மார்க்சியவாதிகளைப் பற்றி எங்கெல்ஸ் இவ்வாறு சொல்கிறார், "மார்க்சின் மேற்கோள்களை எடுத்து அப்படியே கையாள்பர் மார்க்சியவாதி அல்ல, அந்த இடத்தில் மார்க்ஸ் இருந்தால் எப்படி சிந்திப்பாரோ அவ்வாறு சிந்திப்பவரே மார்க்சியவாதி" என்பார்.
மார்க்ஸ் உலகில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ரெடிமேடாக பதிலை விட்டுச் செல்லவில்லை, ஒருவேளை அவ்வாறு விட்டுச்சென்றிந்தால் அது மார்க்சியமே ஆகாது.
மார்க்ஸ் கற்றுக்கொடுத்தது இந்த சமூகம் எவ்வாறு இயங்குகிறது, அதன் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்யும் முறையையும், அதன் அடிப்படையில் ஆய்வு செய்து (மூலதனம் நூலில் முதலாளித்துவ பொருளுற்பத்தி இயங்கும் முறை) நமக்கு வழிகாட்டியதும்தான்....
அவர் ஆய்வு செய்வதற்கு "இயங்கியல் பொருள்முதல்வாதம்" என்கிற தத்துவத்தையே அடிப்படையாக கொண்டார்.
மேலும் மார்க்சியத்திற்கு முன்பு சமூகத்தை யாரும் சரியாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. மார்க்சியத்திற்கு பிறகே அது 100% சரியானதாக அறிவியல் பூர்வாக உள்ளது. பிரெஞ்சு புரட்சி செய்தவர்கள்கூட எந்த சமூகத்தை கட்டமைக்கப் போகிறோம் என்று புரிந்துக்கொண்டு செய்யவில்லை, தன்னெழுச்சியாக செயல்பட்டனர். முதல் தொழிலாளர் புரட்சியான 1871 பாரிஸ் கம்யூன்கூட 'உணர்வுபூர்வமாக' புரிந்துக்கொண்டு செய்ததல்ல.
ஆனால் ரஷ்ய சோசலிச புரட்சியோ, சீனப் புரட்சியோ எந்த சமூகத்தை கட்டமைக்கப் போகிறோம் என்பதை திட்டமிட்டு 'உணர்வுபூர்வமாக' நடத்திய புரட்சியாகும்.
மார்க்சியம் வெறும் தத்துவமாக இல்லாமல் நடைமுறையில் பிரயோகித்து சரிபார்க்கப்பட்டது. மார்க்சியத்திற்கு முன்பும் பின்பும் வேரொரு தத்துவம் இத்தகைய அறிவியல் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது.
சரி இனி விவாதத்திற்கு செல்வோம்...
19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பாவில் எர்னஸ்ட் மாக் பெயரால் மாக்கிசயம் எனவும், “அனுபவவாத விமர்சனம்“ என்றும் அழைக்கப்பட்ட தத்துவம் பரவியிருந்தது. எர்னஸ்ட் மாக், அவேனரியஸ் உள்ளிட்ட இந்த தத்துவவாதிகள் தாங்களது தத்துவமே ஒரே அறிவியல் தத்துவம் என்று சொல்லிக் கொண்டனர்.இதற்கு அவர்கள் பல வாதங்களை முன்வைத்தனர்.
தத்துவம்,கருத்துமுதல்வாதம்,பொருள்முதல்வாதம் என்ற இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு பக்கமாக சாய்ந்திருக்கும் பிரிந்திருக்கும் நிலையை தாங்கள் சரிசெய்து செழுமையாக்கி, ”அனுபவவாத விமர்சனம்“ தத்துவத்தைப் படைத்திருப்பதாக பெரிதாக ஆரவாரம் செய்து நூல்களை வெளியிட்டனர்.
அன்றைய சமுக ஜனநாயக இயக்கத்தில் இருந்தமார்க்சியர்கள்பலரும் ,”அனுபவவாத விமர்சனம்“ என்பது அறிவியல் உலகின் ஒரு புதிய சிந்தனையாக பார்க்க முற்பட்டனர்.சிலர் மார்க்சிய
தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு மாற்றான தத்துவம் என்று நினைக்கும் அளவிற்கு கூட சென்றனர். இந்த கூட்டத்தோடு சில முக்கியமான அறிவியலாளர்களும் சேர்ந்து கொண்டனர்.
அன்று சோசலிஸ்ட் கட்சிகளைக் கொண்ட சர்வதேச அகிலம் இயங்கி வந்தது.அது பிரெடரிக் எங்கெல்சின் அரும்பெரும் பணியால் உருவானது.ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு சந்தர்ப்பவாதிகள் நிறைந்த அமைப்பாக மாறிப் போனது.அகிலத்தின் தலைவராக இருந்த கார்ல் காவுத்ஸ்கி ஜெர்மானிய சமுக ஜனநாயகத்தின் செல்வாக்கான தலைவராகவும் விளங்கியவர்.தத்துவ உலகில் மார்க்சியத்தை பின்னுக்குத் தள்ளுகிறவகையில்பரவிக்கொண்டிருக்கும் மாக்கிசத்திற்கு பதிலடி கொடுக்க சர்வதேச அகிலம் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் காவுத்ஸ்கி மார்க்சிய தத்துவம், எர்னஸ்ட்மாக்கின் தத்துவத்தோடு எந்த வகையிலும் முரண்படவில்லை என்று அறிவித்தார். இது மேலும் பல ஐரோப்பிய சோஷலிச கட்சிகளிடையே அனுபவாத விமர்சனத் தத்துவம் பரவிட வழிவகுத்தது.
ஐரோப்பாவில் இந்த சூழல் நிலவியபோது ரஷ்யாவிலும்கருத்தியல்போராட்டத்திற்கான தேவை அதிகரித்தது.1905-07-ஆம் ஆண்டுகளில் ஜாராட்சிக்கு எதிராக எழுந்த புரட்சிகடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது. புரட்சி தோல்வியில் முடிந்ததையொட்டி ஜார் அரசாங்கம் புரட்சியாளர்களை வேட்டையாடியது.பல்லாயிரக்கணக்கானோர் தூக்கிலடப்பட்டனர்.
ரஷ்ய அறிவுஜீவிகள் மத்தியில் மார்க்சியம்மீதும்,இயக்கவியல்,வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் மீதும் நம்பிக்கை குறையத் தொடங்கியது.சமூகப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடவுளை நாடும் போக்கு அதிகரிக்கத் துவங்கியது.”கடவுள்நாடுவோர்”எனும்பெயரில் கடவுள் பிரசாரம் செய்யப்பட்டு கிறித்துவத்தின் மீது புதிய ஆர்வம் தூண்டப்பட்டது.எல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்யகம்யுனிஸ்ட்கட்சியான போல்ஷ்விக் கட்சியில் இருந்த சிலர் இந்தக் கருத்துக்களுக்கு இரையானதுதான் பெரும் ஆபத்தாக உருவெடுத்தது. போக்தானாவ், பசாராவ், லூனாசார்ஸ்கி போன்றோர் மார்க்சியத்தையும் எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தையும் இணைத்துப் பேச முற்பட்டனர்.மார்க்சியத்தைவளர்க்கிறோம் என்ற பெயரில் இது நடந்தது.
ஆக, புரட்சிகர கட்சியின் தத்துவ அடித்தளத்தை வேரோடு சாய்த்திடும் வேலை நடந்து வந்தது.இந்த நிலையை லெனின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாரா?மார்க்சியத்தின் மீதான தாக்குதல்களை முறியடித்து, மார்க்சியத்தை பாதுகாத்திடும் கருத்துப் போரில் இறங்கினார். அதன் விளைவாகவே “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” நூல் பிறப்பெடுத்தது.
பொருளே முதன்மையானது…“பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற தலைப்பிலேயே தனது முக்கிய குறிக்கோளைலெனின்வெளிப்படுத்துகிறார். ஆழ்ந்து நோக்கினால் இது புலப்படும்.
தத்துவத்தில்பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என இரண்டு பிரிவுகள்தான் உண்டு.எந்த பெயர்களில் எந்த தத்துவம் எழுந்தாலும் இந்த இரண்டுக்குள் தான் அடக்கம். எனவே ஒருபுறம் பொருள் முதல்வாதம் எனில்மற்றொருபுறம் “அனுபவவாத விமர்சனம்”என்ற பெயர் கொண்டாலும் அது கருத்துமுதல் வாதம்தான்.ஆனால்,அனுபவவாதவிமர்சன தத்துவஆசிரியர்கள்தங்களைகருத்து முதல்வாதிகள்என்றுஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், அவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பழைய கருத்துமுதல்வாதமே என்று லெனின் நூலில் ஆணித்தரமாக நிறுவுகிறார்.புலனறிவு,பொருளின் இருப்பு, அறிவு போன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்னைகளில் மார்க்சியத்தின்பார்வையையும் மாக்கியவாதிகள் விமர்சித்துள்ளனர். ஒவ்வொரு கருத்தையும் அலசி ஆராய்ந்து தகர்க்கின்றார் லெனின்.
அனுபவவாதவிமர்சனதத்துவ ஆசிரியர்கள் தத்துவத்தின் இரு பிரிவுகளில் உள்ள குறைகளை நீக்கி ஒரு புதிய தத்துவ முறையைபடைப்பதாக கூறிக்கொண்டனர். இந்தக் கூற்றினைத் தகர்த்து அவர்களின் புதிய முறை என்பது பழைய 17௦௦-ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் பெர்க்லியின் கருத்துமுதல்வாதம்தான் என்று லெனின் நிறுவுகிறார்.பெர்க்லியின் வாதங்களும், முந்தைய கருத்துமுதல்வாதிகளின் கருத்துக்களும் மாக், அவனேரியஸ் போன்றோர்களின் கருத்துக்களோடு எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை லெனின் அம்பலப்படுத்துகிறார்.(இங்கேயும் மாக்கியர்களின் அதே பணியைதான் திறந்தநிலை மார்க்சியம் பேசுவோர் செய்த்துள்ளனர் என்று தெளிவாக கூறமுடியும்).
தத்துவத்தில் இரண்டு வேறுபட்ட நிலைகளான பொருளா,கருத்தா என்ற முகாம்களில் நான் எதிலும் சாராதவர் என்று சொல்லி வருகின்றார், அனுபவாத விமர்சகர்,வித்தியாசமானநிலைஎன்னுடையது என்று உள்ளே புகுந்து வாதிடுகிறார். புலன் உணர்வுகளின் தொகுதியே பொருள் என்று பேசுகின்றார் அவர். புதிய பார்வை என்ற பெயரால் மாக் புகுத்துகிற கருத்தை அம்பலப்படுத்துகிறார்லெனின் .கருத்துதான்அடிப்படை பொருளின் இருப்பை கருத்தே நிர்ணயிக்கிறது எனும்பழைய தத்துவத்தைத்தான் “புலன் உணர்வுகளின் தொகுதி”என்று மாக் புது பெயர் சூட்டி அழைகின்றார்.
பொருள் மனிதனின் புலன் உணர்வில் பிரதிபலிக்கிறது. பிறகு அது மனித மூளையால் பெறப்பட்டு பொருள் பற்றிய அறிவு உருவாகிறது. உதாரணமாக,பச்சை நிறம் கொண்ட திராட்சையை பார்க்கும் ஒருவர் அதன் நிறத்தை தனது புலன் உறுப்பினால் (கண்பார்வை) புலன் உணர்வு பெறுகின்றார்..அந்த புலன் உணர்வு மூளைக்கு அனுப்பப்பட்டு அந்தப் பொருள் பச்சை நிறம் கொண்ட திராட்சை என்று அறிதலுக்கு வருகின்றார்.
பொருளின் கூறுகள் மனிதரின் புலன் உணர்வுகளோடு கலந்து வினையாற்றும் போதுதான் புலனறிவு ஏற்பட்டு அறிவு பெறும் நிகழ்வு நடப்பதை லெனின் விளக்குகிறார். பச்சை நிறம் கொண்ட திராட்சையின்நிறம்எப்படி உணரப்படுகிறது? ஒளி அலைகள் கண்ணின் கருவிழிகளில் பட்டு, அந்த உணர்வுகள் மூளையில் பதிகின்றன.அதன் விளைவாக பச்சை நிறம் என்ற புலன் அறிவும்,பிறகு பொருளின் (பச்சை நிறம் கொண்ட திராட்சை) முழுத்தன்மை சார்ந்த அறிவும் தோன்றுகிறது.இதில் பொருள் மட்டுமல்ல, ஒளி அலைகளும் பொருளாகவே லெனின் காண்கின்றார்.நம்மைச் சுற்றியுள்ள, வெளியுலகம்அனைத்துமே பொருட்களால் ஆனது: அனுபவவாத விமர்சகர்கள் பொருள் அல்லாதவைகளின் இருப்பு பற்றி பேசுவதைலெனின் நிராகரிக்கிறார்.இதனை புலனுணர்ச்சிகளின் தொகுதி என்பது போன்ற எந்தப் பெயர்களை அவர்கள் கொடுத்தாலும் அது உண்மையல்ல. எனவே பொருள், அதன் தன்மைகள் அனைத்தும் மனிதமனதிற்கு அப்பாற்பட்டு சுயேச்சையான இருப்பு கொண்டவை. இதுவேமார்க்சியஇயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை என்கிறார் லெனின். இதுவே உலகை சரியாக அறிந்து கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் உதவிடும்.
அருவமான அடையாளம்…
அனுபவவாதவிமர்சகர்கள்பொருளை “அருவமானஅடையாளம்”என்றுவரையறுக்கின்றனர். இந்த சொல்லாடலைப் பயன்படுத்தி குழப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர்.“அருவமானஅடையாளம் ”என்றால் நிலையான புலன் உணர்வுகளின் தொகுதிதான் உண்மையாக இருக்கிறது; பொருள் அல்ல என்பது அவர்களது வாதம். இது அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறது? பொருள் என்பதே மனித உணர்வில் தோன்றி உருவாகும் கருத்தாக்கம் என்பதுதான்அனுபவவாதிகளின் உண்மையானநிலை என்று வெளிப்படுத்திய லெனின், அதனால் அவர்கள் கருத்துமுதல்வாதத்தில்தான் கரைந்துபோகிறார்கள்என்றுஎடுத்துரைக்கின்றார்.பொருள், புலனுணர்வு, அறிவு ஆகியவற்றில் புலன் உணர்வுகளை முதன்மையாக அடிப்படையாக பார்ப்பது கருத்துமுதல்வாதம். புலன் உணர்வுகளிருந்துபெறப்படும் எண்ணங்கள் மேலும் செழுமைப் படுத்தப்பட்டு அறிவு உண்டாகிறது என்பது கருத்துமுதல்வாதத்தின்நிலை. ஆனால், புலன் உணர்வுக்கும் அதையொட்டி ஏற்படும் அறிவுக்கும் அடிப்படை பொருள்தான் என்பது பொருள்முதல்வாதம். தொடரும்.......
No comments:
Post a Comment