வரலாற்று நிகழ்வு போக்கும் புறநிலையான தன்மையை வலியுறுத்துகின்ற பொழுது மார்சியம் வளர்ச்சி அடைந்து புரட்சிகர தத்துவத்தின் மகத்தான பாத்திரத்தில் வலியுறுத்தி வர்க்கங்கள் கட்சிகள் கோஷ்டிகள் மற்றும் தனி நபர்களின் உணர்வு பூர்வமான நடவடிக்கைகளுக்கும் மாபெரும் முக்கியத்துவம் அளிக்கிறது வரலாற்றில் மக்களுடைய பாத்திரத்தை பற்றி மார்க்சின் அடிப்படையான கோட்பாடுகள் மார்க்ஸ் எங்கெல்ஸ் கூட்டாக எழுதிய முதல் புத்தகம் புனித குடும்பத்தில்(1844)
ஏற்கனவே வகுத்தலிக்கப்பட்டன பெரும் திரளான மக்கள் உழைக்கும் மக்கள் தொழிலாளர்களும் விவசாயிகளும் சமூகத்தில் மிக முக்கியமான உற்பத்தி சக்தியாக இருக்கின்றனர். அவர்கள் தமது உழைப்பின் மூலம் பொருளாத செல்வங்கள் அனைத்தையும் படைக்கிறார்கள். அவர்களே வரலாற்றை படைக்கும் உண்மையான படைப்பாளர்கள். உற்பத்திக் கருவிகள் அனைத்திலுமே ஆக மிகப்பெரிய புரட்சிகரமான தொழிலாளி வர்க்கமே ஆகும்.
ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவமானது தேசியங்களை ஒடுக்கும் ஒடுக்கலின் மிகப்பெரிய ஒடுக்கல் காரனாக மாறிவிட்டது முன்னாள் முற்போக்கு இயல்புகளில் இருந்த முதலாளித்துவம் இப்போது பிற்போக்கு இயல்பு பெற்றுவிட்டது. நிலமானிய முறையை எதிர்த்து போராடிய போராட்டத்தில் தேசங்களை விடுவிக்கும் விடுதலையாளனாக இருந்த முதலாளித்துவம் இங்கே பிற்போக்கு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.-லெனின்
போர் என்பது அரசியலின் தொடர்ந்த தொடரே தான் வேறு (வன்முறை) வழியில் தொடர்ந்து செல்லும் தொடர்ச்சி தான்.
காலனிகளை கொள்ளையடிப்பது பிரதேசங்களை ஒடுக்குவது தொழிலாளி வார்த்த இயக்கத்தை நசுக்குவது இவைதான் நாம் காணும் படிப்பினைகள் இந்த போக்கு இப்பொழுதும் தொடர தான் செய்கிறது.
தேசியக்களின் சுயநிர்ணயவுரிமை
தேசியங்களை ஒடுக்கி வரும் அனைத்துவித ஒடுக்கல்களையும் எதிர்த்து போரிடாமல் சோசியலிஸ்ட்கள் தம்முடைய மாபெரும் லட்சியத்தை சாதிக்க முடியாது ஆகவே ஒடுக்கும் நாடுகளில் உள்ள சமூக ஜனநாயக கட்சிகள் ஒடுக்கப்பட்ட தேசியத்தின் சுயநிர்ணய உரிமைக்காக அதன் அரசியல் பொருளியல் விசேஷமாக அதாவது அரசியல் வகை பிரிந்து போகும் உரிமை என்பதை ஏற்று அதற்கு ஆதரவாக முன் இருக்க வேண்டும் என்பது எவ்வித ஐயத்திற்கு இடம் இன்றி கோர வேண்டும். இந்த உரிமைக்காக நிற்காதவர் போர் வெறியன் ஆவான். (40)
No comments:
Post a Comment