இலக்கு 79 இணைய இதழ்

 அன்றிலிருந்து இன்றுவரையிலான இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறானது பல்லாயிரக்கணக்கான தோழர்கள், கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்களின் அளப்பரிய தியாகமும் அவர்கள் சிந்திய செங்குருதியும் நிறைந்ததாகும்.

அன்றைக்கு, கம்யூனிசக் கொள்கையின் ஈர்ப்பினால் உந்தப்பட்ட தோழர்கள் தலைமையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் ஏராளம். வங்காளத்தில் தெபாகா விவசாயிகள் எழுச்சி; மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் வார்லி பழங்குடி மக்களின் எழுச்சி; கேரளத்தில் வயலாறு-புன்னப்புரா தொழிலாளர் போராட்டம்; தமிழ்நாட்டில் கீழத்தஞ்சை கூலி விவசாயிகளின் செங்கொடி இயக்கம்; தபால் தந்தி ஊழியர் போராட்டம்; மும்பை துறைமுகத் தொழிலாளர் போராட்டம்; மும்பை கப்பற்படை எழுச்சி என்று எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றின. கம்யூனிஸ்டுகள் தலைமையில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்துப் போராடுவதைக் கண்டு அஞ்சிய ஆர்.எஸ்.எஸ்-இன் மூதாதையர்கள், இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தினர்; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்தனர். காங்கிரசு கட்சியோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை ‘அகிம்சை வழிப் போராட்டம்’ என்ற பெயரில் மழுங்கடித்தது. எனினும், இவற்றையெல்லாம் மீறி கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் 1942-இல் மூண்டெழுந்த கப்பற்படை எழுச்சி, 1946-இல் முன்னேறிய தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் போன்ற போராட்டங்கள் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வளர்வதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அன்று ஆட்சி அதிகாரத்தை அதன் அடிமைகளிடம் கொடுத்து வெளியேறியது. அதற்கு பின் ஆட்சி அதிகாரதிற்கு வந்தவர்கள் அதேபாணியில் ஆட்சியை தொடர்கின்றனர்.


இருந்தும் இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று, தெலுங்கானாவில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் மிகச் சிறப்பான முறையில் அரசை நடுநடுங்க செய்த போராட்டமாகும். இதனை அடுத்து பல்வேறு சதி வழக்குகளையும் கொடூரமான அடக்குமுறையையும் கம்யூனிஸ்டுகள் மீது நடத்தியது இந்திய ஆளும் வர்க்கம் அதன் பின்னணியில் அரசின் அராஜகத்திற்கு அடிப்பணித்து கட்சியானது புரட்சிக்கான வழிமுறையை கைவிட்டு தங்களின் இருப்புக்கான வழிமுறையை கையிலெடுத்து உள்ள அமைப்பில் தனக்கான இடம் தேடி பாராளுமன்றம் மட்டுமே தனக்கான இடமாக சுருக்கிக் கொண்டது என்பதுதான் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் சுருக்கமான வரலாறாகும். ஆரம்பகால இந்திய கம்யூனிஸ்டுகளின் வரலாறு தியாக வரலாறாகும். தெலுங்கான புரட்சிப் பாதையை கைவிட்டபின்புள்ள வரலாறு துரோக வரலாறாகும். இந்த வரலாற்றை நாம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது, இன்றைய நிலைகளை புரிந்துக் கொள்ள.



இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

1). ஆசிரியர் பகுதி

2).இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாற்று சுருக்கம்

3). நக்சல்பாரி எழுச்சியும் படிப்பினைகளும்

4). கம்யூனிச இயக்கம் பின்னடைவும் பல்வேறு போக்குகளும்


தோழர்களே,

செவ்வணக்கம். இதுவரை இலக்கு இணைய இதழ்களில் நாங்கள் பேசியதையும் (எழுதியதின் அடிப்படையில்) இடதுசாரிகள், புரட்சிபேசும் பல்வேறு பிரிவினருடன் முற்போக்கு பேசும் பலரின் நிலைபாடுகளையும் முழுமையாக கவனித்தில் கொண்டே இந்த இதழ் தயாரிக்கப்படுகிறது. இவர்களின் கண்ணோட்டம் என்பது மார்க்சிய வகைப்பட்டதுதானா என்பதனை நீங்களே சரி பார்க்க மார்க்சிய கண்ணோட்டம் கொண்டு தாங்கள் வளர்ந்து தெளிவடைய கேட்டுக் கொள்கிறோம்.

“இன்றைய சமுதாயம் மாறாத கல் உருவம் அன்று மாற்றத்திற்கு உரிய உயிர் அமைப்பே. அது இடைவிடாமல் மாறிக்கொண்டிருக்கிறது”. (மூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்னு பக்கம் 29) மற்றும், “முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமன்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலைமையினாலும் அவதிப்படுகிறோம் நவீன கால தீமைகளோடு கூடவே காலத்துக்கு ஒவ்வாத சமூக அரசியல் முறைகளை தவிர்க்க முடியாதபடி உடன்கொணரும் பழமைப்பட்ட உற்பத்தி முறைகளின் முனைப்பொழிந்த மீத மிச்சங்களிலிருந்து மரபுரிமையாய் வந்த கேடுகளின் முழு வரிசையும் நம்மை வருத்துகிறது வாழ்பவர் வாழ்பவற்றால் மட்டும் இன்றி மாண்டவற்றாலும் அவதிப்படுகிறோம். மாண்டவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்”. (மூலதனம் மேல் காணும் நூல் பக்கம் 26).

இந்த வாக்கியத்தில் மார்க்ஸ் என்ற சமூக விஞ்ஞானி மனித சமூகம் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு அசைவிலும் அவைமாறியும் வளர்ந்தும் முன்னேறிக் கொண்டுள்ளதை விளக்கியுள்ளார். இதனை புரிந்துக் கொள்ள மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞான அறிவும் மார்க்சியம் லெனினியமாக வளர்ந்த காலகட்டத்தின் அதன் தத்துவ அரசியல் பொருளாதார நிலைமைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு வளர்ச்சியும் மார்க்சியவாதிகளுக்கு அவசியம் அன்றோ?

நம் வர்க்க சமூகத்தில் சிலர் சில பிரச்சினகளை மட்டுமே முதன்மைபடுத்தி வர்க்க சமூகத்தின் முதன்மையான நோக்கம் சுரண்டலில்தான் ஒளிந்துள்ளது என்பதனை மூடிமறைக்க செய்கின்றனர். அதன் தன்மைகள் சில மாறுபட்ட சமூக வளர்ச்சியே!

சிலவகையான எதிர்நிலைகளை முதன்மைபடுத்தி சமூக மாற்றத்தை புரிந்துக் கொள்ளாமல் மாறாநிலையில் பேசிக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக கடவுள் மறுப்பு பேசுவோரும் கடவுளை ஏற்கும் ஆன்மீகவாதிகளும் மாறாநிலைவாதி களாகவே உள்ளனர்.

இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மனிதனின் இயலாநிலையில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தோன்றிய பல்வேறு கற்பனை கற்பிதங்கள் அந்த சமூக சூழலிற்கானவையே. இன்றைய சமூகத்தில் அவை பொறுத்தமற்றவை அவைகளின் நேரடி பயன்பாடு என்பது அறியாமையின் வெளிப்பாடே அதற்கு சமுக விஞ்ஞான அறிவு வேண்டும். அவை இன்றி அறியாமையில் அன்றைய சமூகத்தை அப்படியே பிரதிபலிக்க நினைக்கின்றனர். இன்றைய வளர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் புதியவகையில் பழைய கடவுள்களை புதுபிக்கனர். அவை சிலருக்கு நல்ல பணம் கொழிக்கும் தொழில். நீங்கள் கணக்கிட்டால் இந்த கணேஷ் பூஜையின் பின் ஒளிந்துள்ள பல கோடி வணிபம் மற்றும் அரசியல் விளையாட்டுகள். அதேபோல் கடவுளை எதிர்பதன் பெயரில் காலதிற்கும் களத்திற்கும் அப்பாற்பட்ட கடவுளை எதிர்பதன் பெயரில் அதேபணியை செய்கின்றனர். கடவுளின் தோற்றம் அதன் தேவை அதன் இன்றைய இருப்பு என்ன என்பதனை அறியாத பகுத்தறிவாதிகள். கடவுள் இல்லை என்றுக் கூறிக் கொண்டு அதனை உயிர்பிப்பதில் பங்காற்றுகின்றனர் என்பேன். இந்த இருபிரிவினரும் சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டலை தவறியும் பேசுவதில்லை. ஒருபிரிவினர் கடவுள் காப்பாற்றுபவராகவும் மற்றொருபிரிவினர் கடவுளை எதிர்ப்பின் பெயரில் பகுத்தறிவாதம் பேசினாலும் சமுக பிரச்சினையை மூடிமறைத்து வருகின்றனர்.

மக்களின் ஏற்றதாழ்வும் ஏழ்மையும், பசி, பட்டினியும் இன்னும் பல்வேறு கொடுமைகளுக்கு அந்த கடவுளோ அறியாமையோ காரணம் அல்ல! வாழும் கடவுள்களான அரசும் அதன் பரிவாரங்கள்தான் என்பதனை மூடிமறைத்து கடவுளுக்கு பின் அணி திரட்டுவோரும் கடவுள் எதிர்போரும் தாங்கள் கைகோர்த்து கொள்ளுமிடம், இந்த அரசில் அங்கம் வைப்பதும் சுகபோகமாக வாழவும் இந்த அமைப்பை கட்டிக்காக்க விளைவதும் அவர்களுக்கு இந்த அரசமைப்புதான் வாழவழிவகை செய்வதால் இந்த அமைப்பு மாறாமல் இருக்க முயலுகின்றனர். தாங்கள் வாழவழியமைத்துக் கொடுத்துள்ள அமைப்புமுறைக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றனர் . ஆக இவர்களின் பணியை கவனித்தில் கொள்ளுங்கள். வர்க்க சமூகத்தில் வர்க்கம் சார எழுத்தும் பேச்சும் செயலும் எவையுமே இல்லை! நம் சமூகத்தில் இடதுசாரி என்பவர்கள் எந்தவகையான கண்ணோட்டத்தில் உள்ளனர் என்பதிலிருந்தே அவர்களின் வர்க்க நலன் புரிந்துக் கொள்ள முடியும்!

இங்குள்ள பலரிடம் காணப்படும் மார்க்சியம் அல்லாத போக்குகளையும், அவர்கள் மார்க்சியத்திலிருந்து விலகிச் செல்வதையும் புரிந்துக் கொள்ள, அவர்களின் செயல்பாடுகள் நமக்கு பிரதிபலிக்கின்றன.

எந்த ஒரு பொருளிலும் இரு எதிர்மறைகளுக்கிடையான முரண்பாடு நிலவும். முரண்பாடு இல்லாத பொருள் ஏதும் இல்லை கட்சிக்குள்ளும் இரு பாதைகள் கருத்துகள் சித்தாந்தம் இடையே முரண்பாடு நிலவுகிறது குறிப்பிட்டமுரண்பாட்டின் போராட்டத்திலும் அது தீர்வு காணப்படும் விதத்திலும் தான் கட்சியின் வாழ்வும் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட முரண்பாடு முடிவு பெற்றதும் வேறொரு முரண்பாடு எழுகிறது எனவே முரண்பாடும் அவற்றுக்கிடையே ஒற்றுமையும் போராட்டமும் எப்போதும் நிலவும் இது இல்லாவிட்டால் கட்சியின் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும். இதன் பொருள் நாமே செயற்கையாக முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதல்ல.

விமர்சிக்கும் முறையானது விமர்சனம் என்பது நோயை குணப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய நோயாளியை கொல்வதாக இருக்கக்கூடாது. விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் கட்சியில் உள்ள தவறுகளை களைந்தெறிய போராட வேண்டும் என்று அடிக்கடி பேசப்படுகிறது. தவறு செய்யும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் தவறுகளை திருத்திக் கொள்ள உதவி செய்வதே முதன்மையானது..

மார்க்சிய லெனின்யத்திற்கும், வலது சந்தர்ப்பவாததிற்க்கும் இடையேயான அடிப்படை வேறுபாடாக இருந்தது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற போராட்டங்களின் அனுபவம் தெளிவாக காட்டுவதைப் போல பாராளுமன்ற பாதையைப் பின்பற்றுவதன் மூலமாக அரசாங்கங்கள் மட்டுமே மாற்றபட முடியும், ஆனால் அனைத்துவகையான அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு ஆணிவேராக உள்ள தற்போதைய பொருளாதார அரசியல் அமைப்பை மாற்ற முடியாது. வன்முறை புரட்சியின் மூலம் மட்டுமே தற்போதுள்ள ஆளும் வர்க்கமும் அவர்களுடை அரசும் தூக்கியெறியப்படும் ஒரு புதிய பொருளாதார, அரசியல் அமைப்பு உருவாக்க முடியும் என்கின்றது மா-லெ-யம், “வன்முறைதான் புதிய சமூகத்தை பிரசவிக்கப் போகும் பழைய சமூகத்தின் மருத்துவச்சியாக உள்ளது,” என்றார் மார்க்ஸ்.

ரசிய புரட்சியை நாம் மீண்டும் பேசுவது அங்கே நடந்தேறிய சமூக மாற்றமானது அங்கிருந்த ஒடுக்குமுறை ஏற்றதாழ்வு இன்றுள்ள பல பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. ஆம் உழைக்கும் மக்கள் தங்களின் உண்மையான வாழ்க்கை வாழ்ந்தனர்.

இன்று தமிழகத்தில் புரட்சிக்கான ஒரு கட்சி இல்லாத நிலையில் பல குழுக்கள் தாங்கள் மட்டும் புரட்சிக்கானவர்கள் என்று வலம் வருகின்றனர். ஆனால் அவர்களை பீடித்துள்ள குறுங்குழுவாத நோய் விடுபடாத வரை அவர்கள் வளர்வது சாத்தியமே இல்லை.

புரட்சிகர தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லை -லெனின்

  • இன்றைய உலகமயமாதல் சூழலிலே மார்க்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக்கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.
  • தியாகிகளுக்கு சிரம் தாழ்த்தி அவர்களின் உயரிய தியகத்தை போற்றுவோம், சரியான மார்க்சிய லெனினிய வழியில் அவர்கள் விட்டு சென்ற பணியினை முடிக்க ஒன்றிணைவோம்.

    கம்யூனிஸ்டுகள் இறப்பதுண்டு பிறப்பதில்லை. தோழர்களுக்கு செங்கொடியின் வீரவணக்கம்

                        தோழமையுடன் இலக்கு இணைய ஆசிரியர்களின் சார்பாக ....

இலக்கு 79 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பிடி எப் வடிவில் பெற்றுக் கொள்ளுங்கள்















முதலாளித்துவதின் மகிமை கடவுள்களின் இருப்பும் ஆத்திகம் நாத்திகம்

 முதலாளித்துவத்தில் எல்லாம் வணிக்கம் சார்ந்தவையே.

மக்களிடையே உள்ள பழைமைகளையும் அதனை புதுமைபடுத்தி தன் தேவைகேற்ப உருமாற்றி கொள்ளும் முதலாளித்துவம் பழைமையை கட்டிக்காத்துக் கொண்டே புதுமைகளை விற்பனை செய்யும் யுத்திதான் ஆளும் வர்க்கமாய் அமைந்துள்ள அமைப்பின் சிறபம்சம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் அத்தியாத்திலிருந்தே, "இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப் படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்". மேலும்," சுருங்கச் சொல்லின், முதலாளித்துவ வர்க்கம், மதம் மற்றும் அரசியல் பிரமைகளால் திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக, அப்பட்டமான, வெட்கமற்ற, நேரடியான, கொடூரமான சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது".
என்று தெளிவுப்படுத்தும் ஆசான்கள்.
"இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது....ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்து விட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது". இதன் ஆழத்தை நாம் புரிந்துக் கொண்டால் நாம் காணும் பல பொய்மைகள் அறுத்தெறியப்படும்.
இன்று இங்கே மத கருத்துகள் நல்ல விற்பனை பொருளாக இருப்பதால் அதனை விற்பனை செய்த மதவாதிகள் நல்ல லாபம் குவித்த கூட்டம் இன்று ஆட்சி கட்டிலிலும் அமர்ந்து விட்டனர். இந்த மதம் பற்றிய மார்க்சிய புரிதல் இன்மையால் பலர் ஆளும் வர்க்க கூட்டத்திடம் அடிமையாகிவிட்டனர் ஆம் பகுத்தறிவாதம் என்ற ஆளும் வர்க்க கருத்தியலிடம் ஆக மார்க்சியவாதிகளுக்கு தெளிவான கண்ணோட்டம் வேண்டும்

“இன்றைய சமுதாயம் மாறாத கல் உருவம் அன்று மாற்றத்திற்கு உரிய உயிர் அமைப்பே. அது இடைவிடாமல் மாறிக்கொண்டிருக்கிறது”. (மூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்னு பக்கம் 29) மற்றும், “முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமன்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலைமையினாலும் அவதிப்படுகிறோம் நவீன கால தீமைகளோடு கூடவே காலத்துக்கு ஒவ்வாத சமூக அரசியல் முறைகளை தவிர்க்க முடியாதபடி உடன்கொணரும் பழமைப்பட்ட உற்பத்தி முறைகளின் முனைப்பொழிந்த மீத மிச்சங்களிலிருந்து மரபுரிமையாய் வந்த கேடுகளின் முழு வரிசையும் நம்மை வருத்துகிறது வாழ்பவர் வாழ்பவற்றால் மட்டும் இன்றி மாண்டவற்றாலும் அவதிப்படுகிறோம். மாண்டவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்”. (மூலதனம் மேல் காணும் நூல் பக்கம் 26).

இந்த வாக்கியத்தில் மார்க்ஸ் என்ற சமூக விஞ்ஞானி மனித சமூகம் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு அசைவிலும் அவைமாறியும் வளர்ந்தும் முன்னேறிக் கொண்டுள்ளதை விளக்கியுள்ளார். இதனை புரிந்துக் கொள்ள மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞான அறிவும் மார்க்சியம் லெனினியமாக வளர்ந்த காலகட்டத்தின் அதன் தத்துவ அரசியல் பொருளாதார நிலைமைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு வளர்ச்சியும் மார்க்சியவாதிகளுக்கு அவசியம் அன்றோ?

சிலர் வர்க்க சமூகத்தின் சில பிரச்சினகளை மட்டுமே முதன்மைபடுத்தி வர்க்க சமூகத்தின் முதன்மையான நோக்கம் சுரண்டலில்தான் ஒளிந்துள்ளது என்பதனை மூடிமறைக்க செய்கின்றனர்.

சிலவகையான எதிர்நிலைகளை முதன்மைபடுத்தி சமூக மாற்றத்தை புரிந்துக் கொள்ளாமல் மாறாநிலையில் பேசிக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக கடவுள் மறுப்பு பேசுவோரும் கடவுளை ஏற்கும் ஆன்மீகவாதிகளும் மாறாநிலைவாதிகளே உள்ளனர்.

இயற்கை எதிர்த்த போராட்டத்தில் மனிதனின் இயலாநிலையில் குறிபிட்ட காலக்கட்டத்தில் தோன்றிய பல்வேறு கற்பனை கற்பிதங்கள் அந்த சமூக சூழலிற்கானவையே. இன்றைய சமூகத்தில் அவை பொறுத்தமற்றவை அவைகளின் நேரடி பயன்பாடு என்பது அறியாமையின் வெளிப்பாடே அதற்கு சமுக விஞ்ஞான அறிவு வேண்டும். அவை இன்றி அறியாமையில் அன்றைய சமூகத்தை அப்படியே பிரதிபலிக்க நினைக்கின்றனர் இன்றைய வளர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் புதியவகையில் பழைய கடவுள்களை புதுபிக்கனர். அவை சிலருக்கு நல்ல பணம் கொழிக்கும் தொழில். நீங்கள் கணக்கிட்டால் இந்த கணேஷ் பூஜையின் பின் ஒளிந்துள்ள பல கோடி வணிபம் மற்றும் அரசியல் விளையாட்டு. அதேபோல் கடவுளை எதிர்பதன் பெயரில் காலதிற்கும் களத்திற்கும் அப்பாற்பட்ட கடவுளை எதிர்பதன் பெயரில் அதேபணியை செய்கின்றனர். கடவுளின் தோற்றம் அதன் தேவை அதன் இன்றைய இருப்பு என்ன என்பதனை அறியாத பகுத்தறிவாதிகள். கடவுள் இல்லை என்றுக் கூறிக் கொண்டு அதனை உயிர்பிப்பதில் பங்காற்றுகின்றனர் என்பேன்.

இந்த இருபிரிவினரும் சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டலை தவறியும் பேசுவதில்லை. ஒருபிரிவினர் கடவுள் காப்பாற்றுபவராகவும் மற்றொருபிரிவினர் கடவுளை எதிர்ப்பின்பெயரில் பகுத்தறிவாதம் பேசினாலும் சமுக பிரச்சினையை மூடிமறைத்து வருகின்றனர்.

மக்களின் ஏற்றதாழ்வும் ஏழ்மையும், பசி, பட்டினியும் இன்னும் பல்வேறு கொடுமைகளுக்கு அந்த கடவுளோ அறியாமையோ காரணம் அல்ல வாழும் கடவுள்களான அரசும் அதன் பரிவாரங்கள்தான் என்பதனை மூடிமறைத்து கடவுள் பின்னர் அணி திரட்டுவோரும் கடவுள் எதிர்போரும் தாங்கள் கைகோர்த்து இந்த அரசில் அங்கம் வைப்பதும் சுகபோகமாக வாழவும் இந்த அமைப்பு அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றனர் தாங்கள் வாழவழியமைத்துக் கொடுத்த இந்த அமைப்புமுறைக்கு. ஆக இவர்களின் பணியை கவனித்தில் கொள்ளுங்கள்.

வர்க்க சமூகத்தில் வர்க்கம் சார எழுத்தும் பேச்சும் செயலும் எவையுமே இல்லை! நம் சமூகத்தில் இடதுசாரி என்பவர்கள் எந்தவகையான கண்ணோட்டத்தில் உள்ளனர் என்பதிலிருந்தே அவர்களின் வர்க்க நலன் புரிந்துக் கொள்ள முடியும்!

இங்குள்ள பலரிடம் காணப்படும் மார்க்சியம் அல்லாத போக்குகளையும், அவர்கள் மார்க்சியத்திலிருந்து விலகிச் செல்வதையும் புரிந்துக் கொள்ள, அவர்களின் செயல்பாடுகள் நமக்கு பிரதிபலிக்கின்றன.

உங்கள் கருத்துகள் எதிர்பார்க்கிறேன் தோழர்களே.

Ganesh Chaturthi 2025: Muhurat, puja timings, significance, visarjan and everything you need to know

இந்திய கம்யூனிச இயக்க படிப்பினைகள்- விவாதத்திற்கு

செப்டம்பர் 2025 இலக்கு இணைய இதழுக்கு தேடலே இவை. உங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன தோழர்களே.  

"இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் உலகைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் விளக்கியது, ஆனால் சமூகத்தை விளக்கினால் மட்டும் போதாது, சமூகத்தை மாற்றவேண்டும் என்பதே முதன்மையானதாகும்" என்று மார்க்சிய ஆசான்கள் எடுத்துச் சொல்லி சமூகத்தை மாற்றுவதற்காக நமக்கு வழிகாட்டினார்கள். ஆகவே இங்கு நிலவுகின்ற பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி என்ன? என்பதைத்தான் நாம் முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் சந்திக்கும் சாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மக்கள் என்ன செய்கிறார்கள்? நீதிமன்றத்தையோ, காவல்துறை யையோ, மாவட்ட ஆட்சித்தலைவரையோ, அமைச்சர்களையோ அணுகுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். எந்தப் பிரச்சனை என்றாலும் அரசாங்கம் (அமைச்சர்கள்) அல்லது அரசு (அரசு அதிகாரிகள்- நீதிமன்றம்) இவற்றின் மூலமாகவே பிரச்சனைகளை தீர்க்க நாம் முயற்சி செய்கிறோம். அரசு என்ன செய்கிறது? முதலாளிகளுக்கு சாதகமாகவும் (பணம்படைத்த கூட்டதிற்கு) உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு விரோதமாகவும் செயல்படுகிறது ஏன்? ஏனென்றால் இந்த அரசு பணம் படைத்த சொத்துடைய முதலாளிகள் நலனுக்கானதே ஆக உழைக்கும் மக்களின் நலனுக்கான அரசு வேண்டும் அல்லவா? அவை எப்படி இருக்கும் என்பதனை புரிந்துக் கொள்ள மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டியுள்ளனர் அவர்கள் காட்டியுள்ள வழிமுறையில் நடைபோடுவதுதான் இந்த கொடூரங்களுக்கு விடிவு கிடைக்கும் அதனை செய்ய வேண்டியவர்கள் என்ன செய்துக் கொண்டுள்ளனர் சற்று விளக்குவீர்களா தோழர்களே. எனது சில தேடல் இதனுடன் உங்களின் பங்களிப்பை கோருகிறேன் வாருங்கள் கருத்தை தாருங்கள் தோழமைகளே.

"இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் உலகைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் விளக்கியது, ஆனால் சமூகத்தை விளக்கினால் மட்டும் போதாது, சமூகத்தை மாற்றவேண்டும் என்பதே முதன்மையானதாகும்" என்று மார்க்சிய ஆசான்கள் எடுத்துச் சொல்லி சமூகத்தை மாற்றுவதற்காக நமக்கு வழிகாட்டினார்கள். ஆகவே இங்கு நிலவுகின்ற பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி என்ன? என்பதைத்தான் நாம் முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் சந்திக்கும் சாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மக்கள் என்ன செய்கிறார்கள்? நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ, மாவட்ட ஆட்சித்தலைவரையோ, அமைச்சர்களையோ அணுகுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். எந்தப் பிரச்சனை என்றாலும் அரசாங்கம் (அமைச்சர்கள்) அல்லது அரசு (அரசு அதிகாரிகள்- நீதிமன்றம்) இவற்றின் மூலமாகவே பிரச்சனைகளை தீர்க்க நாம் முயற்சி செய்கிறோம். "அவனன்றி அணுவும் அசையாது" என்று ஆன்மீகவாதிகள் சொல்வது உண்மையல்ல, ஆனால் அரசின்றி மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது நடைமுறை உண்மையாகும். இதனை யாராலும் மறுக்க முடியாது. இந்திய பெருமுதலாளிகளிடம் மூலதனம் இருக்கலாம் ஆனால் அவர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவது இந்த அரசின் துணையோடுதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த அரசும், அரசாங்கமும் பெருமுதலாளிகளுக்கு சேவை செய்வது போல பெரும்பான்மையான மக்களுக்கு சேவை செய்வதில்லை, மாறாக மக்களுக்குஎதிராகவே நடந்துகொள்வதை நாம் பார்க்கிறோம். ஆகவே பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களை பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு நமக்குத் தேவை புதிய வகையான அரசாகும். அத்தகைய அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தேசியப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும், சாதிப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும் பிற பிரச்சனைகளை முதன்மை படுத்துபவர்களும் அவர்களது பிரச்சனையை தீர்ப்பதற்கு எவ்வகையான அரசு வேண்டும் என்பது குறித்து பேசுகிறவர்கள் யாரெல்லாம உள்ளனர் கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்திய வரலாற்றில் விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் தன்னலம் கருதாத போராட்டம் தியாகம் மற்றவர்களின் எல்லாப் போராட்டங்களை விட மேலானது, உயர்வானதாகும்.

புரட்சி என்பது என்ன என்று தெளிவு பெற்றுக் கொண்டு, பொதுவுடமையை நோக்கிய சோசலிச புரட்சியின் அனுபவங்களும் மற்ற புரட்சியின் அனுபவங்களும் நமக்கு தரும் பாடங்களிலிருந்து தற்போதைய கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்பாட்டை நாம் பரிசீலிக்க வேண்டும். அன்றைய செயலில் புரட்சிக்காக அர்பணிப்புடன் செயல்பட்ட கட்சியின் பின் உழைக்கும் மக்களும் பல்வேறு பிரிவினரும் அணி திரண்டனர். பலர் தியாகியாகவும் தயங்கவில்லை, தன்னுடைய உயிரை துச்சமாக மதித்து நேர்மையாக செயல்பட்டார்கள். அவர்களின் செயல்பாட்டால் மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் மதிக்கப்பட்டனர். அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களின் சொத்துகளை கைவிட்டு உழைக்கும் மக்களின் விடுதலைக்காக களத்தில் இறங்கி போராடி உழைக்கும் ஏழை எளிய மக்களின் உற்ற துணைவர்களாக வாழ்ந்து காட்டினர். இன்றோ கட்சியில் பொறுப்பு பெறுவது, தன் குடும்பம், தனது சொத்து சேர்க்க என்றாகிவிட்டது பொதுநலம் போய் சுயநலம் மேலோங்கியுள்ளது. சிலர் ஆட்சி அதிகாரதிற்கு வந்து முதலாளிகளாக துடிக்கும் பொழுது அன்றைய கம்யூனிஸ்டுகளும் இன்றைய கம்யூனிஸ்டுகளும் ஒன்றல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல் அன்று புரட்சிக்காக உயிர் நீத்த தியாகிகளின் பெயரில் வாழும் குழுக்களும் இன்று தங்களின் மூதாதையரின் பெயரை உச்சரித்து உயிர்வாழ துடிக்கின்றனர். ஆனால் தியாகத் தலைவர்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு உண்மையாக இல்லை என்பதே நம் முன் உள்ள உண்மையாகும். இன்றைய நிலையை நாம் புரிந்துக் கொள்ள, மார்க்சிய ஆசான் லெனினிடம் செல்வோம், “முதலாளி வர்க்கத்தின் ஒன்று படுத்தப்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட சக்திக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட மற்றும் மையப்படுத்தப்பட்டதொரு சக்தியாக மாற்றாக மக்கள் நிறுத்தப்பட வேண்டும்”- என்று மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் வழிகாட்டியது. ஆனால் அதுபோன்ற ஒரு நிலை இங்கில்லை. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் குருசேவின் வழிகாட்டுதலை ஏற்றுள்ள எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளும் முதலாளித்துவ கட்சிகளிடம் சமாதானமுறையில் இணக்கமாக செயல்பட்டு தொழிலாளி உழைக்கும் வர்க்கதிற்கு துரோகம் செய்கிறது. அதேபணியைதான் புரட்சி பேசுபவர்களும் ஏமாற்றுகின்றனர். இங்குள்ள எல்லா குழுக்களும் மார்க்சியம் கூறியுள்ள சமூக மாற்றத்தில், வெகுசனங்களின் பங்களிப்பை புறக்கணித்துவிட்டு ஒருசிலர் மட்டும் ஒன்று கூடி என்ன சாதித்தனர்? ஆக ரசியா மற்றும் சீனப் படிப்பினைகளின் அடிப்படையில் புரட்சிக்கான பணியினை செய்யாத இவர்களை எதிர்புரட்சியாளர்கள் என்பதில் தவறில்லைதானே?

இந்தியாவை கொள்ளை அடிக்க துடிக்கும் ஏகாதிபத்திய கொள்ளையர்கள்முதல், இன்நாட்டு சுரண்டல் பேர்வழிகள் வரை - இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக ஏராளமான இயற்கை வளங்களை கொண்ட நாடாக பெரிய சந்தையாக இருப்பதால் இங்குள்ள மக்களையும் மற்றும் இயற்க்கை செல்வங்களையும் இவர்களது மூலதனம் மூலம் சுரண்டுவதும், அதேவேளையில் நாட்டின் இயற்கை வளங்களை தங்களின் தேவைகேற்ப கொள்ளையடிப்பதும், தொடர்கதையாக உள்ளது. இந்த கொள்ளை கூட்டத்தை விரட்டி அடிக்க. இங்கு ஒன்றுபட்ட ஒரு புரட்சிகர பொதுவுடைமை கட்சி இல்லை. அதேபோல் நாட்டின் பெரும்பாலன உழைப்பு சக்திகள் (உழைப்பாளர்கள்) அவர்களின் மீதான சுரண்டல் ஒடுக்குமுறைக்கான காரணம் பற்றியும் சுரண்டலாளர்களை பற்றியும் அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பையும் அறியாத நிலையிலேயே உள்ளனர். அது பற்றிய உண்மைகளை அவர்களுக்கு போதித்து எதிரிக்கு எதிரான போருக்கு மக்களை கம்யூனிஸ்டுகள் இங்கு வளர்த்தெடுக்கவில்லை. ஆனால், எதிரிகள் மக்களை பிரித்து வைத்துள்ளான். அதன் அடிப்படையிலேயே மக்களின் எதிரிகள் மக்களை அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.

மக்களை இந்து மத ரீதியாக ஒன்றிணைக்க நினைக்கும் மதவாத கட்சி ஆட்சியில் இருக்கிறது, சாதி ரீதியாகவும், இனரீதியாகவும் இன்னும் சில வழிகளில் மக்களை பிரிவினை செய்து அவர்களுக்கான முக்கிய பிரச்சினையின் அடிப்படையில் திரள்வதை தடுக்க, மதமாக, சாதியாக, மொழியாக, இனமாக இன்னும் சில பிரச்சினைகளின் அடிப்படையில் பிரிந்து ஒருவருக்கெதிராக இன்னொருவரை நிறுத்தி அவர்களுக்குள் மோதிக்கொள்ள தேவையற்ற முரண்பாட்டை தொடர்ந்து வளர்க்க ஆளும் வர்க்கமும் அதன் எடுபிடிகளும் முயல்கிறார்கள்.

அதே சமயம் நாட்டில் பொதுவுடமையை நேசிக்கும் மற்றும் அதனை படைக்க விரும்பும் சக்திகள் பிரிந்து நிற்கின்றன. ஒரே குடையின் கீழ் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு நின்றால் யொழிய நாட்டில் சோசலிசம் சாத்தியம்! இல்லையேல் புரட்சிக்கு புறநிலை இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத கையறுநிலை ஏற்படும், நாட்டில் புரட்சியை நேசிக்கும் சக்திகள் ஒன்றுபடாமல் இருந்தால் எதிருக்கு சாதகமே அன்றி உழைக்கும் மக்களுக்கு அல்ல!!

இன்று கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அமைப்புகள் என்ன நிலையில் உள்ளது? மார்க்சிய தத்துவத்தை கைவிட்டு தலைமை கூறுவதை கேட்டு நடக்கும் நடைமுறை, இதில் விமர்சனதிற்கு இடமே இல்லை. எங்கள் கட்சியின் தலைமையை கேள்வி கேட்பதா என்ற நிலை உள்ளதென்றால் புரட்சி பேசும் குழுக்களும் விதிவிலக்கல்ல! தங்களைக் கேள்வி கேட்பவர்களை தேவையற்றவர்களாக தூர எறிவது தானே தொடர்கதையாக உள்ளது. இந்த இரண்டு போக்கிலும் இங்கு சித்தாந்த போராட்டம் நடைபெறுவதற்கு எந்த சாத்தியப்பாடும் இல்லை. விமர்சனம், சுயவிமர்சனம் என்பதே இவர்களுக்கு வேப்பங்காயாக உள்ளது. ஆக இவர்கள் கம்யூனிசத்தின் அடிப்படைகளை மறுத்து விட்டு தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும் புரட்சிக்கான அடிப்படைகளை புறக்கணித்துவிட்ட இவர்கள் புரட்சியாளர்கள் என்றும் நடை போடுகிறார்கள். வெட்ககேடு இவர்களின் ஒவ்வொரு செயலும். இவர்களுக்கு இடையில் உள்ள புரட்சியை நேசிக்கும் சக்திகள் உழைக்கும் மக்களை நேசிக்கும் சக்திகள் விழிப்படைந்து ஒரு சரியான மார்க்சிய லெனினிய வழிமுறையை கற்று தேர்ந்து இந்த உழைக்கும் மக்கள் விரோத கட்சிகளையும் போலி புரட்சியாளர்களையும் புறக்கணித்து உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கட்சி அவசியம் என்று உணர்ந்து செயல்பட தொடங்கினால் இந்த போலிகள் இல்லாது ஒழிவார்கள்.

“தங்களது இயகத்தில் உள்ள குறைபாடுகளை பூசி மறைக்காமல் இருக்க வேண்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால் அவைகளை விரைவில் மற்றும் அடிப்படையில் சரி செய்வதற்காக பகிரங்கமாக அவைகளை விமர்சனம செய்ய வேண்டும்”. (லெனின்- அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் அடிப்படைப் பணிகள்). இங்குள்ள ஒவ்வொரு குழுவும் தம்மை தாமே ஒரே சரியான புரட்சிகரமான கம்யூனிஸ்ட கட்சியாக கருதிக் கொள்ளும் மனப்பான்மை கொண்டவை. சுவர்களில் காணும், “நானே உயிரும் ஆன்மாவும், வழியுமாக இருக்கிறேன்”, என்கிற வாசகத்துக்கும், மேலே கண்ட மனபான்மைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? புறநிலை உண்மை என்று கூறுகிறோமே, அதற்க்கு ஒத்துப் போகிறதா?

விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மை களிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. 

 அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.ஆனால் இங்கோ ஒரு அமைப்பே பல குழுக்கலாக சிதறுண்டு போய் கொண்டுள்ளது கேட்டால் கருத்து போராட்டமாம், இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் ஒடுக்கும் வர்க்க சேவையை தவிற சொல்ல முடியுமா நியாயவான்களே?

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்! (கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் இருந்து)....

எல்லாப் புரட்சிகர வர்க்கங்களையும் -பிரிவினரையும்- மக்கள் திரளினரையும் அணிதிரட்டி இந்தப் பெரும் சிறப்பு வாய்ந்த போராட்டத்தில் இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை கொடுக்க வேண்டியது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கடமையாகும். அதற்கான அடிப்படைகளை தத்துவ அரசியல் வழிமுறைகளை கண்டு விவாதித்து மக்களை அந்த உயர்வான சமூகம் படைக்க அணி திரட்ட மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிதளங்களை கற்று தேர்வதன் அவசியம் உணர்வோம் செயல்படுவோம் தோழர்களே.



தோழமையுடன் இலக்கு ஆசிரியர் குழு.

திருமா தூய்மை பணியாளர்பற்றி பேசியதை எதிர்த்து

பல்வேறு தோழர்களின் முகநூலில் பதியப்பட்டவையே கீழே 

பணி நிரந்தரம் என்பதை திருமாவளவன் அவருடைய கணோட்டத்திலிருந்து விளக்கம் கொடுத்துவிட்டு, பணி நிரந்தரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பணியில் நிரந்தரமாக ஒருவர் ஈடுபட வேண்டும் என்று பார்க்கிறார். ஆகவே குப்பை அள்ளும் தொழிலையே ஒருவர் நிரந்தராகச் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார். குப்பை அள்ளும் தொழிலில் ஈடுபடும் ஒரு தொழிலாளிக்கு வேறு ஒரு தொழில் தெரிந்திருக்குமானால் அவருக்கு தெரிந்த அந்தத் தொழிலுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்பதை அவரால் முன்வைக்க முடியவில்லையே ஏன்? பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வு கொடுக்கும் கண்ணோ்டம் அவரிடம் இல்லை, அதனால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு சரியான விஞ்ஞானப்பூர்வமான தீர்வை அவரால் கொடுக்க முடியவில்லை. சமூகத்தில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ வர்க்கங்கள் என்ன தீர்வை முன்வைக்கிறார்களோ அதே தீர்வைத்தான் ஆட்சியிலுள்ளவர்களும் அடுத்து ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிசெய்யும் அரசியல் கட்சிகளும் திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளும் முன்வைக்கிறார்கள். ஆனால் ஒரு சிறந்த மார்க்சியவாதியால் மட்டுமே விஞ்ஞானப்பூர்வமான தீர்வை கொடுக்க முடியும். ஒவ்வொரு தொழிலையும் விஞ்ஞானப்பூர்வமாக மாற்றுவதும் தொழில்களுக்கு இடையிலான இழிவு தன்மையை அகற்றுவதும் உடனடியாகச் செய்யவேண்டியது அவசியமாக உள்ளது. எனினும் இது நிரந்தரமானதல்ல. மேலும் விஞ்ஞானப்பூர்வமாக வளர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையின் போதும் புதிய புதிய வழிமுறைகள் நாம் பின்பற்ற வேண்டும். இதனை ஓர் அரசு மூலம்தான் செய்ய முடியும். இதனை சாதித்த பெருமை ரஷ்ய சோவியத்து சோசலிச அரசுக்கு உண்டு. இத்தகைய சூழலில் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு அரசு வேலை கொடுத்ததை ஒழித்துவிட்டு கார்ப்பரேட்டுகள்தான் வேலைகொடுக்கும் என்ற அயோக்கியத்தனமான கொள்கையை எதிர்க்காமல் பணி நிரந்தரம் என்று பேசி பிரச்சனையின் அடிப்படையை மூடிமறைத்துவிட்டு திருமாவளவன் திசைதிருப்புகிறார். நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் வேலை ஏற்படுத்திக்கொடுப்பது அரசின் கடமையாகும். அதனை செயல்படுத்தாத எந்த அரசும் மக்களுக்கான அரசு அல்ல. மக்களுக்கான கடமை செய்யாத அரசு அது எதுவாக இருந்தாலும் மக்கள் அதனை தூக்கியெறிய வேண்டும். மக்களுக்கான கடமையை மக்களின் விருப்பதிலிருந்து செய்யக்கூடிய அரசுதான் இதுபோன்ற பிரச்சனைகளை விஞ்ஞானப்பூர்வமாகத் தீர்க்கும் அத்தகைய அரசு எப்படி இருக்கும் சிந்தியுங்கள், விவாதிங்கள் முடிவுக்கு வாருங்கள் தோழர்களே.(தோழர் ரவீந்திரன் பதிவே)

+++++++++++++++++++++++++

கடுகளவு மூளை இருப்பவன் கூட இவ்வளவு மட்டமான ஒரு கருத்தை முன்னிறுத்த மாட்டான். இந்த கேவலமான கருத்திற்கு திருமாவளவன் அம்பேத்காரை எல்லாம் துணைக்கு அழைப்பது தான் உச்சபட்ச நகைப்புக்குரியது.

இங்கு எந்த தூய்மை பணியாளரும் தனது வாரிசுகள், இனிவரும் தலைமுறைகளுக்கு எல்லாம் சேர்த்து இதே பணியை உறுதி செய்யும் வகையில் பணிநிரந்தம் கேட்டு போராடவில்லை. மாறாக நாங்கள் பத்து, இருபது வருடங்களுக்கு மேலாக இந்த பணியையே நம்பி வாழ்ந்துவிட்டோம், திடீரென எங்களையும், எங்கள் உரிமைகளையும் முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டு தான் போராடி தங்களுக்கான பணி நிரந்தரத்தை கோரினார்கள்.
தற்போது தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் ஓரளவு பணி பாதுகாப்போடு நல்ல நிலையில் இருந்தால் அல்லவா அவர்கள் குடும்பம், பிள்ளைகள் எல்லாம் முறையான கல்வி பெற்று அடுத்தகட்டம் நோக்கி வளர்ந்து செல்வார்கள் என்பது திருமாவளவனுக்கு தெரியாதா ?
தற்போது பணியில் உள்ள தூய்மை பணியாளர்களின் பிள்ளைகள், குடும்பங்கள் எல்லாம் அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றி அடுத்தகட்ட நிலையை அடைவதற்கு இந்த அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று கேட்பதற்கு திருமாவளவனுக்கு முதுகெலும்பு உள்ளதா ?
தூய்மை பணியில் ஈடுபடுபவர்களில் பலரின் இறப்பு அவர்கள் பணி காலத்திலேயே ஏற்படுகிறதே, இதற்கான காரணம் என்ன, இதனை தடுப்பதற்கு அரசிடம் ஏதாவது ஆய்வுகள், நடவடிக்கைகள் ஏதாவது உள்ளதா என்று திருமாவளவன் அரசை நோக்கி கேள்வி எழுப்புவாரா ? அல்லது தூய்மை பணியாளர்களின் பணியின் விளைவாக ஏற்படும் முன்கூட்டிய இறப்பு குறித்தாவது திருமாவளவனுக்கு குறைந்தபட்சம் தெரியுமா ?
தினம் தோறும் சாதியின் பெயரால் கொன்று குவிக்கப்படும் சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் ஏற்றவாவது திருமாவளவனால் இந்த அரசிற்கு அழுத்தம் கொடுக்க முடியுமா ?
இதில் எதுவும் திருமாவளவனால் முடியாது. ஏனெனில் இவர்கள் கூட்டணி கொள்கை சார்ந்தது அல்ல, மாறாக எந்தவித நிபந்தனையும் இன்றி பதவி கிடைத்தால் மட்டுமே போதும் என்கிற அடிமை மனப்பான்மையில் அமைத்துக்கொண்ட கூட்டணி.(Bright Singh Johnrose முகநூலில்)

சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டம் அடுத்து மதுரைக்கு பரவுகிறது. மட்டுமல்லாது ஒப்பந்த தொழிலாளர் முறை என்பதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இது சாதி தாண்டிய பாட்டாளிவர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுப்பதாகும்.
இந்த ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலேயே திருமா பேசுகிறார். அவருக்கு பாட்டாளிவர்க்க ஒற்றுமை அவசியமில்லை என்பதுதான் அரசியல்.

திருப்பூர் குணா (முகநூலில்)



தோழர் மாதவ் (முகநூலில்)

சென்னை மாநகராட்சி தொழிலாளர்நிரந்தரம் பற்றி
திரு. திருமாவளவன் கருத்து
உலகமயமாக்கல்
தாராளமயமாக்கல்
சேவகர்களின் கருத்து...
திமுக தலைமைக்கு
எசப்பாட்டு...
இது
அப்பட்டமான
அறிவுசார் அடியாள் வேலை...



ஆக ஆளும் வர்க்கதிற்கு அணி சேர்பதுதான் இவரின் பணியாக உள்ளது உழைக்கும் வர்க்கதின் தேவைக்கானவர் அல்ல

















ஏகாதிபத்திய காலகட்டத்தில் வர்க்க அரசியலை மூடிமறைக்கும் தந்திரம்

 ஏகாதிபத்திய காலகட்டத்தில் வர்க்க அரசியல் புரிந்துக் கொள்ளும் ஒரு முயற்சியே

"பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.

             உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!"
-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து
என்ற மார்க்சிய ஆசான்களின் வழிமுறையை புரிந்துக் கொள்ள.... பாட்டாளி வர்க்கதிற்குப் புரட்சிக்கு மாற்றாக அதனின் வேறாக ஒன்றிருப்பதாக மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டவில்லை.
வர்க்கப்போராட்டத்தின் நிகழ்முறைகளை ஆராய்ந்த மார்க்சிய ஆசான்கள் அதனை சமூக அறிவியலாக வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற தத்துவ போதனையை போராடும் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டியாக்கினர்.
" பாட்டாளி வர்க்கம் தன் துன்ப துயரங்களுக்கு காரணத்தை அறிந்துகொள்ளவும், தன்னை பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்",
மேலும் "கனவுகள் இருந்த இடத்தில் அறிவியலை நிலைநாட்டினார்கள்!" என்று கூறிய லெனின் தன் நாட்டில் உள்ள நிலைமைகளையோடு அன்று வளர்ந்து நின்ற ஏகாதிபத்தியம் மற்றும் புரட்சிக்கான கட்சி செயல்பாடுகளை முன்வைத்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாமல் உலகிற்கும் வழி காட்டினார்.
ஆனால் ரசிய புரட்சியும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட உலகில் ஏற்பட்ட சோசலிச தேவைகளையும் உணர்ந்த கொள்ளைகார ஏகாதிபத்தியம் விரித்துள்ள வலையில் சிக்குண்டு கிடக்கிறது இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றால் மிகையில்லை!
மார்க்சியத்தையே திரித்து புரட்டுவது தொடங்கி இன்று மார்க்சியம் காட்டிய வழிமுறைகளை மறுத்து ஏகாதிபத்திய வழிகாட்டுதலை தலையாய பணியாய் செயல் படுத்துவோர் எப்படி மார்க்சியவாதியாக இருக்க முடியும்!
நம் மத்தியில் உள்ள இடதுசாரிகள் தொடங்கி பன்நாட்டு நிறுவனங்களின் வளர்ப்பு பிராணிகள் வரை இங்கே மக்கள் மத்தியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு அதரவு கொடுப்பதுபோல் ஓடோடி வருகின்றன உண்மையில் அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அந்த பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள் அவர்களை கவ்வி பிடிக்கிறது ஆனால் அந்த செயல்பாட்டாளர்கள் அடுத்த பிரச்சினை வந்த உடன் இந்த பிரச்சினையை அம்போ என்று கைவிட்டுவிட்டு அடுத்த பிரச்சினைக்கு தாவி விடுகின்றனர்.
உண்மையில் இதற்கு பின்னால் அவர்கள் மூடிமறைக்க நினைப்பதை நாம் புரிந்துக் கொள்ள சில படங்கள் ஏகாதிபத்திய காலகட்டத்தில் எந்த சமூக அமைப்பாக இருந்தாலும் அவனின் மூலதன ஆதிக்கதால் உலக நாட்டு மக்கள் அவன் வலை பின்னலில் வீழ்ந்தே ஆக வேண்டும்.
ஏகாதிபத்தியம் தனக்கான அடிமைகளை உருவாக்குவாக்குவது அதன்படி வாழ்வதையையே விரும்புகிறது அதற்கு விலைபோகும் கூட்டம் இங்குள்ளஅமைப்பை ஒருதுளி அசைவையும் விரும்புவதில்லை.
ஆட்டி வைப்பதை ஏற்கும் அடிமைகளுகானதே இந்த அமைப்புமுறை இதனை எதிர்பவர்கள் சொர்பம் அவர்களே வரலாற்றை மாற்றி அமைகின்றனர். உள்ள அமைப்புமுறைக்கு முதுகு சொரியும் வேலை ஏழை எளிய மக்களை அடிமைகளாக வாழ சொல்வதே சீர்திருத்தவாதம் இன்னும் பல....
வர்க்க அரசியல் புரிந்துக் கொள்ளவிட்டால் இதோ இந்த ஆட்டிற்கு தெரியாமல் கசாப்பு கடைமுன்னே தான் கொல்லப்படுவதற்கு காத்துகிடப்பது போல்...
வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்க தேவைகானதே மதம் சட்டம் அரசியல் ஏன் இங்குள்ள எல்லாமே!!!
பிஜேபியின் இந்துத்துவ மத அரசியல் எப்படி மக்களை ஏய்கிறது பாருங்கள்
"என்ன எடுத்து வந்தாய் என்ன எடுத்துபோக" என பேசும் இந்த பெண் பேச்சாளர் சொகுசான வண்டியில் வலம் வந்துக் கொண்டே ஏழை எளிய மக்களை அடிமைகளாக வாழ சொல்வதே இந்த அமைப்புமுறையின் அயோக்கிய தனம். இவைதானே சீர்திருத்தவாதம் பேசுவோரின் நிலையாகவும் உள்ளது இந்த சமூகத்தில் தனக்கான இடம் தேடி அதில் தானும் சொகுசாக வாழத்துடிக்கும் இவர்கள் தங்க்களுக்கு இந்த பிற்போக்கு சமூகத்தில் இடர்பாடு ஏற்படும் பொழுது "குய்யோ முய்யோ" என்று கத்துகின்றனர். உண்மையில் இந்த சமூக அவலம்தானே இவை. இதனை துடைத்தெறியச் சொல்வதுதானே மார்க்சியம் அதனை ஏற்காமல் என் பிரச்சினை மட்டுதான் பிரதானமானது என்பவர்கள் சமூகத்தில் உள்ள மற்றவற்றை புரிந்துக் கொள்ள தயார் இல்லை!
அன்றிலிருந்து இன்று வரை பாராளுமன்றத்திற்கு வெளியே நிலவிய உழைக்கும் மக்களைச் சுரண்டும் முறையானது எந்த அளவிலாவது குறைக்கப்பட்டுள்ளதா? திட்டவட்டமான பதில் இல்லை என்பதேயாகும். ஏனெனில் சுரண்டலைப் பாராளுமன்றம் பாதுகாக்கவில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியே சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரமே சுரண்டலைப் பாதுகாக்கிறது
உழைக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதார பிரச்சினையுடன்
கூடிய அரசியல் பேசாமல்- தனித்தனியான போராட்டங்கள்! எதற்கு யாருக்கு? எந்த வர்க்க நலனுக்கு? யாரை பாதுகாக்கின்றது?.
ஏகாதிபத்திய பன்நாட்டு கம்பெனிகளின் காலடியில் இன்றைய ஆட்சியாளர்கள்.
பன் நாட்டு அடிமைகளாக அவர்களின்
நுகர்வோராக வாழ மட்டுமே உரிமை! இவை என்ன சமூகம்?
பன்நாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்க அரசு துறையின் எல்லா நிர்வாக அமைப்பையும் தனியாருக்கு திறந்து விட்டு கல்வி, மருத்துவம் வேலைவாய்ப்பு இப்படி எல்லாம் தனியாரிடம் கொடுத்த அரசு அதனை உன்னதமாக நினைப்போர் யார்?
ஏகாதிபத்திய காலகட்டதில் நம் சமூகத்தை புரிந்துக் கொள்ளவே இயலாத மார்க்சிய புரிதல் அற்ற பதர்கள் மட்டுமே!

முந்தைய தத்துவங்கள் அனைத்தும் உலகத்தை விமரிசிக்க மட்டுமே செய்தன. ஆனால் மார்க்சியம் மட்டுமே உலகத்தை விமரிசிக்கச் செய்வதோடு மாற்றவும் செய்கின்றது என மார்க்ஸ் கூறினார்.

தத்துவம், அரசியல், பொருளியல், மதம், அறிவியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிய அனைத்தையும் விளக்குவதாக மட்டுமின்றி அத்துறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதாகவும் ஆன தத்துவம் தான் மார்க்சியம் ஆகும்.

சரி இன்று மார்க்சியமல்லாத போக்கு ஏன் மலிந்துக் கிடக்கிறது என்றால் உலகில் எங்கும் சோசலிச நாடுகள் இல்லை ஏகாதிபத்தியம் சோசலிசத்தை வரவிடாமல் தடுக்க தன்னால் இயன்றவரை மார்க்சியதிற்கு எதிரான கருத்துகளை பரப்புவதும் மார்க்சியத்தை திரிபதும் குழப்புவதும் அவர்களின் வேலையாக உள்ளது ஏனெனில் தவறியும் உழைக்கும் ஏழை எளிய மக்கள் ஒன்றினையக் கூடாது. அதற்கான வேலையை மிக கட்சிதமாக செய்து முடிகின்றனர். அதற்கு சாதக சூழல் நிலவுகிறது

ஜார்ஜ் பொலிட்சரின் வார்த்தைகள் கீழே...."வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் சோறு கிடைக்க போராடினால் போதும் அரசியல் போராட்டம் தேவை இல்லை என்று சிலர் நினைக்கின்றனர் புரட்சிகரமான தெருச் சண்டை நடத்தினால் போதும் நிறுவனம் கட்சி ஒன்றும் தேவையில்லை என்று சிலர் நினைக்கின்றனர் அரசியல் போராட்டம் ஒன்று தான் இந்த வர்க்கப் போராட்ட பிரச்சினைக்கு பரிகாரம் தொழிற்சங்க இயக்கம் முதலான மற்றும் வேண்டியதில்லை என்று சிலர் எண்ணுகின்றனர்.ஆனால் ஒரு மார்க்சியவாதி இந்த வர்க்கப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறான் மூன்று அம்சங்களை கொண்ட ஒரே ஒரு பிரச்சினையாக பார்க்கிறான்.

1).பொருளாதார போராட்டம் 

2).அரசியல் போராட்டம் 

3).தத்துவ அறிவு போராட்டம் என்ற மூன்று அம்சங்களைக் கொண்ட வர்க்கப் போர் என்று மார்க்சியவாதி கருதுகிறான்.

ஆனால் சீர்திருத்தவாதிகளை புரிந்துக் கொள்ள...

சீர்திருத்தவாதத்துக்கும் மார்க்சியத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்போர் பற்றி

வர்க்கப் போராட்டத்தில் அங்கிருப்பதோடு நிற்காமல் இதனை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு அங்கீகரிக்கவும் எடுத்துச் செல்வர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார் (அரசும் புரட்சியும் லெனின்,பக்கம் 49).

 முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பலதரப்பட்டவை ஆனால் இவற்றின் சாராம்சம் ஒன்றுதான். வடிவம் எப்படி இருப்பினும் இந்த அரசுகள் எல்லாம் முடிவாய் பார்க்குமிடத்து தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் ஆகும் (அதேநூல் பக்கம் 51). 

பாரிஸ் கம்யூனில் தலைமையானது அடிப்படையான ஒரு படிப்பினையை கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய் புகும்படி அவ்வளவு பிரம்மாண்டமான முக்கியத்துவம் உடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர்."கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை அதாவது ஏற்கனவே உள்ள அரசு பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டு விட முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று". இந்த வாசகத்தில் ஒற்றை மேற்கோள் குறிப்பிட்டு காட்டப்படும் சொற்களை ஆசிரியர்கள் மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலிலிருந்து அப்படியே எடுத்து கையாளுகின்றனர்இவ்வாறாக பாரிஸ் கம்யூனில் தலைமையானது அடிப்படைதுமான ஒரு படிப்பினையை கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய் புகுத்தும்படி அவ்வளவு பிரம்மாண்டமான முக்கியத்துவம் உடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர் இந்த முக்கிய திருத்தம் சந்தர்ப்பவாதிகளால் திரித்துப் புரட்டப் பெற்றிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாசகர்களில் பத்தில் ஒன்பது பேருக்குஏன் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கும் கூட இதன் பொருள் அனேகமாக தெரிந்து இருக்காது எனலாம்இந்தப் புரட்டலைப் பிற்பாடுபுரட்டல்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனி அத்தியாயத்தில் நாம் பரிசீலிப்போம்மார்க்சியத்தின் புகழ்மிக்க வாக்கியத்திற்கு தற்போது சகஜமாய் அளிக்கப்படும் கொச்சையான வியாக்கியானத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறோம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மாறாய் மெதுவாய் பையப்பைய வளர்ச்சி காணும் கருத்தினை இங்கு வலியுறுத்துகிறார் என்பதாய் விளக்கம் அளிக்கப்படுகிறதுஆனால் இதற்கு நேர் எதிரானது உண்மை. " ஏற்கனவே உள்ள அரசு பொறியமைவைத்தொழிலாளர்கள் கைப்பற்றுவதோடு மட்டும் நிற்காமல் அதை அழித்தொழித்திடவும் நொறுக்கவும் வேண்டும் என்பதே மார்க்ஸ் கூறும் கருத்து .(அரசும் புரட்சியும் நூலிலிருந்து பக்கம் 52-52) சிலர் நினைப்பது போல் தனிநபர் களை தாக்குதோ தூக்கி பிடிப்பதோ எந்த பயனும் இல்லைஉண்மையில் அவர்களின் சித்தாந்தம் என்ன என்பதே நமது கேள்வியாக இருக்க வேண்டும்

 

ஒரு குடியரசு மிகமிக ஜனநாயக தன்மையுடைய குடியரசாக கூட எந்த வேஷம் போட்டாலும் இது முதலாளித்துவ குடியரசாக இருக்குமானால், இதில் நிலம், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீது தனியுடமை நிலவுமானால் சமுதாயம் முழுவதையும் தனிப்பட்ட மூலதனம் கூலி அடிமை நிலையில் வைக்குமானால், அப்பொழுது இந்த அரசு சிலர் மற்றவர்களை அடக்கி வைப்பதற்காக உள்ள இயந்திரமே ஆகும்.


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்