இலக்கு 10 இணைய இதழ் PDF வடிவில்

 இலக்கு 10 இணைய இதழ் இங்கே அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்

தன்னுடைய நாட்டின் சரியான பொருத்தமான முறையில் மாவோ கணித்து சீனப்புரட்சி கையிலெடுத்த அங்கு பின்தங்கிய விவசாய முறையில் பல்வேறு விதமான குறு மன்னர்கள் நிலப்பிரப்புகள் ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிந்து அந்நாட்டில் புரட்சிக்கான வழி முறையை கண்டறிந்தார், அங்கே ஒரு வளர்ந்த பாராளுமன்றமும் தொழில் துறையை இல்லாமையால் அவை புரட்சியை இல்லை என்பது தவறானது ஆகும்.

அப்படியெனில் வியட்நாம் மற்றும் தெற்காசிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் எவ்வகையான புரட்சி அதை தன்னுடைய தேசிய விடுதலைக்கான புரட்சி அல்லவோ அதேபோல் சில நாடுகளில் காலனி ஒடுக்கு முறையில் ஆட்சி அதிகாரத்தை தூக்கி எறிந்த Cuba போன்ற புரட்சி சோசலிச புரட்சி அல்ல சோசலிசதிற்க்கு முந்தைய புரட்சியே அவை சோசலிசத்திற்கு வழி வகுத்தது.

இவ்வாறு பல குழப்பங்களின் குவியல்தான் இங்குள்ளது அதை போக்கவே இந்த எழுத்து.

சுயவிமர்சனமானது ஒரே நாளில் செய்து முடிக்கக் கூடிய ஒரு விஷயம் அல்ல அது கட்சிக்குள்ளேயே மேலிருந்து கீழ் வரை மேற்கொள்ள வேண்டிய ஒரு


இயக்கமாகும். அது கட்சி உறுப்பினர்களின் கணிப்பிலும் நடைமுறையிலும் தடையாக நிற்கின்றன தவறான சிந்தனைகளைக் களைவதன் மூலமாகவும் மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை ஒளியில் ஒரு சரியான கொள்கை சரியான கணிப்பு ஆகிவற்றை வரையறுப்பது மூலமாகவும் இவை பெரிய கல்வி நடவடிக்கையாகும். எனவே சுயவிமர்சனம் என்பது ஒரு போராட்டமாகும் வெளியில் நடக்கின்ற வர்க்கப் போராட்டத்தை பிரதிபலிக்கின்ற கட்சியின் உள் போராட்டமாகும்.

கங்கை ஆற்றில் ஒரு மூழ்கு மூழ்கிய உடனே எவ்வாறு ஒருவன் தன்னை முழுமையாக சுத்தப்படுத்திக் கொள்ள முடியாதோ அது போல கடந்த கால தவறுகளை எண்ணி வருத்தப்பட்ட உடனேயே கட்சியினுள் இன்று தடையாக உள்ள தவறான கணிப்பை நம்மால் கலைந்து விட முடியாது ஒப்பு நோக்குகையில் ஒருவன் தன்னுடைய தவறுகளை உணர்வது என்பது எளிதானது ஆனால் ஒவ்வொரு நேரத்திலும் சூழ்நிலையிலும் மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள ஒப்பு நோக்குதல் கஷ்டமானதாகும்.

மாவோ சிந்தனையின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வதும் எவ்வித அவசியமற்ற பயங்களை சந்தேகங்களை ஆகியவை போலிமதிப்பு உணர்வும் இல்லாமல் புரட்சியை வெற்றிகரமாக ஆக்குவதற்கு தேவையான படிப்பினை பெறுவது முதன்மையான கடமையாக உள்ளன.

இந்தக் கடமையை வெற்றிகரமாக செய்து முடிப்பது மூலம் மட்டுமே கட்சிக்கு அதனை என்று நெருங்கி தாக்கிக் கொண்டிருக்கும் தத்துவார்த்த தவறுகள் குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து அது விடுபட்டு வெளி வருவதற்கும் நாம் உதவி செய்ய முடியும் ஸ்தாபனத்தை பற்றிய லெனின்ய அடிப்படைகளுக்கு உட்பட்டு ஒரு பலமான கட்சியை கட்டவும் புரட்சிக்கான முன்னெடுத்துச் செல்ல சரியான கட்சியை நோக்கி நடை போட வேண்டாமா?.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூன்று வழிகளுமே நட்டாற்றில் விடுபட்டது போல் அல்லவா உள்ளது? தேர்தல் பாதையும், குறுங்குழுவாத பாதையும் ஒரு புரட்சிக்கான வழியல்ல என்பதை அவரவர்கள் சார்ந்து நிற்க்கும் அமைப்பிலிருந்து புரிந்துக் கொள்ளவில்லையா? அதற்க்கு லெனினின் பார்வை வேண்டும் அவை நமது நாட்டின் சூழலுகேற்ப்ப பொருத்தி செயல்முறையாக்க வேண்டாமோ தோழர்களே?

கட்சி என்பது ஒரு போராடும் அமைப்பு, முன்னணிப் படையானது வெகுஜன திரளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அது தோல்வி அடைய நேரிடும். மாவோ தலைமையில் நடந்த பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சியின் போது மாவோ சிந்தனைகளுடன் மக்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டார்கள் அதாவது அதிகாரத்தை கைப்பற்றிய பிறகும்கூட நாமும் மக்கள் திரள் வழியில் தான் செல்ல வேண்டும் .

அவரே சொல்கிறார் நான் சங்காய் நகரத்தில் இருந்தேன் அப்போது நாங்கள் பல கூட்டங்களை நடத்தினோம் நாங்கள் சிறிய எண்ணிக்கையான முன்னணி படையினர் அல்லது ஊழியர்களை திரட்டினோம். நாங்கள் போராட்டத்தின்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென தோன்றி துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்வோம்.கூட்டம் துவக்கத்தில் கொஞ்சம் பேர் மக்கள் இருப்பார்கள் ஆனால் இறுதியில் சிரிப்பது சிறிய முன்னணி படை தான் ஆளும் வர்க்கம் அடக்க முயன்றபோது நாங்கள் சிறு குழுக்களைஅமைத்து அவர்களை தீர்த்துக்கட்டினோம் இவை கொஞ்சம் காலம் தான் செயல்பட்டது எங்களுக்கு பின்னடைவுதான் கொடுத்தது (1927 காங்செங் தலைமையில் ஏற்பட்ட தோல்வியை குறிப்பிடுகிறார்).

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்