பாரதியை இகழ்வோர்

 இன்று மகாகவி பாரதியார் பிறந்தநாள்.

---------------------------------------------------

சில காலமாகவே பாரதி ஒருசனாதனவாதி என்றும், பிராமண மேட்டிமையாளனென்றும் பழைய, அடிப்படை யில்லாத அர்ப்ப வாதங்கள் மேலோங்கியபடி உள்ளன. பாரதி குறித்து எதிர்மறையாக ஆய்வுசெய்தவர்களில் ஒருவரான

வே.மதிமாறன் பாரதியை வையும் விதம் பாருங்கள்...
“பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக,ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது "
"...ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான்,கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது."
எனக்கு என்ன வேதனை என்றால் வர்க்கப் புரட்சியென்றும், பொருள் முதல் வாதம் என்றும், வாய்கிழிய பேசும் சில சிவப்புகளும் இந்த மகுடிகளுக்கு பாம்பாவதுதான்.
ஒரு படைப்பாளியை விமர்சிக்கும் எந்தவிதமான அளவுகோளையும் கண்டுகொள்ளாமல் இவர்கள் வைக்கும் விமர்சனங்களை மக்கள் மன்றத்தில் முறியடிக்கவேண்டிய கடமை ஒவ்வொரு ஜனநாயக சக்திகளுக்கும் இருக்கிறது.
"பாரதிய ஜனதா பார்ட்டி" யாகட்டும் அல்லது வாலாசா வல்லவனின் "திராவிடஇயக்கமும் பாரதியு"மாகட்டும் இன்னும் மருதையனோ,வெற்றிமணியோ யாராக இருக்கட்டும். எல்லா குப்பைகளும் ஒரே மாவைத்தான் அறைக்கின்றன.
குப்பைகளென்று நான் சொல்வதால் யாரும் முகம் சுளிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் பாரதிதொடர்பான ஆய்வுத்தடம் மிக நீண்டது. குறிப்பாக
பொருள்முதல்வாத அடிப்படையில் கைலாசபதி தொடங்கி கோ.கேசவன், தொ.மு.சி, ஜீவா விலிருந்து அன்மைக்காலம் வரை ஏராளமான நடுநிலை ஆய்வுகள் வந்தபடி உள்ளன. இவற்றையல்லாம் 'பேராசியர்களின் புராணம்' என ஒற்றை வரியில் மறுத்து அவற்றை மூடிமறைத்து இவர்கள் எழுதும் இத்தகு நூல்களை நான் வேறெப்படி வகைபடுத்துவது என தெரியவில்லை.
தொ.மு.சி பார்ப்பது போல பாரதியை நாம் கம்யூனிஸ்டாக பார்க்கவில்லை. அப்படி பார்க்கவேண்டிய அவசியமும் நமக்கு இல்லை. அவ்வாறு மிகைபடுத்தினால் கேசவன் சொல்வதுபோல 'அவனின் ஆளுமையை நாம் பழித்தவராவோம்'. ஆனால் அவனை ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பாளனாக நாம் பார்க்க முடியும். அன்றைய சமூகத்தில் நிலவிய பிரதான முரண்பாடான ஏகாதிபத்தியத்துக்கும் மக்களுக்குமான முரண்பாட்டை எதிர்த்த பாரதியை கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பதில் என்ன தவறு நேர்ந்துவிடும் எனத்தெரியவில்லை.
பாரதி வருணக்கோட்பாட்டில் பற்றுள்ளவன் எனக் கூறுவதன் மூலம் அவனின் சகல சாதகங்களும் புதைக்கப்படுகின்றன.
பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு பற்றி குறிப்பிடும்போது பின்னால் அவன் பேரரசுக்கு மனு எழுதியது குறித்தும், ஜாலியன் வாலாபாக் சம்பவம் தொடர்பாக ஏதும் எழுதாமல் போனது குறித்தும் எழுதி நமைப் பார்த்து சிரிக்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
உண்மைதான்.... பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு தொய்வுநேர்ந்தது உண்மைதான். ஆனால் அது நபர்சார்ந்த தொய்வல்ல அது இயக்கம் சார்ந்த தொய்வு. அரவிந்தர் ஆசிரமம் அமைத்தார், சிவா மனு எழுதிக்கொடுத்தார், வ.உ.சி சாந்தி மார்க்கத்தில் லயித்தார் ...... ஒரு தேசிய முதலாளித்துவ வர்க்கத்தை தலைமையாகக் கொண்ட போராட்ட இயக்கத்துக்கு எத்தகு நிலைவருமோ அதுதான் பாரதியின் இயக்கத்துக்கும் வந்தது.
இந்த மதிமாறன் உள்ளிட்ட ஆய்வாளர்களின் நோக்கம் நமக்கு புரியாத ஒன்றல்ல. பார்ப்பனர்கள் யாரும் ஜனநாயக சக்தியாக இருக்கமுடியாது என்ற இவர்களின் பிழைப்புவாதமும், ஆளும்வர்க்க அடிவருடி மனோபாவமும் இவர்களை இப்படியெல்லாம் பிதற்ற வைக்கிறது. அதுவும் தற்போதைய சூழலில் குறிப்பாக ஏகாதிபத்தியத்துக்கும், மக்களுக்குமான முரண்பாடு கூர்மையடையும் இந்த வேளையில் இவர்களின் செயல்பாடு இன்னும் துரிதமாகின்றது.
தோழர்களே.........
உண்மையும் விமர்சன நேர்மையும் இல்லாத இடங்களில் நம்மால் விவாதிக்க முடியாது. அப்படி விவாதித்தாலும் அதில் எந்த வித தீர்வும் ஏற்பட்டு விடாது. இவர்களின் அவதூறுகளுக்கு நாம் மக்கள் மன்றத்தில் பதில் கொடுப்போம்
கடைசியாக...
நமது 'மாபெரும் கலை இலக்கிய விமர்சகர்' திருவாளர் வே.மதிமாறனின் புகழ்பெற்ற படைப்பான பா.பார்ட்டியில் ஒரு அற்புதத்தை பாரதி சனாதனவாதி என்பதற்கு ஆதாரம் காட்டியிருக்கிறார்
...
சிங்கமராட்டியர் தம் கவிதைகொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
.....
என்ற வரிகளை எடுத்துக்கொண்டு சிங்கமராட்டியம் என்பது திலகர்பிறந்ததால்......என கேலிசெய்து விட்டு தொடர்கிறார்......
வெறும் கவிதைகளை வாங்கிவைத்துக்கொண்டு விலைமதிப்பில்லா நமது யானைத் தந்தங்களை கொடுக்கும் ஓரவஞ்சனை தேசியம் பாரதியினுடையதென கைகொட்டி சிரிக்கிறார்
கொடுமையே......... சமுக மாற்றத்துக்கான உந்துசக்தியான கவிதைகளை கேவலம் யானைத்தந்தங்ளோடா ஒப்பிடுவது?
வாழ்க உமது திறனாய்வு
சரி உங்களின் பார்வையில் எடுத்துக்கொண்டாலும்
இன்னொரு வரி!?
கங்கை நதிப்புறத்து கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்
ஓ.... ஒருவேளை கங்கை நதிப்புறங்களில் இருந்த பெரு நிலவுடைமையாளர்கள் பிராமணர்கள் என்பதை பாரதி மறந்து விட்டானோ!?
........................
போங்கையா நீங்களும் உங்க ஆய்வும் .
மடியா புகழ்கொண்ட மகாகவி வாழ்க ...!வாழ்க...!!
பாவெல் தருமபுரி அவர்களின் முகநூல் பகுதிய்லிருந்து....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்