கோவை மாவட்டத்தில் வேலை செய்து வந்த தோழர்கள் ராமானுஜம் ராகவனும் ருக்மாந்தகன் மூவரும் கிட்டத்தட்ட 74 தொடக்கத்திலிருந்தே மேற்கு பிராந்திய குழு என்ற பெயரில் இயங்கி வந்தனர். மாநில குழுவிற்கு கீழ்ப்பட்ட ஒரு பிராந்திய குழு என்றே கூறி வந்தனர் .ஆனால் கட்சியின் அப்போதைய வழியான அழித்தொழிப்பு வழியை செயல்படுத்தவில்லை கட்சி கூறியபடி செயல்படுத்த முயன்றதாகவும் இல்லை என்பதே உண்மையாகும்.
தோழர் ராகவன் மாணவர் பொறுப்பில் இருந்தபோது பல மாவட்டங்களில் உறுப்பினர்கள் அனுதாபிகள் தொடர்பில் இருந்தனர், குறிப்பாக குட்டி முதலாளித்துவ தோழர்கள் தொடர்பில் இருந்தனர். தோழர் ஏஎம்கே கைதுக்குப் பின்னர் பல மாவட்டங்களுக்கு சென்று தோழர்களை சந்தித்து தோழர் ஏஎம்கேயின் வழி இவைதான் என்று கூறி அழித்தொழிப்பு வழி எதிர்த்துப் பிரசாரம் செய்து வந்தார் .
கோவை குழுவினர் அழித்து ஒழிப்பு என்பது போராட்டம் வடிவம்அல்ல மற்றும் மா.கு அரசியல் வழியிலான அழித்தொழிப்பு போராட்டம் கூலி ஏழை உழவர்களை ஈர்க்கவில்லை என்றும் பிரசாரம் செய்தனர்.
அன்று மா. கு அழித்தொழிப்பு ஒரே போராட்ட வழிமுறை என்று கூறியவர்களும் கூட்டக் குழுவினரும் அழித்தொழிப்பு என்ற போராட்ட வடிவத்தை மையமாக பார்த்தனர். அதற்கேற்ப அமைப்பு வழியிலும் அழித்தொழிப்பில் ஈடுபடுபவர்களுகானதே கட்சி என்றிருந்தது. (எனவே நடைமுறையில் முழு நேர ஊழியர்களே உறுப்பினர்கள்) . கோவை பிராந்திய குழு தமது கருத்துகளை பேசிய விதமும் போராட்டத்தில் ஊன்றி நிற்கும் தோழர்களே பொறுமையாக புரிய வைப்பதற்கும் மாற்றுவதற்கும் பதில் வெறுப்பை கக்கும் விதத்தில் அணுகியதும் அவர்கள் கோரிக்கைகள் ஏற்படாதற்கு ஒரு காரணம். ஆக அவர்களுடன் உள்ள முரண்பாட்டை கட்சிக்குள் வைத்து தீர்க்க முடியும் என கருதவில்லை. அவர்கள் புரட்சிப்புயல் என்ற பெயரில் தமிழ்நாடு கட்சி சார்பில் ஓர் கட்சிப் பத்திரிகை கொண்டு வருவதோடு அதை மாநிலம் முழுக்க வினியோகித்தும் வந்தனர்.
அவர்கள் தம் சொந்த வழியை செயல்படுத்துவதற்காக இவ்வாறு செய்ததை சீர்குலைவு வேலையாக மா.கு கருதியது. ஆனால் அப்போதைய மா.கு செயலாளர் தங்களுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் ஆகவே மக்கள் யுத்தம் என்ற உட்கட்சி பத்திரிக்கை துவங்குவது என முடிவு எடுத்திருப்பதாக கூறினர்.
அன்றைய செயலர் கனி உட்பட மா.கு ஏகமனதாக கோவை பிராந்திய குழுவிடம் அவர்களது அமைப்பு விரோத நடவடிக்கைகளுக்காக விளக்கம் கோருவதென முடிவு எடுத்து கடிதம் அளிக்கப்பட்டது .
கோ.பி குழுவினர் தன்னிலை விளக்கம் என்ற பெயரில் ஒரு நீண்ட அறிக்கை தயாரித்து அனுப்பினர். மா.கு தலைமை ஏற்க முடியாது என்றும் தன்னிலை விளக்கம் அனுப்பியவர்கள் அதனை தங்கள் தொடர்பு உள்ள எல்லோருக்கும் வினியோகித்தனர். தமது வழியை தாங்கள் செயல்படுத்தவில்லை தாங்கள் கட்டுப்பாட்டை மீறவில்லை நிபந்தனையின்றி அமைப்பிற்கு கட்டுப்பாட்டிற்கு கட்டுப்பட்டவர்கள் என்னும் விளக்கம் கூறியும் இருந்தனர் .
உண்மையில் அவர்கள் பத்திரிக்கை வாயிலாகவும் மாநிலம் முழுவதும் தங்களது கருத்தினை பரப்பியுள்ளனர் மக்களை திரட்டும் வேலையில் செய்தும் இருந்தனர். அவர்களின் தன்னிலை விளக்கம் ஆனது உண்மையல்ல. சுருங்கக்கூறின் தன்னிலை விளக்கம் கட்சியின் அரசியலமைப்பு வழியில் பல தவறுகளை சுட்டிக் காட்டுகிறது இருப்பினும் அவை கட்சியின் அரசியல் வழியிலிருந்து வருபவன அல்ல.
மா.கு அரசியல் ரீதியான இப்பிரச்சினையை அமைப்பு பிரச்சனையாகவே அணுகியது இருசாராரும் முரண்பாட்டை பகையானதாகவே பார்த்தனர் எனவே இணக்கம் காண முடியாமல் போயிற்று.
கோவை பிராந்திய குழுவை மா.கு ஒரு தீர்மானத்தின் மூலம் கட்சியில் இருந்து வெளியேற்றியது, அதன் பின் அவர்கள் ஒரு மாநில அமைப்பு குழுவை(SOC) அமைத்துக்கொண்டனர். அவர்களை வெளியேற்றும் தீர்மானத்தை செயலாளர் தோழர் கனியும் சேர்ந்தே நிறைவேற்றினார் ஆனால் அடுத்த கூட்டத்திற்கு உள்ளே அவர் மா. கு ல் இருந்து விலகினார் .
தோழர் கனி விலகிய பிறகு தோழர் தமிழரசன் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.மா.கு செயலாளர் தமிழரசன் கைதுக்குப் பின்னர் இருந்த முரண்பாடுகளை தீர்வுகாண படவில்லை ஆகவே ஆந்திர குழுவுடன் இணைவது என்று முடிவானது.
இதே காலகட்டத்தில் முக்கிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர் இந்த நேரத்தில் எஸ் ஓ சி அமைப்பினர் குறிப்பாக அரசியல் கோட்பாடு பிரச்சனைகளையும் அமைப்பு விதிகளில் கிளப்பினர். எஸ் ஓ சி யானது கூட்ட குழுவை விட அதிக கவனம் செலுத்தியது அதாவது அவர்கள் பிரச்சினையை அணுகிய விதமும் முன்வைத்த தீர்வு கூட குழுவிற்கு ஏற்புடையதாக இல்லை .
கூட்ட குழுவானது நிலப்பிரபுத்துவத்தை புரிந்துகொள்ளுதல் குறைபாடு இருந்தது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை என்பதற்கு பதில் ஒவ்வொரு கிராமத்திலும் நிலபிரபு இருப்பதாக பார்த்தது . அதே நேரத்தில் எஸ் ஓ சி யானது இங்குள்ள சூழ்நிலையிலிருந்து ஆய்வு தொடங்காமல் வெளி நாட்டு வரலாற்று அனுபவத்தை அப்படியே பெயர்த்து பொருத்தும் இணைகோட்பாட்டு வாதம் மேலோங்கி இருந்தது. அவர்கள் இடைநிலை வர்க்கத்திற்கு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஜங்கர்பாணி போன்றவற்றை ரசிய சீனப்புரட்சி இவற்றிலிருந்த நிலைமைகளுடன் நேரடியாக ஒப்பிட்டுப் பார்த்து முடிவுகளை மேற்கொண்டனர் .
1977 க்கு முன் எஸ் ஓ சி எந்த வெகுஜன அமைப்பும் கொண்டிருக்கவில்லை ஆனால் திருப்பத்தூரில் தோழர் சீராளன் படுகொலை கண்டித்து ஒரு மாபெரும் பேரணியை திருப்பத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டது அதில் முன்னாள் சென்னை மேயராக இருந்த தோழர் எஸ் கிருஷ்ணமூர்த்தியால் நிறுவப்பட்டு வந்த மக்கள் உரிமை கழகம் பெரும் பங்காற்றியது, அதில் கிடைத்த படிப்பிலிருந்து மக்கள் உரிமை கழகத்தை உடைத்து ஒரு தனியாக மாநில மக்கள் உரிமை அமைப்பைத் தோற்றுவித்தனர் . அதன்பின் எஸ் ஓ சி மக்கள் உரிமை அமைப்பு கட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கினர் .
1978 இறுதிவரையிலும் ஒன்லி பார்ம் தாங்கள் மட்டும்தான் கட்சி மற்றவையெல்லாம் குழுக்கள் என்று அகம்பாவத்தில் அணுகினர். 1980 களில் வீ.எம் அமைப்பு தன் நிலையை கைவிட்டு வலதுசாரி நிலைக்கு சரிந்து கொண்டிருந்தனர்.
1980 ஏப்ரல் 22 ல் தமிழ்நாடு மாநில குழு ஆந்திர மாநிலத்தில் குழுவும் இணைந்து மக்கள் யுத்தம் என்ற கட்சியை அமைத்தனர். இதோடு நேர்காணலை முடித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
மா-லெ கட்சியின் வரலாற்றிலிருந்து உட்கட்சி முரண்பாடுகளை கையாள்வதற்கான இயங்கியல் அணுகுமுறையின் ஸ்தூலமான கோட்பாடுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
1). கட்சியின் உள் முரண்பாடுகளும் மாற்றுக் கருத்துக்களும் அல்லது வழிகளும் நிலவும் ; ஒன்றுபட்டு நிற்கும் நேரத்தில் தம்முள் போராடிக் கொண்டும் இருக்கும் என்ற பொருள் முதல்வாத இயங்கியல் கண்ணோட்டத்தில் அங்கீகரிக்க மறுக்கின்ற தூய கட்சி வாதம் பிளவுகளுக்கும் அழிவதற்கும் வழிவகுக்கின்றது .
2). ஒரே அரசியல் வழி மற்றும் அமைப்பு வழியில் நின்று கொண்டு தவறான சிந்தனை மற்றும் செயல் முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கு உட்படுத்தி தனிநபரின் நல்ல அல்லது தவறான பண்புகளை அணுகுவதற்கு பதில் தனிநபரின் பண்புகளிலிருந்து உட்கட்சிப் போராட்டத்தைத் தொடங்குவது கோஷ்டிவாதத்தையும் அதிகார வர்க்கபோக்கையும் தோற்றுவிக்கின்றது.
3). சுய விமர்சனம் விமர்சனம் மூலம் தன்னைத் திருத்துக் கொண்டே பிறரையும் திருத்துவதன் மூலம் கட்சியை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டு இருக்கின்ற நிகழ்ச்சிப் போக்கே கட்சியின் வளர்ச்சி விதி ஆகும்.
மேற்கூறிய மூன்று விதிகளும் எந்த ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சிக்கு நிகழ்வின் எந்த ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்திலும் நிலவுகின்ற முரண்பாட்டின் இருத்தல் கையாளுதல் தீர்வு என்ற மூன்று நிலைகள் பற்றியவைகும். இத்தகைய பாட்டாளி வர்க்க அரசியல் மற்றும் அமைப்பு வழியில்லா ததால்தான் இந்தியா முழுமையாக இருந்த மா-லெ கட்சி துண்டுகளாக உடைந்தது. அதே போல் இத்தகைய தவறான போக்கை வெவ்வேறு அளவில் எதிர்த்தவர்கள் கூட சரியான பாட்டாளிவர்க்க வழியில் போராட தெரியாமல் பிளவைத் தடுத்து நிறுத்தவும் முறியடிக்கவும் இயலவில்லை. பல குழுக்களிலும் ஐக்கத்திற்கான விருப்பங்கள் வெளிப்பட்டு அவ்வப்போது ஐக்கிய முயற்சிகள் நடந்தன. இம் முயற்சிகள் பலவித கோட்பாட்டு நிலைகளையும் கலவையாகக் கொண்ட ஓட்டு போட்ட ஐக்கியமாக வடிவெடுத்து மீண்டும் மீண்டும் பிளவுக்கு வழிவகுக்கின்றன, அல்லது ஏதேனும் ஒரு குழு ஐக்கியம் ஐக்கியம் என உரக்கக் கூறிக்கொண்டு தனது தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் பிற குழுக்களை ஜீரணிக்கும் முயற்சிகளாக அமைந்தன .
புறவுலகானது மனிதர்களது விருப்பத்திற்கு அப்பாற்பட்டு மாறிக்கொண்டே இருக்கிறது. அடிப்படை சமூக மாற்றமானது புரட்சிக்குத் தலைமை தாங்க முன்னரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு மாறாமல் இருக்கும் போதே சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக்கொண்டு அவ்வப்போதைய குறிப்பான கடமைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் .பொருளானது என்னேரமும் மாறிக்கொண்டே இருக்கிறது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள்முதல்வாத கண்ணோட்டமாகும் வளர்ச்சியின் விதிகளோடு சேர்த்து பொருளையும் புரிந்து கொள்வதே இயங்கியல் பொருள்முதல் வாதம் ஆகும் இயங்கியல் பார்வை பொருள்முதல்வாத சித்தாந்தமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை ; ஒன்றைஒன்று நிறைவு செய்பவை. இயங்கு இயல் பார்வையற்ற மாறா நிலையில் இருந்து பொருளை பரிசீலிக்கும் போது நாம் ஒரு பொருளை சரியாக புரிந்து கொள்ளாததுடன் புறவய விதிகளிலிருந்தில்லாமல் நமது அகவய விருப்பங்களிலிருந்து கட்சியை கட்டுவது முதல் கடமைகளை வகுத்துக் கொள்ளுவது வரை நடக்கின்றன. இது தத்துவத் துறையில் கருத்து முதல் வாதத்திற்க்கு இடம் கொடுக்கிறது .
----------------------------------------
1976 ல் தோழர் சீராளன் அவர்கள் வடஆற்காடு மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் பல்வேறு போராட்டங்களை எடுத்து நடத்தி வந்தார். அவர் நிலப்பிரச்சினை, நிலப்பரப்பு ரவுடிகள் பஞ்சாப் ஆதிக்கத்துக்கு எதிராக, தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரம், நிலப்பிரபுக்களின் அடியாட்களுடன் மோதல் இவ்வாறு பல போராட்டங்களை கண்டார்.
பொன்னேரி பகுதியில் இருவேறு ஜாதிகள் இடையில் உள்ள மக்களை ஒன்றிணைத்து பட்டியலின மக்கள் வீடுகளில் உணவு வருந்தவும் அவர்களுடன் ஒன்றுபட்டு போராடுவதும் அவர் நடைமுறை ஆக்கினார். நிலப்பிரபுக்களும் ஆதிக்கமும் போலீஸின் அடாவடியும் அங்கே ஒடுக்கப்பட்டது இதை கண்ட இந்திய ஆளும் வர்க்கம் சீராளனை 1976 ல் கொன்றது. கூட்டக் குழுவின் வழிகாட்டுதலில் செயல்பட்ட சீராளன் கொல்லப்பட்டது அப்பகுதி மக்களியடையே பெரும் தாக்கத்தை உண்டாகியது. அந்த நேரத்தில் எஸ் ஓ சி திருப்பத்தூரில் தோழர் சீராளன் படுகொலை கண்டித்து ஒரு மாபெரும் பேரணியை திருப்பத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில மக்கள் உரிமை அமைப்பைத் தோற்றுவித்தனர் .
இந்த படிப்பினையில் எஸ் ஓ சி மக்கள் உரிமை அமைப்பு கட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கினர்.(இத்துடன் தமிழகத்தில் உதித்த மா-லெ அமைப்புகளின் மூன்று போக்குகளை நிறுத்திக் கொள்கிறேன்).
-------------------------
"கட்சிப் பத்திரிகை பரந்துபட்ட மக்கள் திரளுக்காக நடத்துவது அல்ல . பாட்டாளி வர்க்க முன்னோடிகளை திடப்படுத்தவும் மக்களின் முன்னேறிய பிரிவினர் கட்சிக்குள் நெருக்கமாக கொண்டுவரவும் மக்களிடமிருந்து மேலும் முன்னோடிகளை உருவாக்கவும் வாசகர்களை ஒரு குறிப்பிட்ட திசையில் நெறிப்படுத்தும் நடத்தப்படுகிறது" - லெனின் எங்கிருந்து தொடங்குவது? மேலும் மாவோ "ஒருமுறை தொடங்கப்பட்டு விட்டால் பத்திரிக்கை உணர்வுபூர்வமாக நடத்தப்பட வேண்டும் இது ஆசிரியர் குழுவை போன்று வாசகர்கள் பொறுப்பாகும் . வாசகர்கள் ஆலோசனை வழங்குவதும் அவர்கள் என்ன விரும்புகின்றனர் எதை விரும்பவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்ற சுருக்கமான கடித கட்டுரை அனுப்பி வைத்தல் வேண்டும் ஏனெனில் இதுவே ஒரு பத்திரிக்கை வெற்றி வெற்றிகரமாக ஆக்கும் ஒரே வழியாகும் "
------------
ஆக தோழர்களே நான் எனது நேர்காணல் அளித்த அந்த தோழர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு தங்களின் வாழ்வின் பெரும் பகுதியை இயக்கத்தோடு பயணித்தவர்களுக்கு கடன் பட்டவனாகவும் உள்ளேன்.
பல்வேறு தோழர்களின் உயிர் தியாகம் வீணாகி போகாமல் ஆவணப் படுத்த வேண்டும் என்ற் என் முயற்ச்சி இவை முழுமையாகமைக்கு ஒரு காரணம் அந்த தோழர்களின் வாழ்க்கை இரகசியம் அரசுக்கு பிரச்சினை கொடுக்குமென்ற கோணத்தில் சிலர் வாய் திறக்கவே இல்லை.
மேலும் சில தோழர்கள் தங்களை முன்னிலை படுத்துவதும் அவர்களின் இன்றைய வாழ்க்கை அரசியல் நிலைப்பாட்டிலிருந்து அவர்களின் பேச்சை ஏற்றுக் கொள்ளாமையும்.
ஆக என் முயற்சிக்கு பங்களிக்க நினைக்கும் தோழர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதே என் தேடலின் ஆக்க பூர்வமாகயிருக்கும் தோழர்களே.
(மூலம் 88 சிறப்பு கூட்ட அறிக்கை மற்றும் நக்சல்பாரி எழுச்சியில் ஈடுபட்ட தோழர்களுடனான நேர்காணலிருந்து).
No comments:
Post a Comment