கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (காரல் மார்க்சும் எங்கெல்சும்)-தேன்மொழி

 இரண்டு மாதம் அரசியல் ஆட்சி அதிகாரத்தி லிருந்த பாரீஸ் கம்யூனது அனுபவத்தி லிருந்து, காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் கீழ்கண்ட முடிவிற்கு வந்தார்கள்.

அதாவது, "ஏற்கனவே பூர்த்தியான தயார் நிலையிலுள்ள அரசுப் பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த காரியங்களுக்காகப் பயன் படுத்திக்கொள்ள முடியாது".(கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை, பக்கம் 8) ஆகவே தற்போதுள்ள பாராளுமன்ற முறையிலான அரசமைப்பிலுள்ள அரசுப் பொறியமைவை, அதாவது போலீஸ், இராணுவம், நீதிமன்றம், சிறைச்சாலை, நிர்வாக அமைப்புகள் போன்ற அரசு நிறுவனங்களை தொழிலாளி வர்க்கம் (கம்யூனிஸ்டுக் கட்சி) தேர்தல்களில் ஈடுபட்டு வெற்றிபெற்று அமைச்சரவையை அமைத்து இந்த அரசுப் பொறியமைவை கம்யூனிஸ்டு கட்சியானது கைப்பற்றி அதாவது அரசுப்பொறியமைவை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அதனைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாக்கவோ, வளர்க்கவோ, தீர்க்கவோ முடியாது என்ற பொதுக் கோட்பாட்டை காரல் மார்க்சும் எங்கெல்சும் பல ஆண்டுகளுக்கு முன்பே தெளிவுபடுத்தி யுள்ளனர். ஆனால் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களில் பலர், பல நாடுகளிலும் உள்ள இவர்கள் தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு எதிராகவே செயல்பட்டுள்ளார்கள் என்பதை உலக வரலாற்றில் நாம் காணலாம்.

(தேர்தல்களில் நிற்கக் கூடாது என்று மார்க்சியம் கூறவில்லை. குறிப்பாக இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு என்ற நூலில் லெனின் தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்க வேண்டும் என்றே லெனின் வழி காட்டுகிறார். ஆனால் தேர்தல் மூலமாக ஆட்சியைக் கைப்பற்றி மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்பது தவறு என்றும். தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி நிலவுகின்ற அரசு இயந்திரத்தின் மூலம் மக்களுக்குகம்யூனிஸ்டுகள் எதுவும் செய்யமுடியாது என்ற உண்மையை மக்களிடம் பிரச்சாரம்செய்வதற்கு பாராளுமன்றத்தை ஒரு பிரச்சார மேடையாகத்தான் கம்யூனிஸ்டு கள் பயன்படுத்த வேண்டும் என்றே லெனின் கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டினார். மேலும் இந்த தேர்தல் முறைகளின் மீது மக்கள் நம்பிக்கைவைத்திருக்கும் வரைதான் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் பங்கேற்க வேண்டும் என்றும் தேர்தல்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் தேர்தல்களைப் புறக்கணித்து உழைக்கும் மக்களைத் திரட்டி ஒரு புரட்சியின் மூலம் இந்த முதலாளித்துவப் பாராளுமன்ற ஆட்சியை அகற்றிவிட்டு சோவியத்து வடிவத்திலான பாட்டாளிகளின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்றே கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டினார்கள். இந்த அடிப்படையிலேயே ரஷ்யாவில் ஒரு புரட்சியின் மூலம் முதலாளித்துவ ஆட்சி அகற்றப்பட்டு சோசலிச சோவியத்து ஆட்சி உருவாக்கப்பட்டது. அதன்மூலம் மார்க்சிய ஆசான்கள் சொன்னவைகள் நடைமுறையில் நிருபிக்கப்பட்டது. (இனிமேலும் இதனை நிருபிக்க வேண்டும் என்று சிலர் வாதிடுவது குதர்க்கவாதம் ஆகும்).

இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளில் ஒரு பிரிவினர் மார்க்சிய ஆசான்களால் எடுத்துச் சொல்லப்பற்றவற்றை புறக்கணித்து தேர்தல் களில் ஈடுபட்டு கம்யூனிஸ்டுக் கட்சியை பாராளுமன்றவாதக் கட்சியாகவே மாற்றி விட்டனர். அவர்களுக்கு தேர்தல் முறைகளைத் தவிர சமூக மாற்றத்திற்கு வேறு வழிமுறைகள் தெரியாது. வேறு வழி முறைகளைப் பற்றி அவர்கள் எப்போதும் சிந்திப்பதில்லை.. மற்றொரு பிரிவினர் தேர்தல்களில் பங்கேற்று இந்த பாராளுமன்ற ஆட்சியின் பிற்போக்குத்தனத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டத் தவறிவிட்டனர். இப்பிரிவினர் தேர்தல்களை முழுவதுமாகப் புறக்கணித்து மக்களிடமிருந்து தனிமைப்பட்டுவிட்டனர். இவ்விரு பிரிவினரும் மார்க்சிய ஆசான்களினது வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறிவிட்டனர்.

ஆகவே கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் பங்கேற்க வேண்டும். அதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பது அவர்களின் நோக்கமாக இருக்கக்கூடாது. மாறாக இந்தப் பாராளுமன்ற ஆட்சிமுறையின் போலித்தனத்தை மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். மேலும் தொழிலாளர் கள் மற்றும் விவசாயிகளுக்கு உண்மையிலேயே அதிகாரத்தைக் கொடுக்கக் கூடிய சோவியத்து ஆட்சி முறையை ஏற்படுத்துவதற்காக உழைக்கும் மக்கள் போராட வேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை அதற்குத் தயாரிப்பவர்கள்தான் மார்க்சிய ஆசான் களைப் பின்பற்றும் உண்மையான கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்).

கடந்த பல ஆண்டுகளாக உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. என்றாலும் காரல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்சால் எழுதப்பட்ட கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் எழுதப்பட்ட பொதுக் கோட்பாடுகள் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்சில இடங்களில் அதனை செழுமைப்படுத்தலாம். அறிக்கையே கூறுவதுபோல், இந்தக் கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும், அவ்வப்போது இருக்கக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இதன் பொருள் என்னவென்றால், கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆகியோர் பொதுவான கோட்பாடுகளை உருவாக்கித் தந்துள்ளார்கள். அதாவது பிரச்சனைகளை எப்படி பார்ப்பது, அதற்கான தீர்வுகளை எப்படி வந்தடைவதற்கான ஒரு கண்ணோட்டத்தை மட்டுமே தந்துள்ளார்கள்.

இதனை நாம் புரிந்துகொண்டு உள்வாங்கி இன்றைய சூழலுக்கு அதனை பொருத்தி குறிப்பான கோட்பாடுகளை நாம்தான் உருவாக்க வேண்டும். அத்தகைய குறிப்பான கோட்பாட்டின் அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் கொள்கை வகுத்து செயல்பட வேண்டும் என்றே மார்க்சும் எங்கெல்சும் நமக்கு வழிகாட்டுகிறார்கள். இதற்கு மாறாக மார்க்சும் எங்கெல்சும் கூறியவற்றை காலம் மற்றும் களத்தினை புறக்கணித்துவிட்டு பிரச்சனைகளைப் பற்றி முடிவு செய்வது வறட்டுவாதமாகும். இத்தகைய வறட்டுவாதத்தில் நாம் விழுந்துவிடாமல் இருப்பதற்கு நாம் நடைமுறைப் பணிகளில் அதாவது வர்க்கப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். நடைமுறையையும், தத்துவத்தையும் இணைக்கும் கலையை கற்றுத்தேர வேண்டும்."நவீனகால முதலாளித்துவத்தின் சொத்துடமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கிவருகிறது என்பதைப் பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையின் நோக்கம்"முதலாளித்துவ சமுதாயத்திலுள்ள முதலாளித்துவ தனிவுடமையானது என்றென்றும் நீடித்து நிலைபெற்று இருக்க முடியாது. இதற்கு மாறாக முதலாளித்துவ தனிவுடமையானது ஒரு காலத்தில் ஒழிக்கப்பட்டுவிடும் என்ற உண்மையை கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் காரல்மார்க்சும், எங்கெல்சும் எடுத்து விளக்கினார்கள்.

ஒருகாலத்தில் மன்னராட்சி நடைபெற்று வந்தபொழுது பண்ணையார்களின் ஆதிக்கமும் அவர்களுக்கான தனிவுடமை முறையும் நிலவியது. ஆனால் பண்ணையார்களின் ஆதிக்கங்கள் நிலவிய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பண்ணை யார்களின் ஆதிக்கங்கள் ஒழிக்கப் பட்டுவிட்டது. மன்னராட்சியும் ஒழிந்துவிட்டது. தற்போது மேலைநாடுகளில் முதலாளிகளின் ஆட்சிதான் நடக்கிறது. இதுபோலவே இனி வரும்காலத்தில் இந்த முதலாளிகளின் ஆட்சியும் ஒழிக்கப்பட்டு முதலாளிகளின் தனிவுடமைகளும் ஒழிக்கப்பட்டு பொருளுற் பத்தி சாதனங்களின் உடமையானது சமுதாயத்தின் உடமையாக மாற்றப்படும் என்று மார்க்சியம் கூறுகிறது. அதனை நடைமுறையில் ரஷ்யாவில் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்டுக் கட்சி சாதித்துக் காட்டியது. ஒரு சமுதாயத்தில் முதலாளித்துவ தனிவுடமை முறை நீடிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்த காரணத்தை முடிவிற்குகொண்டுவராதவரை தனிவுடமை முறை நீடிக்கவே செய்யும். ரஷ்யாவில் முதலாளித்துவ தனிவுடமை முறையை ஒழித்துக்கட்டுவதற்கான பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசை அங்கு கம்யூனிஸ்டுகள் உருவாக்கியிருந்த போதிலும், அங்கு வர்க்கங்கள் உடனடியாக ஒழிக்கப்படவில்லை, அதாவது அங்கு வர்க்கங்கள் நீடித்திருந்தது. ஆகவே அங்கேயும் வர்க்கப் போராட்டத்தை நடத்திட வேண்டிய அவசியம் இருந்தது. ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியானது முதலாளித்துவ ஆட்சியின் போது வர்க்கப் போராட்டத்தை திறமையாக நடத்தி வெற்றி கண்டிருந்த போதும், பாட்டாளிவர்க்க சர்வாதிகார ஆட்சியின் போது வர்க்கப் போராட்டத்தை எப்படி நடத்துவது என்ற தெளிவில்லாமல் இருந்தது. அதற்கு அந்த சூழலில் வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான அனுபவம் அந்தக் கட்சிக்கு இல்லாத காரணத்தால்ங்கு அதிகாரத்தை இழந்த முதலாளி வர்க்கத்திடம் தோல்வியடைந்து அதிகாரத் தைப் பறிகொடுத்தது. இதன் மூலம் அதிகாரத்திற்கு வந்த முதலாளி வர்க்கமானது முதலாளித்துவ ஆட்சி அதிகாரத்தையும், முதலாளித்துவ தனிவுடமையையும் மீட்டுக்கொண்டது. இருந்த போதிலும் இறுதியாக வெல்லப்போவது உழைக்கும் வர்க்கமே ஆகும். எவ்வளவு காலம் ஆனாலும் சரி, எவ்வளவு தோல்விகளை சந்தித்தாலும் சரி, இறுதியாக தனிவுடமை ஒழிக்கப்பட்டு பொதுவுடமை மலர்ந்தே தீரும். காலம் செல்லச் செல்ல, உழைக்கும் வர்க்கமும், அவர்களுக்கு வழிகாட்டும் கம்யூனிஸ்டு களும் பல அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டு புதிய முறையிலான போராட்ட முறைகளைக் கையாண்டு தனிவுடமைக் கொடுமைகளை ஒழித்துக்கட்டி உழைக்கும் மக்களுக்கான புதியதோர் உலகத்தைப் படைப்பார்கள்.

"கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்து, - வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி இதிலிருந்து எழும் சமூக கட்டமைப்பும் அந்த சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றுக்குரிய அடித்தளமாய் அமைகின்றன; ஆகவே (புராதன நிலப் பொதுவுடமை சிதைந்துபோன காலம் முதலாய்) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக் கும் சுரண்டும் வர்க்கத்துக்கும் இடையே நடைபெறும் போராட்டங்களின் வரலாறா கவே இருந்துவருகிறது; ஆனால் இந்தப் போராட்டம் தற்போது வந்தடைந்திருக்கும் கட்டத்தில் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டு வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்) சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளி வர்க்கத்திட மிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் அனைத்தையும் அதேபோது சுரண்டலிலி ருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் என்றென்றைக்குமாய் விடுவித்தே ஆக வேண்டும் என்ற இந்த அடிப்படைக் கருத்தை முன்வைத்தவர் வரலாற்றில் காரல் மார்க்ஸ் மட்டுமே ஆவார்" பொருளாதார உற்பத்தியும், அதன் அடிப்படையில் எழும் சமூக கட்டமைப்பும், அந்த சமுதாயத்தின் பொருளாதார அடித்தளமாக அமைகிறது. இந்த அடித்தளத்திலிருந்து அரசியல்,அறிவுத்துறை கருத்துக்கள் உருவாகின்றன. இந்த சமுதாயத்தில் சுரண்டும் வர்க்கமும் சுரண்டப்படும் வர்க்கமும் உருவாகின்றன. இந்த இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் போராட்டங்கள் நடைபெறுகின்றது. இத்தகைய போராட்டமே சமூக வரலாற்றை தீர்மானிக்கிறது என்று மார்க்சும் எங்கெல்சும் முடிவுக்கு வந்தனர். ஆகவே மனிதகுல வரலாறு அனைத்தும் இந்த வர்க்கப் போராட்டங்களில் வரலாறாகவே இருக்கிறது. தற்காலத்தில் சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கம் இந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெற வேண்டுமானால் அனைத்து பாதிக்கப்பட்ட சமூகங்களையும் விடுவிப்பதன் மூலம் மட்டுமே தனது சொந்த விடுதலை அடைய முடியும் என்று மார்க்சும் எங்கெல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் விளக்கியுள்ளார்கள்.

காரல் மார்க்ஸ் எங்கல்ஸ் இவர்கள் இருவரும் உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தொழிலாளர்களது சங்கமான கம்யூனிஸ்ட் கழகத்தின் வேலை திட்டமாய் வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் கழகம் முதலில் முற்றிலும் ஜெர்மன் தொழிலாளர்களுக்கு மட்டுமாய் இருந்தது. பிறகு சர்வதேச நிறுவனம் ஆயிற்று. 1848க்கு முன்பு கண்டத்துள் நிலவிய அரசியல் நிலைமைகளில் தவிர்க்க முடியாதபடி இது ரகசிய சங்கமாகவே செயல்பட வேண்டி இருந்தது.

1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கழக காங்கிரஸ் முழு அளவிலான தத்துவார்த்த நடைமுறை கட்சி வேலை திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்து அளிக்கும்படி மார்க்சையும் எங்கல்சையும் பணித்தது. 1848 ஜனவரியில் ஜெர்மன் மொழியில் தயாரித்து முடிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி பிப்ரவரி 24 பிரெஞ்சு புரட்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் லண்டன் அச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. 18848 ஜூன் எழுச்சிக்கு சற்று முன்னதாய் பாரிசில் வெளியாயிற்று. முதலாவது ஆங்கில மொழிபெயர்ப்பு மிஸ் ஹெலன் மாக்ஃபர்லெனால் செய்யப்பட்டு லண்டனில் ஜார்ஜ் ஜூலியன் ஹார்னியின் பத்திரிக்கையில் 1850 வெளிவந்தது. டேனிஷ் போலிஷ் பதிப்புகளும் வெளியாகி இருக்கின்றன பாட்டாளி வர்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையி லான முதலாவது பெரும் போராய் 1848 ஜூனில் பாரிசில் மூண்ட எழுச்சி தோல்வியுற்றதைத் தொடர்ந்து சிறிது காலத்துக்கு ஐரோப்பிய தொழிலாளி வர்க்கத்தின் சமூக அரசியல் ஆர்வங்கள்மீண்டும் பின்னிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் பிறகு மேலாண்மைக்கான போராட்டம் மீண்டும் பிப்ரவரி புரட்சிக்கு முன்பு இருந்தது போல் சொத்துடைய வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையில் மட்டும் நடைபெறும் போராட்டம் ஆகியது. தொழிலாளி வர்க்கம் அரசியல் நடமாட்ட இடத்துக்காக போராட வேண்டிய நிலைக்கும், முதலாளித்து வர்க்கத்தின் தீவிரவாதிகளது தீவிரசாரியாய் இருக்கும் நிலைக்கும் தாழ்த்தப்பட்டது. எங்காவது சுயேட்சையான பாட்டாளி வர்க்க இயக்கங்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும் அறிகுறிகள் வெளிப்படும்மாயின், ஈவிறக்கம் இன்றி அவை நசுக்கப்பட்டன. இவ்வாறு தான் பிரஷ்யப் போலீஸ் அப்போது கொலோனில் இருந்த கம்யூனிஸ்ட் மையக் குழுவை வேட்டையாடிற்று. மையக்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு 18 மாதங்களுக்கு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பிறகு 1852 அக்டோபரில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது புகழ்பெற்ற இந்த "கொலோன் கம்யூனிஸ்ட் வழக்கு" விசாரணை அக்டோபர் 4லிருந்து நவம்பர் 12 வரை நடைபெற்றது. கைதிகள் ஏழு பேருக்கு மூன்றிலிருந்து ஆறு ஆண்டுகள் வரையிலான கோட்டை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எச்சியிருந்த உறுப்பினர் கள் கம்யூனிஸ்ட் கழகம் கலைக்கப்பட்டதாக அறிவித்தனர். அறிக்கையை பொறுத்த வரை இனி அது தடமற்று மறைந்துவிடும் என்பதாகவே தோன்றிற்று.

காரல் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகிய இருவரும் சேர்ந்து உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்பதுதான் அன்றைய ஐரோப்பாவில் உழைக்கும் மக்களுக்காக செயல்பட்டு வந்த முன்னணி செயல்பாட்டாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்த ஆவணமாக அமைந்தது.

மேற்கே ஐரோப்பா முழுவதும் இந்த அறிக்கைக்கு செல்வாக்குப் பெருகியது. ஆனால் 1848 ஜூனில் பாரிஸில் நடைபெற்ற எழுச்சி தோல்வியுற்றதற்குப் பிறகு தொழிலாளி வர்க்க இயக்கம் பின்னடைந்தது. அதற்குப் பின்பு சொத்துடைய வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையில் போராட்டம் நடந்து வந்தது. இப்போதும் நமது நாட்டில் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்குமான போராட்டம் தீவிரமடைய வில்லை மாறாக ஆளும் வர்க்கங்களுக்கு இடையில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

உதாரணமாக தமிழ்நாடு ஆளுநருக்கும்திமுகவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக் கும் போராட்டம். அந்த காலத்தில் ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்க போராட்டம் நடக்கும் இடங்களில் உதாரணமாக கொலோனில் இருந்த கம்யூனிஸ்டுகளை பிரஷ்யப் போலீஸ் கைதுசெய்து வழக்கு தொடுத்து ஒடுக்கியது. அதன் காரணமாக கம்யூனிச இயக்கம் பின்னடைந்தது..

ஆனாலும் அதற்குப் பின்னால் தொழிலாளி வர்க்க இயக்கம் தன் பலத்தை கூட்டிக் கொண்டு போராடியது வரலாறு. இத்தகைய போராட்டங்களுக்கெல்லாம் அடிப்படையான கோட்பாட்டு புரிதல்களை இன்றளவும் ஏற்படுத்திக் கொண்டிருப்பது மார்சியம். அந்த மார்க்சிய ஆசான்களால் உருவாக்கப்பட்ட ஆவணம் தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் திரும்பவும் ஆளும் வர்க்கங்களை தாக்குவதற்கு போதிய பலம் பெற்றதும், அகில தொழிலாளர் சங்கம் உதித்தெழுந்தது. ஆனால் இந்த நிறுவனம் ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் சேர்ந்த போர்க்குணம் படைத்த பாட்டாளி வர்க்கம் அனைத்தையும் ஒரே அமைப்பாய் இணைத்திட வேண்டும் என்ற குறிக்கோளுடன் நிறுவப்பட்ட தால், அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்ட கோட்பாடுகளை உடனடியாய் இது ஏற்று பிரகடனம் செய்ய முடியவில்லை. ஆங்கிலேய தொழிற்சங்கங்களுக்கும் பிரான்சையும் பெல்ஜியத்தையும் இத்தாலியையும் ஸ்பெயினையும் சேர்ந்த புருதோன் பற்றாளர்களுக்கும், ஜெர்மனியில் லஸ்ஸாலியார் களுக்கும் ஏற்புடையதாகும் படி போதிய அளவு பரவலான வேலை திட்டத்தையே அகிலமானது ஏற்க வேண்டி இருந்தது. எல்லா கட்சியினருக்கும்திருத்திகரமான வகையில் இந்த வேலைத் திட்டத்தை வகுத்து அளித்த மார்க்ஸ் ஒன்றிணைந்த செயல்பாட்டின் விளைவாகவும் பரஸ்பர விவாதத்தின் விளைவாகவும் தொழிலாளி வர்க்கத்திற்கு நிச்சயமாய் கைவரப் பெறும் அறிவின் வளர்ச்சியில் முழு நம்பிக்கை வைத்திருந்தார்.. மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தின் நிகழ்வுகளும், நல்லதும் கெட்டதுமான மாற்றங்களும், போராட்டத்தின் வெற்றிகளையும் விட அதிகமாய் தோல்விகளும் மாந்தர்தம் அபிமானத்துக்குரிய பல வகைப்பட்ட உத்திகளும் போதுமானவை அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தி தொழிலாளி வர்க்க விடுதலைக்கு வேண்டிய மெய்யான நிலைமைகள் குறித்து முன்னிலும் அதிகமாய் முழுமையான ஞானம் பிறப்பதற்கு வழிகோலவே செய்யும். மார்க்ஸ் எதிர்பார்த்தது போலவே நடைபெற்றது. அகிலமானது 1864இருக்க கண்ட தொழிலாளி வர்க்கத்திலிருந்து முற்றிலும்வேரான ஒரு தொழிலாளி வர்க்கத்தை 1874 இல் அது கலைக்கப்பட்ட போது விட்டுச் சென்றது.. பிரான்சில் புருதோனியமும், ஜெர்மனியில் லஸ்ஸாலியமும் இறந்து மறைந்து கொண்டிருந்தன. பழமைவாத ஆங்கிலேய தொழிற்சங்கங்கள் கூட அவற்றில் பெரும்பாலானவை நெடு நாட்களுக்கு முன்பே அகிலத்தில் இருந்து தமது தொடர்பை வெட்டிக்கொண்டு விட்டன, என்ற போதிலும் படிப்படியாய் முன்னேறி கடந்த ஆண்டில் ஸ்வான்சியில் அவற்றின் தலைவர் பேசுகையில், "கண்டத்தில் சோசலிசத்திடம் எங்களுக்கு இருந்த கிலியெல்லாம் மறைந்து விட்டது" என்பதாய் அவற்றின் சார்பில் அறிவிக்க துணியும் நிலையை நோக்கி வந்திருக்கின்றன. உண்மை என்னவென்றால்அறிக்கையின் கோட்பாடுகள் எல்லா நாடுகளின் தொழிலாளர்கள் இடத்தில் கணிசமான அளவுக்கு செல்வாக்கு பெற்று விட்டன.. இதுதான் ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கம் மீண்டும் செல்வாக்கு பெற்ற வரலாறாகும். இந்த வரலாற்றுப் பாடத்திலிருந்து இன்றைய கம்யூனிஸ்டுகள் பாடம் கற்றுக் கொண்டு செயல்படுவதன் மூலம் இந்தியாவில் கம்யூனிசத்தை செல்வாக்கு பெற்ற, மக்களின் ஆதரவு பெற்ற கொள்கையாக மாற்றவும், கம்யூனிச இயக்கம் பலமாக வளரவும் முடியும் என்பதற்கு மேற்கு ஐரோப்பிய கம்யூனிச வரலாறு சான்றாக உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதப்பட்ட காலத்தில் அதற்கு நாங்கள் சோசிலிஸ்ட் அறிக்கை என்பதாய் பெயர்சூட்ட முடியவில்லை. 1847 இல் சோசிலிஸ்ட் எனப்பட்டோர் ஒருபுறத்தில் வெவ்வேறு கற்பனாவாத கருத்தமைப்புகளைச் சேர்ந்தோராய் இருந்தனர். இங்கிலாந்தில் ஓவனியர்கள், பிரான்சில் ஃபூரியேயர்கள், இந்த இரு வகையினரும் ஏற்கனவே குறுகுழுக்களின் நிலைக்கு தாழ்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தவர்கள். மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட சமூக மருத்துவ புரட்டர்களாய் மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்த தீங்கும் நேராதபடி பலவகையான ஒட்டு வேலைகள் மூலம் எல்லா வகையான சமூக கேடுகளையும் களைகிறோம் எனக் கூறிக்கொண்டவர்களாக இருந்தனர். இரு வகைப்பட்டோரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்து கொண்டு படித்த வகுப்பாரின் ஆதரவையே அதிகமாய் நாடி வந்தன.ர் தொழிலாளி வர்க்கத்தில் எந்தப் பகுதி வெறும் அரசியல் புரட்சிகள்மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை ஐயமற உணர்ந்து முழு நிறைவான சமுதாய மாற்றம் ஏற்படுவது இன்றியமையாதது என பறைசாற்றியதோ, அந்தப் பகுதி தன்னை அன்று கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொண்டது.

அது பக்குவம் பெறாத குத்தாயமாய் வரையப்பட்ட முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிசமாக இருந்தது, என்றாலும் அடிப்படையான விவகாரத்தை குறிப்பிடுவதாக இருந்தது. பிரான்சில் காபேயின் கற்பனாத கம்யூனிசத்தையும் தோற்றுவிக்கும் அளவுக்கு தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் சக்தி வாய்ந்ததாய் இருந்தது. இவ்விதம் 1847 இல் சோசலிசம் மத்திய தர வர்க்கமாய் இருக்க, கம்யூனிசம் தொழிலாளர் வர்க்க இயக்கமாய் இருந்தது. சோசலிசம் எப்படியும் கண்டத்திலேனும் "கண்ணியவான் மனப்பாங்குடயதாய்" (குட்டி முதலாளியமனப்பாங்கு உடையதாய்) இருக்க, கம்யூனிசம் இதற்கு நேர் மாறானதா இருந்தது. எங்களுடைய கருத்தோட்டம் "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாகத் தொழிலாளி வர்க்கத்தின் செயலால்தான் பெறப்பட்டாக வேண்டும்" என்பதாக இருந்ததால் இவ்விரு பெயர்களில் நாங்கள் எதை ஏற்ப்பது என்பது குறித்து ஐயப்பாட்டுக்கு இடம் இருக்கவில்லை, அதோடு அது முதலாய் இந்த பெயரை நிராகரிக்கும் எண்ணமும் கனமும் எங்களுக்கு ஏற்பட்டது இல்லை. என்று எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்னுரையாக எங்கெல்ஸ் எழுதியுள்ளார்.

இங்கே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதிய காலத்தில் அங்கு சோசிலிஸ்ட் என்ற பெயரில் பல்வேறு விதமான பிரிவினர் இருந்ததை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு சோசிலிஸ்ட்களாக இருந்தவர்கள் மூலதானத் திற்கும் முதலாளிகளின் லாபத்துக்கும் எவ்விதமான இடையூறும் ஏற்படாத வண்ணம் தங்களின் அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் பெரும்பாலும் படித்த அறிவாளிகளை மட்டுமே சார்ந்து இருந்தனர். அது போலவே தற்போதும் நமது நாட்டில் கம்யூனிஸ்ட் குழுக்கள் என்ற பெயரில் பல குழுக்கள் இருப்பதை நாம் காண்கிறோம். இவர்களில் பலர் உழைக்கும் வர்க்கத்தை சாராமல் குட்டி முதலாளித்துவப் பிரிவினரை சார்ந்து செயல்படுவதையும் காண்கிறோம். அதே வேளையில் உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை முன்னிறுத்தி செயல்படு பவர்களும் இருக்க காண்கிறோம். இவ்வாறு உழைக்கும் மக்களை சார்ந்து இருப்பவர்கள்தான் உண்மையான கம்யூனிஸ்ட்களாக ஆக முடியும். அன்று இருந்ததைப் போலவே இன்றும் இருவேறு பிரிவினர்இருப்பதை நாம் பார்க்கலாம். ஆகவே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தொடங்கி மார்க்சிய ஆசான் களால் முன்வைக்கப்பட்ட கம்யூனிச தத்துவ கோட்பாடுகளை நாம் கற்றுத் தேர்ந்து, கம்யூனிச இயக்கத்தின் வரலாறை கற்றுத் தேர்ந்து, தொழிலாளி வர்க்கம் இறுதியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு, செயல்படுவதன் மூலமே இங்கே ஒரு கம்யூனிச இயக்கத்தை கட்டி அமைக்க முடியும். அதேபோல் நாமும் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் ஆக ஆக முடியும்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையானது மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் கூட்டு படைப்பான தால், இதன் மையக்கருவாய் அமைந்த அடிப்படை நிர்ணயிப்பு மார்க்சுக்கே உரியது என எங்கல்ஸ் குறிப்பிட்டார். அந்த அடிப்படை நிர்ணயிப்பு வருமாறு, வரலாற்றின் வழிவந்த ஒவ்வொரு சகாப்தத்திலும், அப்போது ஓங்கிய நடப்பில் உள்ள பொருளாதார உற்பத்தி, பரிவர்த்தனை முறையும், இதிலிருந்து இன்றியமையா தவாறு, பெறப்படும் சமூக அமைப்பு முறையும் தான் அந்த சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றின் அடிநிலை ஆகின்றது. இந்த அடி நிலையில் இருந்து மட்டுமே, அந்த அரசியல், அறிவுத்துறை வரலாற்றினை விளக்க முடியும்.

ஆகவே (நிலத்தை பொதுவுடமை கொண்டிருந்த புராதான குடிகள் சமுதாயம் சிதைவுற்ற காலம் முதலாய்) மனித குல வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது, சுரண்டும் வர்க்கங்களுக் கும், சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும், ஆளப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டங் களது வரலாறு ஆகும். இந்த வர்க்கப் போராட்டங்களது வரலாறானது, பரிணாமங் களின் தொடர்வரிசையாய் அமைந்து தற்போது வந்தடையப்பட்டுள்ள கட்டத்தில், சுரண்டப்படும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் ஆகிய பாட்டாளி வர்க்கம், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தி லிருந்து தனது விடுதலை பெற வேண்டுமாயின் அதே போது சமுதாயம் முழுமையுமே எல்லாவிதமான சுரண்டலில் இருந்தும், ஒடுக்கு முறையில் இருந்தும் வர்க்கப் பாகுபாடுகளில் இருந்தும் வர்க்கப் போராட்டங்களில் இருந்தும் முற்றாகவும், முடிவாகவும் விடுவித்தே ஆக வேண்டும்என்றாகியுள்ளது. இந்தக் கோட்பாடுதான் மார்க்ஸ் மற்றும் எங்கெல்சால் வகுத்துக் கொடுக்கப்பட்ட அடிப்படை கோட்பாடாகும். இந்தக் கோட்பாட்டை கம்யூனிஸ்டுகள் எப்போதும் மறந்துவிடக் கூடாது. அதனை மேலும் எங்கெல்ஸ் கீழ்கண்டவாறு விளக்குகிறார்.

கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறி இருப்பினும், இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொது கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவையே. இங்கும் அங்கும் சிற்றில விவரங்களை செம்மை செய்யலாம். அறிக்கையே கூறுவது போல், இந்த கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல், எங்கும் எக்காலத்திலும் அவ்வப்போது இருக்கக்கூடிய வரலாற்று நிலைமைகளை சார்ந்ததாகவே இருக்கும். இந்த காரணத்தால் தான் புரட்சிகர நடைமுறைகள் பற்றி அறிக்கையிலிருந்து நாம் வேறு விதமாய் சொல்ல வேண்டி இருக்கும். 1848 ஆம் ஆண்டுக்குப் பிறகு நவீன தொழில் துறை பெருநடை போட்டு பிரமாதமாய் முன்னேறி இருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின்கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும் மேம்பாடுற்றும், விரிவடைந்தும் உள்ளது. இவற்றையும் மற்றும் முதலில் பிப்ரவரி புரட்சியிலும், பிறகு இன்னும் முக்கியமாய் முதன்முதலாய் பாட்டாளி வர்க்கம் முழுதாய் இரு மாதங்களுக்கு அரசியல் ஆட்சி அதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் கிடைத்த நடைமுறை அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின் இந்த வேலை திட்டம் சில விவரங்களில் காலம் கடந்ததாக ஆகிவிடுகிறது. கம்யூனானது முக்கியமாய் ஒன்றை நிரூபித்து காட்டிற்று, அதாவது ஏற்கனவே பூர்த்தியான தயார் நிலையில் உள்ள அரசு பொது அமைவை, தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றி தனது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நிரூபித்து காட்டிற்று. தவிரவும் சோசலிச இலக்கியத்தை பற்றி விமர்சனம் இன்றைய நிலவரத்துக்கு பற்றாக்குறை ஆனது என்பதை கூறத் தேவையில்லை. ஏனெனில் 1847 ஆம் ஆண்டு வரையிலான நிலவரம் மட்டும்தான் இந்த விமர்சனத்தில் இடம் பெற்றுள்ளது. அத்தோடு பற்பல எதிர்க்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்ட் களுடைய உறவு நிலை பற்றிய குறிப்புகள் கோட்பாட்டு அளவில் இன்றும் பிழையற்ற வையே, என்றாலும் கூட நடைமுறையில் காலம் கடந்தவை என்பது தெளிவு.ஏனென்றால் அரசியல் நிலைமை முற்றிலும் மாறி இருக்கிறது. வரலாற்றின் முன்னேற்றம் ஆனது அப்பிரிவில் குறிக்கப் படும் அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றை புவி பரப்பிலிருந்து துடைத்து, அகற்றி இருக்கிறது. ஆனால் இந்த அறிக்கை வரலாற்று ஆவணம் ஆகிவிட்டது இனி இதை திருத்த எங்களுக்கு உரிமை இல்லை. என்று எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை முன்னு ரையில் கூறியுள்ளார். இவற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியதுகம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் முன்வைத்த பொதுக்கோட்பாடுகள் இப்போதும் சரியானவையே. என்றாலும் வரலாற்றில் சமூக உற்பத்தியிலும் அரசியல் மற்றும் பண்பாட்டுத் துறைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை எல்லாம் கணக்கில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் மார்க்சியம் வகுத்துக்கொடுத்த பொதுக் கோட்பாட்டுக் கண்ணோட்டத்திலிருந்து நமது நடைமுறைக் கான கோட்பாடுகளை நாம் வகுத்துச் செயல்பட வேண்டும், என்பதுதான்மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் வழிகாட்டுதலாகும். ஆகவே நாம் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை முழுவதுமாகப் படித்து அதில் சொல்லப்பட்டுள்ள பொதுக்கோட்பாடுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது வெளிவந்த காலத்தில், எண்ணிக்கையில் அதிகம் இல்லாத விஞ்ஞான சோசலிச முன்னணிப் படையினர் அதை ஆர்வத்தோடு வரவேற்றனர். அதன் பின்பு அது சீக்கிரமே பின்னடைவைச் சந்தித்தது. 1848, ஜூனில் பாரீஸ் தொழிலாளர்களின் போராட்டங்கள் தோல்வியைத் தொடர்ந்து உருவான பிற்போக்கால் இந்தப் பின்னடைவு ஏற்பட்டது. 1852ல் கொலோன் கம்யூனிஸ்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்குப் பிறகு தொழிலாளர் இயக்கம் மறைந்துவிட்டது. அதன் காரணமாகவும் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கைக்கான செல்வாக்கு மறைந்து விட்டது. அதற்குப் பிறகு ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கங்களின் ஆட்சி அதிகாரத்தின் மீது தாக்குதல்கள் தொடுப்பதற்கான பலத்தைப் பெற்றவுடன் அகில தொழிலாளர் சங்கம் உருவானது. அப்போது ஐரோப்பியதொழிலாளர்களை மட்டுமல்லாது அமெரிக்கத் தொழிலாளர்களையும் ஓர் அணியில் திரட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

ஆகவே அதற்குத் துணைசெய்யும் விதத்தில் இந்தத் தொழிலாளர்கள் பின்பற்றிய புருதோனியத்தையும், ஜெர்மனிய லஸ்ஸாலியர்கள் போன்றவர்களையும் ஒரே அமைப்பிற்குள் இணைத்துக்கொள்ளும் விதமாக ஒரு வேலைத்திட்டத்தை மார்க்ஸ் உருவாக்கி முன்வைத்தார்.பக்கூனினும் இந்த வேலைத்திட்டத்தை அங்கீகரித்தார். இவ்வாறு வரையறுக்கப்பட்ட கோட்பாடு களின் வெற்றிக்கு, ஒரு ஒன்றுபட்ட செயல்பாட்டிலிருந்தும் விவாதத்திலிருந்தும் தொழிலாளி வர்க்கமானது நடைமுறை அறிவைப் பெறும் என்று மார்க்ஸ் நம்பினார். இதன் அடிப்படையிலான போராட்டத்தின் வெற்றியிலிருந்து கிடைக்கும் அறிவை விட

தோல்வியிலிருந்து அதாவது குறிப்பிட்ட வழிமுறையையானது எவ்வளவு குறைபாடானது என்பதை தொழிலாளர்கள் புரிந்துகொண்டு சரியான வழிமுறைக்கு வருவார்கள் என்று மார்க்ஸ் கருதினார்.

இதன் மூலம் கம்யூனிஸ்டுகள் பிற அமைப்பைச் சேர்ந்தவர்களோடு ஒரு குறிப்பிட்ட கொள்கையை வகுத்து அவர்களோடு இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் (மக்களின் எதிரிகளை இணைத்துக்கொள்ளக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்) என்பதை மார்க்ஸ் அவரது காலத்திலேயே புரிந்துகொண்டு செயல்பட்டிருக்கிறார் என்பது வரலாறு. இந்த வரலாற்று அனுபத்தை நாம் பின்பற்ற வேண்டும். மேலும் மற்றவர்களோடு இணைந்துவிட்டால் மட்டும் போதாது. அவர்களோடு இணைந்து கூட்டாக கொள்கை வகுக்க வேண்டும். அவ்வாறு கொள்கை வகுத்துவிட்டால் மட்டும் போதாது. அந்தக் கொள்கைகளை நடைமுறையில் மக்களுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். அவ்வாறு மக்களைத் திரட்டி செயல்படுத்தும்போதுதான் நமது கொள்கையானது போதுமானதா? இல்லை குறைபாடு உள்ளதா? என்பதைத் தெரிந்துகொண்டு குறைபாடுகள் இருந்தால் அதனை திருத்திக்கொண்டு முன்னேற முடியும் என்று மார்க்சும் எங்கெல்சும் வழிகாட்டுகிறார்கள். அந்த வழிகாட்டுதல் இன்றைக்கும் பொருத்தமாகவே உள்ளது.

சர்வதேச கம்யூனி இயக்க வரலாற்றிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள் என்ன?

கம்யூனிசஇயக்கமானது பலதோல்விகளையும், பல வெற்றிகளையும் சந்தித்துள்ளது.அது எவ்வளவு தோல்விகளை சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்துவரும். ஏனெனில் முதலாளி வர்க்கத்தின் சுரண்டலையும், ஒடுக்குமுறை யையும் தொழிலாளி வர்க்கம் எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கும். ஆகவே முதலாளி வர்க்கத்தின் சுரண்டலும் ஆதிக்கமும் சமூகத்தில் நிலவும் வரை கம்யூனிஸ்டுக் கட்சியை யாரும் ஒழிக்க முடியாது.

இடைப்பட்ட வர்க்கங்களான நடுத்தர வர்க்கத்தின் சொத்துக்களை முதலாளி வர்க்கம் பறித்துக்கொண்டே இருக்கும். ஆகையால் நடுத்தர வர்க்கமானது ஊசலாடும் வர்க்கமாக இருந்தாலும் அதனுடைய வாழ்க்கைக்கு தொழிலாளி வர்க்கத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலை தொடர்ந்து இருக்கும். ஆகவே நடுத்தர வர்க்கமானது கம்யூனிஸ்டுகளை நம்பி செயல்பட வேண்டியது அவசியமாகும். அதனை அந்த வர்க்கம் தவிர்த்தால் அந்த வர்க்கமானது முதலாளி வர்க்கத்தால் ஒழிக்கப்பட்டுவிடும்.

புறநிலையில் கம்யூனிசத்தை நோக்கி சமூகம் மாறும் என்பது உண்மை என்றாலும். அதனை சரியாகப் புரிந்துகொண்டு தேவையான போர்த்தந்திரம் மற்றும் செயல்தந்திரத்தை வகுத்துக்கொண்டு மக்களைத் திரட்டி பாதிக்கப்பட்ட வர்க்கங்களை ஒரு ஐக்கிய முன்னணியில்

திரட்டி ஒரு புரட்சிகர மக்கள் இயக்கத்தை கட்டியமைப்பதன் மூலமே கம்யூனிஸ்டு களால் வெற்றியை ஈட்ட முடியும்.

ஆகவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் எவ்வளவு தோல்விகளை சந்தித்திருந் தாலும் இறுதி வெற்றி நமதே ஆகும். மேலும் முதலாளித்துவ சுரண்டலும் ஆதிக்கமும் ஒரு கட்டத்தில் ஒழிந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும். அதற்குத் தேவையான அறிவையும் வளர்த்துக்கொண்டு, நடைமுறை பயிற்சியையும் பெற வேண்டும்………………….

தொடரும்.......தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்