தோழர்களே வணக்கம்.
நேற்றய விவாதம் ஒலி வடிவில் கேட்க்க இங்கே அழுத்தவும்
இன்று மார்க்சியம் மார்க்சியமல்லாத போக்கு என்ற இரு போக்கு உள்ளது
நாம் மார்க்சியம் பேசுவோரை மட்டும் கணக்கில் கொண்டால் மார்க்சியத்தை நடைமுறை படுத்த வாழுவோரும் மார்க்சியத்தை கொச்சை படுத்தி வாழ்வோரும் என்று இருபோக்கு உள்ளது.
மார்க்சியத்தை நடைமுறை படுத்துவோரும் இருவகையில் உள்ளனர் ஒருபுறம் நடைமுறையற்ற கோட்பாட்டுவாதம் இன்னொறுபுறம் கோட்பாடே இல்லாத நடைமுறை - ஆக மார்க்சியவாதிகளாக நாம் பல சந்தர்பங்களில் இந்த இரு போக்குகளை புரிந்துக் கொண்டு நமது மார்க்சிய ஆசான்களின் வழி நின்று நாட்டில் உள்ள சூழலுகேற்ப மக்களை அரசியல்படுத்துவதும் சமூக மாற்றத்திற்கான முன்னெடுத்து செல்ல நமது பணிகளை புரிந்து செயல்படவும் ஒரு சிறிய முயற்சியே இவை.
தொண்ணூறுகளில் சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட சரிவுகளுக்குப் பின் இதுகாறும் கூடுதலாகக் கவனம் அளிப்பதற்குத் தவறிய பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வெண்டியதன் அவசியங்கள் பற்றிய பேச்சு இன்று உருவாகியுள்ளது.
சோவியத், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோஷலிசக் கட்டுமான முயற்சிகள் சென்ற நுற்றாண்டின் இறுதியில் கடும் பின்னடைவுக்கு உள்ளாயின. முதலாளிய நாடுகளில் இருந்த அளவிற்குப் பெரிய ஏற்றத் தாழ்வுகள் இல்லாமலும் ஓரளவு அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பூர்த்தி செய்யப்பட்ட சமூகங்களாகவும் அவை அமைந்தபோதும் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய ‘சோஷலிச’ அரசுகள் பொலபொலவென உதிர்ந்தன. இப்படியானதில் உலக ஏகாதிபத்தியங்களுக்குப் பெரும் பங்கு உண்டறன்றோ???
மார்க்சியமல்லாத பல போக்குகளை இன்று இடதுசாரிகள் மேற்கொள்கின்றனர், அவையாவன:- பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்கிற கருத்தைக் கைவிடல். பல்வேறு சீர்திருத்தவாத பிற்போக்கு ஆளும் வர்க்க சித்தாந்தங்களை கைகொள்ளல். பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையான வர்க்க ரீதியான அணிசேர்க்கையை கைவிட்டு தனித்தனியான பிரச்சினைகளின் அடிப்படையில் அடையாள அரசியலை கையிலெடுத்தல்...
மா-லெ குழுக்கள் தேர்தல் பாதை - அழித்தொழிப்பு பாதை தவிர்த்து மூன்றாவது ஒன்றையே மக்கள் திரள் பாதை என்று சொல்லி வருகின்றனர்.தேர்தலில் பங்கெடுத்த வலது, இடது கம்யூனிஸ்டுகள், லிபரேசன், நியூ டெமாக்ரசி போன்ற குழுக்கள் தந்த அனுபவத்தின் ஆய்வுக்குள் சென்று அவர்கள் செய்த தவறுகள் என்ன, அதற்கு இவரது மாற்று என்ன?
ஆக பல்வேறு போக்குகளில் சிதறுண்டுகிடக்கும் புரட்சியாளர்கள் ஒன்றிணைய வேண்டியது இன்றைய சமூக சூழல் வலியுறுத்துகிறது அதனை ஏற்று செயல்பட வேண்டியது இடதுசாரிகளின் கடமை என்பதனை தவிர வேறில்லை... உங்கள் கருத்தை பகிருங்கள் தோழர்களே...
No comments:
Post a Comment