மனிதனின் ஆரம்பகாலம்
மனிதனின் வரலாறு எங்கிருந்து தொடங்கியது எவ்வாறு தோற்றுவிக் கப்பட்டது என்பதற்கு முன், இவ்வண்டங்களையும், அதில் அடங்கிய பால்வெளி மண்டலம், சூரியக் குடும்பங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், மலைமுகடுகள், மாகடல்கள், ஆறுகள், காடுகள், நில அமைப்புகள் பற்றி அறிவதென்பது மிக அவசியமானது என்பதை உணர முடிகிறது.
இன்று நம்மிடையே உள்ள பல்வேறு புரிதலை சரிபடுத்த ஓர் தேடலே இந்த கட்டுரை.
டார்வினின் கோட்பாடான, குரங்கினத்தின் மூதாதயர் வழியில் மனிதன் தோன்றினான் என்பதிற்கான சான்றுகளும், ஆதிபொது உடமை சமூகம் மெல்ல சிதைந்து.
உபரியான விளைபொருள் உற்பத்தி செய்யும் ஆரம்ப காலத்தில் தாய்வழி சமூகம் தந்தை வழிசமூகமாகமாறி…. மனித சமுதாயம் பல குழுக்களாக பிரிந்து வலிமை மிக்கவன் குழு தலைவராக உயர்ந்து பின்பு உணவு உற்பத்தி மற்றும் வேட்டை, மேய்ச்சல், நில உரிமை போன்ற போராட்டத்தில் பல இனகுழுக்களுக்கும் ஏற்பட்ட போர்கள்,சிற்றரசு, பேரரசு உருவான விதத்தையும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும் ….
மதங்கள் எப்போதும் அறிவியல் கண்டு பிடிப்புகள் மற்றும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க பட்ட அனைத்து உண்மைகளையும் எதிர்த்தே வந்துள்ளது. அது சாக்ரடீஸ் பிலட்டோ முதற்கொண்டு தற்கால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரை அனைவரின் ஆதார பூர்வ நிரூபனங்களை மறுத்து இந்த உலகம்,பால்வெளி அண்டம் உட்பட பிரபஞ்சம் முழுவதும் கடவுள் என்ற ஒரு தனிப்பட்ட நபரால் உருவாக்கப்பட்டது என்று இவ்வுலகில் மனிதனால்உருவாக்கப்பட்டஅனைத்து மதங்களும் அவற்றின் தலைவர்களும் மக்களை நம்ப வைத்து பலநூறு ஆண்டுகளாக மனித சமுதாயத்தை மூடநம்பிக்கையில் ஆழ்த்தியுள்ளது …...
மெத்த படித்த அறிவியல் புலமை உள்ள நபர்களே மதத் தலைவர்கள் சொல்லும் புனைவு கதைகள்,சடங்கு சம்பிரதாயம்,மந்திரம் தந்திரம் ஆகியஅனைத்தும் நம்பும் போது படிப்பறிவில்லாத எளிய மக்கள் நிலை இன்னும் கவலைக்குரிய விடயமாகும். ஆக ஆழமாக நமது சமூகம் பற்றி கற்றறிவோம்.
புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், மனிதனின் எண்ணங்களில் எழும் பெரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவுவதாயிருக்கிறது; சமூக, மத, கல்வி சம்பந்தமான விடயங்களில் நமக்குள்ள நிலைபாடுகளை அது மாற்றுகிறது. ஆக நமது தேடுதலான சமூகம் பற்றிய அன்றிலிருந்து இன்றுவரை தோன்றியதிலிருந்து அதன் போக்குகள் சமூக வளர்ச்சி போக்கை புரிந்துக் கொள்வதோடு, இச்சமூகத்தில் வளர்ச்சிக்கும்எல்லாமுன்னேற்றதிற்கும் தடையா உள்ள அதனை களைந்தெறிய வழிவகைபற்றியும் தேட முயலுவோம்.
பூமியின் வரலாறு:-
உலகம் ஓர் எரியும் பந்தாக கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்தது. அக்காலத்தில் பூமி உள்ளிருந்து பல துண்டுகள் வெடித்து மேலே வந்து உலகத்தில் வெப்பத்தை மேலும் அதிகரிக்க செய்தது இவ்வாறு மேலே வரும் துண்டுகள் மலைகளாயின. இவ்வாறு பூமியின் வரலாறை தேடும் நாம் மனித குல வரலாறு என்பது மிக அருகாமையில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சூரியமண்டலத்தில் பூமியானது 700 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாக இருந்தாலும் பூமியின் உருவாக்கம் என்பது சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தீகோளமான சூரிய மண்டலத்தில் பல்வேறு இயற்கை சூழல்கள் அதில் குறிப்பாக தொடர் மழை மீண்டும் நீர் ஆவியாக மாறி மேகக்கூட்டதிற்கு சென்று பெருமழை இடையராது பெய்த மழையால் பூமி குளிர்ந்தது,நீர்நிலைகள் பெருகின பின்னர் சூரியன், காற்று, நீர்நிலை போன்ற நிலநடுக்கம், எரிமலை, கண்டங்கள் பெயர்ச்சி மறுபடியும் மலைகள் உருவாதல். இவ்வாறாக பூமியின் பரப்பு மலைகள், மடுக்கள், குளங்கள், குட்டைகள், ஓடைகள், ஆறுகள், பரந்தகடல்கள், பனிபரப்புகள், பாலைவனங்கள் என உருமாறி சுருக்கமாக பூமி உருவானது.
450கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியிருந்தாலும்இதில்உயிரினங்களின் வளர்ச்சி என்பது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் அஸோயிக் (Azoic) காலகட்டம். 150 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் கடற்பாசி புழு, நுங்கு மீன் போன்ற புரோட்டோரோசாசிக் (Proterozoic) காலகட்டம் ஆகும். ஊர்வன இன்னும் பல்வேறு வகையான அதன் மூதாதையர்கள் 60-27 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின. மிஸோஸோயிக் (Mesozoic) என அழைக்கப்படும் ஜுராசிக் டைனோசர் காலகட்டமானது 22.5 லிருந்து 4 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
மாடு,யானையின் முன்னோடி, குதிரைகளின் முன்னோடி, பன்றி, வாலற்ற குரங்குகளின் முன்னோடி, மலரும் தாவரங்கள்,நாய்,கரடி போன்ற விலங்குகளின் முன்னோடிகள் தோன்றி மறைந்த காலகட்டமானது 7 கோடியிலிருந்து2.5கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.
முதுகெலும்புள்ள பல விலங்குகள் இன்றில்லாத வாழ்ந்த காலம் 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். கற்ககால மனிதன் (Pleistocene) காலக்கட்டம் 0.2 லிருந்து 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள். 30 லிருந்து 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பணியுககாலம், பழைய கற்கால மனித வளர்ச்சி காலம் ஆகும்.
இவ்வாறு மனிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அவன் ஹோமோ செபியன் (Homo sapien) எனும் இனத்தை சார்ந்தவன். ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்று அடிப்படையில் ஒரே இனத்தின் எந்த ஆணும் பெண்ணும் கூடி இனப்பெருக்கம் செய்ய முடியும்.இயற்கையின் இந்த நியதிப்படி அனைத்து மனிதர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். விலங்கு இனங்களின் சில வகையினம் வேறு வகையினதுடன் சில வேளைகளில் சேரக்கூடும், ஆனால் அவ்வாறு சேர்ந்தால் அவற்றை வேறாகத் தெரிந்துகொள்ளலாம்; அத்துடன் அவை அநேகமாகக் கலந்த உருப்பெறுவதில்லை. ஆனால் மனித வகைகள் அல்லது இனங்கள் பொதுவாகக் கலந்து உருவாகக்கூடியன. இவ்வாறு இனங்கள் கலப்பதனால் மலட்டுத்தன்மை எங்காயினும் உண்டாவதாகத் தெரியவில்லை. இன்று தூயஇனவாதம் பேசும் பலர் மறந்தே போனயிடம் இன்று வெவ்வேறு இனமாக காணப்படும் இவர்கள் முந்தைய நகர்வுகளில் கலப்புற்றுப் பிறந்தவர்களேயென்பதை இதிலிருந்து தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள முடியும் மனிதகுலமான ஒரே தொப்பூல் கொடி உறவுதான் என்பதனை.
அறிவியல் ஆய்வுகள் மனிதர்கள் விலங்கினத்தின் ஒரு வகை ஆனால் சில சிறப்பம்சங்கள் தனி வகை என்பதை உணர்த்துகின்றன.
சுருக்கமாகச் சொல்வதானால், மனிதர்கள் விலங்குளிலும் பார்க்க எளிதாகவும், காலநிலைகள், மற்றும் காரணங்களால் அதிஎளிதாக இடம் பெயர்ந்துவிடுவர்; மனிதர் தம் உணவு, உடைகள், உதவிக்கு வேண்டிய கருவிகள், மிருகங்கள் ஆகியவற்றைத் தேவைக் கேற்றவாறு மாற்றிக் கொள்வர். இத்தகைய திறமையும் வாய்ப்பும் விலங்குகளுக்கு இல்லை. அநேகமாக, வெவ்வேறு உபகரணங்களும் அமைப்புகளுமுள்ள தொகுதியான மனிதர் உலகில் ஆர்ட்டிக்கண்டம் தவிர்ந்த எனைய பகுதிகளிலெல்லாம் வசிக்கின்றனர். ஆதேபோல் விலங்குகளும் இவ்வாறு எங்கும் பரந்துள்ளன வென்று சொல்லமுடியாது. மனிதருடன் சென்ற ஒரு சில மிருகங்கள் மாத்திரம் பரந்துள்ளன. மிருகவகைகள் தனிப்பட்ட இயல்புகளுள்ள தாயகங்களில் மாத்திரம் வசிக்கின்றன. மனித இனங்கள் பெயர்ந்து செல்லும் ஆற்றல் காரணமாக, உலகமெங்கும் பரந்தும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் கலந்தும் பின்னிப்பிணைந்து விடுகின்றன. இப்பொழுதுள்ள மனிதவகைகள் யாவும் மனித இயல்புகளையே பெற்றிருந்த ஒருவகைப் பூர்வீக மனிதரிலிருந்தே வந்தவை என்பதில் இப்பொழுது சந்தேகமில்லை; உலகில் இங்குமங்கு மாக இவர்கள் இடம்பெயர்ந்து முறையாக அப்பூர்வீக மனித வகையினரிலிருந்து தோன்றியவர்களே இப்பொழுதுள்ள மனிதவகையினர். அவ்வகையான நகர்வில் இப்பொழுதுள்ள ஆபிரிக்க நீக்ரோகள், ஐரோப்பிய வெள்ளையர்; வட சீனவிலுள்ள “மஞ்சள்’ நிற மக்கள், மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை அறியக் கூடியவாறு அந்நகர்வுகள் பற்றி ஆராய்ந்தால் பல குழப்பங்களுக்கு விடை கிடைக்கலாம் ஆனால் இங்கு நமது தேடல் மனித இனம் ஆதியில் தோன்றியதிலிருந்து இன்றைய வளர்ச்சிவரை புரிதலுக்கே..
இன்னும் தெளிவாக அண்மைய ஓர் ஆய்வாளரின் எழுத்தை பயன்படுத்தி கொள்வோம்.”மூதாதையரை தேடி”என்ற நூலின் அடிப்படையில் மனித குலம் வளர்ந்த கதை தெரிந்துக் கொள்ள முயலுவோம்.
v ‘உயிரினங்களின் தோற்றம் பற்றி எழுதிய சார்லஸ் டார்வின் மனித குல வரலாறு பற்றி வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தனது முடிவுகளை மேலும் தெளிவுபடுத்தும் என்று கூறினார். ஆனால் டார்வின் மனிதன் குரங்கிலிருந்து உதித்தான் எனக் கூறியதாக அவசொல் பெற்றார். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை தவறாக புரிந்து கொள்பவர்களே இதுபோல் அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். நாம் குரங்கிலிருந்து பிறந்தவர்கள் அல்ல, குரங்கு நம் மூதாதையர் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாக இருக்கின்றன? அதாவது நாமும் நம் கொள்ளுப்பாட்டனும் எவ்வாறு சமகாலத்துவராக இருக்க முடியும்? குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு தாத்தா பேரன் உறவு அல்ல பங்காளி உறவு. அதாவது சித்தப்பா மகன், பெரியப்பா மகன் உறவினாகும் ஒரே வம்ச விருத்தியில் பல கிளைகளில் இரு கிளைகள் குரங்குகளும் ஆதி மனிதர்களும் ஆகும்.
v மனிதர், ஆதி மனிதர்,மனிதக் குரங்குகள் மற்றும் இதர வாலில்லா குரங்குகள் இவற்றை ஹோமினாய்டியா(Hominoidea)பேரினத்தை சேர்ந்தவை.இன்னும் சில ஆய்வுகள் சில வேறுபட்ட கருத்துக்களை முன் வைத்துள்ளது’(ஆதாரம் சுகி ஜெய்கரன் அவர்களின் மூதாதையரை தேடிய நூலிலின் அடிப்படையில் பேசியுள்ளேன்).
மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும், அதன் அங்கமான மானுட சமூகத்தையும் குறித்த ஒருபொதுவான கோட்பாடாகும், அல்லது சித்தாந்தமாகும். இந்த சித்தாந்தத்திற்கு அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல் வாதம் என்ற தத்துவம் ஆகும். மார்க்சிய சித்தாந்தமானது மனித சமூகம் என்றால் என்ன? அது ஏன் மாறுகிறது? இதற்கு மேலும் என்னென்னமாற்றங்கள் மனித குலத்திற்கு ஏற்படப்போகிறது என்பதை தொடர்ந்து கண்டறிவதற்கு பயன்படும் சித்தாந்தமாகும். இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவை அல்ல. அவை சில நுண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. அது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என்றும் அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன? எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொதுஉண்மையை, பொதுவான வழிகாட்டுதலையை, பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இந்தபொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூக மாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்து கிறது. ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களைமுன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவான வழிகாட்டுதலையும் கண்ணோட்டத் தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது. ஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம்மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்துஎடுக்கவிரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோஅடிப்படையாகக்கொள்ளக்கூடாது,மேலும்அங்குள்ளமதங்களையோ, மதத்தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக்கூடாது மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தைஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமானபங்குஇருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனிதசமூகம் உயிர்வாழ மற்றும் வளர்ச்சியடையவேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள்உற்பத்தியில்ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.மனிதர்கள் உற்பத்தியில்ஈடுபடும்போதுஉற்பத்திச் சாதனங்களின் துணைகொண்டே உற்பத்தியில்ஈடுபடுகிறார்கள். ஆரம்பகாலங்களில் இந்த உற்பத்திச் சாதனங்கள் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருந்தது. அதனால் மக்களிடையேவர்க்கப்பிரிவுகளோஏற்றத்தாழ்வுகளோஇல்லை. உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் பல்வேறுவேலைப் பிரிவினைகள் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக மனிதர்களிடையே உடமையுள்ளவர்கள் மற்றும் உடமையற்றவர்கள் உருவாகிறார்கள் மேலும் சமூகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி நடந்தது. இந்த உபரியையும்உற்பத்திச்சாதனங்களையும் திறமையானவர்கள் தனியுடமையாக கைப்பற்றிக் கொண்டு பலரை உடமையற்றவர்களாக மாற்றி அவர்களை சுரண்டி வாழ ஆரம்பித்தனர். இப்படித்தான் வர்க்கங்கள் தோன்றின. இதன் பின்பு சமூக உற்பத்தியானது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதனைத்தான் உற்பத்தி உறவு என்கிறோம். இந்த உற்பத்தி உறவுதான் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து மாற்றி யமைப்பதன் மூலமே சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.
வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமை வர்க்கப்பிரிவுகள் இருந்தாலும் எந்த வர்க்கங்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அந்த வர்க்கங்கள்தான் அந்த சமூகத்தின் ஆளும் வர்க்கமாகும். இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே சமூகத்திலுள்ள பிற அனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தியை நடத்துகிறது. இந்த வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து சுரண்டலை நடத்துவதற்கான கருத்துக்களை உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி மத நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள். இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி உறவைபாதுகாக்கவும்பலப்படுத்தவுமான இந்த அமைப்புகளையும் சித்தாந்த நிறுவனங்களையும் மேல்தளம் என்கிறோம். மேலும் சில ஆரம்பகட்டத்தை சுருக்கமாக அறிவோம்.
பூர்வீக மனிதன் முதல் கோடரியையும் வில்லையும் செய்தபொழுது அது பொருளாதாரம் அல்ல; அதைத் தொழில் நுணுக்கம் என்றே சொல்ல வேண்டும்.
பிறகு ஒரு வேடர் குழு சில கோடரிகளையும் வில் ஆயுதங்களையும் கொண்டு ஒரு மானைக் கொன்றது. மான் இறைச்சியை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்; அநேகமாக, சமமாகத்தான் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். சிலர் அதிகமாக எடுத்துக் கொண்டிருந்தால், மற்றவர்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது, உயிரோடிருந்திருக்க முடியாது. அந்தக் குழுமத்தின் வாழ்க்கை மேலும் பன்முகப்பட்டதாக வளர்ச்சியடைந்தது.
ஒரு கைவினைஞன் தோன்றுகிறான்;அவன்வேடர்களுடைய உபயோகத்துக் கென்று நல்ல ஆயுதங்களைத் தயாரிக்கிறான். ஆனால் அவன் வேட்டையில் சேருவது கிடையாது. வேட்டையாடியவர்களும் மீன் பிடித்தவர்களும் இறைச்சி,மீன்களைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது தங்களோடு சேர்த்து அந்தக் கைவினைஞனுக்கும் ஒரு பாகத்தை ஒதுக்குகிறார்கள். பிறகு ஒரு கட்டத்தில் உழைப்பினால் ஏற்பட்ட பண்டங்களைக் குழுமங்களுக்கு இடையிலும் ஒரு குழுமத்துக்கு உள்ளேயும் பரிவர்த்தனை செய்வது ஆரம்பமானது. இவை அனைத்தும் பூர்விகமாகவும் வளர்ச்சியில்லாமலும் இருந்த போதிலும்இவையேபொருளாதாரமாகும். ஏனென்றால் இவை பொருள்களோடு – வில், கோடரி அல்லது இறைச்சி – மக்கள் கொண்டிருந்த உறவுகள் சம்பந்தப்பட்டவை,மட்டுமல்ல; அவர்கள் சமூகத்தில் ஒருவரோடொருவர் கொண்டிருந்த உறவுகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தன.அதிலும் அவை பொதுவகையிலான உறவுகள் அல்ல; மக்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களின் உற்பத்தி, விநியோகத்தோடு சம்பந்தப்பட்ட பொருளாயத உறவுகள். மார்க்ஸ் இந்த உறவுகளை உற்பத்தி உறவுகள் என்று குறிப்பிட்டார். பொருள்வகைப் பண்டங்களின்சமூக உற்பத்தியும் பரிவர்த்தனையும்,விநியோகமும்,நுகர்வும்,அந்த அடிப்படையில் ஏற்படுகின்ற உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமுமே பொருளாதாரம் ஆகும்.இந்தக் கருத்தின்படி பார்த்தால்,பொருளாதாரம் மனித சமூகத்தைப் போலவே மிகப் பழமையானது.
பூர்விகக் குழுமத்தின் பொருளாதாரம் மிகவும் எளிமையாகவே இருந்தது. ஏனென்றால் மக்கள் உபயோகித்த கருவிகளும் மிகவும் எளிமையாக இருந்தன; அவர்களுடைய தொழில் திறனும் சுருங்கியதாகவே, குறைவானதாகவே இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால்,ஒரு சமூகத்தின் உற்பத்தி உறவுகளையும் அதன் பொருளாதாரத்தையும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களையும் நிர்ணயிக்கின்ற உற்பத்தி சக்திகள் பற்றாக்குறையாகவே வளர்ச்சி யடைந்திருந்தன.
முதல் பொருளாதார நிபுணர் யார் ?
நெருப்பு எரிவது ஏன், இடி இடிப்பது ஏன் என்று ஆச்சரியப்பட ஆரம்பித்த முதல் மனிதன் யார்? ஒருவேளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது நடைபெற்றிருக்க வேண்டும். பூர்விக சமூகத்தின் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தவர்கள் யார்? அன்று அது அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் சமூகமாக, முதல் வர்க்க சமூகமாகப் படிப்படியாக மாறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தச் சிந்தனைகள் ஒரு விஞ்ஞானம் அல்ல –இயற்கையையும் சமூகத்தையும் பற்றி முறைப்படி தொகுக்கப்பட்ட மனித அறிவு அல்ல; அது விஞ்ஞானமாகவும் இருக்க முடியாது.
அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் முதிர்ந்த சமூகத்தின் காலம் ஏற்படும் வரை விஞ்ஞானம் தோன்றவில்லை.அந்த சமூகம் அதிகமான வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நாலாயிரம் அல்லது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுமேரியா,பாபிலோனியா மற்றும் எகிப்து ஆகிய பண்டைக்கால அரசுகளில் வாழ்ந்த மக்கள் கணிதம் அல்லது மருத்துவத் துறையில் கொண்டிருந்த அறிவு சில சமயங்களில் நம்மை வியப்பில் மூழ்க வைக்கின்றது. பண்டைக் கால அறிவின் எச்சங்களாக நமக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த மாதிரிகள் பண்டைக் கால கிரேக்க, ரோமானிய மக்களுக்குச் சொந்தமானவை.
பதினேழாம் நூற்றாண்டில் அரசியல் பொருளாதாரம் என்ற பெயரோடு விஞ்ஞானத்தில் ஒரு புதிய துறை ஏற்படுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே பொருளாதார வாழ்க்கையின் அம்சங்களைப் பற்றி உய்த்துணர்வதற்குத் திட்டவட்டமான முயற்சி ஆரம்பமாயிற்று. இந்த விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்த பல பொருளாதார நிகழ்வுகள் முன்பே பண்டைக்கால எகிப்தியர்களுக்கு அல்லது கிரேக்கர் களுக்குத் தெரிந்தவையே. இவை பரிவர்த்தனை, பணம், விலை, வர்த்தகம்,லாபம்,வட்டி ஆகியவையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அந்தக் காலத்திலிருந்த உற்பத்தி உறவுகளின் முக்கியமான கூறுகளைப் பற்றி -அடிமை முறை பற்றி – சிந்திக்கத் தொடங்கினார்கள்.
முதலில் பொருளாதாரச் சிந்தனை என்பது சமூகத்தைப் பற்றிய சிந்தனையின் மற்ற வடிவங்களிலிருந்து தனியானதாக இருக்கவில்லை;எனவே அது முதலில் எப்பொழுது தோன்றியது என்று துல்லியமாகக் கூற முடியாது. பொருளாதார வரலாற்றுப் புத்தகங்களைஎழுதியவர்கள் வெவ்வேறு முனைகளிலிருந்துஎழுதத்தொடங்குவதும் ஆச்சரியமானதல்ல;சில வரலாறுகள் பண்டைக்கால கிரேக்கர்களிடமிருந்து தொடங்குகின்றன;மற்றவைபண்டைக்கால எகிப்திய கோரைப் புற்சுவடிகள், ஹாம்முராபியின் விதிகளின் ஆப்பு வடிவமுள்ள கல்லெழுத்துக்களிலிருந்து, இந்துக்களின் வேத நூல்களிலிருந்து தொடங்குகின்றன.
அரசர் ஹம்முராபி மற்றும் கல்மேல் எழுத்தாக அவரது காலத்தில் இயற்றப்பட்ட விதிகள்.
கிறிஸ்துவுக்கு முந்திய இரண்டாவது மற்றும் முதலாவது ஆயிரம் ஆண்டுகளில் பாலஸ்தீனத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வசித்த மக்களின் பொருளாதார வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்களும் பொருளாதார நுண்காட்சிகளும் பைபிள் நூலில் காணப்படுகின்றன.
அமெரிக்க வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஜே.பேல் தமது புத்தகத்தில் பைபிளுக்கு மட்டும் ஒரு பெரிய அத்தியாயம் எழுதியிருப்பதற்கும் அந்தக்காலத்தைப் பற்றிய மற்ற எல்லா ஆதாரங்களையும் புறக்கணித் திருப்பதற்கும் அறிவுத்துறை ஆராய்ச்சிக்குச் சம்பந்தமில்லாத வேறு சூழ்நிலைகளே காரணம் என்று அறிவது அவசியம். அதாவது பைபிள் கிறிஸ்தவ மதத்தின் புனிதமான நூல்; பெரும்பான்மையான அமெரிக்க மாணவர்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே அதைத் தெரிந்திருப்பார்கள். எனவே நவீன வாழ்க்கையின் இந்த அம்சத்துக்கு ஏற்றவாறு ஆராய்ச்சி வளைந்து கொடுக்கிறது.
குடும்ப நிர்வாகம் என்று சொல்லும் பொழுது நாம் தருகின்ற குறுகிய அர்த்தத்தை கிரேக்கர்கள் அதற்குக் கொடுக்கவில்லை என்பது உண்மையே.ஏனென்றால் ஒரு பணக்கார கிரேக்கரின் பண்ணை என்பது அடிமைகளை உடைமையாகக் கொண்ட மொத்தப் பொருளாதாரமாக, பண்டைக்கால உலகத்தின் நுண் மாதிரியாக இருந்தது.! அரிஸ்டாட்டில் “பொருளாதாரம்” என்ற சொல்லை இதே பொருளில்தான் பயன்படுத்துகிறார்.
அரிஸ்டாட்டில் தன் காலத்தின் குழந்தையாகவே இருந்தார். அவர் அடிமையைப் பேசுகின்ற கருவி என்றுதான் கருதினார்; அடிமை முறை இயற்கையானது, தர்க்க ரீதியானது என்று முடிவு செய்தார். இதைத் தவிர இன்னொரு வகையிலும் அவர் பழமைவாதியாகவே இருந்தார்.தம் காலத்திய கிரீஸ் நாட்டில் வர்த்தகமும் பண உறவுகளும் வளர்ச்சியடைவதை அவர் விரும்பவில்லை.சிறு அளவில் இருக்கும் விவசாயப் பொருளாதாரமே (அங்கே எல்லா வேலைகளையும் அடிமைகள் செய்வார்கள் என்பதும் இயற்கையே) அவருடைய இலட்சியம். இந்தப் பொருளாதாரம் அநேகமாகத் தன்னுடைய எல்லா அடிப்படைத் தேவைகளையும் தானே பூர்த்தி செய்து கொள்ளும்;அப்படிச் செய்ய முடியாத சிலவற்றை பக்கத்திலிருப்பவர்களோடு “நியாயமான பரிவர்த்தனையில்” பெற்றுக் கொள்ள முடியும்.
இயற்கையும் ஆதி மனிதனும்
எல்லாவற்றிற்கும் வரலாறு இருப்பது போன்று விலங்குகளுக்கும் வரலாறு இருக்கிறது ஆனால் இந்த வரலாறு வேறுவிதமானது.மனிதனை போன்று விலங்குகள் உணர்ச்சிபூர்வமாக வரலாற்றைநிர்மாணிக்கவில்லை .விலங்குகள் உயிர் வாழ போர் புரிகின்றன. மனிதன் அப்படி அல்ல ஆரம்பத்திலிருந்தே தனது வரலாற்றைப் படைக்கின்றான்.
ஆதிமனிதன் உணவு தேட பெரு முயற்சி செய்யவில்லை இயற்கையோடு எதிர்த்தும் அவன் கடுமையாக போர் புரியவில்லை.இயற்கை அளித்த பரிசான அவனுக்கு கிடைத்தவற்றை உண்டான் இயற்கையோடு வாழ்ந்து திருப்தி அடைந்தான் இயற்கையில் கிடைத்தவற்றை பயன்படுத்திய மனிதன் எந்த கருவியும் பயன்படுத்த தேவையில்லாதிருந்தது.மனிதனும் குரங்குகள் போன்று அவன் உணவுப் பொருளான காய்கனிகளை பறிக்க கையை நீட்டுவான் அன்று அவனுக்கு கைதான் உற்பத்தி கருவியாக இருந்தது.ஆரம்பநிலையில் கையை மட்டும் பயன்படுத்திய மனிதன் கைக்கெட்டாத தூரத்தில் உள்ள கனிகளை பறிப்பதற்காக கம்புகளையும் நிலத்தடியில் உள்ள கிழங்குகளையும் கொட்டைகளையும் தோண்டி எடுக்க கற்களையும் பயன்படுத்தத் தொடங்கினான் .கற்களால் நசுக்கியும் உடைத்தும் திண்ண தொடங்கினான்.இயற்கையில் கிடைத்த பழங்களை மட்டும் சாப்பிட்டு இருந்த மனிதன் பிறகு ப்ளூ பூச்சிகளையும் தின்ன ஆரம்பித்தான் பிறகு பல வகையான உணவு பொருட்களை உண்பதை தொடங்கினான் கைகளை அதிகமாக பயன்படுத்துவதால் கைகள் உரம் பெற ஆரம்பித்தது .
அதிவிரைவில் நிமிர்ந்து நிற்கவும் கற்றுக்கொண்டான்.இயற்கை அளித்த பொருட்களை தனது தேவைக்காக உகந்த முறையிலும் மனிதன் மாற்ற ஆரம்பித்தான்.இயற்கைக்கு அடிமையாக இருந்த மனிதன் இயற்கையை எதிர்த்துப் போர் புரிய ஆரம்பித்தான் .புதிய கருவிகளை கண்டுபிடித்து அவன் இயற்கையுடன் போரிட்டு தனக்கான ஒன்றைக் கண்டுபிடிக்க தொடங்கினான்.
மலையிலிருந்து வெயிலில் இருந்தும் காற்றில் இருந்தும் குளிரில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக மனிதன் தனக்கான இருப்பிடத்தைத் தேடினான்.
வேட்டையாடவும் விலங்குகளைக் கொன்று தின்னும் முற்பட்டான் இன்னும் பலப்பல செய்தான். உண்மையில் இவை புதிய வாழ்க்கைக்கு சாதனமாகும் இவை தான் மனிதன் கண்டுபிடித்த புதிய வாழ்க்கை சாதனங்கள் இவைதான் விலங்கு உலகிலிருந்து மனித சமுதாயத்திற்க்கு மனிதனை அழைத்துச் சென்றன.
புதிய உற்பத்தி சாதனங்களை கண்டுபிடித்த மனிதன் அந்த வாழ்க்கை சாதனங்களுக்கு உகந்த உற்பத்தி உறவுகளை உண்டாக்கினான் அன்று வேட்டையாடல்தான் பிரதான உற்பத்தி முறை வேட்டையாட அவனிடம் சிறந்த ஆயுதங்கள் இருக்கவில்லை கல்லால் செய்யப்பட்ட சிறிய ஆயுதங்கள் தான் அவனிடம் இருந்தன இந்த ஆயுதங்களை கொண்டு பெரிய விலங்குகளை அவன் கொள்வது அசாத்தியம் ஆகும் ஆக அவன் கூட்டாக வேட்டையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது கூட்டம் கூட்டமாக வேட்டையாடுவது போலவே கூட்டம் கூட்டமாக வாழ வேண்டிய அவசியம் அன்றைய நிலையில் இருந்தது இதில் பிறந்ததுதான் கூட்டு வாழ்க்கை முறை. அன்றைய மனிதர்கள் பொதுவாக உணவு பொருள்களை தேடி சென்றனர். கிடைத்ததை பொதுவாக அனுபவித்தனர்.அன்றைய மனிதன் குடும்பவாழ்க்கை உருவகப்படுத்த வில்லை ஆண்களும் பெண்களும் விருப்பம்போல வாழ்ந்தனர் புணர்ச்சி அவர்கள் விலக்க முடியாத ஒன்றாக மாத்திரம்தான் கருதினார்கள் .
எந்த அளவுக்கு மனிதன் தன் வாழ்க்கைக்குத் தேவைக்கான உற்பத்தி சாதனங்களை உற்பத்தி செய்கின்றன அந்த அளவுக்கு அவன் மறைமுகமாக தனது உண்மையான வாழ்க்கையை உருவகப்படுத்தி அதை உயர்த்துகிறான்.உணவு உடை இருப்பிடம் முதலியன வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவை யானது .எனவே இந்த சாதனங்களை பெறுவதற்கு அவசியமான கருவிகளை உற்பத்தி செய்து தான் வரலாற்றின் முதல் வேலை.இதிலிருந்து தான் மனிதன் உண்மையான வாழ்க்கை ஆரம்பமாகிறது இந்த வரலாற்று நிகழ்ச்சிகள் தான் மனித சமுதாயத்தின் வரலாற்றைத் தூண்டும் சக்தி என்கிறார்கள் மார்க்சும் எங்கெல்சும்.
புதிய கருவிகள் புதிய சக்திகள் புதிய வாழ்க்கைமுறையை மாற்றுகின்றன இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவையும் மாற்றுகின்றன இந்தப் பரிணாமம் சமூகத்தை முன்னுக்குத் தள்ளுகின்றது.உற்பத்தி சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மனிதன் முறையாக உற்பத்தி செய்ய ஆரம்பித்தான். கனிகளைத் என்று வாழ்ந்த மனிதன் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை பசித்த பொழுது அவனுக்கு இயற்கை அளித்த பரிசாக ஒன்றும் அதில் நான் அவற்றை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கூட அவன் மனதில் தோன்ற வில்லை ஆனால் உற்பத்திக் கருவிகள் அறிவையும் சிந்தனையின் குறிக்கின்றன ஒரு குறிப்பிட்ட கருவியை செய்யுமுன் மனிதன் சிந்தனை செய்து தான் தீரவேண்டும்.
உற்பத்திக் கருவிகளை உருவகப்படுத்தும் பொழுது மனிதன் தன்னையும் ஒரு உருவகப் படுத்திக் கொள்கிறான்.
உற்பத்தி செய்யும் பொழுது மனிதன் இயற்கையின் உருவத்தை மாற்ற மாற்றவில்லை அவன் தன்னையே மாற்றிக் கொள்கிறான் ஒரு குறிப்பிட்ட முறையில் வேலை செய்வதன் மூலம் தான் தங்கள் உழைப்பின் பலனை பரிவர்த்தனை மூலம் மக்கள் உற்பத்தி செய்ய முடியும் உற்பத்தி செய்வதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் இடையிலே உறவுமுறை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த ஒருவருக்கு ஒருவர் உறவு எனும் விஷயத்தில் நின்று கொண்டுதான் அவர்கள் இயற்கை பயன்படுத்திக்கொள்கின்றனர் உற்பத்தி செய்கின்றனர் என்றார் மார்க்ஸ்
மனித சமுதாயம் எப்பொழுதும், இப்பொழுது இருப்பது போலவே இருந்தது இல்லை. அது பல காலங்களில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு வளர்ந்து வந்துள்ளது. அது தன் பயணத்தைப் பொதுவுடைமைச் சமூகமாக தொடங்கியது. இதனை நாம் ஆதி பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமை சமூகம் என்றழைக்கிறோம். மனிதன் வேட்டையாடி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது அவர்களில் யாருக்கும் எந்த விதமான சொத்துரிமையும் இருந்ததில்லை.வேட்டைக் கருவிகள் உட்பட அவர்களிடம் இருந்த அனைத்தும் அனைவருக்கும் உரிமையாக இருந்தன.தனியுரிமையைப் பற்றி அவர்களால் கற்பனையும் செய்ய முடியாதிருந்தது.
உழைக்கும் வயதில் உள்ள யாரும் உழைக்காமல் இருக்க முடியவில்லை. உழைக்காமல் இருப்பதைப் பற்றிக் கற்பனை செய்யவும் முடியாது. அச்சமூகத்தில் திருட்டு இல்லை; ஏமாற்று வித்தை இல்லை. மக்களுக்குள் இடையே ஏதாவது பிணக்குகள் தோன்றினால், அவை மூத்தவர்களின் தலையீட்டில், அவர்களுடைய கண்டிப்பில் தீர்த்து வைக்கப்பட்டன. அங்கு அரசன் இல்லை. காவல் துறை இல்லை. அரசு என்ற அமைப்பின் எந்த ஒரு அங்கமும் அங்கு இல்லை.
அச்சமூகத்தினால்,தாங்கள் வாழ்வதற்கும்,தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவையான அளவிற்கு மட்டுமே பொருட்களை ஈட்ட முடிந்தது.
அவர்கள் தங்கள் அறிவுத் திறத்தினாலும் முயற்சியினாலும், வேட்டைக் கருவிகளைச் செம்மைப்படுத்தினர்.விதைகள் மண்ணில் விழுந்து மீண்டும் வளர்வதைக் கண்டு விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர்களின் உற்பத்தித் திறன் வளர்ந்த போது அவர்களால் தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவைப்படும் பொருட்களை விட அதிமான பொருட்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு வளர்ந்தனர். உற்பத்திக் கருவிகள் மேலும் உயர்ந்த ஒரு மட்டத்துக்கு வளர்ச்சியடைந்த நிலையில், மனிதனால், முதன் முறையாக, உபரியாக, அதாவது தனக்கு அத்தியாவசியமானதற்கும் மேலாக, உற்பத்தி செய்ய முடியுமாயிற்று. இவ்வாறு சுரண்டலுக்கான அடிப்படை வந்து சேர்ந்தது. ஆதி பொதுவுடமை சமூகம் உடைப்பு ஏற்பட்டு உடமை உள்ளவர்கள் உடமை அற்றவர்கள் என்ற வர்க்க சமூகதிற்கு வழிவகுத்தது.
1. ஆதிபொதுவுடைமைச் சமுதாய வீழ்ச்சியும் அடிமை சமூக பிறப்பும்
பொதுவுடமை சமூகம் உடைபட்டு உருவெடுத்த வர்க்க சமூகம் அடுத்தவரை அபகரிக்க போரிட்டது. அப்போரில் சிறைப்பிடிக்கப்பட்டோர் கொல்லப்படவில்லை, மாறாக வென்றவர்கட்காக வேலை செய்வதற்காக அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு அடுத்த சமுதாய வடிவம், அதாவது அடிமைச்சமுதாயம் எழுந்தது. அடிமைகளுக்குச் சொந்தமான வர்களுக்கும் அடிமைகட்கும் மோதல் நிகழ்ந்தது. ஜூலியஸ் சீசர் எவ்வாறு இங்கிலாந்து உட்பட ஐரோப்பாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றினார் என்றும் வெற்றியுடனும் சங்கிலியால் தன் தேர்ச்சில்லுக்குப் பிணைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றிய அடிமைகளுடன் ரோமாபுரிக்கு மீண்டாரென்றும் முதலாளித்துவ வராலாற்று பக்கங்களில் வாசித்திருப்பீர்கள்.
எனினும், உற்பத்தி உபகரணங்கள் தொடர்ந்தும் வளர்ச்சிபெற்று வந்தன. இவ்வாறான வளர்ச்சி நிலையில் அடிமைகள் தொடர்ந்தும் பொருத்த மானவர்களாக இருக்கவில்லை. ஏனெனில் எசமான் தனது இஷ்டப்படி விற்கவோ சுடவோ முடியுமானபடி எசமானின் தனிச் சொத்தாக இருந்த அடிமைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்வதற்கான தூண்டுதல் எதுவும் இருக்கவில்லை. அவனது உற்பத்திக்கும் அவனுடைய ஊதியத்திற்கும் எதுவிதமான உறவும் இருக்கவில்லை.
இவ்வாறு உற்பத்தியில் மனிதரி டையிலான புதியதொரு உறவுக்கான தேவை - மேலும் அதிக உற்பத்தி செய்யுமாறு தூண்டுதலுடைய மனிதருக்கான தேவை - எழுந்தது. ஸ்பாட்டகஸ் தலைமை தாங்கியது போன்ற அடிமைகளின் கிளர்ச்சிகள் இந்தப் போக்கைத் துரிதப்படுத்தின. அடிமையின் இடத்திற்கு வந்த பண்ணையாள் நிலத்திற்குப் பிணைக்கப்பட்டு நிலவுடைமைக் காரனின் நிலத்தில் குறிப்பிட்ட நாட்களிலும் தேவையான போதும் பணியாற்றுமாறான கட்டாயத் துக்குப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் அவருக்குத் தனது உற்பத்தியின் பயனை அனுபவிக்கும் படியாக ஒரு சிறிது நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.
ரசிய சீன படிபினைகளை அவர்கள் பொதுவுடமை நோக்கிய அவர்களின் பணியினை எழுத தேவையில்லை உலகில் தோன்றி எல்லா சமுகங்களிலே சோசலிச சமூகத்தில் மட்டுமே, உழைக்கும் ஏழை எளிய மக்கள் மீதான அக்கரையும் பரிவும் காணப்பட்டது. அந்த மக்களுக்கான திட்டம் வகுக்கப் பட்டு செயல்முறைக்கு கொண்டு வரப்பட்டது. இருந்தும் வர்க்க சமூகத்தையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதிலும் கட்சி தலைமை திரிபுவாதத்தை மேற்கொண்டதாலும் சோசலிச சமூகம் பொதுவுடமை சமூகத்தை நோக்கிய பயணம் தற்காலிகமாக திசைமாறிவிட்டது மீண்டும் அந்த பாதை மட்டுமே உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு வழி காட்டி என்பதனை கூறிக் கொள்கிறேன்.
வரலாற்றுக் கண்ணோட்டத்தின்படி சில நூற்றாண்டுகள் நீண்ட காலமல்ல. சோஷலிசம் தோன்றி குறுகிய காலமே ஆனது. ஒழுங்கான மனித சமுதாய அமைப்பிற்கு சோஷலிசமே வழிகாட்டும் என்ற அடிப்படைக் கருத்தில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இக்கட்டான வாய்ப்பற்ற சூழலில் சோஷலிசத்தைக் கட்டுவதில் தோல்வி ஏற்பட்டது அதன் காரணமாக நாம் நம்பிக்கையை இழந்துவிடப் போவதில்லை.
21 ம் நூற்றாண்டில் வழமையான வரலாற்றுப் போக்கில் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். நாலே நூற்றாண்டின் முதலாளித்துவம் உலகத்தை முந்தைய ஆயிரமாண்டு காலவரலாற்று காலத்திலும் காட்டிலும் வேகமாக மாற்றியமைத்துள்ளது: மனித சமூகத்தை பூமியோடும் பிறவாழ் விலங்கினங்களோடும் ஒப்பிடும்போது அளவற்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது. உலகமக்கள் தொகையாகட்டும், தனிநபர் பயன்படுத்தும் வளமும் வியப்புறும் வகையில் அதிகரித்துள்ளது. அதே வேகத்தோடு ஆயிரமாண்டு இயற்கைச் சுழலையும் சீர் செய்ய முடியாத அளவில் மோசமடைந்து வருகிறது. முதலாளித்துவ அமைப்பிலேயே இப்போக்கு வேரூன்றியுள்ளது. ஒவ்வொரு தசாப்தத்திலும், நிலைமை மேலும் மோசமடையும் போக்கையே காண்கிறோம்.
சமுதாயத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றமும் உற்பத்தி உபகரணங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் வரையறுக் கப்பட்டும் அம்மாற்றங்களைத் தொடர்ந்துமே நிகழ்ந்துள்ளன என நாம் காணலாம். எனவே சமூகத்தின் வரலாறு என்பது பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தியாளர்களது வரலாறேயாகும்.
குறிப்பு:-மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும், அதன் அங்கமான மானுட சமூகத்தையும் குறித்த ஒரு பொதுவான கோட்பாடாகும்,அல்லதுசித்தாந்தமாகும். இந்த சித்தாந்தத்திற்கு அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல் வாதம் என்ற தத்துவம் ஆகும். மார்க்சிய சித்தாந்தமானது மனித சமூகம் என்றால் என்ன? அது ஏன் மாறுகிறது? இதற்கு மேலும் என்னென்னமாற்றங்கள் மனித குலத்திற்கு ஏற்படப்போகிறது என்பதை தொடர்ந்து கண்டறிவதற்கு பயன்படும்சித்தாந்தமாகும். இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவை அல்ல. அவை சில நுண்ணியவிதிகளின்அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. அது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என்றும் அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன? எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொது உண்மையை, பொதுவான வழிகாட்டு தலையை, பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம்வழங்குகிறது. இந்தபொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூக மாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்து கிறது. ஆகவே மார்க்சியமானதுநிரந்தரமானவறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை.மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவான வழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பானசூழல்களைபுறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை.
தொடரும்…
No comments:
Post a Comment