இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்
1). முதலாளியப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான உறவு குறித்து. பாகம் 1
2). தேசியப் பிரச்சனை குறித்து ஜோசப்.ஸ்டாலின்.
3).கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாக இருக்க வேண்டும்!
சமூக மாற்றம் விரும்பும் ஒவ்வொருவரும் இங்குள்ள பிற்போக்கு முந்தைய சமூக முடைநாற்றம் பிடித்த குப்பைகளை இல்லாது ஒழிக்க மார்க்சிய லெனினிய தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறும் புரட்சியால் மட்டுமே சாத்தியம் என்பது தான் மார்க்சிய லெனினிய தத்துவவாதிகளின் கண்ணோட்டம். ஆக அந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நடைமுறை காணுவது தான் உண்மையாலுமே புரட்சி நேசிப்போரின் பணியாக இருக்கும். நமது கண்ணோட்டம் மார்க்சிய தத்துவ அடிப்படையில் இருந்தால் மட்டுமே விவாதம் சரியான பாதையில் செல்லும்.மார்க்சிய லெனினிய தத்துவ அடிப்படையில் செய்யாததன் விளைவு தான் இங்கு நம் இடையே காணப்படும் பல்வேறு விதமான போக்குகள்.
கம்யூனிஸ்டுகளின் லட்சியம் ஒரு இந்திய தேசியம் அல்ல, மாறாக ஓர் உலக தேசியமே கம்யூனிஸ்களின் லட்சியமாகும். அதை அடைவதற்கு தேசங்களின் சுயநிர்ணய உரிமையை கட்டாயமாக கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டியது கம்யூனிஸ்ட்களின் கடமையாகும். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்காதவர் எவரும் கம்யூனிஸ்டாக முடியாது. அவர்கள் மக்களை சுரண்டி ஒடுக்கும் முதலாளித்துவ வாதியாகவே தான் இருக்க முடியும்.
இங்குள்ள இடதுசாரிகள் இடதுசாரிகளாக இல்லாது எதிரிமுகாமிற்கு ஏற்ற வகையில் செயல்படுவதனால் தங்களின் பணியை செய்யாமல் ஒதுங்கி எதிரிக்கு சாதகமாக நடந்துக் கொண்டுள்ளனர். அவர்கள் உண்மையில் மார்க்சிய ஆசான்கள் வகுத்தளித்துள்ள பாதையில் பயணிக்கவேயில்லை. அதற்கான இலக்கை அடைய மார்க்சிய லெனினியம் என்ற வழிகாட்டியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டால் மட்டுமே நமக்கான இலக்கை அடைய முடியும். மார்க்சியமே வெல்லும் ஆனால் மார்க்சியத்தை பின்பற்றாமல் கைவிட்டதன் விளைவே இன்று நாம் காணும் காட்சி. மார்க்சியம் ஒன்று மட்டும்தான் எல்லா சுரண்டலிலிருந்தும் விடுதலைகானவை.
ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியின் நேரடியான உடனடிக் குறிக்கோள் முதலாளித்துவ-ஜனநாயகக் குறிக்கோள் தான். அதாவது மத்திய கால முறைமையின் மீத மிச்சங்களை அழித்து அவற்றை அறவே துடைத்தெறிவதும், இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, இந்த அவக்கேட்டை ரஷ்யாவிடமிருந்து களைந்தெறிவதும், நமது நாட்டில் அனைத்துக் கலாச்சாரத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பிரம்மாண்டத் தடையாய் அமைந்த இதனை அகற்றி விடுவதும் தான்.-லெனின்.
மேலும் அவரே, "அப்போது நடந்த புரட்சியின் முக்கியத்துவத்தை தற்பொழுது சுருக்கமாக நாம் பார்க்கும் பொழுது, அன்றைய காலத்தில் நமது நோக்கம் ரஷ்யாவில் மத்திய காலத்தில் இருந்த பிற்போக்கு நடைமுறைகள், மூடத்தனம், காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை கள் போன்றவற்றை ஒழித்துக் கட்டி, ரஷ்யாவில் ஒரு முழுமையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே நமது நோக்கமாக இருந்தது. அந்த நோக்கத்தை நாம் 1917 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் நிறைவு செய்தோம். சமூகத்தின் முற்போக்கான வளர்ச்சிக்குத் தடையாக இருந்த பிற்போக்கு கலாச்சாரம், சிந்தனை முறை ஆகியவற்றை களைந்தறிந்தோம். 125 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பிரெஞ்சுப் புரட்சி சாதித்ததைக் காட்டிலும் மிக அதிகமான சாதனையை நாம் நடத்திக் காட்டினோம். தற்பொழுது ரஷ்ய மக்கள் அனுபவித்துவரும் பலன்களை நாம் பார்க்கும் பொழுது நாம் எவ்வளவு பன்மடங்கு விரிவாகவும் ஆழமாகவும் அந்த பிற்போக்குகளை களையெடுத்தோம் என்று நாம் உண்மையாகவே பெருமை கொள்ளலாம் என்றார் லெனின். இதன் மூலம், லெனின் ரஷ்யாவில் நடந்த முதலாளித்துவப் புரட்சியைப் புகழ்ந்து பேசுகிறார். அந்தப் புரட்சியின் மிக முக்கியமான நோக்கம், சமூக வளர்ச்சிக்குத் தடையாக இருந்த, மிச்ச மீதியாக இருந்த பிற்போக்கு தன்மைகளை களைந்து எறிவது அவசியமாக இருந்தது என்றார்" லெனின்.
இலக்கு 74 இணைய இதழ் இந்த இணைப்பை அழுத்தி பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் தோழர்களே
No comments:
Post a Comment