இந்திய சாதி அமைப்பு முறையை ஆராய்ந்த பலரும் பல்வேறு கருத்துகளை முன் வைத்தாலும், மார்க்சிய தத்துவம் மட்டுமே இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் விளக்கி கூறியதாகும்.
அதாவது உலகில் உள்ள மற்றச் சமூகஅமைப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு.
இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும், ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.
நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் சாதியம் உறுதியாக செயல்பட்டது இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் கோட்பாட்டு அளவில் மறுக்கப் பட்டுள்ளது.
சாதியை ஆரியர்கள்தான் (பிராமணர்கள்தான்) உருவாக்கினர் என்பதோ திராவிடர்கள் தமிழர்கள்தான் உருவாக்கினர் என்பதோ அறிவியல் பூர்வமான (இயக்கவியல் பொருள்முதல்வாத) மார்க்சிய விரோதமான ஒன்றே.
சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக் கொண்டு சூழலுக்கேற்ப்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்ற போது அதற்க்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது இந்து மத பிராமணியமே அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கி உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுகமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது.
நிலப்பிரபுத்துவத்திற்க்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே சாதி கருக் கொண்டிருந்தாலும் அவை திடமாக நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது.
சாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்லா… இவை தனி உடைமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும், அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் சாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.
இந்தியாவில் சாதியின் தோற்றம் வளர்ச்சி இருப்பு
இந்தியாவில் சாதியின் தோற்றம் வளர்ச்சி இருப்பு பற்றி ஒரு தேடுதல் இங்குள்ள சிலர் ஜாதி ஒழிந்தால்தான் வர்க்க ஒன்றுமைக்கு சாத்தியம் நீங்கள் ஜாதியை பேசாமல் ஜாதியை பேச முடியாது என்கின்றனர். ஆக ஜாதியை பலர் இதுவரை தன்னால் இயன்றவரை தேடி உள்ளனர் அதில் சில கீழே:-
சாதியத்தின் பல்வேறு பார்வை
சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் சில கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
1. மதக் கோட்பாடு (religious theory)
2. தொழிற் கோட்பாடு (occupational theory)
3. இனக் கோட்பாடு (racial theory)
4. அம்பேத்காரின் கூற்று
மதக் கோட்பாடு
சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய சூழலே சாதி முறையைத் தோற்றுவித்தது.
சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும் ரிக் வேதம்,மனு தர்மம்,பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன.பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது எனக் குறிப்பிட்டாலும்,பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.
தொழிற் கோட்பாடு
சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தது என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.
இனக் கோட்பாடு
ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்.
அம்பேத்கரின் கூற்று
ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்.
இந்திய சமூக அமைப்பை வர்க்கங்களாக ஒன்றிணைக்க முடியாது என்று அம்பேத்கார் முதல் பலரும் வற்புறுத்தி வந்தனர். இன்னொரு பக்கத்தில் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பில் தொடங்கி பல்வேறு விதமான போராட்டங்களில் மக்கள் ஜாதிகளை கடந்து தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி உள்ளனர் என்பதை கண்கூடாக காணலாம். இவை ஜாதிகள் இங்கே தடையாக இல்லை என்பது மக்கள் போராட்டங்களை கட்ட கட்டமைத்த போது கண்கூடான உண்மை அல்லவா?
சரி, ஜாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டது, அகமணமுறை ஏற்றுக்கொண்டது.
இச் சமூகத்தில் சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவு இன்னொரு பிரச்சினை. உழைப்புப் பிரிவினையும் உபரி மதிப்பும் தோன்றிய பொழுதே வர்க்கங்கள் தோன்றிவிட்டன. எனவே சாதியே வர்க்கம் அமைந்தவை ஆனால் சாதிய அமைப்பு வேலைப்பிரிவினை வடிவமாகவும் வாழ்வியல் சிந்தனைகள் கூறகவும் அமைந்த பின்னர் ஜாதி என்பது வர்க்க வேறுபாடும் வெளிப்படையாக அமைந்துவிடுகிறது. குறிப்பாக ஒரு காலத்தில் சாதி என்பது வர்க்க அமைப்பு ஆக இருந்திருக்கும் அதாவது ஒரு சாதி என்பது ஒரு வர்க்கமாக இருந்திருக்கும். ஆனால் நிலவுடமை கூறுகள் தகர்ந்து முதலாளித்துவ கூறுகளின் வளாகத்தில் சாதிக்குள்ளே வர்க்கங்களாகி விட்டது ஒரே சாதிக்குள்ளே ஒடுக்குபவனும் ஒடுக்கபடுபவனும் வந்து விட்ட பின் முன்னில் போலன்று இன்றைய சமூகத்தில் சாதி நிலை. இனி சாதியை இனி வர்க்கமாக பார்க்க முடியாது…. வர்க்க அடிப்படையில் அணுக வேண்டிய தேவை நமக்கு உள்ளது.
சாதியமைப்பு பற்றிய கருத்தாக்கங்கள் நான்கு விதமான ஆய்வு விளக்கங்களை கல்வியாளர் மட்டத்தில் பாமரமக்கள் மட்டத்திலும் நிலவுகின்றன இவை பற்றிப் பார்ப்போம்.
முதலாவதானது மிகவும் பரவலாக இருக்கிறது இவை ஆரிய சித்தாந்தமாகும் இக்கருத்தின் படி ஆரிய படையெடுப்பாளர்கள் சுதேசி மக்களை அடிமைப்படுத்திய விதத்தில் மூலமாக சாதிகள் தோன்றின என்பதாகும் இதனை ஒருசில மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொண்ட போதிலும் இதற்கு அடிப்படை தோற்றுவாய் ஜோதிராவ் புலே பெரியார் ஆகியோருடன் எழுத்துக்களும் பிராமண எதிர்ப்பு இயக்கமும் ஆகும். சாதிகள் கடவுளால் படைக்கப்பட்டது அவற்றை மாற்ற இயலாது என்ற பழமையான மதவாதிகள் கூறும் விளக்கத்தை காட்டிலும் முற்போக்கான கருத்தாக இது உள்ளது.
விவாதத்தின் அடிப்படையில் ஜாதிகள் வரலாற்று அடிப்படையில் தோன்றும்என்றும் ஆரியர் வரவுக்கு முன் வாழ்ந்த ஆதிக்குடிகள் அவர்கள் சமூக வாழ்வு வாழ்ந்தனர் என்றும் சாதி ஒடுக்கு முறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் அந்த சமத்துவ மீண்டும் வளர செய்ய வேண்டும் என்று கூறுகின்றதுஎனினும் இச்சித்தாந்தம் இனவாத கருத்தாக்கம் கொண்டுள்ளது
சாதியத்தின் ஆரம்ம காலம்
பண்டைய காலத்திலே மானுட சமூகம் சிறு சிறு குழுக்களாக வாழ்க்கை நடத்தியது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை தாங்களே தேடிக் கொண்டனர் உழைப்புப் பிரிவினை சமமாக இருந்தது ஆண்கள் வேட்டையாடினார்கள் உணவுப் பொருட்களை சேகரித்தனர். பெண்கள் உணவு தயாரித்தனர் வீட்டை கவனித்தனர் அந்தந்த துறையில் அவர்கள் மேலோங்கிருந்தந்தனர். அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. வேட்டையாடிய பொருள்களையும் இயற்கை உணவுப் பொருளையும் சேகரித்து எல்லாவற்றையும் பொதுவில் அனுபவித்தனர்.
இதனை உணவு சேகரிக்கும் நிலை (Food Gathering stage) என்பர் மானிடவியல் அறிஞர்கள்.
காட்டில் விலங்குகளை கண்டான் தானும் வளர்க்கக் கற்றுக்கொண்டான் அதனால்அதுஒருதொழிலாகியது.கால்நடை வளர்ப்பும் குலங்கள் அதிக பொருள் உற்பத்தி கால்நடை மூலம் பலவிதங்களில் மனித தேவைகளை பயன்படுத்தும் ஒரு நிலையை உண்டாக்கியது.
ஆண்கள் வேட்டையாடுதல் ஈடுபடும்போது பெண்கள் கால்நடைகளை பராமரித்தலும் அதனை மேம்படுத்தும் ஈடுபட்டதால் சமுதாய பொருளாதார நிலையில் பெண்களுக்கான ஒரு நிலை இருந்தது.கால்நடைகளுக்காகவே பல குழுக்களுக்கிடையேசண்டைகள்மூண்டது,பல தடவை தங்களது தொழிலான கால்நடைகளை சண்டையிட்டு மீட்டனர்.
அந்தக் கூட்டு சமுதாயத்தில் உற்பத்தித் திறன் மிகக்குறைவாகவே இருந்தது எனவே போரில் பிடித்து வீரர்களை என்னசெய்வது கூட்டு சமூகத்தில் அவர்களை கொல்வதை தவிர வேறு வழி இல்லை.
கிமு300ஆண்டுகளில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக அறிகிறோம். தமிழ்நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளும் இரும்பின் பயன்பாட்டுக்கு சான்று பகிர்கின்றன. அதிசயம் நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இரும்பு கத்திகள் கூர்வாள்கள், தீட்டிய அம்புகள், சிறு கோடாரி, கதிர் அரிவாள்கள், உளி, கைப்பிடிப்புள்ள இருமுனை வாள்கள், இரும்புத்தூண்டில்,நீள்கைப்பிடிக்கரண்டி,மரம் செதுக்கும் கருவிகள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவை இன்றளவும் சென்னை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மையில் இரும்பு கருவிகளின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தி பெருகி கொண்டு போயிற்று இன்னும் திருத்தமான கருவிகளுடன் மனிதனின் உற்பத்தி திறனும் புதிதான நிலங்களும் சேர்ந்துகொண்டு உற்பத்தியில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது இந்த பாய்ச்சல் சமுதாய மாற்றங்களையும் உள்ளடக்கிக் கொண்டு வெளி வரலாயிற்று. கால்நடைகளில் தங்கள் இன்றியமையாத வாழ்க்கை ஆதாரமாக பெருமைகளை நிலை மாறியது. விலங்குகளை சார்ந்து இருக்க வேண்டிய ஓடுநர் நிலையிலிருந்து மனித சமுதாயம் தன்னை விடுவித்துக் கொண்டது. பெரிய காட்டில் அலைந்து திரிந்து வேட்டையாடி சேகரிக்கும் பொருள்களையும் விட கால்நடைகளை மேய்த்து அழைந்து திரிந்து அதன் மூலம் கிடைத்த உற்பத்திப் பொருள்களை விடவும் சிறிய நிலத்தை திருத்த முடியாத கருவிகளை வைத்துக் கொண்டு உழுது பெற்ற உற்பத்திப் பொருள்களை ஒரே இடத்தில் நிறைய பொருள்கள் கிடைத்துள்ளன. இது எண்ணிக்கை பெருகப்பெருக தன்மை ரீதியிலேயே மாற்றம் பெற்ற சமூகத்திற்கு வேளாண்மைக்கு வழிகாட்டியது.
கால்நடைகளை வளர்த்தல் என்பது வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையை விட சற்று முன்னேறிய நிலை என்றாலும் கூட இரண்டு தொழில்களுக்கும் இடம் விட்டு இடம் நகர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அங்கே மானுட சமுதாயம்நாகரிகஉலகில்புகுந்தது. வேளாண்மைக்கு தேவையான கைவினைத் தொழில்கள் தோற்றம் பெறலாயின இதை தொடர்ந்து ஏற்பட்ட உற்பத்தி மாற்றங்கள் மனிதனின் உழைப்பு சக்தியை பெருகியது இப்போது மனிதன் தன் தன் தேவைகளுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்வதற்கான தன் உற்பத்தித் திறனை வளர்த்துக் கொண்டன. இந்நேரத்தில் வேளாண்மை கைத்தொழில் என்று இரு மாபெரும் கிளைகள் உற்பத்தியில் பிரிவினையாக ஏற்பட்டதில் இருந்து நேரடியாக பரிமாற்றத்துக்கான உற்பத்தி செய்யும் முறை அதாவது சரக்கு உற்பத்தி முறை பிறந்தது . அதன் உடன் நிகழ்வாகவே வியாபாரம் அதனுடைய உண்மையான பொருள் வந்து சேர்ந்தது பணக்காரன் ஏழை என்ற வேறுபாடும் புகுந்தது.
புதிய வேலைப் பிரிவினைகளின் கீழே சமுதாயம் வர்க்கங்களாக பிரிந்தது, கூட்டு சமுதாயத்தில் இருந்த பல்வேறு குடும்பத் தலைவர்களின் சொத்துடமைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள் அதாவது மேலே மேலே ஏறி வரும் தனிச்சொத்து கூட்டுச் சமுதாய அமைப்பில் முதல் உடைப்பை ஏற்படுத்தியது. தொடக்ககால கைத்தொழில்கள் சரக்கு உற்பத்திமுறை இவற்றோடு மக்கள் தொகையும்பெருகியது,இத்துடன் செல்வ விசயத்தில் பெருத்த வேறுபாடுகள் சேர்ந்தன. இதற்கு முன்னால் கூட்டுச் சமுதாய அமைப்புகுள் உயிரோட்டமாக நிலவிய ஜனநாயக முறைக்குள்ளேயே இச் செல்வ வேறுபாடுகள் எல்லாம் ஒரு தனிப்பட்ட பிரபுத்துவ அம்சத்தை தோற்றி வைத்தது.
இன்னும் நன்கு விளையக்கூடிய முறையிலான உற்பத்தி சாதனங்களை நிலங்களை விஸ்தீரணம் செய்ய வேண்டியுள்ளது எனவே இடத்தை அதாவது நிலத்தை பிரதேசத்தை மையமாகக் கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது.
இந்தக் காலத்தில் ஒரு நிலம் இன்னொரு நிலத்தோடு கலந்து வரலாற்று நிர்ப்பந்தமாக இணைக்கப்படும் போது பிரதேசமாய் வளர்கிறது.
கூட்டு சமுதாயத்தில் கால்நடையை கவர்தல் களவாடி செல்ல நடந்த போர்கள் போல இப்பொழுது நிலங்களை அகபறிபதற்கான போர்கள் நடைபெற்றன . அதாவது உற்பத்தி சாதனமாகிய நிலத்தை கொள்ளையடிப்பதற்காக போர்கள் நடைபெற்றன.
இப்போரில் நடத்திய தலைவர்கள் போர் வீரர்களாகவும் குடிகளையும் நிலங்களையும் காக்க போர்களின் தேவையும் காப்பதற்கான தொழிலும் மேற்கொண்டனர்.
எங்கெல்ஸின்வார்த்தைகளில்சொன்னாள்," செல்வத்தின் பால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளின் விளைவாக சமுதாய அமைப்பு பாதிக்கப்பட்டது பரம்பரை பரப்புவதற்கும் அரசும் அரசு முறைக்கும் கொழுந்துகள்துளிர்த்தன,அடிமைமுறை போர்க்கைதிகளோடு நின்று இருந்தபோதிலும்,ஏற்கனவே குலத்தின் உறுப்பினர்களையும் கூட அடிமைப்படுத்துவதற்கு வழிவகைசெப்பனிட்டுவந்தது.கால்நடைக்கு நடைபெற்ற சண்டைகள் நிலத்துக்கான திட்டமிட்ட படையெடுப்புகளாக இழிந்து ஒரு முறையான தொழிலாகிவிட்டது.
உயர்விலும் உயர்வான சம்பத்தாக செல்வம் புகழப்பட்டது..... தனிநபர்கள் புதிதாக சேர்த்த சொத்தை பாதுகாக்கவும் அதைப் பெருக்குவதற்கும் படிப்படியாக வளர்ந்து வரும் புதிய வடிவங்களுக்கும் பொதுமக்கள் அங்கீகாரம் எனும் முத்திரையைப் பதிக்க வைப்பதற்கும் வேண்டிய ஒரு நிறுவனம் இல்லாதிருந்தது. சமுதாயத்தில் ஆளும் வர்க்க பிரிவினையை நிரந்தமாக வதோடு மட்டுமல்லாமல் உடைமை அற்றவர்களை உடைமை உள்ளவர்கள் சுரண்டுவதற்கான உரிமையை நிரந்தரமாகும் நிறுவனம் வர தொடங்கியது அதுதான் அரசு என்பது.
நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலத்தின் மேல் பரம்பரையாக உரிமை கொண்டவர் தம்மை உயர்ந்த ஜாதி ஆக்கிக் கொண்டனர்.அவர்களது நிலத்திலே உழைப்பவர் அவர்களது பிற சேவைகளை கவனித்தவர் யாவரும் சேவையின் அத்தியாவசியத்தை ஒட்டி பல்வேறு சமூக அமைப்பினர் ஆக பல படிகளில் பிரிக்கப்பட்டனர் . சொத்துடையவர்க்கு மதிப்பு உழைக்க வேண்டியதில்லை. உடல் உடலுழைப்பாளர் குறைவாக கருதப்படுகின்ற இது ஜாதி அமைப்பின் அடிப்படை நோக்கம் உழைப்புச் சுரண்டலே,கிராமங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் உற்பத்தி சாதனங்களை கொண்ட நிலப்பிரபுக்களின் தயவில் வாழ நேரிட்டது. தன் குழந்தைகளைப் பிரித்து பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட வேலையில் நிலப்பிரபு செய்வித்தான் ஜாதி அமைப்பிலேயே இப் பழக்கம் இன்றும் தொடர்கிறது தனித்தனி சமூக அமைப்பாக வாழ்கின்றனர்.
நிலப்பிரபுத்துவம் உடைந்தும் இக்காலத்திலும் தனி சமூக அமைப்பாகவே ஜாதிகள் கருதப்படுகின்றன நடைமுறையில் ஆதிக்கம் குறைந்த போதும் சிந்தனை பாகுபாடு இன்றும் நிலவுகிறது.
தொழிலாளர்களாக சுரண்டப்படுவது மட்டுமல்ல சாதியின் பெயராலும் இவர்கள் சுரண்டப்படுகின்றனர் அடக்கி ஒடுக்கப் படுகின்றனர்.
இயந்திர உற்பத்தி வளர்ச்சி ஒன்றே சாதி அமைப்பு ஓரளவு குறைக்க வல்லது பின்னர் முதலாளி தொழிலாளி என்ற பிரிவில் சுரண்டல் நடைபெறும் அதன் பின் நடைபெறும் சோசலிச புரட்சி ஒன்றே சாதி அமைப்பிற்கும் முடிவுகட்ட கூடியது அங்கும் இக்கருத்தை ஒழிக்க பல ஆண்டுகள் ஆகலாம் ஏனெனில் இது சிந்தனையுடன் ஒன்றி இருப்பதாகவும்.
சாதி மற்றும் தீண்டாமை என்பது இந்துமதம் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது. சாதிமுறை என்ற சமூக நிகழ்வுப்போக்கு பரம்பரைத் தொழில் பிரிவினை (Social Division of Labour) அடிப்படையில் தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. ஆகையால் சாதி மற்றும் தீண்டாமையின் சமூகவேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமண முறை, உயர்வுதாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவப் பண்பாடே காரணமாகும்.
இன்று இந்திய சமுதாயமும் அரசும் ஜனநாயக விரோத எதேச்சதிகாரத் தன்மை கொண்டதாக நீடிக்கச் செய்வதால் பழைமையை தூக்கிபிடித்துக் கொண்டே உலகமய மாக்கல் நலன் பேசும் இவர்கள் சுரண்டல் வடிவமான ஜாதி ஏற்ற தாழ்வை போக்கும் திட்டம் எதுவும் இன்மையால் அந்தமுறையை தொடர செய்கிறது..
ஓர் உறையாடல் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்க்கலாம்
No comments:
Post a Comment