சாதியை உடைத்தெறிய தயாரான மக்கள்!! பூனைக்கு மணி கட்டிய ‘Society பாவங்கள்’ தெருவில் இறங்கப்போவது யார்?-உண்மையில் இதன் நோக்கம்?

அண்மையில் கவின் ஆணவப்படுகொலையை முதன்மைப்படுத்தி என்னிடம் விவாதித்த ஒருவர் வர்க்க போராட்டத்தை மறுத்து சாதி போராட்டத்தை முதன்மை படுத்தும் பொழுதுஅவரை போன்றோர் என்ன செய்ய நினைகின்றனர் என்பதே?

ஏகாதிபத்திய சுரண்டலின் கொடிய முகம், உலகமய தனியார்மய பாதிப்பால் மக்கள் வேலையிழந்து அல்லது வேலையற்று கிடக்கும் நிலை. 146 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் பிரச்சினை தீர்ப்பது இருக்கட்டும் அதற்கு காது கொடுத்து கேட்க்காத அரசு! மேலும் மேலும் மக்களை வதைப்பதேயே பணியாக கொண்டுள்ளது. இதனை ஒன்று திரண்டு போராடாமல் இருக்க செய்த சூழ்ச்சிகள் பல. இன்று எங்கும், அமைப்புசாரா தொழிலாளர்கள் மட்டுமல்ல, அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க ஊழியர்கள் என இந்த நெருக்கடியில் பாதிக்கப்படாத தனியொரு குடும்பமும் இல்லை எனலாம். இதுவரையில் ஒப்பீட்டளவிலான வேலை பாதுகாப்பை உடைய சிறிய (நாட்டின் மக்கள் தொகையில்) எண்ணிக்கையிலான அரசாங்க ஊழியர்கள் தவிர, மற்றவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கிராமபுரங்களை பற்றிய அரசின் கடந்தகால புள்ளிவிவரம் “கிராமங்களில் மிகப் பெரியளவில் கடுந்துன்பத்துடன் வாழும் அவலம். இதில் நடுவண் அரசின் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீட்டின் அளவு என்பது மிகவும் அற்ப்ப தொகையாகும். அதேபோல் ஏழைகள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுகளால் மேலும் கசக்கிப் பிழியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேலையிழந்தோரின் எண்ணிக்கையைக் கற்பனை செய்யத்தான் முடியும். இந்த நேரத்தில் ஆட்சியாளர்கள் அவர்கள் மீது ஜிஎஸ்டி யின் கொடூரத்தை புகுத்தி வதைக்கவும் செய்கின்றனர். இதனால் வெகுண்டெழ வேண்டிய மக்கள் சிறுசிறு பிரச்சினைகள் பின் அணி திரட்டி பொதுவான பிரச்சினையை மூடிமறைக்க இந்த அடையாள அரசியல் ஆழமான பணியாற்றுகிறது.

இந்தச் சூழலிலும் மக்களின் வாக்குகளை மட்டுமே தேடும் ஓட்டுக் கட்சிகள் எதுவும் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பற்றி ஒரு வார்த்தையையும் பேசுவதில்லை.

ஆளும் வர்க்கம் வெறுமனே மக்களை இன, மத அடிப்படையில் மாத்திரம் சுரண்டலை தொடரவில்லை. இந்துத்துவாவாதி இந்துக்களிடம் முஸ்லிம்களால் காலம் காலமாக ஒடுக்கு முறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகி வந்துள்ளதாகவும், இந்துக்கள் என்கிற வகையில் ஒன்றுபட வேண்டுமெனவும் போதிக்கின்றனர். ஒரு பொய்யான கருத்தியலை சொல்லி பாதிக்கப்பட்ட மனநிலையை இந்துக்களிடம் விதைக்கின்றனர். இந்து என்ற அடையாளம் வலுப்படுத்தப்பட்டு அடையாளத் திரட்டலை முன்னெடுக்கின்றனர். தேர்தலின் போது இதை வாக்கு வங்கியாக பயன்படுத்துகிறார்கள். இவையும் அண்மை காலமாக பெரும் பிரிவினையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொதுவாக சாதி, மத அடையாளங்களை முன்னிறுத்தும் கட்சிகளால் அந்தந்த பிரிவு மக்களை முழுதாக தங்கள் செல்வாக்கு தளத்தில் திரட்டிட முடியவில்லை. சில சாதி கட்சிகளின் குறிப்பிட்ட சதவீதம் இருந்தும் அவை மக்களை தன் பின்னால் அணி திராட்டாமை காணகிடக்கிறது!

வர்க்க அடையாளம், வர்க்க சமுதாயத்தில் அடிப்படையானது. சமுதாய வளர்ச்சிப் போக்கில் வர்க்கங்களின்தன்மையும் அமைப்பும் மாறியே வந்தாலும், உழைப்போர், உழைப்பை உறிஞ்சுவோர் என்ற பிளவு மேலும் ஆழப்பட்டு வந்துள்ளதே ஒழிய இல்லாதொழியவில்லை. எனவே அந்த முரண்பாட்டைப் புறக்கணித்து எந்தவிதமான சமூக அநீதியையும் எதிர்த்து போரிட்டு வெல்ல இயலாது.


இங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும் தங்களின் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதுதான் உண்மையான நிலவரம். ஏனெனில் இந்த அரசமைப்பு தனிசொத்தை பாதுகாக்கும் அரசு. அதனால் பெரும்பான்மையிலான உழைக்கும் மக்கள் எந்த சாதிலிருந்தாலும் உழைத்தும் கூட வாழக் வழியில்லா நிலை (ரிப்பன் மாளிகை போராட்டம் புகுத்தும் பாடம்). இலவசகல்வி, மருத்துவம், மற்றும் அரசு வேலைவாய்ப்பு எதையையும் கொடுக்காத அரசு சாதிய சண்டையில் உயிர் வாழ்ந்துக் கொண்டுள்ளது. சாதி சண்டையை உருவாக்கும் சாதி கட்சிகள் தவறியும் இன்றைய உலக மய கொள்கையால் எல்லா சாதி உழைக்கும் மக்களுக்கு வாழவழியில்லை.


Society பரிதாபங்கள் அதன்மீதான பல்வேறு முற்போக்காளர்கள் பேச்சையும் ஆவணப்படுத்தி புதிய தலைமுறை செய்தியில் வெளியானவற்றை கீழ்காணும் இணைப்பில் காணலாம் அதே நேரதில் அவர்கள் பேச மறந்த வற்றை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.


கீழ்காணும் அடைப்புக்குள் அதில் பேசியோர் அடங்குகின்றனர்"கோபி சுதாகரின் வீடியோவுக்கான வெற்றி என்பது சாதி எதிர்ப்புக்கான வெற்றி.. சாதி எதிர்ப்புக்கான வெற்றி என்பது 100 வருடங்களுக்கு முன்பே சாதியை எதிர்த்துப் பேசிய பெரியாருக்குக் கிடைத்த வெற்றி. 100 வருடங்களுக்கு முன் பெரியார் செய்த வேலைதான் இன்று கோபியும் சுதாகரும் வெளியிட்ட வீடியோவை கொண்டாட வைத்திருக்கிறது".


ஆனால் சாதி ஏன் சமூகத்தில் உள்ளது இவர்களுக்கு தெரியாதவை அல்ல ஆனால் அவை ஓட்டு வங்கியாகவும் உழைக்கும் மக்களின் கழுத்தை நெறித்துக் கொண்டுள்ளது அடுத்தவேளை எப்படி வாழ்வதிலிருந்து ஆனால் அவர்களின் வாழ்க்கை பிரச்சினையை பேசாமல் திசைத் திருப்ப அவர்களை பிரிவினை செய்ய மதம், சாதி, மொழி பிரச்சினையை பேசி பிரிவினை செய்து ஒன்றுபட்டு போராட்டாமல் இருக்க தெளிவான உத்தியே.


தன் உழைபிற்கேற்ற கூலிகேட்டு போராடும் தூய்மை பணியாளர்களை கண்டுக் கொள்ளாத அரசும் இந்த மேட்டுகுடி சாதி ஒழிப்பு பேர்வழிகளும் அதே பெரியார் வழிவந்த திராவிட கட்சி ஆட்சியில்தான் இந்த அவலம் நடைபெறுகிறது அதற்கு என்ன எதிர்வினை சொல்வார்களா?


வர்க்கமாக உள்ள சுரண்டலுக்கு திரள வேண்டிய மக்களை பிரிவினை செய்து போராட்ட களத்தையே சுருக்கிவிட்ட பின்னர் இவர்கள் யாரின் நலனுக்கு வேலை செய்கின்றனர்? பதில் சொல்வார்களா?

விவாதிக்க வாருங்கள்...

                                         ++++++++++++++++++++++++++++++++

இவை புதிய தலைமுறை செய்தி அப்படியே இதன் மீதான விமர்சனம் இறுதியில்.

சாதியை உடைத்தெறிய தயாராகும் மக்கள்!!pt web

சாதியை உடைத்தெறிய தயாரான மக்கள்!! பூனைக்கு மணி கட்டிய ‘Society பாவங்கள்’ தெருவில் இறங்கப்போவது யார்?

சாதி வேறுபாடு காண்பவர்கள் முன்னால் கோடு கிழித்துக்கொண்டே சென்றால், அதன் பின்னால் அதை அழிப்பதற்கு தலைவர்களோடு பொது மக்களும் செல்கின்றனர்; ஆனால், குறைந்த அளவு மட்டும்.
Published on: 

“நேரடியான சாதிய வெளிப்பாடுகள் குறைந்துவரும் அதே நேரத்தில் சாதியின் பெருமிதங்களை மிகத் தீவிரமாக கட்டமைக்கிறார்கள். இன்று அதிகமான ஆய்வுகள் சாதியைப் பற்றித்தான் நடக்கின்றன. ஒருகாலக்கட்டத்தில் நிலங்கள் எங்களிடம்தான் இருந்தது; இடையே அது பிடுங்கப்பட்டது என அநியாயமான பொய்களைச் சொல்கிறார்கள். அதை அந்த குறிப்பிட்ட சாதியின் இளைஞர்களும் நம்புகிறார்கள்.

Remaining Time 3:45
கே. சாமுவேல் ராஜ்
கே. சாமுவேல் ராஜ்

அப்படியில்லை என்றால், வணிகத்தில் நாம்தான் முதலிடத்தில் இருந்தோம் என்றோ அல்லது அறிவில் மிகச் சிறந்தவர்களாக இருந்தோம் என்றோ கதைகளை கட்டமைக்கிறார்கள். இக்கட்டுக் கதைகளை இளைஞர்கள் நம்பக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். எனவே, படித்த இளைஞர்களின் மத்தியில்தான் மிகத்தீவிரமான சாதியின் தாக்கத்தினை நம்மால் பார்க்க முடிகிறது. அதற்குக் காரணம் கல்வி கற்ற இளைஞர்களிடம் கட்டமைக்கப்படுகிற சாதிய பெருமிதங்கள்”. இது சிபிஎம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல் ராஜ் புதிய தலைமுறையிடம் குறிப்பிட்ட வார்த்தைகள்.

Society பாவங்கள்
Society பாவங்கள்pt web

இந்த சாதியப் பெருமிதங்கள் கட்டமைக்கப்படுவதைத்தான் தங்களது ‘Society Paavangal’ வீடியோவில் முதல் காட்சியாக வைத்திருந்தனர் கோபியும் சுதாகரும். “நமது பரம்பரை என்னன்னு தெரியுமாடா? உங்க அய்யா யாருன்னு தெரியுமாடா? நம்ம பாட்டன் எப்படி வாழ்ந்தான்னு தெரியுமாடா உனக்கு? குடும்ப வரலாற பத்தி தெரியாம பொலம்பிட்டு இருக்க?” இதுதான் வீடியோவின் முதல் காட்சியே.

சாதியை உடைத்தெறிய தயாராகும் மக்கள்!!
சாதி எனும் நிறுவனம்: நெருப்பு வளையத்தில் சிக்கும் இளைஞர்கள்.. மீட்பது எப்படி?

ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வரலாறு (வரலாறாகக் கூறப்படுவது) இருக்கும்.. நாங்கள் எப்படி இந்த உலகத்திற்கு தோன்றி வந்தோம்? என்பதில் தொடங்கி நாங்கள் யார்? என்ற பழம்பெருமைகளோடு அக்கதைகள் இருக்கும். அதிலிருக்கும் மாற்றுக் கருத்துகளை சொந்த சமூகத்திற்குள்ளேயே இருக்கும் நபர்கள் தெரிவித்தார்களானால், பெருமை பேசுபவரின் எதிர்வினை ஒரே வாக்கியம்தான். “வரலாறு தெரியாதவங்க கிட்ட எல்லாம் பேசவேகூடாது”.. இந்த வசனமும் பாவங்கள் வீடியோவில் இருந்தது. தற்போது நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த வீடியோவை தமிழ் சமூகம் எப்படி உள்வாங்கிக் கொண்டது என்பதைத்தான்.

Society Paavangal வீடியோவில்
Society Paavangal வீடியோவில்

சாதிகள் ஒழியவில்லை. இன்றும் சாதி பார்த்துதான் வாக்களிக்கப்படுகிறது, சாதி பார்த்துதான் திருமணங்கள் செய்யப்படுகின்றன, தொழில் செய்வதற்கு சாதி உதவுகிறது இம்மாதிரி ஏகப்பட்ட உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாதியளவு தனிநபர் நலன்களுக்காக குறிப்பிட்ட சமூக மக்கள்மீது வைக்கப்படும் அழுத்தம், தனது நலனுக்காக சாதியை முன்னிறுத்தி தனக்கான ஆதரவைத் தக்கவைப்பது.. இதைப் பொதுவெளியில் ஜனரஞ்சகமாக போட்டு உடைத்திருக்கின்றனர் கோபியும் சுதாகரும்.

சாதிக்கோட்டை அழிக்கும் பொதுமக்கள்

அந்த வீடியோவை யூ டியூபில் மட்டும் கிட்டத்தட்ட 4.6 மில்லியன் மக்கள் பார்த்திருக்கிறார்கள். 4 லட்சம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். 29 ஆயிரம் பேர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் நிதியுதவி செய்திருக்கிறார்கள். இவை தெரிவிப்பது ஒன்றுதான். இதற்கு முன் சாதிக்கு எதிரான கருத்துகளை பெரும் தலைவர்கள் தங்களது இதழ்களில் எழுதினர், ஊர் ஊராக சென்று பரப்புரை செய்தார்கள், நாடகங்கள் வாயிலாக, சினிமா வாயிலாக தங்களது கொள்கைகளைப் பரப்பிய கையோடு சாதிக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டனர்.. மிக முக்கியமாக பெரியார்..

அப்போது மக்கள் கேட்பவர்களாக இருந்தனர். இன்று நவீன தொழில்நுட்பம் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்கிறது. ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை சொல்ல வைக்கிறது. கடந்த காலங்களிலிருந்து நாம் வேறுபட்டு நிற்பது எங்கு என்றால், சாதி வேறுபாடு காண்பவர்கள் முன்னால் கோடு கிழித்துக்கொண்டே சென்றால், அதன் பின்னால் அதை அழிப்பதற்கு தலைவர்களோடு இப்போது பொது மக்களும் செல்கின்றனர்; ஆனால், குறைந்த அளவு மட்டும்.

இதையே கேள்வியாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தனை தொடர்பு கொண்டு கேட்டோம். இனி அவர் கூறியவை.. கட்டுரை வடிவில்..

நற்செய்திகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்

பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்
பத்திரிகையாளர் ஜீவசகாப்தன்

”பரிதாபங்கள் சேனலில் மாமியார் பாவங்கள், அம்மா பாவங்கள், ஆடி மாசபாவங்கள் என இதற்கு முன்பு போட்ட வீடியோக்களை விட தற்போது வெளியிட்ட Society பாவங்கள் வீடியோவிற்கு வரவேற்பு அதிகமிருக்கிறது. ஊடகத்தின் வழி பொழுதுபோக்குகளைத் தவிர சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற செய்திகளைச் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனும் கருத்தாக்கம் இங்கு உடைகிறது. பொழுதுபோக்கு வீடியோக்களில் கூட மக்களுக்குத் தேவையான செய்திகளை சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

சாதியை உடைத்தெறிய தயாராகும் மக்கள்!!
சாதி எனும் நிறுவனம்: நெருப்பு வளையத்தில் சிக்கும் இளைஞர்கள்.. மீட்பது எப்படி?

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்

விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எல்லோரும் சாதி எனும் கட்டமைப்பிற்குள்தான் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சாதி என்பது எதிர்மறையான விஷயமாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் சாதிக்கு எதிராகவும், கடவுள் நம்பிக்கை மற்றும் சடங்குகள் போன்றவற்றிற்கு எதிராகவும் பெரியார் அவ்வளவு வேலைகளைப் பார்த்திருக்கிறார்; ஆனால், அவரது மிக முக்கியமான வெற்றி என்னவென்றால் மேற்கண்ட எல்லாவற்றிலும் நம்பிக்கை கொண்டவர்களும் பெரியார் சொன்னதை ஏற்றுக்கொள்கிறார்கள். இதற்கு உதாரணம், தமிழ்நாட்டில் கடவுள் நம்பிக்கையை மட்டுமே வைத்து அரசியல் செய்யும் கட்சியால் இங்கு ஒன்றுமே செய்துவிட முடியவில்லையே.

பெரியார்
பெரியார்pt web

தமிழ்நாட்டில் பெரும்பாலும் சாதி பார்த்துதான் திருமணம் செய்கிறார்கள். ஆனால், அதைக் கிண்டல் செய்து ஒரு வீடியோ வெளியிட்டால் அதை எல்லோரும் ரசிக்கிறார்களே.. அது எப்படி நடக்கிறது. அப்படியானால், சாதி எனும் அமைப்பு ஒருவனின் கழுத்தை சுத்தி இருக்கிறது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எல்லோரும் சாதி எனும் கட்டமைப்பிற்குள்தான் இருக்கின்றனர். அதற்குக் காரணம் திருமணம் மற்றும் சடங்குகள், இவைகளை நிறுவனமயப்படுத்தும் விஷயங்கள்.

உதாரணங்களுக்கு சில விஷயங்களை சொல்லலாம். தற்போது திருமணங்களை ஒரு வாரத்திற்கு நடத்துகிறார்கள், திருமணங்களை மிக ஆடம்பரமாக நடத்துகிறார்கள், ஹோமங்கள், யாகங்கள் போன்றவைகளைப் பெருமைப்படுத்தி சீரியல்களும், சினிமா காட்சிகளும் வருகின்றன. இவை எல்லாவற்றையும் பார்த்து இப்படிதான் வாழ வேண்டும்போல என்றுதான் ஒரு சராசரி மனிதன் நினைப்பான். எல்லாவற்றையும் சமூகம்தானே நிர்ணயிக்கிறது.

அறிவியல் யுகத்தில் சாதி

அதிகமானோர் காதலித்து திருமணம் செய்யும் காலக்கட்டத்தில் மேட்ரிமோனி என்ற ஒன்றைக் கொண்டு வருகிறார்கள். அனைத்து சாதியினருக்கும் மேட்ரிமோனி இருக்கிறது. இதன் அர்த்தம் என்ன? ‘நீங்கள் அமெரிக்காவுக்கே சென்றாலும் உங்களது சாதியில் உங்களுக்கான இணையைத்தேடித் தருகிறேன்’ என்பதுதான். அறிவியல் மற்றும் கணினி அறிவை இவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் பாருங்கள். அறிவியல் என்பதே மதம், சாதி மற்றும் பிற்போக்குத்தனங்களுக்கு எதிரானது. ஆனால், பிற்போக்குத்தனமான விஷயங்கள் எல்லாம் கார்ப்பரேட் உலகில் மறையாமல் இருக்கின்றன. அதற்கான வேலைகளில் சிலர் ஈடுபட்டுக்கொண்டே இருக்கின்றனர். அறிவியலை வைத்தே சாதியை வளர்க்கின்றனர்; ஒரே சாதிக்குள் திருமணம் செய்ய வைக்கின்றனர், பிற்போக்குத்தனமான விஷயங்களில் ஈடுபடுகின்றனர். எனவேதான் சொல்கிறேன். சாதி எனும் பிடிக்குள் யாரும் விரும்பியில்லை. தவிர்க்க முடியாமல் இதற்குள் இருக்க வேண்டிய பொதுப்புத்தி இருக்கிறது.

இணையதளம் மூலம் மோசடி
இணையதளம் மூலம் மோசடிகோப்புப்படம்

பெண்களுக்கு சாதி கிடையாது. சாதி என்பது ஆண்களுக்கானது. எந்த சாதியைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள்தான். பொதுவாக ஒரு பெண்ணின் அடையாளம் என்பதே இன்னாரின் மகள், இன்னாரின் மனைவி என்பதுதான். பெண்கள் கல்வி கற்று ஆளுமைகளாக மாறிவரக்கூடிய சூழலில், இந்த நிலைகள் சற்றே மாறிவருகிறது என சொல்லலாம். எனவேதான் பெரியாரின் பெண் விடுதலை கருத்துகள், சாதி மற்றும் பெண் விடுதலைக்கும் இடையேயான தொடர்புகள் குறித்த பெரியாரின் கருத்துகளைப் படித்த பெண்களுக்கு பிடிக்கும். சுருக்கமாக, பெரும்பான்மையான பெண்களுக்கு பெரியாரைப் பிடிக்கும். ஆனால், நிஜவாழ்வில் அவர்கள் எல்லோரும் பெரியாரிஸ்ட்டுகளாக வாழ முடியாது. வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை, சடங்கு, சம்பிரதாயங்கள் என்றுதான் வாழ்ந்து வருகின்றனர்.

சாதி எதிர்ப்பை தூண்டிவிட்ட வீடியோ

இங்கு கோபி சுதாகரின் வீடியோ ஒவ்வொருவருக்குள்ளும் அடிமனதில் ஒழிந்துகொண்டிருக்கும் சாதி எதிர்ப்பு சிந்தனைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்து பாராட்டும் லட்சக்கணக்கான பேரும் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களா? நாத்திகரா அல்லது பெரியாரிஸ்ட்டா? இதற்கு முன் புயல் பாவங்கள், ஆடி பாவங்கள் போன்ற வீடியோக்களைப் பார்த்து ரசித்தவர்கள்தான். புயல் பாவங்கள் ஆடிப் பாவங்களைப் பார்த்து ரசிப்பதற்கு எவ்விதமான பகுத்தறிவும் தேவையில்லை. ஆனால், Society பாவங்கள் வீடியோவைப் பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் அவர்களுக்குள்ளும் சாதி எதிர்ப்பு சிந்தனைகள் இருக்கிறது என்றுதானே பொருள். குறிப்பாக சொல்லவேண்டுமானால், இத்தனைபேர் சாதிமறுப்பு சிந்தனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சாதிக்கு எதிராக எழுத மாட்டார்கள், பேச மாட்டார்கள். அவர்களது உள்ளுக்குள் சாதிக்கு எதிராகவோ அல்லது சாதியின் மேல் பெரிய பிடிப்பு இல்லாமலோ இருப்பார்கள். இதன் வெளிப்பாடுதான், சாதியின் பெயரால் வன்முறைகள் நடக்கும்போது அருவருப்பு அடைகிறார்கள். அவைகள் குறித்த ஜோக்குகளை சொல்லும்போது ஆமோதிக்கிறார்கள்.

அடிக்கடி தமிழ்நாடு பெரியார் மண்ணா என்றெல்லாம் கேட்பார்கள். பெரியார் மண்ணான தமிழ்நாட்டைத் தாண்டி வேறு எந்த வட மாநிலத்திலாவது இதுபோன்ற வீடியோவை யாரும் பதிவேற்றியிருந்தால் இந்நேரம் அவர்களை கைது செய்திருப்பார்கள் அல்லது மிரட்டியிருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில்தான் இத்தகைய வீடியோக்கள் சாத்தியமாகும்.

சாதியை உடைத்தெறிய தயாராகும் மக்கள்!!
‘Society பாவங்கள்’ வீடியோ எதிரொலி | “அவங்கள கைது செய்யுங்க” - கோபி - சுதாகர் மீது போலீசில் புகார்

பெரியாருக்கு கிடைத்த வெற்றி

உடனே, ஆணவக்கொலைகள் எல்லாம் நடக்கவில்லையா என்று கேட்பார்கள். அந்த கொலைகள் எல்லாம், Society பாவங்கள் போன்ற செயல்பாடுகளை எதிர்த்துப் பேசுவார்களே.. அந்த 1% நபர்களால் நடக்கிறது. அப்படியானால் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான, சாதிக்கு எதிரான மனநிலைகளைக் கொண்டவர்கள்தான் அதிகம். Society பாவங்கள் அந்த 1% மக்களை அடையாளம் காட்டியிருக்கிறது.

கோபி சுதாகரின் வீடியோவுக்கான வெற்றி என்பது சாதி எதிர்ப்புக்கான வெற்றி.. சாதி எதிர்ப்புக்கான வெற்றி என்பது 100 வருடங்களுக்கு முன்பே சாதியை எதிர்த்துப் பேசிய பெரியாருக்குக் கிடைத்த வெற்றி. 100 வருடங்களுக்கு முன் பெரியார் செய்த வேலைதான் இன்று கோபியும் சுதாகரும் வெளியிட்ட வீடியோவை கொண்டாட வைத்திருக்கிறது.

நெல்லை
நெல்லை முகநூல்

இதே பரிதாபங்கள் சேனலில், சாதியப் பெருமைகளைப் பேசி வீடியோ வெளியிட்டிருந்தால், இதே மக்கள் கோபியையும் சுதாகரையும் விமர்சித்திருப்பார்கள். எனவே மக்கள் சாதி எனும் கட்டமைப்பிற்குள் விரும்பியில்லை; நிறுவனமயம் ஆக்கப்பட்டதால் மனிதர்கள் மாட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலிருந்தும் மக்களை வெளிக்கொணர வேண்டும். இதை நாம் பரப்புரையாக செய்வதைவிட கோபி - சுதாகர் போன்றவர்கள் நகைச்சுவையாக சொல்வது மிகவும் நல்ல விஷயம். அவர்களுக்கு நாம் எல்லோரும் துணை நிற்க வேண்டும். ”

என்றார்...

சாதியை உடைத்தெறிய தயாராகும் மக்கள்!!
”காசாவில் மக்கள் பட்டினியால் சாகுறாங்க..” - ஐநா கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஒலித்த குரல்கள்!

எழுத்தாளர் முருகவேள் வேறொரு வடிவத்தில் தன் கருத்துகளை முன் வைத்தார். அவர் கூறியதும் கட்டுரை வடிவில்...

இருவிதமான தமிழ்நாடு..

”இரண்டு விதமான தமிழ்நாடு இருக்கிறது.

1. மிகவும் இறுகிய வடிவத்தில் இருக்கும் சாதியமைப்பு கொண்ட தமிழ்நாடு. உதாரணத்திற்கு, கிராமங்களில் இருக்கும் சாதி அமைப்புகள், குருபூஜை போன்ற நிகழ்வுகள் நடப்பது. இவைகள் எல்லாம் சாதியைக் காப்பாற்ற வேண்டுமென்ற முனைப்புடன் இருப்பவை. இத்தகையவர்கள் சின்ன சின்ன குழுக்களாக செயல்படுவர்கள்.

எழுத்தாளர் முருகவேள்
எழுத்தாளர் முருகவேள்

தொழில்துறையின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டில் சாதிகள் மிக மிக்கியமாக உதவுகிறது என்னும் ஒரு கருத்தை குருமூர்த்தி முன்வைக்கிறார். அதாவது, Caste based social captial. உதாரணத்திற்கு ஒரு பனியன் கம்பெனி இருக்கிறது என்றால், அதன் முதலாளி, அதற்கு தேவையான நிதியுதவிகளை செய்பவர், நிறுவனத்திற்கு தேவையான பாகங்களைக் கொடுப்பவர் எல்லாம் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இப்படியான குழுக்கள் பலரையும் தங்களது காலாட்படையாக பயன்படுத்துகிறது.

இரண்டாவது வகையான தமிழ்நாடு என்பது நகரமயமாக்கப்பட்ட தமிழ்நாடு... இந்த பிரிவில் அரசியல்மயப்படுத்தபட்ட ஆட்கள் அதிகம் இருப்பார்கள். நான் கூறும் ‘அரசியல்மயப்படுத்தபட்ட’ என்பது இடதுசாரிகள், திராவிடர் கழகத்தினர் மட்டுமல்ல. திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளிலும் இருப்பவர்கள். இவர்கள் எல்லாம் சாதியை உயர்த்திப்பிடிக்கும் நபர்களிடம் தங்களை தொடர்புபடுத்திக் கொள்வதில்லை. மேலும், ‘கார்களில் ஆடிக்கொண்டே செல்வதினால் ஒருபயனும் இல்லை. இதனால் பொதுமக்களுக்கு தொந்தரவுதான்’ என நினைப்பவர்கள். சாதியை பெரிதாக பொருட்படுத்தாதவர்கள் கிராமங்களிலும் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவில்லை.

இந்த இரண்டு வகையான தமிழ்நாட்டுக்கும் ஆளும் தரப்பு மாறி மாறி ஆதரவு கொடுக்கும். முற்போக்கு திட்டங்களை முன்னெடுக்கும் சூழலில் நகரமயமாக்கப்பட்ட தமிழ்நாட்டை ஆதரிக்கும் அரசு தேர்தல் வந்துவிட்டால் சாதியக் குழுக்களை ஆதரிக்கும்.

சாதியின் தாக்கத்தை வெளிப்படுத்திய சம்பவங்கள்

அறிவுசார் (intellectual) மக்களின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறது என்பதை நம்மால் உணரமுடியும்.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இரண்டு மூன்று சம்பவங்கள் சாதியின் மூர்க்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துவிட்டன. முதலில் ரிதன்யாவின் மரணம்.. அதையும் சாதியின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். ஏனெனில், அதே சமூகத்திலிருந்து அக்குடும்பத்திற்கு வந்த அழுத்தம், சாதியின் அதிகாரத்தைக் காட்டுவதற்காக நடந்த ஆடம்பர திருமணம் போன்றவைகளும் பெண்ணின் உயிரிழப்புக்கு காரணங்களாகச் சொல்கிறார்கள். அதற்குப் பின் வேறொரு ஊரில் நடந்த ஒரு கொலை, அடுத்தது ஆடி18ல் நடந்த நிகழ்வுகள் என தொடர்ச்சியாக நடந்த விஷயங்கள் சாதி குறித்த உரையாடலை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் எல்லாம் நகரமயமாக்கப்பட்ட தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சாதியின் மீது இருக்கும் அதிருப்தியையும் கடுப்பையும் வெளிக்கொண்டுவரும். இவர்கள்தான் ‘பரிதாபங்கள்’ வீடியோவை ஆதரிப்பவர்கள்.

Society Paavangal வீடியோவிலிருந்து
Society Paavangal வீடியோவிலிருந்துpt web

இதன்மூலம் அறிவுசார் (intellectual) மக்களின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறது என்பதை நம்மால் உணரமுடியும். பெரியார் போன்றும், திராவிட இயக்கங்கள் போன்றும் வீதி வீதியாகச் சென்று சாதிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்பத்துவதற்கு இன்று ஆட்கள் கிடையாது. ஆனால், சமூக வலைதளங்களில் இம்மாதிரியான முற்போக்கு விஷயங்களைப் பேசுவதற்கு மிகப்பெரிய குழு இருக்கிறது.

உதாரணத்திற்கு, ‘பரிதாபங்கள்’ வீடியோவிற்கு பொதுவெளியில் அனைவரும் ஆதரவளிப்பதுபோல் தோன்றுவது, ‘நாம் வெளிப்படையாக நம்மை அடையாளப்படுத்துக்கொள்ள வேண்டாம்’ என்று பலரும் நினைப்பதுதான். அறிவுசார் மக்கள் அதிகமிருக்கும் காரணத்தால் சாதியை வெளிப்படுத்துபவர்களுக்கு இருக்கும் தயக்கம் அல்லது பயம் என்று கூட சொல்லலாம்.” இவ்வாறு கூறினார் முருகவேள்.

சாதியை உடைத்தெறிய தயாராகும் மக்கள்!!
பட்டியலின - பழங்குடி மக்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகம் நடக்கும் மாநிலம் எது தெரியுமா?
பெரியார் போன்றும், திராவிட இயக்கங்கள் போன்றும் வீதி வீதியாகச் சென்று சாதிக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்பத்துவதற்கு இன்று ஆட்கள் கிடையாது - முருகவேள்


இதற்கான என் தேடல் இங்கே
இங்கே உள்ள பிரச்சினையை எல்லோரும் பேசிவிட்டனர் ஆனால் பேசதவை இதற்கான பின்புலம் மற்றும் அதற்கான தீர்வை யாரும் பேசவே இல்லை. ஏனெனில் இதற்கு பின்னால் மறைக்கப்பட்டுள்ள சமூக அரசியல் அவை அதனை மூடிமறைக்க என்னென்ன தந்திரங்கள் அடுத்த பதிவில் விரிவாக பேசுவோம்- தொடரும்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்