நமது ஸ்மார்ட்போன் ஒரு உளவு கருவியே

நமது ஸ்மார்ட்போன் ஒரு உளவு கருவியே….சி.ப

ஏழு ஆண்டிற்கு முன்னர் தேடி எழுதியவை 31 மே தொடங்கி 3 ஜீன் 2025 வரை என்னுடைய முகநூல் முடக்கம் அது சம்பந்தமாக என்னுடைய தகவல்கள் சரிபார்த்தல் என்ற பெயரில் என்னை வேவு பார்த்த நிகழ்வுகளின் அடிப்படையில் என் பழைய முகநூல் பதிவுகளையே தொகுத்துள்ளேன்

இன்றைய தினம் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் நமது தகவல்களை மிக எளிதாக உளவு பார்பதை அனுமதிக்கும் சில செயலிகளை உருவாக்கி அதன்மூலம் நாம் கண்காணிக்க பட்டு கொண்டிருக்கிறோம்.இந்த உளவு செயலி நமது எல்லா ரகசியத்தை யும் நமக்கு தெரியாமல் வெளியிடவோ அல்லது வேவு பார்க்கும் ஒருவர் சேகரிக்க முடியும்.

சமீபத்தில் ஒரு வீடியோ ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது எப்படி நமக்கு தெரியாமலே நமது தகவல்களை திருட முடியும் என்று விளக்கி இருந்தார். சில எச்சரிக்கை குறிப்புகள் கீழே:-

அவற்றில் உள்ள கேமரா வசதி, ஆப், போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கவனித்து அவைகளின் பயன்பாடுகளை அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் சில ஸ்மார்ட்போன்களில் ஸ்பை(spy app) எனும் நம்மை உளவு பார்க்கும் ஆப் இருக்கலாம். இந்த ஸ்பை ஆப்பை பொறுத்தவரை சில ஸ்மார்ட்போன்களில் Global Positioning System(GPS) போன்று செயல்படுகிறது.

இது உங்களின் மொபைலில் இருக்கும் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற அனைத்தையும் பதிவு செய்யும் திறமையை கொண்டுள்ளது.

அதனால் உங்களின் ஸ்மார்ட்போனில் தேவையற்ற மென்பொருளை தவிர்த்து, மென்பொருள் விற்பனையாளரிடமிருந்து வழங்கப்பட்ட சட்டபூர்வமான ஆப் பயன்பாடுகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம்.

ஆனால் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில ஆப் பயன்படுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதனால் உங்களுடைய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவராமல் தடுக்க முடியும்.
இருந்தாலும் நமது வாட்சாப் மற்றும் முகநூல் பக்கங்கள் முழுமையாக உளவு பார்க்கப் பட்டு கொண்டிருக்கின்றன.அவற்றை நமது CPU மற்றும் IP address மூலமாக நமது தகல்களை திரட்டுவதோடு நமது எல்லா பதிவுகளையும் கண்காணிக்க படுகிறது, இவை நமது ஸ்மார்ட்போன் மூலமாக ஏனெனில் நமது போன் IP address எந்த Sim மாற்றினாலும் ஒன்றே, நமது இணைய பயன்பாட்டின் மூலமாக நமது நடவடிக்கைகள் உளவு பார்க்க படுகிறது…

உங்களைக் காட்டிக் கொடுக்கும் ஸ்மார்ட்போன்

உங்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறதா? அதில் இணையத் தொடர்பை ஏற்படுத்தி வேலை செய்கிறீர்களா?

அப்படியானால் நீங்கள் பாதுகாப்பாக இல்லை என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.

உங்களை தனிநபர்கள் உளவு பார்க்கலாம், அரசுகளும் வேவு பார்க்கலாம் என்பதை இணையப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஊடுருவி வேவுபார்க்கும் நிறுவனங்கள்

உளவு பார்க்க விரும்புபவர் NSO Group என்ற இஸ்ரேலிய நிறுவனத்திற்கு பணம் செலுத்தினால் போதும்.

நீங்கள் டைப் செய்யும் ஒவ்வொரு எழுத்தையும், உங்கள் போனில் கேட்கும் ஒவ்வொரு சத்தத்தையும், உங்கள் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த நிறுவனம் வழங்கும் உளவு பார்க்கும் கருவிகள், உங்களது செயற்பாடுகளை ரகசியமாக பதிவு செய்யும் கருவியாக ஸ்மார்ட் போனை மாற்றும்.

இது மாத்திரமன்றி வேறு பல நிறுவனங்களும் உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை விற்பதாக தெரியவந்துள்ளது.

அரசுகளின் கைங்கர்யம்

NSO Group உளவு பார்த்த நபர்களின் பட்டியல் பெரியது. இவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித உரிமை ஆர்வலரது ஐபோனும் அடங்கும். மெக்ஸிக்கோ அரசின் ஊழல்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளரும் வேவு பார்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிறுவனம் உலகெங்கிலுமுள்ள எத்தனையோ அரசுகளுக்கு தொழில்நுட்பத்தை விற்பனை செய்ய முயன்றிருக்கிறது. பொலிஸ் அமைப்புக்களும் இதன் சேவையைப் பெற்றுள்ளன.

இன்று அப்பிள், பேஸ்புக், கூகிள் போன்ற நிறுவனங்கள் தரவுகளை Encryption முறையில் சங்கேதக் குறியீடுகளாக மாற்றுகின்றன. இதன் நோக்கம், அரச நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பது தான்.

மென்பொருளில் இருந்த சிறிய குறைபாட்டைப் பயன்படுத்தி, அப்பிளை ஊடுருவும் அளவிற்கு நிறுவனம் ஆற்றல் படைத்ததாக இருக்கிறது. அத்தகைய நிறுவனங்கள் உங்களையும் வேவு பார்ப்பது அப்படியொன்றும் கஷ்டமான விஷயம் அல்ல.

https://www.google.co.in/amp/news.lankasri.com/mobile/03/108790/amp

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ, ஆண்ட்ராய்ட் போன்கள், மைக்ரோசாப்ட் நிறுவன கணினிகள், மடிக்கணினிகள், சாம்சங் ஸ்மார்ட் டி.வி. வாயிலாக உளவு பார்ப்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏ.பி. செய்தி நிறுவனம் பல்வேறு தரப்பு மக் களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி சிறப்பு கட்டுரையை வெளியிட் டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஆண்ட்ராய்ட் போன்கள், ஸ்மார்ட் டி.வி., கணினி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும்போது சிஐஏ நம்மை உளவு பார்க்குமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. இந்த கேள்விக்கு மேலோட்டமாக பதில் அளித்தால் ‘உளவு பார்க்க வாய்ப் பில்லை’ என்று கூறலாம். கொஞ்சம் ஆழமாக யோசித்து பதில் அளித்தால் ‘வாய்ப்பிருக்கிறது’ என்றே தோன்றுகிறது.

நியூயார்க்கை சேர்ந்த சவுன்ட் போர்டு ஆபரேட்டர் ஆண்ட்ரூ மார்ஷெல்லோ கூறியபோது, விக்கிலீக்ஸ் தகவல்கள் கவலை யடையச் செய்துள்ளன. எனினும் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொள்ளும்போது இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தெரிவித்தார்.

சட்டத் துறை வல்லுநர் ஸ்காட் வெர்னிக் கூறியபோது, சிஐஏவின் உளவு தொழில்நுட்பங்கள், உளவு தகவல்கள் உள்ளூர் போலீஸா ருடன் பகிர்ந்து கொள்ளப் படுகிறதா என்ற கேள்வியை பலர் கேட்கின்றனர், இதற்கு யாருமே பதில் அளிப்பது இல்லை என்றார்.

நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த எட்மையர்வின்ஸ்கை கூறிய போது, இணையதளம் சார்ந்த கருவிகளை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விக்கிலீக்ஸ் செய்தி உணர்த்தியுள்ளது. தவறு செய்யாதவர்கள் சிஐஏ குறித்தோ, வேறு உளவு அமைப்புகள் குறித்தோ அச்சப்பட தேவை யில்லை என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/world/ஆண்ட்ராய்ட்-போனில்-சிஐஏ-நம்மை-உளவு-பார்க்கிறதா/article9578872.ece

இன்றைய அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சி யில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அதனை பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் அதனின் அனைத்தையும் அறிந்து கொள்ளாவிட்டாலும் நமது பாதிப்புகளையாவது அறிந்து கொள்ள வேண்டாமா???

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க் கொளல் அவசியம் அன்றோ??? சி.ப

நான் இவற்றை பல செய்திகளின் அடிப்படையில் அடுக்கி கொண்டிருக்கிறேன் தவறுகளை சுட்டிக்காட்டலாம்!!!

ஸ்மார்ட்போன்கள்- ஸ்மார்ட் டிவி மூலம் வேவு பார்க்கும் அமெரிக்க உளவு நிறுவனங்கள்

சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன தொலைக்காட்சி சாதனமான “ஸ்மார்ட் டிவி’க்களில் குறிப்பிட்ட மென்பொருளை பதிவு செய்துள்ளதன் மூலம், அந்த சாதனம் வழியாக வீடுகளில் நடைபெறும் உரையாடல்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ ஒட்டுக் கேட்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

ரகசிய ஆவணங்களை வெளியிடுவதில் கில்லாடியான இணையதளம் விக்கிலீக்ஸ். இந்த தளமானது தற்போது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பற்றிய தகவல்கள் மற்றும் கோப்புகளை வெளியிட்டுள்ளது. வால்ட் 7 என்ற பெயரில், அமெரிக்க உளவு அமைப்பின் 8,761 கோப்புகளை வெளியிட்டுள்ளது. இனியும் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. மக்களின் மொபைல்போன், ஸ்மார்ட் டிவி, கணினி ஆகியவற்றை எந்தெந்த வழிகளில் எல்லாம் சி.ஐ.ஏ உளவு பார்க்கிறது என்பதனை பக்கம் பக்கமாக விளக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி உங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி, ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் போன்ற அனைத்தையும் சி.ஐ.ஏ.,வால் ஹேக் செய்ய முடியும்; அதுமட்டுமின்றி மக்கள் பாதுகாப்பானது, என்க்ரிப்ட் செய்யப்பட்டது என நினைத்து பயன்படுத்தும் மெசேஜிங் அப்ளிகேஷன்களைக் கூட ஹேக் செய்ய முடியும். உதாரணமாக வீப்பிங் ஏஞ்சல் எனப்படும் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை உளவு பார்க்கும் டூல் பற்றி விக்கிலீக்ஸ் கூறும்போது, “இந்த டூல் மூலம் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை பேக் ஆப் என்னும் மோடில் வைக்க முடியும். அதாவது பயனாளர் டிவியை அணைத்தாலும், டிவி அணையாமல் இருக்கும். அப்போது டிவி பக் ஆக செயல்பட்டு, டிவி இருக்கும் அறையில் நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யும். பின்னர் அதனை இணையம் மூலம் சி.ஐ.ஏ சர்வருக்கு அனுப்பும்” என்கிறது.

அதேபோல சி.ஐ.ஏ.,வால் ட்ரக் மற்றும் கார்களில் இருக்கும் வாகன கண்ட்ரோல் சிஸ்டமையும் உளவு பார்க்க முடியுமாம். “இதன் மூலம் வாகன விபத்துக்களை கூட அவர்களால் உருவாக்க முடியும்” என சி.ஐ.ஏ குறித்து குற்றம் சாட்டுகிறது விக்கிலீக்ஸ். அதேபோல சி.ஐ.ஏ.,வில் இருக்கும் மொபைல் டிவைஸ் பிரான்ச் ஆனது ஐபோன்களை கன்ட்ரோல் செய்யும் அல்லது தகவல்களை திருடும் மால்வேர்களையும் உருவாக்கியுள்ளதாக கூறுகிறது.

தற்போதைய காலத்தில் ஸ்மார்ட்போன்கள் என்பவை தனிநபர்களின் முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. எனவே அவற்றின் தகவல்கள் மிக முக்கியமானவை என்பதால் சி.ஐ.ஏ இதனை செய்கிறது. அதேபோல ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை ஹேக் செய்வதன் மூலமாக, அந்த போன்களில் இருக்கும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஆப்ஸ்களை உளவு பார்ப்பதும் எளிதான விஷயமாக இருக்கிறது. இதில் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்றவை கூட விதிவிலக்கல்ல. இந்த விஷயத்தில் ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பெயர்களும் அடிபடுவதால் அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுந்துள்ளன.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “நாங்கள் பார்த்தவரையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பெரும்பாலான குறைபாடுகள் ஏற்கெனவே எங்கள் சமீபத்திய அப்டேட்டில் சரி செய்யப்பட்டு விட்டன. எங்கள் பயனாளர்களை எப்போதும் லேட்டஸ்ட் அப்டேட்டான ஆபரேட்டிங் சிஸ்டமைத்தான் பயன்படுத்த சொல்லிக் கூறி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இத்தனை ஆவணங்கள் பற்றிய உண்மைத் தன்மை பற்றியும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து இன்னும் சி.ஐ.ஏ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு நோட் 7 போன் பிரச்னையால் நஷ்டத்தை சந்தித்தது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி வடிவில் மீண்டும் பிரச்னை வந்துள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து எட்வர்ட் ஸ்னோடென், “அமெரிக்காவில் இருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை கண்காணிக்கும் வகையில் வேண்டுமென்றே, அமெரிக்க மென்பொருட்களில் பாதிப்புகளையும் பாதுகாப்புக் குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை சரிசெய்யாவிட்டால், எந்த ஹேக்கரும் இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அமெரிக்க உளவு அமைப்பிற்கும், FBI-க்கும் இதுபற்றி தெரிந்திருந்தாலும் கூட, உளவு பார்ப்பதற்காக இவற்றை சரிசெய்யவில்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வேறொரு செய்தியில் கீழே உள்ள கருத்துகள்

உளவு செய்ய இருப்பவர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் பரிசளிக்கும் போதே அதில் எஸ்எம்எஸ் டிராக்கர் (SMS Tracker) செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த செயலியை பிளே ஸ்டோர் மூலம் மிக சுலபமாக இன்ஸ்டால் செய்ய முடியும்.

அம்சங்கள்:

டெக்ஸ்ட் மெசேஜ்பிக்சர் மெசேஜ்போன் கால் லாக்ஸ்லொகேஷன் ஹிஸ்ட்ரிபிரவுசர் ஹிஸ்ட்ரி ஆண்ட்ராய்டு 5 மற்றும் அதற்கும் பிந்தைய சாதனங்கள்

என மேலே குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கண்காணிக்க முடியும்.

வழிமுறை 1: செயலியை இன்ஸ்டால் செய்யும் முன் ஸ்மார்ட்போனில் உள்ள Unknown sources ஆப்ஷனை செயல்படுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வழிமுறை 2: இனி செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இன்ஸ்டால் செய்ததும், உங்களது பெயர், செல்ல பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவை குறிப்பிட்டு கணக்கினை பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை 4: இவ்வாறு செய்ததும் டிவைஸ் ஐடி உங்களுக்கு கிடைக்கும்.

வழிமுறை 5: இனி https://smstrackerweb.com/login.php தளம் சென்று உங்களது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை 6: லாக் இன் செய்த பின் எஸ்எம்எஸம் லாக் டேப் சென்று எஸ்எம்எஸ் சார்ந்த தகவல்களை பார்க்க முடியும்.
————–_——–
இனியும் தொடரும்…..


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்