முதலாளித்துவத்தில் எல்லாம் வணிக்கம் சார்ந்தவையே.
மக்களிடையே உள்ள பழைமைகளையும் அதனை புதுமைபடுத்தி தன் தேவைகேற்ப உருமாற்றி கொள்ளும் முதலாளித்துவம் பழைமையை கட்டிக்காத்துக் கொண்டே புதுமைகளை விற்பனை செய்யும் யுத்திதான் ஆளும் வர்க்கமாய் அமைந்துள்ள அமைப்பின் சிறபம்சம்.
“இன்றைய சமுதாயம் மாறாத கல் உருவம் அன்று மாற்றத்திற்கு உரிய உயிர் அமைப்பே. அது இடைவிடாமல் மாறிக்கொண்டிருக்கிறது”. (மூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்னு பக்கம் 29) மற்றும், “முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமன்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலைமையினாலும் அவதிப்படுகிறோம் நவீன கால தீமைகளோடு கூடவே காலத்துக்கு ஒவ்வாத சமூக அரசியல் முறைகளை தவிர்க்க முடியாதபடி உடன்கொணரும் பழமைப்பட்ட உற்பத்தி முறைகளின் முனைப்பொழிந்த மீத மிச்சங்களிலிருந்து மரபுரிமையாய் வந்த கேடுகளின் முழு வரிசையும் நம்மை வருத்துகிறது வாழ்பவர் வாழ்பவற்றால் மட்டும் இன்றி மாண்டவற்றாலும் அவதிப்படுகிறோம். மாண்டவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்”. (மூலதனம் மேல் காணும் நூல் பக்கம் 26).
இந்த வாக்கியத்தில் மார்க்ஸ் என்ற சமூக விஞ்ஞானி மனித சமூகம் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு அசைவிலும் அவைமாறியும் வளர்ந்தும் முன்னேறிக் கொண்டுள்ளதை விளக்கியுள்ளார். இதனை புரிந்துக் கொள்ள மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞான அறிவும் மார்க்சியம் லெனினியமாக வளர்ந்த காலகட்டத்தின் அதன் தத்துவ அரசியல் பொருளாதார நிலைமைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு வளர்ச்சியும் மார்க்சியவாதிகளுக்கு அவசியம் அன்றோ?
சிலர் வர்க்க சமூகத்தின் சில பிரச்சினகளை மட்டுமே முதன்மைபடுத்தி வர்க்க சமூகத்தின் முதன்மையான நோக்கம் சுரண்டலில்தான் ஒளிந்துள்ளது என்பதனை மூடிமறைக்க செய்கின்றனர்.
சிலவகையான எதிர்நிலைகளை முதன்மைபடுத்தி சமூக மாற்றத்தை புரிந்துக் கொள்ளாமல் மாறாநிலையில் பேசிக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக கடவுள் மறுப்பு பேசுவோரும் கடவுளை ஏற்கும் ஆன்மீகவாதிகளும் மாறாநிலைவாதிகளே உள்ளனர்.
இயற்கை எதிர்த்த போராட்டத்தில் மனிதனின் இயலாநிலையில் குறிபிட்ட காலக்கட்டத்தில் தோன்றிய பல்வேறு கற்பனை கற்பிதங்கள் அந்த சமூக சூழலிற்கானவையே. இன்றைய சமூகத்தில் அவை பொறுத்தமற்றவை அவைகளின் நேரடி பயன்பாடு என்பது அறியாமையின் வெளிப்பாடே அதற்கு சமுக விஞ்ஞான அறிவு வேண்டும். அவை இன்றி அறியாமையில் அன்றைய சமூகத்தை அப்படியே பிரதிபலிக்க நினைக்கின்றனர் இன்றைய வளர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் புதியவகையில் பழைய கடவுள்களை புதுபிக்கனர். அவை சிலருக்கு நல்ல பணம் கொழிக்கும் தொழில். நீங்கள் கணக்கிட்டால் இந்த கணேஷ் பூஜையின் பின் ஒளிந்துள்ள பல கோடி வணிபம் மற்றும் அரசியல் விளையாட்டு. அதேபோல் கடவுளை எதிர்பதன் பெயரில் காலதிற்கும் களத்திற்கும் அப்பாற்பட்ட கடவுளை எதிர்பதன் பெயரில் அதேபணியை செய்கின்றனர். கடவுளின் தோற்றம் அதன் தேவை அதன் இன்றைய இருப்பு என்ன என்பதனை அறியாத பகுத்தறிவாதிகள். கடவுள் இல்லை என்றுக் கூறிக் கொண்டு அதனை உயிர்பிப்பதில் பங்காற்றுகின்றனர் என்பேன்.
இந்த இருபிரிவினரும் சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டலை தவறியும் பேசுவதில்லை. ஒருபிரிவினர் கடவுள் காப்பாற்றுபவராகவும் மற்றொருபிரிவினர் கடவுளை எதிர்ப்பின்பெயரில் பகுத்தறிவாதம் பேசினாலும் சமுக பிரச்சினையை மூடிமறைத்து வருகின்றனர்.
மக்களின் ஏற்றதாழ்வும் ஏழ்மையும், பசி, பட்டினியும் இன்னும் பல்வேறு கொடுமைகளுக்கு அந்த கடவுளோ அறியாமையோ காரணம் அல்ல வாழும் கடவுள்களான அரசும் அதன் பரிவாரங்கள்தான் என்பதனை மூடிமறைத்து கடவுள் பின்னர் அணி திரட்டுவோரும் கடவுள் எதிர்போரும் தாங்கள் கைகோர்த்து இந்த அரசில் அங்கம் வைப்பதும் சுகபோகமாக வாழவும் இந்த அமைப்பு அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றனர் தாங்கள் வாழவழியமைத்துக் கொடுத்த இந்த அமைப்புமுறைக்கு. ஆக இவர்களின் பணியை கவனித்தில் கொள்ளுங்கள்.
வர்க்க சமூகத்தில் வர்க்கம் சார எழுத்தும் பேச்சும் செயலும் எவையுமே இல்லை! நம் சமூகத்தில் இடதுசாரி என்பவர்கள் எந்தவகையான கண்ணோட்டத்தில் உள்ளனர் என்பதிலிருந்தே அவர்களின் வர்க்க நலன் புரிந்துக் கொள்ள முடியும்!
இங்குள்ள பலரிடம் காணப்படும் மார்க்சியம் அல்லாத போக்குகளையும், அவர்கள் மார்க்சியத்திலிருந்து விலகிச் செல்வதையும் புரிந்துக் கொள்ள, அவர்களின் செயல்பாடுகள் நமக்கு பிரதிபலிக்கின்றன.
உங்கள் கருத்துகள் எதிர்பார்க்கிறேன் தோழர்களே.
No comments:
Post a Comment