அறிவொண்ணா வாதம் நேர் காட்சி வாதம் கருத்து முதல் வாதம் என்றால் என்ன ?

தோழர்களுக்கு வணக்கம், முந்தைய வகுப்பான "பொருள் முதல் வாதமும் அனுபவ வாத விமர்சனம்" என்ற நூல்வாசிப்பில் ஏற்பட்ட கேள்விக்கான பதில் இங்கே.
பொருள் முதல் வாதத்தை குழப்புவதில் இன்றைய கான்டிய அறிவொண்ணாவாதிகளும், ஹியூமிய குழப்பவாதிகளும் பெர்க்கிலி பாதிரியாரின் கருத்து முதல் வாதத்தை தாங்கி பிடிப்பது வரும் இங்கே அறிவியல் கோட்பாடு என்று நம்மை ஏமாற்றுவதை புரிந்து கொள்வதற்காக தான் இந்த விளக்கமான பதிவு.

அனுபவ வாத விமர்சனம் முன்வைக்கும் இவர்களை விமர்சிப்பதற்கு முன்பாக இவர்கள் பேசும் தத்துவம் என்ன? இவர்கள் யாருடைய தத்துவத்தை பின்பற்றி இன்று பேசுகிறார்கள் என்று சுருக்கமாக காண்போம்.
அனுபவவாத விமர்கர்களுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் மூவர்.
ஒருவர் இம்மானுவேல் காண்ட் மற்றொருவர் ஹியூம், மூன்றாம் ஒருவர் பெர்க்கிலி பாதிரியார். இவர்களைப் பின்பற்றி தான் நமது அனுபவ வாத விமர்சர்கள் தங்களுடைய கருத்துக்களான தத்துவத்தை முன்வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக இந்த நூலில் நாம் காண்கிறோம்.
காண்டின் தத்துவம் கருத்து முதல்வாத தத்துவம் ஆகும்.இவர் விஞ்ஞானத்தில் பல சாதனை புரிந்தவர் ஆனால் இவர் தத்துவப்படி புறத்தே உள்ள பொருள் அதுவாக உள்ள பொருள் எனப்படுகிறது . ஆனால் நமக்கு கிடைப்பதெல்லாம் அந்த பொருள் பற்றிய தொகுப்பு மட்டும் தான். இதனை அவர் நமக்காக உள்ள பொருள் என்று அழைக்கிறார் அதாவது புறத்தில் உள்ள பொருளை நாம் அணுக முடியாது அல்லது புரிந்து கொள்ள முடியாது என்கிறார்.
காண்டை போலவே மற்றொரு பெரிய தத்துவவாதி பெர்க்கிலி பாதிரியார் ஆவார். இவரது கருத்துப்படி மனிதன் எதனையும் நேரடியாக உணர முடியாது அவனது கருத்துகளை தான் அவனால் உணர முடியும் அதாவது புலன் உணர்வு மூலம். அவன் உணர்ந்தபடி தான் பொருள்கள் உள்ளன. இந்த கருத்துகள் இயக்கம் அற்றவை இதனை ஆன்மாவினால் மட்டும்தான் உணர முடியும். இக்கருத்துகள் கடவுளின் மனதில் மறைவாக உள்ளன ஆனால் இவை மனிதனது மனதில் உள்ளன. பொருள்கள் முரண்பாடுகள் உள்ளவை பயனற்றவை எனும் இவரின் தத்துவம் அப்பட்டமான கருத்து முதல் வாதம் ஆகும்.

டேவிட் ஹியூம் இவர் ஓர் உளவியல் அறிஞர் மற்றும் வரலாற்று ஆசிரியர். இவரைப் பொருத்தவரை முற்றிலும் அறிவிற்கு பொருத்தமானது கணிதம் ஏனென்றால் அது பொதுமைகள் பற்றி சந்தேகங்கள் மூலம் பேசுகிறது. உதாரணமாக × எக்ஸ் என்பது எதையும் குறிக்கலாம் குறிக்காமலும் இருக்கலாம். எல்லாமே அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டவை எதார்த்தம் என்பது மனப்பதிவுகளின் வெளிப்பாடு ஆகும் இதற்கான காரணம் அறிய இயலாது. புறவயமான உலகம் இருக்கிறது இல்லை என்பதற்கு தீர்வு காண முடியாது. காரண காரிய தொடர்பு என்பது இல்லை. அதனை உள்ளுணர்வாலும் ஆய்வுகளின் மூலம் நிறுவ முடியாது. நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. இவர் ஓர் ஐயுருவாதி எல்லாவற்றையும் சந்தேகப்படுபவர் அது மட்டுமல்லாமல் இவர் ஒரு அறிவொண்ணாவாதியும் கூட. இவரின் தத்துவம் புதிய பாசிட்டிவிசம் ( நேர்காட்சி வாதம் ) என்பதற்கு அடிக்கோலியது நேர் காட்சிவாதம் என்பது ஒரு தத்துவக் கொள்கை. இதன்படி புலன் அறிவு மூலம் பெரும் தகவல்களை பகுத்தறிவின் மூலம் விளக்குவதாக பெற்று இது ஒரு மிகை விஞ்ஞான கொள்கையாகும்.
நம் மத்தியில் இங்குள்ள பலர் என் உணர்வு என் சிந்தனை என்று கிளம்பிய பின்நவீனத்துவத்தின் தொடர்ச்சியான அடையாள அரசியல்வாதிகள் இதன் பிரிவினர்களே... இன்னும் விரிவாக பின்னர்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்