நம் கல்விமுறை பற்றி

மழலையர் கல்வியிலிருந்து உயர் ஆய்வுக் கல்வி வரை கல்வித் துறையின் அனைத்து நிலைகளிலும் கொள்கைகள் சட்ட திட்டங்கள் ஆகியவற்றை வகுப்பது இந்த தேசிய கல்வி ஆணையத் தின் அதிகாரத்திற்கு உட்பட்டது

மாநில அரசு இதன் கொள்கையை செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமே தவிர வேறு பணி எதுவும் இதற்கு கிடையாது.

பண்ணையார்கள், தொழிற்துறை முதலாளிகளாக மாறத்தொடங்கிய உடன், அவர்களதுமில்கள், தொழிற்சாலைகளில் கல்வி அறிவு பெற்றவர்கள் தேவைபட்டனர். இந்த ஆளும் வர்க்கங்களின் தேவையை அரசே முன்னின்று அனைவருக்கும் கல்வி கொடுக்க பல்வேறு முயற்சிகளை தொடங்கியது.

இதுவரை பெரும் பண்ணைகள், ஜமீன்தார்களாக இருந்தவர்கள் தங்களின் ‘பெருந்தன்மை, கௌரவம், வள்ளல்’ தன்மையை வெளிப்படுத்துவதற்காக பள்ளிகளை தொடங்குவது, பள்ளிகளுக்கு நிலங்களைக் கொடுப்பது, பொருளுதவி செய்தது போன்றவை நடந்தன.

அத்தகைய சூழலில் அரசும் -குறிப்பாக காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டம்- பல்வேறு சலுகைககளை செய்துக்கொடுத்தது. இத்தகைய பின்னணியில்தான் அரசு பள்ளியாக இருந்த இப்பள்ளி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் 1986-க்குப் பிறகு தனியார்மயம் தாராளமயம் உலகமயம் கொள்கைக்கு ஏற்ப குறைந்தபட்சம் சேவையாக இருந்த கல்வி, வியாபார பண்டமாக்கப்பட்டு, இன்று கார்ப்பரேட்டுகளின் கைகளில் சென்றுவிட்டது. இன்றைய தனியார் கல்விக்கும், அன்றைய குறைந்தபட்ச சேவை என்கிற நிலையில் இருந்த தனியார் (அரசு உதவிப்பெறும்) கல்விக்கும் வேறுபாடு உள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கோத்தாரிக் குழு இந்தியாவைச் சமூகம் என்று அழைத்தது. இந்த ஆவணமோ *இந்தியப் பொருளாதாரம்* என்றே அழைக்கிறது. கோத்தாரிக் குழு கல்வியை சேவை என்று அழைத்தது. மோடியின் புதிய கல்விக் கொள்கை ஆவணமோ கல்வியை முதலீடு என்கிறது. கூடவே ‘குருகுல’ மாதிரி என்பதை வருவாய் என்கிறது.

*மெக்காலேவுக்குத் தேவைப்பட்டது பிரிட்டிஷ் காலக் கணக்காளர்கள்; ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டது பில்கேட்ஸின் வேலையாட்கள்; மோடியின் தேவை மேலும் மாறுபட்டது. அவ்வளவே.*

தொடரும் இன்னும் தேடுதல்கள்... சி.பி

ராஜீவின் புதிய கல்விக் கொள்கை.

1986 புதிய கல்வி கொள்கை என்னும் பெயரில் கல்வியில் மாற்றங்களை அறிவித்தது

ராஜீவ் அரசு பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில் துறைக்கு பணியாளர்களை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது.

அது தொழில் கல்வியை அதன் முன்பு பிரிட்டிஷாரக்கு கணக்குகளை உருவாக்கிய மெக்காலே கல்வி போலவே இந்த புதிய கல்விக் கொள்கை செயல்பட்டது மதிப்பெண்களை துரத்தும் மனப்பாட கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

ஆங்கிலமே வேலை வாய்ப்பைத் தர முடியும் என்பதால் பட்டி தொட்டிகளில் எல்லாம் நர்சரி பள்ளிகள் முளைத்தன பில்கேட்ஸின் பணியாட்களை உருவாக்க வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கை என்று கல்வியாளர்கள் இதை விமர்சிக்கிறார்கள்.

யஸ்பால் கல்விக்குழு.

உலகம் முழுவதும் கல்வி எனும் பெயரில் குழந்தைகள் வழிபடுவதை கடுமையாக விமர்சித்த இனி டெஸ்கோ போன்ற ஐநா சபையின் குழந்தைகள் நல அமைப்புகள் கட்டளை சுமையேற்ற தாகவும் இனிமையாகவும் நடவடிக்கை எடுக்க கோரி நாடுகளை அழைத்தன.

சாதி சமய வர்க்க வேறுபாடுகள் இன்றி ஒரே மாதிரியான கல்வி எனும் நிர்ப்பந்தம் வந்தபோது 2009 இல் அமைக்கப்பட்டது தான் பேராசிரியர் யஷ்பால் தலைமையிலான கல்விக்குழு தேர்வுகளுக்கு பதிலாக மாற்றுக்கல்வி தொடர் மற்றும் முழுமையான சிசி இக்குழு அறிமுகம் செய்தது

எட்டாம் வகுப்பு வரை தொடர்ச்சி தொடர்ச்சி என்பதை இக்குழு கொண்டு வந்தது இன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் 100 குழந்தைகளில் 76 பேரை எட்டாம் வகுப்பில் நம்மால் தக்கவைக்க முடிந்துள்ளது.

மோடி முன்வைக்கும் கல்விக் கொள்கை 2019.

இந்த சூழலில்தான் மத்திய அரசு கொண்டுவர திட்டமிடும் புதிய கல்விக்கொள்கை பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியிருக்கிறது

மெக்காலே ராஜீவ் கல்விக் கொள்கைகளை நினைவுபடுத்தும் இக்கொள்கை அடுத்த 20 ஆண்டுகளில்கல்வி என்னவாகும் எனும் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

வேதகால கல்வியை புனிதமானது என்றெல்லாம் சொல்வதை விடவும் இதற்கு முன்பு இயேசு என்று ஒன்று இருந்ததை ஐயோ அது சுமையேற்ற கற்றல் முதல் குழந்தைகள் உரிமைகளை ஆசிரியர்களின் கடமையை உருவாக்கியதை கணக்கில் எடுக்கவில்லை என்பதுதான் பெரும் அதிர்ச்சி.

எந்த ஒரு கல்விக் கொள்கையின் தனக்கு முன் நடந்தவற்றை பற்றி லாகாது குறிப்பிட்டு அதன் தொடர்ச்சியாக தன்னை அறிவித்துக் கொள்ள வேண்டும் என்பதே மரபு.

இதன் முக்கிய அம்சங்கள்.

பொருத்தமில்லாத பாடப்பொருள் மற்றும் தூக்கமற்ற கற்பித்தல் முறை நம் கல்வியில் முன்பிருந்த தரம் போய்விட்டது என்று சொல்லும் பூ புதிய கல்விக்கொள்கை இதை சரிசெய்ய இரண்டு வழிகளை முன்வைக்கிறது முதலாவதாக பழையபடி மத்திய பட்டியலுக்கு கல்வி வர வேண்டும் என்கிறது.

இது மாநிலங்களின் உரிமையை பறித்து விடும் என்று குரல்கள் எழுந்திருக்கின்றன அடுத்து நான்காம் வகுப்பில் முடிவிலிருந்தே தேர்ச்சி தோல்வி என மாணவர்களை சலித்து எடுக்க வேண்டும்

இது பழைய படி பள்ளியில் இருந்து பல மாணவர்கள் வெளியேறுவதற்காக தான் வழி வகுக்கும.

திறன்களை குறிப்பாக வேலைவாய்ப்பு திறன்களை வளர்க்க நமது கல்வி தவறிவிட்டது வேலைக்கு தகுதியற்ற படித்தவர்களை உருவாக்கி வீணடித்து விட்டு என்று சொல்லும் புதிய கொள்கை இதை சரிசெய்ய திறன் மேம்பாட்டு ஆணையம் அமைத்து பள்ளிக்கூடங்களில் தொழில்துறை தேவைகளை மனதில் வைத்து மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும் என்கிறது.மேலும் கல்வி முழுமை பெறும் முன்னமே வேலை தகுதி சான்றிதழ் மூலம் மாணவர்கள் விரும்பினால் ஒன்பதாம் வகுப்போடு தொழில்துறையில் இணையலாம் என்கிறது

இது குலக்கல்வி முறையை நினைவு படுத்துவதற்காக கல்வியாளர்கள் குற்றம்சட்டுகிறார்கள்.

இந்திய அளவிலான கல்வியின் தரத்தை மேம்படுத்த கல்வி அமைப்புகள் பள்ளிகளுக்கான தர பட்டியல் தயாரிக்க கல்லூரி அளவிலான தர மேம்பாட்டு குழு ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும்

தேசிய அளவிலான பள்ளி கல்வி தரச்சான்று ஆணையம் என அது அழைக்கப்படும் என்கிறது

இந்த அறிக்கை இது அரசுப் பள்ளிகளை முற்றிலும் முடங்கச் செய்துவிடும் எனும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆசிரியர்களின் தரம் தலைமை ஆசிரியரின் தகுதி இவற்றில் எந்த சமரசத்தையும் மோடி அரசு ஏற்றுக் கொள்ளாது இதற்காகவே திறன் சோதனைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று சொல்லும் இந்த அறிக்கை குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தர சான்று தேர்வுகளை ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்கிறது

ஏற்கனவே ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர ஆளில்லை என்பது வெறும் வேறு விஷயம்.

மதிய உணவு திட்டத்தில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்கிறது இந்த புதிய கொள்கை. அதே சமயம் பள்ளிகளுக்கு அரசு நேரடியாக உணவு தராது அதற்கு பதிலாக அவற்றை தர்ம அமைப்புகளிடம் தனியார் ஒப்படைத்து விடு அரசின் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி இது.

இந்திய கலாச்சார கூறுகளை இன்றைய கல்வி முற்றிலும் கைவிட்டு விட்டது.

இதை சரிசெய்ய வகுப்பில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று கொள்கை முன்வக்கும் திட்டம் அப்பட்டமான காவி மயம் என்று விமர்சிக்கப்படுகிறது.

கோத்தாரி குழு இந்தியாவே சமூகம் என்று அழைத்தது இந்த ஆவணமோ இந்திய பொருளாதாரம் என்றே அழைக்கிறது .

கோத்தாரி குழு கல்வியை சேவை என்று அழைத்தது மோடியின் புதிய கல்வி கொள்கை ஆவணம் கல்வியை முதலீடு என்கிறது கூடவே குருகுல மாதிரி என்பதை வருவாய் என்கிறது.

இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமைக்கு உரிய மொழி என்று சமஸ்கிருதத்தை இந்த கல்விக் கொள்கை கட்டாயமாகிறது.

மூன்றாம் வகுப்பில் இருந்து மூன்றாவது மொழி ஒன்றைக் விருப்பப்பாடமாக எடுப்பதும் ஆறாம் வகுப்பிலிருந்து மூன்றாம் மொழி ஒன்றை கட்டாயமாக கற்பிப்பதும் திருத்தப்பட்ட வரையிலும் வலியுறுத்தி உள்ளது.

நம் கல்விமுறை பற்றி புரிந்துக் கொள்ள ஓர் தேடல் முழுமையாக இந்த லிங்கில் அழுத்தி வாசிக்க 


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்