போல்ஷிவிக்குகள்‌ நீடித்து அரசாள முடியுமா? -லெனின் (ஒலி வடிவில்)

 நமக்கான படிப்பினைக்காக

போல்ஷிவிக் அதிகாரமும் புதிய அரசு இயந்திரமும்

இந்த ஆதாரமானது போல்ஷிவிக் கட்சி தனியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான அவசியத்தை விளக்கும் லெனினின் ஆழமான பார்வையை முன்வைக்கிறது. பழைய அரசு இயந்திரத்தைச்சிதைத்துவிட்டு,அதற்குப்பதிலாக  சோவியத்துக்கள் எனப்படும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் புதிய அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் இதில் வலியுறுத்துகிறார். வங்கிகள் மற்றும் உற்பத்தி அமைப்புகளைப் பொதுவுடைமையாக்குவதன் மூலம், ஒட்டுமொத்த தேசத்தின் கணக்கு வழக்குகளையும் பாட்டாளிவர்க்கக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என அவர் வாதிடுகிறார். எதிர்ப்பாளர்களின் அச்சத்தைப் புறந்தள்ளி, உழைக்கும் மக்களின் பேராதரவுடன் ஒரு புரட்சிகர ஜனநாயக அரசை நிலைநிறுத்த முடியும் என்பதை இக்கட்டுரை உறுதிப்படுத்துகிறது. அதிகார வர்க்கச் சடங்குகள் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட இந்த புதியஇயந்திரமே சோசலிசத்தின் அடிப்படை கட்டமைப்பாகச் சித்தரிக்கப்படுகிறது. இறுதியாக, முதலாளித்துவச் சுரண்டலை ஒழித்து முறையான விநியோகத்தை உறுதி செய்ய தொழிலாளர் கண்காணிப்பு மிக முக்கியமான பணியாக இதில் முன்மொழியப்பட்டுள்ளது.

லெனினின் கருத்துப்படி புதிய அரசாங்க இயந்திரமாக சோவியத்துக்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

முதலாளித்துவ அமைப்பில் உள்ள வங்கிகளை சோசலிச சமூகத்தின் எலும்புக்கூடாக லெனின் கருதுவது ஏன்?

அதிகாரத்தை கைப்பற்றுவதில் போல்ஷிவிக்குகளுக்கு இருந்த சவால்களும் லெனினின் தீர்வுகளும் யாவை?

பாட்டாளி வர்க்கம்‌ “அரசாங்க இயந்திரத்தை” “ஏற்றுக்‌ கொண்டு"அதை இயக்கிச்‌ செல்ல” முடியாது. அனால்‌ பழைய அரசாங்க இயந்திரத்தில்‌ இருக்கிற அடக்கு முறைக்குரிய, பழகிப்‌ படிந்து போன, திருத்த முடியாத முதலாளி வர்க்க அம்சங்களை யெல்லாம்‌ தகர்த்து எறிந்து விட்டு அதனிடத்தில்‌ தனக்கே சொந்தமான புதிய அரசாங்க இயந்திரத்தை அமைத்துக்கொள்ள முடியும்‌.|

சோவியத்துக்கள்‌ ஒரு புதிய அரசாங்க இயந்திர மாகும்‌. இந்த அரசாங்க இயந்திரம்‌ முதலாவதாக, தொழிலாளிகள்‌, விவசாயிகள்‌ கொண்ட, ஆயுதந்தாங்கிய படையைக்‌ கொண்டிருக்கிறது. பழைய நிரந்தர ராணுவத்கைப்‌ போல்‌, மக்களோடு கொடர்பற்ற படையல்ல இது, மக்களுடன்‌ மிகவும்‌ நெருங்கிய தொடர்பு கொண்டது இது. ராணுவக்‌ கண்ணோட்டத்துடன்‌ நோக்குவோமெனில்‌, முன்னிருந்த படைகளைவிட ஒப்பிடற்கியலாத அளவு அதிக வன்மை கொண்டது இப்படை. புரட்சிக்‌ கண்ணோட்டக்‌துடன்‌ நோக்குவோமெனில்‌ இதற்குப்‌ பதிலாக வேறொன்‌றையும்‌ அமைச்துவிட முடியாது. இரண்டாவதாக, இந்த அரசாங்க இயந்திரம்‌, பொது மக்களுடன்‌, பெரும்‌ பான்மையான மக்களுடன்‌ ஒரு இணைப்பைத்‌ தருகிறது: இவ்வளவு நெருங்கிய, பிரிக்க முடியாக, சுலபமாகக்‌ கட்டுப்படுத்தக்‌ கூடிய, சுலபமாகப்‌ புதுப்பித்துக்கொள்ளக்‌ கூடிய, தொடர்பைக்‌ கொஞ்சமேனும்‌ ஒத்திருக்கக்‌ கூடிய தெதுவும்‌, முன்னால்‌ இருந்த அரசாங்க இயந்திரத்தில்‌ கிடையாது. மூன்றாவதாக, இந்த அரசாங்க இயந்திரத்திலுள்ள நபர்கள்‌, எந்த விதமான அதிகார வர்க்கச்‌ சடங்குகளுமின்றி மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு, எப்பொழுது வேண்டுமானாலும்‌ மக்கள்‌ சித்தப்படி வாபஸ்‌ பெறப்‌ படும்‌ நிலையில்‌ இருப்பவர்களாதலால்‌ முன்னளைய இயந்‌திரங்களைவிட இது எவ்வளவோ மிகுந்த ஜனநாயகக்‌தன்மையுடையதாகும்‌. நான்காவதாக, பலவகைத்‌ தொழில்களில்‌ ஈடுபட்டுள்ளவர்களோடும்‌ இது நெருங்கெ தொடர்பை அமைத்துத்‌ தருகிறது; இதன்‌ காரணமாக, அதிகார வர்க்கச்‌ சடங்குகளின்றிப்‌ பல்வேறு விதமான, அடிப்படையான சீர்திருத்தங்களைச்‌ செய்வது எளிதானதன்றது. ஐந்தாவதாக, முன்னணிப்‌ படையின்‌, அதாவது தொழிலாளிகள்‌, விவசாயிகள்‌ கொண்ட ஒடுக்கப்பட்ட வர்க்‌கங்களின்‌ வர்க்க உணர்வு மிகுந்த, செயலாற்றல்‌ மிகுந்த, முற்போக்கான ஜனப்‌ பகுதியின்‌, ஸ்தாபன வடிவத்தை அது தருகிறது. ஆகவே, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின்‌ முன்‌னணிப்‌ படைக்கு, இந்த வர்க்கங்களைச்‌ சேர்ந்த, இதுவரை அரசியல்‌ வாழ்க்கையிலிருந்து, சரித்திரத்திலிருந்து முற்றினும்‌ விலக ஒதுங்கி நின்று வந்திருக்கும்‌ பெருந்தொகையான ஜனத்திரள்‌ முழுவதையும்‌ மேல்நிலைக்கு உயர்த்தி, பயிற்சி அளித்து, போதனை தந்து, தலைமை தாங்கு நடத்திச்‌ செல்லத்‌ திறனளிக்கும்‌ இயந்திரமாக இது அமைகிறது. ஆறாவதாக, நாடாளுமன்ற ஆட்சி முறையின்‌ அனுகூலங்களையும்‌, உடனடியான, நேர்முகமான ஜனநாயக முறையின்‌ அனுகூலங்களையும்‌ இணைப்பை இது சாத்‌தியம்‌ ஆக்குகிறது. அதாவது, மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்‌பட்டுள்ள பிரதிநிதிகளிடையே சட்டமியற்றும்‌ வேலைகளையும்‌, சட்டங்களை அமுல்‌ நடத்தும்‌ வேலைகளையும்‌ ஐக்கியப்‌படுத்தச்‌ சாத்தியமளிக்கிறது. முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சி முறையுடன்‌ ஒப்பிட்டுப்‌ பார்க்கும்பொழுது, இது ஜனநாயகத்தின்‌ வளர்ச்சியில்‌ ஒரு முன்னேற்றமாக விளங்குகிறது. இம்முன்னேற்றம்‌ உலக சரித்திர முக்கியத்‌துவம்‌ வாய்ந்தது. 1905ல்‌ நமது சோவியத்துக்கள்‌ கருவடிவில்‌ தான்‌ இருந்தன எனலாம்‌. ஒரு சில வாரங்களே அவை உயிருடன்‌ இருந்தன. அக்காலத்திய நிலைமைகளில்‌, அவை எல்லாத்‌ துறைகளிலும்‌ வளர்ச்சியுறுவதற்கு இடமேயில்லை என்பது தெளிவு. 1917ம்‌ ஆண்டுப்‌ புரட்சியிலும்‌ இத்‌தகைய வளர்ச்சிக்கு இன்னும்‌ இடமேற்படவில்லை. ஏனெனில்‌ ஒரு சில மாதங்கள்‌ என்பது மிகக்‌ குறுகிய காலம்‌. அனால்‌ முக்கிய விஷயம்‌ என்னவென்றால்‌ சோஷலிஸ்டு-புரட்சியாளர்கள்‌ மென்ஷிவிக்குகள்‌ ஆகியோரின்‌ தலைவர்‌கள்‌ சோவியத்துக்களை வே௫நிலைக்குக்‌ கொண்டுவந்திருக்‌கிறார்கள்‌; வெறும்‌ பேச்சுக்‌ கூடங்களாக, தலைவர்களின்‌ சமரசக்‌ கொள்கையின்‌ ஒரு துணையுறுப்பாக, அவற்றின்‌ பாத்திரத்கை இழிவுபடுத்தி விட்டார்கள்‌. லீபெர்‌, டான்‌, தெஸெரெத்தேலி, செர்னோவ்‌ போன்றவர்களின்‌ தலைமையின்‌ கீழ்‌ சோவியத்துக்கள்‌ உயிருடன்‌ அழுகி மட்கி வந்திருக்கின்றன. அனைத்து அரசாங்க அதிகாரத்தையும்‌ ஏற்றுக்கொண்டால்‌ மட்டுமே சோவியத்துக்கள்‌ சரியான வளர்ச்சி பெற முடியும்‌; தங்கள்‌ சக்திகளையும்‌ திறமைகளையும்‌ முழுமையாக வெளிக்காட்ட முடியும்‌. இல்லாவிடில்‌ அவை செய்வதற்குரிய வேலை எதுவுமில்லை; அவை வெறும்‌ கருக்கள்தாம்‌ (நீண்ட காலம்‌ கருநிலையில்‌ தங்குவது கூடாது) அல்லது விளையாட்டுப்‌ பொருட்கள்தாம்‌. “இரட்டை ஆட்சி” என்றால்‌ சோவியத்துக்களுக்குப்‌ பாரிசவாதம்‌ என்றுதான்‌ பொருள்‌.
 
புரட்சிகர வர்க்கங்களைச்‌ சேர்ந்த மக்களின்‌ படைப்புத்‌ திறன்‌ சோவியத்துக்களைத்‌ தோற்றுவிக்காமல்‌ இருந்தால்‌, ருஷ்யாவில்‌ பாட்டாளி வர்க்கப்‌ புரட்சி கவைக்கு உதவாத இலட்சியமாகப்‌ போயிருக்கும்‌. ஏனெனில்‌, பழைய அரசாங்க இயந்திரத்தை வைத்துக்கொண்டு பாட்டாளி வர்க்கம்‌ நிச்சயமாக அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியாது போயிருக்கும்‌, உடனடியாகப்‌ புதிய அரசாங்க இயந்திரத்தை அமைப்பது என்பதும்‌ முடியாத காரியமாகும்‌. தெஸெரெத்தேலி, செர்னோவ்‌ வகையறாக்கள்‌ சோவியத்துக்களை வேசிநிலைக்குக்‌ கொண்டுவந்து துயர்‌தரும்‌ வரலாறு, “கூட்டணியின்‌”வரலாறு, குட்டி முதலாளித்துவ பிரமைகளிலிருந்து சோவியத்துக்கள்‌ விடுபட்‌டகைக்‌ குறிப்பதும்‌, எவரையும்‌ எல்லோரையும்‌ கொண்ட பல்வேறு முதலாளித்துவ கூட்டணிகளின்‌ கடை கெட்ட ஊழல்களையும்‌ ஆபாசங்களையும்‌ நடைமுறையில்‌ துய்த்து அறிந்து, அந்தக்‌ “கழுவாயில்‌” புகுந்து வெளி வந்ததைக்‌ குறிப்பதுமான வரலாறுமாகும்‌. இந்தக்‌ “கழுவாயால்‌” சோவியத்துக்கள்‌ பலம்‌ குன்றிப்‌ போகவில்லை, உருக்கின்‌ உறுதியைப்‌ பெற்றுள்ளன என்று நம்புவோமாக. 


பாட்டாளி வர்க்கப்‌ புரட்சியை எதிர்நோக்கியுள்ள பிரதானமான கஷ்டம்‌, மிகத்‌ துல்லியமான, மிக நேர்மை யான கணக்குக்‌ குறிப்பும்‌, கட்டுப்பாடும்‌ தேசம்‌ முழுவதிலும்‌ நிறுவுவதுதான்‌, பொருள்‌ உற்பத்தியிலும்‌ வினியோகத்திலும்‌ தொழிலாளர்‌ கட்டுப்பாட்டை நிறுவுவதுதான்‌. “தொழிலாளர்‌ கட்டுப்பாடு என்ற கோஷத்தை முன்‌வைத்ததன்‌ மூலம்‌ நாம்‌ சிண்டிக்கலிசத்தில்‌ இறங்கிவிட்‌டோம்‌ என்று நோவயா ஷீஸ்ன்‌ எழுத்தாளர்கள்‌ வாதாடினார்கள்‌. “மார்க்சியத்தை” ஆழ்ந்து பயின்று அறிந்து கொள்ளாமல்‌, ஸ்துரூவே முறையில்‌, உருப்‌ போட்டு அதாவது பள்ளி மாணவர்களின்‌-அசட்டுத் தனமான முறையில்‌ அதைச்‌ செயல்படுத்துவதற்கு இந்த வாதம்‌ ஓர்‌ உதாரணமாகும்‌. சிண்டிக்கலிசம்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ புரட்சிகரமான சர்வாதிகாரத்தை மறுக்கிறது அல்லது பொதுவாக அரசியலதிகாரம்‌ அனைத்தையும்‌ போல அதை  தொழிலாளிகள்‌-போர்வீரர்கள்‌-விவசாயிகள்‌ பிரதிநிதிகளின்‌ சோவியத்துக்கள்‌ இவ்வகைப்பட்ட இயந்திரமே யாகும்‌. பாட்டாளி வர்க்க அரசாங்கத்தின்‌ ஓரே உத்தரவால்‌ இந்தச்‌ சிப்பந்திகளை அரசாங்கச்‌ சிப்பந்திகள்‌ என்ற அத்தஸ்‌துக்கு மாற்ற முடியும்‌; மாற்ற வேண்டும்‌. முதலாளித்‌துவத்தின்‌ காவல்‌ நாய்களான பிரியாண்டும்‌ மற்ற முதலாளித்துவ மந்திரிகளும்‌ வேலைநிறுத்தம்‌ செய்யும்‌ ரயில்வே ஊழியர்களை ஓரே அரசாங்க உத்தரவு மூலம்‌ அரசாங்கச்‌ சிப்பந்திகளாக மாற்‌றிவிடுவது போலத்தான்‌ இதுவும்‌. 

- இவ்வகையான அரசாங்கச்‌ சிப்பந்திகள்‌ இன்னும்‌ ஏராளமான பேர்‌ நமக்குத்‌ தேவை, ஏராளமான போர்‌ நமக்குக்‌ கிடைக்கவும்‌ முடியும்‌. ஏனெனில்‌ முதலாளித்துவம்‌ கணக்‌குப்‌ பரிசோதனையையும்‌ கட்டுப்பாட்டையும்‌ எளிதாக்கி விட்டிருக்கிறது; அதை முன்னைவிட எளிதான குறிப்பு முறையாகச்‌ செய்துள்ளது. எழுதப்படிக்கத்‌ தெரிந்த எவனும்‌ அதைச்‌ செய்ய முடியும்‌. வங்கி, சிண்டிக்கேட்டு, வர்த்தகம்‌ முதலானவற்றின்‌ சாதாரண சிப்பந்திகள்‌ அனைவரையும்‌ “அரசாங்கச்‌ சிப்பந்திகளாக மாற்றுவது" (முதலாளித்துவமும்‌ நிதி முதலாளித்துவமும்‌ நமக்காக இவ்விஷயத்தில்‌ பூர்வாங்க வேலைகளைச்‌ செய்து வைத்துள்ள காரணத்தால்‌) நடைமுறை நிர்வாக ரீ தியில்‌ சாத்தியம்‌, அரசியல்‌ ரீதியிலும்‌ இது சாத்தியம்‌; அனால்‌ ஒரு நிபந்தனை: சோவியத்துக்களின்‌  கட்டுப்பாடும்‌ கண்காணிப்பும்‌ இருந்து வரவேண்டும்‌. மேலதிகாரிகளைப்‌ பொறுத்தவரையில்‌ அவர்கள்‌ மிகச்‌ சிலரேயாவர்‌; ஆனால்‌ முதலாளிகளின்‌ பக்கமே சாய்பவர்‌கள்‌. 

ஆகவே முதலாளிகளைப்‌ போலவே அவர்கள்‌ மீதும்‌ கடுமையான நடவடிக்கைகள்‌ எடுக்க வேண்டும்‌. முதலாளிகளைப்‌ போலவே அவர்களும்‌ எதிர்ப்புக்‌ காட்டுவார்கள்‌. அவர்களின்‌ எதிர்ப்பை உடைத்தெறிய வேண்டும்‌. அழியாவெகுளித்தனம்‌ வாய்ந்த பெஷெகோனவ்‌ “அரசாங்கக்‌ காரியங்களில்‌ அனுபவமற்ற குழந்தை” போல்‌, “முதலாளிகளின்‌ எதிர்ப்பு உடைத்தெறியப்பட்டு விட்டது" என்று 1917 ஜீன்‌ மாதத்திலேயே கூறிய குழந்தை மொழி, சிறுபிள்ளைத்‌ தனமான்‌ வாய்வீச்சு, சிறுபிள்ளைத்தனமான வெறுப்புப்‌ பேச்சு, பாட்டாளி வர்க்கத்தால்‌ நடைமுறை எதார்த்தமாகச்‌ செய்து முடிக்கப்படும்‌, இதை நாம்‌ செய்ய முடியும்‌; காரணம்‌: மக்கள்‌ தொகையில்‌ மிகக்‌ குறைந்த எண்ணிக்கையில்‌ உள்ளவர்களின்‌ எதிர்ப்பை, உண்மையில்‌ விரல்‌ விட்டு எண்ணக்கூடிய தொகையுள்ளவர்களின்‌ எதிர்ப்பை, முறித்கெறிய வேண்‌டிய காரியம்‌ தான்‌ அது. அவர்கள்‌ ஒவ்வொருவார்‌ மீதும்‌ அலுவலகச்‌ சிப்பந்திகளின்‌ சங்கங்களும்‌, தொழிற்சங்கங்களும்‌, உபயோகிப்போர்‌ சங்கங்களும்‌, சோவியத்துக்களும்‌ மிகக்‌ கடுமையான கண்காணிப்பை எற்படுத்தும்‌. அதன்‌ பயனாக ஓவ்வொரு தீத்‌ தீத்திச்சுகள்(அயலார் தொல்லையை தந்தாக்கிக் கொள்ளும் கதாபாத்திரம்) ஸெதானில்‌ பிரெஞ்சுக்காரர்கள்‌ சுற்றிவளைக்கப்பட்டதே2 போல்‌ சுற்றி வளைக்கப்பட்டிருப்பான்‌. இந்த திக்‌ தீக்திச்சுகள்‌ யாரென்று பெயர்வாரியாக நமக்குத்‌ கெரியும்‌: டைரக்டர்கள்‌, போர்டு மெம்பர்கள்‌, பெரும்‌ பங்குதாரர்கள்‌, முதலியோர்களின்‌ பட்டியல்களை எடுத்துப்‌ பார்த்தால்‌ போதுமானது. அவர்கள்‌ ருஷ்யா முழுவதிலும்‌ சில நூறு, அல்லது அதிகமாகப்‌ போனால்‌ இல ஆயிரம்‌ பேர்கள்தான்‌ இருக்‌கிறார்கள்‌. 'அவர்கள்‌ ஒவ்வொருவர்‌ மீதும்‌ பாட்டாளி வார்க்க அரசாங்கம்‌, தனது சோவியத்துக்கள்‌, அலுவலகச்‌ சிப்பந்திகளின்‌ சங்கங்கள்‌, முதலியவைகள்‌ அடங்கிய இயக்கம். 

பத்து அல்லது நூறு கண்காணிப்‌
பாளர்களை நியமிக்க முடியும்‌. ஆகவே “எதிர்ப்பை முறியடிப்பதற்குப்‌" பதிலாக, (முதலாளிகளின்‌ மீது) தொழிலாளர்‌ கட்டுப்பாடு மூலமாக எவ்வித எதிர்ப்புமே சாத்‌தியமில்லாதபடி செய்துவிட முடியும்‌. முதலாளிகளின்‌ சொத்தைப்‌ பறிமுதல்‌ செய்வது கூட இவ்விஷயத்தில்‌ “முக்கிய அம்சமாக”: இருக்காது. “முக்கிய அம்சமாக” இருக்கப்‌ போவது, முதலாளிகள்‌, அவர்‌களுக்கு ஆதரவு தரக்‌ கூடியவர்கள்‌ ஆகியோர்‌ மீது நாடு முழுதிலும்‌ பரவிய, எல்லாவற்றையும்‌ தழுவிய தொழிலாளர்‌ கட்டுப்பாடுதான்‌. பறிமுதல்‌ செய்வதால்‌ மட்டும்‌ எல்லாம்‌ முடிந்து விடாது. அதில்‌ ஸ்தாபன அமைப்பு அம்‌சம்‌, முறையான வினியோகத்தைப்‌ பற்றிய கணக்கு வைக்‌கிற அம்சம்‌ எதுவுமில்லை. பறிமுதல்‌ செய்வதற்குப்பதில்‌ நியாயமான வரி விதிக்கலாம்‌ (உதாரணமாக “ஹிங்கரேவ்‌ முறையில்‌” இருந்தாலும்‌ போதும்‌). யாரும்‌ சொத்து மதிப்பீடிலிருந்து தப்பிக்கவோ, உண்மையை மறைக்‌கவோ, சட்டத்தை மீறவோ முற்றிலும்‌ சாத்தியமாகாத படி செய்ய வேண்டும்‌. அவ்வாறு நடப்பது சாத்திய மாகாதபடி தடுப்பதற்குத்‌ தொழிலாளி வர்க்க அரசாங்கத்தின்‌ தொழிலாளர்‌ கட்டுப்பாடு ஒன்‌றினால்‌ தான்‌ முடியும்‌. 
தொடரும்....

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்