நேற்றைய விவாதத்தை ஒலி வடிவில் கேட்க்க இங்கே அழுத்தவும் தோழர்களே
வரலாறு காணாத வேலையின்மை, இருக்கும் வேலைகளில் இருந்தும் (சிறப்பான துறைகளாக கருதப்படும் ஐ.டி. மற்றும் சேவை துறைகளில் இருந்து) ஆட் குறைப்பு, விண்ணை முட்டும் விலையேற்றம், பண வீக்கம், “உண்மையான” வளர்ச்சியின்மை இதற்கெல்லாம் மேலாக சாதாரண மக்களுக்கும் கொழுத்த பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள ஏற்ற தாழ்வு பன் மடங்கு பெருகியுள்ளது. இதை மாற்றுவதற்கான வழிமுறைகளை, திட்டங்களை இந்த பட்ஜெட்டில் ஏதும் இருக்கிறாரா ? என்றால், இல்லை என்பதுதான் வருத்தமான விசியம்.
இந்த சூழலையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு , இந்தியா 2014- க்குப் பிறகு வேகமாக வளர்ந்து வருகிறது , இப்பொழுது அமிர்த காலத்தை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது என்று பட்ஜெட் உரையில் முழங்குகிறார் நிர்மலா, மோடி மேஜையை தட்டி வரவேற்கிறார்!
இந்தியா பிரிட்டனையும் பின்னுக்கு தள்ளி வேகமாக வளர்ந்து வரும் நாடு என்றால் ஏன் 80 கோடி மக்களுக்கு ரேஷன் இலவசமாக கொடுக்க வேண்டும்?
வளர்ச்சி எல்லாம் இல்லாமல் இல்லை, ஆனால் அந்த வளர்ச்சி யாருடைய வளர்ச்சி ? யாருக்கான வளர்ச்சி என்று பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
ஆர்கனைஸ்டு செக்டார் என்று சொல்லக்கூடிய ஒழுங்கமைக்கப்பட்ட சில தொழில் துறை நிறுவனங்களுக்கு “வளர்ச்சி” இந்த பத்தாண்டு காலங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ்வளர்ச்சி ஒழுங்கமைக்கப்படாத அல்லது அமைப்பு சாரா துறைக்கு , சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற் துறைக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உண்மையில் ஒழுங்கமைக்கப்படாத துறைகளின் (Informal Sector) வீழ்ச்சியை அடித்தளமாக கொண்டே இந்த வளர்ச்சி கட்டமைக்கப்படுகிறது.
அதனால்தான் இத்தகைய வளர்ச்சியில் வேலை வாய்ப்புகள் இல்லை, மக்களுக்கு போதிய வருமானம் இல்லை, சந்தையில் பொருள் வாங்குவோர் இல்லை அதனால், புதிய முதலீடுகளும் இல்லை. உண்மையில் பொருளாதாரம் வளரவில்லை.
இதையெல்லாம் சரி செய்ய வேண்டிய அரசு இத்தகைய ” கோளாறே” (வேலையில்லா வளர்ச்சி) தனது பெருமையாக எண்ணுகிறது. பொருளாதாரத்தை இப்படித்தான் டிஜிட்டல் மயமாக்குவோம் என மார் தட்டுகிறது. இந்த பார்வையில் விளைந்ததுதான் இந்த பட்ஜெட்!
No comments:
Post a Comment