உங்களை பற்றி , உங்களை விட அதிகம் தெரிந்து வைத்திருக்கும் நபரின் பெயர் இணையம்.
எப்பொழுது ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி அவசர அவசரமாக டேட்டா கார்டு போட்டோமோ அன்றே உங்கள் தகவல்கள் அனைத்தும் , பொதுவானதாக மாறிப்போனது. இன்னும் ஒரு படி மேலே சென்று எதையுமே கவனிக்காமல், I Agree என இருந்த இடத்தில் எல்லாம் டிக் அடித்துள்ள பகுதி எதையும் கவனிக்காமல் “உம்” கொட்டினோமோ அப்போதே அவ்வளவும் பொதுவனதானது. கம்யூனிகேஷன் என்ற பெயரில் மெயில், ஜாலி என்ற பெயரில் சோஷியல் மீடியா, எண்டெர்டெயின்மெண்ட் என்ற பெயரில் யூடியூப், பொழுது போகலனு கேம்ஸ் இப்படி எல்லாத்துக்கும் ஆப் டவுன்லோட் பண்ற வரைக்கும் மட்டும்தான் தகவல் உங்களோடது. இன்ஸ்டால் பண்ணிட்டா தகவல் பொதுவானது
[29/03 04:37] My Airtel WhatsApp: நம்மோட மொபைல் போன்ல இருந்து நமக்கே, ”நீங்க சாயங்காலம் 5 மணிக்கு டெல்லி போறீங்க, இல்ல உங்க கிரெடிட் கார்டு பில் இன்னும் கட்டல, இந்த வீடியோ கூட உங்களுக்கு பிடிக்கும், நீங்க போன்ல சேவ் பண்ணிருக்காத ஒரு நம்பர் இவருடயது “ இப்படியெல்லாம் மெசேஜ், நோட்டிபிகேஷன் வந்திருக்கா ? வந்திருக்கும். இல்லனா நீங்க ஆண்ட்ராய்டு போன் வச்சிருக்கலைனு அர்த்தம். சரி, இதெல்லாம் இல்லாம எப்படித்தான் ஆண்ட்ராய்டு போன் வச்சிக்கிறது ?
நம்முடைய மொபைல் எண். இருப்பிடம், Contact list, மெசேஜ் இப்படி எல்லா அடிப்படை தகவல்களையும் அப்ளிகேஷன் கேட்கும். ஆனால், எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுத்தால் மட்டுமே , அந்த அப்ளிகேஷன் இயங்கும் என்பது தவறு. எந்த அப்ளிகேஷனுக்கு எது தேவையில்லையோ, அதனை கொடுக்காமல் தவிர்க்கலாம். அப்படி தவிர்த்தாலும் கூட, பல முக்கிய தகவல்களை சில அப்ளிகேஷனுக்கு கொடுத்துதான் ஆகணும். இப்படி எல்லாவற்றையும் வாங்குற அப்ளிகேஷன்ஸ் இல்லாம மொபைல் வச்சிக்க முடிஞ்சா பிரச்னை இல்லை.
அப்படியெல்லாம் முடியாது, எல்லாமே வேணும்னா கூகுளும், ஃபேஸ்புக்கும் தகவல்களை திருட விடாத நபர்களா இருக்கணும். தனிநபர்கள் குறித்த அதீத விபரங்களை வைத்திருப்பதில் ஃபேஸ்புக்கை விட கூகுள் மூத்தவன். மெயில் என்ற பெயரில் நீங்கள் சேமிக்கும் தகவல்கள் கூகுளிடம் உண்டு. யூடியூப், மேப், ஜி-மெயில், கூகுள் + என அன்றாடம் இயக்கும் அதிக அப்ளிகேஷன்ஸ் எல்லாம் கூகுளுடையது. ஃபேஸ்புக்கை விட ஜிமெயிலை அதிகம் கொண்ட நபர்கள் இங்கு உண்டு. அலுவல் ரீதியாக கூட பயன்பாடுகள் கூகுளை நம்பி உண்டு. ஆனால் தகவல்கள் எவையும் திருடப்படாது என்பது கூகுள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. அப்படிப்பட்ட நம்பிக்கையில் மண்ணை அள்ளி போட்டதுதான் ஃபேஸ்புக். உங்கள் நம்பிக்கையை சிதைத்து, 5 கோடி பேரின் தகவல்களை திருட விட்டது சரியா ?
[29/03 04:37] My Airtel WhatsApp: நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு இருக்கிறீர்கள், எங்கு செல்வீர்கள், உங்களுக்கு பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன, உங்கள் பாஸ்வேட்ர்கள், வங்கி தொடர்பான பரிவர்த்தனை என அனைத்தையும் உங்கள் மொபைல் தெரிந்து வைத்திருக்கிறது. ஆனால், அப்ளிகேஷனை பொறுத்து , தேவையான தகவலை மட்டும் கொடுக்கிறது. அனைத்து தகவல்களையும் திரட்டிக் கொள்ளும் அப்ளிகேஷன் தன்னுடைய சர்வரில் சேமித்து வைத்துக் கொள்கிறது. வியாபார ரீதியில் இலாபத்தை நோக்கி நகரும் போது , முதலில் அடமானம் வைக்கப்படுவது தேடித்தேடி, குருவி சேர்த்தது போன்ற சேகரிக்கப்பட்ட டேட்டாக்கள் ( தகவல்கள்). அப்படித்தான் கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவோடு வணிக ரீதியில் இலாபம் பார்க்க எண்ணி 5 கோடி பேரின் தகவல்களை அடமானம் வைத்தது ஃபேஸ்புக். ஆட்டையை போட்டது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா. நாளை இதனை கூகுளும் செய்யலாம். வேறு எந்த இணையம் சார்ந்து இயங்கும் நிறுவனமும் செய்யலாம்.
உங்களை பற்றி , உங்களை விட அதிகம் தெரிந்து வைத்திருக்கும் நபரின் பெயர் இணையம். அவரின் குழந்தைகளான கூகுள், ஃபேஸ்புக், இன்ன பிற அப்ளிகேஷன்ஸ். இவர்களை விட்டு இருக்கவும் முடியாது, வைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்கவும் முடியாது
உங்களை பற்றி உங்களை விட அதிகம் தெரிந்த நபர் யார் ? தெரிஞ்சிக்கணுமா ?
Published On: 22 Mar, 2018 06:10 PM
Last Updated On: 22 Mar, 2018 06:19 PM

உங்கள் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாட நீங்கள் மறந்தாலும், உங்கள் நண்பர்களை எழுப்பி வாழ்த்துச் சொல்ல வைக்கும் வித்தைக்காரன். 5 வருஷம் முன்னாடி நீங்க கிறுக்குன எல்லாத்தையும் , கண் முன்னாடி கொட்டி விடும் கள்வன். உங்கள் மனைவியின், காதலியின் பிறந்தநாளை உங்களுக்கே ஞாபகப்படுத்தி , உங்கள் காதலை டெஸ்ட் செய்யும் கலவரக்காரன். ஆனால் உங்களை அடிமைப்படுத்தி மூழ்க வைக்கும் போதையும் அவனிடம் உண்டு. இன்றைய நவீன உலகில் உங்கள் மனைவிக்கோ, பெற்றோருக்கோ உங்களை பற்றி தெரியாத தகவலை எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறது ஃபேஸ்புக். அப்படிப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 5கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக சேனல் 4 நிறுவனம் செய்தி வெளியிட்டது. திருடப்பட்ட தகவல்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்காக கேம்பிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment