
2. நேர்மையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் .சுருக்கமாகச் சொன்னால் ஒரு பட்டாளிவர்க்க சர்வாதிகார அரசின்கீழ் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்- விவசாயிகள் தொடர்ந்து நடத்தும் _ வர்க்கப் போராட்டமே முதலாளிய மீட்பைத் தடுக்கும்;
உருவான சோசலிச அமைப்பைப் பராமரிக்கும். இது தற்காப்புநிலை ஆகும்.- உலக முதலாளிய அமைப்புக்குள் சோசலிச அமைப்பு நடத்தும் ஊடுருவலையும் விரிவாக்கத்தையும் பொறுத்து இதுமாறிச் செல்லும். எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கப் போராட்டம் என்ற இரண்டு ஆயுதங்கள் இல்லையெனில்---அல்லது அவற்றை அலட்சியப்படுத்தினால்-- லெனின் குறிப்பிட்டது போல முதலாளிய மீட்சிக்குரிய நம்பிக்கை, முதலாளிய மீட்சிக்குரிய முயற்சிகளில் , போய்முடியும்; முயற்சி, உறுதியாகவும் தவிர்க்கவியலாத வகையிலும் தொழிலாளர் அதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிடும். இந்த நிபந்தனைகளின்றி, வரலாற்றில் பின்னடைவு. தவிர்க்க இயலாதது. சோசலிசம் குறித்த இத்தகைய லெனினியப் புரிதல்களோடு, சீனப் புரட்சிக்குப் பிந்தைய மாவோவின்,அனுபவத்தைக் காண்போம்.
மாவோ இதில் லெனினியத்தைப் பின்பற்றி ரசியா மற்றும் யூகோஸ்லேவியா ஆகியவற்றின் அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டு சீன நடைமுறையை விமரிசித்தார். லெனின் ஒருமுறை குறிப்பிட்டார்: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், வர்க்கப் போராட்டம் முடிந்து விட்டது என்பதைக் குறிக்கவில்லை.
ஆன்ால் அதைப் புதிய வடிவங்கவில், தொடர்ந்து நடத்துதல் ஆகும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போராட்டமாகும்; புரட்சியில் அழிந்துவிடாத முதலாளியத்தை: இன்னும் உயிருடன் உள்ள முதலாளியத்தை- எதிர்ப்பை இன்னும் கைவீட்டுவிடாமல் மேலும், ஆழப்படுத்தியுள்ள முதலாளியத்தை எதிர்த்து . அரசதிகாரத்தைக் கையில். எடுத்துள்ள : பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப் போரஈட்டமாகும்... விடுதலை மற்றும் சமத்துவம் ஆகிய முழக்கங்களை வைத்து மக்களை ஏமாற்றுதல் என்ற பேச்சுரையின் முன்னுரை) .
சோசலிச . சமூகத்திலும் முதலாளியத்தை எதிர்த்து பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் - கீழ் வர்க்கப் போராட்டம் நடத்துதலை - வற்புறுத்திய லெனினியத்தைக் கவனமாகப் பின்பற்றிய மாவோ சீன சமூகத்திலும் இதன் தேவையை உணர்த்தினார்.
ஐரோப்பாவில் நடைபெற்ற முதலாளியப் புரட்சிகள் ஏற்றஇறக்கங்களைக் கொண்டிருந்தன. நிலப்பிரபுத்துவம் தூக்கியெறியப்பட்ட பின்னர் நிலப் பிரபுத்துவமீட்சி பலமுறை நிகழ்ந்தன அதிருஷ்டம் மாறி மாறி அடித்தது. இத்தகைய பின்னடைவு, சோசலிச சமூகங்களிலும்' சாத்தியம் ஆகும். எடுத்துக்காட்டாக பூகோஸ்லேவியா தன் இயல்பை மாற்றிக்கொண்டு, திருத்தல்வாதமாக' மாறிவிட்டது.- தொழிலாளர் விவசாயிகள் நாடு பிற்போக்கான தேசியவாத "சக்திகளால்" “ஆளப்படும் நாடாக மாறிவிட்டது வர்க்கப் போராட்டத்தின் தேவையை அங்கீகரிக்க மறுத்து பிற்போக்கு வர்க்களின் மீட்சிக்குரிய சாத்தியம் உண்டு என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
மாவோ எட்டாம் மத்தியக்கு குழுவின் பத்தாவது பிளீனத்தில்ஆற்றிய உரை).
புரட்சிக்குப் பிந்தைய சீனாவில் பிற்போக்கு வர்க்கங்களின் மிச்சசொச்சம் இருக்கின்றது என்றும் அவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கின்்றனர். என்றும் மாவோ கட்சியினரை எச்சரித்தார் (1962). “இந்தப் போக்கின் பிரதிநிதித்துவம் கட்சிக்குள்ளே உள்ளது- என்பதையும் குறிப்பிட்டார். பொதுவுடைமைக்கட்சிக்குள்ளே முதலாளியப்பாதைக்கு இட்டுச்செல்லும் சிந்தனையாளர்களாக இருக்கின்றனர் எனவும்”குறிப்பிட்டார் (ஜனவரி. 1965) இதன் 'சமூக் வேர்களையும் மாவோ-குறிப்பிட்டார்.
சோவியத் நாட்டில் வர்க்கப் போராட்டங்கள் என்ற நூலில் பெத்தலஹீம் விரிவுபடுத்திய இந்தக் கருத்துகளை மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை நூலில் - புரட்சிகர இயங்கியல பற்றி ஓர் ஆய்வு என்ற தன் படைப்பில் ஜார்ஜ்தாம்சன் மேலும் பல விளக்கக் குறிப்புகளுடன் எழுதியுள்ளார். (தமிழ் மொழிபெயர்ப்பு : எஸ். வி. ராஜதுரை மற்றும் இன்குலாப். பக். 172-180; 195-- 202). சார்லஸ் பெத்தலஹீம் மற்றும் ஜார்ஜ்தாம்சன் ஆகிய இருவரும் லெனினிய மாசேதுங் வழியில் முதலாளிய மீட்சிக்குரிய சாத்தியம் பற்றிய கோட்பாட்டை ஒத்துக்கொண்டவர்கள். பால். எம். சுவீசி, மாவோ சிந்தனையின் முதன்மைப் பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டவர். குறிப்பாக சோசலிச சமூகத்தில் வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் தொடர் புரட்சி என்ற மாவோவின் கருத்துகளை, இருபதாம் நூற்றாண்டின் யதார்த்தத்துக்குப் பொருந்தும்விதத்தில் மார்க்சியத்தை நடத்திச் செல்லும் மிக முதன்மையான பங்களிப்பு என சுவீசி வரையறை செய்துள்ளார். எனினும் இவர் முதலாளிய மீட்சி குறித்த கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நாடுகள் முதலாளியத்துக்கும் (அல்லது முதலாளியத்துக்கு முந்தைய நிலை) பொதுவுடைமைக்கும் இடைப்பட்ட இடைநிலைச் சமூகங்களாக இல்லாமல், ஒரு புதிய வகைப்பட்ட சமூகமாக (அல்லது உற்பத்தி முறையாக) இருக்கிறது என்றும் குறிப்பிட்டு, இந்த சமூகங்களை புரட்சிக்குப் பிந்தைய சமூகங்கள் என்பதே பொருத்தம் என்கிறார். இந்தப் புதிய சமூகம் வர்க்க சமூகம் என்றும் இதில் அரசே ஆளுமை பெற்ற அரசியல், பொருளாதார நிறுவனம் என்றும் அரசைக் கட்டுப்படுத்துபவர்களே புதிய ஆளும் வர்க்கம் என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது ஒரு சோசலிசப் புரட்சி நடந்த நாட்டில் “முதலாளியமும் அல்லாத சோசலிசமும் அல்லாத ஒரு புதியவகைச் சமூகத்தைக்” காணமுடியும் என்பதே இவரது கருத்து புரட்சிக்குப் பிந்திய சமூகம், (மொழிபெயர்ப்பு, பக். 209).
சோசலிச நாட்டில் வர்க்கம் பற்றிய வரையறையில் சுவீசி குறிப்பிடும் சில கருத்துகள் முதன்மையாக உள்ளன. (மேற்படி நூல். பக். 114). மரபு வழிப்பட்ட முதலாளியப் பொருளாதார அம்சங்களி லிருந்து புதிய வகைப்பட்ட முதலாளியம் எந்தெந்த வடிவங்களில் மாறுபடுகின்றது என்பதையும் அத்தகைய மாறுபாடு இருப்பினும் முதலாளிய உற்பத்தி முறையின் அடிப்படையான அம்சங்களுடன் எவ்வெவ்வாறு புதிய வகைப்பட்ட முதலாளியம் இணைகின் றன என்பதையும் பின்னர்க் காணலாம். இவை முதலாளிய சமூகமா இல்லையா என்பதில் வேறுபாடு கொண்டிருப்பினும் சுவீசி, இன்றைய உலகில் சோசலிசத் தளங்கள் இல்லை என்பதில் உடன்பாடு கொள்கிறார்.
ஏங்கெல்சு தொடங்கி ஜார்ஜ்தாம்சன் ஈறாக ஒரு சோசலிச நாட்டில் முதலாளிய வர்க்கத்தின் மீட்சி குறித்த கோட்பாடுகளைத் தம் வரலாற்று அனுபவங்களோடு சுட்டிக் காட்டியுள்ளனர் எனக் கண்டறிந்தோம். அதே நேரத்தில் குருசேவ்,டெங், சாவோசி ஆகியோர் தம் திருத்தல்வாதத்தையும் முதலாளியப் பாதையையும் நியாயப் படுத்துவதற்காக சோசலிசத்தில் முதலாளியமீட்சிக்கான சாத்தியமே இல்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்: அல்லது இன்றைய சீனத்தில் அத்தகைய மீட்சி ஏற்பட்டுவிட வில்லை என நிரூபிக்க முயன்று கொண்டிருக்கின் றனர். ஆனால் சோசலிச ' வரலாறு, லெனினியத்தையும் மாசேதுங் சிந்தனையையும் நிரூபித்துள்ளது.
புதிய முதலாளியத்தைக் கோட்பாட்டு அளவில் முதலில் கண்டுணர்ந்து வரையறை செய்தவர் லெனின் ஆவார். முதலாளிய வர்க்கத்தை சர்வாதிகாரத்தைக் கொண்டு அமுக்கி வைக்கவில்லையெனில் புரட்சி தோல்வியில் முடியும் என்று ஏங்கெல்சால்,ஒரு தோல்வியை மட்டுமே முன்னுனர்ந்து கொள்ள முடிந்தது.தோல்விக்கு பின் அங்கு உருவாகும் வெற்றிடத்தை இட்டு நிரப்புவது எது என்பதை ஏங்கெல்சு எடுத்து ரைத்திருக்கவியலாது. லெனின் ஒரு புரட்சிக்கு முன்பும் புரட்சிக்குப் பின்பு சில ஆண்டுகளும் வாழும் வாய்ப்பைப் பெற்றதாலும் புரட்சியில் வீழ்ச்சியடைந்த வர்க்கங்களையும் கட்சியின் “புதிய வர்க்கத்" தன்மையையும் ஓரளவே கண்டுணரும் வாய்ப்பைப் பெற்றதாலும் லெனின் காலத்தில் இத்தகைய நிகழ்வுப் போக்கு யதார்த்தமாகாததாலும் முதலாளிய மீட்சி குறித்த தொடக்கப் புரிதலோடும் வரையறையோடும் மட்டுமே இருக்கநேர்ந்தது. எனினும் ரசியாவின் பழைய வர்க்கங்களிலிருந்து ஒரு புதிய முதலாளிய வர்க்கம் தோன்ற இயலும் எனத் தெளிவாக லெனின் குறிப்பிட்டார். “விந்தையாகத் தோன்றக்கூடிய இந்த உண்மை சரக்கு உற்பத்தியிலும் சிறு உற்பத்தியிலும் புதைந்து கிடப்பதாகவும் இது சாதாரண முதலாளிய ஜனநாயகம் வரை கொண்டு வந்துவிடும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார் (ஸ்டாலின் தொகுப்பு நூல் 11: 285, 7: 950). ஒரு சோசலிசப் புரட்சிக்குப் பிந்தைய சமூகத்தின் சோசலிசப் பொருளாதார நிர்மாணத்தில் ஏறத்தாழ இருபதாண்டு நடைமுறை அனுபவம் கொண்ட மாசேதுங், இடையறாத இருவழிப் போராட்டத்தின் ஊடாக முதலாளியச் சிந்தனையாளர்களால் முன் மொழியப்பட்ட முதலாளியப் பாதையை அரசியல் தளத்தில் வெகுவாக அம்பலப்படுத்தி உள்ளார். மாவோவின் படைப்புகளில் (புரட்சிக்குப் பின்வந்த) சோசலிச உருவாக்கம் குறித்த பொருளாதாரப் பிரச்சினைகள் நிரம்ப விவாதிக்கப்பட்டிருக்கின்றன. ரசிய அனுபவப்களை விமரிசிக்கும்பொழுது (ரசியப் பொருளாதாரம் - ஒரு விமரிசனம், மாசேதுங்) சீன அனுபவத்தையும் சீன யதார்த்த நிலைகளையும் மட்டுமே பெரிதாக மாவோ மனதில் கொண்டிருந்தார். ரசியாவின் சோசலிச உருவாக்கத்திலிருந்து சீனா எந்தெந்த விதங்களில் வேறுபட வேண்டியுள்ளது என்பதையும் அந்நூலில் மாவோ தொகுத்துக் கொடுத்துள்ளார். இதில்முதலாளிய மீட்சி குறித்த ஆய்வு இல்லையெனினும் சீனாவில் சோசலிச உறவின் வடிவங்கள் குறித்த ஆய்வு காணப்படுகின்றது. ஆனால் முதலாளிய மீட்சி குறித்த பொருளாதார, அரசியல் விளக்கங்களை சீனப் பொதுவுடைமைக் கட்சி யூகோஸ்லேவியா குறித்து ரசியப் பொதுவுடைமைக் கட்சிக்கு எழுதிய கடிதத்தில்(மக்கள் தினசரி 26--9-1969, மாபெரும் விவாதம், தமிழ்மொழி பெயர்ப்பு, பக். 842-860; 865-806; 884) காணலாம். சீனாவில் லவியோசோஷி தலைமையிலான முதலாளியப் பாதையை எதிர்க்கும் காலத்தில் மாவோவின் தலைமையிலான சீனப் பொதுவுடைமைக் கட்சி எழுதிய இக் கடிதத்தில் விவசாயத்திலும் தொழில்துறையிலும்முதலாளிய உறவுகள் மீண்டும் கொண்டுவரப்படும் வடிவங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன . இத்தகைய மீட்சி நிலைக்கு மாவோவுக்குப் பிந்தைய சீனமும் பலியானதையும் வரலாற்றில் காண்கிறோம். முதலாளியமீட்சி குறித்த இத்தகைய புரிதல்களோடு முதலில் ரசிய அனுபவத்தைக் காண்போம்.
உலகில் மிகக்குறைவாக இரத்தம் சிந்தி நடத்தம்பட்ட ரசிய சோசலிசப்புரட்சி, அரசியல்--இராணுவ யுத்திகளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நான்கு ஆண்டுகள் ஆயின. அதன்பின் அது பொருளாதார நிலைநிறுத்தலுக்குப் போராடியது. இந்தப் பத்தாண்டுக் காலத்தை (19171--1921) சோசலிசத்துக்குச் செல்வதற்கான இடைக்கட்டம் எனலாம். இதையும் இரண்டு துணைக் கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1) கட்டுப்படுத்தப்பட்ட முதலாளியம் மற்றும் போர்க்காலப் பொதுவுடைமை (நவம்பர் 19171--மார்ச்1921)
2) புதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டம் (1921-1921)
முதல் துணைக்கட்டம், உள்நாட்டு யுத்தக் காலமாகும் இக்காலத்தில் ஆலைகள், வங்கிகள், வர்த்தகம் ஆகியவை அரசுடைமையாக்கப்பட்டன . பெருநிலவுடைமை பறித்தெடுக்கப்பட்டு, விவசாயிகட்கு நிலங்கள் தரப்பட்டன. தொழிலாளிக் குழுக்கள், 'ஆலைகளை நிர்வகித்தன. விளைபொருள்கள் அரசின் மூலமே விற்கப்பட்டன. இக்கட்டத்தில் உற்பத்தி குறைந்தது; விலைவாசி அதிகமாயிற்று. சர்வதேசச்' சந்தையில் பணத்தின் மதிப்பு 3 ஆண்டுகளில் (1918-1920) 120 மடங்கு வீழ்ச்சியடைந்தது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும், உள் நாட்டுப் போரிலிருந்து கிடைத்த ஓய்வைப் பயன் படுத்திக்கொண்டு சோசலிசத்துக்கான பொருளாதாரஅடித்தளம் இடவும் புதிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டது. லெனின் வார்த்தைகளில் சொன்னால் இது இடைக்காலத்திய கலப்புப் பொருளாதாரம் ஆகும்; அரசு டைமையாக்கப்பட்ட ஆலைகள் சில, முன்னாள் முதலாளிகட்குக் குத்தகைக்கு விடப்பட்டன (மே 1921) . அவக நிர்வகிக்கும் தொழிலாளர் குழு கலைக்கப்பட்டு, * ஆலைகள் லாபத்தில் இயங்குவதற்குரிய வகையில் நடத்தும் திறன் பெற்ற” ஒரு நிர்வாக வாரியம் நியமிக்கப்பட்டது உள்நாட்டு வணிகம் முதலாளிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. வெளிநாட்டு வணிகத்தை அரசு நடத்தியது. விவசாயிகளிடமிருந்து கட்டாயக் கொள்முதல் நிறுத்தப்பட்டு, பண்ட வடிவிலான வரி வசூலிக்கப் பட்டது. எஞ்சியதை, சுதந்திரமாக சந்தையில் விற்றுக் கொள்ளலாம். இதனடிப்படையில் விவசாயிகட்கும் தொழிலாளர்கட்கும் இடையில் சுதந்திரசந்தை உறவுகள் புதுப்பிக்கப்பட்டன. உள்நாட்டில் தொழில்கள் தொடங்க அன்னிய முதலாளிகட்கு இசைவு தரப்பட்டது. அன்னியத் தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்பட்டது . இந்தக் காலத்தில் (1921-1920) ஆலை உற்பத்தி 5 மடங்காகவும் விவசாய உற்பத்தி 3 மடங்காகவும் உயர்ந்தன. இந்தப் பொருளாதாரம் முதலாளியக் கூறுகளை உள்ளடக்கியது என்றும் முதலாளிய மீட்சிக் கூறுகள் இதில் உள்ளன என்றும் ஒப்புக்கொண்ட லெனின் இதைப் “பின் வாங்கல்* என்று வர்ணித்தார்... சிறுவீத பண்ட உற்பத்தியிலிருந்து சோசலிசத்துக்குச் செல்லும் இடைக்கட்டம் (ருது: 3: 349) என வர்ணித்தார். உள் நாட்டிலும் உலகளாவிய முறையிலும் முதலாளியத்தைவிட பலவீனமான நிலையில் உள்ள பொழுது இது தவிர்க்க இயலாத பின்வாங்கல் என லெனின் வர்ணித்தார் (51: 515). புரட்சிக்குப் பின் சோசலிசம் கட்டியமைப்பதற்கான தயார் நிலையை உருவாக்க 14 ஆண்டுகள் ஆயின. இந்த இடைக்கட்டத்தில் நாட்டின் நிலைகள் பின் வருமாறு இருந்தன:
1) உற்பத்தி சாதனங்களில் அரசுடைமை, தனியுடைமை, கூட்டுடைமை இருந்தன. தொழில் துறையில் அரசுடைமையும் விவசாயத்துறையில் தனியுடைமையும் பிரதானவடிவங்களாகும்.
2) முதலாளியப் பொருளாதார விதிகள் மீது அரசின் கட்டுப்பாடு மிகவும் குறைவு. மதிப்பு விதி, சந்தைப் பொருளாதாரம், பண்டஉற்பத்தி ஆகியவை முதலாளிய நோக்கிலேயே செயல்பட்டன.
3) சிறு விவசாயிகளின் தனியுடைமையே பிரதான உற்பத்தி வடிவம்.
4) ஆலைகளை நிர்வகிக்கத் தொழிலாளர் குழுக்கள் என்ற சோசலிச நோக்கிலான நிர்வாக முறை பின்னுக்குத் தள்ளப்பட்டு, உற்பத்திப் பெருக்கு நோக்கிலான நிர்வாக வாரியம் நியமிக்கப்பட்டது.
இது சோசலிசக் கட்டமல்ல. சோசலிசத்தைக் கட்டுவதற்கான சில பொருளாதார முன்னிபந்தனைகளை உருவாக்குவதற்கான காலம் ஆகும்.
1928 இல் மாபெரும் தொழில்மயமாக்கலைத் தொடர்ந்து சோசலிசப் பொருளாதாரத்தைக் கட்டி யமைக்கும் பணிகள் தொடங்கின. ஒரு நாட்டில் சோசலிசத்தின் இறுதி வெற்றி சாத்தியம் என்றும் அதற்கான தேவைகள் ஏற்கனவே ரசியாவில் உருவாகி விட்டன என்றும் கருத்துடைய ஸ்டாலின் தலைமையில் இந்தப் பணி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது: அதாவது உலகளாவிய ஏகாதிபத்திய வேலைப் பிரிவினையும் வர்க்கங்கள் மற்றும் வர்க்க முரண்பாடுகள் ஆகியவையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒரு நாட்டில் விடலாம் என்ற கருத்தியலோடு இந்தப் ப்ணி தொட்ங்கப்பட்டது: மேலும் கிராமப்புற முதலாளிகட்கும் தொழிலாளி: வர்க்கத்துக்கும் இடையில் இணக்கம் காாணஇயலா பகை முரண்கள் இருக்கின்றன என்ற புரிதலோடும் (ஸ்டாலின் தொகுப்பு நூல் 12:82) இதன் தொடக்கத்தைக் காணவேண்டும். ஸ்டாலின் தலைமையிலான போக்கின் இந்தக் கோட்பாட்டு அம்சங்கள் முதன்மையானவை. ரசியா ஒரு சோசலிச நாடாக மலர்வதற்குத் தேவையான மூலதனத்தை உள்நாட்டிலே திரட்டியாக வேண்டும். விவசாயிகள், நகர்ப்பொருள்களுக்கு அதிக விலைகள் கொடுத்தும் தம் "பொருள்களைக் குறைவான விலைக்கு விற்றும் மூல்தனம் திரட்டப்பட்டது. ' இந்த மூலதனத் திரட்டல் தொழில்மயத்துக்குறிய மூலதனமாயிற்று. நகரங்களில் ஆலைகளும் 'தொழிலாளர்களும் பெருமளவில் வளர்ந்துகொண்டு போயினர். தொழிற்சாலைப் பொருள்களின் உற்பத்திபற்றி பல புள்ளி விவரங்கள் உள்ளன. குத்தகைக்கு விடப்பட்ட ஆலைகள் மீண்டும் அரசு மயமாயின. ஆலை நிர்வாகத்தில் 1923 வரை இருந்த தொழிலாளர் குழு மீண்டும் கொணரப்படாமல் புதிய பொருளாதாரக் கொள்கைக் காலத்தில் கொணரப் பட்ட நிர்வாக வாரியம் (தொடர்ந்து இருந்தது. இதில் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் கட்சியால் நியமிக்கப்பட்ட்வர்களும் இருந்தனர். இந்த நிர்வாக முறை முக்கியமானது. புதிய பொருளாதாரக் கொள்கைக் காலத்தில் இருந்த தனியார் முதலாளியத்தையும் அரசு முதலாளியத்தையும் நிர்வகித்த அதே முறை 'முதலாளியத்தின் ஊடே . சோசலிசமுறைக்குச் செல்லும் கட்டத்திலும் பயன்பட்டு வந்தது என்பது கவனிக்கத்தக்கது.’
குலாக்குகளை ஒரு வர்க்கம் , என்ற ரீதியில் இல்லாமல் செய்வதற்கும் விவசாயிகளின் தனியுடைமை நிலங்கள், கூட்டுப் பண்ணைகளாகவும் அரசுப் பண்ணைகளாகவும் ஆக்கப்பட்டன. புள்ளி விவரங்களைக் கண்டால் கூட்டுப் பண்ணை முறை உருவாக்கம் மிக விரை ந்து நடத்தப் பட்டது என அறிகிறோம். குலாக்குகளைத் தனிமைப் படுத்தி சிறுவிவசாயிக்ளை இணைத்துக் கொண்டு வறிய விவசாயிகளைச் சார்ந்திருக்கக் கூடிய லெனினிய யுத்த தந்திரப் பாதையைக் கையாள் வேண்டிய குறிப்புரைகள் காணப்படினும் (ஸ்டாலின் 11 : 1013) சோசலிச உருவாக்கத்தின் தொடக்ககாலமே தாக்குதல் ரீதியானது என வரையறுக்கப்பட்டு இந்த மூன்று வர்க்கங்களையும் ஏறத்தாழப் பொதுமைப்படுத்தும் நிலை காணப்பட்டது. கூட்டுடைமை முறை குறித்த ஸ்டாலினின் கண்ணோட்டம் இங்கு தொகுத்துக் காண்ப்பட வேண்டியதாகும்.
ஆக வரலாற்று ரீதியாக இதனை புரிந்துக் கொள்ள லெனின் வரலாற்று குறிப்பு நமக்கு பயனளிக்கும் அவை இதன் தொடர்ச்சியாக காணலாம்.
உலகப் புரட்சி நிகழ்ச்சிப் போக்கின் பிரதான விதிகள் மூன்று ருஷ்யப் புரட்சிகளில் மிக வலுவாக வெளிப்பட்டன. 1905-1907 புரட்சி ஏகாதிபத்திய சகாப்தத்தின் முதல் மக்கள் புரட்சியாகும்; சமூக - பொருளாதார உள்ளடக்கத்தில் முதலாளிய ஜனநாயக மற்றும் அதே நேரத்தில் பாட்டாளி வர்க்க சகாப்தத்தில், அதன் தலைவர் பாட்டாளி வர்க்கம் என்ற அர்த்தத்திலும் அதன் போராட்ட சாதனங்களின் அர்த்தத்திலும் இருந்தது. அது சர்வதேசப் புரட்சி இயக்கத்தின் மீது பிரம்மாண்டமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
1917 பிப்ரவரி புரட்சி உலக பிற்போக்குத்தனத்தின் முக்கிய அரணாக இருந்த ஜாரிசத்தை தூக்கியெறிவதற்கு இட்டுச் சென்றது. 1917 பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான குறுகிய காலப்பகுதி உலக வரலாற்றில் ஒரு முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் அபிவிருத்திக்கு முதல் உதாரணத்தை வழங்கியது ஒரு சோசலிசப் புரட்சியாக.மகத்தான அக்டோபர் சோசலிசப் புரட்சி மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை திறந்து வைத்ததுடன், உலகந்தழுவிய அளவில் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்வதற்கான அடித்தளங்களை அமைத்தது. "அக்டோபர் 1905, பிப்ரவரி மற்றும் அக்டோபர் 1917 உலக-வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது" என்று லெனின் எழுதினார். தொழிலாளி வர்க்க இயக்கத்தாலும் ரஷ்யப் புரட்சிகளாலும் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் அதேநேரத்தில் உலகப் புரட்சியின் அடிப்படைப் பிரச்சினைகளாக இருந்தன. இதனால்தான் லெனின் கேள்விகளை விரிவுபடுத்துகிறார். ரஷ்யாவின் சமூக-அரசியல் வளர்ச்சி சர்வதேச முக்கியத்துவம் பெற்றது.
விளாடிமிர் இலியிச் லெனின் அவரது பெயர் பல நூற்றுக்கணக்கானவர்களுக்கு எல்லையற்ற அன்பு லட்சக்கணக்கில் உலகின் தொலைதூர மூலைகளில் அறியப்பட்ட இந்த பெயர், அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களுக்கும் வழிகாட்டும் நட்சத்திரமாக மாறியுள்ளது. அனைத்து முற்போக்காளர்களின் இதயங்களிலும் மனதிலும் வாழ்ந்து, உத்வேகம் அளிக்கும் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும், சுதந்திரமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவும் அவர்கள் இடைவிடாது பாடுபட வேண்டும் வாழ்க்கை, அமைதி, தேசிய சுதந்திரம், சமூக முன்னேற்றம், ஜனநாயகம், சோஷலிசம், கம்யூனிசம் என்பவை கற்பனை அல்ல உண்மை என்பதனை நடைமுறைக்கான வழிகாட்டி லெனின். வெற்றியின் அடையாளமாக லெனினின் பெயர் வந்துள்ளது.
விளாடிமிர் இலியிச் லெனின் விஞ்ஞான கம்யூனிசத்தை நிறுவிய கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் எங்கெல்ஸ் இலட்சியத்தின் மாபெரும் தொடர்ச்சியாளர். லெனினின் தத்துவார்த்த மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மார்க்சிசத்தின் அகிலத்தின் அபிவிருத்தியில் ஒரு புதிய சகாப்தத்திற்கு கட்டியம் கூறியது உழைக்கும் மக்களின் விடுதலை இயக்கம். லெனின் தனது செயல்பாட்டில் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவத்தையும் வழிமுறையையும் அடிப்படையாகக் கொண்டார். மார்க்சியத்தை உலக வளர்ச்சியோடு வளர்த்தெடுத்தார், மார்க்சியத்தைமறுத்து "போதுமானதல்ல மற்றும் காலாவதியானது" என்ற "வறட்டுவாதத்தை" விவாதிக்கும் சாக்குப்போக்கின் அனைத்து முயற்சிகளையும் உறுதியாக முறியடித்த அதேவேளையில், அவர் எப்போதும் ஒரு ஆக்கபூர்வமான அணுகுமுறைக்காக போராடினார். புரட்சிகர இயக்கத்தின் தத்துவம் மற்றும் நடைமுறை , நடப்புப் பிரச்சினைகளை விரிவுபடுத்துவதில் மார்க்சிசத்தின் கோட்பாடுகள் மற்றும் வழிவகைகளால் வழிநடத்தப்பட வேண்டும் என்று நிலைநாட்டினார்.
மார்க்சியம் என்பது வறட்டுச் சூத்திரமல்ல, அது நடைமுறைக்கான வழிகாட்டி என்று திரும்பத் திரும்பச் சொல்வதில் அவருக்கு விருப்பம் இருந்தது. "செயலுக்கான ஒரு வழிகாட்டி" அவரது தத்துவார்த்த மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்த கருத்தை உறுதிப்படுத்துகின்றன. அவர் தனது படைப்புகள் அனைத்திலும் மார்க்சியத்தை ஒரு படைப்பாற்றல் உணர்வோடு, கோட்பாடுகளுக்கு விசுவாசத்தைக் கோருகிற, ஆனால் வறட்டுத்தனமான, சலிப்பூட்டும் அனைத்தையும் நிராகரிக்கிற ஒரு அழியாத, வளரும் கோட்பாடாக அணுகுகிறார்.உண்மையான வரலாற்று நிலைமைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று எப்போதும் கோரும் ஒரு கோட்பாடு. மார்க்சியம் மிகவும் துல்லியமான ஒன்றைக் கோருகிறது. வர்க்க சக்திகளின் பருண்மையானநிலை பற்றிய புறநிலையாக சரிபார்க்கக்கூடிய பகுப்பாய்வு. லெனின் "ஒரு ஸ்தூலமான சூழ்நிலை குறித்த ஒரு ஸ்தூலமான பகுப்பாய்வை" அதன் சாராம்சமாகக் கண்டார். மார்க்சியத்தின் இதயமும் ஆன்மாவும். அவைதான் என்பதனை நிரூவினார் (* V. I. Lenin, Collected Works, Vol. 31, Progress Publishers, Moscow, p. 166. )*
ஒரு சிறந்த சிந்தனையாளர் மற்றும் சிறந்த புரட்சியாளரான லெனின் கடுமையாக போராடினார் முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு எதிராக, வலது மற்றும் "இடது" சந்தர்ப்பவாதிகள் மற்றும் திருத்தல்வாதிகள், மார்க்சியத் தத்துவத்தின் புரட்சிகரக் கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்காக, புதிய வரலாற்று நிலைமைகளுடன் தொடர்புபடுத்தி மார்க்சியத்தை வளர்த்தெடுத்தனர். அதை உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது, கற்பித்தலில் லெனினின் பங்களிப்பு மார்க்சும் எங்கெல்சும் - மார்க்சியத் தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான கம்யூனிசத்தின் கோட்பாடும் நடைமுறையும் விலைமதிக்க முடியாதது முக்கியத்துவம் வாய்ந்தது.
ரஷ்யா லெனினியத்தின் பிறப்பிடம். ஆனால் லெனினியம் முதலாளித்துவச் சித்தாந்தவாதிகளும் திருத்தல்வாதிகளும் கூறுவது போல் ரசியாவிற்கான மார்க்சியம் அல்ல, முற்றிலும் ருஷ்ய நிலைகளை விளக்கி போதனை அளித்து போலவே; உலக வளர்ச்சியில் வேரூன்றிய ஒரு சர்வதேச போதனையாகும். லெனின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்தினார், குறிக்கோளுக்கு சரியான வெளிப்பாட்டை வழங்கினார் உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தின் தேவைகள் முதலாளித்துவத்தின் பொறிவு மற்றும் மனிதகுலத்தின் மாற்றத்தின் சகாப்தம் சோஷலிசம், கம்யூனிசம்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உலக முதலாளித்துவம் அதன் கடைசி, ஏகாதிபத்திய வளர்ச்சிக் கட்டத்திற்குள் நுழைந்தது. முதலாளித்துவ சமூகத்தில் தடையில்லாப் போட்டிக்குப் பதிலாக ஏகபோகங்கள் மற்றும் நிதி மூலதனம் ஆகியவற்றின் ஆட்சி வந்தது. உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் பெருமளவில் அதிகரித்தன. முதலாளித்துவ நாடுகளில் இருந்தது உள்நாட்டுக் கொள்கையிலும், வெளியுறவுக் கொள்கையிலும் அனைத்து வழிகளிலும் பிற்போக்குத்தனத்தை நோக்கித் திரும்புவது. சித்தாந்தத்திலும், பண்பாட்டிலும். உலகம் செதுக்கத் தொடங்கியது சர்வதேச கார்டெல்கள், அறக்கட்டளைகள் மற்றும் சிண்டிகேட்டுகளுக்கு இடையில், பிரித்தல் முன்னணி முதலாளித்துவ நாடுகள் உலகப் பிரதேசங்களிலிருந்து முற்றுப்பெற்றன, ஏகாதிபத்தியத்தின் காலனி அமைப்பு வளர்ந்தது. இணைந்து அரசியல் சுதந்திரத்தை இழந்த நாடுகளின் காலனித்துவ சுரண்டலின் வெளிப்படையான வடிவங்களுடன், பல நாடுகளின் அரைக்காலனித்துவ சார்பு மற்றும் நிதிஅடிமைத்தனத்தின் பல வடிவங்கள் தோன்றின. மூலதனத்தின் முரண்பாடுகள் உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையே, காலனிகளுக்கும் சார்பு நாடுகளுக்கும் இடையே, ஒரு புறம், பெருநகரம் மறுபுறம் மிகவும் கூர்மையானார்; அதிகரித்து வரும் சீரற்ற பொருளாதார முக்கிய முதலாளித்துவ வல்லரசுகளின் வளர்ச்சி அவற்றுக்கிடையேயான சந்தைகளுக்காகவும், கச்சாப் பொருள்களின் ஆதாரங்களுக்காகவும், துறைகளுக்காகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தியது. மூலதனத்தை ஏற்றுமதி செய்வதும், கொள்ளையடிப்பதை மறுபங்கீடு செய்வதும். சர்வதேச மோதல்களும் இராணுவ மோதல்களும் அடிக்கடி நிகழ்ந்தன; இது வழிவகுத்தது ஏகாதிபத்தியப் போர்கள்.
புதிய யுகம் சமூக வளர்ச்சியில் புதிய பிரச்சினைகளை எழுப்பியது. அனைத்துலக விடுதலை இயக்கம், அதன் தீர்வு குறித்து மனித குலத்தின் தலைவிதியைப் பொறுத்தது. மார்க்சியத்தின் புரட்சிகர, படைப்பாற்றல் மிக்க உத்வேகத்திற்கு அந்நியப்பட்டதாக இரண்டாம் அகிலத்தின் தலைவர்கள் நிரூபித்தனர். இந்த பிரச்சினைகளை தீர்க்க இயலாதாகவும். மேற்கு ஐரோப்பிய சமூக-ஜனநாயகக் கட்சிகளில் திருத்த விரும்பிய சந்தர்ப்பவாதிகள் ஆதிக்கம் செலுத்தினர் இவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் போதனைகளை மறுத்து முதலாளித்துவத்திற்கு சாதகமான புரட்சிகரப் போராட்டத்திற்கு எதிரான ஒரு நிலைபாட்டை முன்வைத்தனர். புதிய, புரட்சிகர யுகம் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளுக்கு லெனின் பதிலை வழங்கினார் என்பதிலும், ஜனநாயகக் கட்சியின் அடிப்படை தத்துவ, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை பதிலையும் தத்துவ போராட்டத்தையும் நடத்தினார் என்பதில் லெனினின் மகத்தான சேவையும் பங்களிப்பும் தங்கியுள்ளது.
புரட்சிகரத் தத்துவம், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் மூல உத்தியும் செயலுத்திகளும். முதலாளித்துவ சித்தாந்தவாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் திருத்தல்வாதிகள் லெனினிசத்தின் தோற்றமும் உள்ளடக்கமும் ரஷ்ய யதார்த்தத்தின் "சிறப்பு" நிலைமைகளால், ரஷ்யாவின் "பொருளாதார மற்றும் கலாச்சார பின்தங்கிய நிலையால்" தீர்மானிக்கப்பட்டன என்று வாதிடுகின்றனர். வரலாற்று உண்மைகள் இக்கூற்றுக்களை முற்றிலுமாக மறுக்கின்றன.
ரஷ்யா சராசரியாக வளர்ச்சி அடைந்த ஒரு நாடாக இருந்தது முதலாளித்துவம் தீவிரமாக வளர்ந்து கொண்டிருந்தது; ஏகபோக கட்டம். தொழில்துறை உற்பத்தியில் ரஷ்யா உலகில் நான்காவது இடத்தைப் பிடித்ததாக லெனின் குறிப்பிட்டார். அவர் ரஷ்யாவை அதே நாடுகளின் குழுவில் வைத்தார் பிரான்ஸ் மற்றும் ஜப்பான், வளர்ச்சி நிலை மற்றும் உலக அரசியலில் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் இத்தாலி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரியை விட அதிகமாக மதிப்பிட்டுள்ளன. ரஷ்யா மிகவும் குவிந்த தொழில்துறை மற்றும் வலுவான தொழிலாள வர்க்கம் இருந்தது. ருஷ்யப் பாட்டாளி வர்க்கம் நீண்டகால வர்க்கப் போராட்டத்தால் பக்குவப்படுத்தப்பட்டிருந்தது. அதன் அனுபவத்தைப் போலவே அதன் பிரக்ஞையும் சீராக வளர்ந்து கொண்டிருந்தது
மற்றும் உறுதிப்பாடு. ரஷ்யாவிலும் கூட, லெனின் 1899 இல் எழுதினார், "முதலாளித்துவ அபிவிருத்தியின் அதே அடிப்படை நிகழ்ச்சிப்போக்குகளை, அதே அடிப்படையை, நாம் காண்கிறோம் சோசலிஸ்டுகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான பணிகள்". உழைக்கும் வர்க்கம் லெனின் தலைமையிலான புரட்சிகர மார்க்சியர்கள் ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கக் கட்சியை உருவாக்கியபோது இயக்கம் ஒரு புதிய மட்டத்தை எட்டியது.
ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தை எதிர்கொண்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு லெனின் மார்க்சியத்தைத் திறமையாகப் பயன்படுத்தினார். இது லெனினியத்தின் முக்கியத்துவத்தை ரஷ்யாவுடன் மட்டுப்படுத்துவதற்கான அடித்தளத்தை வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, இதற்கு நேர்மாறாக, அதன் சர்வதேச தன்மையை உறுதிப்படுத்துகிறது.தொடரும்....
No comments:
Post a Comment