ரசிய புரட்சியும் இந்திய இடதுசாரி இயக்கத்தின் முன் உள்ள அன்றைய இன்றைய சவால்களும்

 


முதலாளித்துவத்தினால் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக்கொண்டு அதைத் தனது சொந்தக் குறிக்கோளுக்குப் பயன்படுத்தமுடியாது. அதைத் தகர்த்தெறிய வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கூறினார்கள். லெனின் இது புரட்சிப் பற்றிய அடிப்படையான விதி என்றார். பாட்டாளி வர்க்கப் புரட்சியின் உயிர்நாடியான பிரச்சினை அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களை பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக்கட்டி பாட்டாளி வர்க்க அரசு அதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அவ்விடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதே யாகும். இதுதான் மார்க்சிய லெனினிய புரட்சிப் பாதையாகும்.

1. ஒடுக்கும் வர்க்கமான ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக புரட்சிகரமான போரை மேற்கொள்ளாமல் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் சாத்தியமல்ல என்ற மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டை குருசேவ் நிராகரித்தார்.தற்போதுள்ள சூழலில் பாராளுமன்றவாத வழிகளைப் பயன்படுத்தி அமைதியான வழியில் சோசலிசத்தை நோக்கி முன்னேறுவது சாத்தியம்தான்என்று கூறினார்.

2. ஏகாதிபத்தியம் உள்ளவரை போர் தவிர்க்க முடியாதது என்ற மார்க்சிய-லெனினிய வரையறையை குருச்சேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு நிராகரித்தது.

3. குருச்சேவின் நவீன திருத்தல்வாதத்திற்கு மாறாக மார்க்சிய-லெனினியத்தை பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தை எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு சீனகம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்றது. குருசேவ்வின் திரிபுவாதக் கோட்பாட்டை நிராகரித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பின்வருமாறு கூறியது.

4. சோஷலிசத்தை நோக்கிய அமைதியான மாற்றம் என்பதும் பாராளுமன்றப் பாதையைப் பின்பற்றி சோசலிசத்தை எட்டுவது என்பதும் வெறும் மாயாவாதமே. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் பிற்போக்கு அரசு இயந்திரத்தை தூள் தூளாக்குவது ஆகியவைதான் முக்கிய பிரச்சினையாகும். அதாவது அரசு அதிகாரம் பற்றியப் பிரச்சினையே முக்கிய பிரச்சினையாகும். அரசு அதிகாரத்தின் முக்கிய அங்கமாக ஆயுதப்படைகள் உள்ளன. புரட்சிகர வன்முறையின்றி சுரண்டும் வர்க்கங்களின்ஆயுதப்படைகளைத் தகர்க்க முடியாது. சுரண்டும் வர்க்கங்கள் தாமாகவே முன்வந்து அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை. இதுதான் வரலாறு கற்பித்த பாடமாகும்.” மார்க்சின் பிரபலமானசொற்களை மேற்கோள் காட்டுவது எனில், “பலாத்காரம் ஒன்றுதான் ஒவ்வொரு பழைய சமுதாயத்திலிருந்து பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சியாகும்.” லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பது மார்க்சிய உண்மைகளை ஆற்றலிழக்கச்செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்திரிபுவாதிகள் என்போர் அறிந்தும் அறியாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப் பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர்.

5. குருச்சேவ்வின் திருத்தல்வாதத்தை மறுதலித்தது. மார்க்சிய-லெனினியத்தைப் பாதுகாப்பதற்காகவும், திரிபுவாதத்தை எதிர்ப்பதற்காகவும் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்றது.

6. 1960 மார்ச் 30 அன்று சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட கடிதமும், அதற்குப் பதிலளித்து சீனக் கம்யூனிஸ்ட்கட்சியின் ஜூன்-14 தேதியிட்ட சர்வதேச பொதுவுடைமைஇயக்கத்தின் பொதுவழி பற்றிய முன்வரைவுஎன்ற கடிதமும்உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிளவுக்குக் காரணமாயிற்று. இந்த முன்வரைவுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது ஒன்பது விமர்சனங்களை முன்வைத்தது. இந்த ஆவணங்கள்தான் மாபெரும் விவாத ஆவணங்கள்என்று அறியப்படுகின்றன.

சோவியத் ரஷ்யாவில் திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல் வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட்கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட்இயக்கம் பிளவுகளை சந்தித்தது..

.. தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது.

1. குறுகிய கால இடைவெளிகளான 1927-28 மற்றும் 1934-35 ஆம் ஆண்டுகளை தவிர்த்து சிபிஅய் யின் வரலாறு முழுவதும்(பின்னர் சிபிஎம் இன் வரலாறும் அவ்வாறே இருந்ததுமுதன்மையாக சந்தர்ப்பவாதமாகவெ இருந்துள்ளது. சிபிஅய்யின் அந்நாளைய பொதுச் செயலாளராக இருந்த பி.சி.ஜோசி காங்கிரஸ் தலைவர்களைக் "கம்யூனிஸ்ட் தலைவர்கள்" என்றும், "அரசியல் பிதாக்கள்" என்றும் தன்னுடைய கட்சியினரைக் "கம்யூனிஸ்ட் காங்கிரசார்" என்றும் 1949 ஆம் ஆண்டில் உருவகப் படுத்தினார்.

2. மேஜர் ஜெய்பால் சிங்கின் நாடு அழைக்கிறது” ஆங்கில அரசுக்கு எதிராக இராணுவத்தில் படை கட்ட முயற்சித்து ஆட்சி மாற்றத்திற்க்கு பின் நேரு அரசால் சிறை படுத்தப்பட்ட தோழர் பின்னர் தெலுங்கான போராட்டத்தில் பங்கெடுத்தவர் அவர் சந்தித்த பிரச்சினைகளை நூலாக்கியுள்ளது NCBH, அதில் நேருக்கு எழுதிய கடிதம் வெளியிட்டிருப்பார்கள் நேருவின் உண்மை முகத்தை அவர் கிழித்திப்பார் ஆனால் தலைமையோ அதே நேருவிடம்.... நட்பாக அரசின் சேவகனாக மாறியது எப்படி?

1946ல் ஆங்கிலேய ஏகாத்தியபத்தியதின் எதிர்பில் கடற்படைவிமானபடை மற்றும் காலாட்படை பிரிவுகள் மக்களுடன் இணைந்து போராடுகின்றனர் ஆங்கிலேயர்களோ விழிபிதுங்கி நிற்க்கின்றனர்,இங்கோ காந்தியும்நேருவும்பாட்டேலும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அறிக்கை விடுகின்றனர்போராட்டகாரர்களை கண்டிக்கின்றனர் பலிவாங்கிய ஆங்கில அரசை கண்டிக்க வில்லை

சி.பி.-யைகட்சியானது மார்க்சிய-லெனினியத்தின்அடிப்படைக் கோட்பாடுகளால்வழிநடத்தப்படுவதாக பேராயம் கூறியது. உண்மையில் அக்கட்சியோ நவீன திரிபுவாதத்திற்கு ஆதரவான நிலையை எடுத்தது. அதனுடைய முன்னேற்றத்தைத்தடுக்கும் தடைக்கற்களாககருதி மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளை நிராகரித்தது.

நேருவின் அரசாங்கம் தெலுங்கானா போராட்டத்தை நசுக்க 60 ஆயிரம் துருப்புக்களைக் குவித்தது.கொடூரமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதுகடுமையான அடக்குமுறைகளைக் கையாள்வதால் மட்டுமே சாதிக்க முடியும் என எண்ணிக் கொண்டிருந்த   பலருக்கு,  முதன்முதலாக நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்தை வினியோகம் செய்திருந்த கம்யூனிஸ்ட்களின் மக்கள் செல்வாக்கை இந்திய இராணுவத்தின் அனைத்துத் துருப்புக்களாலும், எறிகணை வாகனங்களாலும் துடைத்தெறிய முடியவில்லை. நேருவின் துருப்புகளாலும், எறிகணை வாகனங்களாலும் சாதிக்க இயலாதவற்றை சி.பி.-யின் தலைமை நிறைவேற்றியது.

1. தெலுங்கானா போராட்டத்தை விலக்கிக்கொள்வது என ஜுன் - 1951 தொடக்கத்தில் சி.பி..யின் மையக்குழு தீர்மானித்தது.

2. தெலுங்கானா போர்நேரு அரசாங்கத்தை தூக்கியெறிவதற்காகத் தொடங்கப்பட்ட போராட்டமோ அல்லது தொடர்கின்ற போராட்டமோ அல்ல.மாறாக நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ஒழிப்பதற்கான போராட்டமாகவே நடைபெற்றது என்று நேரு அரசாங்கத்துக்கு மையக்குழு உறுதியளித்ததுமையக்குழுவின் சார்பாகவும்சி.பி.மாநிலக் குழுவின் சார்பாகவும் அக்டோபர்-23,1951அன்று .கே.கோபாலன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அவ்வறிக்கையானது

அனைத்துப் போராட்டநடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலில் ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி அவர்களைத் தீவிரமாக பங்கேற்கச் செய்து காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்குமாறும் தெலுங்கானா விவசாயிகளையும், போராளிகளையும் கேட்டுக்கொண்டது”.

காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி தெலுங்கானா போராட்டம் கைவிடப்பட்டது. அந்த அறிக்கையை நிறைவுசெய்வதற்கு முன்பாக கோபாலன் கூறியதாவது:

கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் கூறியதுபோல தெலுங்கானா பிரச்சினை என்பது உண்மையில் நிலம் குறித்த பிரச்சினையாகும். அரசுஅதிகாரம் குறித்த பிரச்சினை அல்ல”.

சி.பி.கட்சியானது 1951 மத்தியில் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை நேருவிடம் பேசுவதற்கு அனுப்பிவைத்தது.அக்குழுவின் நோக்கம் கட்சியானது புரட்சிகர வழியை கைவிட்டு விட்டது என்றும்நேருவின் அயலுறவுக் கொள்கையில் உள்ள முற்போக்கான கூறுகளை ஆதரிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை மேற்கொள்வது என்றும் அமைதிவழி பாராளுமன்றத்தின் மூலம் மாற்றம்அமைதி வழிப் புரட்சி என்ற திருத்தல்வாத நிலையை எடுத்துள்ளது என்பதை அறிவிப்பதுதான்.

இன்றைய உலக மயமாக்கல் உலகே ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்திய சிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க தடுக்க முடியாதவையே அதனை அறிந்து அதன் தவறுகளை விமர்ச்சிக்கும் அளவு வளர்ச்சி மட்டுமே ஒரு தத்துவ தலைமைக்கு அழகு அவையின்றி அரசியல் ஓட்டையாண்டிகளாகி போனவர்கள் இதனை எதிர்த்து போராட திறன் அற்றவர்களே.

முதலாளிகளின் தேவைகளுக்காக ஓடோடி வரும் வலதுசாரிீ இயக்கம் மக்களை ஏமாற்றி மக்களின் நாயகர்களாக வலம் வரும் பொழுது , மக்களின் இந்த எல்லா ஒடுக்கு முறைக்கும் முடிவுகட்டி மக்கள் ஒடுக்குமுறையற்ற ஒரு நல் வாழ்க்கை அளிக்க முனையும் புரட்சியாளர்கள் இடதுசாரிகள் மக்களிடமிருது அன்னிய படும் இடம் எது தோழர்களே.(பதில் எதிர்பார்க்கிறேன் தோழர்களே).

இன்று உலக மயமாக்கல் சூழலில் ஏகாதிபத்தியம் எதிர்புரட்சிகர கருத்துகளை திணிப்பதையும் பல மாலெ அமைப்புகள் தங்களை புரட்சிகர அமைப்புகள் என்று கூறிக் கொண்டே எதிர்புரட்சிக்கு வித்திடும் போக்கை கணக்கில் கொண்டே எழுதுகிறேன்...

இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய நிலவுடமை கலாச்சாரமாகும். இன்றைய நிலையில் இருவேறு ஏகாதிபத்திய கலாச்சாரம் இந்திய மக்களை ஆட்டிப் படைக்கிறது. ஒன்று அமெரிக்கா மற்றொன்று ரஸ்ய ஏகாதிபத்தியம்.

முதலில் அமெரிக்க உள்ளிட்ட மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் தம் கலாச்சாரத்தை எப்படி பரப்புகின்றது என்று பார்ப்போம். (1) தனி நபர்வாதத்தை தூக்கி நிறுத்துகிறது. (2)வரைமுறையற்ற ஆபாசத்தை பர்ப்புகிறது. (3)விரக்தியை தூண்டும் நடவடிக்கைகள். (4) உதிரிதனமாக வன்முறையை பரப்புகிறது. (5)அறிவியல் கலந்த மூட நம்பிக்கையை பரப்புவது. (6) மேட்டிமைதனத்தை பரப்புதல். (7)புதிய இடதுகள் என்ற போர்வையில் மார்க்சிய லெனின்யத்தைச் சிதைத்தல்.

மற்றொரு புரம் ரஸ்ய ஏகாதிபத்தியம் மார்க்சிய லெனின்யத்தை திரித்து, இங்குள்ள பண்டைய இந்திய இதிகாசங்களுடன் இன்றைய அறிவியலையும், தொழிற் நுட்ப வளர்ச்சியை (இன்றைய அதி நவீன) மார்க்சிய வழியில் வளர்தெடுக்காமல் மார்க்சியத்தை திரிப்பது இவர்களின் வேலையாக உள்ளது. அதாவது புரட்சிகர உள்ளடகமின்றி புரட்சி வார்த்தைகளை பயன்படுத்துதல்; புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்தே மார்க்சியத்தை பிரித்தல். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் ஏகாதிபத்தியம் இந்தச் சமூகத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து கொண்டுள்ளது, அதனை எதிர் கொள்ள திரன் அற்று அதில் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது இதிலிருந்து மாறுபட்டு நிற்க்கும் அந்தச் சொற்பர்கள் இங்கே பிரதிபலிப்பதில்லை அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.... புரட்சிகர அமைப்புகள் இதே சமூகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளனர் அவர்கள் மார்க்சியம் பயின்றிருந்தாலும் அவர்களின் சிந்தனை போக்கு கணக்கில் கொள்ள வேண்டியதன்றோ?

இதன் அடிப்படையில் ஒரு சரியான வழியை தேர்ந்தெடுப்போம்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்