இலக்கு இணைய இதழ் 75

இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

1).தேசியப் பிரச்சனை குறித்து ஜோசப்.ஸ்டாலின்.1 தேசியப் பிரச்சினையில் கட்சியின் உடனடி பணிகள் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்கின்) பத்தாவது பேராயத்திற்கான ஆய்வு முடிவுகள் கட்சியின் மத்திய குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2). கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாக இல்லாமையே இன்றுள்ள நிலைக்கு காரணம். ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கிளர்ந்து எழ வேண்டியவர்களாக ஆயினர். ஏனெனில், ஜாரியத்தை முறியடிப்பதோடு நின்று கொள்ளாமல் அதை அடியோடு வழித்து எறியவும் யாராவது சங்கற்பம் செய்து கொண்டிருந்தால், ஜாரியத்தை வீழ்த்தும் போதே அவர்கள் ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த வேண்டியிருந்தது. இவ்விதம் ஜாரியத்தை எதிர்த்துக் கிளம்பிய புரட்சி, ஏகாதிபத்தியத்தை வீழ்த்தக்கூடிய புரட்சியின் எல்லையை எட்டியதோடு மட்டுமின்றி, அந்த எல்லையைத் தாண்டியும் சென்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாக, ஒரு தொழிலாளி வர்க்கப் புரட்சியாக பரிணமிக்க வேண்டியிருந்தது”. (ஸ்டாலின்).

மேலும் அரசும் புரட்சியும் நூலில் லெனின், ".... பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்."

3).ஜனநாயக புரட்சியா சோசலிச புரட்சியா? ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 1917 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது. அந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையான சாதனை படைக்கவில்லை. ஆகவே அந்த ஜனநாயகப் புரட்சியின் சாதனைகளை முழுமைப்படுத்துவதற்காக நாம் மேலும் முன் செல்ல வேண்டி இருந்தது என்று லெனின் கூறினார்.

4). ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் - லெனின். பாகம் 7.  முரணான போக்குள்ள முதலாளி வர்க்கத்தை எதிர்க்கும் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் கைகள் கட்டுண்டு போகும் அபாயம் எங்கிருந்து வருகிறது? 

முதலாளித்துவப் புரட்சி என்பது பூர்ஷ்வா - அதாவது, முதலாளித்துவ - சமுதாய, பொருளாதார அமைப்பு முறையின் கட்டுக்கோப்பை விட்டு விலகாத ஒன்றாகும். முதலாளித்துவப் புரட்சி முதலாளித்துவ வளர்ச்சியின் தேவைகளை வெளியிடுகிறது, அது முதலாளித்துவத்தின் அடித்தளங்களைஅழிப்பதற்குப் பதிலாக அவற்றை விரிவாக்குகிறது, ஆழப்படுத்துகிறது.

எனவே, இந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமின்றி முதலாளி வர்க்கம் முழுவதின் நலன்களையும் வெளியிடுகிறது. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் ஆட்சி செலுத்துவது தவிர்க்க முடியாதது, ஆகையால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைவிட அதிகமாக முதலாளித்து வர்க்கத்தின் நலன்களையே வெளியிடுகிறது என்று முழு உரிமையுடன் சொல்ல முடியும். முதலாளித்துவப் புரட்சி என்பது பழங்காலத்தின் மீதமிச்சங்களை, பண்ணையடிமைகளைச் சொந்தமாக வைத்திருக்கும் அமைப்பு முறையின் (இதில் எதேச்சிகார முறை மட்டுமின்றி முடியரசு முறையும் அடங்கும்) மீதமிச்சங்களை மிகவும் உறுதியாக துடைத்தெறிந்துவிட்டு முதலாளித்து வத்தின் மிகவும் விரிவான,பிரெஞ்சுக்காரர்கள் சொல்கிற மாதிரி “துப்பாக்கியை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றுவது” தொழிலாளிகளுக்கு மேலும் சுளுவாயிருக்கும் -- அதாவது, அவர்களுக்கு முதலாளித்துவப் புரட்சி கொடுக்கும் ஆயுதங்களையும் புரட்சி கொண்டுவந்து தரும் சுதந்திரத்தையும் பண்ணையடிமை முறையை ஒழித்துச் சுத்தப்படுத்திய களத்தில் தோன்றுகிற ஜனநாயக நிறுவனங்களையும் முதலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தொழிலாளிகள் திரும்புவது மேலும் சுளுவாயிருக்கும். மறுபுறத்தில், முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் அவசியமான மாற்றங்கள் சீர்திருத்தங்கள் வழியேயல்லாமல் புரட்சி வழியே நிகழ்வது தொழிலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது ஆகும். ஏனெனில் சீர்திருத்தவாதத்தின் வழி தாமதப்படுத்தும் வழி, தள்ளிப்போடும்வழி, நாட்டின் உடம்பிலுள்ள அழுகிப்போன பகுதிகள் வேதனைமிக்க நிதானத்துடன் இற்றுச்சிதையும் வழியாகும். பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளுந்தான் அந்த அழுகளி னால் முதன்மையாகவும் மிகுதியாகவும் துன்பப்படுகிறார்கள். புரட்சி வழி விரைவாக வெட்டியகற்றும் வழி, பாட்டாளி வர்க்கத்துக்கு மிகவும் குறைந்த வலி கொடுக்கும் வழி, அழுகிவிட்டதை உடனடியாக அகற்றும் வழி, முடியரசிடமும் அதைச் சேர்ந்த வெறுக்கத்தக்க, இழிந்த, அழுகலான, நாற்றமெடுக்கும் நிறுவனங்களிடமும் மிகக் குறைவான இணக்கும் எச்சரிக்கையும் காட்டும் வழியாகும்.

அண்மையில் ஏ.எம்.கே துதிபாடிகள் “இலக்கு இணைய இதழ்”, மற்றும் அதன் ஆசியர்கள் மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதன் அடிப்படையில் ஆதாரம் அற்ற அதே பழைய பாணியிலான முத்திரை குத்தும் வேலையே தவிர வேறோன்றும் இல்லை என்பதனை விளக்கி இந்த ஆதாரம் அற்ற குற்றசாட்டை நிறுத்தி ஆதார பூர்வமான ஏதாவது விமர்சனம் இருப்பின் தெரிவிக்கவும்.  

இலக்கு இணைய இதழ் அதற்கான பணியாக “மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையினை” உயர்த்தி பிடித்து சரியான மார்க்சிய லெனினிய அரசியல், தத்துவ பொருளாதார புரிதலை கம்யூனிஸ்டுகளிடையே போதிப்பதே அதற்கான பணியாக கொண்டு மா-லெ கல்வியை யாரும் கொடுக்கவில்லை முன் வரவில்லை; கல்வி இயக்கத்தின  அவசியத்தை உணர்ந்து செயல்ப்பட்டு கொண்டுள்ளது. 

இங்குள்ள கம்யூனிஸ்டுகள் பலவகையில் பிரிந்து நின்று ஆளும் வர்க்கம் தொடர்ந்து தன் சுரண்டலை நடத்திக்கொண்டிருப்பதை தடுக்க திறன் இன்றி ஆளுக்கொரு கட்சி ஆளுக்கொரு குழு. எதிரியை எதிர்த்த போராட்டத்தில் கடலில் கரைத்த பெருங்காயம் எனபர் அதுபோல் உள்ளவர்கள் தங்களின் பணியினை விவாதிக்க தயாரா? 

ஏ.எம்.கே குழு மட்டுமே ஏகாதிபத்திய எதிர்பாளர்கள் என்றும் அவர்களை கேள்வி கேட்டாலோ அல்லது அவர்களிடமிருந்து பிரிந்து விட்டாலோ ஏகாதிபத்திய சார்பாளர்களா? என்று அவதூறு பரப்புவது எவ்வகையில் மார்க்சிய வகைபட்ட கண்டுபிடிப்பு இதனை பேசுபவர்கள் விளக்க கடமை பெற்றவர்கள்தானே?

ஏ.எம்.கேவால் NGO, கலைப்புவாதிகள் என்று முத்திரை குத்தியவர்களையே அண்மையில் வாடகைக்கு மேடை பகிரும் நீங்கள் அவர்களை எப்படி புனிதர் ஆக்கினீர் அதனை விளக்க முடியுமா?

எவ்வித ஆதாரமும் இன்றி தன்னை எதிர்த்தால் கேள்வி கேட்டாலே முத்திரை குத்தும் போக்கு எவ்வகையில் மார்க்சிய வகைபட்டது? குற்றம் சுமத்தி முத்திரை குத்தியுள்ளோர்-குத்துவோர் நிரூபிக்க வேண்டிய கடமை பட்டவர்கள் ஆவர் அல்லவா? செய்வீர்களா ஏ.எ.கே துதிபாடிகளே?.

நக்சல்பாரிகளின் தியாகம் அளப்பரிய பங்களிப்பு இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டும், அதன் தோல்வி மற்றும் படிப்பினைகள் அன்றைய தலைவர்களுக்கு பங்கில்லையா? அவர்களின் வரலாற்றை எழுத நேரமில்லா குழுக்கள் ஆளுக்கொரு பெயரில் இயங்கி என்ன சாதித்துள்ளீர் விளக்குவீரா?அண்மையில் ஏ.எம்.கே துதிபாடிகள் கம்யூனிஸ்ட்டுகளாக இல்லாமல் பாபுலிஸ்டுகளாகி விட்ட இவர்கள் எந்த ஆதாரமும் இன்றி தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பொழுது அவர்களின் கடவுளான தலைமை மீதான சில கேள்விக்களைதான் அவர்களிடம் வைக்கிறோம்.

சோலை கும்பல் நூல் போட்டு விட்டு தூங்குகிறது மனோகரன் குழு துடிக்கிறது தலைவனை கேள்வி கேட்டுவிட்டார்களே என்று!!!

1).தியாக தோழர்கள் L. அப்பு தொடங்கி சீராளன் மற்றும் பாலன் போன்ற பல தியாகிகளின் தியாக வரலாறும் உங்களின் படிப்பினை என்ன? ஏதாவது ஆவணம் உண்டா? தியாகிகளின் பெயர் சொல்லி வாழும் கூட்டம் அவர்களின் தியாகத்தை பேச என்ன வரலாற்று ஆவணம் வைத்துள்ளனர்? தொடர்ந்து நேற்று வரை திருத்தல்வாதி கலைப்புவாதி என்று நீங்கள் தூற்றிய அமைப்பு சார்ந்த தோழர்களை வாடகைக்கு அமர்த்தி உங்களின் வரலாறு பேசுவது எவ்வகையில் சரி?.

2). தனிநபர்களே பிளவுக்கு காரணம் எனும் மனோகரன் சோலை கும்பலே, "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பர்,உங்கள் தலைவரின் இறுதி உண்ணத பணி நீங்கள் அறியாதவை அல்ல?" மாநில குழு உள்ள பொழுதே போட்டி மாநில குழுவை" அமைத்து அமைப்பை பிளவு படுத்தியது ஏ.எம்.கேவா ரவீந்திரனா? யார் பிளவுவாதி? விளக்குவீரா? 

3). ஒவ்வொரு பிளவிற்கும் தனிநபரை குற்றம் சுமத்தி ஆவணப்படுத்தியுள்ள தலைமை ஏன் அமைப்பின் கொள்கை கோட்பாட்டிற்காக தியாகிகளானவர்களின் வரலாற்று படிப்பினை எழுத நேரமில்லையோ? இதில் ஏன் சுனக்கம்? தியாகிகளின் நிழலில் வாழும் உங்களை துரோகிகள் என்பது தவறா விளக்கி பதில் சொல்லவும்?

4). உங்களின் வரலாற்று பாத்திரம் என்ன விளக்குவீரா?

5). இந்திய புரட்சியின் விடிவெள்ளி என்பவர்களே தமிழகத்தில் L. அப்பு கொல்லப்பட்டதற்கு பின் தலைமை பொறுபிற்கு வந்தவர் செய்த பணியை விளக்க முடியுமா? அன்று ஒரே கட்சி பின் தோன்றிய மூன்று குழுவினை இணைக்காமல் இணைக்க பாடுபடாமல் என்ன பணி செய்தார்? இறுதியில் தன் அமைப்பையே உடைத்து சென்றவர் எப்படிதான் உங்களுக்கு விடிவெள்ளி விளக்குவீர்களா? ஆவணங்கள் அடிப்படையில் பேச வேண்டும்.

6). அமைப்புதுறையில் அராஜகம் தத்துவத்தில் ஓட்டையாண்டி இவர்கள் புரட்சிக்கு வித்திட்டவர்களாம்!!! இன்றுள்ள ஒவ்வொரு குழுவும் தன்னையையே கட்சியாக நினைத்து செய்யும் செயல் எந்த வர்க்க நலனுக்கு? உங்களில் ஒற்றுமை ஏற்படாமைக்கு காரணம் என்ன?

முழு இதழ் வாசிக்க கீழ்காணும் இணைப்பை சுட்டவும்....

இலக்கு 75 இணைய இதழ் PDF வடிவில் இந்த இணைப்பில் தோழர்களே








No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்