இந்தியாவை ஒரே நாடாக கட்டியமைக்க ஆங்கிலேயர் செய்த பல வேலைகளில் மத, ஜாதிய அடையாளமும் அடங்கும். அதன் முக்கிய பணிகளை பற்றி சில என் தேடல் கீழே பல நூல்களின் வாயிலாக... விவாதிக்கலாம் கருத்திடலாம் தோழர்களே
பிரிட்டிஷ்யாரும் ஜாதி கோட்பாடுகளும்
காலனியஆதிக்கவாதிகள்இந்தியா எனும் கருத்து உருவாவதற்கு எவ்வாறு தூண்டப்பட்டனர்என்று அறிவோம்.இந்தியா எனும் கருத்து உருவாக்கத்தில் ஒரு முக்கியகூறு உண்டு இந்திய மரபு என்பதாகும்.காலனி ஆட்சியாளர்கள் இந்திய நாகரீகம் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் காலணி நிர்வாக அறிக்கைகளும் தேசிய கற்பிதங்களும் பிரிட்டிஷ் ஆட்சியை கட்டியமைக்க பயன்படுத்தினர்.
ஆங்கிலேயர்கள் ஜாதிகளின் இருப்பை தீவிரமாக பரிசீலித்தனர். அடுத்தடுத்து குடி மதிப்புகளில் இந்திய மக்கள் அனைவரையும் ஜாதியாகவே பாகுபடுத்த முயன்றனர். எல்லோரும் ஏதோ ஒரு ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஜாதி அடையாளமே உண்மையான அடையாளம் என்றும் கருதினர். இத்தகைய முன்னெடுப்பால் ஜாதி உண்மையானதாகவும் மேலும் வலுப்பெற்றதாகவும் மாறியது. (ஜாதி தோற்றம் வளர்ச்சியும் ஓர் அறிமுகம் சுரிந்தர் எஸ் ஜோத்கா தமிழில் பக்தவத்சல பாரதி நூல் பக்கம் 22 - 23 காலச்சுவடு பதிப்பகம்).
இவ்வகையாக மிஷனரிகளும் காலனி அதிகாரிகளும் வெவ்வேறு வகையில் ஜாதி உருவாக்கத்தில் கருத்துகளில் பங்களித்துள்ளனர்.இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காக இந்து மத நூல்களையும் அந்நூலை விளங்கிக் கொள்ள அன்றைய பண்டிட்டுகளையும் சாஸ்திரிகளையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
'இப்பனூல்களின் கருத்து ஏற்பது என்பது இந்திய சமூகம் சமூகம் அசைவற்றது காலங்களை கடக்காதது காலத்தால் மாற்றமுறாதது.....இந்திய சமூகம் பற்றிய பல்வேறு பிரதேசங்களை இடையிலான வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை' (மேல் அதே நூல் பக்கம் 23) .
ஜாதிப்பற்றிய தூய்மோனின் கோட்பாடு இந்தியா பற்றிய அவர்களின் மேற்கத்தியர் கோட்பாட்டை வலுப்படுத்துகிறது .இந்தியாவின் ஒட்டு மொத்தத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் அதன் தனித்துவமான சிந்தனை முறை அல்லது நடைமுறையை விளக்குகிறது இன்னொரு வகையில் சொல்வதனால் இந்திய சமூக பண்பாட்டு வாழ்வின் பகுதியாக அமைகிறது என்பதனை ஜாதி என சுருக்கலாம்.இந்தியாவின் இந்த பல பனுவல்கள் தருவது ஜாதி அமைப்பை கொண்ட இந்திய சமூகம் காலம் காலமாகவே அதன் அகமுரண்பாடுகளோடு மாறாமல் வந்துள்ளதாக இப்பனுவல்கள் சொல்கின்றன.இந்த தேசத்தின் பூர்வீக மக்கள் மாற்றத்திற்கான எந்த முகாமையும் கொண்டிருக்கவில்லை எனும் தோற்றம் ஏற்படுகிறது இத்தகைய வாதங்கள் மேற்குலகம் இந்தியாவே காலனியாக மாற்றியதற்கான நியாயப்படுத்துவதற்கு வழங்கப்பட்டன (அதே மேல் நூல் பக்கம் 33 -34 ).
மேலும் காலனி ஆதிக்காலத்தில் ஜாதி உருவாக்கம் எப்படி இருந்தது என்பதை பற்றி ஒரு சிறிய புரிதலுக்கு.
பொதுவாக இன்று காலனி ஆதிக்க காலத்தில் ஜாதி அமைப்பில் ஒரு நெகிழ்ச்சியையும் சனாதன சிந்தனையின் செல்வாக்கில் இருந்து வீழ்ச்சி ஏற்படுத்தியதாக நம்பப்படுகின்றது. ஆனால் நாம் அனுமானிப்பதை விட மிகத் தீவிரமான வித்தியாசமான முறையில் ஜாதி அமைப்புடன் காலனியம் வினையாற்றி உள்ளது என்கிறார் நிக்ட்ரக்ஸ் (ஆங்கில ஆவண எழுத்தர்).
காலனி அரசு புதிய வடிவிலான சிவில் சமூகம் ஒன்றை அறிமுகம் செய்தது என்றாலும் இந்த முந்தைய ஆட்சி எச்சங்கள் வடிவங்களை நவீன சிவில் சமூகத்தில் இருந்து விலக்கி வைத்து, அவற்றில் இடையீடு செய்வதில்லை என்ற பாவனையில் அவற்றில் காலத்தால் நிகழ்த்திருக்கக்கூடியதான மாற்றங்களைத் தடுத்து,அவற்றின் முந்தைய வடிவம் என்ற பெயரில் ஜாதி பற்றிய அசைவியக்கமான நோக்கங்களை தவிர்த்து பார்ப்பனிய நோக்கிலான உறைநிலை நோக்கத்தை அதிகாரப்பூர்வமாக்கியது(ஜாதியை ஒரு மாறா நிலை கண்ணோட்டத்தில் நிறுத்திய பெருமை இவர்களை சாரும்)இவர்கள் செய்த இந்தப் பார்வை கோளாறு பாரதூரமான விளைவுகளை உருவாக்கியுள்ளன.
விசித்திரமான ஜாதி நிறுவனம் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயே அதிகாரிகள் தங்கள் ஆய்வுகளை முன் வைத்தனர். எலியாட், டால்டன் ஷெர்ரிங், நெஸ்பீல்டுபோன்ற சில அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டி தரவுகளை சேகரித்து தமது விமர்சனங்களுடன் அவற்றையும் வெளியிட்டனர். சர் ஹெர்பெர்ட் ரைஸ்லின் வழிகாட்டுதலின் கீழ் 1901 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமை அடைந்தது.1891 ஆம் ஆண்டின் வகைப்பாட்டை,"தற்காலத்தில் சமூக முன்னுரிமை உள்ளூர் பொதுக் கருத்தாக அங்கீகரிக்கப் பெற்றிருப்பது சில குறிப்பிட்ட ஜாதிகளை இந்து அமைப்பு முறையில் உள்ள பிற ஜாதிகளின் நவீன பிரதிநிதிகளாக மாற்றுவதில் வெளிப்படுத்தியுள்ளார்". என்கிறார் ஜி.எஸ்.குரியே (இந்தியாவில் சாதியும் இனமும் என்ற நூலில்).
சாதிய சமூகத்தில் ஒரு நபரிடம் அவர் ஜாதியை பற்றி வினவும் பொழுது அவர் தனது ஜாதி, உபஜாதி, புறமணமுறை, அனலோமாகுழு ஆகியவற்றை கூறலாம். தமது ஜாதிப் பெயரை காட்டிலும் சிறந்த பட்ட பெயர்களை குறிப்பிடலாம். தனது தொழில் அல்லது தான் வாழும்பகுதி பெயரை குறிப்பிடலாம். இவ்வாறு குழப்பமான பதில் கிடைத்த போதிலும் ரைஸ்லி வழிமுறையை தேர்வு செய்துள்ளார்.
பல்வேறு ஜாதிகளை சேர்ந்தவர்களும் தமது தகுதியை உயர்த்திக்கொள்ள இவ் வாய்ப்பை பயன்படுத்த முடியும் என்றனர். தமது உறுப்பினர்களை திரட்டி மாநாடு நடத்தி அவர்களுக்கு கௌரவம் தரத்தக்க வகையில் தகுதியை உயர்த்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான குழுக்களை அமைத்தனர். எதிர்குற்றச் சாட்டுகளும் முழு வீச்சில் எழுந்தன.உயர்சாதியினை தவிர பிற ஜாதித் தலைவர்கள் மக்கள் தொகை கணக்கு எடுப்பை வாய்ப்பாக கருதி உயர் ஜாதியினரால் மறுக்கப்பட்டு வந்த சமூக அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒன்றாக அதை பயன்படுத்தினர்.
சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி 1911ஆம் ஆண்டு பின்னர் எழுதினார்,"கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சில அம்சங்களில் ஜாதியை உணர்வுகள் பெரும்பளவு மேலோங்கி வருவதை காண முடிகிறது. சாதிய சபைகள் உருவாகியுள்ளன ஒவ்வொன்றும் தமது சமூகக் குழுவில் ஏராளமான மரியாதை உயர்த்தி பிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன "என்று குறிப்பிட்டுள்ளார்.
1872 ஆம் ஆண்டு முதல் அடுத்தடுத்து நடைபெற்று வந்த மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் சாதிய உணர்வு மேலோங்கியதை இதன் ஒட்டுமொத்த விளைவுகளை காணலாம்.
பொது சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சில நிர்வாக நடவடிக்கைகளின் மூலமும் ஜாதிகளுக்கு இடையில் நிலவிய அசமத்துவம் குறிப்பாக கீழ் ஜாதியினர் மீது காட்டப்பட்ட பாரபட்சமாக அகற்றப்பட்டன. இருந்தும் கோயில்களில் இந்து என்று பேசிக் கொண்டாலும் சமத்துவம் கொண்டு வர முடியவில்லை அரசு நிதி அளிக்கும் கோயில்களிலும் விதிவிலக்குஅல்ல.
சமத்துவ சட்டம் இயற்றப்பட்ட அரசாலே கடைநிலை சாதிகளின் உரிமை நிலை நாட்டமுற்படுகையில் அரசின் பாராமுகமாக உள்ளது.
தனிநபர்கள் தாங்கள் இந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்று பழைய உணர்வை குறைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. சாதிய பழக்கவழக்கங்களை மாற்ற அரசாங்கத்தால் இயலவில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவை சாதியக் குழுக்களின் ஒருங்கிணைப்புக்கு ஊக்கமளித்தது. தொழில் ரீதியாக சாதிகளை வகைப்படுத்துவதற்கு எதிராக பரந்தபட்டு கிளர்ச்சி ஏற்பட்டது! இச் ஜாதிகள் ஆங்கிலேய அரசாங்கத்தால் பெருமளவில் கட்டமைக்கப்பட்ட தனித்த ஜாதிகளாக போற்றிப் பாதுகாக்கப்பட்டன. நிலபத்திரங்கள் அரசு ஆவணங்கள் பழைய ஜாதி இறுக்கம் மேலும் கெட்டிபடுத்தும் விதத்தில் அமைந்திருந்தன.
முன்னர் ஒருவரது உண்மையான ஜாதியை கண்டறிய இயலாத நிலையில் மரபுவழி தொழிலுடன் அவரை அடையாளப்படுத்தி ஜாதியை கண்டறிந்தோம். ஜாதிய முறையையும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளின் மீதான அதன் தாக்கத்தையும் நாம் கண்டிருக்கிறோம். அதே சமயம் நாம் கண்டிருக்கும் அமைப்பு முறைக்கு நாமே பெரும் அளவு பொறுப்பாவோம். நாம் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் சோனார் லோகார் போன்ற ஜாதியினர் காணாமல் போயிருப்பார்கள். அடையாளப்படுத்துவதிலும் வகைப்படுத்துவதிலும் அரசு காட்டிய ஆர்வம் ஜாதி முறையை உறுதிப்படுத்துவதற்கு இட்டுச் சென்றது என்கிறார் ஆங்கிலேய கணக்கெடுப்பாளர்.
ஆங்கிலேயருக்கு முன் அவற்றில் பிரபத்துவ சாதிகளை தவிர மற்ற உறுதிப்படுத்தப்படாத நெகிழ்வுத் தன்மையில்தான் சாதிகள் இருந்தன. அரசாங்கம் ஜாதியை புறக்கணித்திருந்தால்கடைநிலைஜாதியினரிடையே முற்றிலும் மாறுபட்ட வேறொன்று அவை படிப்படியாக மாற்றி இருக்கலாம் என்கிறார் மிடில்டன் என்ற மக்கள் தொகை கணக்காளர் 1921ஆம் ஆண்டு.
சென்னை மாகாணத்தில் காலணி ஆதிக்கவாதிகள் ஜாதியை நிர்ணயிக்க கேட்ட கேள்விகள்கீழ் வருவன.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரியாக மக்களை பிரித்த முதல் பணியினை எப்படி ஆங்கிலேய ஆட்சியர் செய்தனர் என்பதே இந்த குறிப்பு.
1). சாதியின் பெயரைப் பற்றிய தொன்மையானதும் தோராயமான வரலாறு.
2). சாதியின் மூலம்.
3). குறிப்பிட்ட ஜாதியின் பரம்பரை தொழில் மற்றும் தற்போதைய தொழில் முறைகள்.
4). மற்ற வகுப்பினரோடு ஒப்பிட்ட நிலைமை.
5). மதம்.
6). பூணூல் அணிவது உண்டா இல்லையா?
7). புரோகிதர்கள் அல்லது குருக்கள்.
8). பிறப்பு சம்பந்தமான சடங்குகள்.
9). திருமண சடங்குகள்.
10). மரணம் மற்றும் ஈமக்கிரிகைச் சடங்குகள்.
11). திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை வயது.
12). விவாகரத்து.
13). விதவை மறுமணம் (அறுத்துக் கட்டுதல்)
14). சாதிகளின் பொதுப் பெயர்கள்.
15). ஆடை அணிகலன்கள்
16). உணவு
17). மது அருந்தும் வழக்கம்
18). ஜாதியில் உட்பிரிவு பெயர்கள்
19). மேலே கூறாத சிறந்த வழக்கங்கள்.
இவை ஆரம்ப கால சென்சஸ் சபையாரின் கேள்விகளாக வர்ண சட்டத்தின் அடிப்படையில்பட்டியல் இடபட்டதை காணமுடிகிறது.
மேலும் பிராமணர்களோடும் பிராமணத்துவத்தோடும் புழங்கும் அணுக்கம் விலக்கம் அடிப்படையில் ஜாதிகள் மேல் கீழாக ஒழுங்கமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 14பிரிவாக ஒழுங்கு அமைக்கப்பட்ட பட்டியல் ( Subsidiary table I to XIV) கீழ் வருமாறு இருந்தது :
1). பிராமணர்களும் அதன் பிரிவினரும்
2). சத்திரியர்களும் அதன் பிரிவினரும்
3). வைசியர்களும் பிரிவினரும்
4). சத்சூத்திரர்கள்
5). தங்களது சடங்குகளுக்கு பிராமணரை அமர்த்தும் சூத்திரர்கள்.
6). எப்போதாவது பிராமணர்களை அமர்த்தும் சூத்திரர்கள்.
7). பிராமணர்களை ஒருபோதும் அமர்த்தாத சூத்திரர்கள்.
8).தீண்டாமலே தீட்டுப்படும் ஜாதிகள் ஆனால் மாட்டு இறைச்சி உண்ணாதவர்கள்.
9). மாட்டு இறைச்சி உண்டாலும் தீண்டுவதால் மட்டும் மாசுப்படும் ஜாதிகள்.
10). மாட்டிறைச்சி உண்பவர்களும் தீண்டாமலே மாசுப்படுத்தும் சாதியினரும்
11).பிராமணர்களின் மத ரீதியான மற்றும் சடங்கு ரீதியான மேலாண்மை ஏற்க மறுக்கும் ஜாதியினர்
12). தெளிவற்ற அடையாளம் கொண்ட ஜாதியினர்.
13). இந்த ராஜதானிக்கு அன்னியமான ஜாதியினர்.
14). ஜாதியை குறிப்பிடாதவர்கள்.
இந்தப் பட்டியலை உருவாக்கியவர் சனாதனத்தை தூக்கிப்பிடித்த ஆங்கிலேயர்களின் தேவையறிந்து ஒருவர் தான்.
இந்தப் பட்டியலில் 30%பேர் சத்சூத்திரர்களாகவும் பதினாறு சதவீதம் பேர் சூத்திரர்களாகவும் பட்டியலிட பட்டிருந்தனர்.அதாவது சடங்கார்ந்த பிராமணத் தலைமை ஏற்றவர்கள் இவர்கள்.
சத்திரிய உரிமையை கோரிய பள்ளிகள்,வன்னியர்கள் சூத்திரப்பட்டியலில் மட்டுமே இடம் பெற்றனர். கள்ளர், மறவர் சூத்திரப்பட்டியலில் கடைசி தொகுதியில் இடம் பெற்றனர். சாணார்களும்/ நாடார்களும் பரையர்,பள்ளர்,புலையர் வள்ளுவராகியரோடு தீண்டாமலே மாசுபடுத்தும் மாட்டு இறைச்சி உண்ணாதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சத்ரிய அந்தஸ்து கோரிய இந்த ஜாதிகளின் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் முன்னெடுப்புகள் முறியடிக்க பட்டன.
வன்னியர்களில் பள்ளி என்ற பிரிவு இருந்ததினால் பள்ளர்களுடன் இணைத்து பார்க்கப்பட்டனர்.அதேபோல நாடார்களும் அவர்கள் சாணார் அடையாளம் பஞ்சமர் பட்டியல் சேர்க்கப்பட்டது.இந்த இரு சாதி பிரிவினரும் வெகு காலம் சத்ரிய அடையாளத்தை கோரியபடி இருந்ததை காண முடியும்.
இந்த சாதி அடையாள மீட்புப் போராட்ட வரலாறு தமிழக வரலாற்றின் மிக முக்கிய சாதிப் போராட்டத்தின் வரலாறாக உள்ளது.சாதிப் போராட்ட வரலாற்றில் முக்குலத்தோரும் கொங்கு வெள்ளாரும் காலத்தால் வெகுப்பின்னரே வந்தனர், அதாவது 1920 களில் தங்கள் ஜாதி அடையாளங்களை மீட்க முன்னெடுத்த இவர்களுக்கு முன்னோடிகளே வன்னியரும்,நாடாரும் அதற்கு ஒரு நூற்றாண்டு முன்னரே அதை செய்ய தொடங்கி விட்டிருந்தனர்.
வன்னியருக்கு அதிகாரமயமான மெட்ராஸ் பகுதிகளில் அணுக்கத்திலும் வாழ்ந்ததும் கல்விவாய்ப்பும் இதற்கு உந்துதலாக இருந்திருக்கும்.சாணார் நாடார்களைப் பொறுத்தவரை அவர்களது போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உருவானபோதும் அதன் நிலை பெற்றதும் தொடர்ந்ததும் கிறிஸ்துவ ஆதரவில் என்றால் மிகையில்லை.
19ஆம் நூற்றாண்டு முழுவதுமான ஜாதிகளின் நூல்கள் பார்ப்பன மேலாண்மை எதிர்ப்பதிலும் அவர்களின் ஆதரவை நாடுவதிலும் அங்கீகரிப்பதிலும் கொண்டு சென்றுள்ளது. பார்ப்பன ஆதரவும் ஜாதி மேலாதிக்கதிற்கு பார்ப்பனர்கள் பரிந்துரையும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருமக்கள் தொகை கணக்கெடுப்பிலும் காலணி அதிகாரிகள் அவர்கள் நோக்கத்தைஒட்டியே எதிர்த்தும் சேர்த்தும் வைத்துள்ளனர் அவைத்தொடர்ந்து வர்ணக் கோட்பட்டை நோக்கியே நகர்ந்தபடியே இருந்தன.
காலனி ஆதிக்கத்தின் ஆரம்ப காலம் தொடங்கிய ஜாதி வரலாற்று நூல்கள் இருபதாம் நூற்றாண்டில் மத்திய காலம் வரை தொடர்ந்தபடி இருந்தன.சாதிய வரலாற்று நூல்கள் எண்ணிறந்தவை அவை கண்ணில் படுபவை சில தான்.
(மூலம் நமக்கு ஏன் இந்த இழிநிலை ஜாதி மாநாடுகளில் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார் தொகுப்பும் பதிப்பும் வீ எம் எஸ் சுப குண ராஜன் கயல் கவின் புக்ஸ்).
முந்தைய சமூக அமைப்புகளில் சமூகக் குழுக்களின் மோதல்களை தீர்க்க அரசன் இருந்தான் அவனுக்கு ஓரளவிலான வழைமையும் தொடர்பும் தீர்ப்பளிப்பதற்கான அனுபவ ஆதாரங்களும் இருந்தன.காலனிய ஆட்சியில் அதிகாரம் முன் தொடர்ச்சியற்றதாகவும் இங்குள்ள முரண்களை புரிந்து கொள்ளும் வல்லமை அற்றதாக இருந்தது. அதன் காரணமாக நூல் ஆதாரங்களை சார்ந்து நிற்க வேண்டிய தேவை இருந்தது. அந்த நூல்கள் முழுமையாக சனாதன சமஸ்கிருத அடிப்படையிலானவையாகவும் ஒரு சமூக ஒழுங்கின் முதிர்ச்சியை புரிந்து கொள்ளாத காலத்தால் பழமை வாய்ந்த அந்தக் காலகட்டத்தின் சமூக அடையாளமாக சமூக உறவுகளாக ஜாதி அடையாளமாக அதன் அடிநாதமாக மதரீதியான தர்ம நூல்களாக இவை காலனி ஆட்சியின் தூண்களாகளாயின.
இன்னும் சில போக்குகள்
ஆங்கில ஆட்சியில் அரசு அலுவலர்களும் சட்டமன்ற பதவிகளும் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் அல்லாதார் என்ற சண்டை சச்சரவுகளுக்கு இடையில் இவையெல்லாம் காலனிய அரசு அதிகார கட்டமைப்பில் தத்தமக்குரிய பங்கேற்பு கோருவதற்கான என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரிக்கையின் இன்னொரு பரிணாமம் இதில் முதல் பயனை உய்தவர்கள் பிராமணர்கள் இருந்ததில் வியப்பில்லை.
1860 முதல் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கல்வி நவீன பொருளாதாரம் நவீன அரசியல் நிறுவனங்கள் ஆகியவற்றின் முதற் பயனை பிராமணர்களே நுகர்ந்தனர். இங்கு அதற்குமுன் பிராமண சிந்தனை போக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் இருந்தது. இங்கே பிராமணக் குடும்பங்கள், வேளாளர் நிலப்பிரபுத்துவதுடன் முரண்பாடு கொண்டிருந்தனர்.
நவீன கல்வி பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த வேளாளர்கள் விரைவாக நலன் பெற்றனர். இப்போது காலனிய அரசு அதிகாரத்தின் இளைய பங்குதாரர்களாக வேளாளர்கள் ஆவதில் பிராமணர்களுடன் முரண்பட்டனர்.
பணப்பயிர் பொருளாதாரத்தின் விளைவாக கவுண்டர், நாயுடு, நாடார், வன்னியர், செட்டியார் ஆகிய ஜாதிகளில் இருந்த பணக்கார விவசாயிகள், வட்டி முதலாளியாக, ஆலை முதலாளியாக வளர்ந்தனர். இத் தோற்றமாறனது, அதுவரை பிராமணர்கள் மட்டுமே செய்துவந்த வட்டி முதலாளி, தரகு வணிகர், ஆலை முதலாளி ஆகிய வர்க்கங்கள் இந்த ஜாதிக்குள்ளும் தோன்றின. அந்த ஜாதிக்குள் இருந்த சிறுபான்மை இவ்வாறு புதிய வர்க்கமாக உருவெடுத்தனர். எனினும் இந்த புதிய வர்க்கம் தத்தம் பழைய ஜாதி அடையாளத்தை இழந்து விடவில்லை . அதற்கு மாறாக ஜாதியில் உள்ள பெரும்பான்மையான மக்களின் பலத்துடன் புதிய ஜாதிய கோரிக்கைகளை முன் வைத்தனர்.
புதிய பொருளாதார தகுதியுடன் புதிய கலாச்சார தகுதியும் இந்தப் புதிய வர்க்கங்கள் தோன்றின, எனவே இது காலனிய அரசு அதிகார கட்டமைப்பில் அரசியல் பொருளாதார நிலைகளில் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் கீழ் உள்ள பிராமண, நிலப்பிரபுத்துவ, தரகு வணிக, வட்டி முதலாளிகளின் ஆலை முதலாளிகளின் நலன்களை முன்னிறுத்தும் வேலையாகும். இருந்தும் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற தொடர் எதிர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது பல்வேறு சாதிகளில் இருந்து தோன்றிய பணக்கார விவசாயிகளும் முதலாளிகளும் படைப்பாளிகளும் பிராமண ஆதிக்கத்தை எதிர்க்க முனைந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே இத்தகைய எதிர்ப்பை காலனி ஆதிக்க ஆதரவு என்ற பரந்துபட்ட அடைப்புக்குள் காண வேண்டும்.
முதல் காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பிராமணர் கலாச்சார எதிர்ப்பு அரசு ஆதரவு பார்ப்பனர் அல்லாதவர்கள் இடையே உள்ள ஜாதி வேறுபாடுகளை களைதல், சமயச் சீர்திருத்தங்கள் வருண சிரம ஒழிப்பு என்பனவாக இருந்தன.
இன்றும் சாதி ஒடுக்குமுறை இருந்தாலும் இந்த ஜாதியில் தோன்றிய புதிய வர்க்கங்களான அதிகாரிகளும் முதலாளிகளும் வணிகர்களும் தத்தம் நலன்களை அடைந்து கொள்வதில் ஜாதியின் எல்லா மக்களையும் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு பிரதானமாக உள்ளது.
புதிய மேல்நிலை வர்க்கங்கள் சாதிகளை கடந்து தமக்குள் ஒருங்கிணைவு ஏற்படுத்திக் கொண்டனர் இதுவே பிராமணரல்லாதோர் என்ற பெயரில் ஒளிந்து கொண்டது.அதுமட்டுமின்றி பிராமணர் இடத்தில் உள்ள மேல்நிலை வர்க்கத்தில் இவர்களும் உறவு கொண்டுள்ளனர்.
ஆனால் உழைக்கும் ஏழை எளிய மக்கள் எல்லா ஜாதிபிரிவினருக்கிடையே உள்ளனர், அவர்கள் இன்று ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இந்த பல்வேறு நிலைகளில் இருந்து ஒன்றுபடுத்த வர்க்கங்களாக அணி திரட்டுவது பெரும்பாடாக உள்ளது.
ஒரே ஜாதிக்குள் இருக்கும் முதலாளியை அதிகாரியை முதலாளியாகவும் அதிகாரியாகவும் பார்க்காமல் தன் ஜாதி காரணமாக மட்டுமே பார்க்கும்படி பாமரமக்கள் பழக்கப் படும்வரை ஜாதியானது வர்க்க அணி சேர்க்கைக்கும் தடையாக இருக்கும் என்பதில் சந்தேகப் பட தேவையில்லை...
இந்திய வரலாற்றெழுதிகளான பிரிட்டிஷ் கொடைதான் இன்றைய ஜாதி மத மோதல்களுக்கு வழி வகுக்கிறது.
தொடரும் விவாதம்......
No comments:
Post a Comment