தோழர்களே, தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரின் முதல் கடமை மார்க்சிய-லெனினியத்தை பாதுகாத்து வளர்த்தெடுப்பதும் அதன் மீது தொடரும் தாக்குதல்களை முறியடிப்பது; இரண்டாவது மார்க்சிய லெனினியத்தை தனது சொந்த நாட்டுக்கு பொருத்தி திட்டமிட்டு சமூக மாற்றத்தை முன்கொண்டு செல்வது. இப்பணிகளை. முன்கொண்டு செல்வது கம்யூனிசத்தை நேசிப்பவர்களின் உண்மையான பணியாக இருக்கும். அதனால்தான் கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பு குழு மற்றும் இலக்கு இணையதளம் ஒன்றிணைந்து மார்க்சிய லெனினிய கல்விக் கழகம் என்ற அமைப்பை நிறுவியுள்ளோம். மார்க்சிய அடிப்படைகளை புரிந்துக் கொள்ளவும் நம்மிடையே உள்ள பல்வேறு குழப்பங்களுக்கு விடைகாண சில சிறிய வெளியீடுகள் கொண்டுவர தொடங்கியுள்ளதன் அடிப்படையில் இந்த நூலைக் கொண்டு வருவதை முதன்மையாக கருதுகிறோம். அதன் அடிப்படையில் சில வெளியீடுகளை வரிசையாக கொண்டுவர முயன்றுள்ளோம். அதன்படி இந்த வெளியீடு உங்கள் முன்வைக்கப்படுகிறது. இதனை வாசித்து விவாதிக்க அனைவரையும் அழைக்கின்றோம் தோழர்களே.
இந்த நூல் எழுத கம்யூனிஸ்ட் அகிலம் சுருக்கமான வரலாறு, மாபெரும் விவாதம் நூல் மற்றும் இலக்கு இணைய இதழில் வெளியான சில கட்டுரைகளையும் இணைத்துள்ளோம். குறிப்பாக மாபெரும் விவாத நூலிலும் கம்யூனிஸ்ட் அகிலம் சுருக்கமான வரலாறு மற்றும் ஆசான் லெனின் நூல்களின் அடிப்படையில் தொகுத்துள்ளதோடு ஆசான் ஸ்டாலின் ஐ.நாவில் கலந்துக் கொண்டவை ஏன் என்பதற்கான முக்கிய கட்டுரை நூலில் காணலாம். நூல் கொண்டுவர உதவிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க பிளவும் பின்னடைவுக்கும் காரணம் தேடாமல் சோவியத்தையும் சீனாவையும் தேடிக்கொண்டு கொண்டுள்ள இவர்கள் . இந்திய புரட்சிக்கான தேர் குடைசாய்ந்து உள்ளது அதை சரி செய்து சரியான புதிய முறையில் புரட்சிக்கான வழியில் எப்படி பயணிப்பது என்பது தான் கம்யூனிஸ்டுகள் முதல் பணி இந்த புரிதல் தேடாமல் அதற்கான ஆய்வு இல்லாமல் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் தலைவர் சர்வதேச கம்யூனிச இயக்கங்கள் மீது விமர்சனம் வைப்பதும் பழி போடுவதும் கம்யூனிஸ்ட்களின் வேலையா ?. அவதூறுகள் கருத்துகளுக்கும் மற்றும் பல்வேறு விதமாக பலர் இதே கருத்துகளை முன்வைத்துள்ளதை ஒன்றிணைத்து பதில் அளிப்பதின் மூலம் மார்க்சிய லெனினியத்தை காப்பது எமது கடமை என்பதை ஒட்டியே இந்த சிறுவெளியீடு கொண்டுவரப்படுகிறது.
இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளைவிட தொடங்கிய காலம் முதல் டிராட்ஸ்கியவாதம்உடன் பிறந்தே கொல்லும் வியாதிபோல இடதுசாரி இயக்கத்தின் ஏகோபித்த வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. டிராட்ஸ்கியவாதத்தை அதன் பிறப்பிலேயே நன்கு அறிந்த ஸ்டாலின் அது இடதுசாரி இயக்கத்துக்குள் ஊடுறுவியுள்ள முதலாளிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என சரியாக குறிப்பிட்டார். புலிப்குணவர்த்தனா முதல் கெல்வின் ஆர்டி செல்வா வரை டிராட்ஸ்கியவாதிகள் இலங்கையில் நமக்கு காட்டி வந்து நிற்கும் சாதனைதான் என்ன?பேச்சில் அதிதீவிரவாதமும் நடைமுறையில் படுமோசமானசரணாகதியும் ஆகும்.—பேராசிரியர்.கைலாசபதி.
உண்மையான புரட்சியாளர்கள் மா லெ த்தின் பக்கமே நிற்கமுடியும்பேராசிரியர் கைலாசபதியும் அவ்வாறே நின்றார் என்பதை அவரதுஎழுத்துகள் நமக்கு காட்டுகிறது.
ஆனாலும் தமிழகத்தில் சமிபகாலமாக சில உதிரிகள் ட்ராட்ஸ்கியத்தை தாங்கிபிடித்து வருகின்றனர்.இந்த உதிரிகள்ஓடியாடி வளர்ந்த இடம் மா லெ பாசறையில்தான்.கலைஞர் அவர்கள் நெடுஞ்செழியனைபற்றி குறிப்பிடும் போது அவர்ஒரு கோண தென்னைமரம் என்பார்.ஏனென்றால் அதை வைத்து தண்ணீர்ஊற்றி பராமறித்து வளர்த்துவிட்ட பிறகு அது வளைந்து போய் அடுத்தவர் தோட்டத்தில் தேங்காய் போட்டதுபோல.
ட்ராட்ஸ்கிய உதிரிகளும் அவ்வாறே. நமது ஆசான்களால் முறியடிக்கபட்ட தத்துவபோக்குகள் மீண்டும் மீண்டும் தலைதூக்குவது இயல்புதான். இவற்றை மாலெவாதிகள் ஒன்று பட்டு முறியடிப்பதுதான் தலையாய கடமை.
============
தமிழகத்தில் சில புரட்சிகர அமைப்புகளில் முன்னணி தோழர்களாக இருந்தவர்கள் தற்பொழுது, அன்றைய ஏகாதிபத்தியக் கள்ளக் கூட்டாளியான ட்ராட்ஸ்கியத்தை தூக்கி நிறுத்துகின்றனர். அன்று ட்ராட்ஸ்கி செய்த அதே வேலையை தற்பொழுது இவர்கள் செய்கின்றனர். இருந்தும் அன்று சோசலிச முகாம் இருந்ததால் அவரின் குரல் நேரடியாக ஒலிக்காமல் ஏகாதிபத்தியத்தின் பின்னாலிருந்து ஒலித்தது. ஏகாதிபத்தியதோடு கூட்டுச்சேர்ந்து சோவியத்தை காட்டிக் கொடுத்து அதை ஒழித்துக் கட்டுவது மட்டுமே ட்ராட்ஸ்கி தனது சித்தாந்தத்தை நிலை நிறுத்த முனைந்தார். அன்றைய ட்ராட்ஸ்கியின் தொடர்ச்சியாக இன்றோ ட்ராட்ஸ்கியத்தை நிலைநிறுத்த முனைபவர்கள் மார்க்சியத்தை வேரோடு சாய்க்க நினைக்கின்றனர்.
இன்று தர்மபுரியை தலைமையகமாகக் கொண்ட கம்யூனிஸ்ட் லீக் ட்ராட்ஸ்கியவாதிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் முன்வைத்துள்ள கருத்துகள் கீழ் வருமாறு:
1). அகிலம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு தனி நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சி நடத்த முடியாது.
2). அகிலத்தை ஸ்டாலின் கலைத்தது தவறு அவர் ஒரு கலைப்புவாதி மாவோ அகிலத்தை கட்டவில்லை அவரும் கலைப்புவாதியே என்கின்றனர்.
3).ஐநாவில் சேர்ந்தமை முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தோடு ஸ்டாலின் கூட்டு சேர்ந்தார். இவை அனைத்தும் ஸ்டாலின் மீது ட்ராட்ஸ்கியவாதிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.முழு பதில் நூலின் பக்கம் 65ல் பார்க்க.
இதற்கு பதில் தேட 1918ல் ஜப்பானோடு சமாதான ஒப்பந்தம் ஒன்றை லெனின் செய்வதும் அதனை மறுத்து ட்ராட்ஸ்கி கூறியதையும் லெனின் நூலில் உள்ளது. இதனை விரிவாக வாசிக்க விரும்புபவர்கள் புரட்சிகர வாய்சொல் நூல் என்ற லெனினது நூலை பார்க்கவேண்டும். மேலும் மாமேதை லெனின் அவர்கள் ஏகாதிபத்திய காலகட்டத்தில் முக்கியமான முடிவுகளை வளர்த்தெடுத்தார்.
அப்போது ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைந்து வர்க்கப் போராட்டம் வளர்ச்சி பெற்றதாகவும் இருந்தது மாமேதை லெனின் அவர்கள் மார்க்சியத்தை ஏகாதிபத்திய காலப்பகுதிக்கு ஏற்றவகையில் வளர்த்தெடுத்தார். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை கம்யூனிஸ்டுகள் யாரும் மறுப்பதற்கில்லை இது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களைக் கையாள வேண்டியிருந்திருக்கிறது.
முதலாம் அகிலமும் பாரிஸ் கம்யூனும்:- முதலாம் அகிலத்தின் வாரிசாக பாரிஸ் கம்யூனும், பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்தின் முன் மாதிரி வடிவமான கம்யூனும் இருந்தது. பாரிஸ் கம்யூனுக்குப் பிறகு அகிலம் சட்டரீதியாக இயங்க முடியாமல் போனதாலும், போலீஸ் அடக்குமுறையாலும், தலைவர்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தினாலும் முதலாம் அகிலம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.
1871ல் பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. அவை 72 நாட்கள் மட்டுமே நீடித்தது. முதலாளித்துவ சக்திகளின் கூட்டுசதியால் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. பாரிஸ் கம்யூன் தோல்வியிலிருந்து மார்க்ஸ் எங்கெல்ஸ் படிப்பினைகளை தொகுத்தளித்தனர். அந்தத் தொகுப்பு உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு பெரும் சேவை ஆற்றியது அதன் சுருக்கம் கீழே:
முதலாளித்துவ அரசு எந்திரத்தை தகர்த்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது அவசியம்,. மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் அவசியம், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்குப் பின்னும் அப்படியே இருக்கிறது, முதலாளி வர்க்கத்தை அரசியல் ரீதியில் ஒடுக்குவதற்கு அது தேவைப்படுகிறது.
முதலாம் அகிலம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டதால் மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை கைவிட்டனர் என்றோ, புரட்சியை காட்டிக் கொடுத்தனர் என்றோ, கலைப்பு வாதிகள் என்றோ, உலகில் யாரும் விமர்சனங்களை முன்வைக்க வில்லை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பாட்டாளி வர்க்கமும் அதன் கட்சியும் எப்படி செயல் திட்டங்களை அமைத்து, குறிப்பிட்ட வடிவத்தையும் பின்பற்றுகிறது என்பதை பொறுத்து அந்த இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி அமைந்துள்ளது. எனவே அன்றைய சூழ்நிலையில் முதலாம் அகிலம் கலைக்கப்பட்டது சரியானதே. ஏனென்றால் சூழ்நிலை பற்றிய மதிப்பீட்டையும் சக்திகள் பற்றிய மதிப்பீட்டையும் கொண்டு சமூக புரட்சியை முன்கொண்டு சென்றனர் நமது ஆசான்கள்.
அரசு, யுத்தம், பாட்டாளி வர்க்க கட்சி ஆகிய முக்கிய பிரச்சினைகள் பற்றிய மார்க்சிய போதனைகளை லெனின் விரிவாக்கினார் வளர்த்தெடுத்தார். லெனினும் போல்ஷ்விக் கட்சியும் பெற்ற முக்கிய முடிவுகள் வர்க்கப் போராட்டத்தின் போது சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது .கம்யூனிஸ்ட் அகிலத்தின் சிந்தாந்த அரசியல் அமைப்பு துறைகளுக்கு மேற்கண்ட முடிவுகள் மிகவும் பயன்பட்டது.
அதே சமயம் அக்டோபர் சோசலிசப் புரட்சியை சந்தர்ப்பவாதிகளும் நடுநிலைவாதிகளும் ஆதரிப்பது போல் நடித்தனர். நான்காண்டு உள்நாட்டுப்போர் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு வெண்படையினர் கலகம் போன்ற சோதனைகளில் அவர்கள் மூக்கை நுழைத்து சோவியத்தை கவிழ்க்க பார்த்தனர். அவர்களின் முக்கிய நோக்கம் சோவியத் புரட்சியை உலகம் அறியக் கூடாது குறிப்பாக ஐரோப்பாவில் அது பரவி விடக்கூடாது என்பதுதான். அன்றைய சூழ்நிலையில் சோவியத் விரோத கருத்துகளின் தத்துவ ஆசிரியராக காரல் காவுத்ஸ்கி இருந்தார்.
1918ல் காவுத்ஸ்கி ஒரு நூலை வெளியிட்டர், அந்நூலில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை திரித்து புரட்டி ருசியப் புரட்சி அவதூறு செய்யப்பட்டது. யுத்தத்தால் ஏற்பட்ட ஆபத்தை விட சோவியத்புரட்சி ஆபத்தானது எனவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடும்படி அந்நூலில் இருந்தது .(இவர்தான் இரண்டாம் அகில தலைவர்களில் ஒருவர்). இதை எதிர்த்து லெனின் அவர்கள் “பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்க்கியும்” என்ற நூலை எழுதி வெளியிட்டார். புரட்சிகர தத்துவம், யுத்த தந்திரம், செயல்தந்திரம், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை பற்றிய கோட்பாடுகளை படைப்பு தன்மையுடன் விரிவுபடுத்தியதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சிறந்து விளங்கியது. உலகப் புரட்சி பற்றி பேடித்தனமாக (ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் இல்லை) போன்ற பேச்சுகளை அது விட்டொழிந்தது. எல்லா நாடுகளிலும் புரட்சி வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது விழிப்படைய செய்வது, ஆகிவற்றின் பொருட்டு ஒரு நாட்டின் சாத்தியமான அதிகபட்ச நடவடிக்கைகளை சோவியத் கட்சி மேற்கொண்டது. எல்லா நாடுகளிலும் புரட்சிகரமான கட்சியை நிறுவுவதும் அதற்கு உதவிகள் அளிப்பதையும் சோவியத் கட்சி மேற்கொண்டது.
மூன்றாம் அகிலத்தின் தேவையை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக முன்வைத்தது. 1919 மார்ச் 4ல் மூன்றாம் அகிலத்தின் முதல் காங்கிரஸ் கூடியது. இரண்டாவது அகிலம் செய்த வேலைகளின் பயன்களை ஏற்றுக்கொண்டது, அதன் சந்தர்பவாதத்திலிருந்து முறித்துக்கொண்டு, மூன்றாம் அகிலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை செயல்படுத்தத் தொடங்கியது. மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டுதலில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைக்கப்பட்டது. புரட்சிகர குழுக்களும் அகிலத்தில் சேர விருப்பம் தெரிவித்தன. பல கட்சிகள் இரண்டாம் அகிலத்துடன் உள்ள தொடர்பைத் துண்டித்துக் கொண்டனர். மூன்றாம் அகிலத்தின் இரண்டாம் காங்கிரஸ் துவங்கும் தருவாயில் "இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு" எனும் நூல் வெளியிட்டபட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகளை சித்தாந்த ரீதியிலும் ஸ்தாபன ரீதியிலும் திடப் படுத்துவதற்கும் புரட்சிப் போராட்டத்தில் சிறந்த தலைவர்களாக மாற்றுவதற்கு இடதுசாரி போலி பேச்சு, வறட்டுவாதம், பிளவுவாதம் ஆகியவற்றை களைவது அவசியமானது, புரட்சியை நடத்துவதில் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த பொறுமையின்மை அரசியல் முதிர்ச்சியின்மை, ருசியாவில் புரட்சி நடத்துவதற்கான எல்லா புற அக சூழ்நிலைகளைக் கணக்கில் கொள்ளாமல் விரைவில் புரட்சியை நடத்த வேண்டும் என்ற ஆர்வம். முதலியவை, இடது துணிச்சல் வாததுக்கு காரணமாக இருந்தது. அந்த இடது துணிச்சல் வாதத்தின் வர்க்க வேர்கள், குட்டி முதலாளித்துவ சிந்தனையே., சர்வதேசகம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவிய வலது சந்தர்ப்பவாதம் மற்றும் இடது துணிச்சல்வாததிற்க்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகளை அரசியல் மற்றும் அமைப்பு ரீதியிலும் திடப்படுத்தும் பணியை லெனின் மூன்றாவது அகிலத்தில் மேற்கொண்டார். இதையொட்டி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பற்றிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டி வந்தது.
அரசின் எல்லா வர்க்க சக்திகளையும் நிதானமாக கண்டிப்பான யதார்த்த நோக்கில் கருத்தில் கொண்டு உலக அளவில் இந்த சக்திகளின் வரிசைக் கிரமத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு அதனடிப்படையில் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.
ஒரே ஒரு குழு அல்லது அமைப்பின் விருப்பத்தையும் கண்ணோட்டங்களையும் அரசியல் உணர்வு தரத்தையும் போராட்டத்திற்கு ஆயத்தமாய் இருக்கும் அளவையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கையை நிர்ணயிப்பது சரியல்ல என்றார் லெனின். எல்லா நாட்டிலும் சோசலிசம் வரும் என்பது தவிர்க்க முடியாதது ஆனால் எல்லாம் முற்றிலும் ஒரே மாதிரியாக வரமாட்டா. ஜனநாயகத்தின் ஏதோ ஒரு வடிவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஏதோ ஒரு வடிவில் சமூக வாழ்வின் பல்வேறு அம்சங்களில் சோசலிச மாற்றத்தின் வேகவித்தியாசத்தில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கே உரிய தனித்தன்மை கொண்டு வரும் என்றார் லெனின்.
இது போன்ற பல்வேறு போக்குகளை கணக்கில் கொண்டுதான் மூன்றாம் அகிலத்தின் இரண்டாம் காங்கிரஸில் இருபத்தொரு (21) நிபந்தனைகள் முன்வைத்தது. அதேபோல் இரண்டாம் உலக போரில் பாசிச சக்திகளின் முனைப்பும் சோவியத் விரோத நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு கருத்து கேட்டு அறிந்துதான் மூன்றாம் அகிலம் கலைக்கப்பட்டது.
முதலாம் கம்யூனிஸ்ட் அகிலம் அமைக்கப்பட்டபோது உலகின் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தை புரிந்து கொள்வதிலும் அமைப்பு ரீதியிலும் பலவீனமாக இருந்தன. அனுபவம் மிக்க தலைமை ஊழியர்களும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் கூட்டு மைய உறுப்பான அகிலத்தின் வடிவில் எல்லா நாட்டு கட்சிகளின் கூட்டு முயற்சியின் மூலமே தங்களின் நாடுகளில் புரட்சி பணிகளையும் யுத்ததந்திர செயல்தந்திர பணிகளையும் வகுத்து செயல்பட்டனர். மூன்றாம் அகிலத்தின் ஏழாம் காங்கிரஸ் மூலம் ஒவ்வொரு நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும். கொள்கை ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் திடப்பட்டது ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியும் வர்க்கப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்வதில் பெருத்த அனுபவம் பெற்று இருந்தன அவற்றில் உறுப்பினர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. பயிற்றுவிக்கப்பட்ட தலைமை ஊழியர்கள் அதனிடத்தில் இருந்தனர்.
நாஜிகளின் பிரசாரம் பாசிச எதிர்ப்பு கூட்டணியில் இருந்த முதலாளித்துவ வட்டாரங்களை கம்யூனிஸ்டு அபாயம் காட்டி பயமுறுத்தியது. ஹிட்லர் எதிர்ப்பு கூட்டணியில் பிளவு ஏற்படுவதற்கு ஏராளமான வேலைகள் நடைபெற்றது அதுமட்டுமில்லாமல் பாசிசத்தால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் பாசிச எதிர்ப்பு தேசிய கூட்டணிகளை உடைக்கவும் இது பயன்பட்டது. மாஸ்கோ பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது என்றது. வெளிநாடுகளிலிருந்து வரும் ஆணைகளுக்கு ஏற்ப கம்யூனிஸ்டுகள் செயற்படுகின்றனர் என்றனர். வேற்றார் நலனை பாதுகாக்கவும், அன்னியர் கட்சிகள் என்றும் பிற்போக்கு கும்பல்கள் பிரசாரம் செய்து வந்தது அகிலம் மீதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும் பலவிதமான கட்டுக்கதைகளை பரப்பி கம்யூனிஸ்ட்களிடமிருந்து வெகு மக்களை பிரித்திட ஏராளமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்கண்ட எல்லா பிரச்சினைகளையும் கணக்கில்கொண்டு அகிலத்தின் செயற்குழு 1943இல் அகிலத்தை கலைக்கும் பிரச்சினையை முன்வைத்தது. 1943 மே 13 இல் அகிலத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தலைமைக்குழு உறுப்பினர் டிமிட்ரோவ் அகிலம் கலைப்பதற்கான தீர்மானத்துக்கு மசோதாவை முன்வைத்தார். சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம் வேண்டும் என்றும் கூறினார். அகிலம் கலைப்பது அரசியல் நோக்கில் பொருத்தம் உள்ளதா? சாதகமான தருணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா? அகிலம் கலைப்பு மசோதாவில் போதுமான ஆதாரங்கள் உள்ளனவா? .என்ற அடிப்படையில் விவாதம் நடந்தது. அடுத்து யுத்த சூழல் காரணமாக காங்கிரஸ் கூடுவது இயலாததால் அகிலம் கலைப்பதற்கு 31 நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து பதில் அளித்திருந்தது. எல்லா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீர்மானத்தின்படி அது தெரிந்த பின் 3வது அகிலம் கலைப்பதை 1943 ஜூன் எட்டாம் தேதியில் தலைமைக் குழு அறிவித்தது. அதை ஒட்டி தலைமைக்குழு செயற்குழு கண்காணிப்பு கமிஷன் ஆகியவை கலைக்கப்பட்டது. நிலைமை இப்படி இருக்க இங்கே அகிலம் கலைக்கப்பட்டதற்கு ஒரு தனிநபரின் செயல் போல சாடி அவர் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்துவது ஏற்புடையவைதானா? இவர்களின் உண்மையான நோக்கம் என்ன?. "சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் சூழல் அதிக சிக்கலாக மாறிவிட்ட நிலையில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மையப்படுத்தப்பட்ட தலைமை பொருத்தமானதாகவும் தேவையானதாகவும் இல்லை, எனவே அகிலம் கலைப்பு சம்பந்தமான செயற்குழு தீர்மானம் யதார்த்தத்துடன் பொருந்தியதாக இருக்கிறது என்பதையும் சரியானது என்பதையும் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. ஆகவே அகிலம் கலைப்பு "பற்றிய மாபெரும் விவாதத்தின் கருத்துக்களை ஆமோதிப்பதுதானே சரியான மார்க்சியவாதிக்கான புரிதல். மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் கலைப்பு என்ற சரியான முடிவும் பொருத்தமான நேரத்தில் கலைக்கப்பட்டது என்பதும் பாசிச எதிர்ப்பு முன்னணியைப் பலப்படுத்தி பாசிசம் தோற்கடிக்கப்பட்டது என்பதிலிருந்து அறியலாம்.
தோழர்களே நாம் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்தி பிடிக்கிறோம். அதன் மீது தாக்குதல் யார் தொடுத்தாலும் எமது சக்திக்கு ஏற்றப்படி அதை நாங்கள் முறியடிப்போம். அதற்கு மார்க்சிய ஆசான்களிடம் செல்வோம் “நான் மார்க்ஸ் எங்கெல்ஸை மிகவும் நேசிக்கிறேன். அவர்களைப் பற்றி எவ்வித தூற்றலையும் என்னால் அமைதியாக பொறுத்துக் கொள்ள இயலாது. அவர்கள் உண்மையான மனிதர்கள், அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் இருந்து நாம் ஒருபோதும் பிறழக் கூடாது” என்று லெனின் சொன்னார். நாம் நமது தவறுகளுக்கான காரணங்களை நம்மில் நாம் செய்யப்பட்ட களத்தில் தேடுவோம். தன்னுடன் போராடி புறநிலையை மாற்று என்ற தோழர் மாவோவின் சிந்தனை வெளிச்சத்தில் எமது பயணம் தொடரும்.