திரைபட விமர்சனம் 2000 திரைப்படம்

 

"எதார்த்தம் என்பது உண்மை. Realism என்ற ஆங்கில பதத்தையே எதார்த்தம் என கலை இலக்கிய விமர்சனங்களின் போது தமிழில் பயன்படுத்துவது மரபாகிவிட்டது என்கிறார்" தோழர் செ. கணேசலிங்கம் அவர்கள்.

எதார்த்தம் என்பது மார்க்ஸ் எங்கெல்ஸின் வழி வந்த வார்த்தையாகும் . எங்கெல்ஸ் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டதை பின்வருமாறு பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் விளக்குகிறார், "யதார்த்த நெறி என்பது நுணுக்க விபரங்களின் உண்மையுடைமை தவிர, வகை மாதிரிக்கு பொருத்தமான பாத்திரங்களை நிலைமைகளுக்கு இணங்க மெய்மை குன்றாத வகையில் சித்தரித்தலாகும்" என்பதே ஏங்கெல்ஸ் மணிமொழி என்கிறார்.

மேலும்"யதார்த்தவாதம் சமுதாய முரண்பாடுகளும் அவற்றுக்குக் காரணமான பௌதீக நிலைமைகளுமே வாழ்க்கையின் தன்மைக்குக் காரணம் எனக் கண்டு 'துன்பமே இயற்கை' என்னும் சொல்லை மாற்ற முயலும் உள்ளங்களின் நம்பிக்கைக் குரல்" என்று க.கைலாசபதியே கூறுகிறார்.

இனி பொதுவாக சினிமா பற்றி விமர்சனம்

சினிமாவானது முதலாளித்துவ ஆதிக்கத்தின் விற்பனை பொருளாகவே இன்றும் உள்ளன. இங்கு நிலபிரபுத்துவ சிந்தனைகளும் மதிப்புகளும் இன்றும் ஆதிக்கம் பெற்று இருப்பதால் அவற்றை கலை இலக்கியம் மூலமாக முதலாளித்துவம் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கிறது.

சமுதாய உணர்வை கருத்தில் கொண்டு சமுதாயத்தை மாற்றி அமைக்கக்கூடிய புரட்சிகர சினிமா பிற கலை இலக்கியங்களை ஆக்கி மக்களுக்கு வழங்க கூடிய பொருளாதார வாய்ப்புகள் இன்னும் முற்போக்கு இடதுசாரி சிந்தனையாளர்கள் இன்னும் முன்னேறவில்லை அல்லது அரிதாகவே உள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் முதலாளித்துவ சந்தையின் பொருட்களை வாங்குவது போலவே முதலாளிகள் வழங்கும் கலை இலக்கியங்களையும் ரசிக்க வேண்டிய கட்டத்தில்தான் உள்ளனர் என்றால் மிகையாகாது என்பேன். (இதை நான் எழுதிய கலை இலக்கியம் பற்றி இலக்கு இதழ் தொடரில் காணலாம்). இந்த என் கருத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய சினிமாதான் ரூ.2000 இயக்குனர் ருத்ரன் இயக்கத்தில் வெளிவந்தவை அதனை அவரின் முகநூல் பகுதியில் உள்ளதே அப்படியே (இங்கே முழுமையாக வாசிக்க இந்த இணைய தளத்திற்க்கு செல்லவும் https://kattarl.blogspot.com/2022/07/posted-by.html).

முன்கதைச் சுருக்கம் :

நவம்பர் 8, 2016, இரவு 8 மணிக்கு, தொலைக்காட்சிகளில் தோன்றிய இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடியின் வார்த்தைகளிலிருந்து பிறந்ததுதான், ‘ரூ2000’ திரைப்படம். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்புக்கு உள்ளாகும் ஒரு எளிய விவசாயிக்காக ஒரு வழக்குரைஞர், ஒன்றிய அரசுக்கு எதிராக பொதுநலன் வழக்குத் தொடுத்து, வாதாடி, ஒன்றிய அரசு ஒரு குற்றவாளி என்னும் தீர்ப்பினைப் பெறுவதுதான், படத்தின் கதை. கிளைக்கதையாக, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை – தனது இணையரை, ஆணவப் படுகொலை செய்த தனது தந்தைக்கும் அவரது கூட்டாளிகளுக்கும், வழக்காடு மன்றத்தின் மூலம் தண்டனையைப் பெற்றுத் தரும் இளைஞனின் கதையும் உண்டு. தணிக்கை வாரியத்தின் நெற்றிக் கண்களைத் திறப்பதற்கு, இந்தக் கதைக் கருக்கள் போதுமானவையல்லவா!

அதுமட்டுமல்ல. இந்தப் படத்தில், ஆபாசம் மற்றும் கவர்ச்சி இருக்காது, ரத்தம் தெறிக்காது, இரட்டை அர்த்த உரையாடல்கள் கிடையாது, மது இல்லை, புகை இல்லை, சமூகத்தைச் சீரழிக்கும் அம்சங்கள் எதுவுமே இல்லை. இத்தகைய, ‘ இல்லாமைகள் ‘ பாஜக-வினரின், அதாவது, தணிக்கையாளர்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

பொழுதுபோக்குக்காக அல்லாமல், பொழுதின் மதிப்பினைக் கூட்டும் படம் என்பதால், மக்களுக்குத் திரையிடும் அனுமதியை அளிப்பதற்கு, ஆட்சியாளர்கள்- தணிக்கை வாரியத்தினர் தயங்கியிருக்க வேண்டும். ஃபீனிக்ஸ் திரைப்படைப்பகம் தயாரித்திருக்கும் இப்படத்தின் இயக்குனர், ருத்ரன் அவரின் எழுத்தே இவை.

ஆக சமூகத்தில் காணும் அவலங்களை தோலுரித்து காட்டுவதோடு அதற்கான மாற்றத்தையும் கோரலே சரியான மார்க்சிய பார்வை. இதனை தன் இயக்கத்தில் ருத்ரன் உருவான திரைப்படத்தில் பிற்போக்குதனங்களை களைந்து சரியான கலைப் படைப்பே இந்த சினிமா எனலாம். ருத்ரன் உழைப்பிற்க்கு வாழ்த்துகள் இன்னும் சிறந்த படங்களை தொடர்ந்து அளிக்க கோருகின்றோம் இலக்கு சார்பாக.

(குறிப்பு ரூ என்ற இடத்தில் இடவும்)

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்