1. தனி ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியம் என்றார் லெனின்.
தனி ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியமில்லை என்றார் டிராட்ஸ்கி
2. பல்வேறு நாடுகளில் புரட்சி நடக்காதபோதும், தனி ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்கம் வெற்றிபெற முடியும் என்றார் லெனின்.
பல்வேறு நாடுகளில் புரட்சி நடக்காதபோது, தனி ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்கம் வெற்றிபெற முடியாது என்றார் டிராட்ஸ்கி
3. பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றிக்குப் பிறகு புரட்சியை ஒருங்கிணைக்க முடியும் என்றார் லெனின்.
4. தொழிலாளர்கள் விவசாயிகளின் கூட்டு சர்வாதிகாரம் என்பதே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தான் என்றார் லெனின்.
விவசாயிகளை தவிர்த்துவிட்டு தொழிலாளர்கள் மட்டுமே செயல்படுத்தும் சர்வாதிகாரமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றார் டிராட்ஸ்கி
5. புரட்சிக்குப் பிறகு விவசாயிகளை சோசலிசக் கட்டுமானத்தில் கொண்டுவரவேண்டும் என்றார் லெனின்.
புரட்சிக்குப் பிறகு விவசாயிகளை சோசலிசக் கட்மானத்தில் கொண்டுவரக்கூடாது என்றும் கொண்டுவர முடியாது என்றும் கூறினார் டிராட்ஸ்கி
6. கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை கோட்பாடுகளையும், உட்கட்சி ஒழுக்கத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் உயிர்போல் மதித்து ஒழுகவேண்டும் என்றார் லெனின்.
கம்யூனிஸ்டு கட்சியின் அடிப்படை கோட்பாடுகளையும், உட்கட்சி ஒழுக்கத்தையும், ஜனநாயக மத்தியத்துவத்தையும் ஏற்கவேண்டிய அவசியமில்லை மாறாக கோஷ்டிகளை உருவாக்குவது, கட்சிக்குள் மாற்று மையத்தை உருவாக்குவதற்கு சுதந்திரம் வேண்டும் என்றார் டிராட்ஸ்கி
இவ்வாறான லெனினுக்கு எதிரான கொள்கையை பின்பற்றுபவர்கள்தான் நவீன டிராட்ஸ்கியவாதிகள். இந்த கொள்கைகள் அனைத்தும் பாட்டாளி வர்க்க நலனுக்கு எதிரானது, பாட்டாளி வர்க்க அமைப்பிற்கு எதிரானது, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு எதிரானதாகும். ஆகவே இந்த கொள்கைகளை புறந்தள்ளும் வகையில் நவீன டிராட்ஸ்கியவாதிகளையும் நாம் புறந்தள்ள வேண்டியது நமது கடமையாகும்.
No comments:
Post a Comment