கம்யூனிஸ்ட்கள் யார் அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கான பணி என்ன என்பதனையும் மார்க்சிய ஆசான்கள் தெள்ளத்தெளிவாக நம் முன் வைத்து சென்றுள்ளனர். அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பதும் அதனை பின்பற்றி நம் நாட்டில் உள்ள சுரண்டல்முறைக்கு முடிவு கட்டுவதே இங்குள்ள கம்யூனிஸ்டுகளின் பணி அவைதான் கம்யூனிஸ்டுகளின் நோக்கம்.
பொது அறிவியலான இயற்பியல், வேதியல் ஏன் இன்று தோன்றியுள்ள AI தொழிற்நுட்பமும் உலகிற்கு ஒன்றுதானே அப்படியெனும் பொழுது சமூக அறிவியலான மார்க்சியம் உலகம் தழுவிய ஒற்றைதன்மை வாய்ந்ததுதானே? ரசியாவும் சீனாவும் தன்நாட்டின் நிலைமைகேற்ப அதனை பயன்படுத்தினர் வெற்றி கண்டனர் ஆனால் இன்றுவரை இந்தியா போன்ற நாட்டில் மார்க்சியத்தை பொருத்தி வெற்றிகாண்பதிலே குழப்பம். ஆக மார்க்சியம் உலகம் தழுவியதே ஆனால் குறிப்பான தன்மையை அறிந்து பயன்படுத்தும் திறன் வேண்டும் அவையின்றி நாட்டிற்கொரு மார்க்சியம் தவறு....
ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சூழலுகேற்ப சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்த போராட்டத்தில் சுரண்டப்படும் வர்க்கத்தை ஓரணியில் திரட்டி எதிரிக்கு எதிராக ஒன்றுபட்டால் மட்டுமே பலம் பொருந்திய எதிரியை வீழ்த்த முடியும்.
நமக்கான நோக்கம், நமக்கான வழிமுறையை முதலில் வகுத்துதானே நாம் முன்னேற முடியும்?
நாம் ஒன்றுபட்ட புரட்சிகர கம்யூனிச இயக்கத்தை கட்ட போகிறோம் என்றால் அதற்கான கண்ணோட்டமும் நடைமுறைக்கான வழிமுறையும் மார்க்சியமாகதானே இருக்க வேண்டும்?
பல்வேறு நடைமுறையில் உள்ளவர்கள் என்னவகையான நடைமுறையில் உள்ளனர் அதனை பற்றியும் பரிசீலிப்போம்! நாம் கருத்தியல் ரீதியாக ஒன்றுபடவே முடியாது என்று கூறும் ஒருவர் ரசிய சீன புரட்சியையும் சுட்டிகாட்டுகிறார். உண்மையில் பொது நோக்கத்தில் அடிப்படையில் ரசிய போல்ஷ்விக் கட்சியாகட்டும் சீன கம்யூனிஸ்ட் கட்சியாகட்டும் புரட்சியை சாதித்து அவை நடைமுறையில் சாதிக்கபட்டவை அதற்கான கண்ணோட்டமும் தத்துவமும் மார்க்சியம்தான் அல்லவா?
இங்கு கம்யூனிஸ்டுகள் பல்வேறு கட்சிகளாவும், அமைப்புகளாகவும், குழுக்களாகவும் மற்றும் தனிநபர்களாகவும் பிளவுபட்டுள்ளோம்!
1. நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றை முதன்மையானதாகவும் அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதுதான் நமது முதன்மையான பணியாகும் என்று கருதுகிறோம். அதாவது இந்தியா பல தேசங்களைக் கொண்டது. ஆகவே இங்கே தேசியப்பிரச்சனைதான் முதன்மையானது என்பதும்.
2. இந்திய சமூகத்தில் மக்கள் சாதிகளாகப் பிளவுண்டு இருக்கிறார்கள். ஆகவே இங்கே சாதிப்பிரச்சனைதான் முதன்மையானது குறிப்பாக தலித்துகள் தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள், இந்த தலித்துகளின் பிரச்சனைதான் முதன்மையானது என்பதும் இந்தப் பிரச்சனையை தீர்ப்பதுதான் முதன்மையானது என்றும்
3.இவ்வாறு வேறுபலப் பிரச்சனைகளை முதன்மையானது என்று வெவ்வேறு பிரிவினர் கருதி பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் இப்பிரச்சினைகள் இருக்கதான் செய்கின்றன. ஆனால் இதற்கான காரணங்களையும் அடிப்படைகளையும் சேர்த்தேப் பார்க்க வேண்டும் என்பது மார்க்சியம்.
யானையைப் பார்த்த குருடர்களின் கதையை நாம் கேட்டிருப்போம். யானை உலக்கையைப் போல் உள்ளது என்று ஒருவரும், யானை முறம் போல் உள்ளது என்று மற்றொருவரும் சொல்வதாக அந்தக் கதை கூறும். ஆனால் யானை தும்பிக்கை கண், காது, உடம்பு வால் போன்ற பல பகுதிகைக் கொண்ட மொத்த உருவமே யானையாகும் என்பதை நாம் அறிவோம். அதுபோலவே இந்திய சமூகமானது இந்திய அரசின் கட்டுப்பாட்டிலும் ஆளுகைக்கு உட்பட்டும் வாழ்ந்துவருகின்ற மனிதக் கூட்டமாகும். இந்த சமூக கூட்டம் பல பிரச்சனைகளை சந்தித்துவருகிறது என்பதுதான் உண்மையாகும். அதற்கான காரணம் இன்றைய ஏகாதிபத்தியம் தன் அக்டோபஸ் சுரண்டல் கரங்களால் உலகையையே தனதாதிக்கதால் அடிமைபடுத்தி ஒட்ட சுரண்ட நினைக்கிறது. இந்தியா போன்ற பெரும் உழைப்பு சக்தியையும் நுகர்வோரையும் கொண்டுள்ள நாட்டை ஏகாதிபத்தியம் விட்டுவிடுமா? அவர்களுக்கு சேவகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்கள் ஒற்றை ஆட்சி அதிகாரத்தின் மூலம் பல்தேசியங்களை கொண்ட துணைகண்டத்தை சுரண்ட அடக்கி ஒடுக்கி ஆள்வதற்கு பல்வேறு உத்திகளை கையாள்கிறது. அதில் மத, சாதிய அடையாளங்கள் மற்றும் பிரிவினை பேச பல்வேறு அடையாளங்களை உழைக்கும் மக்கள் மத்தியில் புகுத்தி அவர்கள் ஒன்றுபடாமல் பார்த்துக் கொள்கிறது. உழைக்கும் மக்கள் தவறியும் ஒன்றுபடக்கூடாது இவைதான் ஆளும் வர்க்கதின் நோக்கம்.
ஆனால் உழைக்கும் வர்க்கம் மொழியால், சாதியால், தேசத்தால் மற்றும் பல்வேறு ஒடுக்குமுறைகளாலும் அடக்குமுறைகளாலும் தினம்தினம் சந்திக்கும் அவலங்களுக்கு தீர்வு ஒடுக்குபவனுக்கு எதிரான போரில் ஒடுக்கபடுவோர் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உதாரணம்தான் ரசிய சீனப் புரட்சியின் படிப்பினைகள்.
அவர்கள் மார்க்சிய தத்துவத்தை ஏற்றுதான் சாதித்தார்கள்"இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் உலகைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் விளக்கியது, ஆனால் சமூகத்தை விளக்கினால் மட்டும் போதாது, சமூகத்தை மாற்றவேண்டும் என்பதே முதன்மையானதாகும்" என்ற மார்க்சிய ஆசான்கள் எடுத்துச் சொல்லி சமூகத்தை மாற்றுவதற்காக வழிகாட்டினார்கள் என்பதை ஏற்றவர்கள்தானே ரசிய சீன புரட்சியை சாதித்தவர்கள்???
ஆகவே இங்கு நிலவுகின்ற பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி என்ன? என்பதைத்தான் நாம் முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சனையை தீர்ப்பதற்கு மக்கள் என்ன செய்கிறார்கள்? நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ, மாவட்ட ஆட்சித்தலைவரையோ, அமைச்சர்களையோ அணுகுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். எந்தப் பிரச்சனை என்றாலும் அரசாங்கம் (அமைச்சர்கள்) அல்லது அரசு (அரசு அதிகாரிகள்) இவற்றின் மூலமாகவே பிரச்சனைகளை தீர்க்க நாம் முயற்சி செய்கிறோம். "அவனன்றி அணுவும் அசையாது" என்று ஆன்மீகவாதிகள் சொல்வது உண்மையல்ல, ஆனால் அரசின்றி மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது நடைமுறை உண்மையாகும். இதனை யாராலும் மறுக்க முடியாது.
இந்திய பெருமுதலாளிகளிடம் மூலதனம் இருக்கலாம் ஆனால் அவர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவது இந்த அரசின் துணையோடுதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த அரசும், அரசாங்கமும் பெருமுதலாளிகளுக்கு சேவை செய்வது போல பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு சேவை செய்வதில்லை, மாறாக உழைக்கும் மக்களுக்கு எதிராகவே நடந்துகொள்வதை நாம் பார்க்கிறோம்.
ஆகவே பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களை பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு நமக்குத் தேவை புதிய வகையான அரசாகும். அத்தகைய அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தேசியப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும், சாதிப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும் பிற பிரச்சனைகளை முதன்மை படுத்துபவர்களும் அவர்களது பிரச்சனையை தீர்ப்பதற்கு எவ்வகையான அரசு வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து முன்வைத்து விவாதங்கள் நடத்தி ஒரு குறிப்பிட்ட அரசுமுறையை உருவாக்குவதற்கான ஒத்த கருத்தை வந்தடையும் நோக்கம் கொண்டிருப்பவர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படுவது சாத்தியமாகும். அதாவது நாம் ஒன்றுபடுவதற்கு நம்மிடையே ஒரு பொதுவான லட்சியம் அவசியமாகும். இதற்கு மாறாக வெவ்வேறு லட்சியம் கொண்டவர்களால் ஒன்றுபட்டு ஒரு ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சியை கட்ட முடியாது.
ஆகவே அரசு பற்றிய பிரச்சனையில் தீர்வு கண்டு ஒரு ஒத்த கருத்தின் அடிப்படையில் ஒன்றுசேர்வோம். அரசு பற்றிய பிரச்சனையை படிப்பது, விவாதிப்பது, புரிந்துகொள்வது, தற்போதைய அரசின் தன்மை என்ன? என்பதை தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து புரிந்துகொள்வது, தற்போதைய அரசு எந்தப் பிரிவினருக்காக சேவை செய்கிறது, எந்தப் பிரிவினருக்கு எதிராக செயல்படுகிறது என்ற விவரங்களை சேகரித்து மக்களிடம் இந்த அரசையும், அரசாங்கத்தையும் அம்பலப்படுத்துவது, மக்களின் பிரச்சனைகளை நேர்காணல் மூலம் ஆய்வு செய்து அவர்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அரசு எப்படி இருக்க வேண்டும், அதன் நிறுவன வடிவங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆய்வு செய்து ஒரு புதிய வகையான அரசமைப்பு குறித்து ஒத்த கருத்தை வந்தடைவதை லட்சியமாக கொள்ள வேண்டும். அத்தகைய லட்சியவாதிகளால் நிச்சயமாக ஒன்றுபட முடியும்.
நாம் ஒன்றுபடுவதற்கு நம்மிடையே ஒரு பொதுவான கண்ணோட்டம் அவசியமாகும். கண்ணோட்டத்தை, அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று விஞ்ஞானக் கண்ணோட்டம், மற்றொன்று விஞ்ஞானத்துக்கு எதிரான கண்ணோட்டமாகும். விஞ்ஞானக் கண்ணோட்டத்திலிருந்து பிரச்சனைகளை ஆய்வு செய்தால், பிரச்சனைகளை நம்மால் புரிந்துகொண்டு அதனை தீர்க்கவும் உறுதியாக முடியும். இதற்கு மாறாக விஞ்ஞானக் கண்ணோட்டத்தை மறுத்துவிட்டு விஞ்ஞான எதிர்ப்பு கண்ணோட்டத்தோடு பிரச்சனைகளைப் பார்த்தால் பிரச்சனைகளை நாம் புரிந்துகொள்ளவும் முடியாது அதனை தீர்க்கவும் முடியாது. அத்தகைய சமூக விஞ்ஞானக் கண்ணோட்டம்தான் மார்க்சியம் ஆகும். ஆகவே ஒன்றுபட விரும்பும் நாம் அனைவரும் மார்க்சிய சமூக விஞ்ஞான கண்ணோட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே சிந்தித்து கருத்துக்களை பரிமாறவும் விவாதிக்கவும் வேண்டும். இந்த அடிப்படையில் ஒத்த கருத்துள்ளவர்களால் மட்டுமே ஒன்றுபட முடியும். இதற்கு மாறாக வெவ்வேறு கண்ணோட்டம் கொண்டவர்களால் ஒன்றுபட முடியாது. அவ்வாறு ஒன்றுபட்டாலும் அந்த ஒற்றுமை நீடிக்காது. கருத்தொற்றுமையின் அடிப்படையிலேயே நாம் இயக்கங்களில் இணைந்து செயல்பட்டாலும் கருத்தொற்றுமையையும் மீறி அமைப்பு பிளவுபட்ட அனுபவம் நமக்குள்ளது. அதற்குக் காரணம் கண்ணோட்டம் ஒத்ததாக இல்லை. அதாவது மார்க்சிய கண்ணோட்டத்தை அந்த அமைப்பில் உள்ளவர்கள் வளர்த்துக்கொள்ளவில்லை. ஆகவே நமது ஒற்றுமைக்கு மார்க்சிய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வதும்அந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பிரச்சனைகளை அணுகுவதற்கான பயிற்சி பெறவேண்டும். இல்லை என்றால் நமக்கிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை, அப்படியே ஒற்றுமை ஏற்பட்டாலும் அது நீடிக்காது. ஆகவே நாம் ஒன்றுபடுவதற்கு மார்க்சிய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வதில் நாம் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
.......
வர்க்க சமூகத்தில் வர்க்கங்கள் அற்ற பேச்சோ எழுத்தோ செயலோ இல்லை. ஆனால் இங்குள்ள பலரின் செயல்பாடு என்பது ஆளும் வர்க்கத்தின் அடி ஒற்றி செயல்படுவதுதான் தங்களுக்கான விடியலை(விடுதலையை) அவர்களிடம் தேடுவதாகதான் உள்ளது. எதிரி வர்க்கம் எப்படி தன் சுரண்டலை, அடக்கு முறையை, ஒடுக்கு முறையை விட்டுக் கொடுக்கும் இதனை விட்டு விட்டால் அது எப்படி உயிர் வாழும் எதிரியிடம் மண்டியிடுவதுதான் வர்க்க சமரசம்.
வர்க்க எதிரிக்கு எதிராக நிற்பதை விட்டு வர்க்க எதிரி உடன் சமரசம் செய்து கொள்வது இதற்கு தங்களுக்கு ஏற்ற வகையில் மார்க்சிய தத்துவத்தையும் மற்ற தத்துவத்தை ஒன்று இணைத்து குழப்பிக் கொள்வது அல்லது குழுப்புவது எவ்வகையான மார்க்சிய புரிதல் இவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
தமிழகத்தில் உள்ள நிலைபாட்டை பரிசீலிப்போம்- திராவிட நாடு திராவிடர்கே என்ற முழக்கம் தொடங்கி இன்றைய திராவிட கட்சிகளின் அரசியல் ஓட்டையாண்டி தனத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் புரிந்துக் கொள்பவர்களுக்கு மட்டுமே வரலாற்று படிப்பினைகளை விள்ங்கிக் கொள்ள முடியும்.
அதாவது பிரிட்டிஷ்
இந்தியா கட்டியமைக்காத பல பகுதிகளை இந்திய தரகு முதலாளிய அரசானது வலுக்கட்டாயமாக
இந்தியாவுடன் இணைத்தது மேலும் பெரு முதலாளிகளின் தேவைக்காக இந்தியச் சூழலில் இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களை சுரண்ட
ஒற்றை கலவை பண்பாட்டை உருவாக்கி ஒற்றை கலாச்சாரம் என்று பெயர் சூட்டி அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கின்றது. இந்திய கலாச்சாரம் என்பது இல்லாத ஒன்றாகும், இருநூறு
ஆண்டுகளுக்கு மேல் இராணுவ பலத்தாலும் சட்ட அடக்குமுறைகளாலும் வலுக்கட்டாயமாக
திணிக்கப்பட்டிருக்கும் இந்த இந்தியா.
இதனை
எதிர்த்து தேசிய இனங்களில் உள்ள பெரு முதலாளிகள், நிலவுடைமையாளர்கள் தம் கையில் உள்ள அரசு அதிகார துணைக் கொண்டு தமது
தேவைகளை முழுமையாக்க மாற்று பண்பாட்டு தளத்தை உருவாக்கி அதில் வடவர்- தென்னவர்
மோதலாக, தமிழ்மொழி -வடமொழி மோதலாக, ஆரியர்-
திராவிட மோதலாக, இந்தி பேசும் இனம்- ஏனைய மொழிகள் பேசும்
இனங்கள் மோதலாக மட்டுமே சித்தரித்து மாற்று பண்பாட்டை முன் வைத்து செயல்பட்டது.
தமிழ் பேசும் பகுதிகளில் பெரு முதலாளிகள், நிலவுடைமையாளர்கள், பணக்கார விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், உதிரி பாட்டாளிகள்… இன்னும் பல வர்க்கத்தினர் வாழும் இடத்தில் வெளியில் இருந்து உருவாக்கப்பட்ட பண்பாட்டு பாதிப்பு அதாவது பழைமையையும் புதுமையையும் கலக்கும் ஒருவகை பண்பாடு….அவற்றில் சில தனிமனித அரசியலில் பங்களிப்பை புரிந்துக் கொள்ள வேண்டும்… அதில் ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருந்தோர் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் அல்லவா?
அதன் வெளிப்பாடே இங்கு கம்யூனிஸ்டுகளையும் பாதித்துள்ள சிலவற்றை பார்ப்போம்
1.தனிநபர் வழிபாட்டை பூதகரமாக்கி எல்லாவற்றுக்கும் ஓர் உயர் தனிமனிதனை மீட்பராக எவ்வித விமர்சனமின்றி ஏற்று கொள்ளும் மனநிலையை உருவாக்கி தன்னையும் தன்னை பின்பற்றுவோரையும் ஆழ்த்துவது.
2.ஓட்டரசியலின் குறிக்கோள் வெற்றியே அதற்காக, அராஜகம்,
பொறுக்கிதனம், குறிகோளற்ற வாழ்க்கையை முன்வைத்து செயல்படல்.
3. வார்த்தை ஜால மாயையில் போலித்தனத்தில் சுகம் காணுதல்.(நிலவுடைமை,
முதலாளிய உரிமைகளை காத்துக் கொண்டே, சனநாயகம்,
சுதந்திரம், சமத்துவம் பேசிய போலித்தனம்).
இவ்வாறவர்கள் நம் மத்தியில் பெருகிக் கொண்டுள்ளனர்.
மேலும் கம்யூனிஸ்டுகள் மார்க்சிய ஆசான்களை உள்வாங்காத ஒன்றை குறிப்பிடாக வேண்டும்.
"சமூக ஜனநாயவாதி" என்னும் பதம் விஞ்ஞான வழியில் தவறானது என்று நிலை நாட்டுகையில் எங்கெல்ஸ் இப்பொருள் குறித்து தமது கருத்துக்களைக் கூற நேர்ந்தது. பல்வேறு பொருள் குறித்து, முக்கியமாய் "சர்வதேசப்" பிரச்சனைகள் குறித்து 1870 - 80 ஆம் ஆண்டுகளில் தாம் எழுதிய கட்டுரைகளின் பதிப்பு ஒன்றுக்கு எங்கெல்ஸ் முன்னுரை எழுதினார். இம் முன்னுரை 1894 ஜனவரி 3ஆம் தேதி இடப்பட்டது; அதாவது, அவருடைய மறைவுக்கு ஒன்றரை ஆண்டுகள் முன்னதாய் எழுதப்பட்டது. தனது எல்லா கட்டுரைகளிலும் "சமூக ஜனநாயவாதி" என்று சொல்லாமல் "கம்யூனிஸ்ட்" என்னும் பதத்தை உபயோகித்ததாகவும், அக்காலத்தில் பிரான்சில் புருதோனியவாதிகளும் ஜெர்மனியில் லஸ்ஸாலியர்களும் (லஸ்ஸாலியர்கள்:- ஜெர்மன் குட்டிமுதலாளித்துவ சோசிலிஸ்ட் ஃபெர்னாண்டு லஸ்ஸாலின் ஆதரவாளர்கள், ஜெர்மன் தொழிலாளர்களது பொதுச் சங்கத்தின் உறுப்பினர்கள். இச்சங்கம் 1863இல் லைப்சிகில் கூட்டப்பட்ட தொழிலாளர் நிறுவனங்களது காங்கிரஸில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் முதலாவது தலைவரே லஸ்ஸால். அதன் வேலைத்திட்டத்தையும் அதன் போர்த்தந்திரத்தின் அடிப்படைக் கூறுகளையும் லஸ்ஸால் வகுத்திட்டார். சங்கத்தின் அரசியல் வேலை திட்டம் அனைத்து மக்கள் வாக்குரிமைக்காகப் போராடவும், அதன் பொருளாதார வேலைத் திட்டம் பிரஷ்ய அரசாங்கத்தின் மானிய உதவி பெற்ற தொழிலாளர் பொருளுற்பத்திக் கழகங்களுக்காக போராடவும் அறைகூவின. லஸ்ஸாலியர்கள் பிஸ்மார்க்கின் பேரரசுவாத கொள்கையை ஆதரித்தனர். மார்க்சும் எங்கெல்சும் லஸ்ஸாலியர்களது தத்துவம், போர்த்தந்திரம், நிறுவன ஒழுங்கமைப்பு கோட்பாடுகள் ஆகியவை ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதப் போக்காக அமைவதாய் வன்மையாக கண்டித்து திரும்பத் திரும்ப விமர்சித்து வந்தனர்) தங்களை சமூக ஜனநாயவாதிகள் என்பதாய் அழைத்துக் கொண்டதே இதற்குக் காரணம் என்றும் எங்கெல்ஸ் இந்த முன்னுரையில் எழுதினார். (அரசும் புரட்சியும் லெனின் பக்கம் 114-115)
ஆரம்பகாலங்களில் சர்வதேச
கம்யூனிஸ்டுகள் சமூகஜனநாயகவாதிகள் என்ற பெயரிலேயே இயங்கி வந்தனர். இந்தப் பொயரில்
இயங்கிய கம்யூனிஸ்டுகளாகிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புருதோனியவாதிகளும்,
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த
லஸ்ஸாலியர்களும் தங்களை
சமூகஜனநாயகவாதிகள் என்று கூறிக்கொண்டே மக்களுக்கு எதிரான கொள்கை வகுத்து
செயல்பட்டதால், சமூகஜனநாயகம்
என்ற பெயரை தவிர்த்துவிட்டு தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லவேண்டும் என்று
கம்யூனிஸ்டு என்ற சொல்லை எங்கெல்ஸ் பயன்படுத்தினார். இந்த வரலாற்றிலிருந்து
ஆரம்பகாலங்களிலேயே கம்யூனிச அமைப்புகளுக்குள்ளேயே கம்யூனிசக் கொள்கைகளுக்கு
எதிரானவர்கள் உருவானார்கள் என்பது தெரியவருகிறது. அவ்வாறு கம்யூனிஸ்டுக்
கட்சிக்குள் இருந்த கம்யூனிசத்திற்கு எதிரானவர்களின் கொள்கைகளை தொடர்ந்து மார்க்ஸ்
போன்ற தலைவர்கள் போராடி வீழ்த்தியதன் மூலமே கம்யூனிசக் கொள்கையானது மக்களின்
செல்வாக்கை பெற்று வளர்ந்து வெற்றிபெற்றது. கம்யூனிசத்துக்கு எதிரானவர்கள்
இப்போதும் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளே இருக்கிறார்கள். மக்களுக்கு எதிரான கொள்கை
கொண்டவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கொள்கையையும் அவர்களையும்
எதிர்த்துப் போராடவதற்கு மார்க்சிய ஆசான்களைப் போன்ற தலைவர்களும்,
கம்யூனிஸ்டுக் கட்சி
உறுப்பினர்களும் முன்புபோல் தற்போது இல்லை. ஆகவேதான் தற்போது மார்க்சியத்திக்கு
எதிரான கொள்கை கொண்டவர்கள் மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் முன்பு
எங்கெல்ஸ் செய்தது போல் கம்யூனிஸ்டுக் கட்சியின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
இங்கே உள்ளது ஒன்று உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சி மற்றவையெல்லாம் போலி
கம்யூனிஸ்டுக் கட்சி என்று அழைக்கலாம். ஒவ்வொரு பிரச்சனையிலும் மார்க்சிய
ஆசான்களது போதனைகளை பின்பற்றும் கட்சியே உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சியாகும்.
புருதோன், லஸ்ஸால்,
காவுத்ஸ்கி,
குருசேவ் போன்றவர்களை
பின்பற்றுபவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.
மேலும் ஆசான் லெனின் நூலிலிருந்து
கம்யூனிஸ்டுகள் கற்றறிதல் பற்றி லெனின் கூறுகிறார் முதலில்
கம்யூனிஸ்டுகள் அறநெறிப் பிரச்சனை பற்றி பரிசோதிக்க வேண்டும்.
நீங்கள் உங்களை கம்யூனிஸ்டுகளாக பயிற்றுவித்துக் கொள்ள
வேண்டும் கற்றறிதல் ஒழுங்கு அமைத்தல் ஒன்றுபட செய்தல் போராடுதல் ஆகியவற்றின் மூலம்
இளைஞர் கழக உறுப்பினர்கள் தம்மை பயிற்றுக் கொண்டு இளைஞர் கழகத்தை தம் தலையாய்
கருதுவோர் எல்லோரையும் பயிற்றிவிருக்கும் படியான முறையில் தனது நடைமுறை
செயல்பாட்டை ஏற்பாடு செய்து கொள்வதுதான் இளைஞர் கழகத்தின் பணி. எல்லோரையும்
கம்யூனிஸ்டுகளை பயிற்றுவிக்க வேண்டும் என்ற இளைஞர்களுக்கு தரப்படும் பயிற்சி கல்வி
போதனை ஆகிவிட்டது நோக்கம் எல்லாம் கம்யூனிஸ்ட் அறநெறி ஊட்டுவதாக இருக்க வேண்டும்.
கம்யூனிஸ
ஒழுக்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதா? நிச்சயமாய் இருக்கிறது! நமக்கு என்று ஒரு தனி அறநெறி
கிடையாது என்று அடிக்கடி பேசப்படுகிறது. ஒழுக்கநெறி அனைத்தையும் நிராகரிப்பவர்கள்
என்பதை கம்யூனிஸ்ட களாகிய நம் மீது முதலாளித்து வர்க்கத்தினர் அடிக்கடி குற்றம்
சாட்டுகிறார்கள் பிரச்சனையை குழப்பதற்கான தொழிலாளர் விவசாயிகளில் கண்களில் மண்ணைத்
தூங்குவதற்கான ஒரு உபாயமே இது. எந்த அர்த்தத்தில் நாம் அறநெறியை ஒழுக்க நெறியை
நிராகரிக்கிறோம். முதலாளி வர்க்கத்தினர் அதற்கு அளித்திடும் அந்த அர்த்தத்தில்
நிராகரிக்கிறோம். கடவுள் கட்டளைகளை அவர்கள் அறநெறி அடிப்படையாகக் கொள்கிறார்கள்
எங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நாம் கூறுகிறோம்.
மனிதனுக்கு
புறம்பான வர்க்கத்திற்கு புறம்பான கருத்து இனங்கள் அடிப்படையாய் கொண்ட எந்த ஒழுக்க
நெறியும் நாம் நிராகரிக்கிறோம். அது ஏமாற்று வித்தை மாய்மாலம் நிலப்பிரப்புத்துவ
முதலாளிகள் நலனை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கு
உபாயம் செய்கிறார்கள். எங்களுடைய ஒழுக்க நெறி பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க
போராட்டத்தில் நலன்களுக்காக முற்றிலும் கீழ்ப்படிந்தது என்று நாம் கருதுகிறோம்.
எங்கள்
ஒழுக்க நெறி பாட்டாளி வர்க்க போராட்டத்தின் ஒழுங்கிலிருந்து உதிக்கிறது பழைய
சமுதாயம் எல்லாம் தொழிலாளர் விவசாயின் மீதும் நிலப்பிரப்புகள் முதலாளித்துவ
புரிந்த ஒடுக்கு முறையின் அடிப்படையில் அமைந்திருந்தது. நாம் அதை அடியோடு அழிக்க
வேண்டி இருக்கிறது, அவர்களை
வீழ்த்த வேண்டி இருக்கிறது. ஆனால் இதை செய்ய, நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டி இருக்கிறது. அது கடவுளால்
உண்டாக்கப்பட கூடிய ஒன்று அல்ல. இந்த ஒற்றுமையை தொழிற்சாலைகளால் மட்டும்தான்
அளித்திட முடியும். நீண்ட நெடிய உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட
பாட்டாளி வர்க்கத்தால்தான் உண்டாக்க முடியும். இந்த வர்க்கம் உருவான பிறகு வெகுஜன
இயக்கம் ஒன்று தோன்றி மிகவும் பலவீனமான ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க புரட்சி
வெற்றியடைந்திருப்பதை நாம் காண்கிறோம். இந்த வெற்றிக்கு வழி செய்தது இந்த பாட்டாளி
வர்க்க புரட்சி அனைத்து உலகில் முதலாளித்து வர்க்கதினால் கடும் தாக்குதலுக்கு
உள்ளாகி கொண்டிருக்கிறவர்கள் இடையில் ஒற்றுமையும் மற்றும் சிதறுண்டுள்ள விவசாயிகளை
தன்னை பின்பற்றி வர செய்துள்ளது. சுரண்டலாளர்களின் எல்லா தாக்குதலையும் சமாளித்து
நிற்பது திடமான இசக்தியை பாட்டாளி வர்க்கம் தன் அணியில் அரவனைத்து வர்க்க
சமூகத்தில் இன்று சிதறுண்டுள்ள உழைப்பாளிகள் வெகுஜனங்கள் ஒன்றுபடவும் தமது அணியில்
ஒன்று திரட்டி கொள்ளவும் கம்யூனிச சமுதாயத்தை முடிவாய் பாதுகாத்துக் கொள்ளவும்,
முடிவாய் உறுதிப்
பெரும்படியும் செய்ய, முடிவாய்
பாட்டாளி வர்க்க கட்சி துணை
புரிய முடியும். எனவேதான் மனித சமுதாயத்திற்கு மேலானது எந்த ஒழுக்க நெறி என்பதாய்
நமக்கு ஏதுமில்லை என்று கூறுகிறோம்.
நமது
ஒழுக்க நெறியானது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தினுடைய நலன்களுக்கு
கீழ்ப்பட்டதாகும் இந்த வர்க்க போராட்டம் எதில் அடங்கி உள்ளது?
இன்றைய
ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் வர்க்கத்தை ஒழித்தல் இதில் அடக்குவது.
வர்க்கங்கள் என்பவை யாவை சமுதாயத்தில் ஒரு பிரிவு மற்றொரு
பிரிவின் உழைப்பை அபகரித்துக் கொள்ள வழி செய்வது இங்குள்ள ஒழுங்கு. சமுதாயத்தின்
ஒரு பிரிவு எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளுமாறு அந்த வர்க்கதின் ஒழுங்காக
இருக்க காண்கிறோம். சமுதாயத்தின் இந்த ஒருபிரிவை ஒழித்துக் கட்ட வேண்டிய தேவை
இன்னொரு பிரிவுக்கு உள்ளது.
ஜாரை விரட்டுவது கடினமாய் இருக்கவில்லை ஒரு சில நாட்களை
தேவைப்பட்டன. நிலப்பிரப்புகளை விரட்டுவது அதிக கடினமாய் இருக்கவில்லை ஒரு சில ஒரு
சில மாதங்களில் இதில் செயல்பட்டுவிட்டது. முதலாளிகளை விரட்டுவதும் அதிக கடினமாக
இருக்கவில்லை. ஆனால் வர்க்கங்களை ஒழித்தல் இதையெல்லாம் விட சொல்ல முடியாத அளவுக்கு
மிகவும் கடினமானதாகும்.
வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் வடிவங்கள் மட்டுமே மாறி இருக்கின்றன. பழைய சுரண்டலாளர்கள் திரும்பி வந்து விடாப்படி தடுப்பதற்காக அறிவொளி இல்லாத விவசாயிகள் வெகுஜனங்களை ஒரே கூட்டணியாய் ஒன்று படுத்துவதற்காக நடைபெறும் வர்க்கப் போராட்டம் இது. தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு எல்லா நலன்களையும் கீழ்பட செய்வது நமது பணி. நமது கம்யூனிஸ்டுகளின் ஒழுக்க நெறியும் இப்பணிக்கு கீழ்ப்பட்டது தான். பழைய சுரண்டல் சமுதாயத்தை அழிக்கவும் ஒரு புதிய கம்யூனிஸ்ட் சமுதாயத்தை கட்டிஅமைத்திடவும் பாட்டாளி வர்க்கத்தை மையமாகக் கொண்டு உழைப்பாளி மக்கள் அனைவரையும் ஒன்றுபட செய்யவும் உதவுவது ஒழுக்கநெறி என்று கூறுகிறோம். இந்தப் போராட்டத்திற்கு உதவி புரியும் உழைப்பாளி மக்களை எல்லாவித சுரண்டலையும் எதிர்த்து அற்ப தனியார் சொத்துரிமை அவற்றின் எதிர்த போராட்டம் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டமாகும்…
இல்லையேல்
பழைய சமூக ஒழுங்காக கொள்ளையடி அல்லது கொள்ளைக்கு இலக்காகு அனைவருக்கும் வேலை செய்
அல்லது அனிவரையும் உனக்கு வேலை செய்யும்படி வை, அடிமை உடைமையாளனாய் இரு அல்லது அடிமையாக இரு. இந்த விதி
தான் பழைய சமுதாயத்துக்கு அடிப்படையாய் இருந்தது. ஒன்று நீ அடிமை உடைமையாளன் அல்லது அடிமை இல்லையே சிறு
உடைமையாளன் சிறு அதிகாரி அல்லது அறிவுத்துறையாளன் அதாவது சுருங்க கூரின் தன்னைப்
பற்றி மட்டுமே நினைத்து ஏனையோர் பற்றியும் கவலைப்படாத தன்நல மனப்பான்மை கொண்டோர்
கம்யூனிஸ்டாக இருக்க முடியாது. அதிகார வர்க்கத்தின் முன் அடிபணிந்து தன் வாழ்க்கை
காப்பற்றிக் கொள்ள அடிமை சேவகம் செய்ய நினைப்போர் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க
முடியும்.
சுரண்டலாளர்களுக்கு
எதிரான உணர்வு பூர்வமான போராட்டத்தின் மூலமும் கம்யூனிஸ்ட்டுகள் பெறும் ஒழுக்க
நெறி இச்சமூகத்தில் பேசும் ஒழுக்கநெறியிலிருந்து வேறானது. அவை சுரண்டலை ஒழித்து
சமத்துவத்தை பேசும் மனித சமூக உயர்ந்த ஒழுக்க நெறியான கம்யூனிச ஒழுக்க நெறியாகும்.
இங்கே எழுத பயன்பட்ட கட்டுரை (இளைஞர் கழகங்கனின் பணிகள் அக்டோபர் 1920
லெனின் ஆற்றிய
உரைகளிலிருந்து).
No comments:
Post a Comment