அவர்கள் திருடர்கள் என்றுதெரிந்தும் தொடர்ந்து திரும்பதிரும்ப அவர்களுக்கே தேர்தலில் வாக்களித்து அந்த அயோக்கியன்களின் பின்னால் செல்லும் மக்களின்குணம் எதை உணர்த்துகிறது
நேற்றைய தேர்தல் நிலவரத்தை பார்த்து ஒருவரின் கருத்து இது,"கம்யூனிஸ்டுகள் இன்னும் உழைக்கும் மக்களை நெருங்கி போகவில்லை என்பதையே மிகச்சரியாக காட்டுகிறது." உண்மையில் ஆட்சியை பிடிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ள ஒருவர் அடிபடையில் இந்த சமூகம், இதற்கானா அரசியல் பொருளாதாரத்தை பற்றி புரிதலில் ஏதோ குறையுள்ளது என்பதனை புரிந்தே நமது ஆசான்களிடம் செல்வோம் இதனை புரிந்துக் கொள்ள தோழர்களே.
#கம்யூனிஸ்டுகள் இன்னும் உழைக்கும் மக்களை நெருங்கி போகவில்லை என்பதையே மிகச்சரியாக காட்டுகிறது.
¶ மக்களிடம் செல்க!
அவர்களிடம் கற்றுக் கொள்.
கற்றுக் கொண்டத்தை
அந்த மக்களிடம் சொல்.
மீண்டும் கற்றுக் கொள்ள
அதே மக்களிடம் செல்!
புரட்சியாளர் "தோழர் மாவோ" இப்படி ஒருவரின் புலம்பலுக்கு எனது தேடல்தான் கீழே:-
இங்கு பொதுவுடமை கட்சி பற்றி நமது சிலமருள் காரணமாக மார்க்சிய தத்துவ அரசியலை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் நிவர்த்தி செய்ய மூன்றாம் அகிலம் மற்றும் சீன கம்யூனிச கட்சி அளித்த போதனைகள் இவைகளை ஏற்கமையும் இங்கிருந்து தலைமை தனது கட்சி மார்க்சியத்தை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தத்துவார்த்த தவறு தொடரவே கட்சிக்குள் மார்க்சியம் அல்லாத சில போக்குகள் இன்றுவரை தொடர தான் செய்கின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்களான பி.டி.ரெணதிவே ராஜேஸ்வராராவ் மற்றும் சங்கரய்யா ஆகியோரின் ஆவணங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும் .
ஆக ஒரு நாட்டில் பொதுவுடமை கட்சி செய்ய வேண்டிய பணி என்ன ?
அரசியல் பொருளாதார கண்ணோட்டத்தின் படி உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுக்கும் இடையிலான முரண்பாடே சமுதாயத்தை முன் தள்ளி செல்வதற்கான தலையாய காரணமாகும்.இந்த முரண்பாட்டின் தீர்வே ஒரு புதிய சமுதாயம் எழவழி வகுக்கிறது.என் முரண்பாட்டின் பிரதான அம்சம் உற்பத்தி சக்திகளாகும். இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தடுத்து நிறுத்தியிருப்பது தான் இந்திய சமுதாயத்தைப் பின்தங்கிய நிலையிலே வைத்திருக்கிறது. பிற்போக்கு சக்திகளின் தளைகளிலிருந்து உற்பத்தி சக்திகளை விடிவிக்கும் பொழுது ஒரு புதிய சமுதாயம் உருவாகிறது.
உழைக்கும் மக்கள் பாட்டாளி வர்க்க சித்தாந்த்ததால் ஆயுத்தம் ஆக்கும் கடமை தான் எந்த ஒரு நேர்மையான பொதுவுடமை கட்சி மேற்கொள்ள வேண்டிய கடமையாகும். பரந்து பட்ட மக்கள் தமது சொந்தமான தத்துவத்தை கிரகித்து கொண்டு அதன்படி நடக்க துணிந்து விட்டால் தனது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டை பூச்சிகளையும் நச்சு கிருமிகளையும் மாபெரும் புயலென் சீறி எழுந்து ஒரே அடியாகத் துடைத்தொழிப்பர்.
கட்சி மக்களிடமிருந்து பிரிந்திருந்தால் தனிமைபட்டிருந்தால் இது சாத்தியமில்லை. மக்களுக்கு அவர்களின் வர்க்க நலனை பற்றி போதிப்பது அவர்களை அமைப்பு ரீதியாக திரட்டுவதுமானபணியே மக்களிடையேயான நடைமுறை பணியாகும்.
மத்திய கால நிலையுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு மாபெரும் வரலாற்று முன்னேற்றமாக இருந்த போதிலும், அது எப்போதும் முதலாளித்துவத்தின் கீழ் கட்டாயமாயும் வரையறுக்கப்பட்ட மொட்டையான பொய்யான போலியான ஒன்றாகவும் செல்வந்தர்களுக்கு ஒரு சொர்க்கத்தையும் சுரண்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாயப்பொறியமைவையும் மோசடியாகவும் நிலவும். ஒவ்வொரு முதலாளித்துவ ஜனநாயகம் செல்வந்தருக்குகந்த ஜனநாயகமாயாகும்.
ஜனநாயகத்தூண்களான முதலாளித்துவ நாடாளுமன்றத்தை எடுத்துக் கொள்வோம். ஜனநாயகம் எவ்வளவு அதிகம் உயர்வாக வளர்ச்சி அடைகிறது அவ்வளவு அதிக அளவில் முதலாளித்துவ நாடாளுமன்றங்கள் பங்கு மார்க்கெட் மற்றும் வங்கி அதிபர்களால் ஆட்படுத்தப்படுகின்றன. ஆக முதலாளிகளால் வழங்கப்படும் ஜனநாயகம் ஆனது ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கானவை அல்ல.
மக்களை வெறும் ஓட்டு போடும் இயந்திரமாக சிந்திக்கின்றனர் ஆட்சியாளர்கள், அந்த ஓட்டை பெருவதற்காகவே இங்கே ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் நகர்வும் உள்ளது. ஓட்டை பெருவதும் நாட்டில் ஆட்சியை பிடிப்பதும் நோக்கமாக கொண்ட இந்த ஓட்டரசியல்கட்சிகள் இங்குள்ள மக்கள் உண்பதை பற்றியோ வாழ்வதை பற்றியொ தவறியும் பேசுவதில்லை.
முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதிகளுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் இருந்திருக்கிறது "முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும், பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும். தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும், ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது அல்லது சோசலிசத்திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம் சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .மேலும் லெனின் கூறினார்,"புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறு செய்ய முடியும் ஆனால் வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப் போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராக முதலாளி வர்க்கத்தின் பக்கம் ஓடி விடுவதாகும்" ( லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).
"இன்றையப் புரட்சிக் காலகட்டத்தில் அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கங்களை வைத்து முக்கியமாக பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வுள்ள பகுதிகளை எதிர்த்து வழக்கமான அடக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திவரும் அதேநேரத்தில்
அது 1) சலுகைகளைக் கொடுத்தும் சீர்திருத்தம் பற்றிய வாக்குறுதிகளைக் கொடுத்தும் தொழிலாளி வர்க்கத்தை அரசியல்ரீதியிலே கெடுக்கவும் அதன் விளைவாக அதைப் புரட்சிப் போராட்டத்தினின்று திசைதிருப்பி விடவும் முயல்கிறது.
2) அதே நோக்கத்தை வைத்துத் தன்னுடைய பாசாங்குகளை சலுகையளிக்கும் கொள்கையைப் போலி ஜனநாயக வடிவங்களிலே போர்த்தி வருகிறது -- ........கேலியான மக்கள் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவது வரை இவ்வடிவங்கள் உள்ளன.
3) கறுப்புநூற்றுவர் எனப்படும் கும்பலை அது அமைக்கிறது. மக்களிடையே பொதுவாகப் பிற்போக்கானவர்களாகவும், அரசியல் உணர்வு பெறாதவர்களாகவும், இனவெறியாலோ மதவெறியாலோ கண்மூடிப்போனவர்களாகவும் இருக்கும் எல்லாப் பகுதிகளையும் புரட்சிக்கு எதிராகத் தூண்டிவிடுகிறது( நான் சொல்லவில்லை ஆசான் லெனின் சொல்கிறார்).
"அ) அரசாங்கத்தின் சலுகைகளின் பிற்போக்கான நோக்கத்தை அம்பலப்படுத்தி வரும் அதே நேரத்தில், ஒருபுறத்தில் இந்தச் சலுகைகள் பலவந்தத்தின் மூலமாகப் பறிக்கப்பட்டவை எனும் உண்மையையும், மறுபுறத்தில் பாட்டாளி வர்க்கத்தைத் திருப்திபடுத்தக் கூடிய சீர்திருத்தங்களை எதேச்சிகார ஆட்சியால் அறவே கொடுக்க இயலாது எனும் உண்மையையும் தங்களது பிரச்சாரத்திலும் கிளர்ச்சியிலும் வலியுறுத்த வேண்டும்;
ஆ) தேர்தல் இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த அரசாங்க நடவடிக்கைகளின் உண்மையான குறிபொருளைத் தொழிலாளிகளுக்கு விளக்க வேண்டும், மற்றும் எல்லோருக்கும் சம வாக்குரிமை, நேர்முகத் தேர்தல்கள், இரகசிய வாக்குப் பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஓர் அரசியல் நிர்ணய சபையைப் புரட்சிகரமான வழியில் கூட்டுவது பாட்டாளி வர்க்கத்துக்கு அவசியம் என்று நிருபிக்க வேண்டும்;(அதே நூல் பக்கம் 116-117)
முதலாளி வர்க்கம் தனக்குத் தானே துரோகம் செய்து கொள்கிறது, சுதந்திர லட்சியத்துக்குத் துரோகம் செய்கிறது, முரணற்ற ஜனநாயகப் போக்கிலே போகும் திறன் முதலாளி வர்க்கத்துக்குக் கிடையாது, என்று. முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கிப் போகும் அவசியமான மாற்றங்கள் மேலும் மெதுவாக, மேலும் படிப்படியாக, மேலும் எச்சரிக்கையாக நடப்பது, குறைந்த உறுதியுடன் நடப்பது, புரட்சி வழியில்லாமல் சீர்திருத்தங்களின் வழியே நடப்பது முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. பண்ணையடிமை முறையின் "நன்மதிப்புக்குரிய" நிறுவனங்களை (முடியரசு போன்றவற்றை) இந்த மாற்றங்கள் முடிந்தவரை அப்படியே விட்டுவைப்பது., இந்த மாற்றங்கள் சாதாரண மக்களின் -- அதாவது விவசாயிகளின், குறிப்பாகத் தொழிலாளிகளின் -- சுதந்திரமான புரட்சிகரமான நடவடிக்கையும் முன்முயற்சியையும் ஆற்றலையும் முடிந்தவரை குறைவாக வளர்க்கிறவையாக இருப்பது முதலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது. காரணம் பிரெஞ்சுக்காரர்கள் சொல்கிற மாதிரி "துப்பாக்கியை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றுவது" தொழிலாளிகளுக்கு மேலும் சுளுவாயிருக்கும் -- அதாவது, அவர்களுக்கு முதலாளித்துவப் புரட்சி கொடுக்கும் ஆயுதங்களையும் புரட்சி கொண்டுவந்து தரும் சுதந்திரத்தையும் பண்ணையடிமை முறையை ஒழித்துச் சுத்தப்படுத்திய களத்தில் தோன்றுகிற ஜனநாயக நிறுவனங்களையும் முதலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தொழிலாளிகள் திரும்புவது மேலும் சுளுவாயிருக்கும்.
மறுபுறத்தில், முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் அவசியமான மாற்றங்கள் சீர்திருத்தங்கள் வழியேயல்லாமல் புரட்சி வழியே நிகழ்வது தொழிலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது ஆகும். ஏனெனில் சீர்திருத்தவாதத்தின் வழி தாமதப்படுத்தும் வழி, தள்ளிப்போடும் வழி, நாட்டின் உடம்பிலுள்ள அழுகிப்போன பகுதிகள் வேதனைமிக்க நிதானத்துடன் இற்றுச்சிதையும் வழியாகும். . பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளுந்தான் அந்த அழுகளினால் முதன்மையாகவும் மிகுதியாகவும் துன்பப்படுகிறார்கள். புரட்சி வழி விரைவாக வெட்டியகற்றும் வழி, பாட்டாளி வர்க்கத்துக்கு மிகவும் குறைந்த வலி கொடுக்கும் வழி, அழுகிவிட்டதை உடனடியாக அகற்றும் வழி, முடியரசிடமும் அதைச் சேர்ந்த வெறுக்கத்தக்க, இழிந்த, அழுகலான, நாற்றமெடுக்கும் நிறுவனங்களிடமும் மிகக் குறைவான இணக்கும் எச்சரிக்கையும் காட்டும் வழியாகும்.
(லெனின் நூல் திரட்டு 1 பக்கம் 139-140)..
புரட்சி பற்றி
அரசும் புரட்சியும் நூலில் மிக அழகாக தோழர் லெனின் கூறியிருப்பார்,"ஒடுக்கும் வர்க்கங்கள் மாபெரும் புரட்சியாளர்களை அவருடைய வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடின;அவர்களின் போதனைகள் மீது காட்டுத்தனமான காழ்ப்பும் வெறித்தனமான வெறுப்பும் கொண்டு காயம்மையான பொய் பிரசாரம் அவதூறு இயக்கங்கள் நடத்தின. அவர்கள் இறந்த பிற்பாடு அவர்களை பயமற்ற பூஜையறைப் படமாக்கி வழிபாட்டுகுரியோர் ஆக்கவும் ஓரளவு அவர்களுடைய பெயர்களை புனித திருப் பெயர்களாக்கவும் முயற்சி செய்யப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை "ஆன்ம திருப்தி" பெற செய்வதும் அவற்றை ஏமாற்றுவதும், அதே நேரத்தில் புரட்சி போதனையிடமிருந்து அதன் சார பொருளைக் களைந்து அதன் புரட்சி முனையை மழுங்கடித்து, அதை கொச்சைப்படுத்துவதுதான் இந்த முயற்சிகளின் நோக்கம்-என்கிறார் தோழர் லெனின் அரசும் புரட்சியும் நூலில் அத்தியாயம் 1 பக்கம் 8ல். மேலும், அதே நூலில் லெனின்,பக்கம் 49-50ல் வர்க்க போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நிற்காமல் இதனைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்திற்கான அங்கீகரிப்பகவும் விரித்துச் செல்கிறவர் மட்டுமே மார்க்சிவாதியாவார் மார்க்சிவாதிக்கும் குட்டி முதலாளித்துவ சிந்தனையாளருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இங்கேதான் அடங்கி உள்ளது. மார்க்சியத்தை மெய்யாகவே புரிந்து கொள்கிறாரா, அதை அங்கீகரிக்கிறார என்பதைச் சோதிப்பார்த்த உரைக்கல்லாக அமைவது இதுவே. இந்தப் பிரச்சினையை ஐரோப்பிய வரலாறு ஒரு நடைமுறை பிரச்சினையாக தொழிலாளி வர்க்கத்தின் முன் நேருக்கு நேர் கொண்டு வந்த போது எல்லா சந்தர்ப்பவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் மட்டுமின்றி எல்லா காவுஸ்திகிவாதிகளும் கூட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிராகரிக்கு கேடுகெட்ட அர்ப்பவாதிகளாக குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளாக
தன்னை நிரூபித்துக் கொண்டதில் வியப்பில்லை எங்கிறார். இவை அன்றே லெனின் சொன்னவையே.
இப்படி மார்க்சியம் தோன்றிய பொழுதிலிருந்தே மார்க்சிய விரோதிகளும் அதன் ஊடே வளர்ந்துக் கொண்டேதான் உள்ளனர் உண்மையில் மார்க்சியத்தை நேசிப்போர் மார்க்சியத்தை கற்று தேறுங்கள் என்பேன்.
பொதுவுடமை கட்சி செய்ய வேண்டியதைதான் பேசிக் கொண்டிருக்கிறோம்....
புரட்சி என்ற வார்த்தையை சொல்லி விட்டாலே புரட்சி வந்து விடாது; அதற்கான நீண்ட பணி உழைக்கும் மக்கள் மத்தியிலும் அதற்கு முன் தன் கட்சிக்கே போதிக்க வேண்டிய கடமையும் உள்ளன... (கட்சி நிறுவன கோட்பாடுகள் லெனினை வாசியுங்கள் புரிந்துக் கொள்ள).
விரிவாக இன்னும் தொகுத்து எழுதுவேன் பின்னர்...
No comments:
Post a Comment