இலக்கு இணைய இதழ் 75

இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

1).தேசியப் பிரச்சனை குறித்து ஜோசப்.ஸ்டாலின்.1 தேசியப் பிரச்சினையில் கட்சியின் உடனடி பணிகள் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்கின்) பத்தாவது பேராயத்திற்கான ஆய்வு முடிவுகள் கட்சியின் மத்திய குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2). கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாக இல்லாமையே இன்றுள்ள நிலைக்கு காரணம். ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் கிளர்ந்து எழ வேண்டியவர்களாக ஆயினர். ஏனெனில், ஜாரியத்தை முறியடிப்பதோடு நின்று கொள்ளாமல் அதை அடியோடு வழித்து எறியவும் யாராவது சங்கற்பம் செய்து கொண்டிருந்தால், ஜாரியத்தை வீழ்த்தும் போதே அவர்கள் ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த வேண்டியிருந்தது. இவ்விதம் ஜாரியத்தை எதிர்த்துக் கிளம்பிய புரட்சி, ஏகாதிபத்தியத்தை வீழ்த்தக்கூடிய புரட்சியின் எல்லையை எட்டியதோடு மட்டுமின்றி, அந்த எல்லையைத் தாண்டியும் சென்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியாக, ஒரு தொழிலாளி வர்க்கப் புரட்சியாக பரிணமிக்க வேண்டியிருந்தது”. (ஸ்டாலின்).

மேலும் அரசும் புரட்சியும் நூலில் லெனின், ".... பாட்டாளி வர்க்கம் தனது அரசியல் மேலாண்மையைப் பயன்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து படிப்படியாய் மூலதனம் முழுவதையும் கைப்பற்றும்; உற்பத்திக் கருவிகள் யாவற்றையும் அரசின் கைகளில், அதாவது ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஒருசேர மையப்படுத்தும்; மற்றும் உற்பத்தி சக்திகளது ஒட்டுமொத்தத் தொகையைச் சாத்தியமான முழு வேகத்தில் அதிகமாக்கும்."

3).ஜனநாயக புரட்சியா சோசலிச புரட்சியா? ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 1917 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது. அந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமையான சாதனை படைக்கவில்லை. ஆகவே அந்த ஜனநாயகப் புரட்சியின் சாதனைகளை முழுமைப்படுத்துவதற்காக நாம் மேலும் முன் செல்ல வேண்டி இருந்தது என்று லெனின் கூறினார்.

4). ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் - லெனின். பாகம் 7.  முரணான போக்குள்ள முதலாளி வர்க்கத்தை எதிர்க்கும் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் கைகள் கட்டுண்டு போகும் அபாயம் எங்கிருந்து வருகிறது? 

முதலாளித்துவப் புரட்சி என்பது பூர்ஷ்வா - அதாவது, முதலாளித்துவ - சமுதாய, பொருளாதார அமைப்பு முறையின் கட்டுக்கோப்பை விட்டு விலகாத ஒன்றாகும். முதலாளித்துவப் புரட்சி முதலாளித்துவ வளர்ச்சியின் தேவைகளை வெளியிடுகிறது, அது முதலாளித்துவத்தின் அடித்தளங்களைஅழிப்பதற்குப் பதிலாக அவற்றை விரிவாக்குகிறது, ஆழப்படுத்துகிறது.

எனவே, இந்தப் புரட்சி தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மட்டுமின்றி முதலாளி வர்க்கம் முழுவதின் நலன்களையும் வெளியிடுகிறது. முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் ஆட்சி செலுத்துவது தவிர்க்க முடியாதது, ஆகையால் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் நலன்களைவிட அதிகமாக முதலாளித்து வர்க்கத்தின் நலன்களையே வெளியிடுகிறது என்று முழு உரிமையுடன் சொல்ல முடியும். முதலாளித்துவப் புரட்சி என்பது பழங்காலத்தின் மீதமிச்சங்களை, பண்ணையடிமைகளைச் சொந்தமாக வைத்திருக்கும் அமைப்பு முறையின் (இதில் எதேச்சிகார முறை மட்டுமின்றி முடியரசு முறையும் அடங்கும்) மீதமிச்சங்களை மிகவும் உறுதியாக துடைத்தெறிந்துவிட்டு முதலாளித்து வத்தின் மிகவும் விரிவான,பிரெஞ்சுக்காரர்கள் சொல்கிற மாதிரி “துப்பாக்கியை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றுவது” தொழிலாளிகளுக்கு மேலும் சுளுவாயிருக்கும் -- அதாவது, அவர்களுக்கு முதலாளித்துவப் புரட்சி கொடுக்கும் ஆயுதங்களையும் புரட்சி கொண்டுவந்து தரும் சுதந்திரத்தையும் பண்ணையடிமை முறையை ஒழித்துச் சுத்தப்படுத்திய களத்தில் தோன்றுகிற ஜனநாயக நிறுவனங்களையும் முதலாளி வர்க்கத்துக்கு எதிராகத் தொழிலாளிகள் திரும்புவது மேலும் சுளுவாயிருக்கும். மறுபுறத்தில், முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கிச் செல்லும் அவசியமான மாற்றங்கள் சீர்திருத்தங்கள் வழியேயல்லாமல் புரட்சி வழியே நிகழ்வது தொழிலாளி வர்க்கத்துக்கு அதிக அனுகூலமானது ஆகும். ஏனெனில் சீர்திருத்தவாதத்தின் வழி தாமதப்படுத்தும் வழி, தள்ளிப்போடும்வழி, நாட்டின் உடம்பிலுள்ள அழுகிப்போன பகுதிகள் வேதனைமிக்க நிதானத்துடன் இற்றுச்சிதையும் வழியாகும். பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளுந்தான் அந்த அழுகளி னால் முதன்மையாகவும் மிகுதியாகவும் துன்பப்படுகிறார்கள். புரட்சி வழி விரைவாக வெட்டியகற்றும் வழி, பாட்டாளி வர்க்கத்துக்கு மிகவும் குறைந்த வலி கொடுக்கும் வழி, அழுகிவிட்டதை உடனடியாக அகற்றும் வழி, முடியரசிடமும் அதைச் சேர்ந்த வெறுக்கத்தக்க, இழிந்த, அழுகலான, நாற்றமெடுக்கும் நிறுவனங்களிடமும் மிகக் குறைவான இணக்கும் எச்சரிக்கையும் காட்டும் வழியாகும்.

அண்மையில் ஏ.எம்.கே துதிபாடிகள் “இலக்கு இணைய இதழ்”, மற்றும் அதன் ஆசியர்கள் மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதன் அடிப்படையில் ஆதாரம் அற்ற அதே பழைய பாணியிலான முத்திரை குத்தும் வேலையே தவிர வேறோன்றும் இல்லை என்பதனை விளக்கி இந்த ஆதாரம் அற்ற குற்றசாட்டை நிறுத்தி ஆதார பூர்வமான ஏதாவது விமர்சனம் இருப்பின் தெரிவிக்கவும்.  

இலக்கு இணைய இதழ் அதற்கான பணியாக “மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையினை” உயர்த்தி பிடித்து சரியான மார்க்சிய லெனினிய அரசியல், தத்துவ பொருளாதார புரிதலை கம்யூனிஸ்டுகளிடையே போதிப்பதே அதற்கான பணியாக கொண்டு மா-லெ கல்வியை யாரும் கொடுக்கவில்லை முன் வரவில்லை; கல்வி இயக்கத்தின  அவசியத்தை உணர்ந்து செயல்ப்பட்டு கொண்டுள்ளது. 

இங்குள்ள கம்யூனிஸ்டுகள் பலவகையில் பிரிந்து நின்று ஆளும் வர்க்கம் தொடர்ந்து தன் சுரண்டலை நடத்திக்கொண்டிருப்பதை தடுக்க திறன் இன்றி ஆளுக்கொரு கட்சி ஆளுக்கொரு குழு. எதிரியை எதிர்த்த போராட்டத்தில் கடலில் கரைத்த பெருங்காயம் எனபர் அதுபோல் உள்ளவர்கள் தங்களின் பணியினை விவாதிக்க தயாரா? 

ஏ.எம்.கே குழு மட்டுமே ஏகாதிபத்திய எதிர்பாளர்கள் என்றும் அவர்களை கேள்வி கேட்டாலோ அல்லது அவர்களிடமிருந்து பிரிந்து விட்டாலோ ஏகாதிபத்திய சார்பாளர்களா? என்று அவதூறு பரப்புவது எவ்வகையில் மார்க்சிய வகைபட்ட கண்டுபிடிப்பு இதனை பேசுபவர்கள் விளக்க கடமை பெற்றவர்கள்தானே?

ஏ.எம்.கேவால் NGO, கலைப்புவாதிகள் என்று முத்திரை குத்தியவர்களையே அண்மையில் வாடகைக்கு மேடை பகிரும் நீங்கள் அவர்களை எப்படி புனிதர் ஆக்கினீர் அதனை விளக்க முடியுமா?

எவ்வித ஆதாரமும் இன்றி தன்னை எதிர்த்தால் கேள்வி கேட்டாலே முத்திரை குத்தும் போக்கு எவ்வகையில் மார்க்சிய வகைபட்டது? குற்றம் சுமத்தி முத்திரை குத்தியுள்ளோர்-குத்துவோர் நிரூபிக்க வேண்டிய கடமை பட்டவர்கள் ஆவர் அல்லவா? செய்வீர்களா ஏ.எ.கே துதிபாடிகளே?.

நக்சல்பாரிகளின் தியாகம் அளப்பரிய பங்களிப்பு இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டும், அதன் தோல்வி மற்றும் படிப்பினைகள் அன்றைய தலைவர்களுக்கு பங்கில்லையா? அவர்களின் வரலாற்றை எழுத நேரமில்லா குழுக்கள் ஆளுக்கொரு பெயரில் இயங்கி என்ன சாதித்துள்ளீர் விளக்குவீரா?அண்மையில் ஏ.எம்.கே துதிபாடிகள் கம்யூனிஸ்ட்டுகளாக இல்லாமல் பாபுலிஸ்டுகளாகி விட்ட இவர்கள் எந்த ஆதாரமும் இன்றி தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பொழுது அவர்களின் கடவுளான தலைமை மீதான சில கேள்விக்களைதான் அவர்களிடம் வைக்கிறோம்.

சோலை கும்பல் நூல் போட்டு விட்டு தூங்குகிறது மனோகரன் குழு துடிக்கிறது தலைவனை கேள்வி கேட்டுவிட்டார்களே என்று!!!

1).தியாக தோழர்கள் L. அப்பு தொடங்கி சீராளன் மற்றும் பாலன் போன்ற பல தியாகிகளின் தியாக வரலாறும் உங்களின் படிப்பினை என்ன? ஏதாவது ஆவணம் உண்டா? தியாகிகளின் பெயர் சொல்லி வாழும் கூட்டம் அவர்களின் தியாகத்தை பேச என்ன வரலாற்று ஆவணம் வைத்துள்ளனர்? தொடர்ந்து நேற்று வரை திருத்தல்வாதி கலைப்புவாதி என்று நீங்கள் தூற்றிய அமைப்பு சார்ந்த தோழர்களை வாடகைக்கு அமர்த்தி உங்களின் வரலாறு பேசுவது எவ்வகையில் சரி?.

2). தனிநபர்களே பிளவுக்கு காரணம் எனும் மனோகரன் சோலை கும்பலே, "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பர்,உங்கள் தலைவரின் இறுதி உண்ணத பணி நீங்கள் அறியாதவை அல்ல?" மாநில குழு உள்ள பொழுதே போட்டி மாநில குழுவை" அமைத்து அமைப்பை பிளவு படுத்தியது ஏ.எம்.கேவா ரவீந்திரனா? யார் பிளவுவாதி? விளக்குவீரா? 

3). ஒவ்வொரு பிளவிற்கும் தனிநபரை குற்றம் சுமத்தி ஆவணப்படுத்தியுள்ள தலைமை ஏன் அமைப்பின் கொள்கை கோட்பாட்டிற்காக தியாகிகளானவர்களின் வரலாற்று படிப்பினை எழுத நேரமில்லையோ? இதில் ஏன் சுனக்கம்? தியாகிகளின் நிழலில் வாழும் உங்களை துரோகிகள் என்பது தவறா விளக்கி பதில் சொல்லவும்?

4). உங்களின் வரலாற்று பாத்திரம் என்ன விளக்குவீரா?

5). இந்திய புரட்சியின் விடிவெள்ளி என்பவர்களே தமிழகத்தில் L. அப்பு கொல்லப்பட்டதற்கு பின் தலைமை பொறுபிற்கு வந்தவர் செய்த பணியை விளக்க முடியுமா? அன்று ஒரே கட்சி பின் தோன்றிய மூன்று குழுவினை இணைக்காமல் இணைக்க பாடுபடாமல் என்ன பணி செய்தார்? இறுதியில் தன் அமைப்பையே உடைத்து சென்றவர் எப்படிதான் உங்களுக்கு விடிவெள்ளி விளக்குவீர்களா? ஆவணங்கள் அடிப்படையில் பேச வேண்டும்.

6). அமைப்புதுறையில் அராஜகம் தத்துவத்தில் ஓட்டையாண்டி இவர்கள் புரட்சிக்கு வித்திட்டவர்களாம்!!! இன்றுள்ள ஒவ்வொரு குழுவும் தன்னையையே கட்சியாக நினைத்து செய்யும் செயல் எந்த வர்க்க நலனுக்கு? உங்களில் ஒற்றுமை ஏற்படாமைக்கு காரணம் என்ன?

முழு இதழ் வாசிக்க கீழ்காணும் இணைப்பை சுட்டவும்....

இலக்கு 75 இணைய இதழ் PDF வடிவில் இந்த இணைப்பில் தோழர்களே








ஸ்டாலினை தூற்றுவோர்

 செந்நூல் பலகணி 1:

-------------------------------------
"ஸ்டாலின் அரசியல்" தோழர் சுந்தரசோழன் மொழிபெயர்ப்பு நூல் அறிமுகம்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
ஏறத்தாழ பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன் "கார்ட்டூனிஸ்ட் மதன்" உலக சர்வாதிகாரிகள் கதையை ஜூனியர் விகடனில் தொடராக எழுதினார். அதை ஒரு திகில் தொடர் போல எழுதி வந்தார். ஹிட்லர், இடி அமீன் என பல்வேறு சர்வாதிகாரிகளின் வாழ்க்கையை குறிப்பிட்டு எழுதியவர் அந்த வரிசையில் தோழர் ஸ்டாலின் அவர்களையும் சர்வாதிகாரி என்று குறிப்பிட்டு எழுதினார். இது எங்களைப் போன்ற தோழர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மார்க்சிய ஆதரவாளர்கள் பலரும் கடிதங்களை விகடன் குழுமத்திற்கு அனுப்பிவைத்தனர்.
எதிர்ப்புகளை கண்ட மதன் ஒரு 'சர்வாதிகாரிக்கு' இவ்வளவு ஆதரவா? என்று வியப்பு(!?) தெரிவித்தார். பொய்யான ஒரு செய்தியை வெளியிட்ட கூச்ச உணர்வு இன்றி அதற்கு வந்த எதிர்ப்பையே சர்வாதிகாரத்திற்கு ஆதரவு எனத் திரித்த அறிவாளி அவர்.
இப்படி உள்ளூர் மதனிலிருந்து உலகளாவிய அமெரிக்கா வரை ஸ்டாலினைப் பற்றி செய்யாத அவதூறுகளே இல்லை. அவ்வளவு அவதூறுகள் மலைபோல கொட்டிக்கிடக்கின்றன. இந்த அவதூறு மலைகளை பிளப்பதற்கு தமிழில் வெளிவந்த சிற்றுளி தான் "ஸ்டாலின் அரசியல்" என்ற தோழர் சுந்தரசோழனின் மொழிபெயர்ப்பு நூல்.
இந்தக் குறு நூலின் ஆங்கில மூலம் 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் மார்க்சிய-லெனினிய கழகத்தினரின் காலாண்டு இதழில் கட்டுரையாக வெளியிடப்பட்டது.
அடிப்படையில் இந்த நூல் ஸ்டாலின் குறித்து இரண்டு கேள்விகளை எழுப்பி அதற்கு விடை காண முயற்சிக்கிறது.
1) அவர் ஒரு கொலைகாரர் மற்றும் கொடுங்கோலர் ஆக இருந்தாரா அல்லது 100 கோடி மக்கள் நம்புவது போல கடந்த சில நூற்றாண்டுகளின் தலைசிறந்த மனிதநேயாளர்கள் மற்றும் ஜனநாயகவாதிகளில் ஒருவராக இருந்தாரா?
2) ஒரு கொலைகாரர் மற்றும் கொடுங்கோலர் இல்லையென்றால் மேற்குலகின் ஆளும் வர்க்கங்களும் அரசாங்கங்களும் தங்கள் மக்களை இந்த பொய்யை நம்ப வைக்க ஏன் இத்தகைய முயற்சிகளைச் செய்தன?
இந்த அடிப்படையான கேள்விகளை முன்வைத்து இந்நூல் விடைகாண முயலுகிறது.
அனைத்து முதலாளிய நாடுகளும் அனைத்து முதலாளிய தலைவர்களும், அறிஞர்களும் வரலாற்றின் அனைத்து மாற்றங்களையும் அல்லது முன்னேற்றங்களையும் தனி நபர்களே அல்லது மக்களை வழிநடத்தும் தலைவர்களே தீர்மானிக்கின்றனர் என்று நம்புகின்றனர். அதே வழிமுறையை அவர்கள் ஸ்டாலின் மீதும் பிரயோகிக்கின்றனர்.
சோசலிசத்தின் மீது, சோசலிச நாடுகள் மீது, புரட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டும் எனில் அதற்கு அந்நாட்டை வழி நடத்தும் தலைவர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எனவே சோவியத் யூனியனின் முதன்மை தலைவராக விளங்கிய தோழர் ஸ்டாலின் மீது ஏகாதிபத்தியவாதிகள் அவர்களின் கைக்கூலிகள் அவதூறுச் சேறுகளை விசிறி அடித்தனர். சோவியத் கட்சி மீது அதன் ஊழியர்கள் மீது எண்ணற்ற அவர்களை பொழிந்தனர்.
எல்லாவற்றிலும் மையமாக தோழர் ஸ்டாலினைக் குறி வைத்தார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதற்கு காரணம் இருந்தது. சோவியத் உலகின் முதல் சோசலிச நாடு அதன் முதல் தலைவராக இருந்த தோழர் லெனின் குறுகிய காலமே ஆட்சி செய்தார். அதன் பின்னர் பதவியேற்ற ஸ்டாலினே சோசலிசத்தை அமல்படுத்துவதில் ஒரு மாலுமியைப் போன்று செயல்பட்டார். இது முதலாளியவாதிகளை ஆத்திரம் கொள்ள வைத்தது அவர்கள் ஸ்டாலினை முதன்மையாக்கி அவதூறு செய்தனர்.
இதற்காக தொழில்முறை அடிப்படையில் அவதூறுகளை உருவாக்கி பரப்பினர். இந்த அவதூறுகளை பரப்ப அதற்கான நிறுவனங்கள் ஊழியர்கள் உருவாக்கப்பட்டனர். அவற்றின் மூலம் பொய்யை உண்மையாக்க பாடுபட்டனர் அவை அனைத்தும் எவ்வாறு பொய் என்பதை இந்த குறுநூல் தனது எல்லைக்குட்பட்டு நிறுவுகிறது.
ஸ்டாலின் என்ற சர்வாதிகாரி தன்னிச்சையாக தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்கிறார் என்பதை போல கட்டமைத்தனர். ஆனால் உண்மையில் அவர் அப்படியான முறையில் முடிவுகள் எதையும் எடுத்ததில்லை. கட்சியின் தலைவர் என்ற முறையில் அரசு தலைவர் என்ற முறையில் அனைத்து பிரிவினரின், ஊழியர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அதில் ஒன்று பட்ட கருத்துகளை வர வைத்தார் அந்த முடிவுகளையே அமல்படுத்தினார். இதற்கு மாறாக தன்னிச்சையான முடிவுகள் குறித்த கருத்துக்கள் அனைத்தையும் அவர் மறுத்தார்.
1930 - 1936 ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியனில் மற்றும் அதன் ஒரு அங்கமாக திகழ்ந்த உக்ரைனில் கடும் பஞ்சம், பசி, பட்டினி ஆகியவை நிலவியதாகவும் இதன் காரணமாக பல மில்லியன் மக்கள் பஞ்சத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள் எனவும் ஏகாதிபத்திய நாடுகள் கதையை அவிழ்த்து விட்டன. இதன் பின்னணியில் ஸ்டாலின் என்ற கொடுங்கோலன், சர்வாதிகாரி இருந்தார்; அவரின் கூட்டுப்பண்ணை திட்டமே அனைத்துக்கும் காரணம் என கதைகளை உருவாக்கினர்.
ஆனால் அவற்றை அக்காலத்தில் சோவியத்தில் வாழ்ந்த, சோவியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரிட்டிஸ் சோஷலிஸ்டுகள் பீட் ரைஸ் வெப் சிட்னி ஆகியோரின் கருத்துக்களும் அன்னா லூயிஸ் ஸ்டிராங் கருத்துக்களும் மறுத்து அம்பலப்படுத்துகின்றன. இவர்கள் அனைவரும் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள் அல்ல. இவை அனைத்தையும் விட அமெரிக்கன் எண்டர்பிரைசஸ் இன்ஸ்டிடியூட் என்று அமெரிக்க அரசு நிறுவனமே இப்படி ஒன்று நிகழவில்லை என்று கூறிவிட்டது.
1936 - 1938 ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயே சோவியத் ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட, சோவியத் ஆட்சியை கவிழ்க்க முயன்ற "பழைய போல்ஷ்விக்குகள்" மீதான சதி வழக்குகளில் ஸ்டாலின் பின் நின்றார் என்ற அவதூறு தொடர்ந்து பரப்பப்படுகிறது. அவர்களில் பெரும்பான்மையோரை இந்த வழக்குகளில் பொய்யாக சிக்க வைத்து பழி வாங்கினார் ஸ்டாலின் என எதிர்ப்பாளர்களால் பரப்பப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு வெளிப்படையாக எவ்வாறு நடந்தது என்பது குறித்து கூறும் அமெரிக்க தூதர் ஜோசப் ஈ டேவிஸ் பிரிட்டிஷ் வழக்கறிஞர் டின் என் பிரிட் ஆகியோரின் கருத்துக்களை முன்வைத்து ஸ்டாலின் மீதான பொய்களை இந்நூல் முறியடிக்கிறது.
1938 - 1941 ஆம் ஆண்டுகளில் உலகப்போரின் போதும் அதன் பிந்தைய ஆண்டுகளிலும் உலகப்போரை காரணமாக வைத்து தோழர் ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார்கள், சிறையில் அடைக்கப்பட்டார்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற பிரச்சாரம் நடக்கிறது. இவற்றில் எப்படி புனைவுகள் உருவாக்கப்படுகின்றன என்பதை ஸ்டாலின் காலத்தில் வாழ்ந்த ரஷ்ய எழுத்தாளர் சோல்ஜெனிட்சின் வாழ்க்கையை முன்வைத்து விளக்க முடியும். தனது எழுத்துக்களில் பாசிச சக்திகளை அதன் ஆதரவாளர்களை சோல்ஜெனிட்சின் எவ்வாறு ஆதரித்தார் இதன் அடிப்படை நோக்கம் என்ன என்று இந்த நூல் விளக்கம் அளிக்கிறது.
1941 - 1953 ஆம் ஆண்டுகளில் உலகப் போர் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து நாட்டை சீரமைக்கும் பணி தோழர் ஸ்டாலின் முன் நின்றது. ஆனால் இதை மறைத்து ஸ்டாலினையே ஏகாதிபத்தியவாதி போல் சித்தரிக்கும் மோசடியும் நடைபெற்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான செல்வாக்கு மண்டலங்களை பிடித்துக்கொள்ளும் நாடுகளை பங்கிட்டுக் கொள்ளும் ஏகாதிபத்தியவாதியாக ஸ்டாலின் திகழ்ந்தார் என்று அவதூறு செய்தனர். இந்த அவதூறுகளை வாலண்டைன் பெரஷ்கோவ் நினைவுக்குறிப்புகள் சர்ச்சில் ரூஸ்வெல்ட் கடிதங்கள் மற்றும் அமெரிக்க தூதர் ஹாரிமன் நினைவுக் குறிப்புகள் ஆகியவை பொய்யாக்கி விடுகின்றன.
ஆனால் தோழர் ஸ்டாலினோ இந்தக் காலங்களில் நாட்டை நிர்மாணிக்கும் பணிகளில் தனது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார். அறிவியல், கலை இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சியை கட்டவிழ்த்து விட்டார் இதற்காக தொழிலாளர்கள் உழவர்களின் முன்முயற்சி மற்றும் திறன்களை ஊக்குவித்தார். அவர் பின்பு கட்சி மற்றும் நாட்டு மக்கள் நின்றனர். இதன் வளர்ச்சிப் போக்கில் பாட்டாளிவர்க்க கலை இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகியவை உன்னதமான வளர்ச்சியை அடைந்தன.
இவ்வளவு அவதூறுகள், போர்ச்சூழல் கொடுமைகள், இடையூறுகளுக்கு நடுவிலேயே சோசலிச கனவு உலகத்தை படைத்தனர் தோழர் ஸ்டாலினும் அவர் தம் நாட்டு மக்களும். அதுதான் ஏகாதிபத்திய முதலாளித்துவவாதிகளுக்கு அவர்களின் கூட்டாளிகளுக்கு இன்றும் கூட கொடுங்கனவாக விளங்குகிறது.
எனவே சோசலிசத்தின் சாதனைகளை மறைக்க சோசலிசத்தை வீழ்த்த தோழர் ஸ்டாலின் மீது அவதூறுகள் பொழியப்படுகின்றன. முதலாளித்துவ வாதிகளின் நோக்கம் அவர்களின் அரசியல் என்பது ஸ்டாலின் என்ற தனி மனிதர் அல்ல மாறாக சோசலிசத்தின் மீதான தீராத பகை உணர்வு ஆகும். இந்த முடிவையே இந்த குறுநூல் இறுதியாக வந்தடைகிறது.
அதேநேரம் இந்தப் குறுநூலில் கூறப்பட்டுள்ளவை தோழர் ஸ்டாலின் மீதான தாக்குதலுக்கான எதிர்வினை என்ற எல்லையில் மட்டுமே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவற்றை தாண்டியும் விவாதிக்க வேண்டியது அவசியம் என்பதை காலம் உணர்த்தி விட்டது.
சோசலிச சமூக அமைப்பு பின்னடைவைச் சந்தித்தது இதுபோன்ற அவதூறுகளாலோ அல்லது கட்சிக்கு உள்ளேயே இருந்த சதிகாரர்களாலோ மட்டுமே அல்ல. சோசலிசக் கட்டுமானத்தை மேற்கொள்வதில் ஏற்பட்ட தவறுகளே அடிப்படைக் காரணம். இது குறித்து விமர்சன பூர்வமாக, விரிவாக தோழர் மாவோ ஆய்வு செய்தார். முதலாளிய மீட்சி குறித்து எச்சரித்தார் அவர் மறைவுக்குப்பின் மக்கள் சீனத்திலும் முதலாளிய மீட்சி நடைபெற்றுள்ளது. இது முதலாளிய மீட்சி குறித்த ஆய்வுகளை தொடர வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது.
நோய் தீர்ப்பது அவசியம் என்றாலும் நோய் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிவது அதைவிடவும் அவசியம். அது இந்த நூலின் எல்லைக்குள் வரவில்லை என்பதால் அது பற்றி விரிவாக பேசுவதை தவிர்க்கிறேன். அதேநேரம் சோசலிச கட்டுமானம் பற்றிய மீளாய்வு அனைத்து பொதுவுடமைக் கட்சிகளின் முன்பும் உள்ள ஒரு வரலாற்றுக் கடமையாகும்.
இவைபோன்ற அறிவுபூர்வமான நூல்கள் தமிழில் மிகக் குறைவே ஆகும். இந்த நூலே 1984 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வந்தது ஆகும். தற்போது 2021ல் தான் தமிழில் வெளிவந்துள்ளது. தமிழக பாட்டாளி வர்க்கம் எவ்வளவு தூரம் உலக சோசலிச இயக்கத்தில் இருந்து பின் தங்கியுள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
பெரிய கட்சிகள் செய்ய முன்வராத பெரும் பணியை தனி மனிதராகச் செய்த தோழர் சுந்தரசோழன் அவர்களுக்கு தமிழக பாட்டாளி வர்க்கம் கடன்பட்டுள்ளது அதற்கு உறுதுணையாக இருந்து நூல் பதிப்பித்த தோழர் தமிழரசன் அவர்களுக்கும் முன்னுரை வழங்கியுள்ள தோழர் அ.கா. ஈஸ்வரன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொழிலாளி வர்க்கமும் உழைப்பாளி மக்களும் இந்த நூலை படித்துப் பரப்ப வேண்டும்.
நூல் கிடைக்குமிடம்:
செஞ்சோலைப் பதிப்பகம்
5/1015, பூஞ்சோலை நகர்,
முனீஸ்வர் நகர் விரிவாக்கம்
ஓசூர் - 635 109
விலை : ரூ. 80/-
பேச : 98948 35373

அரசியலற்ற தனிநபர் துதிபாடலும் தனிநபர் எதிர்ப்பும் பேசுபவர்கள் கம்யூனிஸ்டுகளா? பாபுலிசத்தில் ஊறிபோனவர்கள் இவர் யார்?

அண்மையில் ஏ.எம்.கே துதிபாடிகள் “இலக்கு இணைய இதழ்”, மற்றும் அதன் ஆசியர்கள் மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதன் அடிப்படையில் ஆதாரம் அற்ற அதே பழைய பாணியிலான முத்திரை குத்தும் வேலையே தவிர வேறோன்றும் இல்லை. ஆக இலக்கு இணைய இதழ் அதற்கான பணியாக “மார்க்சிய லென்னிய மாவோ சிந்தனையினை” உயர்த்தி பிடித்து சரியான மார்க்சிய லெனினிய அரசியல் தத்துவ பொருளாதார புரிதலை கம்யூனிஸ்டுகளிடையே போதிப்பதே அதற்கான பணியாக கொண்டு மா-லெ கல்வியை யாரும் கொடுக்கவில்லை; கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்ப்பட்டு கொண்டுள்ளது. இங்குள்ள கம்யூனிஸ்டுகள் பலவகையில் பிரிந்து நின்று ஆளும் வர்க்கம் தொடர்ந்து தன் சுரண்டலை நடத்திக்கொண்டிருப்பதை தடுக்க திறன் இன்றி ஆளுக்கொரு கட்சி ஆளுக்கொரு குழு. எதிரியை எதிர்த்த போராட்டத்தில் கடலில் கரைத்த பெருங்காயம் எனபர் அதுபோல் உள்ளவர்கள் தங்களின் பணியினை விவாதிக்க தயாரா?

நீங்கள் மட்டுமே ஏகாதிபத்திய எதிர்பாளர்கள் உங்களை கேள்வி கேட்டாலே அல்லது உங்களிலிருந்து பிரிந்து விட்டாலே ஏகாதிபத்திய சார்பாளர்களா? என்ன கண்டுபிடிப்பு? ஏன் உங்களின் ஏ.எம்.கேவால் NGO, கலைப்புவாதிகள் என்று முத்திரை குத்தியவர்களையே வாடகைக்கு மேடை பகிரும் நீங்கள் அவர்களை எப்படி புனிதர் ஆக்கினீர் அதனை விளக்க முடியுமா?

எவ்வித ஆதாரமும் இன்றி தன்னை எதிர்த்தால் கேள்வி கேட்டாலே முத்திரை குத்தும் போக்கு எவ்வகையில் மார்க்சிய வகைபட்டது? குற்றம் சுமத்தி முத்திரை குத்தியுள்ளோர் குத்துவோர் நிரூபிக்க வேண்டிய கடமை பட்டவர்கள் ஆவர்! செய்வீர்களா ஏ.எ.கே துதிபாடிகளே?.

நக்சல்பாரிகளின் தியாகம் அளப்பரிய பங்களிப்பு இந்திய வரலாற்றில் பொன்னேடுகளால் எழுதப்பட வேண்டும், அதன் தோல்வி மற்றும் படிப்பினைகள் அன்றை தலைவர்களின் பங்கில்லையா? அவர்களின் வரலாற்றை எழுத நேரமில்லா குழுக்கள் ஆளுக்கொரு பெயரில் இயங்கி என்ன சாதித்துள்ளீர் விளக்குவீரா??

மேலும் இறுதி பக்கம் தோழர் அண்மையில் ஏ.எம்.கே துதிபாடிகள் கம்யூனிஸ்ட்டுகளாக இல்லாமல் பாபுலிஸ்டுகளாகி விட்ட இவர்கள் எந்த ஆதாரமும் இன்றி தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ள பொழுது அவர்களின் கடவுளான தலைமை மீதான சில கேள்விக்களைதான் அவர்களிடம் வைக்கிறோம்.  

சோலை கும்பல் நூல் போட்டு விட்டு தூங்குகிறது மனோகரன் குழு துடிக்கிறது தலைவனை கேள்வி கேட்டுவிட்டார்களே என்று!!!

1).தியாக தோழர்கள் L. அப்பு தொடங்கி சீராளன் மற்றும் பாலன் போன்ற பல தியாகிகளின் தியாக வரலாறும் உங்களின் படிப்பினை என்ன? ஏதாவது ஆவணம் உண்டா? தியாகிகளின் பெயர் சொல்லி வாழும் கூட்டம் அவர்களின் தியாகத்தை பேச என்ன வரலாற்று ஆவணம் வைத்துள்ளனர்? தொடர்ந்து நேற்று வரை திருத்தல்வாதி கலைப்புவாதி என்று நீங்கள் தூற்றிய அமைப்பு சார்ந்த தோழர்களை வாடகைக்கு அமர்த்தி உங்களின் வரலாறு பேசுவது எவ்வகையில் சரி?.

2). தனிநபர்களே பிளவுக்கு காரணம் எனும் மனோகரன் சோலை கும்பலே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பர், உங்கள் தலைவரின் இறுதி உண்ணத பணி நீங்கள் அறியாதவை அல்ல? மாநில குழு உள்ள பொழுதே போட்டி மாநில குழுவை அமைத்து அமைப்பை பிளவு படுத்தியது ஏ.எம்.கேவா ரவீந்திரனா? யார் பிளவுவாதி? விளக்குவீரா?  

3). ஒவ்வொரு பிளவிற்கும் தனிநபரை குற்றம் சுமத்தி ஆவணப்படுத்தியுள்ள தலைமை ஏன் அமைப்பின் கொள்கை கோட்பாட்டிற்காக தியாகிகளானவர்களின் வரலாற்று படிப்பினை எழுத நேரமில்லையோ? இதில் ஏன் சுனக்கம்? தியாகிகளின் நிழலில் வாழும் உங்களை துரோகிகள் என்பது தவறா விளக்கி பதில் சொல்லவும்?

4). உங்களின் வரலாற்று பாத்திரம் என்ன விளக்குவீரா?

5). இந்திய புரட்சியின் விடிவெள்ளி என்பவர்களே தமிழகத்தில் L. அப்பு கொல்லப்பட்டதற்கு பின் தலைமை பொறுபிற்கு வந்தவர் செய்த பணியை விளக்க முடியுமா? அன்று கட்சியில் தோன்றிய மூன்று குழுவினை இணைக்காமல் இணைக்க பாடபடாமல் என்ன பணி செய்தார்? இறுதியில் தன் அமைப்பையே உடைத்து சென்றவர் எப்படிதான் உங்களுக்கு விடிவெள்ளி விளக்குவீர்களா? ஆவணங்கள் அடிப்படையில் பேச வேண்டும்.


இந்திய கம்யூனிஸ்டுகளாகிய நாம் நம்மை பரிசீலிக்க கடந்தகால வரலாற்றிலிருந்து சரி தவறுகளை பரிசீலித்து கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய பணியை செய்ய வேண்டும். அப்படியெனும் பொழுது வலுவான எதிரியான ஆளும் வர்க்கத்தின் முன்னர் செயலற்று நிற்கும் புரட்சி பேசுபவர்களும் ஆளும் வர்க்க பிரிவாகவே மாறி உழைக்கும் வர்க்கத்தை ஏய்க்கும் சில கம்யூனிசம் பேசும் கட்சிகளும் தங்களின் பணியை செய்யாமல் தங்களின் இருப்பிற்காக ஏதோ ஒன்றை செய்துக் கொண்டுள்ளனர். உண்மையில் இவை ஆளும் வர்க்கத்தை நீட்டிக்க செய்யும் பணிதானே ஒழிய மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழிமுறை அல்ல.

தனிநபர் தாக்குதலில் இடுபட்டுள்ள ஏ.எம்.கே வின் வாரிசு மனோகரன் முகநூலிலிருந்து கீழே அப்படியே.

தோழர் கோதண்ட ராமன் கட்சியை பிளவுப்படுத்தினாரா? அறிவு ஜீவிகளை விரட்டி அடித்தாரா...? உண்மை என்ன..?

1.80-களின் இறுதியில் அமார்க்ஸ் கும்பல் மார்க்சிய லெனினியத்தை ஒழிக்க பின் நவீனத்துவத்தை வைத்து நிறப்பிரிகை துவங்கி வெளியேறியது! சோஷலிசத்தின் தோல்வியால் அதிர்ச்சி அடையந்து அமெரிக்காவின் கலைப்புவாத கருத்துக்களை விதைத்தது! அந்த துரோகத்தை எதிர்த்து போராடியதால் ஓடுகாலியாக மாறி அமைப்பை விட்டு ஓடியது!

2. மார்க்சிய ஆய்வாளர் திருவாளர் கோ.கேசவன் மற்றும் கோவிந்தசாமி கும்பல் அம்பெத்கரியத்தை மார்க்சியத்துடன் கலக்க வேண்டும் என்று கூறி, கட்சி ஒற்றுமையை உருவாக்க போவதாக கூறி வெளியேறியது! கோ. கேசவனின் சாதியம் நூலே அதற்கு சான்று!
சாதியம் அடித்தளம் மேற்கட்டுமானது ஒருங்கிணைந்த முழுமை என்று கிராம்ஸ்கியத்தை வைத்து வெளியேறியது! அவர்கள் வெளியேற்றப்பட வில்லை!

3. சித்தானந்தம் தலைமையிலான பிழைப்புவாத கும்பல் தொண்டு நிறுவன உதவியுடன் சேலத்தில் புத்கக்கடை துவங்கி அமைப்பைக் கைப்பற்ற முயற்சித்து முடியாமல் போகவே அரசிடம் சரணடைந்து வெளியேறியது! கட்ட பஞ்சாயத்து, பொருளாதார மோசடிகள் 
மூலம் சொத்து சேர்த்து சகபோகமாய் வாழ்கிறது!

4. தமிழ்வாணன், ராமன் கோஷ்டி பாலியல் லீலைகள், பிழைப்புவாத மோசடிகளுக்கு பரிகாரம் தேடாமல், ஒன்று ஆசிய உற்பத்திமுறை இனங்களின் இறையாண்மை பேசியும், ராமன் செல்வராஜ் வகையறா டிராட்ஸ்கியத்தை நத்தியும் பிழைக்கிறது!

5. குணாளன் தலைமறைவு கட்சி கூடாது, கட்சியன் தலைமையை தனக்பு அளிக்க வேண்டும், பிடிக்காதவர்களை வெளியே தள்ள வேண்டும் என்று கூறி, புளயம் கொம்பாக ஆந்திரா கட்சியை பிடித்துக் கொண்டு, ஈயம் பூசுபவர்களை போல ஊர் ஊராய் அலைகிறது! அது கட்சியை பிளவுப்படுத்த நிதி ஏற்பாடு மதுரை ரவீந்திரன்!

6. இறுதியாக ரவீந்திரன், பிரதீப், சோலை கட்டி முதலாளித்துவ கும்பல் புரட்சி இயக்கத்தை கண்டு அஞ்சி மக்களுக்கு தலைமறைவு, அரசாங்கத்துக்கு வெளிப்படை என்ற கொள்கையை பேசி, தனது குடும்பம்  வாழ பிழைப்புவாதத்துக்கு தலித்தியம் பேசி தனி நபர் தாக்குதல் நடத்தி அமைப்பை மூன்றாக உடைத்தனர். இதற்கும் நிதி ஏற்பாடு மதுரை ரவீந்திரன்தான்!

7. சோலை என்ற கேடி இன்று ஒடுக்கப்பட்ட ஈரான், ஈராக, வடகொரியா, வெனிசலா போன்ற நாடுகள் மீதான அமெரிக்காவின் காலனய போரை ஏகாதிபத்திய போர் என்று கூறி இந்த போரில் ஒடுக்ப்பட்ட நாடுகளயும் அமெரிக்காவையும் சம்ப்படுத்தி தாக்குவதன் மூலம் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு துணை போகும் ஐந்தாம்படை வேலையை செய்கிறது!

இவ்வாறு அமார்க்சு முதல் சோலை வரை குட்டி முதலாளித்துவ சக்திகள் கட்சிக்குள்  அந்நிய வர்க்க கருத்துக்களை திணித்து முதலாளித்துவ கட்சியாக மாற்றும் வேலையை செய்தனர். இதனை இவர்கள் யாரும் கருத்துப் போராட்டம் நடத்தி தீர்க்கவில்லை! அமைப்பைவிட்டு வெளியேறியோ அல்லது இடத்தை செய்தனர்.

இவர்கள் சிறுபான்மையாக இருக்கம்போது பிளவுப்படுத்தி வெளியேறுவது.... பெரும்பான்மையாக மாறியதும் அமைப்பை உடைப்பது என்று செயல்படுகிறார்கள்.
கருத்துப் போராட்டத்தை மறுப்பவர்கள்!

இத்றகெல்லாம்மூல வேர் ஃபோர்டு பவுண்டேஷனும், லோகாயனும் எஸ்வி.ஆரும் ஆகும்!

எஸ்.வி.ஆரின் புதிய இடதுக்கும் புருச்சேவ், டெங் கும்பலின் திருத்தல்வாதத்துக்கும் பிறந்த பின் நவீனத்துவ கள்ளக் குழந்தை அடையாள அரசியல் காரணம் ஆகும்! 
இதை எதிர்த்து மார்க்சிய பாரம்பர்ய மாணிக்கம் கோதண்டராமன் உறுதியாக இமயம் போல் தடை அரணாக நின்றார்! அவரை இப்பிரச்சினைகளை தீர்க்கமல் போய்விட்டார் என்று சொல்வதில் நியாயம் உண்டு! ஆனால் அவரை துரோகி என்று கூறுவதில் உண்மையும் இல்லை! நேரமையும் இல்லை!

ஏ.எம்.கே.வை குறை சொல்பவர்களே... மாவோயிஸ்ட் கட்சி மூன்றாம் உடைந்ததற்கு யார் காரணம்? இன்று நான்காக உடைந்ததற்கு யார் காரணம்! த.நா.மா.லே மூன்று பகுதியாக
ஆளுக்கொரு திட்டத்துடன் செயல்படுவதற்கு யார் காரணம்? ரஷ்யாவும், சீனாவும் வீழ்ச்சி அடைந்ததற்கு யார் காரணம்! சோஷலிச முகாமின் தோல்வி கலைப்புவாதத்தின் எழுச்சி...
எதிர் புரட்சி வெற்றி... இதில் ஏ.எம்.கே.மட்டுமா தோற்றார்....?எல்லோரும் தோற்றோம்!

தோல்விக்கான காரணத்தை கடந்தகால அனுபவத்திலிருந்து பாடம் பயில வேண்டும்! கலைப்புவாதத்தின் வெற்றி அதன் பலத்தால் அல்ல... மார்க்சியர்களின் பலவீனத்தால் பெற்றதாகும்!
ஆனால் இலக்கு என்ற இலக்கற்ற பத்திரிகை மூலம் கடந்த கால அனுபவத்தை விஞ்ஞான பூர்வமாக பயின்று உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கான உருப்படியான ஆலோசனையை வைக்கவில்லை. தோழர் ஏ.எம்.கே.மட்டுமே அதற்கான வழியை விட்டுச்
சென்றுள்ளார்!
அதனை நூல்களாகவும் வெளியிட்டுள்ளோம்....! அதனை மறைக்க ஞானம், பிரதீப், சோலை,  ரவீந்திரன் போன்ற பதர்கள் அவர்மீது தாக்குதல் நடத்தியும்.,. அவரைவ துதிபாடியும் பச்சை குத்திக் கொண்டும் புதைக்க முயலாலாம்!
ஆனால் இந்த கயவர்களின் எண்ணம் ஈடேறாது! மார்க்சியம் தழைப்பதும் கலைப்புவாதம் மண்ணுக்குள் புதைவதும் தவிர்க்க முடியாதது?

மார்க்சியம் தன்னை புதுப்பிக்கும். வெற்றி பெறும். புதிய இடது பின் நவீனத்துவ ஏகாதிபத்திய ஆதரவு அடையாள அரசியல் மண்ணைக் கவ்வும். இது நிச்சயம்!

அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சில மனோகரன் ஏஎம்கே வை முட்டாள் என்று சொல்லலாமாம். ஆனால் ஏஎம்கேதுரோகி என்பது குறித்து மட்டும் பொங்குகிறார். காரணம் கட்சியில் வைக்க வேண்டியதை கடைத்தெரு வில் வைத்தவராயிற்றே. அப்படி பேசி தானும் மா லெ வாதி என காட்டிநக்சல்பாரிகளின் உணர்வை உயிரை மழுங்கடிக்கும் அவரின் அவா இன்னும் குறைய வில்லை. பணிநிறைவுக்குபின் புரட்சி பேசுவோரைகண்டு யாரும் கவலைபட மாட்டார்கள்.அவர் சேரவேண்டிய இடத்தில் கிட்டதட்ட சேர்ந்த பின் ஏன் இந்த "புரட்சி"வேஷம் என்பதே கேள்வி- குணாலன்


இந்த உளரல்கள்தான் இவர்களின் அரசியல். இவை எவ்வகையிலும் மார்க்சிய லெனினியத்தை வளப்பதற்கல்ல. 
கம்யூனிஸ்டுகள் பாபுலிஸ்டுகள் அல்ல அவை முதலாளித்துவ காப்பி ரைட்ஸ் போல் இன்று கம்யூனிஸ்டுகளையும் சீரழித்துக் கொண்டுள்ளது. தனிநபர் துதிபாடல் மார்க்சியம் அல்ல அதேநேரத்தில் தனிநபர் பாத்திரம் புறகணிக்கவும் முடியாது வர்க்க சமூகத்தில் அவர்களின் செயலை கணக்கில் கொண்டால் புரிந்துக் கொள்வது எளிதே...

இப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல; பொறுக்கி அரசியல்! இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் வசவுகள், பேசும் தலைவர்கள் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித்தாள்கள் பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!

 "நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது'' என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும், மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழவும், அதையே ரசிக்கவும்கூடப் பழகிவிட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர்கள் (Crowd Pullers) கவர்ச்சி நிலை தலைவர்கள் (Charismatic Leaders)தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

 இவை இன்றைய கம்யூனிஸ்டுகள் கடைபிடிப்பதுதான் அவலம்.

"பொறுக்கி அரசியல்'' என்று சொல்லும்போது, இன்றைய அரசியலின் இழிநிலை கண்டு வெறுமனே வெறுப்பு விரக்தி, பொறாமை ஆத்திரத்திலே சொல்லவில்லை. முதலாளித்துவ அரசியலில் ஒரு வகை, ஒரு வடிவம் என்கிற வரையறுப்போடுதான் சொல்கிறோம். பொறுக்கி அரசியலுக்கு என்று ஒரு சமூக அடிப்படை, ஒரு சித்தாந்த அடிப்படை, ஒரு அமைப்பு அடிப்படை உண்டு. இன்று தமிழக அரசியலில் முழுமையடைந்த வடிவில் பொறுக்கி அரசியல் பிரகாசிக்கிறது. பொறுக்கி அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு; என்றாலும் அதை வளர்த்து முழுமையாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உரித்ததாகும். செத்த பின்னும் எம்.ஜி.ஆரின் புகழ் பரப்புவது பொறுக்கி அரசியல்தான். அதன் வழி வந்த விஜய்காந்த் விஜய் தங்களின் சினிமா பின்புலத்தில் தங்களுக்கான இடம் கோருகின்றனர். ஆனால் அவர்களின் நிலைப்பாடு கொள்கை கோட்பாடுகள் என்ன???

  

பொறுக்கி அரசியலின் சித்தாந்த அடிப்படை: கவர்ச்சிவாதம் (பாப்புலிசம் populism)

 பிற்போக்கு சித்தாந்தங்களை வெளிப்படையாக வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகின்றன. ஆனால், ஆட்சியைப் பிடிப்பதற்கு அவை ஒரு உத்தியைக் கையாளுகின்றன. தமது பிற்போக்கு சித்தாந்தங்களை மூடிமறைத்துக் கொண்டு பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், அவைகளுக்கேற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றன. தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்தப் பாமர மக்கள் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி, தம்மை அறியாமலேயே பொறுக்கி அரசியலை ஆதரிக்கிறார்கள்.

 

கவர்ச்சிவாதம் (பாபுலிசம்) என்று சொல்லும்போது எம்.ஜி.ஆர். உருவாக்கியதைப் போன்ற சினிமா கவர்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அது பொறுக்கி அரசியலின் கலாச்சார வடிவம். எம்.ஜி.ஆர். உருவாக்கிய "அண்ணாயிசம்'' பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதத்தின் முக்கியமான சித்தாந்த அங்கமாகும். "முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம்'' மூன்றும் இணைந்ததுதான் "அண்ணாயிசம்' என்று எம்.ஜி.ஆர். அதற்கு விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கம் எதுவானாலும் அவரது ஆட்சியின் நடைமுறையிலிருந்து "அண்ணா" யிசத்துக்கான பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

 

பன்னாட்டு ஏகாதிபத்திய இன்னாட்டு பெரும் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் எச்ச சொச்ச நலன்களைத் தொடர்ந்து கட்டிக் காத்து வளர்ப்பது. அதேசமயம் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிகமிக மோசமான கருத்துக்கேற்ப கவர்ச்சிவாத (பாப்புலிச) நடவடிக்கைகளை மேற்கொள்வது இதுதான் எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த அண்ணாயிசம். தேசியமா, திராவிடமா என்று எம்.ஜி.ஆரின் அரசியல் நிலைப்பாடுகளைக்கூட பாகுப்படுத்திப் பார்க்க முடியாமல் கவர்ச்சிவாதத்தால் மக்களை அடித்து வீழ்த்துவது; மொழி, இன ஒடுக்குமுறை, பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சி இருந்தாலும் சத்துணவு, பற்பொடி, செருப்பு, வேட்டி, சேலை, தண்ணீர் குடம், வறட்சி, வெள்ளம், தீநிவாரண அன்பளிப்புகள் ஆகிய இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக ஒரு பிரமையை உருவாக்குவது; தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஆகிய எந்தச் சமூகப் பிரிவினர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும் ஈவிரக்கமின்றி நசுக்கும்போதே, ஆட்சியாளர்களின் வள்ளல் தன்மையை பறைசாற்றும் "அன்பளிப்பு''களால் வாயடைக்கச் செய்வது. சுருக்கமாகச் சொன்னால், அரசாங்க "இலவச அன்பளிப்பு''த் திட்டங்களின் கீழ் கணிசமான அளவு மக்களை வைத்துக் கொள்வதன் மூலம் பாமரத்தனமான சோசலிசத் தோற்றத்தை ஏற்படுத்துவது இதுதான் எம்.ஜி.ஆரின் "அண்ணாயிசம் கவர்ச்சிவாதம்".

 

பொறுக்கி அரசியலின் அமைப்பு அடிப்படை: பிழைப்புவாத அரசியல் அமைப்புகள்

காந்தியம், இந்து ராஷ்டிரம், அம்பேத் காரிசம், இனவாதம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகள், தமது கொள்கைகளைக் கொண்டு அணிகளை அமைப்புகளைக் கட்டுகின்றன. ஆனால், பிழைப்புவாதத்தையே அரசியல் கொள்கையாக்கிக் கொண்டுள்ள அரசியல் அமைப்புகள் சில தோன்றியுள்ளன. அவை தமது தலைவர்கள் அணிகளின் பிழைப்புவாதத்துக்கேற்ற முறையில் அரசியலையும் போராட்டங்களையும் வகுத்துக் கொண்டு இயங்குகின்றன. கல்வி, மதம், விவசாயம், வியாபாரம், ஆலை உற்பத்தி, மருத்துவம், காண்டிராக்ட் ஒப்பந்தம், சட்டத்துறை போன்று, சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயங்கும் அரசியல் அமைப்புகளையே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம்.

தலைவர்கள் மட்டுமல்ல; நகரவட்டங்கள் கிராமங்களுக்குப் பொறுப்பாக உள்ள கட்சி அணிகள் வரை மேலிருந்து கீழ்மட்டம்வரை பிழைப்புவாதத்தையே அரசியலாகக் கொண்ட அமைப்புகள். எந்தக் கட்சியில், அதிலும் எந்த கோஷ்டியில் இருப்பது வருமானத்துக்குரிய ஆதாயமாக இருக்கும் என்பதைப் பரிசீலித்து, விவாதித்து இவர்கள் தெரிவு செய்கிறார்கள். மேல்மட்டத் தலைவர்கள் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே உள்ள பிழைப்புவாதிகள் அரசியல் தரகு வேலையை ஒரு தொழிலாக, அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்கிறார்கள். தேர்தல் காலங்களில் பிரச்சார வேலைகள், ஆள்பிடிக்கும் வேலைகள், ஓட்டுக்களுக்கான பேரங்கள் ஆகியவற்றில் கட்சி நிதியையே சுருட்டிக் கொள்கிறார்கள். மாற்று காலங்களில்  இலவசத் திட்டங்கள், (இன்று பல உள்ளன) வெள்ளம் வறட்சி தீ விபத்து போன்ற நிவாரணத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு முன்னின்று, அதிகாரிகளுடன் சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். இப்போது இந்த வேலைகள் செய்வதற்காக இவ்வளவு தொகை தமக்குக் கமிஷனாகத் தரவேண்டும் என்று உரிமையோடு அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அரசு கடன் வழங்கும் விழாக்கள், போலீசு நிலைய வழக்குகள், வேலை வாய்ப்புகள் சிபாரிசுகள் போன்றவற்றில் அரசாங்கத்தின் "அங்கீகரிக்கப்பட்ட'' தரகர்களாக இருக்கிறார்கள்.

 கட்சித் தலைவர்களின் எடுபிடிகளாகவும், அரசியல் தூதர்களாகவும் இருந்த பிழைப்புவாதிகள் கிராமப் பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகள், மக்கள் கமிட்டிகளில் நியமனம் பெறுவது, பிறகு பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகளுக்குத் தேர்தல்களில் நிற்பது என்று முன்னேறி, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.கள் மட்டுமல்ல, மந்திரிகள் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள். கூட்டுறவுகள், உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களைத் தள்ளி வைத்து இந்தப் பிழைப்புவாதிகளுக்கான மடங்களாக்கிய எம்.ஜி.ஆர். ஆட்சியில், கோவில்கள், வாரியங்கள், பள்ளிகல்லூரிகள் போன்ற சகல மட்டங்களிலும் கட்சி பிழைப்புவாதிகளுக்கு "பொறுப்புகள்'' பகிர்ந்தளிக்கப்பட்டன. கட்சிக்காகப் பாடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு "ஏற்பாடு'' செய்து தருவதைத் தமது பொறுப்பாகவும் அவர்களது உரிமையாகவும் பகிரங்கமாகவே ஒழுங்குபடுத்தினார், எம்.ஜி.ஆர்.

 

இன்னும் பின்னர் தொடரும்....

கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாக இருக்க வேண்டும்!-74 இலக்கு இதழிலிருந்தே

 "மார்க்சியம்‌ சமுதாயத்தையும்‌ சமுதாயம்‌ செயல்படும்‌ உலகையும்‌ ஆராய்கிறது.எல்லா உண்மைகளையும்‌ அறிந்து விட்டதாக மார்க்சியம் பீற்றிக் கொள்ளவுமில்லைஇன்னும்‌ அறிந்து கொள்வதற்கு ஏராளமான உண்மைகள்‌ உள்ளனஇவற்றை அறிய முடியாதவை அல்லஅதியப்படாதவைஎன்று மார்க்சியம்‌ கூறுகிறது. "மாறுவது ஒன்றே மாறாததுஎன்று மாற்றத்தைத்‌ தனது விதியாக ஏற்றுக் கொள்கிறதுஇது இதற்கு முந்திய வரலாற்றைக்‌ கண்ணை மூடிக்கொண்டு மறுத்ததுமில்லைஏற்றதுமில்லைஎதிர்‌ முகாமிலிருந்து வரும்‌ சிந்தனைகளையும்‌ மார்க்சியம்‌ விஞ்ஞான பூர்வமாக ஆராய்கிறது

ஏன்‌ இயக்கவியல்‌ பொருள்‌ முதல்வாதமே ஹெகலின்‌ தலை கீழாக நின்ற கருத்து முதல்வாதத்தை நிமிர்த்திச்‌ செழுமைப்படுத்தியதுதானே?! 

மார்க்சியத்தை ஏற்று நடைமுறைப்‌ படுத்திய புரட்சிகரச்‌ சமுதாயத்தை படைத்த இயக்கங்களுக்குத்‌ தலைமை தாங்கிய லெனினும்‌ மாவோவும்‌ பொது வழி காட்டும கோட்பாடாகவே பார்த்தார்கள் வளர்ந்த தன் சமூக அமைப்பில் பொருத்தி வெற்றி கண்டனர்

"பொதுவுடைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடிக்கும்‌. அப்பொதுவுடைமையில்‌ இயல்பு மாற்றங்கள்‌ இருக்காதென நான்‌ நம்பவில்லை” என்று தான்‌ மாவோ கூறினார்‌. பாட்டாளி வர்க்கு சர்வாதிகாரம்உட்படஅனைத்துசர்வாதிகாரங்களையும்‌ ஒழிப்பதுபுரட்சிகள்‌ பலாத்காரம்உட்பட அனைத்துப்‌ பலாத்காரங்களையும்‌ ஒழித்துக்‌ கட்டுவது  கம்யூனிஸ்ட்‌ கட்சி உட்படஅனைத்துக்‌ கட்சிகளையும்‌ ஒழித்துக்‌ கட்டுவதுதான்‌ எங்கள்‌ நோக்கம்‌, என்ற 'மாவோவின்‌ கூற்று வர்க்கம் அற்ற சமூகம் பற்றிய சமூக விஞ்ஞான அறிவின் வளர்ச்சியை அறிந்த போக்கல்லவா?

நம் மத்தியில் உள்ளவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சமுக அவலங்களை பேசுகின்றனர் தீர்வாக என்ன பேசுகின்றனர்???
நாம் வாழும் இந்த சமூக அமைப்பில் உள்ள பல்வேறு பிரசினைகள் அவலங்கள் இழிநிலைக்கு காரணம் இச் சமூக அமைப்பு காரணம் இல்லையா???
பல்வேறு முற்போக்கு பேசுவோர்களும் ஏன் தங்களை இடதுசாரி என்று அழைத்துக் கொள்பவர்களும் எழுத்தும் பேச்சும் இச்சமூக அவலம்‌ இழிவையும் பேசி சலிப்பும்‌ மிகுந்த சமுதாய அமைப்பின் மீது எவ்வளவுதான் பேசினாலும்
இதற்கான சமூக அமைப்பின் அடிப்படையை இந்த அவலங்களுக்கும் இழிநிலைக்கும் காரணமான சமூக அமைப்பை மாற்றாமல் சில கட்சிகளை சில நபர்களை மாற்ற சொல்பவர்கள் இவர்களின் இளைய பங்குதாரர்கள் மாறாநிலை வாதிகள் இச்சமூகத்தை கட்டிக்காக்க நினைப்போரே!!!
இழிவும்‌ அவலமும்‌ நிறைந்த இச்சமுதாயம்‌ மாறுதலுக்கு உட்பட்டது என்பதைப்‌ புரிந்து கொள்ளாததுதான்‌ காரணமே இவையெல்லாம்.
இதுபோன்ற முற்போக்கு வேடம் போடுபவர்கள் இம்மாறுதலுக்கான சக்திகளிடம்‌ நம்பிக்கை கொள்ளாதது தான்‌ காரணம்‌.
இம்மாறுதலுக்கான போராட்டத்தில்‌ இணைந்து கொண்டால்‌ உள்ளதும்‌ போய்விடுமோ என்ற அச்சம்தான்‌ காரணம்‌.
அதனால்தான்‌ "இனிக்காமல்‌ இருந்‌தாலும்‌ கசக்காமல்‌ இருக்கிறதே, அது போதும்‌” என்று உள்ளவற்றிலே வாழ கற்றுக் கொண்டு நிறைவடைகிறார்கள்‌. கசந்தாலும் அந்த கசப்பை ஏற்று வாழும் நிலையில் உள்ள வாழ்க்கையைக்‌ காபாற்றிக்‌ கொள்வது இவர்களுக்கு நியாயமாகலாம்‌. ஆனால்‌ கசப்பைத்தவிர வேறு எதையுமே ஆறியாதவர்கள்‌ என்ன செய்வார்கள்‌?.
இழப்பதற்கு ஏதுமற்றவர்களுக்கு வெல்‌வதற்குரிய உலகத்தைக்‌ காட்டுவதல்லவா உண்மையான கம்யூனிஸ்டின் பணி!!!
ஆனால் முதலாளித்துவ தொண்டர்களா வலம் வரும் பல்வேறு பெயர்களில் இயங்கும் முற்போக்கு வியாதிகள் என்ன செய்துக் கொண்டுள்ளனர்????
.
ஆளும் வர்க்க ஊதுகுழலாய் உள்ளவர்கள் பற்றி புரிந்துக் கொள்ளதான் தோழர்களே.
இந்த கட்டுரையை வாசிக்க கீழ்காணும் இணைப்பில் உள்ளன

கம்யூனிஸ்ட்கள் யார் அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதும் அவர்களுக் கான பணி என்ன என்பதனையும் மார்க்சிய ஆசான்கள் தெள்ளத் தெளிவாக நம்முன் வைத்து சென்றுள்ளனர். அவர்களின் வழிகாட்டு தலை ஏற்பதும் அதனை பின்பற்றி நம் நாட்டில் உள்ள சுரண்டல்முறைக்கு முடிவு கட்டுவதே இங்குள்ள கம்யூனிஸ்டு களின் பணி அவைதான் கம்யூனிஸ்டு களின் நோக்கம்.

பொது அறிவியலான இயற்பியல், வேதியல் ஏன் இன்று தோன்றியுள்ள AI தொழிற்நுட்பமும் உலகம் முழுமைக்கும் ஒன்றுதானே அப்படியெனும் பொழுது சமூக அறிவியலான மார்க்சியம் உலகம் தழுவிய ஒற்றைதன்மை வாய்ந்தது தானே? ரசியாவும் சீனாவும் தன்நாட்டின் நிலைமைகேற்ப நடைமுறைபடுத்தி வெற்றி கண்டனர் ஆனால் இன்றுவரை இந்தியா போன்ற நாட்டில் மார்க்சியத்தை பொருத்தி வெற்றி காண்பதிலே குழப்பம். ஆக மார்க்சியம் உலகம் தழுவியதே ஆனால் குறிப்பான தன்மையை அறிந்து பயன்படுத்தும் திறன் உள்ளவர்களால் மட்டுமே சமூக மாற்றம் சாத்தியம். அவையின்றி நாட்டிற்கொரு மார்க்சியம் இல்லை....

ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் சூழலுகேற்ப சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்த போராட்டத்தில் சுரண்டப்படும் வர்க்கத்தை ஓரணியில் திரட்டி எதிரிக்கு எதிராக ஒன்றுபட்டால் மட்டுமே பலம் பொருந்திய எதிரியை வீழ்த்த முடியும்.

நாம் ஒன்றுபட்ட புரட்சிகர கம்யூனிச இயக்கத்தை கட்ட போகிறோம் என்றால் அதற்கான கண்ணோட்டமும் நடைமுறைக்கான வழிமுறையும் மார்க்சியமாகதானே இருக்க வேண்டும்?

பல்வேறு நடைமுறையில் உள்ளவர்கள் என்னவகையான நடைமுறையில் உள்ளனர் அதனை பற்றியும் பரிசீலிப்போம்!

உண்மையில் பொது நோக்கத்தின் அடிப்படையில் ரசிய போல்ஷ்விக் கட்சியாகட்டும் சீன கம்யூனிஸ்ட் கட்சியாகட்டும் புரட்சியை சாதித்து அவை நடைமுறையில் சாதிக்கபட்டவைஅதற்கான கண்ணோட்டமும் தத்துவமும் மார்க்சியம்தான் அல்லவா?

இங்கு கம்யூனிஸ்டுகள் பல்வேறு கட்சிகளாவும், அமைப்புகளாகவும், குழுக்களாகவும் மற்றும் தனிநபர் களாகவும் பிளவுபட்டுள்ளோம்!

1.நாம் ஒவ்வொருவரும் சமூகத்தின் பிரச்சனைகளில் ஏதாவது ஒன்றை முதன்மையானதாகவும் அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதுதான் நமது முதன்மையான பணியாகும் என்று கருதுகிறோம். அதாவது இந்தியா பல தேசங்களைக் கொண்டது. ஆகவே இங்கே தேசியப்பிரச்சனைதான் முதன்மையானது என்பதும்.

2.இந்திய சமூகத்தில் மக்கள் சாதிகளாகப் பிளவுண்டு இருக்கிறார் கள். ஆகவே இங்கே சாதிப்பிரச்சனை தான் முதன்மையானது குறிப்பாக தலித்துகள் தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள், இந்த தலித்துகளின் பிரச்சனைதான் முதன்மையானது என்பதும் இந்தப் பிரச்சனையை தீர்ப்பதுதான் முதன்மையானது என்றும்

3.இவ்வாறு வேறுபலப் பிரச்சனைகளை முதன்மையானது என்று வெவ்வேறு பிரிவினர் கருதி பிரச்சாரம் செய்கிறார் கள். உண்மையில் இப்பிரச்சினைகள் இருக்கதான் செய்கின்றன. ஆனால் இதற்கான காரணங்களையும் அடிப்படைகளையும் சேர்த்தேப் பார்க்க வேண்டும் என்பது மார்க்சியம்.

இந்த சமூக கூட்டம் பல பிரச்சனைகளை சந்தித்துவருகிறது என்பதுதான் உண்மையாகும். அதற்கான காரணம் இன்றைய ஏகாதிபத்தியம் தன் அக்டோபஸ் சுரண்டல் கரங்களால் உலகையையே தனதாதிக்கதால் அடிமைபடுத்தி ஒட்ட சுரண்ட நினைக்கிறது. இந்தியா போன்ற பெரும் உழைப்பு சக்தியையும் நுகர்வோரையும் கொண்டுள்ள நாட்டை ஏகாதிபத்தியம் விட்டுவிடுமா? அவர்களுக்கு சேவகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்கள் ஒற்றை ஆட்சி அதிகாரத்தின் மூலம் பல்தேசியங்களை கொண்ட துணைகண்டத்தை சுரண்ட அடக்கி ஒடுக்கி ஆள்வதற்கு பல்வேறு உத்திகளை கையாள்கிறது. அதில் மத, சாதிய அடையாளங்கள் மற்றும் பிரிவினை பேச பல்வேறு அடையாளங் களை உழைக்கும் மக்கள் மத்தியில் புகுத்தி அவர்கள் ஒன்றுபடாமல் பார்த்துக் கொள்கிறது. உழைக்கும் மக்கள் தவறியும் ஒன்றுபடக்கூடாது இவைதான் ஆளும் வர்க்கதின் நோக்கம். ஆனால் உழைக்கும் வர்க்கம் மொழியால், சாதியால், தேசத்தால் மற்றும் பல்வேறு ஒடுக்குமுறைகளாலும் அடக்குமுறைகளாலும் தினம்தினம் சந்திக்கும் அவலங்களுக்கு தீர்வு ஒடுக்குபவனுக்கு எதிரான போரில் ஒடுக்கபடுவோர் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உதாரணம்தான் ரசிய சீனப் புரட்சியின் படிப்பினைகள். அவர்கள் மார்க்சிய தத்துவத்தை ஏற்றுதான் சாதித்தார்கள்.

மக்கள் சந்திக்கும் பிரச்சனையை தீர்ப்பதற்கு மக்கள் என்ன செய்கிறார் கள்? நீதிமன்றத்தையோ, காவல்துறை யையோ, மாவட்ட ஆட்சித்தலைவரை யோ, அமைச்சர்களையோ அணுகுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். எந்தப் பிரச்சனை என்றாலும் அரசாங்கம் (அமைச்சர்கள்) அல்லது அரசு (அரசு அதிகாரிகள்) இவற்றின் மூலமாகவே பிரச்சனைகளை தீர்க்க முயலுவதை காண்கிறோம். அரசின்றி மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது நடைமுறை உண்மையாகும். இதனை யாராலும் மறுக்க முடியாது. ஆக அரசு எந்த வர்க்கதின் கையில் உள்ளது எந்த வர்க்க நலனில் உள்ளது என்பதனை கணக்கில் கொள்ள வேண்டும் அல்லவா?

ஆகவே பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களை பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு நமக்குத் தேவை புதிய வகையான அரசாகும். அத்தகைய அரசு ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கான சுரண்டல் அற்ற அரசாக இருக்க வேண்டும். அவை சமத்துவத்தையும் முன்வைத்து எல்லா பிரசினைக்கும் தீர்வை முன்வைக்கும் உழைக்கும் பெரும்பான்மை மக்களின் அரசாக.கம்யூனிஸ்டுகள் மார்க்சிய ஆசான்களை உள்வாங்காத ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். அண்மையில் கேட்டதே...

"சமூக ஜனநாயவாதி" என்னும் பதம் விஞ்ஞான வழியில் தவறானது என்று நிலை நாட்டுகையில் எங்கெல்ஸ் இப்பொருள் குறித்து தமது கருத்துக்களைக் கூற நேர்ந்தது. பல்வேறு பொருள் குறித்து, முக்கியமாய் "சர்வதேசப்" பிரச்சனைகள் குறித்து 1870 - 80 ஆம் ஆண்டுகளில் தாம் எழுதிய கட்டுரைகளின் பதிப்பு ஒன்றுக்கு எங்கெல்ஸ் முன்னுரை எழுதினார். இம் முன்னுரை 1894 ஜனவரி 3ஆம் தேதி இடப்பட்டது; அதாவது, அவருடைய மறைவுக்கு ஒன்றரை ஆண்டுகள் முன்னதாய் எழுதப்பட்டது. தனது எல்லா கட்டுரைகளிலும் "சமூக ஜனநாயவாதி" என்று சொல்லாமல் "கம்யூனிஸ்ட்" என்னும் பதத்தை உபயோகித்ததாகவும், அக்காலத்தில் பிரான்சில் புருதோனிய வாதிகளும் ஜெர்மனியில் லஸ்ஸாலியர்களும் (லஸ்ஸாலியர்கள்:- ஜெர்மன் குட்டிமுதலாளித்துவ சோசிலிஸ்ட் ஃபெர்னாண்டு லஸ்ஸாலின் ஆதரவாளர் கள், ஜெர்மன் தொழிலாளர்களது பொதுச் சங்கத்தின் உறுப்பினர்கள். இச்சங்கம் 1863இல் லைப்சிகில் கூட்டப்பட்ட தொழிலாளர் நிறுவனங் களது காங்கிரஸில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் முதலாவது தலைவரே லஸ்ஸால். அதன் வேலைத்திட்டத்தையும் அதன் போர்த்தந்திரத்தின் அடிப்படைக் கூறுகளையும் லஸ்ஸால் வகுத்திட்டார். சங்கத்தின் அரசியல் வேலை திட்டம் அனைத்து மக்கள் வாக்குரிமைக்காகப் போராடவும், அதன் பொருளாதார வேலைத் திட்டம் பிரஷ்ய அரசாங்கத்தின் மானிய உதவி பெற்ற தொழிலாளர் பொருளுற்பத்திக் கழகங்களுக்காக போராடவும் அறைகூவின. லஸ்ஸாலியர் கள் பிஸ்மார்க்கின் பேரரசுவாத கொள்கையை ஆதரித்தனர். மார்க்சும் எங்கெல்சும் லஸ்ஸாலியர்களது தத்துவம், போர்த்தந்திரம், நிறுவன ஒழுங்கமைப்பு கோட்பாடுகள் ஆகியவை ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதப் போக்காக அமைவதாய் வன்மையாக கண்டித்து திரும்பத் திரும்ப விமர்சித்து வந்தனர்) தங்களை சமூக ஜனநாயவாதிகள் என்பதாய் அழைத்துக் கொண்டதே இதற்குக் காரணம் என்றும் எங்கெல்ஸ் இந்த முன்னுரையில் எழுதினார். (அரசும் புரட்சியும் லெனின் பக்கம் 114-115)

ஆரம்பகாலங்களில் சர்வதேச கம்யூனிஸ்டுகள் சமூகஜனநாயக வாதிகள் என்ற பெயரிலேயே இயங்கி வந்தனர். இந்தப் பொயரில் இயங்கிய கம்யூனிஸ்டுகளாகிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புருதோனியவாதி களும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த லஸ்ஸாலியர்களும் தங்களை சமூகஜனநாயகவாதிகள் என்று கூறிக்கொண்டே மக்களுக்கு எதிரான கொள்கை வகுத்து செயல்பட்டதால், சமூகஜனநாயகம் என்ற பெயரை தவிர்த்துவிட்டு தங்களை கம்யூனிஸ்டு கள் என்று சொல்லவேண்டும் என்று கம்யூனிஸ்டு என்ற சொல்லை எங்கெல்ஸ் பயன்படுத்தினார். இந்த வரலாற்றிலிருந்து ஆரம்பகாலங்களி லேயே கம்யூனிச அமைப்புகளுக் குள்ளேயே கம்யூனிசக் கொள்கை களுக்கு எதிரானவர்கள் உருவானார்கள் என்பது தெரியவருகிறது. அவ்வாறு கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இருந்த கம்யூனிசத்திற்கு எதிரானவர்களின் கொள்கைகளை தொடர்ந்து மார்க்ஸ் போன்ற தலைவர்கள் போராடி வீழ்த்தியதன் மூலமே கம்யூனிசக் கொள்கையானது மக்களின் செல்வாக்கை பெற்று வளர்ந்து வெற்றி பெற்றது. கம்யூனிசத்துக்கு எதிரானவர் கள் இப்போதும் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளே இருக்கிறார்கள். மக்களுக்கு எதிரான கொள்கை கொண்டவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கொள்கையையும் அவர்களையும் எதிர்த்துப் போராடவதற்கு மார்க்சிய ஆசான்களைப் போன்ற தலைவர்களும், கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் முன்புபோல் தற்போது இல்லை. ஆகவேதான் தற்போது மார்க்சியத்திக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார் கள். ஆனாலும் முன்பு எங்கெல்ஸ் செய்தது போல் கம்யூனிஸ்டுக் கட்சியின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இங்கே உள்ளது ஒன்று உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சி மற்றவையெல்லாம் போலி கம்யூனிஸ்டு கட்சி என்று அழைக்கலாம். ஒவ்வொரு பிரச்சனையிலும் மார்க்சிய ஆசான்களது போதனைகளை பின்பற்றும் கட்சியே உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சியாகும். புருதோன், லஸ்ஸால், காவுத்ஸ்கி, குருசேவ் போன்றவர்களை பின்பற்றுபவர்கள் போலி கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.

கம்யூனிஸ்டுகள் கற்றறிதல் பற்றி லெனின் கூறுகிறார் முதலில் கம்யூனிஸ்டுகள் அறநெறிப் பிரச்சனை பற்றி பரிசோதிக்க வேண்டும்.

நீங்கள் உங்களை கம்யூனிஸ்டுகளாக பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும் கற்றறிதல் ஒழுங்கு அமைத்தல் ஒன்றுபட செய்தல் போராடுதல் ஆகியவற்றின் மூலம் இளைஞர் கழக உறுப்பினர்கள் தம்மை பயிற்றுக் கொண்டு இளைஞர் கழகத்தை தம் தலையாய் கருதுவோர் எல்லோரையும் பயிற்றுவிக்கும் படியான முறையில் தனது நடைமுறை செயல்பாட்டை ஏற்பாடு செய்து கொள்வதுதான் இளைஞர் கழகத்தின் பணி. எல்லோரையும் கம்யூனிஸ்டுகளை பயிற்றுவிக்க வேண்டும் என்ற இளைஞர்களுக்கு தரப்படும் பயிற்சி கல்வி போதனை ஆகிவிட்டது நோக்கம் எல்லாம் கம்யூனிஸ்ட் அறநெறி ஊட்டுவதாக இருக்க வேண்டும்.

கம்யூனிஸ ஒழுக்கம் என்பதாய் ஒன்று இருக்கிறதா? நிச்சயமாய் இருக்கிறது! நமக்கு என்று ஒரு தனி அறநெறி கிடையாது என்று அடிக்கடி பேசப்படுகிறது. ஒழுக்கநெறி அனைத்தையும் நிராகரிப்பவர்கள் என்பதை கம்யூனிஸ்டகளாகிய நம் மீது முதலாளித்துவ வர்க்கத்தினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள் பிரச்சனையை குழப்புவதற்கான தொழிலாளர் விவசாயிகளில் கண்களில் மண்ணைத் தூவுவதற்கான ஒரு உபாயமே இது. எந்த அர்த்தத்தில் நாம் அறநெறியை ஒழுக்க நெறியை நிராகரிக்கிறோம். முதலாளி வர்க்கத்தினர் அதற்கு அளித்திடும் அந்த அர்த்தத்தில் நிராகரிக்கிறோம். கடவுள் கட்டளைகளை அவர்கள் அறநெறி அடிப்படையாகக் கொள்கிறார்கள் எங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நாம் கூறுகிறோம்.

மனிதனுக்கு புறம்பான வர்க்கத்திற்கு புறம்பான கருத்து இனங்கள் அடிப்படையாய் கொண்ட எந்த ஒழுக்க நெறியும் நாம் நிராகரிக்கிறோம். அது ஏமாற்று வித்தை மாய்மாலம் நிலப்பிரப்புத்துவ முதலாளிகள் நலனை முன்னிட்டு தொழிலாளர்களையும் விவசாயிகளையும் மூடர்களாக்குவதற்கு உபாயம் செய்கிறார்கள். எங்களுடைய ஒழுக்கநெறி பாட்டாளி வர்க்கத்தி னுடைய வர்க்க போராட்டத்தில் நலன்களுக்காக முற்றிலும் கீழ்ப்படிந் தது என்று நாம் கருதுகிறோம்.

எங்கள் ஒழுக்க நெறி பாட்டாளி வர்க்க போராட்டத்தின் ஒழுங்கிலிருந்து உதிக்கிறது பழைய சமுதாயம் எல்லாம் தொழிலாளர் விவசாயின் மீதும் நிலப்பிரப்புகள் முதலாளித்துவவாதிகள் புரிந்த ஒடுக்குமுறையின் அடிப்படையில் அமைந்திருந்தது. நாம் அதை அடியோடு அழிக்கவேண்டி இருக்கிறது, அவர்களை வீழ்த்தவேண்டி இருக்கிறது. ஆனால் இதைசெய்ய, நாம் ஒற்றுமையை உண்டாக்க வேண்டி இருக்கிறது. அது கடவுளால் உண்டாக்கப்பட கூடிய ஒன்று அல்ல. இந்த ஒற்றுமையை தொழிற்சாலைகளால் மட்டும்தான் அளித்திட முடியும். நீண்ட நெடிய உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தால் தான் உண்டாக்க முடியும். இந்த வர்க்கம் உருவான பிறகு வெகுஜன இயக்கம் ஒன்று தோன்றி மிகவும் பலவீனமான ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றியடைந்திருப்பதை நாம் காண்கிறோம். இந்த வெற்றிக்கு வழி செய்தது இந்த பாட்டாளி வர்க்க புரட்சி அனைத்து உலகில் முதலாளித்துவ வர்க்கதினால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறவர்கள் இடையில் ஒற்றுமையும் மற்றும் சிதறுண்டுள்ள விவசாயிகளை தன்னை பின்பற்றி வரசெய்துள்ளது. சுரண்ட லாளர்களின் எல்லா தாக்குதலையும் சமாளித்து நிற்பது திடமான இச்சக்தியை பாட்டாளி வர்க்கம் தன் அணியில் அரவணைத்து வர்க்க சமூகத்தில் இன்று சிதறுண்டுள்ள உழைப்பாளிகள் வெகுஜனங்கள் ஒன்றுபடவும் தமது அணியில் ஒன்று திரட்டி கொள்ளவும் கம்யூனிச சமுதாயத்தை முடிவாய் பாதுகாத்துக் கொள்ளவும், முடிவாய் உறுதிப் பெரும்படியும் செய்ய, முடிவாய் பாட்டாளி வர்க்க கட்சி துணை புரிய முடியும். எனவேதான் மனித சமுதாயத்திற்கு மேலானது எந்த ஒழுக்க நெறி என்பதாய் நமக்கு ஏதுமில்லை என்று கூறுகிறோம்.

நமது ஒழுக்க நெறியானது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தி னுடைய நலன்களுக்கு கீழ்ப்பட்டதாகும் இந்த வர்க்க போராட்டம் எதில் அடங்கி உள்ளது? இன்றைய ஏகாதிபத்தியத்தை வீழ்த்துதல் வர்க்கத்தை ஒழித்தல் இதில் அடக்குவது. வர்க்கங்கள் என்பவை யாவை சமுதாயத்தில் ஒரு பிரிவு மற்றொரு பிரிவின் உழைப்பை அபகரித்துக் கொள்ள வழி செய்வது இங்குள்ள ஒழுங்கு. சமுதாயத்தின் ஒரு பிரிவு எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளுமாறு அந்த வர்க்கதின் ஒழுங்காக இருக்க காண்கிறோம். சமுதாயத்தின் இந்த ஒருபிரிவை ஒழித்துக் கட்ட வேண்டிய தேவை இன்னொரு பிரிவுக்கு உள்ளது. ஜாரை விரட்டுவது கடினமாய் இருக்கவில்லை ஒரு சில நாட்களை தேவைப்பட்டன. நிலப்பிரப்புகளை விரட்டுவது அதிக கடினமாய் இருக்க வில்லை ஒரு சில மாதங்களில் இதில் செயல்பட்டுவிட்டது. முதலாளிகளை விரட்டுவதும் அதிக கடினமாக இருக்கவில்லை. ஆனால் வர்க்கங்களை ஒழித்தல் இதை யெல்லாம் விட சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் கடினமானதாகும்.வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் வடிவங்கள் மட்டுமேமாறி இருக்கின்றன. பழைய சுரண்டலாளர்கள் திரும்பி வந்து விடாப்படி தடுப்பதற்காக அறிவொளி இல்லாத விவசாயிகள் வெகுஜனங் களை ஒரே கூட்டணியாய் ஒன்று படுத்துவதற்காக நடைபெறும் வர்க்கப் போராட்டம் இது. தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு எல்லா நலன்களையும் கீழ்பட செய்வது நமது பணி. நமது கம்யூனிஸ்டுகளின் ஒழுக்க நெறியும் இப்பணிக்கு கீழ்ப்பட்டது தான். பழைய சுரண்டல் சமுதாயத்தை அழிக்கவும் ஒரு புதிய கம்யூனிஸ்ட் சமுதாயத்தை கட்டி அமைத்திடவும் பாட்டாளி வர்க்கத்தை மையமாகக் கொண்டு உழைப்பாளி மக்கள் அனைவரையும் ஒன்றுபட செய்யவும் உதவுவது ஒழுக்கநெறி என்று கூறுகிறோம். இந்தப் போராட்டத்திற்கு உதவி புரியும் உழைப்பாளி மக்களை எல்லாவித சுரண்டலையும் எதிர்த்து அற்ப தனியார் சொத்துரிமை அவற்றின் எதிர்த போராட்டம் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டமாகும்…

இல்லையேல் பழைய சமூக ஒழுங்காக கொள்ளையடி அல்லது கொள்ளைக்கு இலக்காகு அனைவருக்கும் வேலை செய் அல்லது அனிவரையும் உனக்கு வேலை செய்யும்படி வை, அடிமை உடைமையாளனாய் இரு அல்லது அடிமையாக இரு. இந்த விதி தான் பழைய சமுதாயத்துக்கு அடிப்படையாய் இருந்தது. ஒன்று நீ அடிமை உடைமையாளன் அல்லது அடிமை இல்லையே சிறு உடைமையாளன் சிறு அதிகாரி அல்லது அறிவுத்துறையாளன் அதாவது சுருங்க கூரின் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்து ஏனையோர் பற்றியும் கவலைப்படாத தன்நல மனப்பான்மை கொண்டோர் கம்யூனிஸ்டாக இருக்க முடியாது. அதிகார வர்க்கத்தின் முன் அடிபணிந்து தன் வாழ்க்கை காப்பற்றிக் கொள்ள அடிமை சேவகம் செய்ய நினைப்போர் எப்படி கம்யூனிஸ்டாக இருக்க முடியும். சுரண்டலாளர்களுக்கு எதிரான உணர்வு பூர்வமான போராட்டத்தின் மூலமும் கம்யூனிஸ்ட்டுகள் பெறும் ஒழுக்க நெறி இச்சமூகத்தில் பேசும் ஒழுக்கநெறியிலிருந்து வேறானது. அவை சுரண்டலை ஒழித்து சமத்துவத்தை பேசும் மனித சமூக உயர்ந்த ஒழுக்க நெறியான கம்யூனிச ஒழுக்க நெறியாகும். இங்கே எழுத பயன்பட்ட கட்டுரை (இளைஞர் கழகங்கனின் பணிகள் அக்டோபர் 1920 லெனின் ஆற்றிய உரைகளிலிருந்து).

மேலும்

சுய விமர்சனம் செய்து கொள்வதன் நோக்கம், நமது ஐக்கியத்தை வலுப் படுத்து வதற்கேயாகும். எதார்த்தமான சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடும் அவசியம் பற்றி தலைவர் மாவோவின் வழிகாட்டுதல்களை நாம் கடைபிடிப்பது மிக முக்கியமாகும்.

சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளும் பொய் பேசுபவர்கள் இருந்திருக்கிறார் கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாபெரும் புரட்சிக்குத் தலைமை தாங்கிய கட்சிக்குள்ளேயே பொய் பேசுபவர்கள் இருந்திருக்கிறார் கள் என்றால் இந்தியாவில் புரட்சியை நோக்கி ஓர் அடிகூட எடுத்துவைக்காத கம்யூனிச அமைப்பிற்குள்ளும் பொய் பேசுபவர்கள் இருப்பார்கள் அல்லவா? அப்படி பொய் பேசுபவர்கள் கம்யூனிய அமைப்பிற்குள் இருந்தால், அவர்கள் தங்களது குறைகளை மாற்றிக்கொள்ள வில்லை என்றால் அந்த அமைப்பு கம்யூனிச அமைப்பாக வளர்வதற்கு அது தடையாகவே இருக்கும்.

இங்குள்ள கம்யூனிச அமைப்பு களிலுள்ள சில தலைவர்களே தங்களது சுயநலத்துக்காகப் பல பொய்களைப் பேசிக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம்.

உண்மையை புறநிலை எதார்த்தமான சான்றுகளிலிருந்துதான் நாம் தேட வேண்டும். இதற்கு மாறாக அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதற்காகவும் கட்சியின் தலைவர் சொன்னார் என்பதற்காகவும், தலைவர் உண்மையைத்தான் சொல்வார் என்ற நம்பிக்கையிலிருந்தும் தலைவர் சொல்வது உண்மை என்று நம்பக் கூடாது. தலைவரே சொன்னாலும் அதற்குத் தேவையான புறநிலைச் சான்றின் அடிப்படையிலேயே உண்மையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு விசயம் உண்மையாகவே

இருந்தாலும் சான்றுகள் இல்லை என்றால் அதனை ஆய்வுக்குரியதாகவே கருத வேண்டும், அதற்காக நாம் ஆய்வு செய்து சான்றுகளை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு மாறாக சான்றுகள் இல்லை என்றால் அதனை உண்மை என்று ஏற்றுக்கொள்ளக் கூடாது. சரியான சான்றுகளுடன் கட்சிக்குள் ஒருவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொண்டு சுயவிமர்சனம் செய்ய வேண்டும். அதன் மூலமே கட்சிக்குள் ஒற்றுமை வளரும். இதற்கு மாறாக ஒருவர் கட்சித் தலைவர் மீது விமர்சனம் வைத்துவிட்டால் அவர் கட்சிக்கே எதிரான துரோகி என்று முத்திரை குத்தி விரட்டியடித்துவிட்டு தலைமையானது சுயவிர்சனம் செய்து கொள்ள மறுத்தால் அந்தக் கட்சிக்குள் நிச்சயமாக ஒற்றுமை குழைந்து பிளவு ஏற்படும். இந்தியாலுள்ள கம்யூனிச அமைப்புத் தலைவர்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ள மறுத்ததாலேயே அதாவது அவர்களது குறைகளை களைய மறுத்ததாலே கம்யூனிச அமைப்பானது பல சிறு குழுக்களாக சிதைவுண்டு போனது. ஆகவே கம்யூனிஸ்டுகள் சான்றுகளிலிருந்து உண்மையை கண்டு பிடிக்க வேண்டும். உண்மையின் அடிப்படையிலேயே விமர்சனம் சுயவிமர்சனத்தை கையாள வேண்டும். இதுவே மாவோ நமக்குப் போதிக்கும் போதனையாகும். இதனை பின்பற்றுபவரே கம்யூனிஸ்டு ஆவார். இதனை பின்பற்றுகின்ற அமைப்பே கம்யூனிச அமைப்பாகும்.

தலைகணம் பிடித்தவர்களாக இல்லாமல் தன்னடக்கம் உள்ளவர்களாக மாற வேண்டும். அப்போதுதான் உழைக்கும் மக்கள் கம்யூனிஸ்டுகளை மதிப்பார்கள், கம்யூனிஸ்டுக் கட்சியையும் மதித்து அதனை ஏற்றுக்கொள்வார்கள். மேலும் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்து செயல்பட முன்வருவார்கள். இல்லை யெனில் கம்யூனிச அமைப்புகள் மக்களின் செல்வாக்கை இழந்து கரைந்துவிடும். அதுதான் இந்தியாவில் தற்போது நடந்துகொண்டு இருக்கிறது. அதாவது கம்யூனிச அமைப்புகள் கரைந்துகொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக கட்சியானது பல குழுக்களாகப் பிளவுபட்டு சீரழிந்து விட்டது. ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் தலைமை வழிபாட்டுக்கு பலியாகக் கூடாது என்பதை உணர வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் கம்யூனிசத்தை தெள்ளத்தெளிவாக கற்று தேற வேண்டும் அதற்கு கம்யூனிசம் பற்றி கம்யூனிச ஆசான்களின் ஒவ்வொரு கருத்தாக்கத்தையும் கருத்தூண்றி கற்பதும் அதனை நடைமுறையில் சாதிப்பதும் கம்யூனிஸ்டுகளின் அடிப்படையான பணி அல்லவா?

வர்க்க சமூகத்தில் வர்க்கங்கள் அற்ற பேச்சோ எழுத்தோ செயலோ இல்லை. ஆனால் இங்குள்ள பலரின் செயல்பாடு என்பது ஆளும் வர்க்கத்தின் அடி ஒற்றி செயல்படுவதுதான் தங்களுக்கான விடியலை(விடுதலையை) அவர்களிடம் தேடுவதாகதான் உள்ளது. எதிரி வர்க்கம் எப்படி தன் சுரண்டலை, அடக்கு முறையை, ஒடுக்கு முறையை விட்டுக் கொடுக்கும் இதனை விட்டு விட்டால் அது எப்படி உயிர் வாழும் எதிரியிடம் மண்டியிடுவதுதான் வர்க்க சமரசம்.

வர்க்க எதிரிக்கு எதிராக நிற்பதை விட்டு வர்க்க எதிரி உடன் சமரசம் செய்து கொள்வது இதற்கு தங்களுக்கு ஏற்ற வகையில் மார்க்சிய தத்துவத்தையும் மற்ற தத்துவத்தை ஒன்று இணைத்து குழப்பிக் கொள்வது அல்லது குழுப்புவது எவ்வகையான மார்க்சிய புரிதல் இவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் உள்ள நிலைபாட்டை பரிசீலிப்போம்- திராவிட நாடு திராவிடர்கே என்ற முழக்கம் தொடங்கி இன்றைய திராவிட கட்சிகளின் அரசியல் ஓட்டையாண்டி தனத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் புரிந்துக் கொள்பவர்களுக்கு மட்டுமே வரலாற்று படிப்பினைகளை விளங்கிக் கொள்ள முடியும். அதாவது பிரிட்டிஷ் இந்தியா கட்டியமைக்காத பல பகுதிகளை இந்திய தரகு முதலாளிய அரசானது வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைத்தது மேலும் பெரு முதலாளிகளின் தேவைக்காக இந்தியச் சூழலில் இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களை சுரண்ட ஒற்றை கலவை பண்பாட்டை உருவாக்கி ஒற்றை கலாச்சாரம் என்று பெயர் சூட்டி அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கின்றது. இந்திய கலாச்சாரம் என்பது இல்லாத ஒன்றாகும், இருநூறு ஆண்டுகளுக்கு மேல் இராணுவ பலத்தாலும் சட்ட அடக்குமுறைகளாலும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கும் இந்த இந்தியா.

இதனை எதிர்த்து தேசிய இனங்களில் உள்ள பெரு முதலாளிகள், நிலவுடைமையாளர்கள் தம் கையில் உள்ள அரசு அதிகார துணைக் கொண்டு தமது தேவைகளை முழுமையாக்க மாற்று பண்பாட்டு தளத்தை உருவாக்கி அதில் வடவர்- தென்னவர் மோதலாக, தமிழ்மொழி -வடமொழி மோதலாக, ஆரியர்- திராவிட மோதலாக, இந்தி பேசும் இனம்- ஏனைய மொழிகள் பேசும் இனங்கள் மோதலாக மட்டுமே சித்தரித்து மாற்று பண்பாட்டை முன் வைத்து செயல்பட்டது.

தமிழ் பேசும் பகுதிகளில் பெரு முதலாளிகள், நிலவுடைமையாளர்கள், பணக்கார விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், உதிரி பாட்டாளிகள்… இன்னும் பல வர்க்கத்தினர் வாழும் இடத்தில் வெளியில் இருந்து உருவாக்கப்பட்ட பண்பாட்டு பாதிப்பு அதாவது பழைமையையும் புதுமையையும் கலக்கும் ஒருவகை பண்பாடு….அவற்றில் சில தனிமனித அரசியலில் பங்களிப்பை புரிந்துக் கொள்ள வேண்டும்… அதில் ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருந்தோர் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் அல்லவா?

அதன் வெளிப்பாடே இங்கு கம்யூனிஸ்டுகளையும் பாதித்துள்ள சிலவற்றை பார்ப்போம்.

1.தனிநபர் வழிபாட்டை பூதகரமாக்கி எல்லாவற்றுக்கும் ஓர் உயர் தனிமனிதனை மீட்பராக எவ்வித விமர்சனமின்றி ஏற்று கொள்ளும் மனநிலையை உருவாக்கி தன்னையும் தன்னை பின்பற்றுவோரையும் ஆழ்த்துவது.

2.ஓட்டரசியலின் குறிக்கோள் வெற்றியே அதற்காக, அராஜகம், பொறுக்கிதனம், குறிகோளற்ற வாழ்க்கையை முன்வைத்து செயல்படல்.

3. வார்த்தை ஜாலமாயையில் போலித் தனத்தில் சுகம் காணுதல்.(நிலவுடைமை, முதலாளிய உரிமைகளை காத்துக் கொண்டே, சனநாயகம், சுதந்திரம், சமத்துவம் பேசிய போலித்தனம்).

இவ்வாறானவர்கள் நம் மத்தியில் பெருகிக் கொண்டுள்ளனர்.

மேலும் மாவோ சொன்னவைதான், “நடப்பு நிலைமைகளை பயில்வதைப் புறந்தள்ளுதல், வரலாறு பயில்வதைப் புறந்தள்ளுதல், மார்க்சிய–லெனினியத் தைப் பயன்படுத்துதலை புறந்தள்ளுதல் ஆகியவை அனைத்தும் மோசமான வேலைப் பாணியை விளைவிக்கின்றன. அதன் பரவல், நம்மில் பல தோழர்களுக்கு தீங்கிழைத்துள்ளது”.

உண்மையில் நமது அணிகளில் உள்ள பலதோழர்கள் இந்த வேலைப்பாணியால் தவறிழைக்கிறார்கள் நாட்டுக்கு உள்ளும் வெளியிலும், நாடு, மாகாணம், மாவட்டங்களிலும் குறிப்பான நிலைமை களை முறையாகவும், முழுமையாகவும் ஆய்ந்து பயின்று செயல்பட விரும்புவ தில்லை, மாறாக தங்கள் குறைபாடான அறிவைக் கொண்டும், ”எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது எனவே அப்படித்தான் இருக்க வேண்டும்” என்று கருதியும் உத்தரவுகளை மேற்கொள் கின்றனர். நம்மிடையே பெரிய அளவில் பல தோழர்களிடம் இன்னமும் இந்த அகநிலைவாதப் பாணி நிலவுகிறது அல்லவா?-மாவோ

இன்னும் பின்னர்..

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்