உயிரின் தோற்றம் -3 ஏ.ஐ.ஓபரின்
அத்தியாயம் - 3 புரோட்டோ - புரதங்களின் தோற்றம்
தாவரங்களின்உறுப்புகளிலும்,விலங்குகளின் உடல்களிலும் காணப்படும் சர்க்கரை, கொழுப்பு முதலிய சிக்கலான அமைப்புள்ள சேதனப் பொருள்களை உயிருள்ளவற்றிலிருந்து தான் பெறமுடியு மென்றும், செயற்கை முறையில் மனிதன் அவற்றை உற்பத்தி செய்வது சாத்தியமில்லை என்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பொருள்களை ‘உயிர்சக்தி’ என்றும் சக்தியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்வதால், ஆய்வு கூடத்தில் அவற்றைத் தயாரிக்கமுடியா தென்று அவர்கள் கூறினர். 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் சேதன ரசாயனநூலார் நடத்திய ஆராய்ச்சிகளின் பயனாக இக்கூற்று ஆதாரமற்றதென நிரூபிக்கப் பட்டது. முன்பு தாவரங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் நமக்குக் கிடைத்து வந்த அலிசாரின், இண்டிகோ முதலிய சாயப்பொருள்களையும்,சர்க்கரைகொழுப்பு முதலிய உணவுப்பொருள்களையும், டர்ப்பீன், டானின், அல்கலாய்டு, ரப்பர் போன்ற பயனுள்ள பொருள்களையும், கரிநீரகங்களிலிருந்தும், கரி, நீரகம் ஆகிய மூலங்களிலிருந்தும் உற்பத்தி செய்வது சாத்தியமாகிவிட்டது.சில வருஷங்களுக்கு முன் மிகவும் சிக்கலான அமைப்புள்ள வைட்டமின்கள், கிருமிநாச மருந்துகள், ஹார்மோன்கள் முதலியனவற்றைக் கூட செயற்கை முறையில் உற்பத்திசெய்வதில் விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர். “உயிர்ச்சக்தி” என்ற சொல்லை இன்று விஞ்ஞானிகள் அகராதியிலிருந்தே அகற்றி விடலாம்.
l †புரோட்டோ-புரதங்கள்: நாம் உட்கொள்ளும் உணவில் புரதங்கள் இருக்கவேண்டும். உடலுறுப்புகளை உண்டாக்குவது இதுவே. இவை கரியும் நைட்ரஜனும், மற்றும்மூலப்பொருள்களும் சேர்ந்த சிக்கலான அமைப்புடையபொருள்கள். இவற்றுள் பலவகையானவைஉண்டு.அவையனைத்தையும் புரோட்டோ- புரதங்கள் என்று அழைக்கிறார்கள்.
ஏனெனில் தாவரங்களினுள்ளும், விலங்கு களின் உடலிலும் காணப்படும் பொருள்களனைத்தையும் உயிரற்ற பொருள்களினின்றும் இன்று பெற இயலும்,உலகத்தில்சேதனப்பொருள்களை உயிருள்ளவை மட்டும் உற்பத்தி செய்வதை நாம் காண்கிறோம். ஆனால் உலகத்தில் பொருள்களின் பரிணாமத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் மாறுதல்களை மட்டுமே காண்கிறோம். முன் அத்தியாயங்களில் விவரித்துள்ளபடி, சேதனப்பொருள்களின் அடிப்படைப்பொருள்களானகரிநீரகங்களும், அவற்றின் வழிப்பொருள்களும் நட்சத்திரங்களில்உயிரின் உதவியின்றியே வழிப்பொருள் தோன்றுகின்றன. நாம் வாழும் உலகத்திலும், உயிர் தோன்றுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்பே அசேதனப் பொருள்களின் எதிர் வினைகளால் கரிநீரகப் பொருள்கள் தோன்றின. இக்கரிநீரகப்பொருள்களுக்கு வேறு மூலங்களோடு கூடி பல பொருள்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் உண்டு. உடல்களில் காணப்படும் பலவகையான எல்லா சேதனப் பொருள்களுக்கும்அடிப்படைப்பொருட்கள் உயிருள்ளனவற்றில் நிகழும் மாறுதல்களுக்கும், ரசாயனநூலார் ஆய்வு கூடத்தில் நிகழச் செய்யும் மாறுதல்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. சீக்கிரம்தாம் விரும்பும் வழியில் ரசாயன நிகழ்ச்சிகள் நடைபெற ரசாயன நூலார் அமிலங்களையும், காரங்களையும் பயன்படுத்துகிறார்கள். வெப்பத்தையும், அழுத்தத்தையும் கையாளுகிறார்கள். பலவகையான ரசாயன நிகழ்ச்சிகள் நடைபெறுமாறு செய்ய ரசாயன நூலார் எத்தனையோமுறைகளைக்கையாளுகிறார்கள். இயற்கையில் இத்தகைய சக்திவாய்ந்த முறைகள் காணப் படவில்லை. உடலின் வெப்பம் குறைவு மிகவும் மந்தமாகவேநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.ஆயினும்உயிருள்ளனவற்றின் உறுப்புகளிலும், உடல்களிலும், பலவகையான, மிகவும் சிக்கலான ரசாயன நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே யிருக்கின்றனஇவ்வாறு பலவகையான சிக்கலானநிகழ்ச்சிகள்தாவரங்களினுள்ளும், உயிருள்ளனவற்றின் உடல்களிலும் நடைபெறுவதைக் கண்டுதான், உயிரணுக்களின்(cell)உள்ளேஇம்மாறுபாடுகள் நடைபெறுகின்றன என்ற முடிவுக்கு விஞ்ஞான நூலார் வந்தனர். இது உண்மையல்லவென்று ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. ஆயிரக்கணக்கான சிக்கலானபொருள்கள்உயிருள்ளனவற்றினுள் காணப்பட்ட போதிலும் இவையனைத்தும் சிறுசிறு நிகழ்ச்சிகளின் காரணமாகத் தோன்றியவை என்பதில் சந்தேகமில்லை. உயிரணுக்களின் உள் நிகழும் மாறுதல்கள் மூலவகையானவை. ஒன்று, சுருக்கம்: கரி அணுத்தொடர் நீளமாவதும், குறுகுவதும். இரண்டு, கூட்டு: பல சேதன அணுக்கூட்டுகள் ஒன்றுசேர்ந்து ஒரே அணுக்கூட்டு ஆவது, அல்லது இடையே நைட்ரஜன் அல்லது ஆக்ஸிஜன் அணுவால் சேதனக் கூட்டணுக்கள்பாலம்போல்பிணைக்கப்படுவது. சிக்கலான அணுபிரிக்கப்படுவதும் இதனுள் அடங்கும். மூன்று இட மாற்றம்: ஒர் அணுக்கூட்டிலிருந்து மற்றொன்றுக்கு பாஸ்வாரிக் அமிலம், அமினோ நைட்ரஜன், மீதேன் முதலிய அணுச்சேர்க்கை மாற்றப்படுவது.பலசேதனப்பொருள்களைத் தோற்றுவிக்கும் (உயிருள்ளன வற்றில் நடைபெறும்) ரசாயன மாறுபாடுகள் அனைத்தும் இம்மூன்று அடிப்படை நிகழ்ச்சிகளாலேயே ஏற்படுகின்றன. செடிகளில் நீராவி வெளியேறுவது, விலங்குகள் சுவாசிப்பது, பொருள்கள் புசிப்பது, சீரணம், புதுப்பொருள்கள் உண்டாவது இவை யாவற்றையும் இம்மூன்று வகையான நிகழ்ச்சிகளின்பால் படுத்தலாம். எதன்பின் எந்த மாறுதல் நடக்கிறது என்பதைப் பொறுத்து எந்தப் பொருள் உண்டாகும் என்பது நிர்ணயமாகும். 'கூட்டு முதலிலும், சுருக்கம், பின்பும், இடமாற்றம் அதற்குப் பின்பும் நிகழ்ந்தால் ஒருவகையான பொருள் உண்டாகும்.இடமாற்றம் முன்பும் மற்றவை அடுத்து அடுத்தும் நிகழ்ந்தால் வேறொரு பொருள் உண்டாகும். முற்கூறிய மூன்று வகையான நிகழ்ச்சிகள் பல்வேறு பொருள்களில் நிகழும்போது ஆயிரக்கணக்கானபொருள்கள்உண்டாகின்றன. உயிருள்ளனவற்றில் காணப்படும் பொருள்கள் யாவும் இவ்வாறே உண்டாகின்றன. இந்நிகழ்ச்சிகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் அவை எல்லாவற்றிற்கும் பொதுவானதன்மை யொன்றிருப்பதைக் காணலாம்.இந்நிகழ்ச்சிகளனைத்திலும் தண்ணீரை உண்டாக்கக் கூடிய மூலங்களான ஆக்ஸிஜனும், நீரகமும் சம்பந்தப்பட்டிருப்பதைக் காணலாம். சேதனப் பொருள்களின் அணுக்கூட்டில்,கரிஅணுவோடுசேர்ந்திருக்கும், நீரக அணுக்களும், ஆக்ஸிஜன் அணுக்களும் பிரிக்கப்படுகின்றன. அல்லது அவை கரி அணுவோடு சேர்க்கப்படுகின்றன. இம்மாறுதல்கள் உயிருள்ளனவற்றில் நடக்கும் ரசாயன மாறுதல்களில் மிக முக்கியமான மாறுதலாகும்.இயற்கையான நிலைமையில் உயிருள்ளவற்றில் நடக்கும் எண்ணற்ற மாற்றங்களுக்குஇம்மாற்றங்களேஅடிப்படையாவன.உயிருள்ளவற்றில் மாறுதல்கள் விரைவாகவும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகவும் நிகழ்கின்றன. அவை எந்நிலைமைகளில் திகழ்கின்றன என்று நாம் பின்னர் ஆராய்வோம். வேறு மாறுதல்கள்நிகழச்சாதகமானநிலைமைகள் இல்லாவிடினும், தண்ணீரும் சேதனப் பொருள்களும் சேர்ந்து மாறுதல்களை உண்டாக்குகின்றன. அவை மற்ற மாறுதல்களைப் பார்க்கிலும் மெதுவாகவே நிகழ்கின்றன. சாதாரண நிலைமைகளில் சேதனப்பொருள்களின் கரைசல்களைச் சேர்த்து வெகுநேரம் வைத்திருந்த கூட்டு முறையில்பலபொருள்கள்உண்டாகின்றன என்பது ரசாயனிகளுக்கு வெகு காலமாகத் தெரியும். சிறிய எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்டு கூட்டுப் பொருள்கள்பெரியஎண்ணிக்கையுள்ளனவாகவும்,சிக்கலானஅமைப்புள்ளனவுமான அணுக்கூட்டுகளாக மாறுகின்றன. இது பல்வேறு வகைகளில் நிகழ்கின்றது. 1891இல் பார்மலின் என்ற பொருளை இதன் ஓர்அணுக்கூட்டில் ஓர்அணு ஆக்ஸிஜனும், இரு அணுக்கள் நீரகமும், இரு அணுக்கள் கரியும் உள்ளன). சுண்ணாம்புத் தெளிவில் ஊற்றி, வெப்பமான இடத்தில் வைத்திருந்தால் இனிப்பான ஒரு பொருளாக மாறுகிறது என்பதை A.M. பட்லேராப் செய்து காட்டினார். அதைத் தொடர்ந்து பார்மலின் ஆறு அணுக்கூட்டுகள் இணைந்து சர்க்கரையாக மாறுகின்றன என்று ரசாயனிகள் நிரூபித்துள்ளார்கள். பார்மலின் என்ற சுலபமான அமைப்புள்ள அணுக்கூட்டுள்ள பொருளிலிருந்து அதைவிடஅதிகஎண்ணிக்கைக்கொண்டதும், சிக்கலான அமைப்புடையதுமான சர்க்கரைஅணுக்கூட்டுகள்உண்டாகின்றன. A.N. பாச் என்ற சோவியத் உயிர் இயல் ரசாயனி (சோவியத் நாட்டில் விஞ்ஞானத்தில் இப்பிரிவின் ஆரம்ப கர்த்தா இவர்தான்) பார்மலின் கரைசலை, பொட்டாசியம் சையனைடு என்ற உப்பின் கரைசலோடு சேர்த்து நீண்டநாள் வைத்திருந்தால் பார்மலினைவிட அணுக்கூட்டு எடை அதிகமுடையதான நைட்ரஜன்கூட்டுப்பொருள்உண்டாவதைக் கண்டார். அதன் அணுக்கூட்டு எடை பார்மலினின் அணுக்கூட்டு எடையைவிட அதிகம். அதன் பண்புகள் புரதத்தின் பண்புகளை ஒத்திருந்தன. இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை இங்கே வருணிக்க முடியும். சில அணுக்களைக் கொண்ட சேதனப் பொருள்களின் கூட்டணுக்கள் தண்ணீரில் கரைந்திருக்கும் போது சாதாரண நிலைமைகளில் பல அணுக்களைக் கொண்ட கூட்டணுக்களுள்ளனவும், அணுக்கூட்டு எடை அதிகமாகவும் உள்ள பொருள்களை உண்டாக்குகின்றன என்பதை விளக்க இவ்வுதாரணங்களேபோதும். ஆய்வுகூடத்தின் நீரின் நிலைமைகளும், (புராதனக் கடல்களில் இருந்த நீரின் நிலைமைகளும்)ஏறக்குறையஒத்திருந்தன. ஆகவே கடலில் பலபகுதிகளிலும், தண்ணீர் வற்றுகிற குட்டங்களிலும், பட்லரேவும், பாக்கும் தங்கள் சோதனைச் சாலைகளில் கண்ட மாறுதல்களனைத்தும் நிகழ்ந்திருக்கவேண்டும். புராதனக் கடல்களில் பல சேதனப் பொருள்கள் கரைந்திருந்தன.அங்கேரசாயனநிகழ்ச்சிகள் சோதனை சாலையில் வரிசையாக நடைபெறுவதுபோலஇல்லாமல்குழப்பமாகப் பல வகைகளில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதி. ஒரே சமயத்தில் சேதனப்பொருள்கள் பல்வேறு வகையான மாறுதல்களையடைந்துபல்வேறுபொருள்களைத் தோற்றுவித்தன.ஆனால் ஆரம்பத்திலிருந்து எளிய அமைப்புடைய பொருள்களிலிருந்து சிக்கலான அமைப்புடைய பொருள்கள் தோன்றும்முறையிலேயே மாறுதல்கள் நடைபெற்றன. இதன் காரணமாக வெப்பமான புராதன சமுத்திரத்தில் இன்று தாவரங்களிலும், விலங்குகளின் உறுப்புகளிலும் காணப்படும் பொருள்களை ஒத்திருக்கும் பொருள்கள் தோன்றின. புராதனக் கடல்களில் சிக்கலான அமைப்புடைய சேதனப் பொருள்கள் தோன்றிய விதத்தை நாம் ஆராயும் போது, அந்நிலைமைகளில் புரதப்பொருள்கள் தோன்றிய விதத்தைக் குறிப்பாகக் கவனிக்க வேண்டும். உயிர்ப் பொருளைத்தோற்றுவிப்பதில்புரதங்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. பிராணிகளிலும், தாவரங்களிலும்,நுண்ணுயிர்களிலும்காணப்படும்புரோடோபிளாஸம் இப்பொருள்கள் பற்றிய விளக்கம் அடுத்த அத்தியாயத்தில் காண்க) என்னும் பொருளில் புரதங்கள் மிகுதியாக உள்ளன. இதை முதன் முதலில், டுரிங்குக்கு மறுப்பு (Anti duhring) என்ற நூலில் ஏங்கெல்ஸ் தெளிவாக்கினார். “உயிர்காணப்படும் இடத்தில் எல்லாம், புரதப் பொருள்கள் காணப்படுகின்றன. புரதப்பொருள் சிதைந்து மூலங்களாகப் பிரியாமல் காணப்படும் இடத்தில் எல்லாம் உயிரும் காணப்படுகிறது.” ஏங்கெல்ஸின் கருத்து உண்மைதான் என்பதை இன்றைய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. புரதங்கள் புரோட்டோ பிளாஸ்த்தை உண்டாக்கும் சடப்பொருள் மட்டுமல்ல; ஜீரண நிகழ்ச்சிகளிலும் மற்றும் உடலில் நிகழும் மாறுதல்களிலும் அதற்குப் பங்கு உண்டு என்றுநிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, புராதனக் கடல்களில் புரதம் தோன்றிய நிகழ்ச்சி பொருள்களின் பரிணாமத்தில் உயிர் தோன்றும் கட்டத்துக்கு முன்னோடியாக இருந்தது. அதனை மிகவும் முக்கியமான நிகழ்ச்சியென்றே கூறலாம். சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலும்கூடபுரதங்களின்பண்புகளைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு அதிகம் தெரிந்திராததால், புரதங்களில் நமக்கு தெரியாத ஒரு வஸ்து இருப்பதாகவும், புரதங்களிலுள்ளகுறிப்பிட்டஅணுச்சேர்க்கையில் உயிர் தங்குவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். இந்நம்பிக்கைக்குக் காரணம் புரதங்கள் தோன்றிய விதத்தை ஆராய்வது கடினமாகவும், அதுபற்றிய கொள்கைகள் நம்பத்தகாதனவாகவும் இருந்தமைதான். ஆனால் புரதத்தின் கூட்டணுவைப்பற்றி, இன்று நமக்குத் தெரிந்திருக்கும் விவரங்களைக் கொண்டு ஆராய்ந்தால் பழைய கொள்கைகள் ஆதாரமற்றவை என்று தெரிகிறது. புரதங்களைப் பற்றிய பண்புகளைப் பற்றி ரசாயனம் கண்டுள்ள முடிவுகளைச்சுருக்கமாக கீழ்க்கண்டவாறு கூறலாம். வீடுகட்ட ஆயிரக்கணக்கான செங்கற்கள் தேவையாவதுபோல, புரதக் கூட்டணுக்கள் அமினோ அமிலங்கள் என்னும் கூட்டுப் பொருள்களால் ஆக்கப்பட்டவை. அமினோ அமிலங்கள் ரசாயனக் கவர்ச்சியினால் ஒரு குறிப்பிட்ட வகையில்தொடராகஇணைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு புரதங்களில் இத்தொடர்களில் அமினோ அமிலக் கூட்டணுக்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிலிருந்துஆயிரக்கணக்குவரை வேறுபடலாம். இத்தொடர் மிகவும் நீளமானது. பல புரதங்களில் இது மிகவும் சிக்கலான முறையில் முடிச்சுகள் போலச் சுருட்டப்பட்டுள்ளன.ஆனால்இணைப்பில் ஒருவித ஒழுங்கும் காணப்படுகிறது. ஒரே புரதக் கூட்டணுவில் பல்வேறு வகைப்பட்டஅமினோஅமிலக்கூட்டணுக்கள் உள்ளன. புரதக்கூட்டணு பலவேறுவிதமான"செங்கற்”களால்ஆக்கப்பட்டன.இயற்கைஉண்டாகும் புரதங்களில் (மாமிசம், மீன், பருப்பு முதலியவற்றில் காணப்படுவது) முப்பதுக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளனவென்று தெரிய வருகிறது. சில புரதங்களின் கூட்டணுக்களில்இதுவரைகண்டுபிடிக்கப்பட்ட அமினோ அமிலங்களே உள்ளன. இன்னும் சிலவற்றில் சில அமினோ அமிலங்களே உள்ளன. நமக்குத் தெரிந்த எல்லா புரதங்களின் பண்புகளும், அவற்றிலுள்ள அமினோ அமிலங்களின் தன்மைகளைப் பொறுத்த ஒவ்வொரு புரதத்திலும் உள்ள தொடரிலும் அமினோ அமிலங்கள் குறிப்பிட்ட முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இவ்விணைப்பு முறையைப் பொறுத்தே அதன் பண்புகள் இருக்கும். ஒவ்வொரு புரதத்தின் பெளதீக ரசாயனப் பண்புகள். (உ.ம். அதன் கரையும் திறன், வேறு பொருளோடு கூட்டுச் சேருவது அல்லது பிரிவது முதலியபண்புகள்)புரதக்கூட்டணுவிலுள்ளஅமினோஅமிலங்களின்எண்ணிக்கையை மட்டுமல்லாமல் அவை தொடராக இணைக்கப்பட்டுள்ள முறையையும் பொறுத்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான வகையான புரதங்கள் இத்தகைய இணைப்புகளால் உண்டாகின்றன. முட்டையிலுள்ள வெள்ளைக் கரு சுலபமான அமைப்புள்ள ஒரு புரதத்துக்கு உதாரணம். நமது உடலிலுள்ள இரத்தம், தசை, மூளை முதலியவற்றில் காணப்படும் புரதங்களின் அமைப்பு அதைவிடச் சிக்கலானது. எல்லா உயிருள்ளனவற்றின் உடல்களிலும், உறுப்புகளிலும் ஆயிரக்கணக்கான வகையான புரதங்கள் உள்ளன. ஒவ்வொருதாவரத்திலும்,விலங்கினத்திலும் குறிப்பிட்ட வகையான புரதங்கள் உள்ளன. உதாரணமாக குதிரை, காளை, முயல் இவற்றின் இரத்தத்திலுள்ள புரதமும், மனித இரத்தத்திலுள்ள புரதமும் ஒன்றல்ல. இவை வேறு வேறானவை. புரதங்களில் இவ்வாறு ஆயிரக்கணக்கான விதங்கள் இருப்பதால் அவற்றை செயற்கைமுறையில் தயாரிப்பது மிகவும் கடினம். அந்த அமினோ அமிலத்தையும் கரிநீரகப்பொருள்களையும்,அம்மோனியாவையும்ரசாயனச் சேர்க்கையடையச்செய்து பெறலாம். பல அமினோ அமிலங்களை ரசாயன முறையில் இணையுமாறு செய்து புரதங்களைப் போன்ற பொருள்களைப் பெறுவதும் எளிது. ஆனால் இயற்கையில் கிடைக்கும் புரதங்களைப் (உ.ம் : இரத்தத்தில் உள்ளது அல்லது பட்டாணிக் கடலையில் உள்ளது) பெற இவை மட்டும் போதா. ஒரு குறிப்பிட்ட புரதத்தைப் பெற, அப்புரதக் கூட்டணியில் அமினோ அமிலங்கள் எம்முறையில் இணைக்கப் பட்டுள்ளனவோ, அம்முறையில் அவற்றை இணைக்க வேண்டும். இதுதான் மிகவும் கடினமான காரியம். இருபது அமினோ அமிலங்கள் : அவற்றுள் ஒவ்வொன்றிலும் 50 தொடர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். இத்தொடர்களிலுள்ள இணைப்புகளை மாற்றி ஆயிரக்கணக்கான புதிய தொடர்களைப் பெறமுடியும். இவ்வாறு பெறக்கூடிய தொடர்களின் எண்ணிக்கை பலநூறு கோடிகளுக்கும் மேலாகும். சரியாகச் சொல்வதானால் 1 எழுதி அதன் பின் நாற்பத்தெட்டு பூஜ்யங்களை எழுதினால் எவ்வளவோ, அதுதான் தொடர்களின் எண்ணிக்கையாகும். நமது விரலின் பருமனாக இப்புரதக் கூட்டணித் தொடர்களை ஒரு கயிறாக்கினால், அக்கயிற்றைக் கொண்டு எல்லா நட்சத்திரங்களையும் இணைக்க முடியும். மேற்கண்ட உதாரணத்தில் 20 அமினோ அமிலங்களும் 50 தொடர்களும் இருப்பதாக வைத்துக்கொண்டோம். ஆனால் உண்மையில் ஒவ்வொரு புரதத்திலும் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தொடர்களும் சுமார் 30 அமினோ அமிலங்களும் உள்ளன. அப்படியானால் எத்தனை வகையான புரதங்கள் உண்டாக முடியுமென்று எண்ணிப்பாருங்கள். மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையைவிடஇன்னும்பன்மடங்கு அதிகமானவை இருக்க முடியுமல்லவா? இயற்கையில் கிடைக்கும் ஒரு புரதத்தை செயற்கை முறையில் பெறுவதற்கு, அமினோ அமிலங்களை இணைக்கக் கூடிய ஆயிரக்கணக்கான முறைகளில் ஒரு குறிப்பிட்ட முறையை நாம் தெரிந்தெடுக்க வேண்டும். அந்த இணைப்பு அந்தப் புரதத்திலுள்ள தொடரின் அமைப்பாக இருக்கவேண்டும். எப்படியாவது அமினோ அமிலங்களை இணைத்தால் நாம் விரும்பும் புரதம் கிடைக்காது. ஒரு மொழியிலுள்ள எழுத்துக்களை எப்படியாவது சேர்த்து ஒரு செய்யுள் செய்ய முடியுமா? செய்யுளில் எழுத்துக்களும், சொற்களும் சேர்க்கப்பட வேண்டிய முறை தெரிந்தால்மட்டுமே செய்யுளை இயற்றுவது சாத்தியமாகும். அதுபோலவே, ஒரு புரதத்தின் தொடரில் எப்படி அமினோஅமிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்தால்மட்டுமேஅதனைச்சோதனைச்சாலையில் செய்வது சாத்தியமாகும். மிகவும் சுலபமான அமைப்புள்ள சில புரதங்களில் அமினோஅமிலங்களைப் பற்றித்தான் ரசாயனிகள் இன்று அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் சிக்கலான அமைப்புடைய புரதங்களை இன்று செயற்கை முறையில் சோதனைச் சாலையில் உண்டாக்க முடிவதில்லை. ஆனால் வருங்காலத்தில் சிக்கலான அமைப்புடைய புரதங்களை செயற்கை முறையில் உண்டாக்க முடியும் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. புரதப் பொருள்களைச் செயற்கை முறையில் உற்பத்தி செய்வது சாத்தியமா என்ற பிரச்சனைக்கு இப்பொழுது விடைகாண வேண்டிய அவசியமில்லை; ஆனால் புராதன காலத்தில், நமது உலகின் மேற்பரப்பில், இயற்கையான நிலைமையில் எப்படிப் புரதங்கள் என்ற மிகச் சிக்கலான அமைப்புடைய பொருள்கள் தோன்றின என்பதை அறிந்துகொள்வது நமது பிரதானப் பிரச்சனைக்கு விடைகாண) அவசியம்.சமீபகாலம்வரைஇப்பிரச்சனைக்கு விடை காண்பதற்குத் தேவையான சோதனைச் சான்றுகள் கிடைக்கவில்லை. 1953-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இப்பிரச்சனைக்கு விடை காண சில சோதனைகள் நடத்தப்பட்டன. மீதேன், (கரிநீரகம்) அம்மோனியா, நீராவி, ஹைட்ரஜன் ஆகிய வாயுக்களைக் கலந்து, அக்கலவையில்எப்பொருள்உண்டாகின்றன என்று பார்த்ததில் அமினோ அமிலங்கள் உண்டாவதை அறிய முடிந்தது. பூமியின் மேற்பரப்பு தோன்றிய காலத்திலும் மூலப்பொருள்கள் இந்நிலையில்தானிருந்தன.
அமினோஅமிலங்களினின்றும்புரதங்களின் அணுக்கூட்டுகள் தோன்றுவது எளிதல்ல. அவை தோன்ற மிகுந்த சக்தி கொடுக்கப்பட வேண்டும். 3000 காலரி வரைக்கும்உஷ்ணம்கொடுக்கப்பட்டால்தான் இவ்விணைப்பு உண்டாகும். சோதனைச்சாலையில் தேவையான சக்தியைப் பலவகைகளில் கொடுக்க முடியும். அமினோஅமிலங்களைச்சாதாரணஉஷ்ண நிலையில் கரைத்து வைத்தால் அவை ஒன்றாக இணைவதில்லை. ஆயினும் கடந்த சில வருஷங்களில் புரதங்களை செயற்கையில் செய்யும் முயற்சி சிறிதளவு வெற்றிபெற்றிருக்கிறது. அமினோ அமிலங்களைசரியானபடி தேர்ந்தெடுத்துக் கொண்டால், அவை ஒன்றுசேரத் தேவையான சக்தியைக் குறைக்கலாம். லெனின் கிராடில், பேராசிரியர் S.E. ப்ரெஸ்லர் நடத்திய சோதனைகள் முக்கியமானவை.அமினோஅமிலங்களைத் தண்ணீரில் கரைத்து காற்றின் அழுத்தத்தைவிட ஆயிரம் மடங்கு அழுத்தத்தில்அவற்றைச் சேர்க்கையடைய செய்தார். அமினோ அமிலங்களையும், புரதங்கள் சிதைவதால் கிடைக்கும் பொருள்களையும்இவ்வாறுஅழுத்தத்துக்குட்படுத்தி உயர்ந்த அணுக்கூட்டு எடையுள்ள புரதங்களை தயாரித்தார். இச்சோதனைகள் புரதங்களையும், புரதப் பொருள்களையும் செயற்கை முறையில் தயாரிப்பது சாத்திய மென்பதை உறுதிப்படுத்தின. அதுமட்டுமல்ல; பூமியில் கடல்களுக்கு அடியில் மிகுந்த அழுத்தமுள்ள பகுதிகளில் அமினோ அமிலங்கள், புரதங்களாக மாறியிருக்க முடியும் என்பதையும் காட்டுகின்றன. தரை தோன்றிய காலத்தில் புரதப் பொருள்கள் பூமியில் உண்டாயின என்பதை நவீன ரசாயனம் தெளிவாக்குகிறது. அப்புரதப் பொருள்கள், தற்காலப் புரதப் பொருள்களல்ல என்பது உண்மையே. ஆயினும் அவை இரண்டிற்கும் நெருங்கிய ஒற்றுமையும் உண்டு. இன்றைய புரதப் பொருள்களைப் போலவே அவை அமினோ அமிலங்களின் இணைப்பினால் ஆனவை. ஆனால் இணைப்பு முறைகள் வித்தியாசமானவை.
தற்போதையபுரதங்களின்அணுக்கூட்டுகள்சாதாரணப்பொருள்களின்அணுக்கூட்டுகளை விடப்பெரியவை. ஏனெனில் ஆயிரக்கணக்கான அணுக்கள் அவை ஒவ்வொன்றிலும் உண்டு. அவைபோலவே புரதங்களின் அணுக்கூட்டுகளுக்கு பல தொடர்களோடு இணைந்துகொள்ளும் திறனும்உண்டு. இத்திறனே அவைமேலும் பரிணாம வழியில் பல சேதனப் பொருள்கள் உண்டாவதற்கு வழி செய்கிறது.நட்சத்திரத்திலுள்ள ஆவிகளில் கரியும் ஒன்று. அது சேதனப் பொருளல்ல. ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், இவற்றோடு சேரும்திறன் அதற்கு உண்டு. சரியான நிலைமைகளில் இம்மூன்றின் கூட்டுறவால் சேதனப் பொருள்கள் தோன்றின.அதுபோலவேபுரதப்பொருள்களுக்குள் தங்களுக்குள்ளே இணைந்து மாறும் திறன் இருந்தது. அதனால்தான் சரியானநிலைமைகளில் உயிருள்ளனவாக உருவெடுத்தன. இதுவே உயிருள்ளன தோன்றிய விதம்.
நமது பூமியின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் நைட்ரஜன் ஒரு மூலப் பொருளாகக் கொண்ட புரதப் பொருள்களென்னும்சிக்கலானஅமைப்புடைய சேதனப் பொருள்கள் புராதன சமுத்திரங்களில் உண்டாவது தவிர்க்க முடியாததாயிற்று. அவைதான் உயிரினங்கள் என்னும் வீடுகளை கட்டத் தேவையான செங்கல்லும், சுண்ணாம்பும். ஆனால்அக்காலத்தில்வீடுகட்டப்பட்டுவிடவில்லை. சேதனப் பொருள்கள் கடல்களில் கரைந்திருந்தன. அவற்றின் அணுக்கூட்டுகள் கடல் முழுதும் சிதறிக் கிடந்தன. ஒவ்வொரு உயிருள்ளவைக்கும் இருக்கும் இணைப்பும், அமைப்பும் இவ்வணுக்களிடையே அக்காலத்தில் இல்லை.
அத்தியாயம் - 4
புராதனக் கடலில் [1]கோயசர்வேட்டின்
தோற்றம்
பூமியின் வளர்ச்சியின் ஒரு கட்டடத்தில் புராதனக் கடல்களில் சிக்கலான அமைப்புடைய சேதனப் பொருள்கள் உண்டாயின என்று முன் அத்தியாயத்தில் கண்டோம்.தற்காலத்தில்உயிருள்ளவற்றின் உடல்களை உண்டாக்கும் பொருள்களுக்கும்அவற்றிற்கும்ஒற்றுமையுண்டு. கடலில் கரைந்திருந்த அப் பொருள்களுக்கும், தற்காலத்தில் அவற்றை ஒத்திருக்கும் பொருள்களுக்கும் முக்கியமான வித்தியாசமும் உண்டு.உயிர் நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய பொருளுக்கு ‘புரோடோபிளாஸம்’ என்று பெயர். தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள், ஜீவ அணுக்கள் ஆகிய எல்லா உயிரினங்களுக்கும் இச்சத்து உள்ளது. அது சாம்பல் நிறமானது. தண்ணீரும், புரதங்களும், பல சேதனப் பொருள்களும், சில அசேதன உப்புகளும் உள்ளன. அப்பொருள்களின் வெறும் கலவையல்ல ‘புரோடா பிளாஸம்’. அது நுணுக்கமானதும், சிக்கலானதுமானஅமைப்பையுடையது. முதலாவது அது குறிப்பிட்ட அமைப்பை யுடையது. அதன் கூட்டணுக்கள் குறிப்பிட்ட வகையில் இணைக்கப் பட்டுள்ளன.
↑ கோயசர்வேட்: புராதனக் கடலில் கரியின் கூட்டுப் பொருள்கள் கரைந்திருந்தன. அவற்றிடையே ரசாயன மாறுதல்கள் நிகழ்ந்து மிகவும் சிக்கலான அமைப்புடைய பொருள்கள் தோன்றின. அவை தயிர் போல கடல் நீரினின்றும் பிரிந்து வெளிப்பட்டன. இத் தயிர் போன்ற திரவத்தில் மிகவும் நுண்ணிய துளிகள் இருந்தன. அவைதான் கோயசர்வேட்.
இரண்டாவது, அவற்றினுள் பெளதிக மாறுபாடுகளும் ரசாயன மாறுபாடுகளும், ஒன்றன்பின் ஒன்றாகவும் ஒழுங்காகவும், குறிப்பிட்ட ரசாயன விதிகளுக்குட்பட்டும் நிகழ்கின்றன. தற்காலத்தில் உயிருள்ளவற்றிற்குத் தனி உருவமும், சிக்கலான உள்ளமைப்பும், இணைப்பும் இருப்பதைக் காண்கிறோம். இத்தகைய உயிருள்ளவை புராதன சமுத்திரங்களில் காணப்படாதது இயற்கையே. புராதன சமுத்திரத்தின் சரித்திரத்தை சென்ற அத்தியாயத்தில் கண்டோம். சேதனப் பொருள்கள் நீரில் கரைந்திருக்கும்போது அவற்றின் கூட்டணுக்கள், கரைசலின் பரிமாணம் முழுவதிலும் வியாபித்து, ஒழுங்கற்ற முறையில் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. இவ்வகையில் அவை பிரிக்க முடியாதபடி சூழ்நிலையோடுசம்பந்தப்பட்டிருக்கின்றன. கூட்டணுக்கள் ஒழுங்கான முறையில் இணைக்கப்படாததால் அவற்றிற்கு அமைப்புஎதுவும்இல்லை.சூழ்நிலையினின்றும் பிரித்தறிய முடியாதபடி அவை அதனோடு ஒன்றியிருக்கின்றன. சூழ்நிலையினின்றும் பிரிக்க முடியாத சிறப்பான அமைப்பு எதுவுமில்லாத உயிருள்ளது எதுவும் இல்லை என்பதை நாமறிவோம். சேதனப் பொருள்கள் உயிருள்ளனவாக மாறும் முன்னர் சூழ்நிலையிலிருந்து பிரியக்கூடிய, உள்ளமைப்புள்ள தனிப்பொருள்கள் தோன்றியிருக்க வேண்டும்.
குறைந்த கூட்டணு எடையுள்ள சர்க்கரை அல்லது மதுசாரம் தண்ணீரில் கரைந்தவுடன்மிகச்சிறிய துணுக்குகளாகப் பிரிந்துவிடுகின்றன.கரைசலில் கூட்டணுப் பிரமாணமாக, எல்லாப் பகுதிகளிலும் அது சமமாகவியாபித்திருக்கிறது.கூட்டணுக்கள் தம்முள் இணைப்பின்றிச் சுதந்திரமாக இயங்குகின்றன. இக்கரைசல்களின் பண்புகள் கரைந்திருக்கும் பொருள்களின் கூட்டணுக்களின் தன்மையைப் பொறுத்தவையே.அதாவதுகூட்டணுக்களில்அணுக்கள்எவ்வாறுஇணைக்கப்பட்டுள்ளனவோ, அதனைப் பொறுத்தது. கூட்டணுக்கள் உருவத்தில் பெரிதானால், புதிய பண்புகள் அவற்றிற்கு உண்டாகின்றன. அவற்றைப் பற்றி ஆராயும் நூலுக்கு 'கலாய்டல் கெமிஸ்ட்ரி என்று பெயர். சீனி போன்றகுறைந்த கூட்டணு எடையுள்ள பொருள்கள் கரைந்திருக்கும்பொழுதுஎல்லாவிடங்களிலும் சமமாக வியாபித்திருக்கின்றன. சிதையாமல் நிலைத்திருக்கின்றன. இதற்கு மாறாக உயர்ந்த அணுக்கூட்டு எடையுள்ள பொருள்கள் அவ்வாறில்லாமல் கொழுகொழுவென்ற சிறு திவலைகளாகக் கரைசலினின்று வெளிவந்துவிடுகின்றன.சிலசந்தர்ப்பங்களில் இத்திவலைகள் ஒன்றுகூடி சிக்கலானஅமைப்புடையதுணுக்குகளாகின்றன. அவை வெளிவரும் நிகழ்ச்சிக்கு இணைந்து பிரிதல்” (coagulation) என்று பெயர். சில சந்தர்ப்பங்களில் இவை வீழ்படிவாகவெளிவருவதில்லை. ஆயினும் கூட்டணுக்கள் சமமாக வியாபித்திருந்த நிலையில் மாறுதல் ஏற்படுகிறது. சில குறிப்பிட்ட பகுதிகளில் கரைந்திருக்கும் சேதனப் பொருள்களின் கூட்டணுக்கள் கூடி புதிய சிக்கலான அமைப்புள்ள பொருள்களைத் தோற்றுவிக்கின்றன. இப்பொருள்களின்தன்மைகள்,கூட்டணுக்களின் பண்புகளை மட்டுமல்லாமல், அவை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் பொறுத்திருக்கும். உதாரணமாக ஜிலாட்டின் அல்லது கோந்து போன்ற வஸ்துவின் கரைசலை எடுத்துக்கொள்ளலாம். பார்வைக்கு கரைசலுள் ஒன்றுபட்டும் ஒளி புகக்கூடியதாகவும்அவைதோன்றுகின்றன. சூழ்நிலையோடு இப்பொருள்கள் ஒன்றியே காணப்படுகின்றன. ஆனால் அதனை இரண்டு பாத்திரங்களில் எடுத்து ஒன்று சேர்த்தால், கலவை தெளிவிழந்து மங்கலாகும். சிறியனவற்றைப் பெரிதாக்கிக் காட்டும் மைக்ராஸ்கோப் பின் வழியே அவற்றைப் பார்த்தால் அவை கரைசலுக்கு வெளியே தனித்துளிகளாகப் பிரிந்து வந்திருப்பதைக் காணலாம். இதைப்போலவே நீரில் கரைந்திருக்கும், உயர்ந்த கூட்டணு எடையுள்ள புரதங்களும் பிரிந்து வருவதைக் காணலாம். அக் கரைசல்களை ஒன்று சேர்த்தால் தயிர் போலப் புரதம் கரைசலினின்றும் சிலவிடங்களில் பிரிந்து வருவதைக்காணலாம்.இத்துளிகளை"கோயசர்வேட்” என்று அழைக்கிறோம். (லத்தீன் மொழியில் இதன் பொருள் கூடக்குவிவது என்பது) பல ஆய்வுக்கூடங்களில் இதுபோன்ற சோதனைகள் நிகழ்த்திஆராய்கிறார்கள்.
l கரையாத பொருள் ஒரு கரைசலில் உண்டானால் அது கரைசலிலிருந்து வெளிப்படும் உருவத்துக்கு வீழ்படிவம் என்று பெயர்.
பங்கன்பர்க் யாங், குருயூட், மாஸ்கோ சர்வகலாசாலை,ஆகியஸ்தாபனங்களிலுள்ள ஆய்வுக்கூடங்களில் இச்சோதனைகள் நடைபெறுகின்றன. இச்சோதனைகளால் நாம் தெரிந்துகொள்பவை எவை? கோயகர்வேட் துளிகள் புரத முழுவதையும் வெளிக்கொணர்ந்து விடுகின்றன. தெளிவான கரைசலில் தண்ணீர் மட்டுமே மிஞ்சுகிறது. கோயசர்வேட்துளிகளில் புரதத்தோடு சிறிதளவு நீரும் உண்டு. இவை தண்ணீரோடு இரண்டறக் கலவாமல் தனித்து நிலவும் தன்மையுடையவை. இதே பண்பு உயிருள்ளவற்றிலுள்ள புரோடோபிளாஸ்ம்' என்ற உயிர்ச்சத்துக்கும் உண்டு. ஒரு தாவரத்தின் ஜீவ அணுவை நசுக்கி அதனுள்ளிருக்கும் புரோடோபிளாசத்தை தண்ணீரினுள் ஊற்றினால் அது நீரில் கரையாது. சிறுசிறு பந்துக்களைப்போல அவை நீரின்மீது மிதக்கும். செயற்கையில் செய்யப்பட்ட கோயசர்வேட்டுக்கும், இயற்கையில் உண்டான புரோடோ பிளாசத்திற்கும் உள்ள இந்த ஒற்றுமை மிக முக்கியமானது. புரோடோபிளாசம் கோயசர்வேட்தன்மையோடுதானிருக்கிறது என்பதை சமீபகால ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. செயற்கை கோயசர்வேட்டைவிட அதன் அமைப்பு சிக்கலானது. புரோடோ பிளாசத்தில் பல குழம்பு போன்ற பொருள்கள் உள்ளன. கோயசர்வேட்டில் இரண்டே இரண்டு பொருள்கள்தானிருக்கும். ஆனால் கோயசர்வேட்டைப்பற்றியஆராய்ச்சிகளின் மூலமாகத்தான் புரோடோபிளாசத்தின் தன்மைகளை அறிந்துகொள்ளமுடிகிறது. கோயசர்வேட்டுகள்திரவநிலையிலிருப்பினும், அவற்றிற்குக் குறிப்பிட்ட வடிவம் இருக்கிறது. அவற்றின் கூட்டணுக்களும் குழம்பு போன்ற பொருள்களும் ஒழுங்கற்ற முறையில் அல்லாமல், குறிப்பிட்ட தூர இடை வெளியில் ஒழுங்கான முறையில் இணைக்கப்பட்டுள்ளன.சில கோயசர்வேட் துளிகளில், கூட்டணு இணைப்பு முறையை மைக்ராஸ்கோப்பின் மூலம் பார்த்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அவ்விணைப்பு நிலையானதல்ல. இவ்விணைப்பைச் சாத்தியமாக்குகிற சக்திகள் இருக்கும் வரைதான் அவ்விணைப்புகள் நிலைக்கும். அப்புறம் குலைந்துவிடும். அப்புறம் தண்ணின் மேற்பரப்பிலுள்ள ‘நிலை மின்சார’ சக்திக்கு ஏற்றவாறு வேறு இணைப்பு தோன்றும். சில வேளைகளில் சக்தி மாறுதல்களின் காரணமாக கோயசர்வேட் சிதைந்து கூட்டணுக்களாகப் பிரிந்து விடுதலும் உண்டு. அப்படிச்சிதைந்தால் அவை கூட்டணுக்களாகி நீரோடு கலந்துஒன்றியிருக்கும். வடிவமிழந்து விடும். சில வேளைகளில் கோயசர்வேட், திரவ நிலையினின்றும், திடநிலைப் பொருளாக மாறி மேலும் சிக்கலான அமைப்புப் பெற்று ஸ்திரமானதாக மாறிவிடும். இம் மாறுதல்களுக்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, அவற்றினுள் நிகழும் இரசாயன மாறுதல்கள். மற்றொன்று சூழ்நிலையில் நிகழும் மாறுதல்கள்.
முதன்முதலில் பிரிந்து தனித்து நிற்கும் இணைப்பு முறையை, ஆரம்ப கட்டத்தில் இப்பொருள்களிடம் காண்கிறோம். இவ்விணைப்புதான்,கோயசர்வேட்டுகளின் பலஆச்சரியமானதன்மைகளனைத்தையும் நிர்ணயிக்கிறது. இக்-கோயசர்வேட் துளிகள் தங்கள் பக்கத்திலிருக்கும் கரை பொருள்களைக் கரைசலினின்றும் உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தவை. பல சாயங்களை கரைசலில் சேர்த்தால், அவற்றினுள்ளிருக்கும் கோயசர்வேட்டுத் துளிகளும் அந்நிறமடைவதைக் காணலாம்.
கோயசர்வேட்துளியினுள் ரசாயன மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அத்துளிகளால் பாதிக்கச் செய்யும். அதன் விளைவாக இம்மாறுதல்களைப் பாதிக்கச் செய்யும். அதன் விளைவாகதுளிகள் பெரிதாகலாம். எடையில் கூடலாம். ரசாயன அமைப்பிலும் மாறுதல் அடையலாம். புதிய ரசாயன மாறுதல்கள் அவற்றினுள் நிகழலாம். எத்தகைய மாறுதல்கள் நடக்கும், எவ்வளவு வேகத்தில் நடக்கும் என்பவை இத்துளிகள் பெளதீக-ரசாயன அமைப்பைப் பொறுத்தவை. பலவகையான துளிகளில் இவை பல்வேறு விதமாக இருக்கும்.
கோயசர்வேட்டுகளின் பண்புகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பின்னர் நாம் புராதனஉலகத்தின்மேற்பர்ப்பில்கடலினுள் உண்டான புரதப் பொருள்கள் என்ன ஆகியிருக்க வேண்டும் என்று கவனிக்கலாம். இப்பொருள்கள் தற்காலப் புரதங்களைப் போலவே பக்கவாட்டில் தொடர்களைஉடையவை.அத்தொடர்களுக்குத் தனித்தனியான பண்புகள் உண்டு. மேல் வருணித்தபடி, புரதப்பொருள் களுக்குள் இணைப்பு உண்டாயிற்று. பல அணுக்கூட்டுகள் இணைந்து ‘கூட்டுக் குவிதல்’ தோன்றிற்று. பலவகையான புரதப் பொருள்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. சமுத்திரத்தில் குறிப்பிட்டஇடங்களில்கோயசர்வேட்துளிகள் தோன்றுவது தவிர்க்க முடியாததாயிற்று. அந்நிலைமைகள் கடலில் தோன்றின. இருவிதமான உயர்ந்த கூட்டணு எடையுள்ள சேதனப் பொருள்களின் கரைசல்களைச்சேர்த்தால்அவையுண்டாகுமென்று முன்னால் விவரித்தோம். அத்தகைய பல சேதனப் பொருள்களின் கரைசல்கள் கடலில் இருந்தமையால் யாரும் சேர்க்காமலேயே கோயசர்வேட்டுத் துளிகள் தோன்றின.
கடலில் பெருங்காயம் கரைத்ததுபோல் என்று சொல்வார்களே, அதுபோல மிகக் குறைந்த அளவு சேதனப் பொருள்கள் நீரில் கரைந்திருந்தபோதிலும், கோயசர்வேட்தோன்றுவதுதடைபடவில்லை. இன்றும் கடலில், கடல் பிராணிகளின் உடல்கள் அழுகுவதால் மிகக் குறைந்த அளவிலேயே சேதனப் பொருள்கள்உண்டாகின்றன. அப்பொருள்கள்பெரும்பாலும் கடலிலுள்ள நூண்ணுயிர்களுக்கு இரையாகின்றன. சிறிதளவு சேதனப் பொருள்கள் கடலாழத்தில் நீரில் கலந்து கரைந்திருக்கின்றன. கடல் ஆழத்தில் கிடக்கும் சேற்றைச் சோதித்தால், கோந்து போன்ற பொருள்கள் கிடைக்கின்றன. சிக்கலான கோயசர்வேட்டுகள், மிகக் குறைந்த அளவு சேதனப் பொருள்கள் நீரில் இருந்தாலும் உண்டாகக்கூடும். அவை உண்டாக நுண்ணுயிர்களின் இடையீடு தேவையில்லை.புரதங்களைப் போன்ற சேதனப் பொருள்களின் ரசாயன வினையால் கோயசர்வேட்டுகள் கடலில் தோன்றியிருக்க வேண்டும். உயிரின் தோற்றத்துக்கு அவசியமான இம் மாறுதல்கள் பொருள்களின் பரிணாம மாற்றத்தில் மிகவும் முக்கியமானது. அது தோன்றுமுன்சூழ்ந்திருக்கும் கரைசலோடு சேதனப் பொருள்கள் இரண்டறக் கலந்திருந்தன. சமமாக வியாபித்திருந்தன. அணுக்கூட்டுகள் சிலவிடங்களில் குவிந்துசூழ்ந்திருக்கும் கரைசலினின்றும் வெளிப்பட்டு குறிப்பிட்ட வடிவத்தோடு இயங்கும்தன்மையே கோயசர்வேட்டு களின்சிறப்புத்தன்மையாகும். ஒவ்வொரு கோயசர்வேட்டுத்துளிக்கும் தனித்தன்மை யிருக்கிறது. சூழலிலிருந்து அது தனித்து நிற்கிறது. அப்படி நிற்பினும் அது சூழ்நிலையோடு உறவு கொண்டிருந்தது. இவ்வுறவு முரண்பாட்டு மாறுதல் உறவுகளாக இருந்தன. இந்தத் தன்மைதான் (Ciaelectical Unity) பூமியில் உயிர்கள் தோன்றி வளர்வதற்கான தீர்மானமான அம்சமாகும். சேதனப் பொருள்களுக்கு கோயசர்வேட் தோன்றிய பின்னரே குறிப்பிட்ட அமைப்பு உண்டாயிற்று. அது தோன்றுமுன் கரைசலில் கூட்டணுக்கள் பல்வேறு அசைவுகளைஉடையனவாயிருந்தன. கோயசர்வேட் துளியில் இவ்வசைவுகள் ஒழுங்காயின. எனவே அமைப்பின் ஆரம்ப விஷயங்கள் தோன்றின. அந்த அமைப்பு வளர்ச்சி பெற்ற அமைப்பாக இல்லை என்பது உண்மையே. இம்மாறுதல்களைக் கட்டுப்படுத்தும் புதிய விதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.தற்காலபுரோட்டோ பிளாசம் என்னும் உயிர்ச்சத்தின் மாறுதல்களுக்கும் இவ்விதிகள் பொருந்தும். புரோட்டோபிளாசத்தின்உட்பொருள்களுக்கும் தமது கோயசர்வேட்டுகளின் உயிர் பொருள்களுக்கும் சில ஒருமைப்பாடுகள் உள்ளன.
மேற்கூறிய காரணங்களால் இத்துளிகளை (கோயசர்வேட்துளிகளை)உயிருள்ளனவென்று கருதலாமா? முடியாது. புரோட்டோபிளாசம் அல்லது உயிர்ச்சத்து இவற்றைவிடசிக்கலானதும்நுண்மையானதுமான அமைப்புடையது என்பது மட்டுமல்ல இயற்கையாகவோ, அல்லது செயற்கை முறையிலோ கிடைத்த கோயசர்வேட் துளிகள் குறிப்பிட்ட சூழ்நிலையில்உயிர்வாழ்க்கையின்நிகழ்ச்சிகளை நடத்துமளவுக்குத் தகுதியான உள்ளமைப்பு உடையதாக இல்லை. அத்தகைய உள்ளமைப்பு புரோட்டோ பிளாசத்துக்கும், வேறு உயிருள்ளன எல்லாவற்றிற்கும் இருக்கிறது. இவ்வாறு சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றமடைவது ரசாயன விதிகளை மட்டும் பொறுத்ததல்ல. உயிர் வாழ்க்கை தோன்றியது முதல் பொருள்களின் பரிணாமத்தில் உயிர் நூல் விதிகளும் செயல்படத் தொடங்கின. தொடரும் ..
கீழ்காணும் படத்தை சற்று தேவைக்காக நான் இணைந்தவை
No comments:
Post a Comment