முதல் உலகயுத்தத்திற்கு பிறகு கடும் பொருளாதாரப் பேரழிவுக்கு உள்ளான ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்திற்கான நோக்கத்தில் பொருளாதரா கடன்வழங்கி தனது கட்டுப்பாட்டுக்க திட்டமான மார்ஸல் திட்டம் செயல் படுத்தப்பட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட சீரழிவு சீரமைக்கப்பட்டு கீன்சியம் செயல்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் தோழா் ஸ்டாலின் அந்நாட்டு அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கையை பற்றி கூறுகையில்:
“தற்போதைய முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கையானது மக்களின் நல்வாழ்வை மேம்படுத்து வதற்கானது அல்ல. மாறாக ஏகபோகங்களுக்காக உற்பத்தியாளா் களிடமிருந்து உச்சப்பட்ச லாபத்தை பிழிந்தெடுப்பதே ஆகும்.”
அவா் மேலும் கூறுகையில் “ஏகபோக மூலதனத்தின் நோக்கம் ஏதேனும் லாபத்தை பெறுவதல்ல. மாறாக உச்சபட்ச லாபத்தை அடைவதே அதன் முதன்மையான நோக்கம். அதுதான் நவீன முதலாளித்துவத்தின் அடிப்படையான பொருளாதார விதியாகும். நவீன முதலாளி த்துவத்தின் அடிப்படை பொருளாதார விதியின் முக்கியமான அம்சங்கள் மற்றும் தேவைகளை கீழ்க்காணும் வகையில் வகைப் படுத்தலாம். சுரண்டலின் மூலமாக அதிக்படியான முதலாளித்துவ லாபத்தை பெறுவது, குறிப்பிட்ட நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வை அழித்து ஏழ்மைக்கு உள்ளாக்குவது, பிற நாடுகளின் மக்களை அடிமைப்படுத்தி கொள்ளையை நிறுவனமாக்குவது, குறிப்பாக பின்தங்கிய நாடுகளை மற்றும் கடைசியாக தேசிய பொருளாதாரத்தைபோர் மற்றும் இராணுவமயமாக்குவது. அவற்றை உச்சபட்ச லாபத்தை பெறுவதற்கு பயன்படுத்துவது” என்றார். ஏகபோக முதலாளித்துவத்தின் இந்த அடிப்படை விதிகளை கீன்சியத்தால் மாற்றி விட முடியாது. அதே வேளையில் “முற்போக்கு முதலாளித்துவத்தின்” துவக்கமாக கீன்சியத்தை பிரதிநித்துவப் படுத்தவும் முடியாது. அது “அழுகிப் போன முதலாளித்துவ அமைப்பின் பிற்போக்கு வடிவமாகும். உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் பொதுநெருக்கடியில் உருவான கீன்சியத்தால் நெருக்கடியை தீா்க்க முடியாது. மாறாக தீவிரப் படுத்தவே செய்தது”. இதுதான் வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மையுமாகும்.
அதே சமயத்தில் முதல் உலகப் போருக்கு யுத்தத்தில் பங்கு கொண்ட அனைத்து ஏகாதிபத்தியங்களும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் போது சோவியத் ரஷ்யாவானது எந்த அந்நிய ஏகாதிபத்தியத்தின் துணையின்றி மற்றும் எந்த நாட்டையும் அடிமைப் படுத்தி எந்தவிதமான சுரண்டலில் கொள்ளையடித்தலில் ஈடுபடாமல் ஒரு சுயேச்சையான தொழிலாளா் விவசாயிகளுக்கான ஒரு வளா்ச்சி பெற்ற சோசலிச சமூகத்தை வெற்றிகரமாக கட்டியமைத்து கொண்டிருந்தது. ஒரு நாடு பிறநாட்டைச் சுரண்டாமலும் தன்னை பிறநாடுகள் சுரண்ட அனுமதிக்காத நிலையில் சுதந்திரமான பொருளாதார வளா்ச்சியை அடையமுடியும் என்று மார்க்ஸியம் முன்வைத்த வரலாற்று வளா்ச்சியை பற்றிய கோட்பாட்டை ரஷ்யாவில் குறிப்பாக செயல்படுத்தி நடைமுறை ரீதியில் மெய்ப்பித்ததை தோழா் ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார்.
“முதலளித்துவ பொருளாதார வளர்ச்சிக்காக முதலாளித்துவம் தேர்ந்தெடுத்த பாதைகளான குறிப்பாக ஒன்று, காலனிகளை கைப்பற்றி மற்றும்கொள்ளையடித்து பொருளாதார வளர்ச்சியை அடைந்த பிரிட்டனைப் போலவோ, இரண்டாவதாக, ஒரு நாட்டை மற்றொரு நாட்டை படைபலத்தால் தோற்கடித்து தோல்வியடைந்த நாட்டின் மீது அபராதம் போட்டு தனது தொழிற் துறையை வளர்த்த ஜெர்மனியைப் போலவோ, மேலும் மூன்றாவதாக ,மூலதனத்தில் பின்தங்கிய நாடுகள் மூலதனத்தில் முன்னேறிய நாடுகள் கடுமையான நிபந்தனையின் அடிப்படையில் கொடுக்கும் கடனைக் கொண்டும் நமது பொருளாதாரத்தை வளர்க்க முடியாது எனவும் , ஏனென்றால் அவை அனைத்தும் பெருவாரியான உழைப்பாளி மக்களை கொள்ளையடிப்பதன் மூலமாகவும் அவர்களைச் சுரண்டுவதன் மூலமாகவும் வளர்ந்து செல்லக் கூடிய பாதை. எல்லா வழிகளும் முதலாளித்துவ தொழிற்துறை அரசுகள் உருவாவதை நோக்கியே செல்கின்றன. “பழைய வழியிலான தொழில்மயமாக்கப் பாதைகள் எதுவும் நமக்கு ஏற்புடையதல்ல என்ற நிலையில் அடிமைத்தனமான நிபந்தனைகள் எதுவுமின்றி புதிய முதலீடுகள் உள்வரவு என்பது கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் சோவியத் அரசு என்ன செய்யும்?
தோழர் ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார்
“சோவியத் அரசாங்கம் ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். வேறு எந்த நாடுகளாலும் பரிசோதிக்கப்படாத பாதை. அந்நிய கடன்களின்றி பெருவீத தொழிற்துறையை வளர்ச்சி அடையச் செய்யும் பாதை. அந்நிய முதலீடுகளின் உள்வரவு அவசியமின்றி நாட்டை தொழில் மயமாக்கும் பாதை. லெனின் தன்னுடைய “மிகச்சிலது ஆனால் சிறந்தது” என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள பாதை. “தொழிலாளர்கள் தங்களின் சமூக உறவுகளில் மட்டுமீறிய செலவினங் களைக் குறைத்து சிறந்த முறையில் சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் விவசாயிகளின் நம்பிக்கையைதக்கவைத்துக்கொண்டுள்ள ஒரு அரசை, தொழிலாளர்கள், விவசாயிகள் மீதான தங்களது தலைமையை தக்கவைத்துக் கொண்டுள்ள ஒரு அரசை உருவாக்குவதற்கு நாம் கட்டாயம் முயற்சிக்க வேண்டும்”. என்று லெனின் கூறுகிறார்.
“நாம் நம்முடைய அரசு இயந்திரத்தை மிக அதிகப்பட்சமான சிக்கனத்திற்கு கொண்டுவர வேண்டும். பொருளாதார வாழ்வில் சாத்தியமான அளவிற்கு அதிகபட்ச சிக்கனத்தை கடைபிடித்து தொழிலாளி வர்க்கம் விவசாயிகள் மீதான தன்னுடைய தலைமையை தக்கவைத்துக் கொள்ள இயலுமானால் நாம் சேமிக்கும் ஒவ்வொரு கோப்பெக்கையும் (ரஷ்ய நாணயம்) நம்முடைய பெருவீத தொழிற்துறை வளர்ச்சிக்கும், மின்மயமாக்கலை மேம்படுத்தவும் பயன்படுத்த முடியும்”.
“இந்த ஒரு பாதையைத்தான் நம் நாடு ஏற்கனவே தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது. நம்முடைய பெருவீத தொழிற்சாலைகள் வளர்ச்சி பெற வேண்டும் என்றாலும் நம் நாடு தன்னை பலம் வாய்ந்த தொழில் வளமிக்க பாட்டாளிவா்க்க அரசாக மலரச்செய்யவேண்டுமானாலும் அது இந்த பாதையில் தான் தொடா்ந்து முன்னேற முடியும்.
“தேசியமயமாக்கப் பட்ட நிலம், தேசியமயமாக்கப் பட்ட தொழிற்துறை தேசியமயமாக்கப் பட்ட போக்குவரத்து, கடன்கள், அந்நிய வா்த்தகத்தில் ஏகபோகம், அரசாங்கத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட உள்நாட்டு வா்த்தகம் இவை அனைத்தும் “உபரி” மூலனதனத் திற்கான புதிய ஆதாரங்களாக உள்ளன. இவற்றை நாம் நாட்டின் தொழிற் வளா்ச்சிக்கு பயன்படுத்த முடியும். இந்த ஆதாரங்களை இதுவரையில் எந்த முதலாளித்துவ அரசும் பெற்றிருக்கவில்லை. பாட்டாளிவா்க்க அரசு ஏற்கனவே இதை பயன்படுத்துவதோடு இது போன்ற புதிய ஆதாரங்களை நமது தொழிற்துறை வளா்ச்சிக்கு பயன் படுத்தியும் வருகிறது. என்பதை நீங்கள் அறிவீா்கள்.
இந்தவழியின் மூலம் நாம் ஏற்கனவே சில வெற்றிகளை ஈட்டியுள்ளோம் என்பது சாதாரண முக்கியத்துவம் உடையது அல்ல. அதனால்தான் முதலாளித்துவ அரசுகளுக்கு எந்த வளா்ச்சி பாதை சாத்தியமற்றதோ “அது” பாட்டாளி வா்க்க அரசுக்கு எவ்வளவுதான் இடா்பாடுகளையும் சோதனைகளையும் உண்டாக்கினாலும் அது முழுவதும் சாத்தியமானதே. அதாவது ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியமைப்பது என்பது பற்றிய பிரச்சினை தேசியப் பொருளாதாரம் முழுவதையும் தழுவியது. அதாவது தொழிற்துறையையும் விவசாயத்தை யும் சரியான முறையில் ஒன்றிணைபது பற்றிய பிரச்சினையாகும். சோசலிச சமூகம் என்பது தொழிற்துறையிலும் விவசாயத் துறையிலும் பங்கு பெற்றள்ள உற்பத்தியாளா்கள் மற்றும் நுகா்வாளா்களின் கூட்டமைப்ப ஆகும். ஆனால் இந்த கூட்டில் தொழிற்துறையுடன் அதற்கு மூலப் பொருள்களையும் உணவையும் கொடுத்து அதனுடைய உற்பத்தி பொருட்களை உள்வாங்கிக் கொள்ளும் விவசாயத்துறையை இணைக்காவி்ட்டால் தொழிற் துறையும் விவசாயமும் ஒரே முழுமையாக மாறாவிட்டால் எந்தவிதமான சோசலிசத்திற்கும் வாய்ப்பில்லை.
தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறையை விவசாயத்துடன் இணைப்பதன் மூலம் கிராமப் புறங்களில் கூட்டுறவு நிறுவனங்களை அமைப்பதன் மூலமும் விவசாய பொருளா தாரத்தை சோவியத் வளா்ச்சி முறையின் பொதுவான அமைப்பு முறைக்குள் கொண்டு வருவதன் மூலம் சோவியத்துக்களை புத்துணா்ச்சி செய்வதன் மூலம் புதிய பண்பாட்டை உருவாக்கவதன் மூலமும் ஒரு புதிய சமூகவாழ்வை மலரச்செய்வதன் மூலமும் நாம் ஏற்கனவே சோசலிசத்தை கட்டியமைத்து வருகிறோம். சந்தேமில்லாமல் இந்த வழியில் நாம் ஏராளமான இடா்பாடுகளை முகங்கொள்ள வேண்டியதிருக்கும். எண்ணிலடங்கா சோதனைகளைின் வழியே நாம் செல்ல வேண்டியதிருக்கும்”.
அவா் கூறியது போலவே அனைத்து சோதனைகளையும் மற்றும் இடா்பாடு களையும் கடந்து ஏகாதிபத்திய வாதிகள் வியக்கவும் அச்சம் கொள்ளும் அளவுக்கு அமெரிக்காவை விட பொருளாதாரத்தில் பன்மடங்கு வளா்ச்சி பெற்ற சமூகமாக ரஷ்யா மாற்றம் கண்டது இந்த உலகத்தில் .உழைப்பாளி மக்களின் சொர்க்க பூமியாக ரஷ்யா மாற்றம் கண்டது.
இரண்டாம் உலக யுத்தமும் பாசிசத்தின் வீழ்ச்சியும்.
ஏகாதிபத்திய நாடுகளில் 1929-ம் வருட பிற்பகுதியில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடி 1933-ம் முடிவுவரையில் நீடித்தது. அதன் பிறகு முதலாளித்துவ உற்பத்தி தேக்கமுற ஆரம்பித்து. சிறிது காலம் தேங்கி நின்ற பிறகு இயந்திரத் தொழில்கள் ஓரளவு உயிர் பெற்று தலைதூக்கின. ஆனால் தலைதூக்கி எழுந்த இந்தப் போக்கு முதலாளித்துவ பொருளுற்பத்தியில் உள்ள முரண்பாட்டின் காரணமாக 1929-ம் வருடத்திய பொருளுற்பத்தி அளவைக்கூட எட்டிப்பிடிக்க முடியாமல் திண்டாடின. அந்த அளவில் நூற்றுக்கு 93 அல்லது 96 பங்கைத்தான் 1937ம் வருடத்தில் அவற்றால் எட்டிப்பிடிக்க முடிந்தது. இந்த நிலைமையில் 1937 ம் வருட பிற்பகுதியில் மீண்டும் ஒரு புதிய பொருளாதார நெருக்கடி ஆரம்ப மாகிவிட்டது. இது பிரதானமாக முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் பாதித்தது. 1937-ம் வருட முடிவிற்குள் அமெரிக்காவில் வேலை இல்லாமல் திண்டாடியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரித்தது. கிரேட் பிரிட்டன் மற்றும் பாசிசம் கட்டியமைக்கப் பட்ட நாடுகளிலும் வேலை இல்லாத திண்டாட்டம் வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.
இவ்விதம் முதல் உலகயுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட நாசத்திலிருந்து மீள்வதற்குள் முதலாளித்துவ நாடுகள் புதிய பொருளாதார நெருக்கடியால் சூழப்பட்டன. இதன் விளைவாக முதலாளிகளுக்கும் பாட்டாளிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரப்பட்டது போலவே ஏகாதிபத்திய நாடுகளுக் கிடையிலான முரண்பாடுகளும் தீவிரமாயின. இதன் காரணமாக மிகவும் பலவீனமான நாடுகளில் சுரண்டுவதன் மூலம் தங்களது உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியால்ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுசெய்து கொள்ளும் பொருட்டு ஆக்கிரமிப்புகாரர்களின் பாசிச அரசுகள் ஜப்பான், மற்றும் ஜெர்மனி முன்னைவிட மும்மடங்கு தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டன முதல் உலக யுத்தத்தில் சகயுத்தக் கூட்டாளிகளான பிரிட்டனாலும் பிரான்சாலும் வஞ்சிக்கப்பட்டதால் இந்த தடவை பாசிச இத்தாலியானது ஜெர்மனி, ஜப்பான் ஆகிய சகஅயோக்கிய பாசிச ஆக்கிரமிப் பாளர்களுடன் சேர்ந்து கொண்டது.
உலகத்தையே ஆரிய இனம் ஆளவேண்டும் என்று இனவாதம் பேசிய ஹிட்லருக்கு “40 நாடுகளில் இத்தாலிய ரோமசாம்ராஜ்யத்தை அமைப்பேன்” என்று கூறிய முசோலினியுடனும் “ஆசியா முழுவதும் நாங்கள்தான் ஆட்சி செய்வோம்” என்ற ஜப்பானிய பாசிஸ்டுகளுடன் உலகச்சந்தையை பங்குபோடுவதற்கு நடக்கும் யுத்தத்தில் கூட்டணி சேர எந்த ஆரிய இனவெறியும் அவனை தடுக்க வில்லை. அதுபோல “உலகத்தில் உன்னத இனம் ஆரியஇனம்தான்” “ஆரியா்களாகிய நாங்கள்தான் உலகத்தை ஆள்வோம்” என்று கூறிய ஹிட்லரோடு கூட்டணி சேர ஜப்பான் நிதிமூலதனக் கும்பலுக்கோ இத்தாலிய நிதிமூலதனக் கும்பலுக்கோ எந்த தயக்கமும்இல்லை. யுத்தத்தில் ஈடுபடும் அந்தந்த நாட்டு நிதிமூலதனக் கும்பலின் நலனுக்குத்தான் யுத்தம் நடக்கிறது என்று யுத்தத்தில் பங்குபெற்ற அனைத்து ஏகாதிபத்தியவாதிகளுக்கும் காலனிய ஆதிக்கவாதிகளுக்கும் தெரியும். அப்பாவி மக்களுக்குத்தான் தெரியாது. அவா்கள்தான் இனவெறிக்கும் மதவெறிக்கும் மற்றும் தேசிய வெறிக்கும் பலிகடா ஆகிறார்கள் மற்றும் ஆக்கப்படுகிறார்கள்.
இந்த இடத்தில் பாசிச சித்தாந்தமானது பச்சோந்தி தனத்தை கொண்டது என்பது பற்றி தோழா் டோக்ளியாட்டி கூறியதை நினைவு கொள்வது சரியாக இருக்கும்.
அவா் கூறுகிறார்…“பாசிச சித்தாந்த மானது பல்வேறு கதம்பக் கூறுகளை தன்னுள் கொண்டுள்ளது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சித்தாந்தம் எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள இது உதவுகிறது.
மேலும் உழைக்கும் வெகுஜன பகுதியினா் மீது சா்வாதிகாரத்தை திணிப்பதற்கான போராட்டத்தில் பலதரப்பட்ட கோஷ்டிகளை இணைப்பதற்கும் இதன்பொருட்டு ஒரு பரந்த இயக்கத்தை உருவாக்குவதற்கும் இது பயன்படுகிறது. பாசிச சித்தாந்தம் இத்தகைய சக்திகளை பிணைப் பதற்கான கருவியாக அமைந்துள்ளது. இந்த சித்தாந்த்தின் ஒரு பகுதி தேசியவாத பகுதி. நேரடியாகவே முதலாளித்துவ வா்க்கத்திற்கு தொண்டு செய்கிறது. மற்றொரு பகுதி பிணைப்பாக செயல்படுகிறது. பாசிச சித்தாந்தம் மிக உறுதியான, முழுமையான ஒரே சீரான சித்தாந்தம் என்று கருதும் போக்கிற்கு எதிராக உங்களை எச்சரிக்கிறேன்.
பச்சோந்தியைப் போல தோற்றமளிக்க கூடிய பாசிச சித்தாந்தத்தை விட வேறெந்த சித்தாந்தமும் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கூறி பாசிசம்“ எய்த விரும்பும் குறிக்கோள்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பாசிச சித்தாந்தத்தை மதிப்பிடாதீா்கள்” என்றார்.
1935-ம் வருடத்தில் இத்தாலி பாசிஸ்டுகளுக்கு சகஜமாகிவிட்ட அதாவது வழக்கப்படி யுத்தப்பிரகடணம் செய்யாமல் கொள்ளைக்காரனைப் போல் அபிசீனியாவைத் தாக்கி அடிமைப்படுத்தியது. பாசிஸ்டு ஜெர்மனி ஏகாதிபத்தியங்களால் அதன்மீது திணிக்கப்பட்ட வெர்சைல்ஸ் ஒப்பந்தந்தை தன்னிச்சையாக கிழித்தெறிந்தது. 1936-ம் வருடத்தில் ஜப்பான் பாசிஸ்டு இராணுவ வெறியர்கள் சீனாவின் பீக்கிங் மற்றும் ஷாங்காய் நகரத்தை கைப்பற்றினர். இதன் மூலமாக சீனாவில் மறைமுகமாக காலனி ஆதிக்கம் செய்து வந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸிற்கு பெருத்த அடியைக் கொடுத்தனர். ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு வசதியாக இத்தாலி, ஜப்பான், மற்றும் ஜெர்மனி முதல் உலகயுத்தத்திற்கு பின் யுத்தத்தில்பங்கு பெற்ற அனைத்து நாடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேறியது.
கீன்சிய பொருளாதாரத்தை கடைபிடித்து ஏராளமாக யுத்த தளவாடங்களை செய்து குவித்தன. . படைகளை குவித்தது. உற்பத்தி இராணுவத்தை நோக்கியே இருந்தது. ஐரோப்பாவின் அரசியல் பூகோள படத்தை பலவந்தமாக திருத்துவதற்கு ஒரு திட்டத்தை தயாரித்தது.
1939ல் ஜெர்மனியானது முதலில் ஆஸ்திரியாவையும் பின் செக்கோஸ்லோவேகியாவையும் அதன் பின் போலந்தையும் பிடித்தனா். . இன்னொரு ஏகாதிபத்திய யுத்தம் உண்மையிலேயே ஆரம்பித்து விட்டது என்பதையே இவையனைத்தும் காட்டியது. யுத்தபிரகடணம் எதுவும் இல்லாமல் பாசிஸ்டுகளால் யுத்தம் துவங்கப்பட்டது. இந்த யுத்தமானது ஆங்கில, பிரெஞ்சு, அமெரிக்க முதலாளித்துவ நலன்களுக்கு விரோதமாகவே துவங்கப்பட்டது என்பது விளங்கும். அதாவது முதல்உலக யுத்தத்தால் பங்குபோடப்பட்ட உலகச்சந்தையை மறுபங்கீடு செய்வதே நோக்கம். ஏனெனில் “ஜனநாயக நாடுகள்” என்று கூறப்பட்ட தேசங்களுக்கு நஷ்டமும், ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்கு லாபமும் ஏற்படக்கூடிய வகையில் உலகத்தை புதிய முறையில் திருத்தி பங்கிடுவதும், செல்வாக்கு மண்டலங்களை திருத்தி அமைப்பதுமே இந்த யுத்தத்தின் லட்சியம்.
கீன்சியபொருளாதாரம் பொருளாதார நெருக்கடியை தீர்த்து சுபிட்சத்தை கொண்டுவரும் என்று ஏகாதிபத்திய பொருளாதார வல்லுனர்களால் பிரபலப்படுத்தப்பட்ட அக்கொள்கையானது அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளில் மேலும் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி சந்தையை மறுபங்கீடு செய்வதற்காக அந்நாடுகளை இரண்டாம் உலகயுத்தத்தில் கொண்டு போய் நிறுத்தியது.
பாசிசநாடுகளின் நடவடிக்கைகளை ஆரம்பத்தில் ”ஜனநாயக நாடுகள்” என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா , பிரிட்டன் மற்றும் பிரான்சு வரவேற்றன. அது முதலாளித்துவ நெருக்கடியை தீர்க்கும் அருமருந்து என்றுதான் பார்த்தன.
வெளிப்படையாகவே கம்யூனிசம்தான் எதிரி, சோவியத் யூனியன்தான் எதிரி , அதை ஒழித்தே தீருவேன் என்று வெளிப்படையாகவே ஹிட்லர் அறிவித்திருந்ததால் அமெரிக்காவும் வெளிப்படையாகவே கம்யூனிசம் முதன்மையாக ஒழித்துக் கட்டப்படவேண்டிய எதிரிதான் என்பதை அமெரிக்காவும் அறிவித்திருந்தது. அனைத்து எகாதிபத்தியங்களும் ஹிட்லர் சோவியத் மீது படையெடுத்து சோசலிசத்தை அழிக்கட்டும் என காத்திருந்தனர்.
அவர்கள் பாசிசத்தைவிட அதிகமாக ஐரோப்பிய தொழிலாளர் வர்க்க இயக்கத்தையும் ஆசியாவின் தேசிய விடுதலை இயக்கங்களையும் மற்றும் சோவியத் ரஷ்யாவிலுள்ள பாட்டாளி வா்க்க சா்வாதிகாரத்தை கண்டுதான் மிகுதியாக பயந்தன. சீனத்தில் போல்ஸ்விக் முறையில் கட்சி கம்யூனிஸ்டு கட்சிகட்டப்பட்டு நிலபிரபுத்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆயதம்தாங்கிய போராட்டம் தீவிரமாக நடந்து வந்தது. அதனால்தான் இந்த “அபாயகரமான இயக்கங்களை” எதிர்த்து தணிப்பதற்கு ஏற்ற “அபூர்வமான மருந்து” என பாசிசத்தைப் அந்த “ஜனநாயக நாடுகள்” கருதின.
ஆனால் அவர்கள் கருத்துக்கு மாறாக ஹிட்லர் பெல்ஜியத்தையும் ஹாலந்தையும் பிரான்சையும் வெகுவிரைவாக தாக்கி அடிமை படுத்தினான். அதன் பிறகுதான் அதுவரை அச்சுநாடுகளின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன் தன்மீது ஹிட்லர் படையெடுத்து அழிப்பான் என்று பயந்தே பிரிட்டன் ஜெர்மன் மீது யுத்தபிரகடனம் செய்தது. அமெரிக்காவின் ஒத்துழைப்பை தேடிச் சென்றது. வாய்ப்பை எதிர்பார்த்து இருந்த ஆயுதவிற்பனைக்காகவும் காலனிய மறுபங்கீடு யுத்தத்தில் தான் ஆதாயம் அடைவதற்காகத்தான் பிரிட்டனுடன் அமெரிக்கா சேர்ந்தது.அமெரிக்காவிற்கு அப்போது ஜெர்மனியால் எந்த ஆபத்தும் இல்லை. அது தனது பொருளாதார ஆதாயத்திற்காகவே சந்தையில் மறுபங்கீட்டிற்காகவே பிரிட்டனுடன் இணைந்தது.
பிரிட்டன் முதல் உலகயுத்தத்திற்கு பிறகு பலவீனம் அடையத் துவங்கிஇருந்தது. 1935க்கு பிறகு பிரிட்டனின் ஒருசில காலனிய நாடுகள் பாசிச நாடுகளால் (ஜெர்மன்,இத்தாலி மற்றும் ஜப்பான்) ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக பிரிட்டன் அமெரிக்காவுடன் கூட்டணி சேர விரைந்தது. பாசிசத்தை ஒழிக்க அல்ல. தன்னையும் தனது காலனிகளையும் தற்காத்துக்கொள்ளவே. அன்று அமெரிக்காதான் பலமான பொருளாதாரப் பலத்தைக்கொண்டு முதன்மையான ஆயுத உற்பத்தியாளனாகவும் ஆயுத வியாபாரியாகவும் இருந்தது. முதல் உலக யுத்தத்தில் நேரடியாக பங்கு பெறாமலேயே யுத்தத்தில் ஈடுபட்ட நாடுகளுக்கு கடன் உதவி மற்றும் ஆயுத விற்பனை செய்து மிகுதியாக கொள்ளையடித்து வந்தது.
லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கு அதிக அளவு கடன் கொடுத்து பொருளாதாரத் துறையில் அவைகளை அடிமைப் படுத்தியது. அதாவது நவீனகாலனிய முறையில் அதாவது நேரடி காலனியாதிக்கம் செய்யாமலேயே பொருளாதார ஆதிக்கம் செய்து அந்நாடுகளை சுரண்டிவந்தது. அன்று பொருளாதாரத் துறையிலும் இராணுவத் துறையிலும் பலமான நாடாக அமெரிக்க தான் இருந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள மூலப்பொருள்களையும் உழைப்பையும் கொள்ளையடித்து வந்தது. பல தொழில்களில் முதலீடு செய்துவந்தது நேரடியாக காலனியாதிக்கம் செய்யாமல் மறைமுகமாக தனது கைப்பாவைகளை தரகர்களைக் கொண்டு தனது நிதிமூலதனச் சுரண்டலை நடத்தி வந்தது.. பசிபிக் பிராந்தியத்திலுள்ள பிலிப்பைன்ஸையும் கடன்கொடுத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 1940களிலிலேயே அதை தனது படைநிறுத்தும் தளமாக மாற்றியது.
தனது நேரடி காலனிய ஆதிக்கம் இல்லாமலேயே அந்த நாடுகளை ஒட்டச்சுரண்டி வந்தது. பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி விட்டால் அந்த நாட்டை அரசியல் ரீதியாக அடிமைப் படுத்தி விடலாம் என்ற அடிப்படை உண்மையை தனது பொருளாதார நடவடிக்கைகளின் வழியே அறிந்து கொண்டது .
பிரிட்டன் தனது காலனிகளை இழந்து வருவதையும் அனைத்து காலனிய நாடுகளிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் பலமாக நடப்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஏனைய ஏகாதிபத்தியங்களின் காலனிகளையும் புதிய காலனிகளாக மாற்றியமைத்து அதாவது ஏகாதிபத்தியங்களின் நேரடி ஆதிக்கத்தை ஒழித்து மறைமுகமான காலனிய ஆதிக்கத்தை ஏற்படுத்தி அக்காலனிய நாடுகளில் லத்தீன் அமெரிக்கநாடுகளை மாதிரிகளாக கொண்டு தனது சுரண்டலையும் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. மேலும் காலனிகளை மட்டும் அல்ல 2 ஆம் உலகயுத்தத்தில் பொருளாதார பலத்தை இழந்த ஏகாதிபத்திய நாடுகளையும் உள்ளடக்கி உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற பேராசை கொண்டிருந்தது. கூடவே எல்லாவற்றுக்கும் மேலாக ரஷ்யாவின் சோசலிச வளர்ச்சியை முன்மாதிரியாகவும் தூண்டுதலாகக் கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள உழைப்பாளி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வந்த மற்றும் உலகமுதலாளிகள் கூட்டத்திற்கு கடும் அச்சுறுத்தலாக இருக்கிற கம்யூனிசத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற வெறியும் இருந்தது.முதலில் அட்லாண்டிக் சார்ட்டர் என்னும் அரசியல் ஒப்பந்தத்தை தயாரித்தது. பிரிட்டன் அமெரிக்காவிடம் யுத்தக் கூட்டணிக்காக முற்படும் போது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களையும் கம்யூனிசத்தை நோக்கி மக்கள் திரளுவதையும் கம்யூனிசத்தையும் சுட்டிகாட்டி காலனிய கொள்ளையடிப்பை தொடர்ச்சியாக நடத்த வேண்டுமானால் இனி பழைய முறையில் காலனிகளை ஆளவோ சுரண்டவோ முடியாது என்றும் நேரடி காலனியா திக்கத்தை கைவிட்டு பொருளாதார ரீதியில் அடிமைப் படுத்தி மறைமுகமாக ஒடுக்கிசு் சுரண்டுவதுதான் பாதுகாப் பானது என்றும் ஏனைய ஏகாதிபத்திய வாதிகளுக்கு போதனை செய்தது.
அவ்வாறு செயல்படவில்லையென்றால் காலனிய நாடுகள் அனைத்தும் கம்யூனிசத்தின் செல்வாக்கில் விழுந்துவிடும் மேலும் ஏகாதிபத்திய நாடுகள் சோசலிசமாக மாறிவிடும் என சுட்டிக்காட்டியது. தனது புதிய காலனிகளான லத்தீன் அமெரிக்க நாடுகளை உதாரணம் காட்டி அமெரிக்காவானது அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைத்தது. பிரிட்டன் உட்படஏனைய ஏகாதிபத்தியங்களும் நேரடி காலனிய ஆதிக்கத்தை கைவிட ஒத்துக்கொண்டது. காலனிய நாடுகள் (பெயரளவிளான) சுதந்திரநாடுகளாக, ஜனநாயக நாடுகளாக வேடம் போடச்செய்து ஏகாதிபத்தியங்களால் புதிய காலனிய முறையில் அதாவது முன்னிலும் கொடூரமான சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் மற்றும் ஒடுக்கு முறைக்கும் உட்படுத்தவே. முதலில் இந்த உலகயுத்தமானது “சந்தைகளை மறுபங்கீடு செய்வதற்கான போர்தான்” என தெளிவாக தெரிந்திருந்த சோவியத் ரஷ்யாவானது யுத்தத்தில் பங்கு பெறாமல் விலகியே இருந்தது. 1941ல் பரஸ்பர தாக்குதல் கூடாது என்ற ஒப்பந்தத்ததை ஜெர்மனியிடம் ஏற்படுத்தியிருந்தது. அவ்வொப்பந்தத்தையும் மீறி ஜெர்மன் ரஷ்யாவை தாக்க முற்பட்ட போதுதான் ரஷ்யாவானது தனது சோசலிச நாட்டு தற்காப்பிற்காக பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்காவுடன் பாசிசஎதிர்ப்பு யுத்த அணியில் இணைந்தது.
அட்லாண்டிக் சார்ட்டர் ஒப்பந்தம் உருவாகி ஒரு மாதத்திற்கு பிறகு சோவியத் ரஷ்யாவும் தனது சொந்த நாட்டு பாதுகாப்பை கருதியும் ஜெர்மன் பாசிசத்தை ஒழித்து கட்டவும் என்ற நோக்கில் அதில் கையெழுத்திட்டது.
இதற்கிடையில் நான்காண்டுகள் ஜெர்மனுக்கும் ரஷ்யாவிற்கும் யுத்தம் நடந்து வந்ததை பிரிட்டனும் அமெரிக்காவும் வேடிக்கைதான் பார்த்தன. ரஷ்யா கடும் பொருளாதார சேதத்திற் குள்ளானது. மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் அடைந்த அனைத்து பயனும் போயின. தொழிற்நகரமான ஸ்டாலின் கிராடு உட்பட பலவேறு நகரங்கள்பாசிச ஜெர்மானியின் இராணுவ தாக்குதலினால் படுநாசத்திற் குள்ளானது. சுமார் இரண்டு கோடி ரஷ்யர்கள் தங்களது சொந்த தேசத்தை பாதுகாக்கவும் பாசிசத்தை வீழ்த்தவும் கம்யூனிசத்தை பாதுகாக்கவும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர்.
1945 ஆம்ஆண்டு நடந்த இறுதியுத்தத்தில் ஜொ்மன் நாஜிப்படை சோவியத் செம்படையின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் பின்வாங்கி தான் புறப்பட்டுவந்த பொ்லினை நோக்கி புறமுதுகிட்டு தலைதெறிக்க உயிரை கையில்பிடித்து கொண்டு தறிகெட்டு ஓடியது. இந்த உலகத்தை ரைஸ்டாக் (ஜொ்மன் பாராளுமன்றம்) ஆயிரம் ஆண்டு காலம் ஆட்சி புரியும்” என்று சவால்விட்ட, கம்யூனிசத்தை இழிவு படுத்தியவனும் ரஷ்யாவில் சோசலிசத்தை வீழ்த்தியே தீருவேன் என்று வீரவசனம் பேசிய ஹிட்லா் ரஷ்ய செம்படை பொ்லினில் நுழைந்து ஹிட்லரின் கோட்டையில் செங்கொடி ஏற்றிய செய்தியை கேள்விப் பட்டவுடனேயே தனது காதலியுடன் சயனைடு விஷம் சாப்பிட்டும், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டும் கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். பொ்லினிலிருந்த செம்படை ஹிட்லா் கைப்பற்றியிருந்த அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் அந்தந்த நாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளிடம் ஒப்படைத்துவிட்டு மாஸ்கோ திரும்பியது.
இரண்டாம் உலகயுத்தத்தில் இத்தாலி கேவலமான முறையில் தோற்றுப் போனது. தனது காலனி நாடுகள் அனைத்தையும் இழந்தது. யுத்தத்தின் மூலம் 40 நாடுகளை அடிமைப் படுத்தி “ பழைய ரோம சாம்ராஜ்யத்தை நிறுவுவேன்” என்ற பாசிஸ்டு முசோலினியின் கனவு தவிடு பொடியானது. இத்தாலியை விட்டு தப்பித்து ஓடுகையில் அந்நாட்டிலிருந்த பாசிச எதிர்ப்பு கம்யூனிஸ்டு குழுவிடம் பிடிபட்டு அவர்களால் அடித்தே கொல்லப்பட்டு தொங்கவிடப்பட்டான் முசோலினி. இதுவே வரலாற்றில் பாசிசத்திற்கும் பாசிஸ்டுகளுக்கும் ஏற்பட்ட கதியாகும்.
ஆதலால்தான் தோழர் டிமிட்ரோவ் கூறும் போது,
“,பாசிசம் ஒரு கொடிய ஆனால் நிலையற்ற ஆட்சி அதிகாரம் ஆகும். பூர்ஸ்வா வர்க்கத்தின் பாசிச சர்வாதிகாரம் ஒரு கொடிய ஆட்சி அதிகாரம் ஆகும் ஆனால் அது நிலையற்றது. ” என்கிறார்.
பாசிச சர்வாதிகாரத்தின் நிலையற்ற நிலைமைக்கான முக்கியமான காரணங்கள் என்ன?
"பாசிசம் முதலாளித்துவ சமூகத்திற்குள்ளேயே உள்ள பிணக்கங்களையும் பகைமையையும் சமாளித்து சரிப்படுத்துவதாக பொறுப் பேற்ற போதிலும் உண்மையில் பாசிசம் அந்த பகைமைகளை மேலும் அதிகமாகத் தான் செய்தது. பாசிசம் இதர அரசியல் கட்சிகளை வன்முறையாக அழிப்பதன் மூலம் தனது அரசியல் ஏகபோக ஆதிக்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறது . ஆனால் முதலாளித்துவ அமைப்பு நிலையில் இருப்பது பலவேறு வரக்கங்களும் வர்க்க முரண்பாடுகள் கூரிய நிலையில் இருப்பது தவிர்க்க முடியாதபடி பாசிசத்தின் அரசியல் ஆதிக்கம் சீழறுந்து அழிவை நோக்கியும் திடீரென்று வெடித்து நாசமடைவதை நோக்கியும் கட்டாயம் செல்லத்தான் செய்யும்".
"ஒரு பாசிஸ்டு நாட்டில் பாசிஸ்டுகளின் கட்சி அதனுடைய ஏகபோக ஆதிக்கத்தை நீண்டநாள் நிலைத்து வைத்திருக்க முடியாது. காரணம் அது வரக்கங் களையும் வர்க்க முரண்பாடு களையும் ஒழிப்பதை தனது கடமையாக கொள்ள முடியாது. அது பூர்ஸ்வா கட்சிகள் சட்டபூர்வமாக இருப்பதற்கே ஒரு முடிவு கட்டி விடுகிறது. ஆனால் பல கட்சிகள் மறைவாக இருந்து செயல்படுகின்றன. இன்னும் கம்யூனிஸ்டு கட்சி தடைசெய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பணியாற்றி மேலும் பலமடைந்து முன்னேறுகிறது.
மேலும் உறுதிப்பட்டு வார்த்தெடுக்கப்பட்டு பாசிச சர்வாதிகாரத்திற்க எதிராக பாட்டாளி வரட்க்கத்தின் போராட்டத்தை தலைமைதாங்கி நடத்துகிறது. எனவே வர்க்க முரண்பாடுகளின் அடிதடுகளில் பாசிசத்தின் அரசியல் ஏகபோபக ஆதிக்கம் நிச்சயம் வெடித்தே உடைந்தே தீரும்.
” பாசிச சர்வாதிகாரத்தின் நிலையற்ற தன்மைக்கு மற்றொரு காரணம்“ அதனுடைய முதலாளித்துவ எதிர்ப்பு வாய்ச்சவுடால்களுக்கும் மிகவும் படுமோசமாக கொள்ளையடிக்கும் ரீதியில் ஏகபோகமுதலாளித்துவம் கொள்ளை லாபம் அடிப்பதற்கான அதனுடைய கொள்கைக்கும் இடையில் உள்ள நேர்எதிரான வேறுபாடு காரணமாய் பாசிசத்தின் வர்க்கத்தன்மை அமபலமாகி அதன் வெகுஜன அடிப்படை குறுகிக்குறுகி ஆட்டம் கண்டு அழிவதை நோக்கி சென்றுவிடுகிறது.
மேலும் பாசிசத்தின் வெற்றி மக்களிடம் ஆழமான வெறுப்பையும் கோபா வேசத்தையும் கிளப்பி விடுகிறது. மக்களை புரட்சிகரமாக்குவதற்க உதவி செய்கிறது. பாசிசத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணிக்கு ஒரு வலுவான உத்வேகத்தை அளிக்கிறது. ”
வரலாற்றில் பாசிசம் என்பது தற்காலிக மானதுதான் நிலையற்றது தான் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்த பாசிச எதிர்ப்பு யுத்தத்தில், பாட்டாளிவா்க்க அரசை பாதுகாக்கும் யுத்தத்தில் இரண்டு கோடி ரஷ்ய உழைப்பாளி மக்கள் உயிர்த்தியாகம் செய்தனா். ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் உழைப்பாளா்களின் உழைப்பு மூலம் வளா்ந்திருந்த ரஷ்யாவின் சோசலிச பொருளாதார வளா்ச்சி படுநாசத்திற்கு உள்ளானது. ஆனால் தோழா் ஸ்டாலின் தலைமையிலான போல்ஸ்விக் கட்சியின் வழிகாட்டுதலின் காரணமாக சோவியத் உழைப்பாளி மக்கள் மற்றும் செம்படையின் வீரம் செறிந்த போராட்டம் மற்றும் ரஷ்ய மக்களின் கடுமையான தியாகத்தின் காரணமாகவே பாசிசம் வீழ்த்தப்பட்டது. அதே சமயத்ததில் மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டுதலுக்கேற்ப ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கம்யூனி்ஸ்டு கட்சியின் தலைமையில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டப்பட்டிருந்து.
அதன் தலைமையில் பாசிசத்ததால் ஒடுக்கப்படுகிற வா்க்கங்களை திரட்டி பாசிச எதிர்ப்பு போராட்டம் நடந்ததும் பாசிசம் வீழ்த்தப்படுவதற்கு முக்கிய காரணமாகும்
1941 ஆம் ஆண்டு முதல் 1945 வரை நான்கு ஆண்டு காலம் ரஷ்யாவானதுஜொ்மனியின் பாசிச இராணுவத் தாக்குதலை தனி ஒரு நாடாக எதிர் கொண்டு இறுதியில் முறியடித்தது. கடுமையான பொருளாதார நாசத்திற்கும் உயிரிழப்பிற்கும் உள்ளானாலும் வெகுவிரைவிலேயே பழைய வளா்ச்சியை எட்டிபிடித்தது. 1949ல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. விண்வெளியில் ராக்கெட்டை ஏவியது. இவையெல்லாம் ஏகாதிபத்தியத்தின் துணையின்றி சுயேச்சையான சோசலிச பொருளாதார வளா்ச்சியின் சாதனையாகும். இதன் மூலம் ஒரு நாடு எந்த ஒரு ஏகாதிபத்தியத்தின் மூலதனத்கைச் சாராமலேயே அந்நிய தொழில் நுட்பம் சாராமலேயே சொந்த நாட்டு உழைப்பாளி மக்களின் உழைப்பை மட்டும் கொண்டு ஏகாதிபத்திய நாடுகளை காட்டிலும் அனைத்து துறைகளிலும் பயங்கரமான வளர்ச்சியை எட்டமுடியும் என்பதை உலகத்தின் முன் முதன்முதலாக சோவியத் ரஷ்யா நிரூபித்தது. இதைத் தொடர்ந்து சோசலிச சீனமும் 1949க்கு பிறகு சுயேச்சையான வளர்ச்சியை நிரூபித்த மற்றொரு நாடாகும்.
இத்தகைய நிலையை அடைய அந்நிய ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை ஒழித்து உண்மையான சுதந்திரத்தை அடைவதும் மேலும் சொந்த நாட்டில் முதலாளித்துவ தனிச்சொத்துடமையும் சுரண்டலையும் ஒழித்து உற்பத்தி சாதனங்களில் சமூகவுடமையை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மக்கள் ஜனநாயக சர்வாதிகார ஆட்சியை நிறுவவதும் முன்நிபந்தனையாகும்.
No comments:
Post a Comment