சோசலிசம் கற்பனை அல்ல முதலாளித்துவ சமூகத்தின் உள் முரண்பாடுகள் காரணமாக புறநிலை அவசியமாக எழுதுவது, பாட்டாளி வர்க்கம் அதனை உள் கிரகித்து தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு உலகை மாற்றி அமைக்க வேண்டும்.
பல்வேறு நாடுகளில் நடந்த புரட்சிகளின் அனுபவங்களையும் கிரகித்துக் கொண்டு ஒவ்வொரு நாட்டின் தனித் தன்மைக்கு ஏற்ப குறிப்பான நடைமுறைகளை வகுத்துக்கொண்டு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முன்னணி படையினரான கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்பட வேண்டும்.
பல நாடுகளில் நடந்தேறிய சோசலிச புரட்சி நமக்கு மார்க்சிய லெனினியத்தை போதித்துள்ளது அதனை சரியான முறையில் புரிந்து செயல்பட வேண்டியது புரட்சியை நேசிக்கும் கட்சியின் வேலை மட்டுமல்ல புரட்சியை நேசிப்போர் அறிந்திருக்க வேண்டும்.
ரஷ்யா சோசலிச புரட்சி வெறும் சமுக, அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளின் துறையில் மட்டுமே புரட்சியை குறிக்கவில்லை இவற்றுக்கும் மேலாக சித்தாந்தத்தில் பாட்டாளி வர்க்கத்தவரின் மனங்களில் அனைத்து விதமான அழுக்குகளில் இருந்து விடுவித்துக் கொள்ளும் வகையிலான புரட்சி குறித்தது. ஒரு புதிய மனித உலகுக்கு அறிமுகம் செய்யும் புரட்சியை கூட அது குறித்தது.
இந்த மாபெரும் நவம்பர் சோசலிச புரட்சியின் விளைவாக உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் புரட்சிகர ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்கும் மாறி சென்றனர். உலக பாட்டாளி வர்க்க இயக்கத்தில் தற்காலிகமான பின்னடைவு என்று ஏற்பட்டுள்ளன. உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்தில் ஏற்பட்ட சந்தர்ப்பவாத போக்குகளான வலது இடது திரிப்புவாதம் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் காரணமாகவும் புதிய சூழல்களைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தம்முடைய பார்வையையும் நடைமுறையும் வளர்த்துக் கொள்ள அவசியமாக உள்ளது புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் இன்றைய நிலை.
சோசலிச புரட்சி வெற்றியடைந்த நாடுகளில் முதலாளித்துவ மீட்சியின் அபாயத்தை லெனின் எச்சரித்தவாறும், முதலாளித்துவமா சோசலிசமா எதுவெல்லும் என்பது தீர்மானிக்கப்படவில்லை என்று மாவோ எடுத்துக் காட்டியவாறும், சோசலிச சமுதாயத்திலும் வர்க்க போராட்டத்தின் தொடர்ச்சியின் விளைவாக இந்த முதலாளித்துவ மீட்சிகள் நடந்து அரசு அதிகார வர்க்க முதலாளித்துவமாக மாறி உலக ஏகாதிபத்திய கட்டமைப்புக்குள் சிக்குகின்றன. ஏகாதிபத்திய நெருக்கடிக்குள் சிக்கி விரைவில் சின்னாபின்னம் ஆகின்றன . எனவே வெற்றி பெரும் சோசலிச நாடுகளிலும் மக்கள் ஜனநாயக நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொடர்ந்து அமல்படுத்துவது சோசலிச புரட்சியை தொடர்ந்து ஆழப்படுத்த வேண்டும் என்ற லெனினுடைய மாவோவுடைய போதனைகளை இதுவரை நடந்த பாட்டாளி வர்க்க புரட்சிகளின் வரலாறு உறுதிப்படுத்துகிறது.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னால் ஏகாதிபத்திய அமைப்பு அமெரிக்கா ஏகாதிபத்திய தலைமையின் கீழ் தன்னை சீரமைத்துக் கொண்டது. மூன்றாம் உலக நாடுகளில் கபடத்தனமாகவும் கொடூரமாகவும் அதிநவீன காலனி வடிவில் பல வகைகளில் ஒடுக்கியும் சுரண்டியும் வருகிறது. இதற்கு மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கம் ஏகாதிபத்திய தரகர்களாக இளைய பங்காளிகளாக மாறி தன் நாட்டு மக்களை கொள்ளை அடிக்கவும் ஒடுக்கவும் துணை போகின்றனர் இதற்கு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் சந்தர்ப்பத பிரிவினரும் ஒத்துழைப்பு தருகின்றனர். ஆக உண்மையில் ஏகாதிபத்தியத்தின் கொடூர கரங்களை ஒழிக்கும் பொழுது உள்நாட்டு பிற்போக்கு எதேச்சாதிகாரத்தையும் தூக்கி எறிய வேண்டிய அவசியம் உள்ளது. இவை பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முக்கிய பணி ஆகும்.
ஆக பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமையை ஆற்றுவதற்கு தனக்குள் தோன்றும் வலது இடது சந்தர்ப்பவாத போக்குகளை எதிர்த்து தனது தத்துவ ஆயுதமான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்தி பிடித்து போராட வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் விஞ்ஞானபூர்வமான தத்துவமும் சித்தாந்தமும் மார்க்சிய லெனினியமே.
சோசலிசம் கற்பனை அல்ல முதலாளித்துவ சமூகத்தின் உள் முரண்பாடுகள் காரணமாக புறநிலை அவசியமாக எழுதுவது, பாட்டாளி வர்க்கம் அதனை உள் கிரகித்து தன்னை மாற்றி அமைத்துக் கொண்டு உலகை மாற்றி அமைக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் நடந்த புரட்சிகளின் அனுபவங்களையும் கிரகித்துக் கொண்டு ஒவ்வொரு நாட்டின் தனித் தன்மைக்கு ஏற்ப குறிப்பான நடைமுறைகளை வகுத்துக்கொண்டு பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முன்னணி படையினரான கம்யூனிஸ்ட் கட்சியினர் செயல்பட வேண்டும்.
No comments:
Post a Comment