
பிறகு ஒரு வேடர் குழு சில கோடரிகளையும் வில் ஆயுதங்களையும் கொண்டு ஒரு மானைக் கொன்றது. மான் இறைச்சியை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்; அநேகமாக, சமமாகத்தான் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். சிலர் அதிகமாக எடுத்துக் கொண்டிருந்தால், மற்றவர்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது, உயிரோடிருந்திருக்க முடியாது. அந்தக் குழுமத்தின் வாழ்க்கை மேலும் பன்முகப்பட்டதாக வளர்ச்சியடைந்தது.
ஒரு கைவினைஞன் தோன்றுகிறான்; அவன் வேடர்களுடைய உபயோகத்துக் கென்று நல்ல ஆயுதங்களைத் தயாரிக்கிறான். ஆனால் அவன் வேட்டையில் சேருவது கிடையாது. வேட்டையாடியவர்களும் மீன் பிடித்தவர் களும் இறைச்சி, மீன்களைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது தங்களோடு சேர்த்து அந்தக் கைவினைஞனுக்கும் ஒரு பாகத்தை ஒதுக்குகிறார்கள். பிறகு ஒரு கட்டத்தில் உழைப்பினால் ஏற்பட்ட பண்டங்களைக் குழுமங்களுக்கு இடையி லும் ஒரு குழுமத்துக்கு உள்ளேயும் பரிவர்த்தனை செய்வது ஆரம்பமானது.
இவை அனைத்தும் பூர்விகமாகவும் வளர்ச்சியில்லாமலும் இருந்த போதிலும் இவையே பொருளாதாரமாகும். ஏனென்றால் இவை பொருள்களோடு – வில், கோடரி அல்லது இறைச்சி – மக்கள் கொண்டிருந்த உறவுகள் சம்பந்தப் பட்டவை, மட்டுமல்ல; அவர்கள் சமூகத்தில் ஒருவரோடொருவர் கொண்டிருந்த உறவுகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தன. அதிலும் அவை பொதுவகையிலான உறவுகள் அல்ல; மக்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களின் உற்பத்தி, விநியோகத்தோடு சம்பந்தப்பட்டபொருளாயத உறவுகள். மார்க்ஸ் இந்த உறவுகளை உற்பத்தி உறவுகள் என்று குறிப்பிட்டார்.
பொருள்வகைப் பண்டங்களின் சமூக உற்பத்தியும் பரிவர்த்தனையும், விநியோக மும், நுகர்வும், அந்த அடிப்படையில் ஏற்படுகின்ற உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமுமே பொருளாதாரம் ஆகும். இந்தக் கருத்தின்படி பார்த்தால், பொருளாதாரம் மனித சமூகத்தைப் போலவே மிகப் பழமையானது.
பூர்விகக் குழுமத்தின் பொருளாதாரம் மிகவும் எளிமையாகவே இருந்தது. ஏனென்றால் மக்கள் உபயோகித்த கருவிகளும் மிகவும் எளிமையாக இருந்தன; அவர்களுடைய தொழில் திறனும் சுருங்கியதாகவே, குறைவான தாகவே இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு சமூகத்தின் உற்பத்தி உறவுகளையும் அதன் பொருளாதாரத்தையும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களையும் நிர்ணயிக்கின்ற உற்பத்தி சக்திகள் பற்றாக்குறையாகவே வளர்ச்சியடைந்திருந்தன.
முதல் பொருளாதார நிபுணர் யார் ?
நெருப்பு எரிவது ஏன், இடி இடிப்பது ஏன் என்று ஆச்சரியப்பட ஆரம்பித்த முதல் மனிதன் யார்? ஒருவேளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது நடை பெற்றிருக்க வேண்டும். பூர்விக சமூகத்தின் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தவர்கள் யார்? அன்று அது அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் சமூகமாக, முதல் வர்க்க சமூகமாகப் படிப்படியாக மாறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தச் சிந்தனைகள் ஒரு விஞ்ஞானம் அல்ல – இயற்கையையும் சமூகத்தையும் பற்றி முறைப்படி தொகுக்கப்பட்ட மனித அறிவு அல்ல; அது விஞ்ஞானமாகவும் இருக்க முடியாது.அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் முதிர்ந்த சமூகத்தின்காலம் ஏற்படும் வரை விஞ்ஞானம் தோன்றவில்லை. அந்த சமூகம் அதிகமான வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
நாலாயிரம் அல்லது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து ஆகிய பண்டைக்கால அரசுகளில் வாழ்ந்த மக்கள் கணிதம் அல்லது மருத்துவத் துறையில் கொண்டிருந்த அறிவு சில சமயங்களில் நம்மை வியப்பில் மூழ்க வைக்கின்றது. பண்டைக் கால அறிவின் எச்சங்களாக நமக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த மாதிரிகள் பண்டைக் கால கிரேக்க, ரோமானிய மக்களுக்குச் சொந்தமானவை.
பதினேழாம் நூற்றாண்டில் அரசியல் பொருளாதாரம் என்ற பெயரோடு விஞ்ஞானத்தில் ஒரு புதிய துறை ஏற்படுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே பொருளாதார வாழ்க்கையின் அம்சங் களைப் பற்றி உய்த்துணர்வதற்குத் திட்டவட்டமான முயற்சி ஆரம்பமாயிற்று. இந்த விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்த பல பொருளாதார நிகழ்வுகள் முன்பே பண்டைக்கால எகிப்தியர்களுக்கு அல்லது கிரேக்கர் களுக்குத் தெரிந்தவையே. இவை பரிவர்த்தனை, பணம், விலை, வர்த்தகம், லாபம், வட்டி ஆகியவையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அந்தக் காலத்திலிருந்த உற்பத்தி உறவுகளின் முக்கியமான கூறுகளைப் பற்றி -அடிமை முறை பற்றி – சிந்திக்கத் தொடங்கினார்கள்.
முதலில் பொருளாதாரச் சிந்தனை என்பது சமூகத்தைப் பற்றிய சிந்தனையின் மற்ற வடிவங்களிலிருந்து தனியானதாக இருக்கவில்லை; எனவே அது முதலில் எப்பொழுது தோன்றியது என்று துல்லியமாகக் கூற முடியாது. பொருளாதார வரலாற்றுப் புத்தகங்களை எழுதியவர்கள் வெவ்வேறு முனைகளிலிருந்து எழுதத் தொடங்குவதும் ஆச்சரியமானதல்ல; சில வரலாறுகள் பண்டைக்கால கிரேக்கர்களிடமிருந்து தொடங்குகின்றன; மற்றவை பண்டைக்கால எகிப்திய கோரைப் புற்சுவடிகள், ஹாம்முராபியின் விதிகளின் ஆப்பு வடிவமுள்ள கல்லெழுத்துக் களிலிருந்து, இந்துக்களின் வேத நூல்களிலிருந்து தொடங்குகின்றன.அரசர் ஹம்முராபி மற்றும் கல்மேல் எழுத்தாக அவரது காலத்தில் இயற்றப்பட்ட விதிகள்.
கிறிஸ்துவுக்கு முந்திய இரண்டாவது மற்றும் முதலாவது ஆயிரம் ஆண்டுகளில் பாலஸ்தீனத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வசித்த மக்களின் பொருளாதார வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்களும் பொருளாதார நுண்காட்சிகளும் பைபிள் நூலில் காணப்படுகின்றன.
அமெரிக்க வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஜே. பேல் தமது புத்தகத்தில் பைபிளுக்கு மட்டும் ஒரு பெரிய அத்தியாயம் எழுதியிருப்பதற்கும் அந்தக் காலத்தைப் பற்றிய மற்ற எல்லா ஆதாரங்களையும் புறக்கணித்திருப் பதற்கும் அறிவுத்துறை ஆராய்ச்சிக்குச் சம்பந்தமில்லாத வேறு சூழ்நிலைகளே காரணம் என்று அறிவது அவசியம். அதாவது பைபிள் கிறிஸ்தவ மதத்தின் புனிதமான நூல்; பெரும்பான்மையான அமெரிக்க மாணவர்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே அதைத் தெரிந்திருப்பார்கள். எனவே நவீன வாழ்க்கையின் இந்த அம்சத்துக்கு ஏற்றவாறு ஆராய்ச்சி வளைந்து கொடுக்கிறது.
குடும்ப நிர்வாகம் என்று சொல்லும் பொழுது நாம் தருகின்ற குறுகிய அர்த்தத்தை கிரேக்கர்கள் அதற்குக் கொடுக்கவில்லை என்பது உண்மையே. ஏனென்றால் ஒரு பணக்கார கிரேக்கரின் பண்ணை என்பது அடிமைகளை உடைமையாகக் கொண்ட மொத்தப் பொருளாதாரமாக, பண்டைக்கால உலகத்தின் நுண் மாதிரியாக இருந்தது.! அரிஸ்டாட்டில் “பொருளாதாரம்” என்ற சொல்லை இதே பொருளில்தான் பயன்படுத்துகிறார்.
அரிஸ்டாட்டில் தன் காலத்தின் குழந்தையாகவே இருந்தார். அவர் அடிமையைப் பேசுகின்ற கருவி என்றுதான் கருதினார்; அடிமை முறை இயற்கையானது, தர்க்க ரீதியானது என்று முடிவு செய்தார். இதைத் தவிர இன்னொரு வகையிலும் அவர் பழமைவாதியாகவே இருந்தார். தம் காலத்திய கிரீஸ் நாட்டில்வர்த்தகமும் பண உறவுகளும் வளர்ச்சியடைவதை அவர் விரும்பவில்லை. சிறு அளவில் இருக்கும் விவசாயப் பொருளாதாரமே (அங்கே எல்லா வேலைகளையும் அடிமைகள் செய்வார்கள் என்பதும் இயற்கையே) அவருடைய இலட்சியம். இந்தப் பொருளாதாரம் அநேகமாகத் தன்னுடைய எல்லா அடிப்படைத் தேவைகளையும் தானே பூர்த்தி செய்து கொள்ளும்; அப்படிச் செய்ய முடியாத சிலவற்றை பக்கத்திலிருப்பவர்களோடு “நியாயமான பரிவர்த்தனையில்” பெற்றுக் கொள்ள முடியும்.
இயற்கையும் ஆதி மனிதனும்
எல்லாவற்றிற்கும் வரலாறு இருப்பது போன்று விலங்குகளுக்கும் வரலாறு இருக்கிறது ஆனால் இந்த வரலாறு வேறுவிதமானது. மனிதனை போன்று விலங்குகள் உணர்ச்சிபூர்வமாக வரலாற்றை நிர்மாணிக்கவில்லை .விலங்குகள் உயிர் வாழ போர் புரிகின்றன. மனிதன் அப்படி அல்ல ஆரம்பத்திலிருந்தே தனது வரலாற்றைப் படைக்கின்றான்.
ஆதிமனிதன் உணவு தேட பெரு முயற்சி செய்யவில்லை இயற்கையோடு எதிர்த்தும் அவன் கடுமையாக போர் புரியவில்லை. இயற்கை அளித்த பரிசான அவனுக்கு கிடைத்தவற்றை உண்டான் இயற்கையோடு வாழ்ந்து திருப்தி அடைந்தான் இயற்கையில் கிடைத் தவற்றை பயன்படுத்திய மனிதன் எந்த கருவியும் பயன்படுத்த தேவையில்லா திருந்தது. மனிதனும் குரங்குகள் போன்று அவன் உணவுப் பொருளான காய்கனிகளை பறிக்க கையை நீட்டுவான் அன்று அவனுக்கு கைதான் உற்பத்தி கருவியாக இருந்தது.
ஆரம்பநிலையில் கையை மட்டும் பயன்படுத்திய மனிதன் கைக்கெட்டாத தூரத்தில் உள்ள கனிகளை பறிப்பதற்காக கம்புகளையும் நிலத்தடியில் உள்ள கிழங்குகளையும் கொட்டைகளையும் தோண்டி எடுக்க கற்களையும் பயன்படுத்தத் தொடங்கினான் .கற்களால் நசுக்கியும் உடைத்தும் திண்ண தொடங்கினான்.இயற்கையில் கிடைத்த பழங்களை மட்டும் சாப்பிட்டு இருந்த மனிதன் பிறகு புளூ பூச்சிகளையும் தின்ன ஆரம்பித்தான் பிறகு பல வகையான உணவு பொருட்களை உண்பதை தொடங்கினான் கைகளை அதிகமாக பயன்படுத்துவதால் கைகள் உரம் பெற ஆரம்பித்தது .
அதிவிரைவில் நிமிர்ந்து நிற்கவும் கற்றுக்கொண்டான்.
இயற்கை அளித்த பொருட்களை தனது தேவைக்காக உகந்த முறையிலும் மனிதன் மாற்ற ஆரம்பித்தான். இயற்கைக்கு அடிமையாக இருந்த மனிதன் இயற்கையை எதிர்த்துப் போர் புரிய ஆரம்பித்தான் . புதிய கருவிகளை கண்டுபிடித்து அவன் இயற்கையுடன் போரிட்டு தனக்கான ஒன்றைக் கண்டுபிடிக்க தொடங்கினான்.
மலையிலிருந்து வெயிலில் இருந்தும் காற்றில் இருந்தும் குளிரில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக மனிதன் தனக்கான இருப்பிடத்தைத் தேடினான்.
வேட்டையாடவும் விலங்குகளைக் கொன்று தின்னவும் முற்பட்டான் இன்னும் பலப்பல செய்தான். உண்மையில் இவை புதிய வாழ்க்கைக்கு சாதனமாகும் இவை தான் மனிதன் கண்டுபிடித்த புதிய வாழ்க்கை சாதனங்கள் இவைதான் விலங்கு உலகிலிருந்து மனித சமுதாயத்திற்க்கு மனிதனை அழைத்துச் சென்றன.
புதிய உற்பத்தி சாதனங்களை கண்டுபிடித்த மனிதன் அந்த வாழ்க்கை சாதனங்களுக்கு உகந்த உற்பத்தி உறவுகளை உண்டாக்கினான் அன்று வேட்டையாடல் தான் பிரதான உற்பத்தி முறை வேட்டையாட அவனிடம் சிறந்த ஆயுதங்கள் இருக்கவில்லை கல்லால் செய்யப்பட்ட சிறிய ஆயுதங்கள் தான் அவனிடம் இருந்தன இந்த ஆயுதங்களை கொண்டு பெரிய விலங்குகளை அவன் கொள்வது அசாத்தியம் ஆகும் ஆக அவன் கூட்டாக வேட்டையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது கூட்டம் கூட்டமாக வேட்டையாடுவது போலவே கூட்டம் கூட்டமாக வாழ வேண்டிய அவசியம் அன்றைய நிலையில் இருந்தது இதில் பிறந்ததுதான் கூட்டு வாழ்க்கை முறை. அன்றைய மனிதர்கள் பொதுவாக உணவு பொருள்களை தேடி சென்றனர். கிடைத்ததை பொதுவாக அனுபவித்தனர்.அன்றைய மனிதன் குடும்பவாழ்க்கை உருவகப்படுத்த வில்லை ஆண்களும் பெண்களும் விருப்பம் போல வாழ்ந்தனர் புணர்ச்சி அவர்கள் விலக்க முடியாத ஒன்றாக மாத்திரம்தான் கருதினார்கள் .
எந்த அளவுக்கு மனிதன் தன் வாழ்க்கைக்குத் தேவைக்கான உற்பத்தி சாதனங்களை உற்பத்தி செய்கின்றனோ அந்த அளவுக்கு அவன் மறைமுகமாக தனது உண்மையான வாழ்க்கையை உருவகப்படுத்தி அதை உயர்த்துகிறான். உணவு உடை இருப்பிடம் முதலியன வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவை யானது. எனவே இந்த சாதனங்களை பெறுவதற்கு அவசியமான கருவிகளை உற்பத்தி செய்வது தான் வரலாற்றின் முதல் வேலை. இதிலிருந்து தான் மனிதன் உண்மையான வாழ்க்கை ஆரம்பமாகிறது இந்த வரலாற்று நிகழ்ச்சிகள் தான் மனித சமுதாயத்தின் வரலாற்றைத் தூண்டும் சக்தி என்கிறார்கள் மார்க்சும் எங்கெல்சும்.
புதிய கருவிகள் புதிய சக்திகள் புதிய வாழ்க்கைமுறையை மாற்றுகின்றன இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவையும் மாற்றுகின்றன, இந்தப் பரிணாமம் சமூகத்தை முன்னுக்குத் தள்ளுகின்றது. உற்பத்தி சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு மனிதன் முறையாக உற்பத்தி செய்ய ஆரம்பித்தான். கனிகளைத் தின்று வாழ்ந்த மனிதன் சிந்திக்க வேண்டிய அவசியமில்லாமல் இருந்ததது. பசித்த பொழுது அவனுக்கு இயற்கை அளித்த பரிசாக எல்லாம் கிடைக்கும் பொழுது அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கூட அவன் மனதில் தோன்ற வில்லை ஆனால் உற்பத்திக் கருவிகள் அறிவையும் அவனின் சிந்தனையின் வளர்க்சியையும் குறிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட கருவியை செய்யுமுன் மனிதன் சிந்தனை செய்து தான் தீரவேண்டும்.
உற்பத்திக் கருவிகளை உருவகப்படுத்தும் பொழுது மனிதன் தன்னையும் அதனூடக உருவகப் படுத்திக் கொள்கிறான்.
உற்பத்தி செய்யும் பொழுது மனிதன் இயற்கையின் உருவத்தை மாற்றவில்லை அவன் தன்னையே மாற்றிக் கொள்கிறான்ஒரு குறிப்பிட்ட முறையில் வேலை செய்வதன் மூலம் தான் தங்கள் உழைப்பின் பலனை பரிவர்த்தனை மூலம் மக்கள் உற்பத்தி செய்ய முடியும் உற்பத்தி செய்வதற்காக மக்கள் ஒருவருக்கொருவர் இடையிலே உறவுமுறை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இந்த ஒருவருக்கு ஒருவர் உறவு எனும் விஷயத்தில் நின்று கொண்டுதான் அவர்கள் இயற்கை பயன்படுத்திக் கொள்கின்றனர் உற்பத்தி செய்கின்றனர் என்றார் மார்க்ஸ்.
தோழர்களே இந்த கட்டுரை முடிக்கும் முன் உடல்நலமின்றி போய்விட்டாலதால் முழுமையாக்க முடியாமைக்கு வருந்துகிறேன். இந்த கட்டுரையை செலுமை படுத்தி அடுத்த இலக்கு இதழிலில் கொணர முயற்சிப்பேன் தோழர்களே......
இந்த கட்டுரை நான் சேகரித்த ஒன்றே.. சிபி.
No comments:
Post a Comment