நேற்றைய கிளப் அவுஸ் விவாதம் ரசிய புரட்சியும் இந்திய இடதுசாரி இயக்கம் சந்திக்கும் சவால்களும் ஒலி வடிவில்
ரசிய புரட்சி
1875 இல் ரசிய வில் முதல் தொழிற்சங்கம் ஒடெஸ்ஸர நகரில் உருவாக்கப்பட்டது அதற்கு வைக்கப்பட்ட பெயர்தான் தென் ரசிய தேசிய தொழிலாளர் சங்கம் ஆனால் அரசாங்கம் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து காரணத்தால் இந்த சங்கத்தால் 9 மாதங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை.
தொழிற்துறை தொடங்கப்பட்ட பொழுது இயந்திரத்திற்க்கு தான் பஞ்சமே ஒழிய தொழிலாளர்களுக்கு அல்ல. இயந்திர பல்சக்கரத்தில் தொழிலாளி மாட்டிக்கொண்டால் இயந்திரத்தை பழுதுபார்க்க எடுக்கும் சிரமத்தை நோக்கும்பொழுது தொழிலாளி எந்த வகை உதவியும் இன்றி வெளியில் வீசப்பட்டான்.
மருத்துவ செலவோ உதவி தொகையோ எதுவும் கிடையாது. வேலைக்கு உத்தர வாதம் கிடையாது எப்பொழுது வேண்டுமானாலும் விரட்டிவிடப்படலாம் என்ற நிலை.
ஏகாதிபத்தியங்களின் காலடியில் மண்டியிட்டு கிட்டத்தட்ட தம்மையே அவர்களிடம் அர்ப்பணித்த இரண்டாம் அகிலத் தலைவர்களை கடுமையாகச் சாடினார் லெனின். இந்தப் போராட்டத்தை நடத்தும்போது, மொத்த அகிலத்திலும் லெனின் சிறுபான்மையானவர் தான்.
உலகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன. ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை அமைத்தவர் தோழர் லெனின்.
மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.
அவரது காலத்தில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சிகள் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சி குறித்தப் பார்வையை விமர்சனப் பூர்வமாக அணுகி புரட்சியை சாதிப்பதற்கு ஏற்ற ஒரு கட்சியையும் அதற்கான கோட்பாடுகளையும் வகுத்தார்.
லெனினுக்கு முன்னரே பிளக்கனோவ் உள்ளிட்ட பல்வேறு மார்க்சிய அறிஞர்கள் இருந்தாலும் லெனினால் மட்டும் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ? எது அவரை புரட்சியை சாதித்த மாபெரும் தலைவராக உயர்த்தியது ? அவரது சமகாலத்திய பிற மார்க்சிய அறிஞர்களுக்கும் லெனினுக்கும் என்ன வித்தியாசம் ?
மார்க்சியத்தின் மூன்று கூறுகள் தத்துவஞானம் அரசியல் பொருளாதாரம் விஞ்ஞான கம்யூனிசம் என்பது ஆகும் என மூன்று கூறுகளை லெனின் வளர்த்தார் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரம் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களும் இதர பகுதிகளோடு அதன் கூட்டணி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் அதன் வடிவங்கள் பாட்டாளி வர்க்க அரசியல் ஜனநாயகம் விவசாய மற்றும் தேசிய இனப் பிரச்சனைகள் பற்றி மார்க்சிய புதிய கருத்துக்களும் முடிவுகளும் சேர்த்து அதை செயல்படுத்தினார்.
வர்க்க சமுதாயத்தில் கல்வியிலும் வளர்க்கும் முறையிலும் வர்க்க சாராம்சம் உள்ளது என்பதை மறைக்க செய்யப்படும் முயற்சிகளில் அறிந்திருக்க வேண்டும்.
வர்க்க சமுதாயத்திலான கல்வியின் வர்க்கத் தன்மையைப் பற்றிய மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் போதனையை லெனின் மிகச்சரியாக வெளிப்படுத்தி வளர்த்தார். சாமானிய பொதுமக்கள் அறிவைப் பெறும் வழியை ருசிய சர்வாதிகாரம் திட்டமிட்டு வேண்டுமென்றே தடுத்து வந்திருப்பதை லெனின் மிகத் தெளிவாக விளக்கினார். நம்முடைய அமைச்சர்கள் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் (1895 ) என்ற அவருடைய கட்டுரையில் பின்வருமாறு எழுதினார். "அமைச்சர் தொழிலாளர்களை துப்பாக்கி ரவைகள் எனவும் அறிவையும் கல்வியையும் தீப்பொறி எனவும் கருதுகின்றார்; இந்தத் தீப்பொறி துப்பாக்கி ரவையில் விழுந்தால் அந்த வீட்டு அரசாங்கத்திற்கு எதிராக முதலாவது ஆகும் முக்கியமாகும் திரும்பி விடப்படும் என்று அமைச்சர் நன்கு புரிந்து உள்ளார்".
இயக்க மறுப்பியல்
இயற்கையில் அனைத்துமே இயங்கிக் கொண்டிருக்கின்றன ஆயினும் இந்த இயக்கமானது மாறாமல் இருந்து வரும் சுழற்சிகள் வடிவங்கள் ஆகியவை திரும்பத் திரும்ப தோன்றி மறையும் இயக்கமே என்று சொல்லும் கருத்தினையே விஞ்ஞான அறிவு ஊட்டியது.
ஒரு பொருளைப் பார்ப்போம் பார்க்கிற பொழுது இந்த பொருள் இப்ப எப்படி இருக்கிறதோ அப்படியேதான் எப்பவும் ஒரு உருறாமல் அப்படியே இருக்கும். இது எப்பவுமே மாறவே மாறாது என்கின்ற பார்வை பெறும் இயந்திர மயமான பார்வை.
இவர்கள் சொல்கிற கண்ணோட்டத்தை நாம் எடுத்துக் கொண்டால் இந்த சமூகத்தில் சுரண்டலும் ஊழலும் இருக்கிறது அது அப்போது தான் இருக்கிறது அதை மாற்ற முடியாது என்று தானே அர்த்தம்.
பூமி படைக்கப்பட்டது போலவே இன்றும் இருக்கிறது அன்று எப்படி சூரியன் உதித்ததும் இன்றும் அப்படிதான் உதிக்கிறது அதேபோல் மறைகிறது என்பர்.
சூரியன் பொதுவாய் அறிவியல் பூர்வமாக உதிப்பதும் மறைவதும் இல்லை குறிப்பாய் பூமியின் சுழற்சிக்கு ஏற்ப உதிப்பது என்பதும் ஒரே மாதிரி அல்ல அதன் குளிர் காலம் கோடை காலம் கால வேறுபாடு வெப்பம் குளிர் நாட்டுக்கு நாடு வேறுபாடு இவை புரிந்துக் கொண்டால் மட்டுமே இந்த இயக்க மறுப்பியலாளர்களை இனங் காண முடியும்.
இயக்கத்தின் சாரம் பற்றியும் பரஸ்பர தொடர்புகள் முரண்பாடுகள் குறித்தும் விளக்குகிற இயக்கம் மறுப்பில் கருத்தோட்டம் பண்டைய இயக்கவியலுடன் ஒப்பிடுகையில் ஒரு அடி பின்னுக்கு போவதாக அமைந்தது.
இயக்கவியல்
இயக்கவியலின் வரலாறு ஹேகலின் தத்துவ முறையிலிருந்து பிறந்தது ".
இயக்கவியலின் வரலாறு யாகலின் தத்துவ முறையில் இருந்து பிறந்தது அதுபற்றிய தோழர் ஸ்டாலின் கூற்று இது
அதன் முக்கியமான அம்சங்களை ஏகல் எனும் தத்துவத்தை உருவாக்கினார் என்று மார்க்சிய ஆசான்கள் வழக்கமாக குறிப்பிடுகின்றனர் எனினும் மாற்று
எனினும் மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோரின் இயக்கவியல் அணுகுமுறையும் இயற்கையின் இயக்கவியல் அணுகுமுறையில் ஒன்றுதான் என்று இதற்கு பொருள் கொள்ளக்கூடாது உண்மையில் சொல்லப்போனால் ஏகத்துவம் கருத்துமுதல்வாதம் என்ற கூண்டுக்குள் சிக்கிக் கிடந்தது இந்த கூண்டைத் திறந்து ஏழைகளின் அணுகுமுறையில் இருந்த பகுத்தறிவு
பகுத்தறிவுப் பூர்வமான சாராம்சத்தை மட்டும் மார்க்சும் எங்கெல்சும் எடுத்துக்கொண்டு நவீனஅறிவியல் வடிவம் கொடுக்கும் நோக்கத்தில் அந்த சாராம்சத்தை மேலும் வளர்த்தனர் இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் நூலிலிருந்து).
பதினெட்டாம் நூற்றாண்டில் இயக்கம் மறுப்பியலில் சிக்கிக் கிடந்தது என்று மேலே பார்தோம் அல்லவா அதே காலத்தில் வரலாற்றின் வளர்ச்சியில் அறிவியல் துணைக் கொண்டு இந்த பேரண்டத்தில் உள்ள எல்லா பொருட்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற முக்கிய மான முடிவை தந்தார்.
ஆன்மீக வாதியான ஹேகல் அறிவியலின் துணையோடு இயக்கவியல் விளக்கினார்.
சிந்தனை மனித வரலாற்றின் படைப்பு எனும் அறிவியல் சிந்தனை மூன்று அடிப்படைகளில் கொண்டு பிறந்தது என்பது முதலில் மெயில் கருத்துகள் வளர்க்க வகை செய்யப்படும் நோக்கில் அறிவு உரிமை பெறல்.
இரண்டாவதாக அவை தோன்றுவதற்கான சமூக வளர்ச்சி பின்புலம்.
மூன்றாவதாக இயற்கை மனிதன் சமூகம் என்பவற்றின் தேவைகளைப் பற்றிய அறிவை தொகுத்துக் காணல்.
இந்த நிகழ்ச்சிப் போக்கில் கருத்துகளும் நடைமுறையும் முக்கிய இடம்பெறுகின்றன மெய்யியல் குறிப்பிட்டதொரு நாட்டில் எப்போது பிறந்தது என்பதனை அறுதியிட்டு கூறல் கடினமான ஒன்றே.
மனிதனின் இயற்கையை பற்றிய அறிவு நம்பிக்கைகள் நெறிமுறைகள் என்பன வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களில் பிறக்கின்றன.
பழையன புதியன நல்லன தீயன என வரையறுற்கும் காலமும் பின்புலமும் வேறுபடுகின்றன. எனவே நாட்டுக்கு நாடு நிலம் சார்ந்த மெய்யியல் பிறக்கும் காலமும் வேறுபடுகிறது. இருப்பினும் உலகில் மெய்யியல் சிந்தனையாளர்கள் என இக்காலத்தில் அறியப்பட்ட பலரும் கிரேக்கம் சீனம் இந்தியா என்ற நாடுகளில்தான் மெய்யியல் கருத்துகள் சமுதாய வளர்ச்சி நிலை மாற்றங்களை ஒட்டி முதல் முதலில் இருந்தன என்பதை ஏற்கின்றனர்.
உலகம் தோன்றிய காலம் தொட்டு எது முதல் என்னும் வினா எழுந்து வந்துள்ளது பொருளே முதல் என்றோர் பொருள் முதல் வாதிகள் எனவும் ஆன்மா அல்லது கடவுள் முதல் என்றோர் கருத்துமுதல் வாதிகளையும் பிரிக்கப்பட்டனர் இது எல்லா நாடுகளிலும் உண்டான நிகழ்ச்சிப் போக்கு ஆகும்.
தத்துவம் அறிதலின் பொது ஒழுங்காக அமையப்பெற்றது சமூக உற்பத்தி முறையில் வர்க்கங்களும் வர்க்க மோதல்களும் அவற்றை ஒட்டிய சமூக மேற்கட்டுமானம் உருவான காலத்தில் தான் இதன் காரணமாகவே தத்துவ அமைப்புகளுக்கு சமூக வர்க்க சார்பு …
No comments:
Post a Comment