இலக்கு 18 இணைய இதழ்

 


முதலாளித்துவ வர்க்கங்களின் எதிர்ப்பை தகர்ப்பதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. பழையதை துடைத்தெறிவதற்கும், புதியதை படைப்பதற்கும் திறன் பெற்ற ஒரு சக்தியை இன்றைய சமூகத்தில் கண்டறிய வேண்டும். அந்தச் சக்தி பாட்டாளிகள் தான், உழைக்கும் விவசாயிகள் உள்பட பல்வகைபட்ட தொழிலாளர்கள் தான். இந்தப் பாட்டாளிகளே இன்றைய உற்பத்தி முறையின் ஏற்ற இறக்கங்களின் காரணமாக உடனடியாகவும், அதிகமாகவும் பாதிக்கப்படுகின்றனர். அப்படிப்பட்ட பாட்டாளிகளுக்கு அறிவொளி ஊட்டி, போராட்டத்திற்கு அவர்களைத் திரட்டி தயார்ப்படுத்த வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியம் இதனை அறிந்து பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவொளி ஊட்டுவதற்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி மார்க்சிய வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தையும், மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தையும் நன்றாக அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் கம்யூனிஸ்டுகளின் அரசியல் விஞ்ஞானத் தன்மை பெற்றதாக இருக்கும். அதனை நோக்கிய எங்கள் பயணத்தில் நீங்களும் இணையுங்கள் ஆதரவளியுங்கள் தோழர்களே...
இந்த இதழில் வெளியாகும் கட்டுரைகள்

1. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (காரல் மார்க்சும்

எங்கெல்சும்)- தேன்மொழி

2. லெனினியக் கண்ணோட்டத்தில் ஏகாதிபத்தியத்தை

புரிந்துகொள்வோம். பகுதி-2 தேன்மொழி

3. மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று

உள்ளடக்கக் கூறுகளும் - லெனின்

4. இந்தியாவில் விவசாயிகள் நிலை- சி.பி

5. தென்னமெரிக்க நாடான பெருவில் ஆட்சி கவிழ்ப்பு- சி.பி

6. இந்திய பட்ஜெட் 2023-2024- சி.பி



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்