சுருக்கமாக ஆடியோ வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
இந்த நூலில் பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் உலகு பற்றியும் மனித குல் வளர்ச்சி பற்றியும் ஆழமான தேடல், சாதி பற்றிய தேடல் எளிதாக இருக்குமாதலால். இவை ஆய்வுலக பணி என்று ஒதுங்கிக் கொண்டால் நாம் நமது அறிவை சுருக்கி இங்குள்ள சிலரின் கருத்துகளுக்கு பலியாக வேண்டியதுதான். அதனால், இந்த ஒவ்வொரு தேடலின் நோக்கத்தை புரிந்து, வாசித்து, இந்த நூலின் முழுமையை புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். சாதி என்பது நிலவுடைமை சமூகத்தில் முரண்பாட்டு விதிகளின் படி இணைந்தும் முரண்பட்டும் விளங்கியது இல்லையேல் நிலவுடைமை சமூக உற்பத்தி நடந்தேறி இருக்கவே முடியாது. நிலவுடைமை சமூகத்தின் ஆதாரமே இந்த குலத் தொழில் அடிப்படையிலான தொழில்கள்தான் அப்படியெனும் பொழுது அதன் அன்றைய தேவையும் இன்றைய தேவையும் வேறுவேறு. இன்று தேவையற்றதாகி விட்டதை வெட்டி எறியப்பட வேண்டும் அல்லவா? அதாவது நாம் வாழும் சமூகத்திற்கு பொருத்தம் அற்றவை தானே?
சாதி வரலாற்று நூல்கள் இருபதாம் நூற்றாண்டில் மத்திய காலம் வரை தொடர்ந்தபடி இருந்தன. சாதிய வரலாற்று நூல்கள் எண்ணிறந்தவை அவை கண்ணில் படுபவை சில தான்(36).
இந்தியாவில் ஆட்சி புரிந்த முந்தைய சமூக அமைப்புகளில் சமூகக் குழுக்களின் மோதல்களை தீர்க்க அரசன் இருந்தான் அவனுக்கு தன் மக்களை பற்றி ஓரளவிலான வளமையும் தொடர்பும் தீர்ப்பளிப்பதற்கான அனுபவ ஆதாரங்களும் இருந்தன. ஆனால் காலனிய ஆட்சியில் அதிகாரம் முன் தொடர்ச்சியற்றதாகவும் இங்குள்ள முரண்களை புரிந்துக் கொள்ளும் வல்லமை அற்றதாக இருந்தது. அதன் காரணமாக நூல் ஆதாரங்களை சார்ந்து நிற்க வேண்டிய தேவை இருந்தது. அந்த நூல்கள் முழுமையாக சனாதன சமஸ்கிருத அடிப்படையிலானவையாகவும், அந்த சமூக ஒழுங்கின் முழுமையை புரிந்து கொள்ளாத, காலத்தால் பழமை வாய்ந்ததென, அந்தக் காலகட்டத்தின் சமூக அடையாளமாக சமூக உறவுகளாக சாதி அடையாளமாக அதன் அடிநாதமாக மதரீதியான தர்மநூல்களாக இவை காலனி ஆட்சியின் தூண்களாகளாயின. தங்களின் ஆட்சி அதிகாரத்தை தொடர்ந்து நடத்த அவர்கள் எதை எதையோ தேடி ஆவணப்படுத்தி இவைதான் இந்தியா என்று பிரகடணம் படுத்தியுள்ளனர்.
விசித்திரமான சாதி நிறுவனம் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயே அதிகாரிகள் தங்கள் ஆய்வுகளை முன் வைத்தனர். எலியாட், டால்டன் ஷெர்ரிங், நெஸ்பீல்டு போன்ற சில அதிகாரிகள் இதில் ஆர்வம் காட்டி தரவுகளை சேகரித்து தமது விமர்சனங்களுடன் அவற்றையும் வெளியிட்டனர். சர் ஹெர்பெர்ட் ரைஸ்லின் வழிகாட்டுதலின் கீழ் 1901 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமை அடைந்தது. 1891 ஆம் ஆண்டின் வகைப்பாட்டை, "தற்காலத்தில் சமூக முன்னுரிமை உள்ளூர் பொதுக் கருத்தாக அங்கீகரிக்கப் பெற்றிருப்பது சில குறிப்பிட்ட சாதிகளை இந்து அமைப்பு முறையில் உள்ள பிற சாதிகளின் நவீன பிரதிநிதிகளாக மாற்றுவதில் வெளிப்படுத்தியுள்ளார்". என்கிறார் ஜி.எஸ்.குரியே (35).
தமிழ் சமூகத்தில் உள்ள சாதிய சமூக போக்கை சங்க இலக்கியங்கள் மூலம் சாதிய அடிப்படைகள் நிலவுடமை சமூகத்தில் வேரூன்றியுள்ளதை அறிய முடிகிறது (47). சாதி தமிழ் சமூகதிலும் அதன் வளர்ச்சி போக்கில் உதித்தவையே அதற்கான மத அடையாளங்கள் பின்னர் புகுத்தப்பட்டது. உலகில் தோன்றிய மற்ற சமூகம் போலவே தமிழ் சமூகமும் எல்லா ஏற்றதாழ்வுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இன்னும் தொழிலாளர் பெயர்கள் நீள்கின்றன. எல்லாவற்றையும் பட்டியலிட்டால் மிக நீளும், எல்லாம் தொழில்வழிக் குடிப்பெயராகத் தோன்றிக் கால அடைவில் குலப்பெயராக மாறிப் பின்னாளில் பிறப்பு வழிச் சாதிப் பெயராக ஆகிவிட்டன.
வரலாற்று ஆவணங்கள் மற்றும் தொல்லியல் ஆவணங்கள் அடிப்படையில் காணும் பொழுது, ஆரியர்கள் வருகை என்பதும் ஆரியர் பற்றி வேதங்கள் கூறும் எல்லாமே ஆங்கிலேயர்களின் புனைவிற்கு துணைபோயின. இந்திய வரலாறு பற்றி, "ஏ.எல்.பஸ்யம், ரொமிலா தாப்பர், ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி, சோசப் இடமருகு" இன்னும் பல நூல்களிலிருந்து இந்த தேடல்களுக்கான விடை கிடைகின்றன.
பஞ்சாப், அரியானா, ஜம்மு, ராஜஸ்தான் போனற பகுதிகளில் செய்யப்பட்ட ஆய்வில் ரிக்வேதத்தில் கூறப்படுவதுபோல் தேர்சக்கரங்களோ இரும்போ, விவசாயம் செய்யப்பட்டதற்கான அறிகுறியோ காணப்பட்டவில்லை போதுமான அளவில் தாமிரக்கருவிகளோ கிடைக்கவில்லை. இங்கு ஆரியர்கள் குடியேறிய காலம் பொ.ஆ.மு 1500 இந்தகாலத்துக்கு பின்னால் 300 ஆண்டுகள் கழித்துதான் ரிக்வேத காலமாக உள்ளது.
காலத்திற்கும் களத்திற்கும் அப்பாற்பட்டு வரலாற்றை தொகுத்து பேசிவருவது மோசடியே. ஆங்கிலேயருடைய எழுத்துகளை பின்பற்றுவோர் ஏமாற்றம் அடைவதற்கான காரணம் ஆதாரம் அற்றவைதான். அன்று ஆரியர்களின் வருகையானது மேய்ச்சல் குடிகளாக அதிக பட்சம் நூறு பேருக்கு மேல் ஓரிடத்தில் சேர்ந்து வாழ்வது கடினமான காரியம். அந்த காலப்பகுதியில் பல்வேறு கட்டங்களில் தங்களின் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக இடம் பெயர்ந்த மேய்ச்சல்குடிகளான ஆரியர்கள் இங்கு வந்து இந்த நாட்டை அடிமை படுத்திவிட்டனர் என்று கூறுகின்றனர் இது சரியான கருத்து இல்லை. அவர்கள் இங்கே நுழையும் பொழுது சிந்து சமவெளி நாகரிகமானது நகர நாகரிகமாகவும் உயர்ந்த சமூக வளர்சியையும் அடைந்தும் இருந்தது என்று தொல்பொருள் ஆராய்சி கூறுகிறது. அப்படியெனும் பொழுது, வேளாண் வளர்ச்சியும், நீர்ப்பாசன வசதிகளையும், சுரங்கத் தொழில்களும் மேம்பட்டில்லாமல் எப்படி இந்த வளர்ச்சியை அச்சமூக அமைப்பு கொண்டிருக்க முடியும்?. இதற்கு பெரும் மனித ஆற்றலும் கூட்டு சமூக வாழ்வும் அவசியமானது அல்லவா? இந்த பகுதியானது காலமாற்றம் அல்லது இயற்கை பேரிடரால் அழிந்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். எனவே ஆரியர்களின் போரினால் அந்தப் பகுதி அழியவில்லை என்பதனைகவனத்தில் கொள்ள வேண்டும். நைல்நதி நாகரீகமும், மெசடோமிய, சிந்து சமவெளி நாகரீகங்களும் வேலைப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டிருந்தது அல்லது கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் அங்கே அரசு உருவாகியிருந்தது.
நூல் தேவைக்கு வாட்சாப்பில் தொடர்பு கொள்க 7010134299