"பிற்போக்காளர்களே புரட்சிகர சக்திகளுக்குப் பயப்பட வேண்டும், மறுபுறமாக அல்ல" என்றார் (ஆனால் ஏகாதிபத்தியங்கள் செய்யும் சூழ்ச்சி வலையில் சிக்குண்டுகிடக்கும் பல புரட்சியை நேசிப்போர் புரிந்துக் கொள்க). தற்போது இதைக் காண இன்னும் தவறுகின்றவர்கள், இன்னும் குருட்டுத்தனமான நம்பிக்கையையும் பிரமைகளையும் பாராட்டுபவர்கள், இன்னும் ஏகாதிபத்தியத்தை, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தை, கண்டு கிலிகொண்டு நிற்பவர்கள், கணிசமானோர் இருக்கின்றனர்.
இவர்கள் இந்தப் பிரச்சினையின் முன்னிலையில் இன்னும் செயலற்று இருக்கின்றனர். பரந்த வெகுஜனங்கள் புரட்சிகர நம்பிக்கையும் உறுதியும், புரட்சிகர முன்னறிவிப்பு திடமும் பெறக்கூடியதாக எல்லா முற்போக்காளர்களும் எல்லா மார்க்சியவாதிகளும் எல்லாப் புரட்சியாளர்களும் இந்த நபர்கள் மத்தியில் சிறிதளவு மனமாற்றும் பிரசாரம் செய்ய வேண்டும். இது புரட்சிகர இலட்சியத்தின் வெற்றிகரமான முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு இன்றியமையாத ஒரு ஆத்மீகத் தேவை.
ஒரு பிரச்சினையைச் சிந்தித்துப் பார்க்கையில் ஒருவர் அதன் சாராம்சங்களைத் தெளிந்து கொள்ள வேண்டும், மேலெழுந்தவாரியான அம்சங்களால் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது எனத் தோழர் மாசே-துங் நமக்குப் பலமுறை கூறியுள்ளார்.
வர்க்கப் போராட்டத்தில் ஒவ்வொரு கேந்திரமான தருணத்திலும் தோழர் மா சே துங் மார்க்சிய லெனினிய விஞ்ஞானத்தின் அடிப்படையில் போராட்டத்தின் நிலைமை பற்றி ஆழமாக ஊடுவி ஆராய்ச்சியை செய்தும், பிற்போக்காளர்கள் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள், புரட்சிகர இலட்சியம் வென்றே தீரும் என்று காண்பித்தும் உள்ளார்.
அவர் சக்திமிக்கவையாகத் தென்படுகின்ற, ஆனால் உண்மையிற் பலவீனமானவையான ஏகாதிபத்தியத்தையும் பிற்போக்கு சக்திகளையும் வர்ணிக்கக் ''காகிதப் புலி" என்ற பதத்தை உபயோகிக்கிறார்; புதிதாக தோன்றிய சக்திகள் புரட்சியின் ஊடாக நாளுக்கு நாள் வளர்வதைக் குறிக்க "ஒரே ஒரு பொறி காட்டுத் தீயை உண்டுபண்ண முடியும்" என்ற முதுமொழியை உபயோகித்து, இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் தன் மூல- உபாயோகித்தத் திட்டங்களைத் தீட்டுகிறார். புரட்சியின் சக்திகள் தோற்கடிக்க முடியாதவை, பிற்போக்கு சக்திகளோ தற்காலிகமாகச் சக்திமிக்கவையாக இருப்பினும் வீழ்ச்சி அடைந்தே தீரும் என்ற தோழர் மாசே-துங்கின் கருத்து சீன கம்யூனிஸ்டுகளை ஆயுதபாணிகளாக்கியும் (கருத்தே கவனிக்க வேண்டியவை), சீன மக்களுக்குப் போதமூட்டியும் உணர்வூட்டியும், தங்களையும் தங்களது மகத்தான வெற்றிகளுக்கு இட்டுச் சென்றது. ''ஏகாதிபத் தியமும் எல்லாப் பிற்போக்காளர்களும் காகிதப் புலிகள்" என்ற தோழர் மாசே-துங்கின் அறிவு பொதிந்த இத் தத்துவம் ஏற்கனவே சீனப் புரட்சியின் வெற்றியால் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து சோசலிசபுரட்சியால் முழு உலகிலும் புரட்சி இலட்சியத்தின் வெற்றிகரமான வளர்ச்சியால் நிரூபிக்கப்பட வேண்டும்.
இங்கே அநீதியாக போரிடும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட தேசங்கள் ஒன்று சேர்ந்து ஏகாதிபத்தியல் இல்லா உலகம் படைக்க முற்பட வேண்டும் மற்றெல்லாம் ஏகாதிபத்திய பூச்சாண்டியே
No comments:
Post a Comment