இலக்கு 60 இணைய இதழ்

 இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

1). கம்யூனிஸ்டுகள் மார்க்சியத்தை பயில வேண்டியது அவசியம் குறித்து - மாவோ

2). என்ன செய்ய வேண்டும் - லெனின். பாகம் 1.

3). பாசிசம் பற்றி டிமிட்ரோ

4). கம்யூனிஸ்ட்டுகள்-கம்யூனிஸ்ட் கட்சி ஓர் தேடல்

5). மூலதனம் என்றால் என்ன?

கண்ணை வேண்டுமென்றே மூடிக் கொள்ளாத யாரும் சோசலிச இயக்கத்தின் புதிய போக்கான விமர்சனப் போக்கு என்பது சந்தர்ப்பவாதத்தின் புதிய வெளிப்பாடுதான் என்று புரிந்து கொள்ள முடியும். நபர்களை பகட்டான சீருடைகளையும், தமக்குத் தாமே அவர்கள் கொடுத்துக் கொள்ளும் பெயர்களாலும் மதிப்பிடாமல் அவர்களது நடத்தையிலிருந்தும், உண்மையில் எதை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதிலிருந்தும் மதிப்பிட்டால் விமர்சன சுதந்திரம் என்பது சந்தர்ப்பவாதத்துக்கு சுதந்திரம் அளிப்பதுதான், சமூக ஜனநாயகத்தை சுதந்திரத்துக்கான ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதுதான், முதலாளித்துவ கருத்துக்களை, முதலாளித்துவ கூறுகளையும் சோசலிசத்துக்குள் கொண்டு வருவதுதான் என்று புரிந்து கொள்ள முடியும்.

சீனாவை பற்றியோ அனைத்தையும் புரிந்து கொள்ளவில்லை. இயக்கமானது வளர்ந்து கொண்டிருக்கிறது. புதிய விஷயங்கள் இன்னமும் தோன்ற வேண்டி உள்ளன. அவை முடிவற்ற நீரோட்டத்தில் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அவ்வியக்கத்தை அதன் முழுமையிலும் அதன் வளர்ச்சியிலும் பயில்வது என்பது நமது நிலையான கவனத்தை கோருகின்ற. மாபெரும் கடமை. இச்சிக்கல்களை தீவிரமாகவும் கவனமாகவும் பயில மறுப்பவர் எவரும் மார்க்சியவாதி அல்ல. சுய திருப்தி பயில்தலின் எதிரி. நாம் சுய திருப்தியிலிருந்து நம்மை விட்டொழிக்கின்றவரை, உண்மையில், எதுவொன்றையும் கற்க இயலாது.

நம்மை நோக்கிய நமது மனப்பான்மை “கற்பதில் சுய திருப்தியை அடையாததாகவும்” பிறரை நோக்கி கற்பிப்பதில் ஓய்வற்றதாகவும் இருந்திட வேண்டும். (மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுதி 2,பக்கம் 284, 285)

ஒவ்வொரு நாட்டிலும் சரி, சர்வதேசத்திலும் சரி பாட்டாளி வர்க்க இயக்கத்தின் சிறப்புத் தன்மைகள் என்ன என்பதையும் அதாவது பாட்டாளி வர்க்க இயக்கம் வளர்ந்துகொண்டிருக்கிறதா? அல்லது தேங்கிய நிலையில் இருக்கிறதா? அல்லது தேய்ந்துகொண்டிருக்கிறதா? என்பதையும், அது எந்தவகையான விதிக்குட்பட்டு இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பதையும், பாட்டாளி வர்க்க இயக்கத்தை எந்த திசைவழியில் திருப்பிவிடப்பட வேண்டும் என்பதையும், அவை அனைத்தும் பாட்டாளி வர்க்க இயக்கம் சந்தித்துவரும் நடைமுறைச் சிக்கல்களாகும், இந்த நடைமுறை சிக்கல்களை எவ்வாறு தீர்ப்பது? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது நமது முதன்மையான கடமை என்றார் மாவோ.

உதாரணமாக இந்தியாவில் பாட்டாளிவர்க்க இயக்கமானது தேய்ந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். பாட்டாளி வர்க்க அமைப்புகள் பின்பற்ற வேண்டிய மார்க்சிய ஆசான்களது கோட்பாடுகளை புறக்கணித்துவிட்டு பிற்போக்காளர்களின் கோட்பாடுகளையே பல அமைப்புகளும் பின்பற்றிக்கொண்டு இருக்கின்றனர். ஒருசிலர் மார்க்சிய ஆசான்களான மார்க்ஸ் ஸ்டாலின் போன்றவர்களே தவறானவர்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர். எதிர்ப்புரட்சிகர டிராட்ஸ்க்சியமே உண்மையான மார்க்சியம் என்று பிரச்சாரம் செய்து மக்களிடமும் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களிடமும் மார்க்சியத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்துகொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலர் மார்க்சிய ஆசான்களது போதனைகளையே யாரும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மக்களை மார்க்சிய அறிவற்ற மூடர்களாக மாற்றுவதற்கு பாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு மார்க்சியவாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களே பாட்டாளிவர்க்க இயக்கத்தை உழைக்கும் மக்களுக்கு எதிராக வழிநடத்திக்கொண்டு இருக்கின்ற சூழ்நிலைதான் தற்போது நிலவுகின்றது. இதனை முறியடித்து பாட்டாளிவர்க்க இயக்கத்தை மார்க்சிய வழியில் திருப்ப வேண்டியது நமது கடமையாகும். இந்தக் கடமையை நாம் நிறைவேற்ற வேண்டுமானால் பாட்டாளி வர்க்க அமைப்பிற்குள் ஆமை நுழைந்தது போல் நுழைந்துவிட்ட மார்க்சியத்துக்கு மாற்றான, மற்றும் எதிரான கருத்துக்களை எதிர்த்துப் போராடி அந்த பிற்போக்கு கருத்துக்களை முறியடித்து அதன் செல்வாக்கிலுள்ளவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும்,

தற்போது உலாவரும் பிற்போக்கு கருத்துக்களை அதன் அடிப்படைகளை மார்க்சிய ஆசான்கள் எப்போதே முறியடித்துவிட்டார்கள். உதாரணமாக சந்தர்ப்பவாத டிராட்ஸ்கியால் முன்வைக்கப்ப கருத்தான தொழிலாளர்கள் விவசாயிகளுடன் கூட்டு வைக்கக் கூடாது என்ற கருத்தை லெனின் விவசாயிகளிடம் கூட்டுவைத்து டிராட்ஸ்கியின் கருத்தை முறியடித்துவிட்டார். ஆகவே தற்போது நிலவும் தவறான கருத்துக்களை மார்க்சிய ஆசான்கள் எப்படி முறியடித்தார்கள் என்பதை நாம் பயின்று புரிந்துகொள்வதன் மூலம் தற்போதைய பிற்போக்கு கருத்தை நம்மால் முறியடிக்க முடியும்.

சமூக இயக்கத்தில் புதிய புதிய விசயங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். அந்த இயக்கத்தை மார்க்சிய வெளிச்சத்தில் நாம் தொடர்ந்து பயில வேண்டியது அவசியமாகும். இத்தகைய பயிலுதலுக்காக பாட்டாளிவர்க்க அமைப்பானது தேவையான கல்வி நிறுவனங்களை உருவாக்கி வளர்க்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே கட்சி உறுப்பினர்கள், புதிய விசயங்களைப் பற்றிய அறிவைப் பெறமுடியும். இவ்வாறு சமூகம் சந்திக்கும்சிக்கல்களை தீர்ப்பதற்கான அறிவை வளர்த்துக்க மறுப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் ஆகமாட்டார்கள் என்றார் மாவோ. இத்தகைய சிக்கல்களை தீர்ப்பதற்கான அறிவைப் பெறுவதற்கான நிறுவனத்தை உருவாக்கி செயல்படுத்துகின்ற கம்யூனிச அமைப்பை யாராவது, எங்காவது கண்டதுண்டா? எங்கும் காணமுடியவில்லை. இதுதான் இன்றைய பாட்டாளிவர்க்க இயக்கம் சந்தித்துக்கொண்டு இருக்கும் மிகப்பெரிய கொடுமையாகும். சமூகம் சந்திக்கும் சிக்கல்களை கட்சித் தலைவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையிலேயே இயக்கம் உள்ளது. மார்க்சியத்தை மக்கள் மறந்துகொண்டு இருக்கும் இழிவான நிலையிலேயே இயக்கம் உள்ளது.

ரஷ்யாவில் ஆரம்ப காலத்தில் பல கம்யூனிச குழுக்கள் இருந்தன. இந்தக்குழுக்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஒன்றுபட்ட புரட்சிகரமான கட்சியை உருவாக்க வேண்டியது அவசியம் என்று அன்றைய கம்யூனிச குழுக்களிலுள்ள பலரும் விரும்பினர். அதற்காக அவர்களுக்கு இடையே கருத்துப் போராட்டங்கள் நடந்தது. இத்தகைய போராட்டங்களின் போது லெனினது கருத்துக்களை என்னசெய்ய வேண்டும் நூல் ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்குவதற்கும், இஸ்கராவாதிகள் என்று சொல்லப்படும் லெனினை ஆதரிப்பவர்கள் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின்காங்கிரசில் வெற்றிபெற்றதற்கும் என்ன செய்ய வேண்டும் நூல் காரணமாக அமைந்தது.

பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்று பேசுபவர்கள் வாய்ச்சொல் வீரர்களே.

ஒரு பலமான புரட்சிகரமான கட்சி இருக்க வேண்டும். அந்தக் கட்சி பாசிசத்திற்கு எதிராக உழைக்கும் மக்களுடைய போராட்டத்தை மிகச் சரியான வழியில் தலைமை தாங்கி செல்வதாக இருக்க வேண்டும். ஒரு கட்சி பாசிசத்திற்கு முன் தொழிலாளர்களை படிப்படியாக முறையாக பின்வாங்கும் வழி கோரி பாசிஸ்ட் முதலாளி வர்க்கம், தனது நிலைகளை பலப்படுத்திக் கொள்வதற்கு அந்தக் கட்சி அனுமதிக்குமானால் அது தவிர்க்க முடியாமல் தொழிலாளர்களை படுதோல்விக்குதான் விட்டுச்செல்லும் என்றார் டிமிட்ரோ.

அதாவது பாசிசத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டுமானால் ஒரு பலமான கம்யூனிஸ்டுக் கட்சி வேண்டும். இந்தியாவில் அப்படி ஒரு பலமான கம்யூனிஸ்டுக்கட்சி இருக்கிறதா? இல்லை என்பதுதானே எதார்த்த உண்மை. இங்கே கம்யூனிஸ்டுக் கட்சி என்று சொல்லிக்கொண்டு இருக்கும் கட்சிகள் திருத்தல்வாத அல்லது கலைப்புவாத கட்சிகளாகவே உள்ளது.

இந்தக் கட்சிகளுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கும் குறைந்துகொண்டே இருக்கிறது. இந்தக் கட்சிகளும் ஆளும்வர்க்க கட்சிகளோடு கூட்டுசேர்ந்து ஆளும் வர்க்கங்களிடம் சரணடைந்துவிட்டது. புரட்சி பேசிய மார்க்சிய லெனினியவாதிகளும் சிறுசிறு குழக்களாகப் பிளவுண்டு சிதறி இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர்

தன்அகங்காரம் பிடித்த குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாதிகளாகவே உள்ளனர். இவ்வாறு கம்யூனிச அமைப்புகள் மிகவும் பலவீனமாக உள்ள நிலையில் இவர்களால் பாசிசத்திற்கு எதிராக மக்களைத் திரட்டமுடியுமா?, திரட்ட முடியும் என்றாலும் நம்பிக்கையோடு இவர்கள் மக்களை திரட்டுகிறார்களா? அதுவும் இல்லை. ஆகவே இங்கே பாசிசத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கான கம்யூனிச அமைப்பே இல்லாதபோது இங்கே எப்படி டிமிட்ரோ சொல்லுகின்ற பாசிசத்திற்கு எதிராக உழைக்கும் மக்களுடைய போராட்டத்திற்கு மிகச் சரியான வழியில் தலைமை தாங்கிச் செல்ல வேண்டும் என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லையே. இங்குள்ள இடதுசாரி அமைப்புகள் எல்லோரது நடவடிக்கையின் மூலம் இங்கே பாசிசம் தங்குதடையின்றி வளர்ந்துகொண்டிருப்பதைத்தானே நாம் பார்க்கிறோம். ஜிஎஸ்டி வரி, தனியார்மயக் கொள்கை விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரான சட்டம் போன்றவற்றை கொண்டுவந்து உழைக்கும் மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டு போவதைத்தானே பார்க்கிறோம். இந்த சூழலில் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு ஒரு பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கான நோக்கமும் முயற்சியிலும் ஈடுபடாத இவர்கள்தான் முதலாளித்துவவாதிகளான திமுகவோடும் காங்கிரசோடும் கூட்டு சேர்ந்து ஐக்கிய முன்னணி கட்டி பிழைப்பை நடத்துவதற்கான பிரச்சாரம் செய்யும் பிழைப்புவாதிகளாக வலம் வருகிறார்கள். இவர்களது பிழைப்புவாதத்தின் காரணமாகவே இங்கே பாசிசம் வளர்ந்துகொண்டு இருக்கிறது.

கம்யூனிசம் என்றால் என்ன?- கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும். என்று எங்கெல்ஸ் கம்யூனிசத்தின் கோட்பாடுகள் என்ற கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டிற்கு (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) எழுதியவையே. இங்கே நமது ஆசான்கள் கூறியவற்றையே நடைமுறை சாத்தியமாக்கிய லெனின் தன் நாட்டில் சிதறிக்கிடந்த சக்திகளை ஒன்றினைத்து ஒரு புரட்சிகர கட்சியை கட்டினார் புரட்சியை சாதித்தார். அதன் வழியை பின் தொடர்ந்து சீனா மற்றும் பல நாடுகளில் புரட்சி சாதிக்கப்பட்டது ஆனால் இங்கு ஏன் இந்த நிலை?

எங்களுடைய போதனை செயலுக்கு ஒரு வழிகாட்டியே தவிர வறட்டு சூத்திரம் அல்ல என்றார் எங்கெல்ஸ் தம்மையும் புகழ்மிக்க தமது நண்பரையும் குறிக்கும் வண்ணம் 'எங்களுடைய' என்றார். மார்க்சியத்தில் அடிக்கடி பலரும் மறந்து விடும் ஓர் அம்சத்தை குறிப்பிட தகுந்த வலிவுடனும் பொருள் நிறைவுடனும் இந்த மூல சிறப்புள்ள வாசகம் வலியுறுத்துகிறது -லெனின். மார்க்சியம் உயிர்ப்பண்புள்ள போதனையாகும்.

‘’முந்தைய உலகக் கண்ணோட்டம் மற்றும் முந்தைய வரலாற்றின் தர்க்க ரீதியான, வரலாற்று ரீதியான, அவசியமான தொடர்ச்சி என்ற வகையில் நமது கோட்பாடுகளை வளர்த்து ஒரு சில படைப்புகளில் வடிக்காத வரை உண்மையான தெளிவு மக்களுக்கு இருக்காது. பெரும்பான்மையினர் இருளில் குழம்பித் திரிவார்கள்’’ – என்று 1844 அக்டோபரில் எங்கெல்சிற்குக் கடிதம் எழுதினார் மார்க்ஸ்.

புரட்சிகர பாட்டாளி வர்க்கத்துக்கு வேண்டிய கட்டுப்பாட்டை போல் போல்ஷ்விக்கு களால் எப்படி நிறுவிக்கொள்ள முடிந்தது என்பதன் காரணங்கள் பற்றி இன்னும் அடிக்கடி ஆழ்ந்து பகுத்தராய்வும் செய்யப்படுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

1903 ஆம் ஆண்டு முதல் போல்ஷ்விக் அரசியல் கட்சியாக இருந்து வந்திருக்கிறது. சோவியத் சோசலிச பாட்டாளி வர்க்க புரட்சிக்கு எஃகுறுதி போன்ற கட்டுப்பாட்டை அதனால் எப்படி நிறுவ முடிந்தது ? அதனைப் பற்றி சற்று பார்ப்போம். 



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்