அரசியலற்ற தனிநபர் துதிபாடலும் தனிநபர் எதிர்ப்பும் பேசுபவர்கள் கம்யூனிஸ்டுகளா? பாபுலிசத்தில் ஊறிபோனவர்கள் இவர் யார்?

அண்மையில் ஏ.எம்.கே துதிபாடிகள் “இலக்கு இணைய இதழ்”, மற்றும் அதன் ஆசியர்கள் மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதன் அடிப்படையில் ஆதாரம் அற்ற அதே பழைய பாணியிலான முத்திரை குத்தும் வேலையே தவிர வேறோன்றும் இல்லை. ஆக இலக்கு இணைய இதழ் அதற்கான பணியாக “மார்க்சிய லென்னிய மாவோ சிந்தனையினை” உயர்த்தி பிடித்து சரியான மார்க்சிய லெனினிய அரசியல் தத்துவ பொருளாதார புரிதலை கம்யூனிஸ்டுகளிடையே போதிப்பதே அதற்கான பணியாக கொண்டு மா-லெ கல்வியை யாரும் கொடுக்கவில்லை; கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்ப்பட்டு கொண்டுள்ளது. இங்குள்ள கம்யூனிஸ்டுகள் பலவகையில் பிரிந்து நின்று ஆளும் வர்க்கம் தொடர்ந்து தன் சுரண்டலை நடத்திக்கொண்டிருப்பதை தடுக்க திறன் இன்றி ஆளுக்கொரு கட்சி ஆளுக்கொரு குழு. எதிரியை எதிர்த்த போராட்டத்தில் கடலில் கரைத்த பெருங்காயம் எனபர் அதுபோல் உள்ளவர்கள் தங்களின் பணியினை விவாதிக்க தயாரா?

நீங்கள் மட்டுமே ஏகாதிபத்திய எதிர்பாளர்கள் உங்களை கேள்வி கேட்டாலே அல்லது உங்களிலிருந்து பிரிந்து விட்டாலே ஏகாதிபத்திய சார்பாளர்களா? என்ன கண்டுபிடிப்பு? ஏன் உங்களின் ஏ.எம்.கேவால் NGO, கலைப்புவாதிகள் என்று முத்திரை குத்தியவர்களையே வாடகைக்கு மேடை பகிரும் நீங்கள் அவர்களை எப்படி புனிதர் ஆக்கினீர் அதனை விளக்க முடியுமா?

எவ்வித ஆதாரமும் இன்றி தன்னை எதிர்த்தால் கேள்வி கேட்டாலே முத்திரை குத்தும் போக்கு எவ்வகையில் மார்க்சிய வகைபட்டது? குற்றம் சுமத்தி முத்திரை குத்தியுள்ளோர் குத்துவோர் நிரூபிக்க வேண்டிய கடமை பட்டவர்கள் ஆவர்! செய்வீர்களா ஏ.எ.கே துதிபாடிகளே?.

நக்சல்பாரிகளின் தியாகம் அளப்பரிய பங்களிப்பு இந்திய வரலாற்றில் பொன்னேடுகளால் எழுதப்பட வேண்டும், அதன் தோல்வி மற்றும் படிப்பினைகள் அன்றை தலைவர்களின் பங்கில்லையா? அவர்களின் வரலாற்றை எழுத நேரமில்லா குழுக்கள் ஆளுக்கொரு பெயரில் இயங்கி என்ன சாதித்துள்ளீர் விளக்குவீரா??

மேலும் இறுதி பக்கம் தோழர் அண்மையில் ஏ.எம்.கே துதிபாடிகள் கம்யூனிஸ்ட்டுகளாக இல்லாமல் பாபுலிஸ்டுகளாகி விட்ட இவர்கள் எந்த ஆதாரமும் இன்றி தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பொழுது அவர்களின் கடவுளான தலைமை மீதான சில கேள்விக்களைதான் அவர்களிடம் வைக்கிறோம்.  

சோலை கும்பல் நூல் போட்டு விட்டு தூங்குகிறது மனோகரன் குழு துடிக்கிறது தலைவனை கேள்வி கேட்டுவிட்டார்களே என்று!!!

1).தியாக தோழர்கள் L. அப்பு தொடங்கி சீராளன் மற்றும் பாலன் போன்ற பல தியாகிகளின் தியாக வரலாறும் உங்களின் படிப்பினை என்ன? ஏதாவது ஆவணம் உண்டா? தியாகிகளின் பெயர் சொல்லி வாழும் கூட்டம் அவர்களின் தியாகத்தை பேச என்ன வரலாற்று ஆவணம் வைத்துள்ளனர்? தொடர்ந்து நேற்று வரை திருத்தல்வாதி கலைப்புவாதி என்று நீங்கள் தூற்றிய அமைப்பு சார்ந்த தோழர்களை வாடகைக்கு அமர்த்தி உங்களின் வரலாறு பேசுவது எவ்வகையில் சரி?.

2). தனிநபர்களே பிளவுக்கு காரணம் எனும் மனோகரன் சோலை கும்பலே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பர், உங்கள் தலைவரின் இறுதி உண்ணத பணி நீங்கள் அறியாதவை அல்ல? மாநில குழு உள்ள பொழுதே போட்டி மாநில குழுவை அமைத்து அமைப்பை பிளவு படுத்தியது ஏ.எம்.கேவா ரவீந்திரனா? யார் பிளவுவாதி? விளக்குவீரா?  

3). ஒவ்வொரு பிளவிற்கும் தனிநபரை குற்றம் சுமத்தி ஆவணப்படுத்தியுள்ள தலைமை ஏன் அமைப்பின் கொள்கை கோட்பாட்டிற்காக தியாகிகளானவர்களின் வரலாற்று படிப்பினை எழுத நேரமில்லையோ? இதில் ஏன் சுனக்கம்? தியாகிகளின் நிழலில் வாழும் உங்களை துரோகிகள் என்பது தவறா விளக்கி பதில் சொல்லவும்?

4). உங்களின் வரலாற்று பாத்திரம் என்ன விளக்குவீரா?

5). இந்திய புரட்சியின் விடிவெள்ளி என்பவர்களே தமிழகத்தில் L. அப்பு கொல்லப்பட்டதற்கு பின் தலைமை பொறுபிற்கு வந்தவர் செய்த பணியை விளக்க முடியுமா? அன்று கட்சியில் தோன்றிய மூன்று குழுவினை இணைக்காமல் இணைக்க பாடபடாமல் என்ன பணி செய்தார்? இறுதியில் தன் அமைப்பையே உடைத்து சென்றவர் எப்படிதான் உங்களுக்கு விடிவெள்ளி விளக்குவீர்களா? ஆவணங்கள் அடிப்படையில் பேச வேண்டும்.


இந்திய கம்யூனிஸ்டுகளாகிய நாம் நம்மை பரிசீலிக்க கடந்தகால வரலாற்றிலிருந்து சரி தவறுகளை பரிசீலித்து கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பணியை செய்ய வேண்டும். அப்படியெனும் பொழுது வலுவான எதிரியான ஆளும் வர்க்கத்தின் முன்னர் செயலற்று நிற்கும் புரட்சி பேசுபவர்களும் ஆளும் வர்க்க பிரிவாகவே மாறி உழைக்கும் வர்க்கத்தை ஏய்க்கும் சில கம்யூனிசம் பேசும் கட்சிகளும் தங்களின் பணியை செய்யாமல் தங்களின் இருப்பிற்காக ஏதோ ஒன்றை செய்துக் கொண்டுள்ளனர். உண்மையில் இவை ஆளும் வர்க்கத்தை நீட்டிக்க செய்யும் பணிதானே ஒழிய மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழிமுறை அல்ல.

தனிநபர் தாக்குதலில் இடுபட்டுள்ள ஏ.எம்.கே வின் வாரிசு மனோகரன் முகநூலிலிருந்து கீழே அப்படியே.

தோழர் கோதண்ட ராமன் கட்சியை பிளவுப்படுத்தினாரா? அறிவு ஜீவிகளை விரட்டி அடித்தாரா...? உண்மை என்ன..?

1.80-களின் இறுதியில் அமார்க்ஸ் கும்பல் மார்க்சிய லெனினியத்தை ஒழிக்க பின் நவீனத்துவத்தை வைத்து நிறப்பிரிகை துவங்கி வெளியேறியது! சோஷலிசத்தின் தோல்வியால் அதிர்ச்சி அடையந்து அமெரிக்காவின் கலைப்புவாத கருத்துக்களை விதைத்தது! அந்த துரோகத்தை எதிர்த்து போராடியதால் ஓடுகாலியாக மாறி அமைப்பை விட்டு ஓடியது!

2. மார்க்சிய ஆய்வாளர் திருவாளர் கோ.கேசவன் மற்றும் கோவிந்தசாமி கும்பல் அம்பெத்கரியத்தை மார்க்சியத்துடன் கலக்க வேண்டும் என்று கூறி, கட்சி ஒற்றுமையை உருவாக்க போவதாக கூறி வெளியேறியது! கோ. கேசவனின் சாதியம் நூலே அதற்கு சான்று!
சாதியம் அடித்தளம் மேற்கட்டுமானது ஒருங்கிணைந்த முழுமை என்று கிராம்ஸ்கியத்தை வைத்து வெளியேறியது! அவர்கள் வெளியேற்றப்பட வில்லை!

3. சித்தானந்தம் தலைமையிலான பிழைப்புவாத கும்பல் தொண்டு நிறுவன உதவியுடன் சேலத்தில் புத்கக்கடை துவங்கி அமைப்பைக் கைப்பற்ற முயற்சித்து முடியாமல் போகவே அரசிடம் சரணடைந்து வெளியேறியது! கட்ட பஞ்சாயத்து, பொருளாதார மோசடிகள் 
மூலம் சொத்து சேர்த்து சகபோகமாய் வாழ்கிறது!

4. தமிழ்வாணன், ராமன் கோஷ்டி பாலியல் லீலைகள், பிழைப்புவாத மோசடிகளுக்கு பரிகாரம் தேடாமல், ஒன்று ஆசிய உற்பத்திமுறை இனங்களின் இறையாண்மை பேசியும், ராமன் செல்வராஜ் வகையறா டிராட்ஸ்கியத்தை நத்தியும் பிழைக்கிறது!

5. குணாளன் தலைமறைவு கட்சி கூடாது, கட்சியன் தலைமையை தனக்பு அளிக்க வேண்டும், பிடிக்காதவர்களை வெளியே தள்ள வேண்டும் என்று கூறி, புளயம் கொம்பாக ஆந்திரா கட்சியை பிடித்துக் கொண்டு, ஈயம் பூசுபவர்களை போல ஊர் ஊராய் அலைகிறது! அது கட்சியை பிளவுப்படுத்த நிதி ஏற்பாடு மதுரை ரவீந்திரன்!

6. இறுதியாக ரவீந்திரன், பிரதீப், சோலை கட்டி முதலாளித்துவ கும்பல் புரட்சி இயக்கத்தை கண்டு அஞ்சி மக்களுக்கு தலைமறைவு, அரசாங்கத்துக்கு வெளிப்படை என்ற கொள்கையை பேசி, தனது குடும்பம்  வாழ பிழைப்புவாதத்துக்கு தலித்தியம் பேசி தனி நபர் தாக்குதல் நடத்தி அமைப்பை மூன்றாக உடைத்தனர். இதற்கும் நிதி ஏற்பாடு மதுரை ரவீந்திரன்தான்!

7. சோலை என்ற கேடி இன்று ஒடுக்கப்பட்ட ஈரான், ஈராக, வடகொரியா, வெனிசலா போன்ற நாடுகள் மீதான அமெரிக்காவின் காலனய போரை ஏகாதிபத்திய போர் என்று கூறி இந்த போரில் ஒடுக்ப்பட்ட நாடுகளயும் அமெரிக்காவையும் சம்ப்படுத்தி தாக்குவதன் மூலம் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு துணை போகும் ஐந்தாம்படை வேலையை செய்கிறது!

இவ்வாறு அமார்க்சு முதல் சோலை வரை குட்டி முதலாளித்துவ சக்திகள் கட்சிக்குள்  அந்நிய வர்க்க கருத்துக்களை திணித்து முதலாளித்துவ கட்சியாக மாற்றும் வேலையை செய்தனர். இதனை இவர்கள் யாரும் கருத்துப் போராட்டம் நடத்தி தீர்க்கவில்லை! அமைப்பைவிட்டு வெளியேறியோ அல்லது இடத்தை செய்தனர்.

இவர்கள் சிறுபான்மையாக இருக்கம்போது பிளவுப்படுத்தி வெளியேறுவது.... பெரும்பான்மையாக மாறியதும் அமைப்பை உடைப்பது என்று செயல்படுகிறார்கள்.
கருத்துப் போராட்டத்தை மறுப்பவர்கள்!

இத்றகெல்லாம்மூல வேர் ஃபோர்டு பவுண்டேஷனும், லோகாயனும் எஸ்வி.ஆரும் ஆகும்!

எஸ்.வி.ஆரின் புதிய இடதுக்கும் புருச்சேவ், டெங் கும்பலின் திருத்தல்வாதத்துக்கும் பிறந்த பின் நவீனத்துவ கள்ளக் குழந்தை அடையாள அரசியல் காரணம் ஆகும்! 
இதை எதிர்த்து மார்க்சிய பாரம்பர்ய மாணிக்கம் கோதண்டராமன் உறுதியாக இமயம் போல் தடை அரணாக நின்றார்! அவரை இப்பிரச்சினைகளை தீர்க்கமல் போய்விட்டார் என்று சொல்வதில் நியாயம் உண்டு! ஆனால் அவரை துரோகி என்று கூறுவதில் உண்மையும் இல்லை! நேரமையும் இல்லை!

ஏ.எம்.கே.வை குறை சொல்பவர்களே... மாவோயிஸ்ட் கட்சி மூன்றாம் உடைந்ததற்கு யார் காரணம்? இன்று நான்காக உடைந்ததற்கு யார் காரணம்! த.நா.மா.லே மூன்று பகுதியாக
ஆளுக்கொரு திட்டத்துடன் செயல்படுவதற்கு யார் காரணம்? ரஷ்யாவும், சீனாவும் வீழ்ச்சி அடைந்ததற்கு யார் காரணம்! சோஷலிச முகாமின் தோல்வி கலைப்புவாதத்தின் எழுச்சி...
எதிர் புரட்சி வெற்றி... இதில் ஏ.எம்.கே.மட்டுமா தோற்றார்....?எல்லோரும் தோற்றோம்!

தோல்விக்கான காரணத்தை கடந்தகால அனுபவத்திலிருந்து பாடம் பயில வேண்டும்! கலைப்புவாதத்தின் வெற்றி அதன் பலத்தால் அல்ல... மார்க்சியர்களின் பலவீனத்தால் பெற்றதாகும்!
ஆனால் இலக்கு என்ற இலக்கற்ற பத்திரிகை மூலம் கடந்த கால அனுபவத்தை விஞ்ஞான பூர்வமாக பயின்று உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கான உருப்படியான ஆலோசனையை வைக்கவில்லை. தோழர் ஏ.எம்.கே.மட்டுமே அதற்கான வழியை விட்டுச்
சென்றுள்ளார்!
அதனை நூல்களாகவும் வெளியிட்டுள்ளோம்....! அதனை மறைக்க ஞானம், பிரதீப், சோலை,  ரவீந்திரன் போன்ற பதர்கள் அவர்மீது தாக்குதல் நடத்தியும்.,. அவரைவ துதிபாடியும் பச்சை குத்திக் கொண்டும் புதைக்க முயலாலாம்!
ஆனால் இந்த கயவர்களின் எண்ணம் ஈடேறாது! மார்க்சியம் தழைப்பதும் கலைப்புவாதம் மண்ணுக்குள் புதைவதும் தவிர்க்க முடியாதது?

மார்க்சியம் தன்னை புதுப்பிக்கும். வெற்றி பெறும். புதிய இடது பின் நவீனத்துவ ஏகாதிபத்திய ஆதரவு அடையாள அரசியல் மண்ணைக் கவ்வும். இது நிச்சயம்!

அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சில மனோகரன் ஏஎம்கே வை முட்டாள் என்று சொல்லலாமாம். ஆனால் ஏஎம்கேதுரோகி என்பது குறித்து மட்டும் பொங்குகிறார். காரணம் கட்சியில் வைக்க வேண்டியதை கடைத்தெரு வில் வைத்தவராயிற்றே. அப்படி பேசி தானும் மா லெ வாதி என காட்டிநக்சல்பாரிகளின் உணர்வை உயிரை மழுங்கடிக்கும் அவரின் அவா இன்னும் குறைய வில்லை. பணிநிறைவுக்குபின் புரட்சி பேசுவோரைகண்டு யாரும் கவலைபட மாட்டார்கள்.அவர் சேரவேண்டிய இடத்தில் கிட்டதட்ட சேர்ந்த பின் ஏன் இந்த "புரட்சி"வேஷம் என்பதே கேள்வி- குணாலன்


இந்த உளரல்கள்தான் இவர்களின் அரசியல். இவை எவ்வகையிலும் மார்க்சிய லெனினியத்தை வளப்பதற்கல்ல. 
கம்யூனிஸ்டுகள் பாபுலிஸ்டுகள் அல்ல அவை முதலாளித்துவ காப்பி ரைட்ஸ் போல் இன்று கம்யூனிஸ்டுகளையும் சீரழித்துக் கொண்டுள்ளது. தனிநபர் துதிபாடல் மார்க்சியம் அல்ல அதேநேரத்தில் தனிநபர் பாத்திரம் புறகணிக்கவும் முடியாது வர்க்க சமூகத்தில் அவர்களின் செயலை கணக்கில் கொண்டால் புரிந்துக் கொள்வது எளிதே...

இப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல; பொறுக்கி அரசியல்! இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் வசவுகள், பேசும் தலைவர்கள் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித்தாள்கள் பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!

 "நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது'' என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும், மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழவும், அதையே ரசிக்கவும்கூடப் பழகிவிட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர்கள் (Crowd Pullers) கவர்ச்சி நிலை தலைவர்கள் (Charismatic Leaders)தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

 இவை இன்றைய கம்யூனிஸ்டுகள் கடைபிடிப்பதுதான் அவலம்.

"பொறுக்கி அரசியல்'' என்று சொல்லும்போது, இன்றைய அரசியலின் இழிநிலை கண்டு வெறுமனே வெறுப்பு விரக்தி, பொறாமை ஆத்திரத்திலே சொல்லவில்லை. முதலாளித்துவ அரசியலில் ஒரு வகை, ஒரு வடிவம் என்கிற வரையறுப்போடுதான் சொல்கிறோம். பொறுக்கி அரசியலுக்கு என்று ஒரு சமூக அடிப்படை, ஒரு சித்தாந்த அடிப்படை, ஒரு அமைப்பு அடிப்படை உண்டு. இன்று தமிழக அரசியலில் முழுமையடைந்த வடிவில் பொறுக்கி அரசியல் பிரகாசிக்கிறது. பொறுக்கி அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு; என்றாலும் அதை வளர்த்து முழுமையாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உரித்ததாகும். செத்த பின்னும் எம்.ஜி.ஆரின் புகழ் பரப்புவது பொறுக்கி அரசியல்தான். அதன் வழி வந்த விஜய்காந்த் விஜய் தங்களின் சினிமா பின்புலத்தில் தங்களுக்கான இடம் கோருகின்றனர். ஆனால் அவர்களின் நிலைப்பாடு கொள்கை கோட்பாடுகள் என்ன???

  

பொறுக்கி அரசியலின் சித்தாந்த அடிப்படை: கவர்ச்சிவாதம் (பாப்புலிசம் populism)

 பிற்போக்கு சித்தாந்தங்களை வெளிப்படையாக வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகின்றன. ஆனால், ஆட்சியைப் பிடிப்பதற்கு அவை ஒரு உத்தியைக் கையாளுகின்றன. தமது பிற்போக்கு சித்தாந்தங்களை மூடிமறைத்துக் கொண்டு பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், அவைகளுக்கேற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றன. தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்தப் பாமர மக்கள் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி, தம்மை அறியாமலேயே பொறுக்கி அரசியலை ஆதரிக்கிறார்கள்.

 

கவர்ச்சிவாதம் (பாபுலிசம்) என்று சொல்லும்போது எம்.ஜி.ஆர். உருவாக்கியதைப் போன்ற சினிமா கவர்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அது பொறுக்கி அரசியலின் கலாச்சார வடிவம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய "அண்ணாயிசம்'' பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதத்தின் முக்கியமான சித்தாந்த அங்கமாகும். "முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம்'' மூன்றும் இணைந்ததுதான் "அண்ணாயிசம்' என்று எம்.ஜி.ஆர். அதற்கு விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கம் எதுவானாலும் அவரது ஆட்சியின் நடைமுறையிலிருந்து "அண்ணா" யிசத்துக்கான பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

 

பன்னாட்டு ஏகாதிபத்திய இன்னாட்டு பெரும் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்ச நலன்களைத் தொடர்ந்து கட்டிக் காத்து வளர்ப்பது. அதேசமயம் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிகமிக மோசமான கருத்துக்கேற்ப கவர்ச்சிவாத (பாப்புலிச) நடவடிக்கைகளை மேற்கொள்வது இதுதான் எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த அண்ணாயிசம். தேசியமா, திராவிடமா என்று எம்.ஜி.ஆரின் அரசியல் நிலைப்பாடுகளைக்கூட பாகுப்படுத்திப் பார்க்க முடியாமல் கவர்ச்சிவாதத்தால் மக்களை அடித்து வீழ்த்துவது; மொழி, இன ஒடுக்குமுறை, பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சி இருந்தாலும் சத்துணவு, பற்பொடி, செருப்பு, வேட்டி, சேலை, தண்ணீர் குடம், வறட்சி, வெள்ளம், தீநிவாரண அன்பளிப்புகள் ஆகிய இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக ஒரு பிரமையை உருவாக்குவது; தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஆகிய எந்தச் சமூகப் பிரிவினர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும் ஈவிரக்கமின்றி நசுக்கும்போதே, ஆட்சியாளர்களின் வள்ளல் தன்மையை பறைசாற்றும் "அன்பளிப்பு''களால் வாயடைக்கச் செய்வது. சுருக்கமாகச் சொன்னால், அரசாங்க "இலவச அன்பளிப்பு''த் திட்டங்களின் கீழ் கணிசமான அளவு மக்களை வைத்துக் கொள்வதன் மூலம் பாமரத்தனமான சோசலிசத் தோற்றத்தை ஏற்படுத்துவது இதுதான் எம்.ஜி.ஆரின் "அண்ணாயிசம் கவர்ச்சிவாதம்".

 

பொறுக்கி அரசியலின் அமைப்பு அடிப்படை: பிழைப்புவாத அரசியல் அமைப்புகள்

காந்தியம், இந்து ராஷ்டிரம், அம்பேத் காரிசம், இனவாதம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகள், தமது கொள்கைகளைக் கொண்டு அணிகளை அமைப்புகளைக் கட்டுகின்றன. ஆனால், பிழைப்புவாதத்தையே அரசியல் கொள்கையாக்கிக் கொண்டுள்ள அரசியல் அமைப்புகள் சில தோன்றியுள்ளன. அவை தமது தலைவர்கள் அணிகளின் பிழைப்புவாதத்துக்கேற்ற முறையில் அரசியலையும் போராட்டங்களையும் வகுத்துக் கொண்டு இயங்குகின்றன. கல்வி, மதம், விவசாயம், வியாபாரம், ஆலை உற்பத்தி, மருத்துவம், காண்டிராக்ட் ஒப்பந்தம், சட்டத்துறை போன்று, சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயங்கும் அரசியல் அமைப்புகளையே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம்.

தலைவர்கள் மட்டுமல்ல; நகரவட்டங்கள் கிராமங்களுக்குப் பொறுப்பாக உள்ள கட்சி அணிகள் வரை மேலிருந்து கீழ்மட்டம்வரை பிழைப்புவாதத்தையே அரசியலாகக் கொண்ட அமைப்புகள். எந்தக் கட்சியில், அதிலும் எந்த கோஷ்டியில் இருப்பது வருமானத்துக்குரிய ஆதாயமாக இருக்கும் என்பதைப் பரிசீலித்து, விவாதித்து இவர்கள் தெரிவு செய்கிறார்கள். மேல்மட்டத் தலைவர்கள் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே உள்ள பிழைப்புவாதிகள் அரசியல் தரகு வேலையை ஒரு தொழிலாக, அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்கிறார்கள். தேர்தல் காலங்களில் பிரச்சார வேலைகள், ஆள்பிடிக்கும் வேலைகள், ஓட்டுக்களுக்கான பேரங்கள் ஆகியவற்றில் கட்சி நிதியையே சுருட்டிக் கொள்கிறார்கள். மாற்று காலங்களில்  இலவசத் திட்டங்கள், (இன்று பல உள்ளன) வெள்ளம் வறட்சி தீ விபத்து போன்ற நிவாரணத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு முன்னின்று, அதிகாரிகளுடன் சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். இப்போது இந்த வேலைகள் செய்வதற்காக இவ்வளவு தொகை தமக்குக் கமிஷனாகத் தரவேண்டும் என்று உரிமையோடு அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அரசு கடன் வழங்கும் விழாக்கள், போலீசு நிலைய வழக்குகள், வேலை வாய்ப்புகள் சிபாரிசுகள் போன்றவற்றில் அரசாங்கத்தின் "அங்கீகரிக்கப்பட்ட'' தரகர்களாக இருக்கிறார்கள்.

 கட்சித் தலைவர்களின் எடுபிடிகளாகவும், அரசியல் தூதர்களாகவும் இருந்த பிழைப்புவாதிகள் கிராமப் பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகள், மக்கள் கமிட்டிகளில் நியமனம் பெறுவது, பிறகு பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகளுக்குத் தேர்தல்களில் நிற்பது என்று முன்னேறி, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் மட்டுமல்ல, மந்திரிகள் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள். கூட்டுறவுகள், உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களைத் தள்ளி வைத்து இந்தப் பிழைப்புவாதிகளுக்கான மடங்களாக்கிய எம்.ஜி.ஆர். ஆட்சியில், கோவில்கள், வாரியங்கள், பள்ளிகல்லூரிகள் போன்ற சகல மட்டங்களிலும் கட்சி பிழைப்புவாதிகளுக்கு "பொறுப்புகள்'' பகிர்ந்தளிக்கப்பட்டன. கட்சிக்காகப் பாடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு "ஏற்பாடு'' செய்து தருவதைத் தமது பொறுப்பாகவும் அவர்களது உரிமையாகவும் பகிரங்கமாகவே ஒழுங்குபடுத்தினார், எம்.ஜி.ஆர்.

 

இன்னும் பின்னர் தொடரும்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்