உண்மையிலுமே நீங்கள் கம்யூனிஸ்டுகள் என்றால் பதில் சொல்லுங்கள் இல்லையேல் எதற்கும் தகுதி அற்றவர்களே. என் கேள்வி நக்சல்பாரியின் தொடர்சிதானே நீங்கள். உங்களின் முதல் தமிழக புரட்சிகர தியாக தோழர் L. அப்பு வரலாறு எழுத நேரம் கிடைக்கவில்லையோ? நான் வாங்கி வினியோகித்த நூல்தான் உங்கள் அமைப்பை கலைத்து விட்டது என்றால் அதற்கு முன் இந்த நூலை கொண்டுவராதது உங்கள் தவறு அல்லவா? இத்தனை ஆண்டுகள் தியாக தோழர் பாலன் நூலை கொண்டு வர நேரமே இல்லையோ? உங்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும் நீங்கள் புரட்சிக்கு வித்திட்ட தோழர்களின் பெயரை கூட உச்சரிக்க தகுதியுள்ளதா? உங்கள் இயக்கத்தின் மகுடம் சூட்ட தன் இன்னுயிர் ஈந்த தோழர்களின் பெயர்களாவது உங்கள் இயக்கத்தில் உள்ள எத்தனை பெயருக்கு தெரியும் அவர்களை பற்றி ஏதாவது ஒரு நூலோ அல்லது கட்டுரையோ இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். உங்களின் உயர்வான நோக்கத்தை பிறகு புரிந்துக் கொள்ளவோம்... கேவலத்திலும் கேவலம் வயது முதிர்ந்து மரிக்கும் தோழர்களை என்ன முறையில் நீங்கள் பராமறிக்கிறீர்கள் அதனை விடுங்கள் அந்த இயக்கதிற்காக உயிர் கொடுத்தோரை மதியாத உங்களை நான் என்ன சொல்ல?? நேரமிருந்தால் என்னிடம் கேட்டவர்கள் சுயவிமர்சனம் செய்க மேலும் பிறகு பல கேள்வி உள்ளது .... நான் நபரை சார்ந்து பேசவில்லை உங்களின் இயலாமையை மூடி ம்றைக்க முத்திரை குத்துவதை விடுத்து கடந்த கால தவறுக்கு சுய விமர்சனம் செய்ய வேண்டும் இல்லையேல் வீண் விவாதம்... நான் ஆதார பூர்வமாக உங்களின் எழுத்துகளிலிருந்து எங்களின் தவறுகளை ஒவ்வொன்றாக தொடர்ந்து எழுதுவேன்.... உங்களை போன்று முகத்தை மறைத்துக் கொண்டு அல்ல நேரடியாகதான் உள்ளேன்
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
ரவிந்திரன் ( Ravindran) AIM அமைப்பில் தான் செயல்பட்டதற்கு என்ன ஆதாரம் உள்ளது எனவும், நாம் அவதூறு பரப்பி அவரை வெளியேற்றிவிட்டோம் எனவும் முக நூலில் தொடர்ந்து எழுதி வருகிறார். அதற்கான நமது பதிலையும் கேட்டிருந்தார். நமது பதில் இதோ.
எய்ம் ( AIM ) அமைப்பின் NGO நிலைப்பாடும் அதை ஆதரித்த ரவீந்திரன் - ஞானம் (தோழர் ஞானம்) குழுவின் கலைப்புவாதமும் !
===========================
2000 ஆம் ஆண்டுகளில் உலகெங்கும் தீவிரமடைந்த உலகமய எதிர்ப்பு போராட்டங்களை மடை மாற்றி உலகமயத்திற்கு மனித முகம் கொடுக்கவும், சோசலிசத்தை மாற்றாக வைக்காமல் ஏகாதிபத்திய அமைப்பிற்குள்ளாகாவே முதலாளித்துவ ஜனநாயகம் எனும் தீர்வை முன்வைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை காயடிக்கவும் உருவான அமைப்புதான் உலக சமூக மாமன்றம் ஆகும். அமெரிக்க தொண்டு நிறுவனங்கள், ஃபோர்ட் பவுண்டேஷன், ஆக்ஸ்பாம் நிறுவனம் உள்ளிட்ட ஏகாதிபத்திய அமைப்புகள் சேர்ந்து உலக சமூக மாமன்றத்தை ( WSF - World Social Forum ) மும்பையில் 2004 ஆம் ஆண்டு நடத்தின. இதில் இந்திய தொண்டு நிறுவனங்கள், CPI CPM உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.
உலக சமூக மாமன்றத்திற்கு மாற்றாக மும்பை எதிர்ப்பியக்கத்தை (Mumbai Resistance) தெற்காசிய மாவோயிச கட்சிகள், டிராட்ஸ்கிய குழுக்கள், ILPS அமைப்பு, ஐரோப்பிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து அதே ஆண்டு ( 2004 இல்) நடத்தின. ஆனால் அது WSF க்கு மாற்றாக இல்லாமல் ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஒரு வலது சந்தர்ப்பவாத நிலையையும், NGO க்களுடன் ஐக்கியம் - போராட்டம் எனும் சமரச கொள்கையையும் முன்வைத்தது.
அதன் கொள்கையை அடிப்படையாக கொண்டு உருவான இயக்கம்தான் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கம் எனும் AIM தொண்டு நிறுவனம் ஆகும். அதாவது MR 2004 இன் கொள்கையும் AIM இன் கொள்கையும் ஒன்றே ஆகும்.
MR 2004 இயக்கம்
1) ஏகாதிபத்திய முரண்களை பயன்படுத்துவது எனும் பேரில் அமெரிக்காவிற்கு மாற்றாக ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கலாம் என்றது.
2) அமெரிக்க தொண்டு நிறுவனங்களை எதிர்ப்பதற்கு ஐரோப்பிய தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தலாம் என்றது.
3) ஏகாதிபத்தியம் எனில் அது ஆக்கிரப்புத்தனமை மற்றும் மேலாதிக்கப் பண்பை மட்டுமே கொண்டது என கூறி, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மறுபங்கீட்டையும், புதிய காலனிய வடிவிலான மறைமுக காலனியாதிக்கத்தையும் மூடி மறைத்தது.
இந்த MR 2004/ AIM நிலைப்பாடைத்தான் ரவிந்திரன் எமது அமைப்பில் 2016-17 இல் முன்வைத்து அமைப்பில் NGO கருத்துகளை ஊடுருவவிட்டு அமைப்பை உடைக்கும் சதித்தனத்தில் துரோகத்தில் ஈடுபட்டார். அமைப்பை உடைத்தார்.
1) ஏகாதிபத்திய முரண்களை பயன்படுத்துவது போலவே ஏகாதிபத்திய தொண்டு நிறுவன முரண்களையும் பயன்படுத்த வேண்டும் என்றார் ரவிந்திரன்.
2) அமெரிக்க எதிர்ப்பில் ஐரோப்பிய முகாமை ஆதரிக்கலாம்; அது போலவே அமெரிக்க NGO க்களுடன் முரண்படும் ஐரோப்பிய தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படலாம் என்றார்.
இவரது கருத்துகளுடன் ஒத்துப்போன சிலர் ஞானம் தலைமையில் ரவிந்திரனுடன் சேர்ந்து கோஷ்டிவாதத்தில் ஈடுபட்டு அமைப்பை உடைத்து நாசப்படுத்தினர். குட்டி முதலாளிய அன்னிய வர்க்க கருத்துகளுக்கு ஆட்பட்டனர். ரவிந்திரனின் அனைத்து துரோகங்களையும் ஆதரித்து நியாயப்படுத்தினர். இந்த கலைப்புவாதத்தின் சூத்திரதாரிகள் ரவிந்திரன் மற்றும் ஞானம் ஆகியோர்.
கருநிலைவடிவிலான கோஷ்டிவாதத்தில் ஈடுபட்டதாக மனோகரன், ஞானம் இரு தரப்பும் அமைப்பில் ஒத்துக்கொண்டனர். இரு தரப்பும் சுயவிமர்சன கடிதம் அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது. மனோகரன் சுயவிமர்சனமாக எழுதிவைத்தார். ஆனால் ஞானம் கோஷ்டி தாங்கள் கோஷ்டிவாதத்தில் கருநிலைவடிவிலும் கூட ஈடுபடவில்லை என மாற்றி எழுதிவைத்தது. ஞானம் செய்த இந்த சதித்தனத்தால்தான் நடபு முரண் பகை முரணாக மாறியது. இரு வழிப் போராட்டத்தை சீர்குலைத்தது. ஞானத்தின் இந்த சூழ்ச்சியும் சதித்தனமுமே அமைப்பு பிளவுபட்டதற்கான அடிப்படை காரணம்.
AIM ஆதரவு பதிப்பகமான மனிதன் பதிப்பக வெளியீடுகளை அமைப்பிற்கு தெரியாமல் புதுமை பதிப்பக அலுவலகத்திற்கு மனிதன் அச்சகத்தில் இருந்து மற்றொரு தோழர் ஒருவர் மூலம் ரவிந்திரன் தருவித்தார். மற்றும் திருப்பத்தூரில் நடந்த ம.ஜ.இ.க நீட் எதிர்ப்பு அரங்க கூட்டத்தில் அந்த மனிதன் பதிப்பக வெளியீடுகளை அமைப்பிடம் விவாதிக்காமல் பழனி சின்னச்சாமி ( Palani Chinnasamy) என்பவருடன் இணைந்து விநியோகிக்க முயன்றார். அணிகள் அதை தடுத்து நிறுத்தினர். பாலன் வரலாற்றை எழுதுவதாக கூறிக்கொண்டு எமது அமைப்பை தாக்க கொண்டு வரப்பட்ட நூல் அது. அதை அமைப்பிற்கு தெரியாமல் இவர்கள் விநியோகிக்க முயன்றனர்.
எய்ம் அமைப்பு ஒரு தொண்டு நிறுவனம், அதை துவக்கும்போது அதில் சேர்ந்து செயல்பட்டேன் என்று ரவீந்திரனே அமைப்பிற்கு தந்த கடிதத்தில் ஒத்துக்கொண்ட விசயம்தான். எய்ம் அமைப்பிற்கு அ.மார்க்ஸ் வகுப்பு எடுக்க வந்ததால் அது ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் அல்ல எனவும், .ம.ஜ.இ.க தான் உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என அங்கு அறிவித்துவிட்டு வெளியேறியதாகவும் விசாரணையில் கூறினார். ஆனால் கடிதத்தில் அதை சொல்லாமல் மறைத்தார்.
எய்ம் தொடர்பு இல்லை எனில் மனிதன் பதிப்பக நூல்கள் எப்படி கிடைத்தன என கேட்டபோது முதலில் எய்ம் அமைப்பிடம் இருந்து வாங்கியதாக கூறியவர், பிறகு ஆய்வுக்குழுவிடம் மாவோயிஸ்ட் அமைப்பிடம் இருந்து வாங்கியதாக மாற்றி பேசினார். அவர் எய்ம் தொடர்பை முறித்துக்கொள்ளவில்லை என இதன் மூலம் தெளிவாக அம்பலமானது.
இதன் மீது அமைப்பிற்குள் இரு வழிப் போராட்டம் நடத்தி, ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் தீர்ப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இவர்கள் முன்வைத்த ஆவணத்தை மறுத்து, அமைப்பு பெரும்பான்மை தனது ஆவணத்தை முன்வைத்து இரு வழிப் போராட்டம் நடத்தியது. இரு தரப்பு ஆவணங்கள் மீது எல்லா மட்டங்களிலும் வாத அரங்குகள் திட்டமிடப்பட்டு வாதம் நடத்தப்பட்டன.
தொண்டு நிறுவனம் மற்றும் ஏகாதிபத்திய ஆதரவில் இருந்த அவர்களது நிலைப்பாட்டை பெரும்பான்மையான அணிகள் ஏற்கவில்லை. நிராகரித்தனர். இதனால் ஆத்திரத்தில் இரு வழிப்போராட்டத்தை இடையிலேயே சீர்குலைத்தனர்.
பெரும்பான்மைக்கு கட்டுப்பட்டு சிறுபான்மையாக செயல்படுவது எனும் ஜனநாயக மத்தியத்துவத்தை அவர்கள் ஏற்க தயாரில்லை. ஏற்றிருந்தால் அமைப்பு பிளவுபட்டிருக்காது. தனி அமைப்பு கட்டி அமைப்பை பிளவுபடுத்தினர்.
அ.மார்க்ஸ் - எஸ்.வி.ஆர் முதல் தமிழ்வாணன் - குணாளன் வரை அனைவரும் இரு வழிப்போராட்டம் நடத்த தயாரில்லாமல் தாமாகவே அமைப்பை விட்டு வெளியேறினர். அமைப்பு அவர்களை வெளியேற்றவில்லை. ஆனால் இவர்களோ ( ஞானம் - ரவிந்திரன்) இரு வழிப் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இடையிலேயே தங்கள் கருத்து வெல்லாது என தெரிந்ததும் வாத அரங்கை சீர்குலைத்து அதில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். கோஷ்டிவாதத்தில் ஈடுபட்டு அமைப்பை சீர்குலைத்தனர். அதுதான் வேறுபாடு.
ஏ.எம்.கே மறைவைப் பயன்படுத்தி குழப்பம் ஏற்படுத்த இறுதி நிகழ்ச்சிக்கு வந்தார் அ.மார்க்ஸ். அமைப்பை நாசமாக்கி துரோகம் செய்த ஏகாதிபத்திய கைக்கூலியான அ.மார்க்சை அனுமதிக்க கூடாது என பெரும்பான்மை அணிகள் போராடிய போது இவர்கள் அ.மார்க்சை அனுமதிக்க வேண்டும் என போராடினர். இறுதியில் புரட்சிகர உணர்வு பெற்ற அணிகள் அ.மார்க்சை ஓட ஓட விரட்டின.
தற்போது ஞானம் குழுவிலும் அவர் இல்லை என தெரிகிறது. அதாவது ரவிந்திரனின் கலைப்புவாத, தொண்டு நிறுவன இலக்கு ( aim) தொடர்கிறது.
ஞானம் குழுவினர் இன்றும் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்கப் பண்பை மட்டுமே பேசி, மறுபங்கீட்டை மூடி மறைப்பதை நாம் காண்கிறோம். இது MR 2004 / AIM நிலைப்பாட்டின் தொடர்ச்சியே. ஏகாதிபத்தியத்தின் அரசியலையும் - பொருளாதாரத்தையும் பிரிக்கும் டிராட்ஸ்கிய - காவுத்ஸ்கியமே.
இவ்வாறு அமைப்பை பிளவுபடுத்தி நாசப்படுத்தி துரோகம் செய்தவர் நம்மை குறுங்குழுவாதிகள் என்கிறார். சாத்தான் வேதம் ஓதும் கதைதான். குறுங்குழுவாதம் வறட்டுவாதம் என்பதெல்லாம் கலைப்புவாதிகள் தங்கள் கலைப்புவாதத்தை மூடிமறைக்க காலங்காலமாக பயன்படுத்தும் துருப்பிடித்த ஆயுதம்.
கலைப்புவாதம் பற்றி நாம் போதனை அளித்துள்ளோமா ?? என கேட்கிறார் சூழ்ச்சிக்காரரான ரவிந்திரன். அவரும் ஞானம் குழுவினரும் அமைப்பில் இருந்த போதுதான் கலைப்புவாதம் பற்றி வாதம் நடத்தி 2016 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை அவர்களும் ஏற்றுகொண்டுதான் செயல்பட்டனர். கலைப்புவாதம் பற்றியும் NGO அபாயம் பற்றியும் அணிகள் உணர்ந்திருப்பதால்தான் 80 களில் இருந்து தொடர்ந்து அப்போக்கை எதிர்த்தும் இவர்களை எதிர்த்தும் போராடினார்கள் என்பதை வசதியாக மறந்துவிட்டார்.
(கலைப்புவாதம் குறித்த அமைப்பின் தீர்மானத்தை இணைப்பில் படிக்கலாம்: https://senthalam.com/912)
எல்லாவிதமான கலைப்புவாத துரோகிகளையும், NGO ஊடுருவல்களையும் அனுமதித்திருந்தால் தமிழகத்தில் எமது அமைப்புதான் பெரிய அமைப்பாக இருந்திருக்கும். ஆனால் அதை எதிர்த்துப் போராடி அமைப்பை மார்க்சிய லெனினிய அமைப்பாக நிலை நிறுத்தும் போராட்டத்தில்தான் அமைப்பு தொடர் பிளவுகளை சந்தித்தது. இதுவரையில் வெளியேறிய அனைவரும் அமைப்பில் தமது கருத்துகளை மாற்றிக் கொண்டு செயல்படவோ அல்லது இரு வழிப் போராட்டம் நடத்தவோ தயாரில்லை. தமது கலைப்புவாதம், பிழைப்புவாதத்தை மூடிமறைக்க குறுங்குழுவாத அமைப்பு என நம்மை குற்றம் சொல்வது வாடிக்கையாக மாறிவிட்டது. எவராவது அமைப்பு உடையவேண்டும், பிளவுபடவேண்டும் என்று அமைப்பை கட்டுவார்களா ?? எவரும் தமது தவறான கருத்தை மாற்றிக்கொள்ளாமல் வெளியேறினால் அமைப்பு எவ்வகையில் பொறுப்பாகும் ??
பிழைப்புவாத கலைப்புவாத கருத்துகளை அமைப்பு உற்பத்தி செய்வதில்லை. சமூகத்தில் அவை ஆளும் வர்க்கங்களால் உற்பத்தி செய்யப்பட்டு அப்போக்கு குட்டி முதலாளித்துவ வர்க்கம் மூலம் கட்சிக்குள் கடத்தப்படுகிறது. அதை எதிர்கொண்டு உறுதியாக நிற்கும் பாட்டாளி வர்க்கத்தாரும் உளர். ஊசலாடி விலகும் குட்டி முதலாளிய வர்க்கத்தாரும் உளர். கலைப்புவாதிகளையும் ஏகாதிபத்திய NGO நிறுவனங்களையும் கட்சிக்குள் அனுமதித்தால் ஜனநாயகம் ; அவர்களை விமர்சித்து கருத்துகளை மாற்றிக்கொள்ள போராடினால் குறுங்குழுவாதம் என லெனின் எங்கும் சொல்லவில்லை. திருத்தல்வாதம், கலைப்புவாதத்தின் சமூகவேர்கள் பற்றி லெனின் சொன்னதை அவர்கள் மூடிமறைக்கிறார்கள்.
புரட்சி நடத்திய ரசிய - சீன கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ அமைப்பாக மாற்றப்பட்டதற்கு காரணம் ஏகாதிபத்தியங்களின் நவீன திருத்தல்வாத மற்றும் கலைப்புவாதமே. அது குருசேவ் - கோர்பசேவ் மூலம் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டு அவை முதலாளித்துவ அமைப்பாக மாற்றப்பட்டன என்பதுதான் வரலாறு.
எய்ம் அமைப்பில் தான் செயல்பட்டு பின்பு வெளியேறியதாக சொன்ன ரவிந்திரனின் கடிதமும், எய்ம் தொண்டு நிறுவனம் என்பது பற்றிய எமது ஆவணமும் வேண்டுவோர் கீழுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
94864 64963 See less
Loganathanமிகவும் சிறப்பான பதிவு தோழர்,
புரட்சிகர இயக்கங்களை சீர்குலைக்க முயலுவோரை சரியாக இனம் கண்டு ஒதுக்கியதை இப்போது தான் தெரிந்தது.
Aranga Gunasekaranஎனக்குத் தெரிந்த சில விவரங்கள்.எய்ம் அமைப்பு ஒரு புரட்சிகர அரசியல் கட்சியின் மக்கள் திரளுக்கான சனநாயக அமைப்பு.இதே பெயரில் சேலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு எய்ம் அமைப்பு இருக்கிறது.அதுதான் NGO அமைப்பு.மனிதன் பதிப்பகம் புரட்சிகர கட்சியின் சனநாயக அமைப்பு
Aranga GunasekaranLoganathan புரியவில்லை தோழர்.ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை மனிதன் பதிப்பகத்தை மிக நன்றாக அறிவேன்.AIMஅமைப்பு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி யில் ஒரு உறுப்பினர்.மஜ இக வும் ஒரு உறுப்பியக்கம் தோழர்
VethiAranga Gunasekaran இது வேலை வெட்டி இல்லாதவர்களின் பிதற்றுகள் தோழர் இதெல்லாம் பழைய பஞ்சாயத்துகள் மஜஇக என்ற சிறு குளுவானது புரட்சி நடக்காததற்கு யாரையாவது குற்றம் சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டி விட்டனர், அவர்கள் அமைப்பில் வேலை செய்யப்படும்வரை ஒருவர் நல்லவர்
என்று சொல்வதும் வெளியேறினால் அவரை மோசமானவர் என்றும் தூற்றுவது அவர்களின் வழக்கம் அதுதான் AMK ன் தத்துவம். ஏற்கனவே வெளியேறிய சில தோழர்கள் அமெரிக்காவிடம் 100 கோடி வாங்கிவிட்டனர் என்று அவதூறு பரப்பியவர்கள்தான் இவர்கள். ஒரு காலத்தில் யார்கூடவும் இணைந்து வேலை செய்ய மாட்டார்கள் குறிப்பாக பெரியார் அம்பேதகர் இயக்கங்களுடன் இணைந்து வேலை செய்யாமாட்டார்கள். இன்று AMK செத்தததிற்கு பின்பு அதே NGO அரசியல் இயக்கங்களுடன் இணைந்து பொதுகூட்டம் நடத்துகின்றனர் இதில் பேசுவதற்கு ஒன்றிமில்லை. அவர்களுக்கு வேறு வேலை இல்லை, கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் செய்த வேளையில் பெறுபான்மை வேலை அவர்களின் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களை பற்றி அவதூறு பரப்புவதே முதன்மை வேலையாக கொண்டுள்ளனர்.
- Palani Chinnasamy
Vethi 100% உண்மை தோழர். செத்த பிணம் பேசாது. அதுபோல் தங்களின் பின்னடைவுக்கு இவர்களின் அரசியல் அற்ற போக்குதான் அதை மூடிமறைக்கு அணியிலிருந்து வெளியேறிவர்களை குற்றம் சுமத்தி தன் அணிகளை மேய்கின்றனர் ஏனெனில் வெளியில் உள்ளவர்களுக்கு இவர்களின் அவதூறு
தெரியப்போவதில்லை இதுபோன்ற சில கண்துடைப்பு ....