மறந்தே போன கருப்பு பண ஒழிப்பு நாடகம்

 கருப்பு பணம் ஆறாக ஓடுகிறது அதனை பிடித்து மக்களுக்கு இனி மோடி கொடுக்கும் தூரத்தில் உள்ளதாக மோடியை ஆதரிக்கும் அடிமைகள் கூவுவதையும் மோடியின் உண்மை முகமும். மோடி அடிமைகள் முடிந்தால் முயற்சி செய்யலாம் கீழ் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல:-

1) 500கோடிக்கு அதிகமாக கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கருப்புபண முதலைகளின் பெயர்களை இன்றுவரை வெளியிடாமல் அவர்களை தப்பிக்க
வைத்துக்கொண்டிருக்கும் மோடியா கருப்புபணத்தை ஒழிக்கப்போகிறார்?
2) BJP ஆட்சியில் ஊழலே நடக்கவிடமாட்டேன் என்று பொய்யான சூளுரை விடுத்து ஆட்சிக்கு வந்தபிறகு
நாட்டையே தலைகுனிய வைத்த மத்தியபிரதேச வியாபம் ஊழலில் ஆளும் BJP அரசின் மீது சிறு நடவடிக்கை கூட எடுக்காமல் ஊழல் ஆட்சியை காப்பாற்றிக்கொண்டிருக்கும் மோடியா கறுப்புபணத்தை மீட்பார்? இன்றுவரை ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான செளகான் தான் மத்தியபிரதேச CM. அவர் மீது எந்த நடவடிக்கையும் மோடி எடுக்கவில்லை.
3) RELIANCE அம்பானி இந்திய வங்கிகளை ஏமாற்றி
திருப்பி செலுத்தாமல் இருக்கும் ஏறக்குறைய
50,000 கோடிக்கு அதிகமான கறுப்பு பணத்தை மீட்பதற்கு மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்?
ஒரு சிறு துறும்பைக்கூட அவர் நகர்த்தவில்லை
3) வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஜெ வழக்கில் பொய்யான கணக்குப்பிழையில் விடுதலை பெற்றது சாமானிய குடிமகனுக்குகூட தெரியும்.
ஒரு பிரதமர் பொறுப்பில் உள்ளவர் நடுநிலை வகித்து இருக்கவேண்டும்.ஆனால் ஜெ விடுதலை பெற்றதற்கு வாழ்த்து வேறு தெரிவித்தார்.இவரா கறுப்பு பணம் பதுக்கியவர்களை பிடிப்பார் என்று நம்புகிறீர்கள்?
5) ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடன் வெளிநாட்டில் பதுக்கி
வைக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியகுடிமகனின் வங்கிகணக்கிலும் 15லட்சம் சேர்க்கப்படும் என்றார்.சந்தேகம் இருந்தால்
BJP ன் தேர்தல் அறிக்கையை படித்துப்பாருங்கள்.
ஒரு மாதத்தில் கறுப்பு பணத்தை மீட்பேன் என்று கூறிதாண் ஆட்சிக்கு வந்தார். எனக்கு தெரிந்து மோடி ஆட்சிக்கு வந்து 2வருடம் ஆகிறது. ஆனால் மோடிக்கு இன்னும் ஒரு மாதம் ஆகவில்லை போலும்.
PRESS MEET வைத்தால் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கனைகள் தொடுப்பார்கள் என்பதால்
ஆட்சிபொறுப்பேற்று இன்று வரை பத்திரிக்கையாளர்களை சந்திக்க பயந்து ஒளிந்துஓடும் முதல் இந்திய பிரதமர்.
6) கறுப்பு பண முதலைகளான மல்லையா ,
லலித்மோடி, கல்மாடி, etc. . .
போன்றோர் சிறையில் இல்லை. மாறாக அவர்கள் வெளிநாடுகளிலும் பண்ணைவீடுகளிலும் ஏகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை இண்டர்போல் RED ALERT மூலம் 48மணிநேரத்தில் இந்தியா கொண்டுவந்து
சிறையில் தள்ளலாம்.கறுப்புபண மீட்பர் என்று கூறிக்கொள்பவர் முதலில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்.
சங்கராச்சாரி, சல்மான்கான் , போன்ற நிரபராதியாக்கி பல கார்பரேட் சாமியார்களுக்கும், கம்பனிகளுக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து அரசு செலவில், கூசாமல் உலகம் சுற்றி வரும் மோசடி மன்னன் மோடியை நம்பி இன்று நடுத்தெருவில் நிற்கும் அப்பாவி மக்களே இன்னுமா இவர் நடிப்பை நம்புகிறீர்கள் ?
கண்டிப்பாக சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி
திருடர்களையும், கார்பரேட் முதலாளிகளையும்,
மோடிஜி தப்பிக்கவிடுவார் என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் இல்லை அன்று ஓட்டுபோட வரிசையில் நின்றீர்கள் இன்று ஓட்டு போட்டதற்காக வரிசையில் நிற்கின்றீர்கள் சிந்தியுங்கள் ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பா ???
பணமுதலைகள், பள்ளிக்கூட அதிபர்கள்
கார்ப்பரேட் களவானிகள் ஒருத்தனாவது உங்களுடன் பணம் மாற்ற வரிசையில் நிற்கிறானா அப்போ அவன் பணமெல்லாம் எங்கே போனது ?
யோசியுங்கள் எனதருமை சாமானிய மக்களே !
மோடியின் அடிமைகளுக்கு சமர்பனம்....சி.ப

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்