அரசும் புரட்சியும் லெனின் நூலை ஏன் படிக்க வேண்டும்?

 அரசு என்பது என்ன?

நாம் வாழும் வர்க்க சமூகத்தில் அரசின் பாத்திரம் என்ன?

நமக்கான அரசு ஆம் உழைக்கும் மக்களின் அரசானது எப்படி இருக்கும்?

இந்த கேள்விகளுக்கு விடைதேட நினைக்கும் ஒவ்வொருவரும் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் நூல் அவசியம் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஆக அரசென்பது என்ன என்பதனை நமது ஆசான் தெளிவுப்படுத்தி உள்ள பகுதியிலிருந்து அப்படியே

"அரசு பற்றிய பிரச்சினை தத்துவத்திலும் நடைமுறை அரசியலிலும் இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஏகபோக முதலாளித்துவமானது அரசு ஏகபோக முதலாளித்துவமாய் மாற்றப்படும் நிகழ்ச்சி போக்கை யுத்தம் அளவு கடந்த வேகமும் தீவிரமும் பெறச்செய்கிறது. அனைத்து வல்லமை கொண்ட முதலாளித்துவ கூட்டுக்களுடன் மேலும் மேலும் இணைந்து ஒன்றிவரும் அரசானது உழைப்பாளி மக்களை அசுரத்தனமாய் ஒடுக்குவது மேலும் மேலும் அசுரத்தனமாகி வருகிறது. முன்னேறிய நாடுகள் அவற்றின் உட்பகுதிகளை குறிப்பிடுகிறோம். தொழிலாளர்களுக்கு இராணுவ கடுங்காவல் சிறைக்கூடங்களாக மாறி வருகின்றன.

நீடிக்கும் யுத்தத்தின் முன்னென்றும் கண்டிராத கொடுமைகள் துயரங்கள் மக்களுடைய நிலை பொறுக்க முடியாதது ஆக்கி அவர்களுடைய சீற்றத்தை உக்கிரமடைக்க செய்கின்றன. உலக பாட்டாளி வர்க்க புரட்சி முற்றி வருவது தெளிவாகத் தெரிகிறது.

அரசு பற்றி எங்கெல்ஸ் கூறுவதாக 'அரசனது எவ்வகையிலும் வெளியில் இருந்து சமுதாயத்தின் மீது வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்ட சக்தி அல்ல. இதே போல அது எவ்வகையிலும் ஹேகல் வலியுறுத்தும் அறநெறி கருத்தின் எதார்த்த உருவம் அறிவின் பிம்பமும் யதார்த்தமும் அல்ல. மாறாக சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு வளர்ச்சி கட்டத்தில் விளைவே அரசு. இந்த சமுதாயம் தன்னுடன் தீராத முரண்பாட்டில் சிக்கிக் கொண்டு விட்டது. இணக்கம் காண முடியாத பகை சக்திகளாய் பிளவுண்டு விட்டது. இந்த பகைமை நிலையை அகற்ற திறனற்றதாய் ஆகிவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுகிறவன் விளைவே ஒரு அரசு. ஆனால் இந்த பகை சக்திகள் முரண்பட்டு மோதிக் கொள்ளும் பொருளாதார நலன்களை கொண்ட இந்த வர்க்கங்கள் தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு மோதலை தனித்து ஒழுங்கின் வரம்புக்குள் இருக்கக்கூடிய ஒரு சக்தி வெளிப்பார்வைக்கு சமுதாயத்துக்கு மேலானதாக தோன்றும் ஒரு சக்தி நிறுவுவது அவசியமாயிற்று.

வர்க்க பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளையும் வெளியீடு அரசு. எங்கே, எப்பொழுது எந்த அளவுக்கு வர்க்க பகைமைகள் புறநிலை காரணங்களால் இணக்கம் காண முடியாதவை ஆகின்றனவோ அங்கே அப்பொழுது அந்த அளவுக்கு அரசு உதித்து எழுகிறது. எதிர்மறையில் கூறும் இடத்தில் அரசு ஒன்று இருப்பதானது வர்க்க பகைமைகள் இணக்கம் காண முடியாத வாய் இருத்தலை நிரூபிக்கிறது."

அரசும் புரட்சியும் நூலின் பக்கம் 11 வரை சில சுருக்கமாக பார்த்தோம். இனி அதே நூல் பக்கம் 37-39 லிருந்து அப்படியே...

"முதலாளித்து ஆதிக்கத்தை வீழ்த்த வல்லது பாட்டாளி வர்க்கம் ஒன்றுதான். இந்த ஒரு வர்க்கம் மட்டும்தான் தனது வாழ்க்கையின் பொருளாதார நிலைமைகளால் இந்த பணிக்கு தயார் செய்யப்படுகிறது. இந்தப் பணியை செய்து முடிப்பதற்குரிய சாத்தியப்படும் சக்தியும் அளிக்கப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் விவசாயிகளையும் எல்லா குட்டி முதலாளித்துவப் பகுதிகளையும் சிதைத்து சின்னாபின்னம் ஆக்குகிறது. ஆனால் அது பாட்டாளி வர்க்கத்தை ஒருசேர இணைத்து ஒன்று படுத்துகிறது. நிறுவன வழியில் ஒழுங்கமைக்க செய்கிறது. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் பெருவீத பொருளுற்பத்தியில் அது ஆற்றும் பொருளாதாரப் பாத்திரம் காரணமாய் உழைப்பாளர்களுக்கும் சுரண்டப்படும் பாத்திரம் காரணமாக உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோமான மக்கள் எல்லோருக்கும் தலைவனாக வல்லது. ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்கள் அனைவரையும் முதலாளித்துவ வர்க்கம் ஒடுக்கி நசுக்கி போதிலும் பாட்டாளி வர்க்கத்தினரை காட்டிலும் குறைவாக அல்ல கூட பல சந்தர்ப்பங்களில் அதிகமாகவே ஒடுக்கி நசுக்கி போதிலும் இவர்கள் தமது விடுதலைக்காக சுயேட்சையாக போராடும் வல்லமை இல்லாதவர்கள்.

 அரசு சோசலிசப் புரட்சி இவற்றின் பிரச்சனையில் மார்க்ஸ் வர்க்கப் போராட்டத் தத்துவத்தை பிரயோகித்ததும் தவிர்க்க முடியாதபடி அது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தின், அதன் சர்வாதிகாரத்தின் அதாவது யாருடன் பகிர்ந்து கொள்ளாமல், நேரடியாக மக்களுடைய ஆயுத பலத்தை ஆதாரமாய் கொண்ட ஆட்சி அதிகாரத்தின் அங்கீகாரத்துக்கு இட்டுச் சென்றது. பாட்டாளி வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் தவிர்க்க முடியாத ஆவேசமான எதிர்ப்பை நசுக்கவும் உழைப்பாளர்களும் சுரண்டப்படுவோருமான மக்கள் அனைவரையும் புதிய பொருளாதார அமைப்புக்காக ஒழுங்கமைக்கவும் வல்லமை படைத்த ஆளும் வர்க்கமாக மாறுவதனால் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த முடியும்.

சுரண்டலாளர்களுடைய எதிர்ப்பை நசுக்குவதற்கும் சோசலிசப் பொருளாதாரத்தை "ஒழுங்கமைப்பதில்" மாபெரும் திரளான மக்களுக்கு விவசாயிகளும், குட்டி முதலாளித்து வர்க்கத்தினருக்கும், அரைகுறை பாட்டாளி வர்க்கத்தினருமானோருக்கும் தலைமை தாங்குவதற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசு அதிகாரம் பலத்தின் மத்தியத்துவ நிறுவனம் ஒழுங்கமைப்பு பலாத்காரத்தின் நிறுவன ஒழுங்கமைப்பு தேவைப்படுகிறது.

 மார்சியமானது தொழிலாளர் கட்சிக்கு போதமளிப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணி படைக்கு போதமளிக்கிறது. ஆட்சி அதிகாரம் ஏற்று அனைத்து மக்களுக்கும் தலைமை தாங்கி சோசலிசத்துக்கு அழைத்துச் செல்ல புதிய அமைப்பை நெறிப்படுத்தி ஒழுங்கமைக்க உழைப்பாளர்களுக்கும் சுரண்டப்படுவோருமான மக்கள் அனைவருக்கும் முதலாளித்துவ வர்க்கம் இல்லாமலும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்தும் தமது சமுதாய வாழ்வினை ஒழுங்கமைப்புக் கொள்வதில் அவர்களுக்கு போதகனாக வழிகாட்டியாக தலைவனாக செயலாற்ற வல்லமை படைத்த இந்த முன்னணி படைக்கு அது போதமளிக்கிறது... தற்போது ஆதிக்கதிலுள்ள சந்தர்ப்பவாதமானது இதற்கு மாறாக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை உயர்ந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகளாகய்ச் செயல்படுவதற்கு- வெகுஜனங்களுடன் தொடர்பு இழந்து, முதலாளித்துவத்தில் எப்படியோ ஓரளவு நல்லபடியாகவே இருந்து, எச்சில் துண்டுகாக தமது பிறப்புரிமையையே விற்கும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மக்களது புரட்சிகர தலைவர்களாய்த் தாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை துறந்துவிடும் இத்தகைய பிரதிநிதிகளாய் செயல்படுவதற்கு- பயிற்சி வைக்கப்படுகிறது.

 "அரசு அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம்" பற்றிய மார்க்சின் தத்துவம் வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்துக்குரிய புரட்சிகர பாத்திரம் குறித்த அவருடைய போதனை அனைத்தும் இரண்டற கலந்ததாய் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம்.

 ஆனால் பாட்டாளி  வர்க்கத்திற்கு, முதலாளித்துவதிற்கு எதிரான பலாத்கரத்தின் ஒழுங்குமைக்குரிய தனி வகை வடிவமான அரசு தேவைப்படுவதால் பின்வரும் முடிவுகள் தானாகவே எழுகிறது: முதலாளித்துவ வர்க்கத்தினர் தமக்கென உருவாக்கிக் கொண்ட அரசுப் பொறியமைவை முதலில் ஒழித்திடாமல் தகர் தெரியாமல் இத்தகைய ஒழுங்கமப்பினை உருவாக்க முடியுமென நினைக்கலாமா? கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நேரடியாக இந்த முடிவுக்கே இட்டு செல்கிறது எங்கிறார் லெனின் தனது அரசும் புரட்சியும் நூலில் (பக்கம் 37-39).







No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்